Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பல் வலி, ஆனால் பல்லில் பிரச்சனை இல்லையாம்; என்ன காரணம்?

Featured Replies

கடந்த பல மாதங்களுக்கு முன் இடப்பக்கத்தில் உள்ள மேற்பகுதியின் மூலையில் இருக்கும் கொடுப்புப் பல் ஒன்றில் வலி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாகி இப்ப அடிக்கடி கடுமையாக வலிக்குது. பெரிய சாப்பாடு (இறைச்சி, ஆட்டு எலும்பு போன்றன) எல்லாம் சாப்பிடும் போது அப்பாவியாக தானுண்டு தன் பாடுண்டு என இருக்கும் பல் கடுகு, தானியங்களின் தோல், பர்கர் துண்டு, கடலை போன்ற சின்ன உணவு சாப்பிடும் போது மட்டும் உயிரே போற மாதிரி வலிக்குது. சின்ன உணவுகள் மாவாக அரைபடும் போது, அவை போய் பல்லில் அடையும் போதுதான் இந்த வலி கடுமையாக வருகுது.

என்னடா சாப்பாட்டு ராமன் எனக்கு இப்படிச் சோதனை வந்துட்டுதே என்று பல் வைத்தியரிடம் போய் பல்லைக் காட்டினால், அந்தாள் இதுதான் சாக்கு என்று பல X-Ray களை எடுத்துப் பார்த்துவிட்டு, உன் பல்லில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றார். நான் சிங்கன், சும்மா விடுவனா.. "ஏன் அப்ப வலிக்குது " என்று தொடர்ந்து விடாமல் கேட்டதுக்கு பல்லுக்கு இடையில் இருக்கும் சதைப் பகுதி கொஞ்சம் தேய்ந்து இருப்பதால் எலும்பில் போய் உணவு படும் போது வலிக்குது என்று காரணம் சொல்லி, ஒரு திரவ மருந்தின் பெயரையும் தந்து வாங்கி கொப்பளி என்றார். மறக்காமல் அடுத்த மாதம் கிளீன் பண்ண வா என்றார் (இங்குள்ள பல் மருத்துவர்கள் பொய் பல்லு போடுபவர்களிடம் கூட கிளீன் பண்ண கேட்டு காசு கறப்பார்கள்)

நான் தொடர்ந்து காரணம் கேட்டு அவர் சொன்னதால் அவர் மேல எனக்கு ஒரு டவுட்டு. எனக்கு அவரை முழுசா நம்புவதா விடுவதா என்று இப்ப பிரச்சனை. இப்படி உங்களில் யாருக்கும் பிரச்சனை இருக்கா? அல்லது கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா? இதற்கான மருத்துவ காரணம் என்ன? அதெப்படி எண்ணி 32 பற்கள் இருக்கும் போது ஒரே ஒரு பல்லுக்கு இடையில் மட்டும் தசை தேய்வான்?

இப்ப எல்லாம் சின்ன உணவை சாப்பிடும் போது வாயை கோணலாக வைத்துக் கொண்டு சாப்பிடுவதால் பக்கத்து சீட்டு பெண் ஏன் வாய்க்குள் பெரிசா எதையாவது நுழைத்தீர்களா என்று நக்கலாக கேட்கின்றாள்

.. .. உங்கள் உதவி தேவை இது பற்றி...

பி.கு

அந்த பல் மருத்துவரின் உதவியாளரும் ஒரு பெண்தான்..நல்ல அழகு !!

  • கருத்துக்கள உறவுகள்

மிருக வைத்தியர் ஆலோசனை சொன்னால் கோவிக்க மாட்டீங்கள் தானே? :D

1. கொப்பளிக்கத் தந்த மருந்தின் பெயர் என்ன? இது ஒரு சுத்தமாக்கும் மருந்தா அல்லது அழற்சியைத் தடுக்கும் மருந்தா (anti-inflammatory) என்று பாருங்கள். அழற்சியைத் தடுக்கும் மருந்தெனில், பயன் படுத்தும் போது உங்களுக்கு வலி படிப் படியாக மறைகிறது எனில் உங்கள் பல் மருத்துவர் சொன்னது போல localized gingivitis மாதிரி ஏதாவது இருக்கக் கூடும்.

2. இது கடைவாய்ப் பல்லாக (ஞானப் பல்லுக்கு கிட்டவாக) இருந்தால் மருத்துவரின் விளக்கம் சரியாக இருக்கக் கூடும். அரைத்தலுக்குப் பயன் படுவதாலும் வயதோடு இந்தப் பகுதியில் இருக்கும் பற்களின் ஒழுங்கமைப்பில் (alignment) மாற்றங்கள் ஏற்படுவதாலும் பல் ஒழுங்காக இருந்தாலும், பல்லைச் சுற்றிய மென்னிழையப் பகுதி பாதிக்கப் பட்டு அந்த இடத்தில் மட்டும் அழற்சியும் வலியும் ஏற்படுவது சாத்தியம்.

3. இந்த மருத்துவர் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது ஆலோசனை பெறுவது நல்லது.உங்கள் பல் மருத்துவக் காப்புறுதி இதை அனுமதிக்குமா என்று அறிந்த பிறகு செய்தால் உங்கள் பணம் விரயமாவதைத் தடுக்கலாம்.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வைத்தியர் என்று சொல்ல வேண்டும்..நிறைய செலவுகளுக்கு வளி வகுக்காமல் அனுப்பி வச்சு இருக்கிறார் .ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னதன் பின்பு ஏன் நீங்களாக ஒவ்வொன்றையும் உருவாக்கிகொள்கிறீர்கள்...நெடுகலும் அதையே நினைச்சுக் கொண்டு இருந்தாலும் சில வேளைகளில் ஒரு விதப் பயம் ஏற்படலாம்.மவுத்வாஷை வாங்கி பாவித்து பாருங்களேன்..

  • தொடங்கியவர்

மிருக வைத்தியர் ஆலோசனை சொன்னால் கோவிக்க மாட்டீங்கள் தானே? :D

மனுசர் என்பது ஒரே ஒரு இனம்...ஆனால் மிருகங்கள் எவ்வளவு இருக்கு...ஆகவே மிருக வைத்தியரின் அனுபவத்தின் முன் மனித வைத்தியர் கிட்டவும் நிற்க ஏலாது :D :D

1. கொப்பளிக்கத் தந்த மருந்தின் பெயர் என்ன? இது ஒரு சுத்தமாக்கும் மருந்தா அல்லது அழற்சியைத் தடுக்கும் மருந்தா (anti-inflammatory) என்று பாருங்கள். அழற்சியைத் தடுக்கும் மருந்தெனில், பயன் படுத்தும் போது உங்களுக்கு வலி படிப் படியாக மறைகிறது எனில் உங்கள் பல் மருத்துவர் சொன்னது போல localized gingivitis மாதிரி ஏதாவது இருக்கக் கூடும்.

வீட்டை போய் மருந்தின் பெயரை மீண்டும் பார்த்து விட்டு இரவு எழுதுகின்றேன். அநேகமாக anti-inflammatory மருந்தாகத் தான் இருக்க வேண்டும். வாய்க்குள் விட்டு 3 நிமிடமாவது வைத்து இருக்கச் சொன்னார்

2. இது கடைவாய்ப் பல்லாக (ஞானப் பல்லுக்கு கிட்டவாக) இருந்தால் மருத்துவரின் விளக்கம் சரியாக இருக்கக் கூடும். அரைத்தலுக்குப் பயன் படுவதாலும் வயதோடு இந்தப் பகுதியில் இருக்கும் பற்களின் ஒழுங்கமைப்பில் (alignment) மாற்றங்கள் ஏற்படுவதாலும் பல் ஒழுங்காக இருந்தாலும், பல்லைச் சுற்றிய மென்னிழையப் பகுதி பாதிக்கப் பட்டு அந்த இடத்தில் மட்டும் அழற்சியும் வலியும் ஏற்படுவது சாத்தியம்.

நீங்கள் சொல்லுவது போல் இது ஞானப் பல்லுக்கு பக்கத்தில் தான் இருக்கு.

பல்லைச் சுற்றிய மென்னிழையப் பகுதி பாதிக்கப் பட்டு இருந்தால் சின்ன சாப்பாடுகள் அடையும் போதா இந்த வலி வரும்? சாப்பாடு சாப்பிடாத நேரத்தில் எல்லாம் நல்ல பிள்ளைமாதிரி இருக்கும்.. தொட்ர்ந்தால் போல் 2 கிழமைக்கு ஒரு சத்தம் போடாது...பிறகு ஏதாவது கடலை சாப்பிட்டால் போச்சுது... நேற்று என் பல்லு நல்ல பிள்ளையாகி விட்டது என்று பருத்தித்துறை வடை சாப்பிடப் போய் இப்ப வலி உயிர் போகுது

3. இந்த மருத்துவர் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது ஆலோசனை பெறுவது நல்லது.உங்கள் பல் மருத்துவக் காப்புறுதி இதை அனுமதிக்குமா என்று அறிந்த பிறகு செய்தால் உங்கள் பணம் விரயமாவதைத் தடுக்கலாம்.

இந்த மருத்துவர் சொன்ன மருந்தை 2 அல்லது 3 வாரம் பயன்படுத்தி விட்டு முன்னேற்றம் இல்லையெனில் இன்னொரு வைத்தியரிடம் காட்டுவேன் (மருத்துவரின் உதவியாளர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது என் முன்நிபந்தனை)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணை...இது சாமியின் தண்டணை என்று நினைக்கிறேன்....சாமிதான் பல்லைக் குத்தீட்டுது...மனைவி வீட்டில் இருக்க றோட்டில எந்தப் பெட்டையைப் பார்த்து பல்லைக்காட்டினியள்..? :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுக்கும்,மூளைக்கும் சம்மந்தம் இருக்குதாம் எனக் கேள்விப்பட்டேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுக்கும்,மூளைக்கும் சம்மந்தம் இருக்குதாம் எனக் கேள்விப்பட்டேன் :lol:

பல்லுக்கும் மூளைக்கும் மட்டுமல்ல, பல்லுக்கும் முழு உடலின் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இருக்கு. முரசு நோய் (gum disease) காரணமாக பற்கள் ஈடாடும் போது, உட்புகும் நுண்ணங்கிகள் உங்கள் இதயம் வரை சென்று தாக்கக் கூடும். இதனால் இதய நோய் வரக் கூடும். அண்மையில் முரசு நோய் உடைய பெண்களின் கருக் கட்டும் திறன் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வில் சுட்டிக் காட்டி இருந்தார்கள். முரசு நோயினால் உருவாகும் அழற்சி தொடர்பான சுரப்புகள் இரத்தத்தில் அதிக அளவில் இருப்பதால் இந்தக் கருக்கட்டல் குறைபாடு ஏற்படுவதாக நம்புகிறார்கள். பற்சுகாதாரத்தையும் பல் மருத்துவர்களையும் நாம் முக்கியமாகக் கருத வேண்டும் என இந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி (கராம்பு) லவங்கம், கற்பூரம், ஓமம் ஆகியவற்றைத் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். பல்வலி வரும்போது சம அளவில் கலந்து அவற்றில் ஒரு சிட்டிகை எடுத்து வீங்கிய பல் ஈறில் வைத்து அழுத்த வேண்டும். அதனை விழுங்காமல் உமிழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும்.

பிறகு சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல் சம்பந்தமான சகல உபாதைகளுக்கும் உகந்த இடைக்கால நிலாரனி தன்னிலை மறந்த முத்தம்தான்.அனுபவம் தான் சிறந்த வாத்தி. :lol: :lol:

பல் சம்பந்தமான சகல உபாதைகளுக்கும் உகந்த இடைக்கால நிலாரனி தன்னிலை மறந்த முத்தம்தான்.அனுபவம் தான் சிறந்த வாத்தி. :lol: :lol:

அவர் இப்ப ஆபீஸ் ல இருக்கார் உங்கட கதைய கேட்டிட்டு பக்கத்தில இருக்கிற பெண்ணை இழுத்து வைச்சு முத்தம் குடுக்க போறார் :lol: :lol:

பல்லின் வேர் sensitive ஆக இருந்தாலும் வலி உண்டாகும்..

http://www.medicinen...che/article.htm

பற்களின் உட்பகுதிகளை பார்க்கும் கண்ணாடி ஒன்று வாங்கி நீங்களே பார்க்கலாம்.. பல்லில் நிறம் மாறி இருந்தால் அப்பல்லின் வேரில் பிரச்னை என்று நினைக்கிறன்... நல்ல பல்வைத்தியரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது..

....

பல்லைச் சுற்றிய மென்னிழையப் பகுதி பாதிக்கப் பட்டு இருந்தால் சின்ன சாப்பாடுகள் அடையும் போதா இந்த வலி வரும்? சாப்பாடு சாப்பிடாத நேரத்தில் எல்லாம் நல்ல பிள்ளைமாதிரி இருக்கும்.. தொட்ர்ந்தால் போல் 2 கிழமைக்கு ஒரு சத்தம் போடாது...பிறகு ஏதாவது கடலை சாப்பிட்டால் போச்சுது... நேற்று என் பல்லு நல்ல பிள்ளையாகி விட்டது என்று பருத்தித்துறை வடை சாப்பிடப் போய் இப்ப வலி உயிர் போகுது

....

கடலை மாவில் செய்த (குறிப்பாக indian spicy mixer, காரப்பகோடா, கடலை வடை -பருத்தித்துறை வடை) பதார்த்தங்களை உண்டால் அன்றே பல்வலி வருவது உண்மை ஆனால் அதற்கான மருத்துவக் காரணங்கள் எனக்குச் சொல்லத் தெரியவில்லை... முடிந்த அளவு அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள்..

பல் சம்பந்தமான சகல உபாதைகளுக்கும் உகந்த இடைக்கால நிலாரனி தன்னிலை மறந்த முத்தம்தான்.அனுபவம் தான் சிறந்த வாத்தி. :lol: :lol:

அட ....

முத்தங்களின் மூலம் எதிராளியின் பல்லைப் பிடுங்கும் புதிய உத்தி :rolleyes:

வாழ்க வளர்க :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

gum-disease-615x324.jpg

பல் நல்லா இருக்க.. முரசு கரைதலினூடு.. பற்களில் வலி ஏற்பட்டு அவை விழக் கூடும். இதற்கு பொதுவான காரணங்களாக.. தொற்றுக்கள் மற்றும்.. சரியான பற் சுகாதாரமின்மை.. மற்றும் நிறையுணவின்மை.. பற்களில் கல்சியம் படிதல் (plaque)... அதிக இனிப்பு உண்ணுதல்.. மேலும் முன்னர் பல்லில் அடிபட்ட தன்மைகள் இனங்காணப்படுகின்றன..!

இந்த நிலை மது.. சிகரெட்.. போதைப் பொருட்கள் புகைப்பவர்களிடம்.. அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது..! இதனை பாவிக்காதவர்களிடத்திலும் மேற்சொன்ன காரணங்களால் நிகழக் கூடும்..!

Toothbrush_450x450.jpg

இதற்கு ஆரம்பத்திலேயே சரியான வைத்திய ஆலோசனை பெறுவதோடு.. வைத்திய ஆசோசனைப்படி.. சரியான mouth wash பாவிக்கவும்..! அதேபோல் பற்களை சரியான தூரிகைகள் கொண்டு பல் துலக்கி வருதலும் அவசியம்.

மேலும்.. அதிகளவு கோக்.. போன்ற மென் அமில பாணங்கள் அருந்துவதை குறைப்பது நல்லது. அதேபோல் ஐஸ்கிரீம் போன்ற உணவுவகைகள் உண்டால் வாயை மெளத் வோஸ் கொண்டு கழுவுதல் நல்லம்.

41A64W0HPML._SL500_AA300_.jpg

காலையும் மாலையும் பல் துலக்குவதோடு.. மெளத் வோஸ் கொண்டு கழுவுதல் நன்று..! பற்பசையில்.. புளோரைட் (fluoride) சரியான அளவில் உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

headers_01-hardness.jpg

Water hardness is an aesthetic quality of water, and is caused mostly by the minerals calcium and magnesium, but is classified or measured based on the level of concentration of calcium carbonate. How hardness is classified is based on the following scale:

Definition Calcium Carbonate Concentration Soft Water 0 – 60 milligrams per liter (mg/L) Moderately Hard 61 – 120 mg/L Hard 121 – 180 mg/L Very Hard 181 or above

மேலும் அதிகளவு வன்னீர் (hard water) அருந்துதலும் கூடாது. போத்தல்களில் அடைத்து வரும் நீரில் உள்ள கல்சியம் (calcium - Ca).. மக்னீசியம் (magnesium - Mg) அளவு தண்ணீரின் வன்மையை தீர்மானிக்கிறது. அதிகளவு கல்சியம்.. உள்ள நீரை அருந்தினால் அவை பற்களில் plaque படிவுகள் உருவாக வாய்ப்பளிக்கும். எம்மவர்களில் இந்தப் பிரச்சனை அதிகம் உள்ளது. காரணம் ஊர் கிணற்றுத் தண்ணீர் கூடிய வன்மையானது. அதேபோல்.. புலம்பெயர் நாடுகளில் குழாய் நீரிலும் அதிகம் வன்னீர் உள்ளது.

மேலதிக செயல்களை குறிப்பாக பல்லை சுத்தம் செய்தல் உட்பட.. வைத்தியரின் ஆலோசனைப்படி செய்வது நன்று.

குருதிப் பரிசோதனை செய்தால்.. என்ன சத்துக் குறைபாட்டால் (கல்சியம் உட்பட.. 35 வயதை தாண்டியவர்களின் பல் எலும்பில் இருந்து அதிகளவு கல்சியம் உடலுக்குள் எடுக்கப்படும் அபாயம் உள்ளதால் பற்கள் பலவீனம் அடையும் தன்மை அதிகரிக்கும். இதை தவிர்க்க கல்சியம் நிறைந்த உணவுகள் உண்டு வருவது அவசியம். இல்லேல் வைத்திய ஆலோசனைப்படி கல்சியம் மாத்திரைகள் எடுக்கலாம்) இந்த நிலை ஏற்படுகிறது என்பதை ஆராய முடியும்.

phototake_rm_photo_of_gingivitis.jpg

முரசு (gum) கரைந்த நிலையில் உள்ள நல்ல பல்லு..! ஆனால் இது உடல் ஆரோக்கியமான நிலை அல்ல..!

2a%20Plaque.JPG

பற்களின் ஈறுகளிடையே சரியான சுத்தப்படுத்தல் இன்மையால்.. கல்சியம் படிவதால்..ஏற்படும் முரசு கரைதல்..! இது பற்களைப் பலவீனப்படுத்தி.. பல் வலி மற்றும் தொற்றுக்களை அதிகரிக்கச் செய்து பற்கள் விரைந்து விழ வழிவகுக்கும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியரிடமும் சட்ட ஆலொசகரிடமும் செல்லும்போது

அவர்களிடம் நம்பிக்கை வைத்தல் அவசியம்.

இல்லாவிட்டால் அவர்களிடம் செல்லக்கூடாது.

உங்கள் வைத்தியர் கூறியபடி தொடர்ந்து அவரிடம் சென்று ஆலோசனை

பெற்று உங்கள் பற்களை சுத்தம் செய்வதே மிகவும் நன்று நிழலி.

உங்கள் பற்கள் நன்றாக உள்ளன ஆனால் சுத்தம் செய்ய வேண்டும்.

அப்படிச்செய்தால் உங்கள் பற்களுக்கு இன்னும் பலகாலம் ஆயுள் உள்ளது

எனவும் அர்த்தம் கொள்ளலாம்

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லுக்கும் மூளைக்கும் மட்டுமல்ல, பல்லுக்கும் முழு உடலின் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இருக்கு. முரசு நோய் (gum disease) காரணமாக பற்கள் ஈடாடும் போது, உட்புகும் நுண்ணங்கிகள் உங்கள் இதயம் வரை சென்று தாக்கக் கூடும். இதனால் இதய நோய் வரக் கூடும். அண்மையில் முரசு நோய் உடைய பெண்களின் கருக் கட்டும் திறன் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வில் சுட்டிக் காட்டி இருந்தார்கள். முரசு நோயினால் உருவாகும் அழற்சி தொடர்பான சுரப்புகள் இரத்தத்தில் அதிக அளவில் இருப்பதால் இந்தக் கருக்கட்டல் குறைபாடு ஏற்படுவதாக நம்புகிறார்கள். பற்சுகாதாரத்தையும் பல் மருத்துவர்களையும் நாம் முக்கியமாகக் கருத வேண்டும் என இந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

உண்மைதான்.....எனது குடும்பவைத்தியரின் ஆலோசனையின் பேரில் நானும் பல்டாக்டரிடம் சென்ற போது.......விறைப்பு ஊசி போட்டுவிட்டு பல்லுக்கடியில் இருக்கும் கற்களை அல்லது கிருமிகளை அகற்றினார்கள்.முக்கியமாக இருதய நோயாளிகள் கவனிக்கவும் .இது என் சொந்த அனுபவம்.

எனக்கும் கடைவாய்ப் பல்லில் வலி வந்த போது, குமாரசாமி அண்ணா குறிப்பிட்ட மாதிரி... பல் வைத்தியர் முரசுக்கு அடியில்... கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் கற்களை அகற்றிய பின் கடந்த ஐந்து வருடமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனைச் செய்ய இங்கு எமது மருத்துவ காப்புறுதி, பணம் செலுத்தாது. அப்போ... 80 ஐரோ அறவிட்டார்கள். அது, செய்யும் போது... தெரியாவிட்டாலும், விறைப்பு மாறியவுடன் பயங்கர நோவாக இருக்கும். எனது பல் வைத்தியரிடம் சாதாரண செக்-அப் பண்ணப் போனாலும்.... இதை ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டும் என்று சொல்வார். அவர் 80€க்கு ஆசைப்பட்டுச் சொல்கிறாரா என்று தெரியவில்லை :lol: . ஆனல் அந்தப் பயங்கர நோ அனுபவத்தால்.... அடுத்த வருசம் பார்ப்போம் என்று சொல்லி கடத்திக் கொண்டிருக்கின்றேன். :)

  • தொடங்கியவர்

gum-disease-615x324.jpg

பல் நல்லா இருக்க.. முரசு கரைதலினூடு.. பற்களில் வலி ஏற்பட்டு அவை விழக் கூடும். இதற்கு பொதுவான காரணங்களாக.. தொற்றுக்கள் மற்றும்.. சரியான பற் சுகாதாரமின்மை.. மற்றும் நிறையுணவின்மை.. பற்களில் கல்சியம் படிதல் (plaque)... அதிக இனிப்பு உண்ணுதல்.. மேலும் முன்னர் பல்லில் அடிபட்ட தன்மைகள் இனங்காணப்படுகின்றன..!

இந்த நிலை மது.. சிகரெட்.. போதைப் பொருட்கள் புகைப்பவர்களிடம்.. அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது..! இதனை பாவிக்காதவர்களிடத்திலும் மேற்சொன்ன காரணங்களால் நிகழக் கூடும்..!

Toothbrush_450x450.jpg

இதற்கு ஆரம்பத்திலேயே சரியான வைத்திய ஆலோசனை பெறுவதோடு.. வைத்திய ஆசோசனைப்படி.. சரியான mouth wash பாவிக்கவும்..! அதேபோல் பற்களை சரியான தூரிகைகள் கொண்டு பல் துலக்கி வருதலும் அவசியம்.

மேலும்.. அதிகளவு கோக்.. போன்ற மென் அமில பாணங்கள் அருந்துவதை குறைப்பது நல்லது. அதேபோல் ஐஸ்கிரீம் போன்ற உணவுவகைகள் உண்டால் வாயை மெளத் வோஸ் கொண்டு கழுவுதல் நல்லம்.

41A64W0HPML._SL500_AA300_.jpg

காலையும் மாலையும் பல் துலக்குவதோடு.. மெளத் வோஸ் கொண்டு கழுவுதல் நன்று..! பற்பசையில்.. புளோரைட் (fluoride) சரியான அளவில் உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

headers_01-hardness.jpg

Water hardness is an aesthetic quality of water, and is caused mostly by the minerals calcium and magnesium, but is classified or measured based on the level of concentration of calcium carbonate. How hardness is classified is based on the following scale:

Definition Calcium Carbonate Concentration Soft Water 0 – 60 milligrams per liter (mg/L) Moderately Hard 61 – 120 mg/L Hard 121 – 180 mg/L Very Hard 181 or above

மேலும் அதிகளவு வன்னீர் (hard water) அருந்துதலும் கூடாது. போத்தல்களில் அடைத்து வரும் நீரில் உள்ள கல்சியம் (calcium - Ca).. மக்னீசியம் (magnesium - Mg) அளவு தண்ணீரின் வன்மையை தீர்மானிக்கிறது. அதிகளவு கல்சியம்.. உள்ள நீரை அருந்தினால் அவை பற்களில் plaque படிவுகள் உருவாக வாய்ப்பளிக்கும். எம்மவர்களில் இந்தப் பிரச்சனை அதிகம் உள்ளது. காரணம் ஊர் கிணற்றுத் தண்ணீர் கூடிய வன்மையானது. அதேபோல்.. புலம்பெயர் நாடுகளில் குழாய் நீரிலும் அதிகம் வன்னீர் உள்ளது.

மேலதிக செயல்களை குறிப்பாக பல்லை சுத்தம் செய்தல் உட்பட.. வைத்தியரின் ஆலோசனைப்படி செய்வது நன்று.

குருதிப் பரிசோதனை செய்தால்.. என்ன சத்துக் குறைபாட்டால் (கல்சியம் உட்பட.. 35 வயதை தாண்டியவர்களின் பல் எலும்பில் இருந்து அதிகளவு கல்சியம் உடலுக்குள் எடுக்கப்படும் அபாயம் உள்ளதால் பற்கள் பலவீனம் அடையும் தன்மை அதிகரிக்கும். இதை தவிர்க்க கல்சியம் நிறைந்த உணவுகள் உண்டு வருவது அவசியம். இல்லேல் வைத்திய ஆலோசனைப்படி கல்சியம் மாத்திரைகள் எடுக்கலாம்) இந்த நிலை ஏற்படுகிறது என்பதை ஆராய முடியும்.

phototake_rm_photo_of_gingivitis.jpg

முரசு (gum) கரைந்த நிலையில் உள்ள நல்ல பல்லு..! ஆனால் இது உடல் ஆரோக்கியமான நிலை அல்ல..!

2a%20Plaque.JPG

பற்களின் ஈறுகளிடையே சரியான சுத்தப்படுத்தல் இன்மையால்.. கல்சியம் படிவதால்..ஏற்படும் முரசு கரைதல்..! இது பற்களைப் பலவீனப்படுத்தி.. பல் வலி மற்றும் தொற்றுக்களை அதிகரிக்கச் செய்து பற்கள் விரைந்து விழ வழிவகுக்கும்..!

விளக்கமாக பதில் தந்த நெடுக்குக்கு நன்றிகள்

நான் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாக இரண்டு நேரம் பல் துளக்கிக் கொண்டு வருகின்றேன். அத்துடன் எந்தப் பல்லிலும் பூச்சி இன்னும் இல்லை. போன வருடமும் போய் பல்லை சுத்தப்படுத்தினேன் (Clean)..

நான் பால் குடிப்பது மிகவும் குறைவு (பசுப்பால்!!) என்பதால் கல்சியம் குறைபாடு வந்துள்ளதோ தெரியவில்லை. வைன் குடிப்பதால் பல்லில் பிரச்சனை வரும் என்று அதற்கென இருக்கும் சென்சோடின் பற்பசையைத் தான் இரவில் பயன்படுத்தி வருகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஞானப் பல் முளைக்கும் போதும் பல்லில்... கூச்சம், நோ வரலாம்.

நிழலிக்கு, இப்போ... என்ன வயசு நடக்குது என்று, தெரிந்தால்... சித்த வைத்திய முறைப்படி குணப்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஞானப் பல் முளைக்கும் போதும் பல்லில்... கூச்சம், நோ வரலாம்.

நிழலிக்கு, இப்போ... என்ன வயசு நடக்குது என்று, தெரிந்தால்... சித்த வைத்திய முறைப்படி குணப்படுத்த முடியும்.

நிழலி - Birthday December 15, 1974 . :mellow:

  • 1 month later...
  • தொடங்கியவர்

இன்று பிரச்சனை கொடுத்த பல்லை அகற்றியாச்சு

கடந்த சில வாரங்களாக தாங்க முடியாத வலி அந்தப் பல்லில் இருந்தது. இன்னுமொரு பல் வைத்தியரிடம் கொண்டு போய்க் காட்டியும் அவர் 4 X-Ray எடுத்தும் அவராலும் பல் வலிக்கான காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை vertical fraction (http://doctorspiller.com/Cracked_Teeth.htm) பல்லில் இருக்கலாம் என்றும் அதனை x-Rayய் மூலமும் கண்டு பிடிக்க முடியாது என்று கூறினார். vertical fraction இருந்தால் தான் குறிப்பிட்ட உணவை மட்டும் சாப்பிடும் போது கடும் வலி வரும் என்றும், முக்கியமாக சின்ன தானியங்கள் இரு பற்களுக்கு நடுவில் கடிக்கப்படும் போது ஏற்படும் அதிக அழுத்தம் உடைந்த பல்லிம் வேர்கள் தொட்டுக் கொண்டு இருக்கும் நரம்புகளை அசைப்பதால் தான் கடும் வலி என்றும் சொன்னார். ஆனால் தன்னால் diagnose பண்ண முடியவில்ல என்றும் எதுக்கும் ஒருக்கா Deep cleaning (http://www.dentalfea.../deep-cleaning/) செய்து பார்ப்பம் என்றும் சொல்லி செய்து பார்த்தார்.

4 நாட்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆஹா பிரச்சனை தீர்ந்தது என்று குத்தாட்டம் போட்டேன். பின் வீட்டில் என் மகன் ஆசைப்படுகின்றான் என மாட்டிறைச்சி devil செய்தேன். அதில் சும்மா இருக்கேலாம வாசத்துக்கு இருக்கட்டும் என்று ஏலக்காய் கொட்டைகளை (அரைக்காமல்) போட்டு இருந்தேன். செய்தது எப்படி இருக்கு என்று சுவை பார்க்க ஒரு துண்டை வாய்க்குள் போட்டு பார்க்கும் போது அதில் ஒட்டி இருந்த ஒரு ஏலக்காய் கொட்டை அந்த பல்லை காதலுடன் தேடிச் சென்றடைய மீண்டும் அகோர வலி

வழக்கத்துக்கு மாறாக இந்த வலி 24 மணி நேரமும் இருந்து கொண்டு இருந்ததுடன் அதிகரித்துக் கொண்டும் வந்தது. நாக்கு பட்டாலே கொதி வலி. மீண்டும் அதே பல் வைத்தியரிடம் போய்க்காட்ட அவர் நுணுக்கு காட்டியால் ஆராய்ந்து பார்த்து...ஆஹா கண்டு பிடித்து விட்டேன். பல்லு 3 துண்டுகளாக vertical லாக உடைந்து போயிட்டு என்றார். இனி ஒன்றும் செய்ய ஏலாது பல்லை அகற்றத் தான் வேண்டும் என்றார். ஆனால் இந்த பல்லு புடுங்குதல் சாதாரணமாக செய்ய முடியாது என்று இது surgery மூலம் தான் அகற்றலாம் என்று அதற்குரிய பல் வைத்தியரிடம் போய்க் காட்டச் சொல்லி சிபாரிசு செய்தார். அலுவலகத்தில் அதி முக்கிய வேலை ஒன்று இருந்ததால் வலியை என்னால் தாங்க முடியும் எனக் கூறி 4 நாட்களின் பின் திகதி கேட்டேன். வலி நிவாரணை தந்தனுப்பினார்.

இந்த 4 நாட்களும் பெரும் வலி. வலி நிவாரணக் குளுசை குடித்ததால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் போக, அதையும் விட்டு விட்டேன். உடலில் எத்தனையாயிரம் செல்கள், எத்தனை நரம்புகள், எத்தனை பகுதிகள்...ஆனால் 20 Gram கூட இல்லாத இந்த பல்லு படுத்தி எடுத்து விட்டது

இன்றுதான் அந்த நாலாம் நாள் வந்தது. போய் சின்ன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டேன். தையலும் போட்டனர். இரண்டு வகை வலி நிவாரணி தந்து அதில் ஒன்று மிகக் கடுமையானது என எச்சரித்துள்ளனர். 3 நாட்கள் தொடர்ந்து எடுக்கட்டாம். கொஞ்ச நேரம் எதையும் போடாமல் வலியை தாங்க முடியும் என்று இருந்து பார்த்தால், அது கொடுமையாக இருந்தது. இப்ப அந்த இரண்டையும் எடுத்துவிட்டு இதனை எழுதிக் கொண்டு இருக்கின்றேன். சோர்வாக இருப்பதால் என் பல் வலி இன்றுடன் முடிந்தது ஆனந்தத்துடன் படுக்கப் போகின்றேன்

:D :D :D ஆனந்தமா படுங்கோ. :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]போயே போச்சு .......[/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வயது 38

கொஞ்சம் முதலே வந்துவிட்டாலும் வந்து தானே ஆகணும்.

எனக்கு பற்களில் சூத்தை கிடையாது.

ஒரு பல் சிறிதாக ஆட்டம் கொடுக்கத்தொடங்க வைத்தியரின் ஆலோசனைப்படி நாற்புறமும் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு பக்கமாக வெட்டி அழுகிய நரம்புப்பகுதிகளை சீர் செய்தேன். இனி வாழ்க்கை பூராகவும் கரண்டி(ஒழுங்காக பராமரித்தால்).....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரச்சனை கொடுத்த பல்லை அகற்றியாச்சு

-----

4 நாட்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆஹா பிரச்சனை தீர்ந்தது என்று குத்தாட்டம் போட்டேன். பின் வீட்டில் என் மகன் ஆசைப்படுகின்றான் என மாட்டிறைச்சி devil செய்தேன். அதில் சும்மா இருக்கேலாம வாசத்துக்கு இருக்கட்டும் என்று ஏலக்காய் கொட்டைகளை (அரைக்காமல்) போட்டு இருந்தேன். செய்தது எப்படி இருக்கு என்று சுவை பார்க்க ஒரு துண்டை வாய்க்குள் போட்டு பார்க்கும் போது அதில் ஒட்டி இருந்த ஒரு ஏலக்காய் கொட்டை அந்த பல்லை காதலுடன் தேடிச் சென்றடைய மீண்டும் அகோர வலி

-----

நிழலி, ஏலக்காய் சாப்பிட்டதால்.... பல் வலி வந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.

மாட்டிறைச்சி தின்ற படியால் தான்... பல்லைப் புடுங்க வேண்டி வந்தது.

இனி மேல்... ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்கி சாப்பிடுங்கள்.

தொடர்ந்து மாடு தின்றால்... மற்றப் பல்லுகளையும் இழக்க வேண்டி வரலாம். :rolleyes:

டிஸ்கி; ஏலக்காயை.... ஏலக்காய் காய் என்று தானே.. அழைப்பார்கள்.

ஏலக்காய் கொட்டை என்று யாரும் சொல்வதில்லையே.... :D:lol:

பி.கு

அந்த பல் மருத்துவரின் உதவியாளரும் ஒரு பெண்தான்..நல்ல அழகு !!

இந்த மருத்துவர் சொன்ன மருந்தை 2 அல்லது 3 வாரம் பயன்படுத்தி விட்டு முன்னேற்றம் இல்லையெனில் இன்னொரு வைத்தியரிடம் காட்டுவேன் (மருத்துவரின் உதவியாளர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது என் முன்நிபந்தனை)

நிழலி அண்ணா, நீங்கள் வேணுமெண்டு பல்வலி வரப்பண்ணின மாதிரி இருக்கு. :lol: :lol: :lol::icon_idea:

நிழலி அண்ணை...இது சாமியின் தண்டணை என்று நினைக்கிறேன்....சாமிதான் பல்லைக் குத்தீட்டுது...மனைவி வீட்டில் இருக்க றோட்டில எந்தப் பெட்டையைப் பார்த்து பல்லைக்காட்டினியள்..? :D

:lol: :lol:

அவர் இப்ப ஆபீஸ் ல இருக்கார் உங்கட கதைய கேட்டிட்டு பக்கத்தில இருக்கிற பெண்ணை இழுத்து வைச்சு முத்தம் குடுக்க போறார்

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.