கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
இரத்மலான விமான நிலையத்திலிருந்து பாணந்துறைப்பக்கம் நாலாவது தரிப்பிடம் அங்குலான சந்தி. ஆடைதொழிற்சாலைகள் நிறைந்த இடம். அங்கு வேலை செய்யும் இளம் சிங்கள பெண்களுக்கும் குறைவில்லை. நானும் நியாஸும் வெள்ளிகிழமை பின்னேரங்களில் அங்குலான சந்தியில் பிற்ற கொட்டுவ போற 101 பஸ் எடுத்தோம் என்றால், வார விடுமுறையில் வீடு திரும்புகின்ற ஆடை தொழிற்சாலை அழகிகள் தான் எங்கள் பொழுதுபோக்கு. பிகர் மடிக்கிறத்துக்கு என்று எங்களிடம் ஒரு டெக்னிக் இருக்கு. நாங்கள் சீட்டிலே இருந்து கொண்டு நிக்கிற பிகருகளின் காலை சுரண்டுவோம், அவை காலை ஏறி மிதிச்சால் இந்த பிகர் மடியாது. அதேவேளை அவளுகளும் திரும்ப சுரண்டினால் பிகர் மடிஞ்சிட்டு என்று அர்த்தம். இதே மாதிரி நாங்கள் நிண்டு கொண்டு, சீட்டிலே இருக்கிற பி…
-
- 31 replies
- 4.8k views
-
-
இவள் இப்போது சில மாதங்களாய் என் இருக்கைக்கு முன்னதாய் உள்ள இருக்கையில் புகையிரதத்தில் ஒவ்வொருநாளும் அமர்கிறாள். தமிழ் தான் சந்தேகமில்லை. ஏனோ இவளை எனக்குத் தெரிந்தது போன்று ஒரு உள்ளுணர்வு. எங்கே பாத்திருக்கிறேன்? ஞாபகமில்லை. எத்தனை தரம் எப்படி இருந்து யோசித்தும் ஞாபகமில்லை. தமிழ் பெண்ணென்றால் தெரியாத ஆம்பிளையளைப் பாத்தாச் சிரிக்கக்கூடாது என்று அம்மா சொல்லி வழர்த்திருப்பா போல. மாதக்கணக்காய் முன்னிருக்கையில் இருந்தும் ஒரு முறுவல் தன்னும் இன்னும் இல்லை. அதற்காக, நிழல் நிஜமாகிறது படத்தில வந்த சுமித்திரா அவளும் இல்லை, கமல் நானுமில்லை இது 1978ம் ஆண்டுமில்லை. பிள்ளைக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம். அவ்வளவு தான். இந்த மனிதன் என்ற விசயம் இருக்கே, இதில புரிந்ததைக் காட்டிலும் புரியா…
-
- 29 replies
- 2.3k views
-
-
ஒருத்தரும் குழம்பாதேங்கோ எல்லாரும் நல்லாக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தொடர்கள் எழுதிக் கலக்குகிறார்கள் சரி நானும் எழுதிப் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். கடியுங்கோ கல்லெறியாதேங்கோ அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர்தொடர் 1 நரேனினதும் அம்மாவினதும் உரையாடலை கூர்ந்து கேட்டபடி சுமி தன் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவள் அவதானிப்பதை கவனியாதவன்போல நரேனும் சுமியின் அம்மா பத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான். இயக்க அலுவல்கள் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் நின்றிருந்தவன் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இங்கு வந்திருந்தான் “அந்தக் கரனைக் கட்ட குடுத்தெல்லோ வச்சிருக்கோணும். நரேன் உங்கட இயக்கத்தில நாலு வருசம் இருந்த ஆட்கள் கல்யாணம் கட்டலாம் என்று சட்டம் இரு…
-
- 29 replies
- 2.8k views
-
-
பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது. எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன். 'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை. 'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை. முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நி…
-
- 29 replies
- 4.5k views
-
-
மாலை 5 மணி காவல்துறைக்கு ஒரு அம்மா வருகின்றார். நானும் எனது பெண்பிள்ளையும் பூங்காவுக்கு போனோம். மகள் 5 வயசு விளையாடிக்கொண்டிருந்தாள். நான் (6 மாதக்கர்ப்பிணி) சற்று அயர்ந்து விட்டேன். கண் முழித்துப்பார்த்தால் என் பிள்ளையைக்காணவில்லை. ஐயோ ஐயோ உடனே தேடுங்கள் கண்டு பிடியுங்கள் எல்லோரும் உதவுங்கள்............... இப்படித்தான் இந்தக்கதை ஆரம்பமாகிறது............. நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை அவசரப்பிரிவுகள் அத்துடன் அந்த ஊரில் ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் தீவிரப்படுத்தப்படுகிறது............ தொடரும்.....
-
- 28 replies
- 4.2k views
-
-
அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள். என்ன பிரச்சினையென நான் கேட்க மகள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . ஒரு வயதுக்கு பிறகு முதுமை ஒன்றை விரும்பும் ஆனால் அந்த முதுமை விரும்புவதை நாம் வாழ முடியாமல் தங்கி வாழ்வது என்பது மிக கொடுமையாக இருக்கும் எதாவது செய்வதென்றால் கூட கூட…
-
- 28 replies
- 2.4k views
- 1 follower
-
-
Thursday, August 17, 2017 என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். _____________________________________________________ 2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போ…
-
- 28 replies
- 7.2k views
-
-
சிங்களம் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. சிங்களம் தெரியுமா? விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது. சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்…
-
- 28 replies
- 9.4k views
-
-
எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன். போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப்…
-
- 28 replies
- 2.8k views
-
-
பரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் .. நாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட…
-
- 27 replies
- 4.4k views
-
-
அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட. அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றி…
-
- 27 replies
- 5.4k views
-
-
வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படி…
-
- 27 replies
- 3.4k views
-
-
எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது. நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள். ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது. டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு மட்ட…
-
- 27 replies
- 3.5k views
-
-
அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்…
-
- 27 replies
- 2.4k views
-
-
தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…
-
- 27 replies
- 2.6k views
-
-
2009 யுத்தம் முடிவுக்கு வருகிறது. அப்போது தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற பொலிசில் சேருமாறு தமிழ் இளைஞர்,, யுவதிகளுக்கு இலங்கை முழுவதும் அழைப்பு விடுகிறது அரசாங்கம். தரம் 11 சாதாரண தரம் படித்தால் மட்டும் போதுமென அறிவித்தல் கொடுக்கிறது அரசு. யுத்தகாலத்தில் சுடுவதற்கு மட்டும் வெறும் 3 மாத காலம் பயிற்ச்சி கொடுத்தார்கள் அதில் அநேகமானவர்கள் ஊர்காவல்படையில் இருந்த முஸ்லீம்களும் , சிங்களவர்களுமே அதிகமாக இணைந்தார்கள் காரணம் சிலருக்கு சம்பளம் சிலருக்கு கட்டாயம் என பொலிசாராக இணைந்தார்கள். பொலிஸ் சேவையில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது ஆனால் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை நான் பொலிசில் இணைய யாரும் விரும்பவில்லை. காரணம் இந்த அரசாங்கம் படைவீரர்களைக் கொண்டு தமிழ்…
-
- 27 replies
- 3.2k views
- 1 follower
-
-
எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை வீதி செல்கிறது. அப்பாதையில் தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை. இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு. எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தான…
-
- 27 replies
- 2.9k views
-
-
1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம். மூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் …
-
- 26 replies
- 3.6k views
-
-
ஆகாயத்தாமரை மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது….. ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள…
-
- 26 replies
- 4.4k views
-
-
சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு இணைய சஞ்சிகையில் . இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே …
-
- 26 replies
- 4.5k views
-
-
சாத்திரி ஒரு பேப்பரிற்காக மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992 .............................................................. டொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது…
-
- 26 replies
- 2.7k views
-
-
'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். காலையில் தோட்டக்காரர் வேலைக்குப் போகும் போது, காமாட்சியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள், வறண்டு, காய்ந்து போன, எரு வரட்டிகளைத் தடியால் அடித்து நொருக்கித் தூளாக்குவ…
-
- 26 replies
- 4.3k views
-
-
இந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத …
-
- 25 replies
- 4.7k views
-
-
கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....! Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Monday, December 31, 2012 comments (0) "ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே" இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- 'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது வல்லை வெளி தாண்டிப் போகுமா வயல் வெளிகள் மீது க…
-
- 25 replies
- 4.2k views
-
-
கார்லா பிரவுண்..! ஐந்து அடிகள் தான் உயரம். ஆனாலும் அந்தச் சிறிய உருவம் இள வயதிற்கேற்ற வனப்புடனும், வளைவுகளுடனும் வாலிபர்களை கிறங்க வைக்கத் தவறுவதில்லை. அவளை பெண் நண்பியாக அடையப் போவது யார் என்கிற போட்டிதான் அந்த அமெரிக்க ஊரின் இளைஞர்களுக்குள் முக்கியமான ஒரு போட்டியாக இருந்தது. அவளைப் போல பல பெண்கள் வனப்புடன் இருந்தாலும் கார்லா நன்கு பிரபலம் ஆகிவிட ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. ஒரு சமயம் அவள் கடற்கரை ஒன்றில் நடந்து சென்றபோது பத்திரிகைக்காரர் ஒருவர் அவளது அனுமதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அந்தப்படம் அவளது பெயருடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ஒன்றில் வெளிவரவரவும் அவளது மீட்டர் இளைஞர் மத்தியில் சும்மா ஜிவ்வென்று எகிறியது. இளைஞர்கள் அவளது வீட்டுக்கே தொடர்பு க…
-
- 25 replies
- 2.6k views
-