Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88724
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39255
    Posts
  3. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    10000
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33149
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/26/26 in Posts

  1. மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.
  2. 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். adminJanuary 25, 2026 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.” மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமானது. எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் வைத்து தரப்போவதில்லை. எமது நற்புறவு, சினேகபூர்வ உரையாடல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் எமக்கு போதிய அரசியல் பலம் இருந்திருந்தால் இன்னும் பலவற்றை சாதித்திருக்கலாம். தற்போதுள்ள ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்து போயுள்ளனர். அவர்களுக்கு அனுபவமோ ஆற்றலோ போதாது. அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமாயின், மக்கள் எமக்கு மீண்டும் அந்த ஆணையை வழங்க வேண்டும். “கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு, கட்டமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் ஈ.பி.டி.பி-யை மீண்டும் எழுச்சி கொள்ள வைக்க முடியும். இதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.” என டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://globaltamilnews.net/2026/227462/
  3. தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழ‌மைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
  4. புலர் அறக்கட்டளையின் ஐந்தாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் மூத்தோர் சங்கத்தில் 25/01/2026 நடைபெற்றது தொடர்புகளுக்கு +94 77 777 5448 இந்நிகழ்வில் நிர்வாகிகள் தலைவர் திரு தேவகுமாரன், செயலாளர் திரு மோகனறூபன், பொருளாளர் திரு பாலகிஸ்ணா, திருமதி அபிராமி சிவபவன், திரு இராமலிங்கம், திரு சிவறூபன், திரு இந்திரகுமார் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்கள் திரு ஜெகஜீவகன், திரு அமிர்தகணேசன், திரு சிறீதரன், திரு ரஞ்சித், திரு கோகிலராஜன், திரு சேந்தன், திரு கரிதாசன், திரு சிறீரங்கன், வீடமைப்பு அதிகாரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு சுரேஸ்குமார், திரு சுரேன் தொண்டர்கள் திரு அறிவுக்குமரன், திரு மகிந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு எமது நன்றிகள்.
  5. மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.
  6. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  7. ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார் இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2026/1461114
  8. பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2026/1461553
  9. வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல் 26 Jan, 2026 | 03:31 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் , அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237047
  10. தற்காலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என அழைக்கலாம். நாட்டை ஆள்பவர்கள் பெரும்பாலும் 40 தொடக்கம் 65 வயதுக்கு உட்பட்டோரே.
  11. தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தினை இழந்தால், அது தமிழர்களிற்கு மேலும் நெருக்கடியாகிவிடும், ஆனால் தமிழ்க்கட்சிகள் சிறு சிறு கட்சியாக சிதறுண்டிருந்தால் பலமான ஒரு பிரதிநிதித்துவத்தினை எட்ட முடியாது, சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாகக்கூடாது, அது மிகவும் ஆபத்தானது, தமிழர்களும், முஸ்லீம்களும் தமது உரிமைகளை பெறுவதற்கு தமக்குள் ஒருமித்த பெரும் சக்தியாக இருத்தல் வேண்டும் (தமிழர்களுக்கு தமிழ்தேசிய கூட்டணி, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் போல). புலிகள் இருந்த காலத்தில் தமிழ் தேசியம் ஒரு சாத்தியமான விடயமாக இருந்தது, ஆனால் தற்போது வட கிழக்கு இணைப்பினையே ஒரு பிரிவினை வாதமாக பார்க்கிறார்கள், 13 இனை இந்திய தலையீட்டின் பகுதியாக பார்க்கிறார்கள். தற்போதய ஒற்றை ஆட்சி இலங்கைக்குள் அரசு விரும்பியதை செய்யும் நிலையில் உள்ளது. இவற்றை மீறி ஒரு அதிகார பரவலாக்கமே சாத்தியமா என தெரியவில்லை. தற்போதுள்ள இலங்கை அரசியல் சட்டத்தில் 1காணி, சட்டம், நிதி போன்ற அதிகாரமற்ற நிலையே காணப்படுகிறது. இந்த விடயங்களை அடைவதே எட்டாக்கொம்பாக உள்ளது, கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை என்பது நினைத்தே பார்க்க முடியவில்லை.
  12. பராசக்தி படம் ஹிந்தி திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எடுக்கபட்டதால் அதை பயன்படுத்த பாஜக நினைத்து இவர்களை பொங்கல் கொண்டாட அழைத்திருக்கலாம். மிரட்டியும் அழைத்திருக்கலாம். ஆனால் அநுரகுமார திசாநாயக்கவுடன் பொங்கல் கொண்டாடி செல்பி எடுக்க முண்டி அடித்தவர்களை விட அவர்கள் மேல்
  13. புதிதாக பதிய விரும்பினால் ஏற்றுக்கொள்ளப்படும்😊
  14. வல்லமை பொருந்திய நாடுகள் அனைத்தும் தமது அண்டை நாடுகள் தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை உதவிகள் எனும் போர்வையில் கட்டளை இடுகின்றன. மீறினால் சங்குதான் என்பதை கடந்த 15,20 வருட உலக நிகழ்வுகளில் பார்த்து விட்டோம்.
  15. பாகிஸ்தான் விளையாட ஒத்துக்கொண்டுள்ளது. அத்துடன் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து விளையாடும். எனினும் வீரர்களின் பட்டியல் இன்னமும் வெளியிடப்படவில்லை. கூகிள் ஷீற் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாழ்களப் போட்டியில் பங்குபற்றுவர்களுக்கு சிரமம் இருக்காது! கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing
  16. நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என..... ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜
  17. சென்ற ஜனாதிபதி தேர்தலில்….. சங்கு கூட்டணி தமிழன் அரியநேந்திரனுக்கு வாக்கு சேகரித்த போது, சுத்துமாத்து சுமந்திரன்…. சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த ஆள். சிங்களவன் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரித்த சுமந்திரனுக்கும்… யாழ்.களத்தில், ஒரு லூசு கூட்டம் ஆதரவு கொடுத்துக் கொண்டு இருந்தது. இப்போ அவர்கள் ஓடி ஒழிந்து கொண்டார்கள். வர இருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு, தனக்கு வாக்குப் பிச்சை கேட்டு… சங்குடன் ஐக்கியமாகியுள்ளது சுத்துமாத்து சுமந்திரன். பச்சோந்தி ஓணான் கூட… இவ்வளவு விரைவாக தனது தோலின் நிறத்தை மாற்றாது. இவர்களின் பதவி வெறி பிடித்த அரசியல்… இனி தமிழ் மக்களிடம் எடுபடாது. சுத்துமாத்து சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதால்…. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும், அனுர கட்சிக்கு விழுந்து, தேசிய மக்கள் முன்னணி வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை… இலகுவாக வெல்லப் போகின்றது. உள்ளதையும் கெடுத்தான் நொள்ளிக் கண்ணன் நிலையில்… சுத்துமாத்து சுமந்திரன் உள்ளார். அடுத்த செருப்படி தோல்விக்கு… இப்பவே ஆள் ரெடியாகி உள்ளார்.
  18. திருமதி மோ. சுமதி (பூமா) அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு
  19. இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.
  20. யாழ் சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன் ஐயா !
  21. மிகவும் துயரமான செய்தி!மனவியை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல்..
  22. மிகவும் துன்பகரமான செய்தி எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அருகில் இருந்தவர் போய் விட்டால் அடி மனதின் வேதனையை யாரால் தேற்ற முடியும். எங்கள் ஆழ்த இரங்கல் மோகன். உங்கள் பெரும் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஓம் சாந்தி 🙏
  23. மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  24. மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.
  25. ஆழ்ந்த இரங்கல்களும், அனுதாபங்களும் மோகன் மற்றும் குடும்பத்தினருக்கு. மீள்வதற்கும் எனது பிரார்த்தனைகள்.
  26. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
  27. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்
  28. கண்ணீர் அஞ்சலிகள் ....! ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை . ..!
  29. மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுக்கின்றோம்.
  30. மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
  31. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
  32. மிகவும் அதிர்ச்சியான மறைவுச் செய்தி. மோகன் அண்ணா, பிள்ளைகள், உறவினர் நண்பர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். சுமதி அக்காவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
  33. மோகனுக்கும். பிள்ளைகளுக்கும். மற்றும் நெருங்கிய. உறவினருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து. இரங்கல்களை. தெரிவித்துக் கொள்கிறேன் ஒம் சாந்தி.
  34. மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்!
  35. நம்பவே முடியவில்லை.மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மனைவியின் பிரிவால் துயருற்றிருக்கும் மோகனுக்கும் அம்மாவை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள்.
  36. மிகவும் துயரமான தகவல். எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி! 🙏
  37. துணைவியாரின் மறைவினால் துயருற்றிருக்கும் மோகன், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்🙏🏽
  38. அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன் அண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. 🙏
  39. மோகன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை எங்கள் கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்
  40. மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
  41. என்னுடைய ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் ... ஆன்மா சாந்தி அடையட்டும்
  42. நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது – ஜனாதிபதி! நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1419302 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.