Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து பழைய மாணவன் -நமணன் மறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!!!

  • Replies 59
  • Views 9.7k
  • Created
  • Last Reply

ஆழ்ந்த அனுதாபங்கள்!

இவருக்கு உரிய மரியாதையும் அவருக்கேற்ற பாட்டமும் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ரமணன் உடன் நேரடி பழக்கம் இல்லாவிடினும், அவருது நெருங்கின நண்பர் ஒருவன் என்னுடன் படித்தவர். என்னுடன் படிக்கும் போது இவருடைய பெயரை சொல்லுவது உண்டு. அவருடன் இது செய்தேன் அது செய்தேன் என்கிற மாதிரி. இந்த செய்தியை பார்த்த பின்பு அவருக்கு -எனது நண்பனுக்கு சொல்ல நினைத்த போது, அவரே தன்னுடைய அனுபவங்களை பாசெபூகில் பதிந்துள்ளார். யாழில் வரும் செய்திகள், அவற்றை எழுதுவோர், யாழில் உள்ள சக உறவுகளை பற்றியதே/ யாழின் சக உறவுகளே

உறவுப்பாலமாக இருக்கும் யாழுக்கு நன்றிகள்...

முகம் தெரியாத நண்பனுக்கும், நெருங்கி பழகாத தோழனுக்கும் என் இறுதி வணக்கங்கள்..

உனது பெயர் எனக்கு நன்கு தெரியும், எனக்கு உன்னை தெரியாவிடினும்....நீ சொன்ன செய்தி, உன்னை தந்து சொன்ன செய்தி,

எப்போதும் எனக்கும் உனது நண்பர்களும் ஒரு படமாய் இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நமணனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இள வயதில் ஏற்பட்ட அநியாய மரணம். போன கிழமை எனது நண்பி ஒருவரின் அக்காவும் மரணமடைந்தார். 28 வயசு தான். யாழ் மருத்துவ பீடத்தில் படித்து வைத்தியராக நீர்கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தா. தனக்குத் தானே தடுப்பூசி ஏற்றப் போய் அது ஒத்து வராமல் போய்ச் சேந்திட்டா. மிகக் கொடிய சோகம் என்னவெண்டால் அவவுக்கு இரண்டு மாதங்களின் முன்னர் தான் திருமணம் நடந்தது. அந்த திருமண போட்டோவையே மரண அறிவித்தலிலும் பாவித்திருந்தார்கள். செய்தியை முகப் புத்தகத்தில் பாத்த பின்னர் என்னால் ஒழுங்காக வேலை கூட செய்ய முடியவில்லை. அந்தளவு அதிர்ச்சி.

நமணனின் இறுதி அஞ்சலி மற்றும் இறுதிக்கிரிகைகள் விபரம்

Below is the funeral details of Namanan Guhanathan.

Venue: Highland funeral home (Warden and Sheppard)

3280 Sheppard Avenue, E

Scarborough, ON M1T 3K3

Viewing: Thursday 5:00 PM - 9:00 PM and Saturday 5:00 PM - 9:00 PM ( கீழே உள்ள நேரமாற்றம் )

Funeral: Sunday from 11.30 AM - 1.30 PM

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அகுதா.... சனிக்கிழமை 5:00 pm to 9:00 pm என சிறிய நேரமாற்றம் செய்துள்ளார்கள்.

அண்ணனுக்காய் கண்ணீரோடு ஒரு கவி

ஊரெழுவில் உதித்திட்ட உத்தமனே அண்ணா

உன் தங்கை உனக்காய் எழுதுகிறாள்

விழி நிறை கண்ணீரில் காகிதம் நனைந்திட

விண்ணகம் சென்ற மண்ணகத்து மன்னவனே

தியாக பூமியில் பூத்திட்ட புது மலரே – நீங்கள்

தியாக தீபத்தின் தம்பியா? என் அண்ணாவே

ஆழ்கடலில் எனை அலை அடித்து சென்ற போது

அன்னையாய் வந்த கட்டுமரம் நீங்கள் அண்ணா

அன்னை தேசம் விட்டு நீங்கள்

அன்னிய தேசம் சென்றாலும் அன்னை மண்ணிலே

அகதியான மாணவ வித்துக்களுக்காய்

அண்ணா உங்கள் வியர்வை எனும் நீர் இறைத்தீர்களே

உறவுகள் ஆயிரம் இருந்த போதும்

உற்ற காலத்தில் – என்னை

தங்கை எனும் நாமம் சூட்டி

தத்தடுத்த என் அண்ணாவே

பட்டமளிப்பு விழாவிற்கு உங்கள்

பாதம் படும் என சொல்லிவிட்டு – பாவி இவள்

பட்டங்கள் பெற முன்பே

பாரை விட்டு போனதேனோ

அன்னிய தேசம் சென்று எம் தேசம் மறந்து

ஆடம்பர வாழ்வு வாழும் எம் தேச உறவுகளே

ஒரு முறை நீங்களும் நமணனாய் மாறிப்பாரும்

மனிதத்தின் அர்த்தம் புரியும்.

கர்னனின் உடன் பிறப்பா அண்ணா நீங்கள் – இல்லை

கலியுகம் கண்டெடுத்த அவன் மறுபிறப்பா?

கண்கள் குளமாக கனத்த இதயத்துடன்

கல்லறை பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்

தகவல்

உடன்பிறவா சகோதரி, பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்

http://notice.lankasri.com/ta/remembrance-20120524101087.html

அன்னிய தேசம் சென்று எம் தேசம் மறந்து

ஆடம்பர வாழ்வு வாழும் எம் தேச உறவுகளே

ஒரு முறை நீங்களும் நமணனாய் மாறிப்பாரும்

மனிதத்தின் அர்த்தம் புரியும்.

கர்ணனின் உடன் பிறப்பா அண்ணா நீங்கள் – இல்லை

கலியுகம் கண்டெடுத்த அவன் மறுபிறப்பா?

கண்கள் குளமாக கனத்த இதயத்துடன்

கல்லறை பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்

நமணனுடன் பல காலம் பழகும் பொன்னான வாய்ப்புகள் கிடைத்தன. தாயகம் என்ற புள்ளியில் நாம் சந்தித்தோம், பயணித்தோம். இருந்தும் அந்த ஒருவரையும் நோகடிக்காத ஆனால் கொள்கையில் இலட்சியத்தில் மாறாத இதயத்தை முழுமையாக புரியாதவன்.

இறப்பு பிறந்த எல்லோருக்கும் வரும். ஆனால், எம்மால் நாலு உறவுகள் வாழ்ந்தால், வாழ வைத்தால் நிச்சயம் பிறப்புக்கு அர்த்தம் இருக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

. இருந்தும் அந்த ஒருவரையும் நோகடிக்காத ஆனால் கொள்கையில் இலட்சியத்தில் மாறாத இதயத்தை முழுமையாக புரியாதவன்.

நீங்கள் எழுதியிருப்பது புரியவில்லை அகோதா.

அத்துடன் இந்த திரியில் எழுதிய பலரும் எதையே எழுதிவிட்டு அழித்துவருவதை முதலிலேயே கவனித்தேன். என்னவென்று புரியவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

இறுதி வணக்கம்:

http://www.worldtamils.com/epaper/066.htm

நல் மனத்தான் நமணன் - ஈர வீர காவியம் (பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம்)

http://www.worldtamils.com/epaper/033.htm

கண்ணீர் வணக்கம்:

http://www.worldtamils.com/epaper/034.htm

http://www.worldtamils.com/epaper/035.htm

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் பத்திரிகையில் கண்ணீர் அஞ்சலிப் பிரசூரம் ஒன்று பார்த்துட்டு மிகவும் வேதனையாக போய்ட்டு..இந்த அண்ணாவின் கவனிப்பில் பல்கலையில் படித்து கொண்டு இருக்கும் மாணவி ஒருவர் எழுதி இருந்தார்..நான் நேராக பார்த்தில்லை,பேசியதில்லை ஆனால் இளையவர்களின் இறப்பு என்றால் மனம் ஏற்க மறுக்கிறது..நமணன் அண்ணா பாரியாகவே வாழ்ந்து இருக்கிறார் என்பது பலரது எழுத்துக்களில் காணக் கூடியதாக இருக்கிறது..

கண்ணீர் அஞ்சலிகள்

நேற்று எம் மாமாவின் உறவினர் ஒருவர் வந்து இவரைப் பற்றிக் கூறும் போதுதான் இவர் பற்றி அறிய முடிந்தது.

நேற்றைய தினம் பத்திரிகையில் கண்ணீர் அஞ்சலிப் பிரசூரம் ஒன்று பார்த்துட்டு மிகவும் வேதனையாக போய்ட்டு..இந்த அண்ணாவின் கவனிப்பில் பல்கலையில் படித்து கொண்டு இருக்கும் மாணவி ஒருவர் எழுதி இருந்தார்..நான் நேராக பார்த்தில்லை,பேசியதில்லை ஆனால் இளையவர்களின் இறப்பு என்றால் மனம் ஏற்க மறுக்கிறது..நமணன் அண்ணா பாரியாகவே வாழ்ந்து இருக்கிறார் என்பது பலரது எழுத்துக்களில் காணக் கூடியதாக இருக்கிறது..

கனேடிய வானொலி CTR இலும் இவர் பற்றி ஒரு பிரத்தியேக விவரணம் நடாத்தப்பட்டது. அதைக்கேட்டு பல உணர்வாளர்கள் வந்தும் இறுதி மரியாதை செலுத்தினர்.

மூன்று முகம் காணாத பெண் உறவுகளுக்கு பல்கலைக்கழக படிப்பிற்கு உதவி வந்திருக்கின்றார்.

அதை விட சிறுவர்களுக்கான உதவிகளையும் செய்து வந்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்... ஏனோ, நல்லவர்களை இறைவன் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ விடுவதில்லை.

இளவயதிலேயே மிகவும் பொறுமைகொண்டவர். புன்னகையே தனது ஆயுதமாக கொண்டவர்.

இவரது உடல் விதைக்கப்பட்டபொழுது அங்கு பேசிய இவரது மனைவியார் தனக்கு மூன்று தோழர்களே உள்ளதாயும் எவ்வாறு நீங்கள் பல நூறு உறவுகளுடன் - நண்பர்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்கள்? எனக்கேட்டதற்கு தனக்கே உரிய பாணியில் புன்முறுவல் பூத்ததாயும் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.