Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வளர்ந்த பிள்ளையும் பெற்றோரும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cleardot.gif
காட்சி 1
 
ஒரு நாள் இரவு மனைவி காதுக்குள் கதைக்கத்தொடங்கினாள்.

(முன்பெல்லாம் இந்த தலையணி மந்திரத்துக்கு காது கொடுப்பதில்லை. அனுபவத்தால் அவளது சில தகவல்களைக்கேட்காது விட்டு வாழ்வில் சில விடயங்களில் வாங்கிக்கட்டியதாலும் மக்களது நலன் சார்ந்தும் தற்பொழுது காது திறந்து விடப்பட்டுள்ளது)
 
மனைவி : அப்பா  இவன் பெரியவன் அடிக்கடி வெளியில் போகின்றான். இரவு நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான். எனக்கு கொஞ்சம் பயமாக்கிடக்கு.
(தற்பொழுது அவர்கள் குழுவாக படிக்கும் காலம். அடிக்கடி பரீட்சைகளும் இருக்கு. இது எல்லோருக்கும் தெரியும்)
 
எனக்கு தாயின் கவலையைப்புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனாலும் இதை தொடரவிடக்கூடாது. அது இருவருக்கும் நல்லதல்ல.
 
நான் : அவனுக்கு இப்ப எத்தனை வயசு?
மனைவி : 21 முடிஞ்சுது
நான் : அவன் இப்ப என்ன படிக்கின்றான்?
மனைவி : யூனியில் 4ம் வருடம்
 
நான் பிரான்சுக்கு தனிய  வரும்   போது எனக்கும் 21 வயசு தானப்பா.  நான் என்ன கெட்டுப்போய் விட்டேனா?  நானும் தெரியாத நாலு பேருடன் தங்கி உணவக வேலை அத்துடன் இரவு ஆட்டம் என இருந்த இடத்தில இருந்து தான்  இதுவரை வந்தனான்.  நல்லது எது கெட்டது எது?  எதை எடுத்துக்கொள்ளணும்  எதை தவிர்க்கணும்  எமது எதிர்கால குறிக்கோள் என்ன? என்று எனக்கிருந்த தெளிவு பிரான்சில் பிறந்து வளர்ந்து என்னைவிட அதிகம் படிக்கும் அவனுக்கு இருக்கும்.  இல்லையென்றால் இதற்கு மேல் அவனுக்கு நாம் ஊட்டவும் முடியாது. அவன் அந்த எல்லையைக்கடந்து வந்துவிட்டான் என்றேன்.
 
மனைவி : சிறிது நேரத்துக்குப்பின் உண்மைதான். நான் உங்களை வைத்து அவனை நினைக்கவில்லை. கண்டதையும் கற்பனை  செய்துவிட்டேன் என்றாள்.
 
இதை இப்படியே தான் என்னைக்கேட்டதையும் அதற்கு  நான் சொன்ன பதிலையும் மகனிடம் அடுத்த நாள் சொல்லியுள்ளார்.
அதற்கு மகன் சொன்ன பதில்.
அதுதுதுதுதுதுதுதுது  என் அப்பா.
 
சில வாரங்களின் பின்
மகன் : 530 பேர் கலந்து கொண்ட பரீட்சையில் எனது குழுதான் முதலாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளது அப்பா

காட்சி 2
 
எனது  உறவுக்காறக்குடும்ப இளைஞன் காதலித்தான்.  அதை இருபகுதியிலும் பேசி முடிக்கும்படி ஆண் வீட்டுக்காறர் என்னிடம் கேட்டார்கள்.  சிரி இது உண்மைதானா என விசாரிக்கணுமே என்று வீட்டில் தொடங்கினேன்.  எனது மக்களுக்கு இது பல மாதங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது.  நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மனைவி  மகளுடன் சத்தம்  போட்டுள்ளார்.  மகள் சகோதரனிடம் சொல்லியுள்ளார்.
அவன் அதற்கு சொன்ன பதில்
பெற்றோர்கள் முதல் தலைமுறையைச்சேர்ந்தவர்கள்.  அவர்களுக்கு எமது தலைமுறையைப்புரிந்து கொள்வது கடினம்.  எம்மைப்பற்றி  நாம் எம் பெற்றோரிடம் சொல்லலாம். மற்றவர் பற்றி??? அதை இவர்கள் பெரிது படுத்திவிட்டால்...???
எனவே சிலவற்றை  சொல்லவேண்டியதில்லை.
இதை மனைவி என்னிடம் சொல்ல நான் சொன்னது
அப்படியே  இருக்கக்கடவது...........
எதற்கு தலைக்கு வேதனை???
 
காட்சி  3
 
ஒரு நாள் மகன் கேட்டான்.
அப்பா நண்பன் (வெள்ளை) ஒருவனின் பிறந்தநாள் இன்று இரவு 12 மணிக்கு.  அவன் மலேசியாவில் 3 மாதம் என்னுடன் ஒரே ரூமில் இருந்தான் கட்டாயம் போகணும். ஆனால் எனக்கு நாளைக்காலை பரீட்சை இருக்கு. அதனால் நான் நேரத்தோட வரணும்.
சரி போ.
நான் வந்து  ஏற்றிக்கொண்டு வருகின்றேன்.  விலாசத்தை குறுநகல் செய்  என்றேன்.
போவதற்காக காரில் விலாசத்தை அடித்தால் 100கிலோமீற்றர்.  அது கொஞ்சம் காட்டுப்பாதை.  துணைக்கு மகளையும் கூட்டிக்கொண்டு முல்லைத்தீவு கடடுப்பாதைக்குள்ளால் போனது  போல் போய்ச்சேர்ந்தாச்சு.
 
நல்ல குளிர்.  ஆனால் எல்லோரும் கையில் கிளாசுடன் வெளியில் நிற்கின்றனர். எனது காரைக்கண்டதும் தேவதை போல் வெள்ளை உடையணிந்த நல்ல அழகான பெண் என்னை  நோக்கி  வருகின்றார். கையில் கிளாசுடன்.  வணக்கம் நலமா என்கிறார்.  நானும் பதிலுக்கு வணக்கம் நலம்.  தாங்கள் நலமா?
 
அவருக்கு பின்னாலிருந்து இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படியாக  ஒருவர்  வணக்கம் சொல்கின்றார். அவர் மதுபோதையில் இருப்பது தெரிகிறது.  அப்படியே அவருக்குப்பின்னால் ஒழிந்தபடியே  நிற்கின்றார். (அவருக்குத்தான் பிறந்தநாள். ஒழித்திருப்பது அவரது பெண்நண்பி).  அப்படியே ஒழிந்தபடி பின் வாங்கி காருக்குப்பின்னால் வந்து எனது மகளுடன் பேசுகின்றார்.  அப்பொழுது அப்பாவிடம் சொல் குறைநினைக்கவேண்டாம் என்று என்று எனது காதில் விழுகிறது.
 
எனது மகன் வருகின்றார்.  அப்பா இன்னும் இருவர் வரணுமாம்.  காரில் இடமிருக்கா என்று கேட்கின்றார்.  ஓம் இருக்கு என்கின்றேன்.
 
ஒருவர்  வருகின்றார்.  வணக்கம் என கை குலுக்குகின்றார். குடித்திருப்பது தெரிகிறது.  ஆனால் அளவுடன்.
பின்னால் இன்னொருத்தர் வருகின்றார். வணக்கம் சொன்னபடி மற்றவருக்குப்பின்னால் ஒழிந்தபடி காருக்குள் ஏறிக்கொள்கின்றார்.  நான் காரை ஓட்டத்தொடங்குகின்றேன்.  கார் வேகம் எடுக்க அடிக்கடி கார்க்கண்ணாடி திறந்து பூட்டப்படுவது தெரிகிறது.  நல்ல குளிர் வேறு.   யாருக்கோ ஒத்துவரவில்லை என்பது புரிகிறது. அவர்களது யூனிக்கு முன் வந்ததும் இருவரும் இறங்கிக்கொள்கின்றனர்.  ஒருவர்  ஐந்து தடவைக்கு மேல் சொறி  சொல்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் காரைப்பார்க்கின்றேன். பின்பக்கம் முழுவதும் வாந்தி.
2 நாளைக்குப்பின் மகன் சொல்கின்றார்
அப்பா அவன் மன்னிப்புக்கேட்டு தொலைபேசி  அடித்தவன்.
நீங்கள் என்ன   சொன்னனீங்கள் என்று கேட்டவன்.  நான் ஒன்றும் சொல்வில்லை என்றவுடன் மீண்டும் மீண்டும் கேட்கின்றான்  என்றான்.
அதை அடுத்த நாளே நான் கழுவிவிட்டேன்.  ஆனால் அளவோடு இருக்கலாமல்லவா என்றேன்.
 
அது சரி
ஏன் இப்படி என்னைக்கண்டு மிரள்கின்றார்கள் என்றேன்.
எனது அப்பா
சிகரட் குடிப்பதில்லை

மது  பாவிப்பதில்லை என்று அவர்களுக்கு  நான் சொல்லியுள்ளேன் என்றான்

cleardot.gif
 
காட்சி  4
 
கொஞ்ச  நாளாக மனைவி  ஒரே கரைச்சல்.
அப்பா
பிள்ளையளும் வளர்ந்து விட்டது.  கொஞ்சம் குறிப்பை ஒருக்கா பார்ப்பம்.
சரி  இனியும் கடத்த ஏலாது.
ஓம் என்றது தான் தாமதம்
அடுத்த நாளே சாத்திரியிடம் நேரம் குறித்தாச்சு.
 
சாத்திரியிடம் போய் ஒவ்வொன்றாக பார்த்து.............
 
மகனின் குறிப்பை பார்த்துக்கொண்டிருந்த சாத்திரி ஒரு விடயத்தைக்குறிப்பிட்டதும் விழித்துக்கொண்டு மீண்டும் கேட்டேன் திருப்பிச்சொல்லுங்கோ...
இவர் ஒரு நல்ல பிள்ளை.
எல்லாம் உங்க விருப்பப்படியேதான் செய்வார். திருமணம் உட்பட.
கெட்ட பெயர் எடுக்கமாட்டார்.
சொல்லுக்கேட்பார்
மரியாதையாக பழகுவார் பேசுவார்.
 
அது சரி கடைசியாக ஒன்று சொன்னீர்களே அதைச்சொல்லுங்கோ.
இவர் சாரைப்பாம்பு போல்.
அந்த மாதிரி நல்ல மாதிரி இருப்பார். படுத்துக்கிடப்பார்.
பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் வந்து படுத்துவிடுவார்.
 
நான் மனைவியைப்பார்க்கின்றேன்.
மனைவி  என்னைப்பார்க்கின்றார்.  இருவரையும் சாத்திரி  பார்க்கின்றார்.
 
காருக்குள் மனைவி.
என்னப்பா சாத்திரி குண்டைத்தூக்கிப்போடுகிறார்.
நான் : என்ன  குண்டு?
இதைத்தான் நானும் எனது இளவயசில் செய்தேன்.
போட்டது தானே வரும்.
தெரிஞ்சும் தின்னாதே
தெரியாமலும் தின்னாதே என்பது அநியாயமடி என்கின்றேன்.
என்ன நினைத்தாரோ தோளில் சாய்ந்து கொள்கின்றார்.....
முற்றும்
யாவும் உண்மை.
  • Replies 62
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனம் திறந்து பேசும் தந்தைக்கு பிறந்த பிள்ளைகள் அதிஸ்டசாலிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் வந்து படுத்துவிடுவார்.

சாப்பாடு தானே அண்ணா :lol:

நன்றாக இருக்கிறது அண்ணா உங்கள் அனுபவக் கதை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்கின்றது அனுபவங்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று இருக்கவேண்டும்.

ஒரு சின்னக் கேள்வி:
பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் திரும்பி வரும் சாரைப் பாம்பு மாதிரி இள வயதில் இருந்தனீங்கள் என்று சொல்லிவிட்டு, மது, சிகரட் புகைப்பதில்லை என்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அப்ப என்னதான் பொழுதுபட்டாப் பிறகு செய்தனீங்கள்? :unsure:  :rolleyes: 
 
தொடர்ந்து எழுதுங்கள் விசுகு வாசிக்க ஆவல்!

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளின் வளர்ச்சியில்  பெற்றோர்கள் சமாந்தரமாகச் செல்லும்போது 

அந்தக் குழந்தைகள் தப்பான வழிக்குச் செல்வது தடுக்கப்படுகின்றது.

பகிர்விற்கு நன்றி விசுகு  அண்ணா  

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை போய் கடையில சாப்பிடுறது சாஸ்திரக்காரர் சொல்லியா பெற்றோர் ஆகிய உங்களுக்கு தெரிந்தது விசுகு அண்ணா :unsure:

இதெல்லாம் ஒரு கேள்வியா? by elimination approach,  "மற்றது" தான்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, விசுகர்!

சாத்திரி, வாங்கின காசுக்கு, ஏதாவது சொல்லவேணும் எண்டதுக்காகச் சொல்லியிருக்கிறார்!

கல்யாணம், ஆயிரங்காலத்துப் பயிர், என்ற படியால், குறிப்புப் பார்ப்பது பற்றி எனக்கு ஆட்சேபணையில்லை!

ஆனால், நான் இவர்களை நம்புவதில்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

cleardot.gif
காட்சி 1

-------

மனைவி : சிறிது நேரத்துக்குப்பின் உண்மைதான். நான் உங்களை வைத்து அவனை நினைக்கவில்லை. கண்டதையும் கற்பனை  செய்துவிட்டேன் என்றாள்.

இதை இப்படியே தான் என்னைக்கேட்டதையும் அதற்கு  நான் சொன்ன பதிலையும் மகனிடம் அடுத்த நாள் சொல்லியுள்ளார்.
அதற்கு மகன் சொன்ன பதில்.
அதுதுதுதுதுதுதுதுது  என் அப்பா.

-------

அது சரி கடைசியாக ஒன்று சொன்னீர்களே அதைச்சொல்லுங்கோ.
இவர் சாரைப்பாம்பு போல்.
அந்த மாதிரி நல்ல மாதிரி இருப்பார். படுத்துக்கிடப்பார்.
பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் வந்து படுத்துவிடுவார்.

நான் மனைவியைப்பார்க்கின்றேன்.
மனைவி  என்னைப்பார்க்கின்றார்.  இருவரையும் சாத்திரி  பார்க்கின்றார்.

காருக்குள் மனைவி.
என்னப்பா சாத்திரி குண்டைத்தூக்கிப்போடுகிறார்.
நான் : என்ன  குண்டு?
இதைத்தான் நானும் எனது இளவயசில் செய்தேன்.
போட்டது தானே வரும்.
தெரிஞ்சும் தின்னாதே
தெரியாமலும் தின்னாதே என்பது அநியாயமடி என்கின்றேன்.
என்ன நினைத்தாரோ தோளில் சாய்ந்து கொள்கின்றார்.....
முற்றும்
யாவும் உண்மை.

நல்லதொரு பகிர்வு விசுகு.

பிள்ளையின் வளர்ச்சியில் பெற்றோரின் அக்கறை ஒன்றாக இருந்த போதும்...

தாயின் பார்வையும், தந்தையின் பார்வையும்... வித்தியாசமாக இருக்கும்.

சாத்திரியாரின், சாரைப்பாம்பு கதையால்... மனைவி பயப்படாமல் இருக்க, ஒரு நெத்தியடி அடித்து விட்டீர்கள். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் நல்ல ஒரு அனுபவபகிர்வு ....தொடரட்டும் உங்கள் அனுபவபகிர்வு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  அலைமகள்

முதலாவது விருப்பு வாக்கு  தந்ததற்கு....

மனம் திறந்து பேசும் தந்தைக்கு பிறந்த பிள்ளைகள் அதிஸ்டசாலிகள் தான்.

நன்றி  ஐயா

ஒரு வயசுக்கு மேல் ஆண்பிள்ளைக்கும் தகப்பனுக்கும் இடையில் இடைவெளி  ஆரம்பித்து அது அதிகரிக்க  ஆரம்பிக்கும் என்று படித்த ஞாபகம்( அத்துடன் வாழ்விலும் பல குடும்பத்தில் கண்டுள்ளேன்) .  அன்றிலிருந்து நான் இதனை  மாற்றணும் என்று நினைத்தேன். இதுவரை அப்பன் மகன் என்ற கௌரவச்சிக்கல் வராது பார்த்து வருகின்றேன்.

நீங்கள் எல்லோரும் இருக்கும் துணிவில்தான் வீட்டில் நடப்பவைகளைக்கூட இங்கு கொட்ட தயக்கமும் இருப்பதில்லை.

நன்றி  நேரத்திற்கும் அன்புக்கும்.

சாப்பாடு தானே அண்ணா :lol:

நன்றாக இருக்கிறது அண்ணா உங்கள் அனுபவக் கதை.

தெரிஞ்சால் சொல்ல மாட்டேனா சுமே...... :lol:

(ஆனால் நான் சாப்பிட்டது என்ன என்று எனக்கு  ஞாபகம்  வருகுதே :D )

நன்றி  சகோதரி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

நன்றாகத்தான் இருக்கின்றது அனுபவங்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று இருக்கவேண்டும்.

ஒரு சின்னக் கேள்வி:
பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் திரும்பி வரும் சாரைப் பாம்பு மாதிரி இள வயதில் இருந்தனீங்கள் என்று சொல்லிவிட்டு, மது, சிகரட் புகைப்பதில்லை என்றும் சொல்லியிருக்கின்றீர்கள். அப்ப என்னதான் பொழுதுபட்டாப் பிறகு செய்தனீங்கள்? :unsure:  :rolleyes: 
 
கிருபன் இது இரண்டும் தான் வாழ்க்கையில் ருசிப்பதற்குரியவை என்று அதில் மயங்கி  இருந்து விட்டீர்களா??

நீங்கள் மயங்கியதோடு  சரி

அதனையும் சேர்த்து ஆடுவமில்ல............ :D

(இன்னொரு கதை எழுதுவம் அது பற்றி. இந்த திரியை மகனுடன் விடுவம்)

நன்றி  ஐயா

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

தொடர்ந்து எழுதுங்கள் விசுகு வாசிக்க ஆவல்!

நன்றி  அலை

வாழ்த்துக்கும் விருப்பு வாக்குக்கும்  நேரத்திற்கும்.....

(ம் கனக்க  இருக்கு.  தொடரும்.  நேரம் தான் சிக்கல்)

குழந்தைகளின் வளர்ச்சியில்  பெற்றோர்கள் சமாந்தரமாகச் செல்லும்போது 

அந்தக் குழந்தைகள் தப்பான வழிக்குச் செல்வது தடுக்கப்படுகின்றது.

பகிர்விற்கு நன்றி விசுகு  அண்ணா  

நன்றி  வாத்தியார்

நேரத்திற்கும் அறிவுரைக்கும்........

பிள்ளை போய் கடையில சாப்பிடுறது சாஸ்திரக்காரர் சொல்லியா பெற்றோர் ஆகிய உங்களுக்கு தெரிந்தது விசுகு அண்ணா :unsure:

இதை ஒரு பன்னிரண்டு நிமிடத்தில் எழுதினேன் ரதி

கோர்த்து எடுத்து போட நேரமிருக்கவில்லை.

சாத்திரி  சொல்லித்தான் என்று தங்களுக்கு படும்படியாக இருந்தால் நேரமின்மையால் ஒழுங்காக எழுதவில்லை என்று நினைக்கின்றேன்.  மற்றும்படி பிள்ளையைத்தெரியும்.

அவர் சொன்னபடி இருந்தாலும் எனக்கு உடன்பாடு தான் என்பது தான் நான் சொல்லவந்தது.

நன்றி  நேரத்திற்கும் கருத்துக்கும்...

இதெல்லாம் ஒரு கேள்வியா? by elimination approach,  "மற்றது" தான்! :lol:

அது தான்

ஆனால் இங்கு வேண்டாம்

எனது 18 வயசுக்கதை ஒன்று எழுதுவேன்

அங்கே வைத்துக்கொள்வோம் :icon_mrgreen:

(ஆனால் கிருபன் ரொம்ப என்னைத்தூண்டுகின்றார்.  தற்போதைக்கு மாட்ட மாட்டன் :lol: )

பகிர்விற்கு நன்றி விசுகு, தொடருங்கள்.........

நன்றி சகோதரா

கருத்துக்கும் நேரத்திற்கும்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, விசுகர்!

சாத்திரி, வாங்கின காசுக்கு, ஏதாவது சொல்லவேணும் எண்டதுக்காகச் சொல்லியிருக்கிறார்!

உண்மைதான் புங்கையார்

ஆனால் சாரைப்பாம்பு பற்றி ஊரில் அறிந்திருந்ததால் அது ஒரு நல்ல உபமானமாகப்பட்டது. பக்கென்று புரிந்து கொள்ளக்கூடியதாக  இருந்தது.அவரது தொழில் அதுவாக இருந்தாலும் சாத்திரத்தில் எனக்கு நம்பிக்கையில்லாது விட்டாலும்  புலம் பெயர் வாழ்வில் பிள்ளைகளது நடவடிக்கைகளை  அவர் சாரைப்பாம்புடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்தியது ஒரு நல்ல ஆலோசனையாக எனக்குப்பட்டது.

கல்யாணம், ஆயிரங்காலத்துப் பயிர், என்ற படியால், குறிப்புப் பார்ப்பது பற்றி எனக்கு ஆட்சேபணையில்லை!

இது பற்றியும் ஒரு திரி  திறக்கவேண்டும்.

புலம் பெயர்ந்த தமிழர் எத்தனை பேர் தங்களது பிள்ளைகளுக்கு குறிப்பு எழுதி  வைத்துள்ளனர்???

ஆனால், நான் இவர்களை நம்புவதில்லை! 

நானும் தான்.

நாம எப்பொழுதும நேரடி தாக்குதல்தான்.

தரகர்கள் தேவையில்லை  

நன்றி நேரத்திற்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு விசுகு.

பிள்ளையின் வளர்ச்சியில் பெற்றோரின் அக்கறை ஒன்றாக இருந்த போதும்...

தாயின் பார்வையும், தந்தையின் பார்வையும்... வித்தியாசமாக இருக்கும்.

சாத்திரியாரின், சாரைப்பாம்பு கதையால்... மனைவி பயப்படாமல் இருக்க, ஒரு நெத்தியடி அடித்து விட்டீர்கள். :D  :lol:

ம்ம்ம்

சுழியரல்லோ..........

இதில் குடும்பம் சம்பந்தமாகவும்

தாயின்  வீச்சு எந்தளவில்  தகப்பனது வீச்சு எதுவரை எனவும்

பிள்ளைகள் சம்பந்தமாகவும்

தலைமுறை  இடைவெளி  சம்பந்தமாகவும்..............

சொல்ல முற்பட்டதன் கருவே இது.

தொடர்ந்து பேசுவோம் சிறி

நன்றி

வாழ்த்துக்கும் அன்புக்கும் நேரத்திற்கும்....

விசுகர் நல்ல ஒரு அனுபவபகிர்வு ....தொடரட்டும் உங்கள் அனுபவபகிர்வு

நன்றி  புத்தா

கிறுக்கல்  மன்னா

கொஞ்சம்   நீயும் எனக்கு வழிகாட்டி......

ம்

தொடரும்

நன்றி  நேரத்திற்கும் வாழ்த்துக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப் பகிர்வு விசுகு அண்ணா.. ஒவ்வொருவரும் தங்கள் பெருமையை தாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேணும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப் பகிர்வு விசுகு அண்ணா.. ஒவ்வொருவரும் தங்கள் பெருமையை தாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேணும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு.. :D

நன்றி  தம்பி 

எங்கோ வாசித்தேன்

பிள்ளை  வளர்ப்பது என்பது பட்டம் விடுவதைப்போன்றது என்று.

ஆனால் என்னைப்பொறுத்தவரை புலம் பெயர் தேசத்தில் பிள்ளை  வளர்ப்பது என்பது புயலுக்குள் பட்டம் விடுவதைப்போன்றது

கொஞ்சம் இடறினாலும்  நம்மை விழுத்திவிட்டு பறந்து விடுவார்கள்.

அதற்கான வெளிக்காரணிகள் அதிகம் அவர்களை உந்தியபடியிருக்கும்.

தாய் தகப்பனின் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் வீட்டுக்குள் இருப்பார்கள்.

ஆனால் இந்த அன்பு சுயநலமானது  என்பது போல் பெற்றோர் நடந்து கொள்ளக்கூடாது.

அது  அவர்களுக்கு தெரியவரும் வீடுகளிலேயே சிக்கல்கள் வருகின்றன.

இரு பகுதியும் சுயநலமற்று இருபகுதி  பொது நலன் சார்ந்து வாழ்க்கையை  அமைக்கும்போது தான் அது தெளிவாக ஓடமுடியும்.

ஒவ்வொருவரும் தங்கள் பெருமையை தாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேணும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு.

பெருமை என்பது  வரையறைகளுக்கு  உட்பட்டது.  அந்த வரையறை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும். 

இதில் நான் கண்ணை  மூடியதும் உண்டு.  கர்சித்ததும் உண்டு.

எங்கே எதற்கு? என்பது தான் புரிதலின் சாராம்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவ பகிர்வு ....தொடரட்டும் உங்கள் பகிர்வு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவ பகிர்வு ....தொடரட்டும் உங்கள் பகிர்வு

நன்றி  பாட்டி

தங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட நேரத்திற்குள் 

எனக்காக சில துளிகளை ஒதுக்கியதற்கு...

நன்றி   வாழ்த்துக்கும் ஊக்குவிப்புக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான யதார்த்தமான பதிவு .  பகிர்ந்த விடயங்கள் மிக மிக அர்த்தமுள்ளவை ! நன்றி  visuku!  :D

Edited by suvy

விசுகு, நீங்கள் எப்படி பிள்ளைகளுடன் பழகுகின்றவர் என்பதும், பிள்ளைகள் உங்களுடன் எப்படி பழகுகின்றவர்கள் என்பதும் நான் நேரில் கண்டது.  அதனை உங்கள் பதிவு பிரதிபலிக்கின்றது.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான யதார்த்தமான பதிவு .  பகிர்ந்த விடயங்கள் மிக மிக அர்த்தமுள்ளவை ! நன்றி  visuku!  :D

நன்றியண்ணா

உங்களதும் நிலாமதி அக்காவினதும் பாராட்டுக்கிடைத்திருப்பது அனுபவங்கள் ஒன்று சேருவதற்கான முயற்சிக்கு கிடைத்த வெற்றியண்ணா.

இன்னும் கனக்க எழுதலாம் அண்ணா

நேரம்தான் கிடைக்குதில்லை.

ஒருவருக்காவது பயன் பட்டால் பெரு வெற்றியன்றோ.

நன்றியண்ணா

கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நேரத்திற்கும்(இடைக்கிடையாவது யாழுக்கு வாங்கோ)

  • கருத்துக்கள உறவுகள்

போட்டது முளைக்குதய்யா விசுகையா..! - இனி,
கைநிறைய கேட்டது கிடைக்குமையா, விசுகையா..!!

:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் எப்படி பிள்ளைகளுடன் பழகுகின்றவர் என்பதும், பிள்ளைகள் உங்களுடன் எப்படி பழகுகின்றவர்கள் என்பதும் நான் நேரில் கண்டது.  அதனை உங்கள் பதிவு பிரதிபலிக்கின்றது.

நன்றி

நன்றி  தம்பி

எழுதுபவை சரியானவை என்பதை உறுதிப்படுதியுள்ளீர்கள்.

சில புயல்களைக்கடந்து வந்திருக்கின்றோம்

இனியும் அது வரலாம்  முழுவதுமாக வெற்றியடைந்தோம் என்றில்லை.

ஆனால் கடந்தவற்றை  சொல்லமுன் எவரும் அதே புயலால் பாதிக்கப்படாதிருக்க சிலவற்றை எழுதலாமே  என்ற எண்ணத்திலேயே இதனைப்பதிந்தேன். வரவேற்பு நம்பிக்கை தருகிறது.

இன்னும் வரும்.

நன்றி

வேலைப்பழுவுக்கு மத்தியில் எனக்காகவும  சில கணங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டது முளைக்குதய்யா விசுகையா..! - இனி,

கைநிறைய கேட்டது கிடைக்குமையா, விசுகையா..!!

:rolleyes:

போட்டது வந்ததில்  சந்தோசமே

இருப்பினும் அவர்களை  எல்லாத்துக்கும்அனுமதிக்கணும  என்று ஒரு மனிதனாக ஆவல்

ஆனால் இந்த சமூகத்தில் ஒரு அப்பாவாக 

மனமிருந்தாலும  இடமில்லாது..........

கை நிறைய  கேட்டது???

பல அர்த்தங்கள்

விளங்கப்படுத்தினால் பிடித்துக்கொள்வோமையா

(பேரனைவிட்டு எங்களையும  கொஞ்சம்.... :D .)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.