Jump to content

நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு


Recommended Posts

நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு

நேசக்கரம் ஆதரவில் நேசம் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பயிற்சி நெறியின் முதல் உற்பத்தியாக நேசம் சாம்பிராணிக்குச்சி தயாரிப்பு பயிற்சி வகுப்பு 28.05.2012 திருக்கோவில் அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் இப்பயிற்சிப் பட்டைறையில் கலந்து கொண்டனர். ஒருநாள் பயிற்சி நெறியாக நடைபெற்ற பயிற்சியைப் பெற்ற 11பெண்களுக்கும் பயிற்சிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

s5.jpg

இந்நிகழ்வின் நிறைவில் சான்றிதழ்களை முன்னாள் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் வழங்கினார். வழக்கறிஞர் பிறேம்நாத் சிறப்பரையோடு நிகழ்வு நிறைவாகியது.

நேசம் உற்பத்திகளின் அடுத்த கட்டமாக பயிற்சிபெற்ற 11பெண்களையும் நேசம் சாம்பிராணி உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவினை வழங்க நேசக்கரம் முயற்சிகளை மேற்கொள்கிறது. இவ்வுற்பத்தியினை விரிவாக்கம் செய்ய ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடம் வேண்டுகிறோம்.

நேசம் உற்பத்திகளை ஊக்குவிக்கும் ஆதரவாளர்களின் உதவியைப் பொறுத்து போரால் பாதிக்கப்பட்ட இதர இடங்களுக்கும் பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பில் நேசம் உற்பத்திகள் விரிவாக்கம் அடையும்.

நேசம் உற்பத்திகளின் வளர்ச்சியும் வருமானமும் யுத்தத்தால் பாதிப்புற்றவர்களுக்கு 75சதவிகிதம் கொடுப்பனவாகவும் 25சதவிகிதம் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத மாணவர்களின் கல்விக்காகவும் செலவிடப்படும்.

3மாதங்களுக்கு ஒருமுறை நேசம் உற்பத்திகளின் வரவு செலவு இலாபம் பயனாளிகளின் பயன்கள் ஆகிய சகல தரவுகளும் நேசக்கரம் கணக்கறிக்கைகள் போல வெளிப்படையாக எமது நேசக்கரம் இணையத்தில் வெளியிடப்படும்.

நேசம் சாம்பிராணி உற்பத்தி பயிற்சிக்கான செலவு விபரம்:-

1) சாம்பிராணி குச்சிகளுக்கான உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு – 7500,00 /=Rs

2) பொருட்கள் கொள்வனவு போக்குவரத்துச் செலவு – 500,00/=Rs

3) பயிற்சியாசிரியருக்கான கொடுப்பனவு – 2000,00/=Rs

4) பயிற்சியில் கலந்து கொண்ட 11பேருக்குமான காலையுணவு குடிபானம் – 1200,00/=Rs

5) மதியஉணவு – 1100,00/=Rs

மொத்தச்செலவு – 12300,00/=Rs இலங்கை ரூபா (அண்ணளவாக 75,00€)

இம்முயற்சிக்கான முதலீடு ஆதரவினை புலம்பெயர் உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆதரவே எங்கள் உறவுகளுக்கான ஆதாரம்.

விபரங்களைப் பெற்றுக் கொள்ள உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

s4.jpg

s3.jpg

s8.jpg

s10.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செயற்பாடுகளை

முன்னெடுக்கும் நேசக்கரத்திட்கு

சிறியோனின் பாராட்டுகளும் நன்றிகளும்.

லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்திற்கு மனமார்ந்த நன்றி..நல்ல முயற்சி.பாதிக்கட்டவர்கள் மேலும்,உடல்,உள ரீதியாக தங்களை வருத்திக் கொள்ளாமல் சுயமாகவே தொழில் படுவதற்கும்,தங்களை முன்னேற்றிக் கொள்வற்கும் நல்ல சந்தர்ப்பம்..வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாங்கி கொழுத்தினா வாசனை வருமா

அக்கா .. உங்கட பூஜை அறையில் வாங்கி கொளுத்தி பாருங்கோ .. அப்பத்தான் பூஜை வேலைய ஆரம்பிக்கிற மூடே வரும்.. வருகிற கடவுளர்களும் உங்கட பூஜைய பார்த்து ஒரு முழு திருப்தி அடைந்து போவார்கள்...இத்தனை நாள் வராது இருந்த கடவுளர்களும் உங்கட வீடு தேடி வருவார்கள்...

டிஸ்கி:

உள்ளடி ஒன்று:

என்னை வாங்கிவிட்டீர்களா என கேட்காதீர்கள்.. செஞ்சிக்கும் இலங்கைக்கும் நேரடி டிரேஸ்போர்ட் இல்லை.. வந்தால் வாங்குவன்..

உள்ளடி இரண்டு:

இலங்கை தயாரிப்புகள் இங்கிட்டு வருதோ இல்லை ....கட்டாயம் வெளிநாடுகளுக்கு வரும் வாங்கி பூஜை அறையை நறுமணம் தவழ விடுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் ஓய்ந்துவிடாமல் எம் உறவுகளுக்கு கரம் கொடுக்க வேண்டும்.....சாந்தி அக்கா அப்பப்ப ஓய் வெடுங்கோ...இல்லா உங்களுக்கு உளவியல் சிகிச்சை செய்யவேண்டிவரும்....;இது மெண்டலி சலஞ் ஆன ஜொப்...

Link to comment
Share on other sites

வாசனை வருகுதோ இல்லையோ, அந்த பெண்களுக்கு வயிற்றைக் கழுவ ஒரு வேளை கஞ்சிக்காவது வருமானம் வரும்.

இது கேவலமான கைத்தொழில், இதைவிட எங்களால் நன்றாகச் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அந்த அபலைகளுக்கு புறியாணிப் பொட்டலம் வாங்கிக் கொடுங்கள். அல்லது நீங்கள் வெலை செய்யும் Silicon valley ' யில் Executive Director பதவியாவது போட்டுக் கொடுங்கள்.

சீனாவும் இந்தியாவும் சிறிய கைத்தொழில்களை அடிப்படையாக வைத்துத்தான் இன்று முன்னேறியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் முயற்சிகள், பாராட்டுக்குரியவை!

சிறிது, சிறிதாகவேனும் உருப்படியாக, ஒரு செயலைச் செய்து முடிக்கும், நேசக்கரத்துக்குப் பாராட்டுக்கள்!

என்னாலான உதவிகள், உங்களுக்குக் கட்டாயம் உண்டு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முயற்சி..

Link to comment
Share on other sites

இது சாம்பிராணியா அல்லது ஊதுபத்தியா? தூளாக நெருப்பினுள் போடுவதுதானே சாம்பிராணி? குச்சியில் புகைவருவது ஊதுபத்திதானே?

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி சாந்தி அக்கா, வாழ்த்துக்கள். நேசம் உற்பத்திகள் வளர்ந்து வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஆக்கபூர்வமான நேசக்கரத்தின் முயற்சிகளுக்கு நன்றிகள்..! ஒரு சிறு இடைவெளி.. சிறிது நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உதவ முடியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சாம்பிராணியா அல்லது ஊதுபத்தியா? தூளாக நெருப்பினுள் போடுவதுதானே சாம்பிராணி? குச்சியில் புகைவருவது ஊதுபத்திதானே?

நீங்கள் கூறுவது சரியே, கலைஞன்!

ஆனாலும் பேச்சு வழக்கில், ஊது பத்திகளையும், சாம்பிறானிக் குச்சிகள் என்று அழைப்பதுண்டு!

சாம்பிராணி, ஒரு மரத்தின் பிசினில் இருந்து, இயற்கையாகக் கிடைப்பது!

ஊது பத்தி, மரத்தூளுடன், மற்றும் வாசனைப் பொருட்களைச் சேர்த்துத் தயாரிக்கப் படுவதாகும்!

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா உங்கள் அயராத உழைப்பின் பலன் அம்மக்களுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க முயற்சி. உற்பத்தியின் தரம்.. சுகாதாரம்.. உடல் நலனத்திற்கான அதன் பாதிப்பு.. மக்களின் தேவை.. இவற்றை கருத்தில் கொண்டு ஏற்றுமதி தரத்திற்கு இவற்றை உற்பத்தி செய்தால்.. நல்ல வருவாய் எட்டலாம்..! உள்ளூர் தரத்திற்கு இவற்றை உற்பத்தி செய்வதால் பெரிய இலாபமீட்டும் தொழிலாக இது அமையாது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தின் முயற்சிகள், பாராட்டுக்குரியவை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி "

இதை நான் தப்பாக புரிந்து கொள்கிறேனோ தெரியவில்லை.

இதில் சாம்ப்ராணி தயாரிக்கும் பயிற்சி முடிவடைந்துள்ளது என்று மட்டுமே உள்ளது.

இந்த பயிட்சியை முடித்தவர்களுக்கு இதனால் வேலை வைப்பு இருக்கிறதா?

இந்த பட்டறை இனி சம்பராணி தயாரிப்பில் ஈடுமடுமா என்பது நீங்கள் இணைத்த செய்தியில் இல்லை.

மிகவும் நல்ல முயற்சியாகவே தெரிகின்றது.........

(உங்களுடைய கடின உழைப்பின் வியர்வை துளிகள் உங்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி செய்தால் நல்லாய் இருக்கும் இப்படி செய்தால் நல்லாய் இருக்கும் என்று கற்பனை செய்து எழுதுவது சுலபம். அதை நிஜ வடிவில் கொடுப்பதே இப்போதைய தேவை. உங்களுடைய எதிர்கால சிந்தனைகளுக்கு உதவலாம் என்பதால் இதை நீங்கள் உங்கள் எண்ணத்தில் எடுக்கலாம் என்பதால் எழுதுகிறேன்)

அதேநேரம் சாம்ப்ராணி என்பது ஏற்கனவே பல போட்டி நிறைந்த ஒரு பொருளாக இருக்கும்போது இதனால் எப்படி இலாபம் எட்ட முடியும்? பொதுவாகவே தமிழருடைய கீழ்த்தரமான புத்தி எது அரிதாக கிடைக்கவில்லையோ அதற்கே அதிகம் காசுகொடுத்து வாங்குவார்கள். ஊரில் வாழ்ந்தால் வெளிநாட்டு சவுக்காரம் வேண்டும். வெளிநாடு வந்தால் ஊரில் தயாராகும் மில்க் வைட் வேண்டும் என்று புளிச்சல் ஏவறை விடுபவர்களே தமிழர்கள். இந்த சாம்ப்ராணி சந்தையை தமிழரிடமே எதிர்பார்த்துக்கொண்டு ஏற்கனவே உள்ள போட்டிகளை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு தேவையான நவீன பொருள் உற்பத்தி போட்டியை முறியடிக்கும் நவீன விளம்பரம் போன்றவை தேவையாய் இருக்கும். அதிலும் ஐம்பது வீத நம்பிக்கையே வைக்க முடியும்.

உங்களுடைய தொடர்ச்சியான செயல்வடிவங்களுக்கு நல்ல மனது நல்ல எண்ணம் கொண்ட அகூதா (யாழ் உறுப்பினர்) போன்ற நபர்களுடன் உரையாடி தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் எடுத்து அதன் ஊடக உங்கள் எண்ணங்களை வடிவமைக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான எண்ணமாக இருக்கிறது.

அரைச்ச மாவையே திருப்பி திருப்பி அரைப்பதால் எந்த பலனும் இல்லை. உங்களுடைய ஓவரு மணித்துளியும் எதோ உயர்வான செயற்பாடுகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

(டைம் இஸ் மோனே) நேரம்தான் பணம் இதை இங்கிருக்கும் அனேக தமிழர்களே இன்னும் புரியவில்லை அங்கிருப்பவர்கள் அதை புரிய அதிக நாட்கள் தேவை. அதை புரிந்த நீங்கள் உங்களுடைய நேரத்தையும் அவர்களுடையா நேரத்தையும் வீணடிக்க கூடாது.

சாத்திரி அண்ணா போன்றவர்களுக்கு இந்தியாவில் அதிக தொடர்புகள் உண்டு அவர்கள் மூலம் இந்தியாவில் இருந்து மலிவு விலையில் சேலைகள் உடைகளை வாங்கி .......... அங்குள்ள பெண்களுக்கு விட்பனை நுட்பங்களை பயிற்ருவித்து அதன் மூலம் ஒரு வருவாயை எட்டுவதற்கு முயற்சிக்கலாம். இங்கிருந்து கிடைக்கும் பணங்களை அதே பணமாக அங்கே கொண்டுசெல்வதை தவிர்த்து அங்கே தேவையான வருவாய் தரக்கூடிய விற்பனை பொருட்களாக கொண்டு செல்லலாம்.

அங்கே சொல்லிட பேசியின் பாவனை அதிகமாக உள்ளது...........

இங்கே பாவித்த செல்போனை மலிவு விலையில் கொளவனவு செய்து அல்லது ஒரு உதவிகரம் தாருங்கள் என்று இனாமாக பெற்று அங்கே சிறிய இலாபத்தை கொடுக்க கூடிய விலையில் விற்பனை செய்யலாம்.

அங்கே மோட்டார் சயிக்கிளின் பாவனை அதிகரித்துள்ளது........

அதுபற்றிய (மெக்கானிக்) திருத்துனர் கல்வியை சிலருக்கு கற்று கொடுத்து பாழான சில சையிக்கிளையும் அவர்களுக்கு வாங்கி கொடுத்தால்........ அதில் இருக்கும் நல்ல பொருட்களை கழட்டி மற்றவர்களுடை நல்ல சயிக்குளுக்கு பூட்டி ஒரு மெக்கானிக் கடையை திறக்கலாம்.

Link to comment
Share on other sites

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நேசக்கரம் ஓய்ந்துவிடாமல் எம் உறவுகளுக்கு கரம் கொடுக்க வேண்டும்.....சாந்தி அக்கா அப்பப்ப ஓய் வெடுங்கோ...இல்லா உங்களுக்கு உளவியல் சிகிச்சை செய்யவேண்டிவரும்....;இது மெண்டலி சலஞ் ஆன ஜொப்...

சுபேஸ், ஆரம்பத்தில் தாயகத்துக்குள்ளிருந்துதான் ஆதரவுதாருங்கள் என்ற குரல்கள் வந்து கொண்டிருந்தது. இப்போது ஆசிய மூலைகளிலிருந்தும் ஆபிரிக்கத் தெருக்களிலிருந்தும் ஆதரவு தாருங்களென்ற குரல்கள் ஓயாது அழைத்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு பெரிய சுமை வந்து அழுத்துமென ஆரம்பத்தில் நினைக்கவேயில்லை. இப்போது இதெல்லாம் வேண்டாம் ஒதுங்குவோமென்றாலும் நாடுநாடாய் அலைகிற போராளிகளதும் அவர்களது குடும்பங்களதும் குரல்கள் ஒருவகையில் மனநோயாக்கியேவிட்டது. இன்னொரு பத்துப்பேர் இதில் தோழ் தந்தால் சேர்ந்து சுமக்கலாம்.

என்னை வாங்கிவிட்டீர்களா என கேட்காதீர்கள்.. செஞ்சிக்கும் இலங்கைக்கும் நேரடி டிரேஸ்போர்ட் இல்லை.. வந்தால் வாங்குவன்..

புரட்சி பொறுத்திருங்கள் நீண்டகனவோடு ஆரம்பித்துள்ள முயற்சியின் வெற்றியை எட்டும் போது உங்கள் நாட்டிற்கும் வரும்.

சீனாவும் இந்தியாவும் சிறிய கைத்தொழில்களை அடிப்படையாக வைத்துத்தான் இன்று முன்னேறியுள்ளார்கள்.

நேசம் நேற்றுத்தான் குழந்தையாய் பிறந்திருக்கிறது. சிறு கைத்தொழில்கள் பலவற்றுக்கான முயற்சிகள் திட்டங்கள் கையில் இருக்கிறது முதலீடு இல்லை.இச்சிறு முயற்சிக்கு முதலீடு செய்யும் கருணையாளர்களை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

வரவேற்கத்தக்க முயற்சி. உற்பத்தியின் தரம்.. சுகாதாரம்.. உடல் நலனத்திற்கான அதன் பாதிப்பு.. மக்களின் தேவை.. இவற்றை கருத்தில் கொண்டு ஏற்றுமதி தரத்திற்கு இவற்றை உற்பத்தி செய்தால்.. நல்ல வருவாய் எட்டலாம்..! உள்ளூர் தரத்திற்கு இவற்றை உற்பத்தி செய்வதால் பெரிய இலாபமீட்டும் தொழிலாக இது அமையாது. :icon_idea:

2மாத திட்டமிடல் 25பேரை உள்ளடக்கிய பயிற்சியை ஆரம்பிக்க எடுத்த முயற்சிக்கு பயிற்சிக்கான பணம் கிடைக்கவில்லை. இதுபற்றி உங்கள் திரியொன்றிலும் குறிப்பிட்டிருந்தேன். பண ஆதரவில்லாமல் நாட்கள் கடந்த நிலமையில் இம்முறையும் சொந்தச் செலவில் சூனியம் வைத்தே இதனை ஆரம்பித்துள்ளேன்.

நீங்கள் குறிப்பிடுவது போன்று சுகாதாரம் பாதுகாப்பு சந்தைப்படுத்தல் யாவையும் திட்டமிட்டு இதுவொரு பெரிய கனவோடு துளிர்த்திருக்கிறது. வெளிநாடுகளுக்கு அதாவது தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய தரத்திலேயே இத்தயாரிப்பு செய்யப்படுகிறது. மற்றும் இதன் வருவாயும் பயன்தரக்கூடிய வகையிலான திட்டமிடல்களோடுதான் ஆரம்பமாகியுள்ளது. உள்ளுரில் சாம்பிராணிக்குச்சிகள் அதிகம் பயன்படுத்துவது முழுவதும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுபவைதான். எம்மவர்களுக்கு இதனை அறிமுகம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு சந்தைப்படுத்தலில் வெற்றியைப் பெறுவோம் என இப்பயிற்சியைப் பெற்றவர்களில் சிலர் முன்வந்து சந்தைப்படுத்தல் பரப்புரையை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.

தற்போது பண உதவி கிடைத்தால் நாளையே இச்சிறு கைத்தொழிலை ஆரம்பிக்க முடியும். பயிற்சி பெற்றவர்கள் நேற்று கேட்டிருந்தார்கள். 1ம் திகதியிலிருந்து நாளுக்கு 15ஆயிரம் ரூபாவிற்கான சாம்பிராணிக்குச்சிகளை தயாரிக்க தமக்கு பண உதவி தருமாறு. சற்று பொறுங்கள் என அவர்களிடம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

சிறிது சிறிதாக நீங்கள் ஒவ்வொருவரும் முதலீடு செய்தால் அடுத்த ஆறுமாதத்தில் இந்தப் 11பெண்கள் பெரு வளர்ச்சியடைவார்கள்.

"நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி "

இதை நான் தப்பாக புரிந்து கொள்கிறேனோ தெரியவில்லை.

இதில் சாம்ப்ராணி தயாரிக்கும் பயிற்சி முடிவடைந்துள்ளது என்று மட்டுமே உள்ளது.

இந்த பயிட்சியை முடித்தவர்களுக்கு இதனால் வேலை வைப்பு இருக்கிறதா?

இந்த பட்டறை இனி சம்பராணி தயாரிப்பில் ஈடுமடுமா என்பது நீங்கள் இணைத்த செய்தியில் இல்லை.

நேசம் உற்பத்திகளின் அடுத்த கட்டமாக பயிற்சிபெற்ற 11பெண்களையும் நேசம் சாம்பிராணி உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவினை வழங்க நேசக்கரம் முயற்சிகளை மேற்கொள்கிறது. இவ்வுற்பத்தியினை விரிவாக்கம் செய்ய ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடம் வேண்டுகிறோம்.

பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொழிலாக மேற்கொள்ள பயிற்சிபெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பாக இதனை வழங்க பொருளாதார உதவி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக்கபூர்வமான நேசக்கரத்தின் முயற்சிகளுக்கு நன்றிகள்..! ஒரு சிறு இடைவெளி.. சிறிது நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உதவ முடியும்..

இதே நிலை தான் எனக்கும் ஜூலை மாதத்தின் பின் சிறுபங்களிப்பேனும் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

வெறும் வாய்ச்சவடால் விடும் எம்மவர்க்கு மத்தியில் நேசக்கரம் சிறு துரும்பையாவது அசைக்கிறது.

வாழ்த்துக்கள். இந்த முயற்சி நிச்சயம் வெற்றிபெறும்.

Link to comment
Share on other sites

இதே நிலை தான் எனக்கும் ஜூலை மாதத்தின் பின் சிறுபங்களிப்பேனும் செய்ய முடியும்.

ஜீவா, அவசரமான உயிர்காப்பு முயற்சிகளில் நீங்கள் ஏற்கனவே செய்த உதவிகள் பெரியவை. அவசரமில்லை உங்கள் பணிகளை கவனியுங்கள் முதலில். உங்களால் முடிகிற நேரத்தில் ஆதரவைத் தாருங்கள்.

ஆக்கபூர்வமான நேசக்கரத்தின் முயற்சிகளுக்கு நன்றிகள்..! ஒரு சிறு இடைவெளி.. சிறிது நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உதவ முடியும்..

ஏற்கனவே பலமுறை உதவியிருக்கிறீங்கள் இசை. அந்த உதவிகள் காலத்தே நீங்கள் செய்த அவசர உதவிகள். அவற்றின் பலன் பலரை வாழ வைத்திருக்கிறது. உங்கள் பணிகள் கடமைகளை முடித்துக் கொண்டு வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]   "காதல் தந்தாய்  காத்திருந்தேன் நாள் முழுவதும்! வேதனை படுத்தி  சோதனை செய்யவா  எங்கு சென்றாய்?" "அழகிய உடல்  ஆனந்தம் தந்தது!  அருகில் இல்லாமல்  தூர விலகினாயே   எங்கு சென்றாய்?"    "கொஞ்சும் பேச்சில்  நெஞ்சைப் பறித்தவளே!   வஞ்சக மனத்துடன்  கஞ்சத்தனம் வேண்டாம்     எங்கு சென்றாய்?"  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • 40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம் லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று  மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.  கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலக பிரிவு சுமார் 39,000 சனத்தொகையையும் 29 கிராம சேவகர்  பிரிவுகளையும் 06 பாரம்பரிய தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச செயலகம். இந்நிர்வாக அலகானது 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 93/600/034 இலக்க 93.03.17 திகதிய, 93/600/034(1) இலக்க 93.03.31 திகதிய அமைச்சரவை மசோதாக்கள் மற்றும் 93.07.09ஆம் திகதிய அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 93.07.28ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. அதனடிப்படையில், தனியானதொரு பிரதேச செயலக பிரிவாக 30 வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்றது. கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.  தற்போது கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் உப அலுவலகமாக தரமிறக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. அந்தவகையில்தான்  கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப் பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல.   2002இல் உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006இல் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க முடியுமாயின், 34 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்தும் வெளிவருகிறது.  உண்ணா விரதங்களையும், போராட்டங்களையும் நடத்தியதுடன், பல்வேறு நிருவாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும், இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தினார். கோட்டபாய அரசாங்கத்தில் அவரினால் கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்திக் கொடுக்க முடியவில்லை. 2019இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபொழுது ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு தரம் உயரும் என்று முழக்கமிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ போய்  இப்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கிறார். வியாழேந்திரன் அமைச்சராக இப்போதும் இருக்கிறார். அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்து அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து பிரதி அமைச்சரான கருணா எனும் வி.முரளிதரன் கல்முனை விடயத்தில் பல உறுதிப்பாடுகளைக் கூறியிருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த தேர்தலில் கல்முனை தமிழ்ப் பிரிவினைத் தரமுயர்த்துவேன் என்ற தேர்தல் அறைகூவலுடனேயே போட்டியிட்டார். அவரது இந்த உறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்பாறைக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவமே இல்லாமல் போனது. கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான துருப்புச் சீட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர் அரசியலில் அரசுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதான் வரலாறு. இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர் ஆளும் கட்சியென்று மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்குத் தமிழ்த் தேசியத் தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு நில அளவை செய்து கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.  கிராமங்களின் வீதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.  தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம் தற்போது இஸ்லாமாபாத் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன. நாட்டில் இருக்கின்ற நிருவாக நடைமுறைக்கு மாறாக இப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடி நடைபெறுவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது மிகக் குறைவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகப் பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்ற போதும், 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாகவே இருந்துவருகிறது. இது.  அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கவலைக்குள்ளாகும் செயலாகும். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993 முதல் இற்றை வரை உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதி வளம் அற்றதாக இயங்கும் இந்த பிரதேச செயலகத்திற்குக் கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. சாண் ஏற முழம் சறுக்கும் தமிழர் அரசியலில் சாத்தியங்கள் கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை நாட்டில் ஏற்பட்ட ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்டர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக் குழப்பம் உள்ளிட்ட பல அதனைக் குழப்பியடித்தது. ஏற்கெனவே 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர் பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்று. கல்முனை தமிழ்ப் பிரிவு 34 வருடங்களைத் தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். காலத்தையும் கடத்துகிறார்கள். மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தினைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை. அந்தவகையில்,   கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகவே அமைந்திருக்கிறது. இன விரோதம் வலுத்தேவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் கல்முனையில் உருவாகியிருக்கின்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டுத் தடுக்கப்படுவது கவலையானதே. இவ்வாறான சம்பவங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும்.  அடிக்கடி ஒரு பொரி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர் தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதும்தான் தமிழ் மக்களின் நிலைப்பாடு. ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று   பொது வெளியில் பேசிக்கொண்டு உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே அனைவருடையதும் கனவு நிலைப்பாடாகும். இலங்கையில் இனப் பிரச்சினை உருவான வேளை, சிறுபான்மை, தமிழ் என்றிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் காலப்போக்கில் பிரிந்து இரு துருவங்களானார்கள். அதன் பின்னர் தமிழ் பேசும் என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள். முயற்சி செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனைத் தமிழ்ப் பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/40-வருடங்களாக-உரிமை-மறுக்கப்படும்-பிரதேச-செயலகம்/91-336332
    • புதியன புகுதலே வாழ்வு! ***************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிசு எனிவரும் நாட்களும் புதிசு புதிதே!   பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும்   சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்த்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வு கதைகள் சொல்வதும்   இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு-இவைகள் எல்லாம்  வெறும் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை... இவர்களின் வாழ்வோ எனி வரப்போவதில்லை   பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே  மாறிற்று.   பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால் பயனொன்றுமில்லை பரிதாப வாழ்வே! புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே புதுமைகள் பார்த்து  மகிழ்வோடு வாழலாம்.   அன்புடன் -பசுவூர்க்கோபி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.