Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைகள் கட்ட பட்ட நிலையில் அழைத்துச்செல்லப்படும் ஆண் பெண் போராளிகளின் படங்கள்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தம் இடம் பெற்ற வேளையில் சிங்கள படைகளினால் கைது செய்யபட்டு

சித்திர வதைகளுக்கு உட்படுத்த பட்ட போராளிகளின் அதிர்ச்சி படங்கள் .

இதில் உள்ள போராளிகளை உடன் அடையாளம் காட்டு வண்ணம் உலக தமிழ் மக்களிடம்

மன்றாடி கேட்டு கொள்கின்றோம் .

தெரிந்தவர்கள் உடனடியாக எமக்கு தெரிவிக்கும் படி வேண்டி கொள்கின்றோம் .

165864_371655546229121_516537834_n.jpg

601057_371653072896035_1847312470_n.jpg

543164_371648629563146_2030168000_n.jpg

182098_371634306231245_1324188397_n.jpg

319826_371633866231289_1484527659_n.jpg

553469_371632279564781_1795074671_n.jpg

246520_371631272898215_1312905630_n.jpg

283659_371630596231616_812778057_n.jpg

598591_371630026231673_462050126_n.jpg

251926_371629459565063_1856527379_n.jpg

599438_371628612898481_2120780391_n.jpg

547500_371627642898578_1079392633_n.jpg

487094_371626989565310_709298334_n.jpg

521525_371624302898912_51203689_n.jpg

Edited by சுபேஸ்

இந்த செய்தியையும் இதில் உள்ள படங்களையும் பார்க்கும்பொழுது மனத்தில் பலநூறு எண்ணங்கள் ஓடி இறுதியில் தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று மட்டுமே நியாயமான தீர்வாக அமைய முடியும் என்பதை கூறி நிற்கின்றது.

மனதுக்கு வேதனையாக உள்ளது இவர்களை நினைத்துப் பார்க்கும் பொழுது நிம்மதி இழந்த வாழ்க்கை கடவுளே.

மெதுவாக ஆரம்பித்த அதிர்வு உடம்பெல்லாம் ஊருவுகின்றது. அவர்களின் கண்களைப் பாருங்கள்.. வெறுமையும் இயலாமையும் தவிப்புமாய்...ஐயோ எம் பிள்ளைகள் எனும் கதறல் ஒரு புள்ளியாக தொடங்கி ஓலமாய் மனதுக்குள் பெருங்குரலெடுத்து ஓடுகின்றது

akootha

இந்த செய்தியையும் இதில் உள்ள படங்களையும் பார்க்கும்பொழுது மனத்தில் பலநூறு எண்ணங்கள் ஓடி இறுதியில் தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று மட்டுமே நியாயமான தீர்வாக அமைய முடியும் என்பதை கூறி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எம் உடன் பிறவாத சகோதரங்களின் நிலை கொடுமையிலும்,கொடுமை என்பதை இந்தப் படங்கள் சொல்லிச் செல்கின்றன...இனிப் பல இரவுகள் சிவராத்திரி தான் என் கண்களுக்குள் இந்தக் காட்சிகள் தான் வந்து,வந்து போகப் போகிறது..

ஒரு புறம் கவலை மறுபுறம் ஆத்திரம். எமக்காக போராடப் புறப்பட்டதை விட இவர்கள் வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் கண்கள் இயலாமை,ஏக்கம்,விரக்தி போன்ற ஆயிரம் வார்த்தைகள் பேசுகின்றன.உண்மையில் இறந்த போராளிகளின் உடல்களை பார்ப்பதை விட இவர்களை பார்ப்பதே கொடுமையானது.

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமை கண்களின் ஒளியிழந்த மையத்தில்

கொடுமை இது அல்ல கோரம் நடந்தது எனப்

பொதுமையில் கூற முடியவில்லை

இழந்தவர்கள் நாம் எதையும் இனி எம்மிடம்

இழப்பதற்கு ஒன்றுமில்லை எம் உயிரைத்தவிர

சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்களைக் காப்பாற்ற முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் மக்காள்.

இனியொரு பிறப்பிருந்தால் கேடுகெட்ட சுயநலத் தமிழனாய்ப் பிறக்காதீர்கள்.

விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, இவற்றை செய்தவர்கள் தண்டிக்க படவேண்டும். இன அழிப்பு, போர்குற்ற விசாரணை நடந்தேயாக வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவா? ஏன் என்னை தமிழனாக படைத்தாய்?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ரத்தம் துடிக்கணும்.... சும்மா இங்கிட்டு கவிதை... கண்ணீர் அஞ்சலி எழுதி கொண்டிருந்தால் விளங்கிடும்.. சர்வதேச விசாரணை தேவை அதற்கு... அல்லகை சுமந்திர கோஸ்ரிகளை முதலில் விரட்டியடிக்க வேணும்...

டிஸ்கி:

அவுங்க கஸ்டபடுகிறார்கள் என்றால் அல்லகைஸ் இவர்கள் கண்ணீர் வடிக்கிறார்களா..? போட்டுவிட்டார்கள் .. சரி .. எதிரி போடத்தான் செய்வான்.. தமிழினி வழக்கு இன்னும் நடந்து கொண்டுதானெ இருக்கு.. கூத்தமைப்பு அவர்கள் சார்பில் எந்த குரலையும் எழுப்ப இல்லை <_< <_< இவுங்க ஓசில சுதந்திரம் யாராவது வாங்கி கொடுத்தால் ஆள்ற ....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ என்னால் எதுவும் எழுத முடியவில்லை கண்கள் முட்டி குளமாகிறது மனம் பாரமாகின்றது உடல் பதபதக்கிறது என்னால் எழுத முடியவில்லை ....

நித்திரை கொள்ள போனாலும் இவர்களின் முகம்தான் வந்துவந்து போகின்றது ......

எவ்வளவோ போராளிகளை போரில் இழந்தபோது கவலைக்கு பதிலாக அவர்களின் வீரம் தெரிந்தது ஆனால் இவர்களைப்பார்க்கும்போது கவலைதான் வருகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கண்கள், உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை, அப்படியே காட்டுகின்றன!

இயல்பு நீதி, தனது கடமையைச் செய்யும் வரை, எம்மால் முடிந்த அவ்வளவையும் செய்வோம்!

குற்றவாளிகள்,நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ எழுதவேண்டுமென்பதற்காக எழுதவில்லை....கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவனை அவமானப்படுத்தி கலைத்த அந்த சந்தோசம் தன்னும் சில வினாடிகள் கூட நிலைக்காத வேதனை மிகுந்து ஒவ்வொரு கணமும் சென்றுகொண்டிருக்கிறது..... கண்களில் நீர் குளம் குளமாக......

சக நண்பர்களின் வித்துடல்கள் அருகில் கிடக்க, விலங்கிடப்பட்ட நிலையில் அவர்கள் கண்கள் சொல்லும் கதைகள்.....ஐயையோ முடியவில்லை....

நிழலி, akootha குறிப்பிட்டதைப் போல மனதை வாட்டும் சோகம் சொல்ல வார்த்தையில்லை. யாயினி சொன்னதைப் போல இனி பல நாட்கள் நித்திரையில்லை.....

முள்ளிவாய்க்கால் தருணங்களில் எனக்கு தெரிந்தவர்களில் மட்டும் எத்தனையோ குடும்பங்கள், தெரியாதவர்களில் எத்தனை ஆயிரமோ தெரியாது... தமிழர்களில் பலர் தாங்கள் தொலைக்காட்சி பார்க்கவில்லை, பார்க்கமுடியவில்லை இந்தக் கொடுமைகளை என்று சொல்லிவிட்டு தமது அன்றாட வாழ்க்கையில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்த படியால் இன்றுவரை எமது உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை யாரும் சொல்லமட்டுமே கேட்டுவிட்டு சென்றபடியால் இன்றுவரை எந்தப் போராட்டங்களிலோ கவனயீர்ப்புக்கலிலோ பங்குபற்றாமல் தாமுண்டு தம் வாழ்வுண்டு என்றே இருந்துகொண்டிருக்கிறார்கள்... இதனால் தான் இன்றுவரை எமது எந்த முயற்சிகளும் முழுவீச்சில் நடைபெறாமல் தாமதப்பட்டுக்கொண்டிருக்கிறது...

இந்தக்கொடுமைகளை நாம் யாரும் விரும்பிப் பார்க்கவில்லை.... எமக்கு நடந்த கொடுமைகளை நாம் எந்தெந்த வழிகளில் எங்களுக்கு தெரிய வருகிறதோ அந்தந்த வழிகளில் நாம் பார்த்தோ, கேட்டோ தெரிந்து கொள்ளும் போது எமது மனம் சோகத்தின் உச்சிக்குப் போகும் அந்த சோகத்தின் உச்சம் ஒரு நிலையில் இந்தக் கொடுமைகளைப் புரிந்தவர்களை நோக்கிய ஆத்திரமாக மாறி அதுவே எதிரியை நோக்கிய கோவமாக உருவெடுக்கும், அந்தக் கோவமே எதிரியை நோக்கிய எமது போராட்ட செயற்பாடுகளில் எம்மை முழுவீச்சுடன் இயங்க வைக்கும்....எதிரிக்கு பல வழிகளிலும் தோல்வியத் தரும்...

சிரியாவில் சில ஆயிரம் பேர் இறந்ததற்கே எல்லா வழிகளிலும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் மேற்குலகம் எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கான எத்தனை சாட்சியங்களைக் கண்டுகொண்டும் கூட இன்னமும் மெளனம் காப்பது எங்களுக்கான நீதி என்றுமே கிடைக்காதா என்ற கேள்விகளை மனதில் தோற்றுவித்துள்ளது....

இவைகள் பார்வைக்கான படங்களல்ல. இப்படிப்பட்டவைகள் யுத்தக் குற்றத்திற்காக குரல் கொடுக்கக் கூடிய சனல் 4 போன்ற ஊடகங்களுக்குக் கிடைக்கும்படி செய்க. மேலும் தமிழ் நாட்டு அரசியலுக்கும் அனைத்து இந்திய மக்களின் பார்வைக்கும் கிடைக்கும்படி செய்க.

சிங்களம் வெல்லவில்லை தமிழன் தோத்தான் அதுதான் உண்மை .

சிங்களம் வெல்லவில்லை தமிழன் தோத்தான் அதுதான் உண்மை .

என்ன வித்தியாசம்?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்று ஒன்று இருந்தால் சரணடைதல் என்பது அகராதியிலேயே இருக்க கூடாது.

சரணடைந்தவர்களை வைத்து உளவியல் யுத்தத்தை தமிழர்கள் மீது சிங்களம் நடாத்துகிறது.

வெற்று உணர்வுகளால் பயனில்லை. இங்கு செய்தியும், படங்களும் மொட்டையாகத் தரப்பட்டுள்ளன. இவை வேறு இணையங்களிலும் உள்ளனவா? அல்லது யாழில் மட்டும் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளதா? இந்தச்செய்தியின் தோற்றுவாய் ஏது? குறிப்பிட்ட வழக்கறிஞரா? இதுபற்றி அவரின் நேரடியான தகவல் எவை? ஏதாவது ஊடக அறிக்கை தரப்பட்டுள்ளனவா? படங்களை மட்டும் பார்த்து ஊகத்தின் அடிப்படையில் கருத்து சொல்வதென்றால் பலவிதமான கோணங்களில் பார்க்கலாம். ஆனால், இங்கு ஆட்களை அடையாளம் காண்பது மட்டுமே நோக்கமாயின் தயவுசெய்து உங்கள் ஊகங்களை செய்தியாக்காதீர்கள்.

த.வி.புவிடம் இலங்கை இராணுவம் சரணடைந்தால் சொகுசு பஸ்ஸில் சுதந்திரமாக நடமாடும்வகையிலா அழைத்துச்செல்வார்கள்? கையிற்கு விலங்குபோட்டு கைதிகளை அழைத்துச்செல்வதை நீங்கள் முன்பு பார்த்தது இல்லையா?

போராட்டம் என்று ஒன்று இருந்தால் சரணடைதல் என்பது அகராதியிலேயே இருக்க கூடாது.

சரணடைந்தவர்களை வைத்து உளவியல் யுத்தத்தை தமிழர்கள் மீது சிங்களம் நடாத்துகிறது.

எனது கருத்தும் இது தான்!!

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்று ஒன்று இருந்தால் சரணடைதல் என்பது அகராதியிலேயே இருக்க கூடாது.

சரணடைந்தவர்களை வைத்து உளவியல் யுத்தத்தை தமிழர்கள் மீது சிங்களம் நடாத்துகிறது.

எனது கருத்தும் இது தான்!!

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிள்ளைகள் உண்மையில் சரணடைந்தார்களா?

அவர்கள், உண்மையிலேயே.... விடுதலைப் புலி உறுப்பினர்களா?

அவர்களின் உடை மடிப்புக் குலையாமல், விடுதலைப் புலிகளின் சீருடை அணிவிக்கப் பட்டுள்ளதையும், சிலருக்கு ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் உடை அணிவிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முள்ளிவாய்க்காலில், எஞ்சிய இளைஞர், யுவதிகளுக்கு சிங்களம் இந்த உடையை... அணிவித்து, தனது கெட்டிக்காரத்தனத்தை காட்டியிருக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.