Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை!

Featured Replies

உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை!

- பானுமதி அருணாசலம்

happy.jpgஉலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக கூறுகிறது, ஒரு புதிய ஆய்வு!

சந்தோஷமாக வாழும் மக்கள் யார்? என்ற ரீதியில் உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது, உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்.

கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து, உலகின் 24 நாடுகளைச் சேர்ந்த 18,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த சர்வே முடிவின்படி, 10-ல் 8 பேர் தாங்கள் 'மகிழ்ச்சியாக' இருக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர். உலக மக்களில் 20% பேர் 'மிக்க மகிழ்ச்சியாக' இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டை விட, தற்போது இரண்டு சதவிகித மக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, உலகில் 4 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது மகிழ்ச்சி ஓரளவு survey1.jpgமிகுந்திருக்கிறது!

இந்த சர்வேயில் முதல் இடம் பிடித்திருக்கும் நாடு இந்தோனேஷியா. இந்தோனேஷியா நாட்டு மக்களில் 51% பேர் தாங்கள் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாக கூறியுள்ளனர்.

அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நாடுகள் இந்தியா மற்றும் மெக்சிகோ. இந்த இரு நாட்டு மக்களில் 43% பேர் தாங்கள் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாக கூறியுள்ளனர்.

சமூக பொருளாதார முன்னேற்றம் காரணமாகவும் உயர் கல்வி, தனிநபர் வருமானம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களும் மக்களின் மகிழ்ச்சியை அதிகரித்திருப்பதாக இந்த சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

சர்வே சொல்றது இருக்கட்டும். நம்மில் பெரும்பாலானோர் ஏன் நம் மகிழ்ச்சியை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை என தெரிவதில்லை. எப்போதும் ஒருவித விரக்தி, எரிச்சலுடனே நாட்களை கடக்கிறோம். சின்ன சின்ன விஷயங்களில் கூட மகிழ்ச்சியை அனுபவிக்காமல்

நம்மில் பலர் பொழுதை வீணாக கழிக்கிறோம்.

காலையில் சூரியன் தோன்றும் அழகை ரசித்தால் கூட அதுவே மனத்துக்கு மகிழ்ச்சியை தரும். சின்ன குழந்தையின் சிரிப்பு, குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுதல் என நம் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்பத்திலும் மகிழ்ச்சியை சுவைக்கலாம்.

வாழும் வாழ்க்கை கொஞ்ச நாட்கள்தான். அதை மகிழ்ச்சியாக கழிப்போமே. அடுத்த சர்வேயில் இந்தியா முதல் இடம் பிடிப்பது நம் கையில் தான் இருக்கிறது!

நன்றி: விகடன்

சபரிமலையான் மீது குடம் குடமாக வார்க்கப்படும் பாலால் ஆசையும் அஞ்ஞானமும் நீங்கி பரமானந்த நிலையில் எல்லோரும் ஆழ்ந்துவிட்டார்கள்.

ஆனால் "satisfaction" என்ற சொல்லை படிக்க இன்னமும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

India continues to face stern challenges. Despite growing investment in education, 25% of its population is still illiterate; only 15% of Indian students reach high school, and just 7%, of the 15% who make it to high school, graduate.[5] As of 2008, India's post-secondary high schools offer only enough seats for 7% of India's college-age population, 25% of teaching positions nationwide are vacant, and 57% of college professors lack either a master's or PhD degree.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மல்லைக்கு ஒரு பச்சை...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் பொய் சொல்வதில் முதலாமிட‌ம் போல் இருக்கிறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள், நீ சந்தோசமாக இருக்கின்றாயா என ஆராவது கேட்டால், ஆம் என்று தான் எப்போதுமே பதில் சொல்வார்கள்!

இந்தக் கேள்வி கேட்கப்படும்போது, கணவன், மனவி,மாமிக்காரி உறவினர் அல்லது நண்பர்கள் கட்டாயம் பக்கத்தில் இருந்திருப்பார்கள்!

'இல்லை' என்று பதில் சொன்னால், அவர்களது 'குடும்ப கெளரவம்' கப்பலேறி விடாதா, என்ன?

021111satish.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள மற்றவர்களை நோகடிப்பது என்று முடிவே பண்ணிட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 5 நாடுகளும் சனத்தொகை கூடிய நாடு அதில் பொருளாதாரத்தில் உச்சமடைந்த 20% மக்களை சேர்வே எடுத்திருப்பார்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியிருக்கலாம் மிகுதி 80% மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் என்ன என தெரியாமலிருக்ககூடும்...</p>

Edited by putthan

விஜய் தொலைக்காட்சியின் கோபிநாத் கூறுகின்றார் ..

' ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கொலை

ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்புணர்வு

ஒவ்வொரு நாளும் ஒரு பெண் சீதனக்கொடுமையால் எரிக்கப்படுகின்றாள்

இந்தனையும் இந்த பாரத தேசத்தில்' என்று .

குறிப்பு : இந்த நேர அட்டவணையில் தவறு இருக்கலாம், ஏனெனில் ஊகத்தில் எழுதப்பட்டது .

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை!

நிழலி

உலக சிறுவர்களின் பஞ்சம் பசிகளுக்காக திரட்டப்படும் நிவாரணங்களில் ஆபிரிக்காவுக்கு சமனாக இந்தியாவும் உள்ளது.சினிமா போதையும் சின்னத்திரை போதையும் உடலுக்கு தீங்கான மலிவு போதைபானங்களும் பாமரமக்களை மகிழ்ச்சியில் வைத்துள்ளது!இதில் அரசியல்வாதிகள் நலமாகவே குளிர்காய்கின்றார்கள்.

ஐரோப்பா அமெரிக்காபோல் வாழநினைக்கும் இந்தியா சினிமாமூலம் தன்னை திருப்திபடுத்திக்கொள்கின்றது..ஆனால் வறுமைக்கோடு பாதாளத்தில்................

கொய்யால,,, முதன்நிலை.......... என்னு சொல்லிட்டு ,,

இந்தோனிசியாவுக்கு அப்புறம்தான் ... இந்தியா இருக்குன்னு சொல்லாம போயிட்டானுகளே!

இதிலயுமா பித்தலாட்டம்?!

அடுத்தவன் வாழ்வை அழிப்பதால்தான் .... இந்தியா மகிழ்ச்சிய அதனோட மக்களுக்கு கொடுக்குறது...

எங்கிற யதார்த்தம் எத்தன ஹிந்திகாரனுக்கு தெரியும்ங்ண்ணா?

தன்னை சுற்றி இருக்கும் எல்லாருக்குமே..........எதிரியாய் இருக்குறவனுக்கு மகிழ்ச்சி கம்மி!!

உலகத்திலயே தன்னை சுற்றி எல்லாமே ,,எதிரி நாடுகளை கொண்டிருப்பது இந்தியாதானுங்களே?!

ஐ மீன் சுற்றிவளைக்கப்பட்டது எனெமிகளால்..!

இத்தனை எதிரிகளை சம்பாதிக்கும் அளவிற்கு ,, இந்தியா என்ன கொடுமை மத்தவங்களுக்கு பண்ணிச்சு ... எங்கிறத...

உலகின் படிப்பாற்றலில் ,,, அமெரிக்காவையே ஓவர்டேக் பண்ணும் ஹிந்தியன் ஜோசிக்கணும்!

அப்புறம் ... இந்த தற்காலிக மகிழ்ச்சி ...நிரம்தரம்தானான்னு?........

அந்த நாட்டு பீப்பிள் .அனலைஸ் பண்ணனும்!! :)

  • கருத்துக்கள உறவுகள்

இலவச தொலைக்காட்சி, கணனி, அரிசி, வேட்டி, சேலை, ஆடு, மாடு, எல்லம் இலவசமாக கொடுத்தால்.... ஆருக்குத்தான் மகிழ்ச்சி வராது.

இத்துடன் மாதத்துக்கு பத்து புதுப்படம் வெளி வந்தால்... மகிழ்ச்சியின் உச்சத்துகே சென்றுவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலவச தொலைக்காட்சி, கணனி, அரிசி, வேட்டி, சேலை, ஆடு, மாடு, எல்லம் இலவசமாக கொடுத்தால்.... ஆருக்குத்தான் மகிழ்ச்சி வராது.

இத்துடன் மாதத்துக்கு பத்து புதுப்படம் வெளி வந்தால்... மகிழ்ச்சியின் உச்சத்துகே சென்றுவிடுவார்கள்.

:D

மகிழ்ச்சி என்பது, ஒரு ஓலை குடிசை வீட்டிலும் இருக்கு, அது அது அவனவன் மனதை பொறுத்தது. ஒரு பிச்சைக்காரனுக்கு அவன் உலகம் மகிழ்ச்சிகரமானது,

நாங்கள் இங்கு வந்து மகிழ்ச்சியிலா இருக்கிறம், நாட்டு பிரச்சனை, பொருளாதார பிரச்சைனை இப்படி எல்லாவற்றையும் மனதில் ஓடவிட்டால், எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்

இங்கும் வெள்ளையல் மகிழ்ச்சியாக இருக்க அதிகம் போகும் இடம் இந்தோனேசியா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தில் நாகேசின் பகுடி: ஒருவர் ஐய ஒரே கஷ்டமாய் இருக்குதுங்க!

நாகேஷ்: உனக்கு இன்னும் ஆறு மாதம் கஷ்டம் இருக்கும்!

வந்தவர்: அப்புறம்!

நாகேஷ்: கஷ்டம் பழகிடும்!!

ஏழ்மை, வறுமை / திருப்தி மகிழ்சி எல்லாம் மிக மிக அருகேதான் இருக்கின்றன. அது இந்தோனேசியா உட்பட வறுமைக் கோட்டுக்கும் கீழே இருக்கும் மக்களிடம் தாராளமாய் இருக்கின்றது!

என்னை மாதிரி நடுத்தர வர்க்கத்திடம் கேட்டிருந்தால் கிழிந்திருக்கும்! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, வறியவர்கள் மகிழ்ச்சியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது..! இப்பத்தான் விளங்குது இந்தியாவின் பலே திட்டம்..! :D

இந்தியர்கள் பொய் சொல்வதில் முதலாமிட‌ம் போல் இருக்கிறது :lol:

முதலில் சந்தோசம் எதில் என்பதுதான் கேள்வி .பெரும்பாலான இந்தியர்கள் படிப்பறிவில்லாமலும் வறுமைக்கோட்டிற்கு கீழேயும் தான் இருக்கின்றார்கள் ஆனால் சந்தோசமாக இருக்கின்றார்கள்.

அதற்கு அவர்கள் பழகிவிட்டார்கள் என்பதும், அவர்கள் மனோநிலை அப்படியானது என்பதும் தான் உண்மை .டீ.வி நிகழ்சிகளையும் கிரிக்கெட் பார்க்கும் பார்வையாளர்களும் பார்த்தாலே புரியும் .இந்தியாவில் தியேட்டரில் போய் ஒரு சினிமா பார்ப்பதே ஒரு சந்தோஷ அனுபவம் தான் .இந்தியாவில் சுத்தி அடிக்கும் சந்தோசம் உலகில் வேறெங்கும் இல்லை.

எம்மை போல மூன்று வேலை செய்து மோட்கேட்சை முடிக்க அவர்கள் முனைவதில்லை.

இருப்பதை ஏற்று சந்தோசமாத்தான் வாழ்கின்றார்கள் அது எங்கள் பார்வைக்கு பிழையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்,சிம்பு மற்றும் ரஜனிகாந்தின் படத்தை ஆதாரமாக வைத்து இந்திய மக்கள் சந்தோசமாக இருப்பதாக கூறுகிறாரா? :D

அடிப்படை வசதிகள் அற்ற மக்களின் எண்ணிக்கை மில்லியனில் உள்ள போது எப்படி மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூறமுடியும்? ஒரு வேளை உணவை மட்டும் உண்ணும் மக்களே மில்லியனில் உள்ள போது மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது கேலிக்குரிய கூற்று.

இருப்பதை வைத்து சந்தோசப்படுபவர்கள் என்றால் ஆபிரிக்க மக்கள் அல்லவா முதலிடத்தில் இருக்க வேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி என்பதன் அர்த்தம் சரியாக புரிந்திருந்தால் நிச்சயமாக இது பொய்யான தகவல் ^_^

மகிழ்ச்சி என்றால் குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்ற அர்த்தம்மாகது அப்படிபார்த்தால் கூட உலக சனத்தொகையில் இந்தியாவின் இடம் இரண்டாவதே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சர்வேக்கள் எல்லாம் பொய்யானவை என்பதை இந்த சர்வே சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.