Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2000 பதிவு கண்ட சுபேசுக்கு வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  சுபேஸ்  தொடரட்டும்

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
சுபேசை போல எழுத கூடியவர்கள் உண்மையை தைரியமாக எழுதுவதில்லை என்ற கவலை எனக்கிருக்கிறது...சுபேஸ் மென் மேலும் எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்
 

வாழ்த்துக்கள் சுபேஸ்!

 

2000 கருத்துக்களை எழுதினாலும் 20000 எழுதியமாதிரி ஒரு உணர்வு.

வாழ்த்துக்கள் சுபேஸ்......!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்

வாழ்த்துக்கள் சுபேஸ் .............இவைபோல் மேலும் பல ஆயிரம் ஆக்கபூர்வமான பதிவுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல ஆயிரம் பதிகளை இட வாழ்த்துக்கள் சுபேஸ்......!

வாழ்த்துகள் சுபேஸ் அண்ணா, இன்னும் பல பதிவுகள், கருத்துகள் இட வாழ்த்துகள். :)

 

நீங்கள் முன்பு போல் இப்பொழுது கவிதை எழுதுவதில்லை. நேரமின்மையோ தெரியவில்லை. மேலும் பல கவிதை எழுத வாழ்த்துகள். :)

வாழ்த்துகள் சுபேஸ். உண்மையில் 2000 கருத்துகளை விட மிக அதிகமாக எழுதிய எண்ணத்தை தரக்கூடியதாகத் தான் உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன.  குறைந்த எழுத்துகளில் நிறைந்த அனுபவங்களைத் தந்துள்ளீர்கள்.

 

எழுதக் கிடைக்கும் நேரங்களை விரயம் செய்யாமல் இன்னும் அதிகம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். Hope you understand.

  • கருத்துக்கள உறவுகள்

2000.jpg

சுபேஸ் ஒரு, நல்ல சிந்தனையாளர், பொறுமையாளர். எதனையும்... ஆழ யோசித்து, கருத்து எழுதுவதில்... கெட்டிக்காரர்.

2012ம் ஆண்டு, யாழ்கள பரிசளிப்பு விடயமாக... அவரும், நானும் தனிமடல்களில்.. தொடர்பு கொண்ட போது.. கண்ட உண்மை.

வாழ்த்துக்கள்... சுபேஸ்.smile.gif

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சுபேஸ். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்!

 

ஆனால்  சுபேஸ்  இரண்டாயிரம் எழுதினார் என்பதை நம்பமுடியவில்லை..........

 

ஆனால் அவர் தொடங்கிய

கொஞ்சம் வாங்க சிரிக்கலாம் என்ற திரி  சக்கை போடு போடுகிறது.

ஆனால் அதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

ஆள் ரொம்ப  பேசாத அதிகம் அலட்டிக்காத தம்பி

வாழ்க வளமுடன்.


 

சுபேசிடம் உள்ள அபாரித திறமையை விரையம் செய்யாமல் முன்னேற வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

 

தமிழ்சிறி.. 2000 பதிவுகளுக்கு வேறை படம் கிடைக்கவில்லையா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், பேனாவைத் (விசைப்பலகையைத்) தொடும்போது அதிலிருந்து சிந்தும், ஒவ்வொரு துளிகளும், அழகான முத்துக்களே!

உங்கள் பதிவுகளில் உங்களை இனங்காட்டும் 'தனித்துவம்' என்னை கவர்ந்தது!

 

மரத்தில் இருந்து தவறிப்போய், மகிழுந்து ஒன்றினுள், விழுந்து விட்ட குரங்குகளாக, மரத்தை மறந்துவிட்ட குரங்குகளைப் போல அல்லாது இன்னும், தாய் மண்ணின் மீதும்,தவிக்கும் அந்த மண்ணின் குழந்தைகள் மீதும், நீங்கள் கொண்ட பிணைப்பும், அவர்கள் வாழ்வில் சிறி ஒளிக்கீற்றாவது தோன்றும் வரை, நீங்காது இருக்கட்டும், சுபேஸ்!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

தமிழால் இணைவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ்.. :D

 

தமிழ்சிறி.. 2000 பதிவுகளுக்கு வேறை படம் கிடைக்கவில்லையா? :icon_mrgreen:

நெடுக்ஸ்சின்... 15,000 படம் திரும்பக் கிடைத்தால்... தான், மற்றப் படங்கள். அது மட்டும்... சைவப் படங்கள் தான்... இணைப்பேன். அது மட்டும், நீங்கள்... விரதம் இருங்கோ... இசைக்கலைஞன். "நெல்லுடன்... சேர்ந்த, எலிப்புளுக்கையும்... காயுமாம்".

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சுபேஸ். உண்மையில் 2000 கருத்துகளை விட மிக அதிகமாக எழுதிய எண்ணத்தை தரக்கூடியதாகத் தான் உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன. குறைந்த எழுத்துகளில் நிறைந்த அனுபவங்களைத் தந்துள்ளீர்கள்.

எழுதக் கிடைக்கும் நேரங்களை விரயம் செய்யாமல் இன்னும் அதிகம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். Hope you understand.

ஆழமாக எழுதும் சுபேஷ் இற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த திரியை நந்தன் அண்ணா திறந்தபோது எனக்கு ஒருவித அந்தரமாக இருந்தது..என்னடா இது இதற்காக எல்லாம் பாராட்டுவார்களா என்று நினைத்தேன்..இதை அகற்ற சொல்லி கேட்பமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதும் நந்தன் அண்ணாவின் மனம் புண்படுமே என்று தயங்கி கொண்டிருந்தபோது இங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எனது அந்த எண்ணத்தையே தகர்த்துவிட்டன... எழுதுவதற்கான எந்த ஈடுபாடும் இல்லாமல் எழுதி என்னத்தை கிழிப்பது என்று சலிப்புற்றிருந்த நேரத்தில் வாந்திருக்கும் இந்தக் கருத்துக்களை பார்க்கும்போது இதுவரை எழுதியதற்கான ஏதோ ஒரு குட்டி அங்கீகாரம் கிடைத்ததுபோல நிறைவாக இருக்கிறது..
 
நந்தன் அண்ணா..நானே இதை கவனிக்காத போது கவனித்து திரி திறந்து வாழ்த்தியதற்கு என் அன்பும் நன்றிகளும்...இது எனக்கு உரியதல்ல..என் எழுத்தின் மீதானதாகவே எடுத்துக்கொள்கிறேன்..நல்ல ஒரு இதயமுள்ள மனிதன் நீங்கள்..என் உடன் பிறவா அண்ணண் நீங்கள்...உங்கள் வாழ்க்கை பயணம் உங்களை என் மனதில் உயர்வான ஒரு இடத்தில் வைத்திருக்கிறது அண்ணா..நன்றிகள் அண்ணா..
 
ரதி அக்கா...இதுவரையும் நாம் பேசியதில்லை...ஆனால் நிறைய பேசிக்கொள்வதாகவே உணர்கிறேன்...நமக்குள் கருத்துக்களால் ஏதோ ஒரு பிணைப்பு...அது பேசிக்கொள்கிறது...நன்றி அக்கா...
 
அகூதா அண்ணா....உங்களை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..குறிப்பாக உங்கள் ஆங்கிலப் புலமை..வியக்கவைக்கும்..எதற்கும் பொறுமையாக நிதானமாக பதிலளிக்கும் உங்கள் குணம் பார்த்து வியந்திருக்கிறேன்..இரண்டு இலட்சம் எழுதியது போல் உணரவைக்குமளவுக்கு உங்களோடு எழுத்துக்களால் இணைந்து பயணித்திருக்கிறேன் என்பதை நினைக்க பூரிப்பாக உணர்கிறேன்..நன்றிகள் அண்ணா...
 
தமிழினி அக்கா...உங்களுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை...பேசிக்கொள்கிறோமே அக்கா தம்பி உணர்வுகளால்...அதனால்...
 
நன்றிகள் சுமோ அக்கா..வாழ்க்கையில் சாதாரணமாணவளாக இருப்பீர்களோ தெரியாது..ஆனால் எழுத்துக்களால் ஒரு சாதாரணமானவளாக எழிமையாக காட்டியே என்னை கவர்ந்தவர் நீங்கள்...இப்படி இயல்பிலையே இருப்பீர்களானால் உங்கள் குடும்பம் கொடுத்துவைத்தது..நன்றிகள் அக்கா உங்கள் அன்பிற்கு...
 
தமிழ்சூரியன் அண்ணா...என் இன்னொரு அண்ணண் என்ற உரிமை உங்களிடம் அடிக்கடி எடுத்துக்கொள்வேன்..மனதால் எப்பொழுதும் அப்படியேயே உணர்கிறேன்....கண்டிப்பாக நிறைய எழுதுகிறேன் அண்ணா இனிமேல்..நன்றிகள் அண்ணா...
 
தமிழரசு அண்ணா...பேசாத வரைக்கும் ஒரு செய்தி இணைப்பாளனாக பார்த்த ஒருவர்..பேசிய நாளில் உணர்ந்தேன் அற்புதமான ஒரு உறவை...ஒரு எழிமையான இனிமையான மனிதனை கண்டேன்..என்னுடன் கூடப் பிறக்காத என் இன்னுமொரு அண்ணண்...நீங்கள் கடந்து வந்த பாதை..போராடிய போராட்டம் உங்களை என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது..என்னுள் இருக்கும் பல நினைவுகள் இனிமையானவை..கண்டிப்பாக அவற்றில் உங்களதும் ஒன்று..நன்றிகள் அண்ணண்...
 
 
துளசி...என்னுடன் முன்னர் சண்டைபிடித்தாலும்..இப்பொழுது என்னுள் இருந்த முற்கோபக்குணம் இல்லாமல் போக ஒரு காரணமாகிவிட்டீர்கள்..நிச்சயமாக எழுதுகிறேன் இனிமேல் நேரமொதுக்கி...நன்றிகள் துளசி...
 
நிழலி அண்ணா...என் நல்ல ஒரு நண்பணாக உணர்கிறேன் உங்களை..நான் கவலைப்படுவேன் பிரான்சில் இல்லாமல் போய்விட்டீர்களே என்று..என் உணர்வுகளுடன் ஒத்துப்போகும் ஒரு இனிய நண்பணாக இருக்கவேண்டியவர்...தூரங்கள் எமை பிரித்து வைத்திருக்கிறது...இங்கிருந்திருந்தால் அதிக நேரத்தை உங்களுடன் செலவழித்திருக்கலாம்...அண்ணா புரிந்துகொள்கிறேன் உங்கள் செய்தியை..கண்டிப்பாக இனிமேல் இருப்பேன்...நன்றிகள் அண்ணா...
 
தமிழ்சிறி அண்ணா..ஆரம்பத்தில் என்னை பயமுறுத்திய ஒரு அண்ணண்..எதாவது கதைக்கபோக சண்டை பிடித்துவிடுவாரோ என்று பயம் இருக்கும்...ஆனால் பின்னாளில் அவருடன் தனிமடல்களில் பேசியபோதுதான் ஒரு இனிய தந்தையை அவருள் உணர்ந்தேன்..அவரது கடிகளை ரசித்துபடித்து சிரிக்கும் ரசிகர்கள் வரிசையில் முதல் வரிசையில் நானும் இருப்பேன்..நன்றிகள் என் அன்பு அண்ணா.. 
 
யாயினி அக்கா...பழக இனிமையான மென்மையான அக்கா...வாழ்க்கையை தைரியத்தோடு எதிர்கொள்ள பல நேரங்களில் ஆலோசனை தரும் அன்பு சகோதரி...இழப்புகளில் துவண்டு போய் இருக்கும் நேரங்களில் உங்கள் அறிவுரைகள் பல நேரங்களில் மீண்டும் மீண்டும் வாசித்து விட்டு தைரியத்துடன் எழுந்திருக்கிறேன்...நன்றிகள் என் அன்பு அக்கா...
 
 
கறுப்பி..எனக்கு மட்டுமல்ல யாழில் இருக்கும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் ஒருவர்..புரியாத புதிர்...சுவாரசியமான ஒரு மனிதர்...எனக்கு பிடித்த ஒருவர்..அதிகம் அலட்டிக்கொள்லாத ஆனால் அதிகம் உள்ளே வைத்திருக்கும் ஒருவர்..நன்றிகள் கறுப்பி... 
 
விசுகண்ணா..நல்ல ஒரு தந்தை..பேச இனிமையான மனிதர்...வாழ்க்கையை இப்படித்தான் வாழனும் என்று வாழும் ஒருவர்..தன் வாழ்வில் அவர் சாதித்துவிட்டார் என்று நினைக்கிறேன்...எனது வாழ்க்கையின் இன்னொரு பாதி குடும்ப வாழ்க்கையாக இருக்கும்போது பல விடயங்களில் உங்கள் நினைவு வரும் என்று நினைக்கிறேன்..உங்கள் கருத்துக்கள் கண்டிப்பாக உதவும்..நன்றிகள் அண்ணா...
 
இணையவன் அண்ணா...அப்படி ஒரு மென்மையான மனிதனை நான் இதுவரை பார்த்ததில்லை..பேசும் சத்தம்கூட யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைக்கும் ஒரு மென்மையான இனிமையான மனிதன்...கொடுத்து வைத்தவர்கள் உங்கள் குடும்பத்தினர் உங்களைப்போல் ஒரு இனிமையான மனிதனை பெற்றுக்கொள்ள..புரிந்துகொள்கிறேன் அண்ணா நீங்கள் சொல்ல வருவதை..கண்டிப்பாக சாதிப்பேன்..நன்றிகள் என் அன்பு அண்ணா...
 
இசை அண்ணா..உங்கள் பகிடிகளில் ஒரு பக்கத்துவீட்டு அண்ணாபோல் உணரவைப்பவர்...உங்கள் தனித்துவமான எழுத்துக்கள் என்னால் மிகவும் ரசிக்கப்படுவன..அதிகம் அலையாமல் விரைவாக வேலையை ஒரு இடத்தில் நிரந்தரமாக்கிகொண்டு இளைப்பாறுங்கள்..நன்றிகள் அன்பு அண்ணா..
 
புங்கை அண்ணா..உங்களுடன் அருகில் இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக பேசியபடி உங்கள் தமிழையும் சிந்தனைகளையும் ரசிக்கலாம் என்று நினைப்பதுண்டு..உங்களைப்போன்ற பல மனிதர்களை யாழ்மூலம் அடைந்ததுதான் யாழ்மூலம் எனக்கு கிடைத்த அற்புதம்...உங்கள் வாழ்க்கையை நான் மிகவும் ரசிக்கிறேன் அண்ணா...உங்கள் குடும்பம் உங்களால் இனிமை அடையும்..கொடுத்து வைத்தவர்கள்..ஒரு நாள் உங்களை சந்திக்கவேண்டும்...நன்றிகள் என் அன்பு அண்ணா..
 
சுண்டல்...நன்றிகள் நண்பரே..நல்ல கலகலப்பான நண்பண் சுண்டல்....உனது கடிகளை நான் ரசித்து சிரித்து வாசிப்பேன்....யாழை கலகலப்பாக வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர்..நன்றிகள் சுண்டல்...
 
தப்பிலி அண்ணா..யாழில் நான் அதிகம் நெருக்கமாக உணரும் என் இன்னுமொரு உறவு...நாம் அதிகம் பேசாவிட்டாலும் எம் உண்ர்வுகளால் அடிக்கடி பேசிக்கொள்வோம்..தப்பிலி அண்ணாவை யாழில் காணவிட்டால் முகம் வாடிப்போவவர்களில் நானும் ஒருவன்..அதிகம் எழுதாவிட்டாலும் நல்ல இலக்கிய ரசனை உள்ள ஒரு அழகியல் உணர்வுள்ள அற்புதாமான என் அண்ணண்..நன்றிகள் அண்ணா...
 

 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சுபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. இந்த எழுத்து வர்ணனையே இன்னொரு ஆயிரம் பதிவுகளுக்குச் சமம்.

அகூதா அண்ணா....உங்களை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..குறிப்பாக உங்கள் ஆங்கிலப் புலமை..வியக்கவைக்கும்..எதற்கும் பொறுமையாக நிதானமாக பதிலளிக்கும் உங்கள் குணம் பார்த்து வியந்திருக்கிறேன்..இரண்டு இலட்சம் எழுதியது போல் உணரவைக்குமளவுக்கு உங்களோடு எழுத்துக்களால் இணைந்து பயணித்திருக்கிறேன் என்பதை நினைக்க பூரிப்பாக உணர்கிறேன்..நன்றிகள் அண்ணா...

ஆங்கிலப்புலமை பற்றி... எனக்கு பெரிதாக புலமை இல்லாவிட்டாலும் ( என்னை விட புலமை உள்ளவர்கள் நிறையவே உண்டு  :D) , இன்றுள்ள தாயக மக்களின் நிலைகளை நாம் கூறாவிட்டால் எமக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த மண்ணுக்கே நாம் செய்த மாபெரும் துரோகம் அதுவாகத்தான் இருக்கும், என்பது எனது நிலை. அந்த ஆங்கிலம் எமக்கு சோறு போடுகின்றது, அதே ஆங்கிலத்தை வைத்து நாலு எழுத்து எழுதாவிட்டால் ... அந்த சோறும் செமிக்காது.  

 

நன்றிகள் சுபேஸ்!

 

பி.கு.திரியை திறந்த நந்தனுக்கும் நன்றிகள்.

Edited by akootha

எங்கடாம்பி இருந்து இவ்வளவு எழுத்தையும் கோருத்து எடுக்கா? எனக்கு இரண்டு வசனம் எழுதி முடிக்கவே கஷ்டமாயிருக்கும்.

ரசனை உள்ள ஒரு அழகியல் உணர்வுள்ள அண்ணண்
 
இங்க அழகாய் ரசிக்க விடமாட்டாங்களே lol பின் குறிப்பு: நிர்வாகம் சிமைலீஸ் பிளீஸ்.

Edited by தப்பிலி

வாழ்த்துக்கள் சுபேஸ்,

அடேயப்பா.. இந்த எழுத்து வர்ணனையே இன்னொரு ஆயிரம் பதிவுகளுக்குச் சமம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.