Jump to content

நான் பழகிய யாழ் உறவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து  இன்று வர நான் யாழில் பழகிய உறவுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கானநேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்...

 


n1ux.jpg

 

 

(1)

மச்சான்  கரும்பு  மாப்பிளை கலைஞன்  :)  

 

யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பலஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன்  இரண்டு  நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒரு தருனம்...எந்த எந்த வீரருக்கு நல்ல எதிர் காலம் இருக்கு என்று கணிப்பிடுவதில் மச்சான் கிள்ளாடி..தொலை பேசியில் கதைக்கேக்க கூட புத்திமதி தான் கூட சொல்லிட்டு இருப்பார். வார வருடம் கனடா போர ஜடியா இருக்கு அப்படி போனால் மச்சானை கண்டிப்பாய் சந்திச்சிட்டு தான் வருவேன்...

 

 

(2)

 

சுண்டல்

 

மூன்று வருடத்துக்கு முதல் என்ற தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திச்சு யார் என்று பார்த்தால் நம்ம சுண்டல்..மச்சி நான் சுண்டல் கதைக்கிறேன்டா நீஎனக்கு ஒரு உதவி செய்யனும் என்று சொன்னான்..சரி சொல்லு மச்சி என்ன உதவி நான் உனக்கு செய்யனும் என்று கேட்டேன் ( சுண்டலும் உதவியை சொன்னான் நீ இதை தான் செய்யனும் என்று..அவன் சொல்ல என்ற வீடு ஒருக்கா  நில நடக்கம் வந்தது நடுங்கினபோல உனந்தேன்.அந்த கதையோடை சுண்டலுக்கு இன்னொரு பெயரும் வைச்சாச்சு முட்டை என்று  :D அதிலை இருந்து இரண்டு பேரும் அலட்ட வெளிக்கிட்டது தான் இன்று வர தொடருது எங்கள் நற்பு இடைக்கிடை  ஸ்கைப்பில கதைப்போம் சுகம் விசாரிப்போம்...சுண்டல் பார்த்தது கேட்டது ரசித்தது என்ற திரியில் ஒரு   வசனம் எழுதியிருந்தார் அதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை அந்த வசனம் இதோ ( டாக்டர் டாக்டர்  என்ற கணவர் பத்து லீற்றர் பெற்றோல் குடித்து விட்டார் டாக்டர் இப்ப  என்ன செய்யலாம் டாக்டர் என்று..அப்ப டாக்கடர் சொல்லுவார் உங்கட கணவர பத்து கிலோ மீற்றர் ஓட சொல்லுங்கோ எல்லாம் சரியா வரும் என்று )சுண்டல் மச்சியிடமும் கதை கவிதை என்று எழுதுற திறமைகள் அதிகம் இருக்கு வாழ்த்துக்கள் மச்சி

 

 

(3)

 

ஜமுனா

 

ஜமுனா என்றால் யாழில் தெரியாத் ஆட்கள் இருக்க மாட்டினம்...ஜம்மு பேபி யாழிழ் எழுதினது ஏராளம்...கவிதை படக் கதை நாங்களும் கிரிக்கெட் விளையாடப் போறோம் என்று நகைச்சுவையாய் எழுதி யாழ் உறவுகளை சிரிக்க வைச்ச பெருமை ஜமுனாவையே சேரும்...நான் யாழில் இணைந்த காலத்தில் ஜமுனா கூட‌  ஜொல்லு விட்டு ஆளை ஆள் கிண்டல் அடிச்சசு பழகினது மறக்க முடியாத தருனம் அது..ஏதோ தெரியல இரண்டு பேருக்கும் எல்லா விசயத்திலும் நல்லா ஒத்துப் போக்கும்..யாழுக்கு வெளியில் நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்கள்...ஜமுனா கூட சேர்ந்து செய்த குழப்படி ஏராளம் அந்த நாட்களில் ...நான் யாழிழ் மனம் விட்டு பழகிய உறவுகளில் ஜமுனாவும் ஒரு ஆள்.... அப்ப நான் வரட்டா  :lol: 

 

(4)

குமாரசாமி தாத்தா

 

குமாரசாமி தாத்தா யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் தாத்தவும் ஒரு ஆள்...குமாரசாமி தாத்தாவிடம் இருந்து தான் நிறைய பஞ்சு டையிலாக் கற்றுக் கொண்ட்டேன்...எதையும் பயப்பிடாமல் துனிந்து எழுதக் கூடிய ஒரு உறவு.....நானும் ஜமுனாவும் ஒரு திரியில் சும்மா அலட்டி புலம்பி எழுதி கொண்டு இருக்க..தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாய்த்த மாதிரி நீங்களும் வந்து வாச்சியல் என்று...அதிலை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றும் தொடருது....கால் பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..நான் சந்திக்க விரும்பும் உறவுகளில் தாத்தாவும் ஒரு ஆள்..அடுத்த முறை ஜெர்மன் வரும் போது உங்களை கண்டிப்பாய் சந்திப்பேன் தாத்தா......

 

 

(5)

தமிழ் சிறி அண்ணா

 

 

யாழில் புதியவர் முதல் பழையவர் வர தமிழ் சிறி அண்ணாவை தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...யாழின் தூண் என்று கூட சொல்லலாம் இவர‌ .....கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு ஆள்...யாழிழ் அறிமுகம் ஆகும் உறவுகளை அன்பாய் வர வேற்பார்.....கருணாநிதியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேணும் என்றால் தமிழ் சிறி அண்ணாவை தொடர்பு கொண்டால் விளக்கமாய் அந்த மாதிரி சொல்லுவார்...ஒரு திரியில் கருணாநிதியை பற்றி எழுதி இருந்தார் அதை வாசித்து வியந்து போனேன்...தமிழ் சிறி அண்ணாவும் கால் பந்து விளையாட்டு மேல் தீவீர ஆர்வம் கொண்டவர்...2010 பீபா உலக கோப்பை கால் பந்து போட்டியில் சிறி அண்ணா கூட விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒன்று....யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒரு ஆள்

 

 

(6)

 

வாத்தியார்

 

வாத்தியார் அண்ணா கூட விளையாட்டு திரியில் தான் என் கருத்தாடல் ஆரம்பம் மானது..வாத்தியார் மிகவும் அமைதியான ஒரு உறவு.....கூட அலட்டி எழுத மாட்டார்..மற்றவர்களை சீன்டி பார்ப்பதும் இல்லை.....எப்பவும் வெளிப்படை பேச்சு..மற்ற உறவுகளை கவனிப்பதிலும் வாத்தியார் அந்த மாதிரி..உறவுகள் 5000 அல்லது 10000 ஆயிரம் கருத்து எழுதி முடித்தால்..அவர்களுக்கு புது திரி திறந்து வாழ்த்து சொல்லி மற்றவர்களையும் வாழ்த்த செய்பவர்....வாத்தியாரும் ஒரு சில ஆக்கங்களை யாழிழ் எழுதி இருந்தார்..அதிலும் கோயில் சம்மந்தமாக்க எழுதி இருந்தார்....அடுத்த வருடம் நடக்க இருக்கும் பீபா உலக கோப்பை விளையாட்டில் யாழிழ் வாத்தியின் ஆதீக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்....மற்ற உறவுகளைப் போல் வாத்தியும் நல்ல ஒரு உறவு

 

 

(7)

 

டங்கு இசைக்கலைஞன்

 

இசைக்கலைஞன் அண்ணா..யாழில்யார் தன்னும் இவருடன் சீன்டி பார்த்தால் கூட கோவப் படமாட்டார்..பொறுமையா பதில் அளிப்பார்...நான் கவனித்த மட்டில் இவர சீன்டிப் பார்க்கிற ஆக்கள் எல்லாம் 50 கருத்துக்கு உள்ளை எழுதின ஆட்கள் தான் இவர கூட சீன்டி பார்ப்பது :D ...இசைக்கலைஞன் அண்ணாவுக்கு யாழ்ழுக்கு வெளியிலும் ஒரு சில ரசிகர்கள் இருக்கினம் இவரின் எழுத்தை விரும்பி வாசிக்க...என்ர நெருங்கிய உறவு சொன்னது இது தான் இசைக்கலைஞன் அண்ணா நல்ல ஒரு கருத்தாளர் என்று (வாழ்த்துக்கள் அண்ணா... ) யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் இசைக்கலைஞன் அண்ணாவும் ஒரு ஆள்.....

 

 

 

(8)

 

தமிழ் அரசு

 

தமிழ் அரசு அண்ணா...யாழின் புயல் என்று கூட இவர சொல்லலாம்...தீவிர ஈழ ஆதரவாளர்..ஒரு தருடனும் முரன் படுவது இல்லை தானும் தன்ர பாடும்...இவர் யாழிற்கு ஆற்றும் பணி பெரியது...உறவுகளை காணாட்டி கூட..காணவில்லை திரிக்கு சென்றும் ஆக்களை தேடுவார்..தெரியாததை கேட்டால் பொருமையா சொல்லியும் குடுப்பார்....

 

 

 

(9)

 

நிலாமதி

 

 

நிலாமதி அக்கா...இந்த அக்காவை பற்றி கூட எழுதலாம்...எல்லாருடனும் நல்ல மாதிரி பழகும் ஒரு உறவு...ஆரம்ப காலத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்பா...நான் எழுத்துப் பிழை விட்டு எழுதும் தமிழை பார்த்து கவலைப் பட்ட ஆட்களில் நிலா அக்காவும் ஒரு ஆள்....ஒழுங்காய் எழுதனும் என்று ஊக்கம் தருவா.நான் அவாக்கு வைச்ச பெயர் டீச்சர் ….நிலா அக்காவை இப்ப பெரிதாக்க யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...யாழிழ் நான் எழுதின கதையை அடிக்கடி ஆரம்பத்தில் நினைவு படுத்துவா...நிலாக்க கூட கருத்தாடின அந்த நாட்கள் மிகவும் சந்தோசமான நாட்கள்.....

 

 

 

(10)

 

நெடுங்கால போவான்

 

நெடுங்ஸ் அண்ணா...யாழின் அறிவாளி என்று கூட இவர சொல்லலாம்...நெடுங்ஸ் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு...இவரும் தீவிர ஈழ ஆதரவாளர்...இவருடன் எதிர் அணியினர் கருத்து எழுதி ஜெயிக்கிறது ரொம்ப கஸ்ரம்....நல்ல ஒரு எழுத்தாளர்..யாழிழ் நான் அதிக பச்சை குத்தினது என்றால் அது நெடுங்ஸ் அண்ணாவின் கருத்துக்கு தான்...ஈழ விசயத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக்கும்...நெடுங்ஸ் அண்ணாவுக்கு விஞ்ஞான ரீதியிலா பலவிடையங்கள் தெரியும் அதிலும் நாசா சம்மந்தமாய்.. உங்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.... :)  :icon_idea: 

 

 

தொடரும்

 
 
 
எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்  :D 
 

 

 

 

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல திரிதான் பையன். நான் வரும்போது யமுனா இல்லை. தெரியாதவர்களைப் பற்றிய உங்கள் வரிகள் வாசிக்கும்போது அவர்கள் மீண்டும் யாழில் வந்து எழுத மாட்டார்களா?? என்னும் ஆதங்கம் எழுகிறது. தொடருங்கள் பையா. :D
 

Posted

தொடருங்கோ பையா . பழைய காலத்தை அசை போடுவதும் ஒரு சுகானுபவமே :) :) .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயா பபா.. கலைஞன் மற்றும் சில கள உறவுகள்.. வரிசையில்.. நீங்களும் இதனைத் தொடர்வதில்.. வாழ்த்துக்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான  பதிவு தம்பி

எனக்கு சிலவற்றை  யாழைவிட்டு நான் போகுமுன் யாழில் செய்யணும்  என்ற விருப்பங்களில்  இதுவும்  ஒன்று.

அதை  தம்பிகள்  செய்வது மகிழ்ச்சி  தருகிறது.

 

அதுவும் பையன்  செய்யத்தொடங்கியிருப்பது மேலும   மகிழ்ச்சி  தருகிறது

காரணம்

தமிழில்  எழுத அவர்   சிரமப்படுபவர்

ஆனால் இதை தேர்ந்தெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது

வாழ்த்துக்கள்  தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையன் 26 , வாழ்த்துக்கள் பையா !  நல்ல விடயங்களை  எழுதுகின்றீர்கள்  தொடர்ந்து எழுதுங்கோ !! :D  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், பையா!

 

உங்கள் தமிழ் நடை, பேச்சுத் தமிழ் போல, அழகாக உள்ளது!  :D

 

தமிழ் எழுதுவதில், நீங்கள் நீண்ட தூரம் வந்து விட்டீர்கள்! தொடருங்கள்!

Posted

உண்மையில் இங்கு எனக்கு பலரை தெரியாது நீங்க எழுதுவதால் அவர்களை அவர் குணங்களை அறிய முடிகிறது தொடருங்கள் பையா :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(11)

தமிழ் சூரியன்

 

தமிழ் சூரியன் அண்ணா...எல்லாருக்கும் தெரியுமே இவரின் திறமையை...2007ம் ஆண்டு தமிழ் சூரியன் அண்ணா இசை அமைத்து ஒரு பாடல் பாடி இருந்தார் தமிழ்செல்வன் அண்ணாவுக்கு காவியமாய் வீர காவியமாய் என்ற பாடல்...அந்த பாடலை பல தடவை கேட்டு இருந்தேன்...போன வருடம் தான் தெரிய வந்தது அந்த பாடலை இசை அமைத்து பாடியது நம்ம தமிழ் சூரியன் அண்ணா என்று... தமிழ் ஈழம் மேல்  நல்ல‌ பிரியம் கொண்டவர்...ஈழ விடையத்தில் எங்க இரண்டு பேருக்கும் நல்ல ஒத்துப் போக்கும்.... மற்ற உறவுகளை போல் தமிழ் சூரியன் அண்ணாம் நல்ல ஒரு உறவு......

 

 

(12)

 

விசுகு குகதாசன்

 

விசுகு அண்ணா யாழில் மூத்த ஒரு உறவு....தேசிய தலைவர் மேலும் அந்த போராட்டம் மேலும் நல்ல ஒரு பற்று கொண்ட ஒரு உறவு...நம்மல மாதிரி சின்ன பஸ்சங்களுக்கு நல்ல ஒரு வழி காட்டி என்று கூட சொல்லலாம்....போன மாதம் டென்மார்க் வந்து நின்ற பொழுது சந்திக்க கேட்டு இருந்தார்...ஓம் அண்ணா சந்திப்போம் என்று சொன்னேன்..பிறக்கு கலியாண வீடு போய் வந்து உடல் நிலையும் கொஞ்சம் சரி இல்லை அடுத்த முறை சந்திப்போம் என்று சொல்லி விட்டேன்....கருத்து களத்தில் மற்றவர்களுடன் சின்ன சின்ன முரன் பாடு இருந்தாலும் அதை மனதில் வைத்து கொள்ளாமல் பழக கூடிய ஒரு உறவு......

 

 

(13)

புங்கையூரன்

 

புங்கையூரன் அண்ணா.....இந்த அண்ணாவோடை என்ற ஆரம்ப கருத்து சண்டையில் தான் தொடங்கிச்சு...நான் காண வில்லை திரியில் மச்சானை தேடினேன்..புங்கையூரன் அண்ணா வந்து கேட்டு எழுதினார் என்ன பையா கிட்டடில ஏதாவது கிரிக்கெட் சீசன் வரப் போக்குதோ என்று....இவர் என்ன கிண்டல் அடிக்கிறாரோ என்று நினைத்து.. நானும் இப்படியே எழுதி விட்டேன் ஓம்டா அதுக்கு தான் அவர தேடுறேன் என்று..பிறக்கு தான் தெரிந்தது அவர் வயதில் மூத்தவர் அவர் கூடஅப்படி எழுதி இருக்க கூடாது என்று...புங்கையூரன் அண்ணா அதை மறந்து இருப்பார் என்று நினைக்கிறேன்....ஊருக்கு போய் விட்டு வந்து ஒரு ஆக்கம் எழுதி இருந்தார் வாசிக்க நல்லா இருந்திச்சு....யாழிழ் பம்புக்கு போக்கமல் வஞ்சகம் இல்லாமல் பழகும் ஒரு நல்லஉறவு

 

 

(14)

ராஜா முத்து

 

முத்து அண்ணா...இவர இசை மன்னன் என்று கூட சொல்லலாம்  :D ...எந்தப் பாடைலைக் கேட்டாலும் தேடி எடுத்து தருவார்...நல்ல ஒரு உறவு..தனி மடலிலும் சுகம் விசாரிப்போம்...2009ம் ஆண்டுக்கு முதல் அதிகம் யாழிழ் ராஜா அண்ணாவை காணலாம் அதுக்குப் பிறக்கு ராஜா அண்ணாவின் வருகை கொஞ்சம் குறைந்து விட்டது....மீண்டும் பழைய படி யாழுக்கு வருவார் என்று எதிர் பாப்போம்......

 

 

(15 )

புத்தன்

 

புத்தன் அங்கில்...இவர்ட எழுத்தை பார்த்து நான் ஆரம்பத்தில் அதிர்ந்து போனேன்...புத்தன் அங்கில் வைக்கிற கருத்து இடியும் மின்னலைப் போன்று..நல்லா எழுதுவார் அந்த நாட்களில்..இப்ப எழுதுவதை கொஞ்சம் குறைத்து விட்டார்...ஜமுனாவின் மாமா...ஒரு நாள் ஜமுனா கூட கதைத்து கொண்டு இருக்கும் போது புத்தன் அங்கில் எப்படி இருப்பார் கந்தப்பு எப்படி இருப்பார் என்று கேட்டேன்..அப்ப ஜமுனா ஒரு படம் அனுப்பினார் இது தான் புத்தன் அங்கில் என்று அந்தப் படத்தில் கந்தப்பு அங்கிலும் வேர ஒரு ஆளும் நின்டார் சரி என்று படத்தை பார்த்ததும் அழித்து விட்டேன்.....மீண்டும் பழைய புத்தன் அங்கிலை நாங்கள் யாழில் பார்க்கனும்.... :D 

 

 

(16)

அரவிந்தன் கந்தப்பு

 

கந்தப்பு அண்ணா...ஈழ போராட்டத்தில் நாடு விட்டு நாடு போய் கலந்து கொள்ளும் ஒரு உறவு....உலக கால்பந்து போட்டி உலக கிரிக்கெட் போட்டியை யாழிழ் திறம்பட நடத்துவார்...சின்ன சின்ன பரிசுகளையும் அனுப்பி வைப்பார்....ஈழ போராட்டத்துக்கு நல்ல ஒத்துழைப்பு ழங்கிய ஒரு உறவு...ஜமுனாவின் நெருங்கிய சொந்தம்....கந்தப்புவை ஆரம்ப காலத்தில் யாழிழ் அடிக்கடி காணலாம்..பிறக்கு கந்தப்புவின் வருகையும் கொஞ்சம் குறைந்து போய் விட்டது...மீண்டும் பழைய படி யாழுக்கு வருவார் என்று எதிர் பாப்போம்.....

 

தொடரும் :) 
 

Posted

அருமையான பதிவு பையா..

பையனிடம் எனக்குப் பிடித்த பண்பு வெ ளிப்படையான தேசப்பற்று. பலர் (நான் உட்பட) சில கருத்துக்களை மறைமுகமாக அல்லது தவிர்த்தே எழுதுவோம். பையன் அப்படியல்ல.. மனதில் பட்டதை அப்படியே எழுதுவார். சீமானைப் போல. :D

வாழ்த்துக்கள் பையா..! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதோர் திரி. ஏன் சிலர் யாழ் பக்கம் வருவதில்லை என்று கேட்டு எழுதுங்கள்!

பொண்ணுங்களோட பழகுவதில் ஆர்வம் இருப்பதால் பையனோடு பழக்கம் இல்லை!

Posted

தொடர்ந்து எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(17)

குறுக்கால போவான்

 

குறுக்கால போவான் அண்ணா.....தீவிர ஈழ ஆதராவாளர் ஆனால் மற்ற ஈழ ஆதரவாளர்களை போட்டு வாங்குவதில் கிள்ளாடி...2009க்கு பிறக்கு இவரின் வருகையும் இல்லாமல் போச்சு....மீண்டும் அவர் யாழ் தளத்துக்கு வரனும் ....ஒரு திரியில் மின்னல் அண்ணாவை நல்லா போட்டு வாங்கினார்..அதே திரியில் கோவமும் பட்டு விட்டார்..மற்ற யாழ் உறவுகள் அவர சமாதானப் படுத்தினார்கள்....இவர் யாழிழ் இருந்த போது ஒவ்வரு திரியிலும் கருத்தாடல் நடத்து கொண்டு தான் இருக்கும்.......

 

 

 

(18)

 

மின்னல்

 

மின்னல் அண்ணா..ஈழத்தில் ஏதாவது தாக்குதல் நடந்தால் அந்த செய்தியை  யாழில் இணைக்கிற முதல் ஆள் மின்னல் அண்ணாவாய் தான் இருக்கும்...நல்ல ஒரு கருத்தாளர்..ஆயுதங்களை பற்றிய விபரம் நல்லா தெரிந்தவர்..அவர்ட்ட பெயருக்கு ஏப்ப போல தான் அவரின் கருத்தும் இருக்கும்.......2009க்குப் பிறக்கு இவரின் வருகையும் குறைந்து விட்டது... மின்னல் அண்ணா மீண்டும் யாழுக்கு வரனும்...

 

 

(19)

உமை

 

உமை அண்ணா.....தன்னை ஒரு நாளும் யாழில் விளம்பரப் படுத்திய தில்லை ...ஒரு சிலருக்கு இவர கருத்தாளரா மட்டும் தான் தெரியும்...ஆனால் ஈழத்துக்கு இவர் செய்த சேவை மிகப் பெரியது..2009ம்பது இறுதிக் கட்டப் போரில் இவரின் நண்பர்கள் போராளிகள் வீரச்சாவை தழுவி கொண்டு இருக்கையில் மற்றவர்கள் மனம் உடைந்து போனது போல் இவரும் மனம் உடைந்து போய் விட்டார்......இப்ப ஆளை யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...தனி மடலில் தம்பி என்று அன்பாய் எழுதுவார்..

 

 

(19)

சுப்பன்னை

 

சுப்பன்னை..இந்த மனிஷன் ரொம்ப ஜாலியான மனிஷன்...எல்லாருடனும் நல்லா பழகுவார்..இவர் சூறாவளி காற்று மாதிரி எப்ப எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது..யாழுக்கு வரும் போது தனி மடல் போடுவார் இங்கா பக்கம் வரலாம் தானே என்று.. சரி என்று நானும் வந்தால் பிறக்கு ஆளைக் காணக் கிடைக்காது....சுப்பன்னை கூட கருத்தாடிய அந்த நாட்கள் இனிமை.....மீண்டும் சுப்பன்னை யாழுக்கு வரனும்....

 

 

(20)

முனிவர் ஜீ

 

முனிவர் ஜீ இவரும் எங்கட வைச் தான்...நல்ல ஒரு உறவு ..நல்ல நண்பன்...இவரும் இருந்து இருந்துட்டு நல்லா நகைச்சுவையா ஏதாவது கதை எழுதுவார் யாழில்...அப்படி எழுதின ஒரு கதை தான் இது ( முனிவர் ஜீ தற்போது சீனாவில் என்ற கதை...எல்லாரும் சிரிச்சு வாசிச்சு மகிழ்ந்தினம் அந்த நாட்களில்...நல்ல உள்ளம் கொண்டவர்...இட சுகம் தனி மடலும் போடுவார்...இவரும் யாழ் வாரது குறைவு....முனிவர் ஜீ மீண்டும் யாழ் வரனும்......

 

 

(21)

தயா தலை

 

தயா அண்ணா...ஈழத்துக்கு எதிரா யார் கருத்து எழுதுவினமோ அவர்களுக்கு தயா அண்ணாவிடம் நல்ல மருந்து இருக்கு...தயா அண்ணாவின் கருத்தையும் ஆரம்ப காலத்தில் விரும்பி வாசிப்பேன்...தமிழ் ஈழத்துக்கும் அந்த போராட்டத்துக்கும் நல்லா உதவின ஒரு உறவு...கொஞ்சக் காலம் யாழ் வராமல் இருந்தார்..இப்ப முந்தின போல யாழ்  தளத்துக்கு வந்து போவார் கருத்தாடலில் எதிர் அணியினர போட்டும் தாக்குவார்...ஈழம் சம்மந்தமாய் தயா அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு....தயா அண்ணா அன்றில் இருந்து  இன்று வரஒரு கொள்கையில் தான் இருக்கிறார் அது ஈழம்...

 

(22)

 

ஈழவன்85

 

ஈழவன் 85 தீவிர ஈழ ஆதரவாளர்...நான் யாழிழ் இணைந்த காலத்தில் இவர அதிகம் யாழில்காணலாம்..2009 தோடை இவரும் யாழ் வருவதை குறைத்து விட்டார்..ஜமுனாவிம் நெருங்கிய நண்பன்...ஈழம் மேலும் அந்த போராட்டத்தின் மேலும் அதிக பற்றுக் கொண்ட ஒரு உறவு..

 

(23)

 

இளங்கவி

 

இளங்கவி அண்ணா...கவிதை என்றால் நல்லா எழுதுவார்..கூட ஈழம் சம்மந்தப் பட்ட கவிதைகள் எழுதி இருந்தார்...இப்ப யாழில் அதிகம் காணக் கிடைப்பது இல்லை இவர ...எல்லாருடனும் அன்பாய் பழக கூடிய ஒரு உறவு...மீண்டும் இளங்கவி அண்ணா யாழ் வரனும்..முந்தின போல கவிதைகள் கதை என்று எழுதனும்.....

தொடரும் 

Posted

ம்ம்ம்ம்.... எல்லாரைப் பற்றியும் மிக நன்றாக புரிந்துவைத்து எழுதுகின்றீர்கள். இதில் நீங்கள் சுப்பண்ணை பற்றி எழுதியிருந்தீர்கள். என்னை யாழுக்குள் இழுத்து வந்ததே  சுப்பண்ணைதான். ஆனால் "கவிதை"  என்ற பெயரில் இல்லை.... வேறொரு பெயரில்...! :rolleyes:  சுப்பண்ணை என் நெருங்கிய நண்பனும் கூட! :)

தொடருங்கள்... பையன்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாழை அலங்கரித்த பழையவர்களைப் பற்றி அறிய உதவும் பதிவு. தொடரட்டும் உங்கள் படைப்பு :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் நிர்வாகம்

 

(24)

 

மோகன்

 

மோகண் அண்ணா..இந்த அண்ணா கூட போட்ட அன்பு சண்டை அதிகம் அந்த நாட்களில்...மோகன் அண்ணா என்ற படியால் பொறுத்துக் கொண்டு இருந்தார்....நல்ல  பொருப்புள்ள கருத்துக்கள பொறுப்பாளர்...

 

 

(25)

 

இணையவன்

 

 

இணையவன் அண்ணா...நான் யாழிழ் இணைந்த ஆரம்ப காலத்தில் எனக்கு பெரிசா தமிழ் எழுத வராது..அப்ப ஒரு சில யாழ் உறவுகள் என்னை கிண்டல் அடிச்சினம்..அப்ப இணையவன் அண்ணா என்னை தனி மடலில் தொடர்வு கொண்டு நீங்கள் மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கவலைப் பட வேண்டாம் கொஞ்சம் முயற்சி செய்து தமிழை எழுதுங்கோ என்று ஊக்கம் தந்தார்....கொஞ்ச நாளுக்கு முதல் மீண்டும் தொடர்வு கொண்டார் தம்பி நீங்களும் சுண்டலும் நல்ல நண்பர்கள் இரண்டு பேரும் தளத்தில் நாகரிகமாய் எழுதுங்கோ என்று சொன்னார்!!

 

 

(26)

 

நிழலி

 

நிழலி அண்ணா...நிழலி அண்ணை எப்பவும் வெளிப்படை பேச்சு...இவரும் யாழிழ் ஒரு சில ஆக்கங்கள் பதிவுட்டு இருக்கிறார்....நிழலி அண்ணாவுக்கு என்னை 2010ம் ஆண்டு முகப் புத்தகத்தில் அறிமுகம் செய்து வைச்சேன்...ஒரு சில உறவுகளுடன் கருத்துக் களத்தில் முரன் பட்டாலும் அதே உறவுகள் யாழ் வர வில்லை என்றாலும் தேடுவார்..இதை தான் சொல்லுறது மனம் சுத்தமாய் இருக்கனும் என்று அது நிழலி அண்ணாவிடம் இருக்கு...

 

 

(27)

 

நுனாவிலன்

 

நுனாவிலன் அண்ணா..இவரும் என்ன மாதிரி தான் கிரிக்கெட் ரசிகன்.. விளையாட்டு திரியில் இவரும் நானும் நிறைய தரம் கருத்தாடி இருக்கிறோம்...ஈழப் பாடல்கள் என்றால் இவருக்கும் நல்லா பிடிக்கும்...  

 

(28)

 
நியானி
 
நியானி அண்ணா அல்லது அக்கா...இவங்கள் கொஞ்ச நாளுக்கு முதல் தான் வந்தாங்க‌ இவங்களும் இணையவன் அண்ணா மாதிரி  நாகரிகமாய் கருத்து எழுதுங்கோ என்று சொல்வாங்கள்....எனக்கு இவங் இடம் இருந்து தனி மடல் வந்தால் அதில் நாகரிகமாய் எழுதுங்கள் என்று தான் வரும்... :)  :icon_idea: 
 
தொடரும்

 

 

 

Posted

 

(19)

உமை

 

உமை அண்ணா.....தன்னை ஒரு நாளும் யாழிழ் விளம்பரப் படுத்திய தில்லை ...ஒரு சிலருக்கு இவர கருத்தாளரா மட்டும் தான் தெரியும்...ஆனால் ஈழத்துக்கு இவர் செய்த சேவை மிகப் பெரியது..2009ம்பது இறுதிக் கட்டப் போரில் இவரின் நண்பர்கள் போராளிகள் வீரச்சாவை தழுவி கொண்டு இருக்கையில் மற்றவர்கள் மனம் உடைந்து போனது போல் இவரும் மனம் உடைந்து போய் விட்டார்......இப்ப ஆளை யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...தனி மடலில் தம்பி என்று அன்பாய் எழுவார்...

 

நினைவூட்டலுக்கு நண்றி பையன்...   என் பங்குக்கும் சிலதை சொல்ல ஆசைப்படுகிறேன்.... 

 

உண்மையாக சொன்னால் உமையை போல ஊரில் உள்ள மக்களுக்காக  புலம்பெயர்ந்த நாட்டிலை அப்படி வேலை செய்தவர்கள் மிக குறைவு...  அப்படி இருந்தாலும் அதில் முக்கியமான ஆக்களில் உமையும் ஒருவர்...  அவருடன் நான் தொட்ர்பில் இல்லை எண்டாலும் மதிப்புக்கு குறைவில்லை... 

 

வணங்காமண் கப்பல் பொருட்கள் சேகரிக்கும் காலத்தில் தான் நான் உமையை பார்த்தேன்...(   என் வீட்டிலை என்னை தவிர எல்லாருக்கும் சின்னம்மை போட்டிருந்ததால் அவர்களோடை இணைய என்னால் அப்போது முடியவில்லை...நானாக கழண்டு கொண்டேன்)

 

ஆளை போலவே பெயரும் மிக சின்னது...  ஆனால் வேகம் குறையாமல் எல்லா வேலையையும் ஓடி ஓடி செய்து கொண்டு இருந்தார்...  கவியோடை சேர்ந்து  தாயகத்தில் நடக்கும் அனைத்து செய்திகளும் கோர்வை ஆக்கி சர்வதேச ஊடகங்களுக்கு குடுக்கிற பணியையும் சேர்த்து செய்து கொண்டு இருந்தார்...  கையறு நிலையிலையும் விடாமுயற்சியை கைவிடாமல் இருந்தார்கள்... 

 

பின்னரான காலங்களில் கவிராஜ் நாடுகடந்த அரசில் வேட்ப்பாளராக போட்டி போட்டார் அதே குழுவில் உமையின் சொந்த பெயரை கண்டு மகிழ்வாக இருந்தது...  அது தான் இல்லை எண்று பின்னை எழுதி இருந்தார் ...  அதை நான் இரசிக்கவில்லை...  

 

பிறகும் ஈழநாதம் இணையப்பக்கத்தை கொண்டு வந்து யாழில் இணைப்பார்...  பின்னராக காலங்களில் அதுவும் நிண்டு போனது... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையன் உங்கள் வாஞ்சையான பதிவுகளுக்கு நன்றிகள்
நல்ல பையன் கோபம் வந்தால் கட்டுப்படுத்துவது நல்லது.

 

அரசியல் என்றால் எதிர் விமர்சனங்கள் அதிகம் எதிர்பார்க்க வேண்டும்.

எந்தக் கருத்திலிருந்தும்  நாங்களும்  ஏதாவது கற்றுக் கொள்ளலாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
சகோ, உங்களின் பாணியே தனி ....... !
 எதனைச் செய்தாலும்  அதில் ஒரு வித்தியாசம் இருக்கும் ......!!
 பழக மிக இனிமையானவர் தேசியத்தின்மீது அதி தீவிர அக்கறை கொண்டவர் இப்படி சகோவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ........
 
தொடர்ந்து எழுதுங்கள் ........ வாழ்த்துக்கள் சகோ ..!  :)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக இருக்குது பையா தொடருங்கள்.பையனுக்கு பிடிக்காத கருத்தளார்களில் முதலாவது ஆளாக நான் இருப்பேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக்க நன்றிபையா . நல்ல முயற்சி .வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான பதிவு பையா..

பையனிடம் எனக்குப் பிடித்த பண்பு வெ ளிப்படையான தேசப்பற்று. பலர் (நான் உட்பட) சில கருத்துக்களை மறைமுகமாக அல்லது தவிர்த்தே எழுதுவோம். பையன் அப்படியல்ல.. மனதில் பட்டதை அப்படியே எழுதுவார். சீமானைப் போல.

வாழ்த்துக்கள் பையா..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான பதிவு, கடந்த நான்கைந்து வருடங்களாக களத்தில் பதியப்படாத குறையை நீக்கிய பையனுக்கு நன்றி. :) 
அதுகும் ஒரே நாளில்.... 28 உறவுகளைப் பற்றி, பையன் எழுதியது ஆச்சரியப் பட வைத்தது.
 

பையன் யாழில் நிற்கிறான் என்றால்.... கிரிக்கெட், உதைபந்தாட்டம் சம்பந்தமான உரையாடலாக‌ இருக்கும்.
அல்லது... ஒட்டுக்குழுக்களுக்கு சம்பல் பேச்சு விழுந்து கொண்டிருக்குது என்று அர்த்தம். :D 
பல தடவை அவன் நித்திரை முழித்து தனக்கே.. உரிய பாணியில், ஒட்டுக்குழுக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததை நானறிவேன்.
 

அவனின் மழலைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பு இருந்ததை விட... இப்போ நன்றாக எழுதுகின்றார்.
வாத்தியாரின் தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு வந்தால்... அவர் தமிழில் இன்னும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நினைக்கின்றேன். :lol: 
காலத்திற்குத் தேவையான பதிவை இட்ட பையனுக்கு, மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பையா எனக்கு தெரியாத பலரை அறிமுகப்படுத்தியதற்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.