Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேள்வி+பங்கிறைச்சி..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும்.

இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள்.

எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்சி வியாபாரம் செய்வதாக அம்மம்மா சொன்ன ஞாபகம்.

அவர் ஆடு அடிக்கும் பொழுது " பிள்ளை வார சனிக்கிழமை ஆடு அடிக்கிறோம் ஒரு பங்கு தரட்டோ"

(ஆட்டின் எல்லா பாகத்தையும் சமனாக எல்லோருக்கும் பங்கிட்டு கொடுப்பது __ ஆட்டிறைச்சியில் ஜனநாயகம்)

"மூளையையும்,குடலையும் போடாமல் எங்களுடைய பங்கை கொண்டுவாங்கோ"

"எத்தனை வருசமா உங்களுக்கு கொடுக்கின்றேன் உதை நீங்கள் எனக்கு சொல்ல வேணுமே பிள்ளை நான் பார்த்து பக்குமாக கொண்டு வந்து தருகிறன் "

சனிக்கிழமை பத்து மணியளவில் பனை ஒலையில் பார்சல் பண்ணி இறைச்சியை வீட்டை கொண்டு வந்து தந்திடுவார்.பனை ஒலையை கீழே உருட்டி ஒரு முடிச்சு போட்டு அதனுள்ளே இறைச்சியை போட்டு மேலே இன்னோரு முடிச்சு போடப்பட்டிருக்கும். இதைதான் பறி என அழைப்பார்கள் என் நினைக்கிறேன்.(இந்த தகவல் பிழையாகவும் இருக்ககூடும் யாராவது சரியான பெயர் தெரிந்தால் அறியத்தரவும்)

மாமாவும் , அப்பாவும் கள்ளு அடிச்சுபோட்டு 2 மணியளவில் சாப்பிட வருவினம்,சாப்பிடும் பொழுது இறைச்சி பற்றிய கருத்து தொடங்கிவிடும்.

"போனமுறையிலும் பார்க்க இந்த முறை இறைச்சி நல்லாய் இருக்கு" என்பார் அப்பா.

"அத்தான் எனக்கு என்னவோ நீங்கள் ஆனைக்கோட்டையிலிருந்து கொண்டு வந்த இறைச்சி இதை விட நல்லாய் இருந்தது"

"அது வேள்வி இறைச்சி ஆனபடியால்தான் அந்த ருசி, அதை நீ அடிச்ச ஆட்டிறைச்சியுடன் ஒப்பிட முடியாது"

"நான் கொழும்பில் இறைச்சி வாங்கிறதில்லை.செம்மறியையும்,மாட்டையும் கலந்து போடுவாங்கள் ஊர் சமான் போல வராது.அது சரி அக்கா போனமுறை கொழும்புக்கு போகும் பொழுது போத்தலில் கறி போட்டு தந்தீங்கள்"

"என்ன இந்த முறையும் போத்தலை உடைச்சுப்போட்டியே"

"சீ சீ இந்த தடவை வடிவாக பார்சல் பண்ணிதந்தனீங்கள் தானே ஆனால் கறி பெரிதாக எழும்பவில்லை"

"அது டவுனில் காக்கா கடையில வாங்கினது சில நேரம் அவன்களும் சுத்துமாத்து பண்ணி போடுவாங்கள்.அநேகமாக நல்லது தான் தருவாங்கள், பக்கத்து வீட்டு குகன் தான் வாங்கப்போனவன் சின்ன பெடியன் என்ற படியால் ஏமாத்தி போட்டாங்கள் போல கிடக்குது."

சாப்பாடு முடியமட்டும் இறைச்சியை பற்றிய கருத்து பகிரப்பட்டு கொண்டேயிருக்கும்.

அந்த வயசில இறைச்சியில் இவ்வளவு பாகுபாடு இருக்கு என எனக்கு விளங்கவில்லை என்னை பொறுத்தவரை அம்மா எந்த இறைச்சியை சமைத்தாலும் ஒரே ருசியாகத்தான் இருக்கும்.அது அம்மாவின் கை பக்குவம்.அவர் சமைத்த கறிக்கும் வேறு யாராவது சமைத்த கறிக்கும் வித்தியாசம் காணகூடியதாக இருக்கும் ஆனால் வேள்வி ,பங்கு, அடிச்ச ஆடு,காக்கா கடை இறைச்சிகறிகளுக்கு இடையே வித்தியாசம் காணுவது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இறைச்சியில் இவ்வளவு வேறுபாடு இருக்கே இதுகளை பற்றி ஆராச்சி செய்ய வேண்டும் என்று என்னுடை புத்திசாலித்தனம் அறிவுரை சொல்லிச்சு.அப்பாவிடம் கேட்டு அறியலாம் ,அவர் இறைச்சி வாங்கும் பொழுது நானும் போகவேண்டும் என தீர்மானித்து ஒருநாள் அப்பா விடம் கேட்டேன்.

"அப்பா அடுத்த முறை இறைச்சி வாங்கும் பொழுது நானும் வாரன்"

" சீ சீ நீ எல்லாம் அங்கு வரக்கூடாது "

"ஏன் அப்பா"

"பார்த்து பயந்து போய்விடுவாய்"

"எப்படி அப்பா ஆட்டை கொல செய்வினம்"

"அதுகளை பற்றி எல்லாம் உனக்கு தேவையில்லை இப்ப நீ போய் படிக்கிற வேலையை பார், அம்மா சமைக்கிற கறியை சாப்பிடு" என எச்சரித்தார்.

ஒருநாள் அப்பாவுடன் சைக்கிளில் டவுனுக்கு போக வேண்டி வந்திட்டுது. எனக்கும் மீசை எல்லாம் அரும்பி வயசுக்கு வந்திட்டன் என்ற ஆணவம் வரத் தொடங்கிட்டுது.அவர் என்னை முதல் முதலாக யாழ்ப்பாணத்தின் மத்தியிலிருந்த பழைய சந்தைக்கு அழைத்து சென்றார். (இந்த சந்தை சிங்கள பொலிஸ்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டு பின்பு இந்த இறைச்சிக்கடைகள் பண்ணைக்கு போற வழியில் கட்டியிருந்தார்கள்) சைக்கிள் தரிப்பிடத்தில் சைக்கிளை நிற்பாட்டி போட்டு உள்ளே போனேன்.ஒரு பகுதியில் மரக்கறி இன்னோரு பகுதியில் இறைச்சி கடை தொகுதி. கூலி வேலை செய்வோர்,முதலாளி மாரெல்லாம் ஐயா வாங்கோ ஒரே கத்திகொண்டு வாடிக்கையாளர்களை தம் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பா நேராக ஒன்பதாவது இறைச்சி கடை பக்கம் போனார் .அங்கே வாசலில் தொப்பி, வெள்ளை பெனியன், சாரம் உடுத்திய ஒரு வயதானவர்

"ஐயா வாங்கோ,எப்படி இருக்குறீங்க ,யார் மகனோ ,எத்தனை இறாத்தல் போட,"

இப்படியே கதைத்த படியே அடுத்த வடிக்கையாளரை பார்த்து ஐயா வாங்கோ.....

ஒரே இரத்தவாடை, கடையினுள்ளே ஆடுகள் தோல் உரிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.

"சவ்வுகளை போடாமல் நல்ல தொடை துண்டில வெட்டி நாலு இறாத்தல் போடுங் கோ"

"ஐயாவுக்கு அந்த"கிடா" வின்ட தொடையில வெட்டி போடு"

கத்தியை தீட்டி போட்டு உள்ள இருந்த தொழிலாளி இறைச்சியை வெட்டி பழைய செய்திபேப்பரில் சுத்தி பின்பு அதை மாட்டுத்தாள் பேப்பரில( சீமேந்து பை) சுத்தி தந்தார்.

" இவன் என்ட மகன் தான் அடுத்த முறை இவனை அனுப்புவன் நல்ல இறைச்சியா பார்த்து கொடுத்து விடுங்கோ"

"தம்பி கடையை வாடிவா பார்த்து கொள் ஒன்பதாம் நம்பர் "

நானும் தலையை ஆட்டிப்போட்டு இறைச்சியை வாங்கி ஒலை பைக்குள் போட்டு சைக்கிள் கைபிடிக்குள் கொழுவி சைக்கிளை ஸ்டார்ட் செய்தேன்...

ஒரு நாளைக்கு வேள்வி நடக்கும் இடத்துக்கு போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திட்டுது.

,"ஆனைகோட்டையில் வேள்வி நடக்குதாம், கனகு பங்கு போடுறானாம் நீயும் சொல்லி விட்டனியோ பிள்ளை" என பக்கத்து வீட்டு ஆச்சி அம்மாவிடம் கேட்க "போய் எடுக்க ஆள் இல்லை அதுதான் யோசிக்கிறேன் "

" குகன் போறான் அவனோட கண்ணனை ஆனுப்பிவிடன் இரண்டு பேருமாய் போய் எடுத்திட்டு வரட்டும்"

"அவன் சின்ன பெடியன் அதுகளை பார்த்து பயந்து போயிடுவான்."

"சும்மா அவனை பொத்தி பொத்தி வள சரி காசை தா குகனிடம் நான் சொல்லி எடுத்து தாரன் "

அம்மாவும் காசை கொடுத்துப்போட்டு வேறு அலுவல்கள் பார்க்க சென்றுவிட்டார்.

ஆனால் நான் அம்மாவுக்கு தெரியாமல் குகனுடன் வேள்வி நடக்கும் இடத்திற்க்கு போய்விட்டேன்.ஆனைக்கோட்டையில் சாவக்கட்டு என்ற ஊரில்தான் இந்த வேள்வி நடந்தது.

சிறு வைரவர் ஆலயத்திற்க்கு முன்னால் பெரிய சாக்கின் மேல் பனை ஒலையால் பின்னப்பட்ட பாய் இரண்டு போட்டு அதில் மலை போல் சோறு குவிக்கபட்டிருந்தது .அதன் மேல் இரண்டு மூன்று சிறிய ஆடுகள் தோல் உரித்து வாட்டி வைக்க்ப்பட்டிருந்தன.அதே போல் கோழிகள், அவித்த முட்டைகள் என்பனவும் படைக்கப்பட்டிருந்தன.

இவற்றுக்கு முன்னால் மிகவும் வாட்டசாட்டமான ஆசாமி கையில் கொடுவா கத்தியுடன் நெற்றியில் விபூதி சந்தனத்துடன் நின்றிருந்தார்.அவரின் கண்கள் நன்றாக சிவந்திருந்தது.கத்தியின் நுனியில் தேசிக்காய் குத்தியிருந்தது.

மக்கள் கூட்டமாக நின்றிருந்தபடியால் உள்ளே சென்று பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது . நான் ஒரு மாதிரி சுழிச்சுகொண்டு உள்நுழைந்து வேடிக்கை பார்த்தேன்.(அன்று நான் எனது கையடக்க தொலை பேசியை கொண்டு செல்ல மறந்து போனேன் ஆனபடியால்தான் உங்களுக்கு படம் காட்ட முடியாமல் போய்விட்டது....)

வேள்வி ஆசாமிக்கு ஐந்தாறு அடியாட்களும் உதவிக்கு நின்றிருந்தனர்.அவர்களும் உற்சாக பாணம் அடித்தது போல் உற்சாகமாகவே நின்றார்கள்.ஆட்டுச்சொந்தகாரர் ஆட்டை கட்டிஇழுத்து கொண்டு வரும் பொழுது உடனே அடியாட்கள் பெரிய சத்தத்துடன்ன கேதியா கொண்டுவா என கத்துவார்.ஆடு படையலுக்கு முன்னால் வந்தவுடன் ஒருவர் முன்னங்காலையும் தலையயும் பிடிக்க வேறு இருவர் பின்னங்காலை பிடிக்க ஆசாமி கழுத்தில் ஒங்கி ஒரு வெட்டு தலை வேறு உடம்பு வேறாக விழும் .இரத்தம் நிலத்தில் பாய்ந்தன.சில ஆடுகளின் உண்ட உணவு எல்லாம் வெளியே வந்து விழுந்தன.

சேவல்களும் கிடாக்களும் வேள்வியில் பலியிடப்படும் .(ஆண்கள்)

குகன் என்னை தேடிவந்து"டேய் வாடா போவம் கனகரின்ட ஆடு வெட்டியாச்சாம் போய் பங்கை எடுப்போம்"

வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தது.கன்கரின்ட வீடும் ஆனைகோட்டையில் தான் இருந்தது.கனகரின்ட வீட்டுக்கொட்டிலில் ஆட்டை கட்டி தூக்கி தோலுறிச்சு பங்கு போட்டுக்கொண்டிருந்தார்.

"குகனுக்கு என்னை விட நாலு வயசு அதிகம் இதனால் இறைச்சியை பற்றிய விடயத்தில் அனுபவம் உடையவர் என்று சொல்லலாம்.

எனவே என்னுடைய சில சந்தேகங்களை அவரிடம் கேட்டேன்..

"அண்ணே வேள்வி ஆடு ,அடிச்ச ஆடு, காக்கா கடை ஆடு இதுகளுக்கு என்ன வித்தியாசம்?"

" கிடா ஆடுகளை நல்லாய் புல்லு மேய விட்டு,சாப்பாடு தேவைக்கு அதிகமாகவே கொடுத்து வளர்த்து சில நேரம் சாரயம் கொஞ்சம் கொடுப்பார்கள்(உண்மை பொய் இதுவரை எனக்கு தெரியாது)சதை பிடிப்பான ஆடு நல்ல ருசியாக இருக்கும்.இப்படி வளர்த்த ஆட்டை சாமிக்கு முன்னால் பலி கொடுப்பார்கள்.

அடிச்ச ஆடு சாமிக்கு முன்னால் வெட்டுவதில்லை,வீட்டில் வளர்த்து வியாபாரத்துக்காக வெட்டி பங்கு போடுவது,காக்கா கடை சகல ஆட்டையும் வெட்டி விறபார்கள்,மறி ஆட்டையும் கலந்து விற்பார்கள்."

ஒரு ஆட்டிறைச்சி பிரசங்கமே செய்து முடித்தார் குகன் அண்ணா.

30 வருடங்களுக்கு பின்பு ஒருநாள் குகன் அண்ணா கேட்டார்"டேய் உனக்கு பங்கு இறைச்சை வேணுமே"

" என்ன பகிடி விடுகிறியளே சிட்னியில பங்கிறைச்சியோ?போர போக்கைபார்த்தால் வேள்வி இறைச்சி இருக்கு என்றும் சொல்லுவியள் போல"

"வார சனிக்கிழமை புளு மவுன்டனில்(Blue mountain) உள்ள வார்முக்கு (Farm)போறேன் அங்க உனக்கு விருப்பமான ஆட்டை காட்டினால், வெட்டதோலுரித்து தருவார்கள் வீட்டை கொண்டுவந்து பங்கு போட்டு பிரிட்ஜ்க்குள் (Fridge)போட்டன் என்றால் ஒரு மாத்தத்திற்க்கு காணும்"

"அண்ணே அப்ப அது பங்கிறைச்சி இல்லை பிரிட்ஜ் இறைச்சி"

ஆட்டிறைச்சியிலயே இவ்வளவு பாகுபாடு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இன்று வரைக்கும் வேள்வி இறைச்சி, அடிச்சஆடு,காக்கா கடை(சிட்னியில் கலால் இறைச்சி)வித்தியாசம் தெரியவில்லை...

அம்மா சமைத்த கறியின் ருசி அம்மாவுடன் போய்விட்டது

இப்ப மனிசி சமைக்கிற கறிதான் ருசி.....ஆகா...ஆகா....

பி. குறிப்பு...எனக்கு என்னவோ எங்கன்ட வேள்வியில் இருந்துதான் கலால் வந்திருக்கு என்று எனது எட்டாம் அறிவு சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேள்வி இறைச்சி சாப்பிட்டதில்லை ஆனால் பங்கு இறைச்சி அந்த மாதிரி இருக்கும் :D:rolleyes: ...கதைக்கு நன்றி கண்ணன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்! கதை போற, போக்கைப் பார்த்தால், என்னைச் சைவக்காரனாக்கப் போறீங்க போல கிடக்கு! :icon_idea:

மீன் போடுறதுக்குப் பேர் தான் 'பறி"

இறைச்சி போடுறதுக்குப் பேர் 'குடலை" :D

  • கருத்துக்கள உறவுகள்

அதானே ரோமியோ...

நானே கனடா வந்துதான் இறைச்சி சாப்பிடப்பழகினேன்....இப்படிக் கதைகளை எழுதி ஆப்பு வைக்கிறது சரியில்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வகை இறைச்சியும் சாப்பிட்டுள்ளேன்.

ஆனால் இந்த வேள்வி இறைச்சி

கேள்விப்பட்டுள்ளேன். (ஏன் வீணாக்குவான் என்ற நல்ல யோசனைதான்)

நன்றி கதைக்கும் தகவல்களுக்கும் புத்தன்.

(இதுகளைப்பார்த்து நாம் அவற்றைத்தவிர்ப்போம் என நினைக்கவேண்டாம். இன்னும் அதிகரிக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் பங்கு இறைச்சி சாப்பிட்டதில்லை (ஊரில் இருக்கும்போது தாவர பட்சணி!), ஆனால் சிறுவனாக இருக்கும்போது ஒரு ஆட்டை அடிப்பதை முதலில் இருந்து கடைசிவரை பார்த்திருக்கின்றேன். "பலூன் ஊதப் போகின்றாயா?" என்று ஒன்றை நீட்டியபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பங்கு இறைச்சியில் கடாயின் உறுப்புக்கூடப் பங்கிடப்படும். "அந்த மாதிரி" ருசித்துப் சாப்பிட்டவர்களின் வாயில் அகப்படிருக்கும்! :lol:

சுப்பர் புத்தன். எல்லாம் கடந்துதான் பலரும் வந்திருக்கின்றார்கள் .எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காளி கோவிலில் வேள்வி நடக்கும்.அதைவிட உரும்பிராயில் இருக்கும் காட்டுவயிரவர் கோவில் வேள்விதான் மிக பிரபலமானது .கழுத்து வெட்டிய ஆட்டை கரியலில் கட்டி சயிக்கிளில் கொண்டுபோவார்கள் .இரத்தம் வழி நெடுக ஒழுகிக்கொண்டு இருக்கும் .கிருபன் சொன்ன ஊதத்தந்த அனுபவமும் இருக்கு . பனை ஓலையை பிழா மாதிரி பின்னி இறைச்சியை அதற்குள் போட்டு ஈக்கிலால் கட்டிவிடுவார்கள் .ஒருமுறை பங்கு போட்டவர் தான் இருந்த இடத்தில ஒலைக்குள் ஈரலை ஒழித்து பிடிபட்டு வேட்டுகொத்தில் வேள்வி முடிய பார்த்தது.

சாப்பிட போகும் இறைச்சி பற்றிய நினைப்பு மட்டும் தான் எல்லோருக்கும் இதில் பாவம் புண்ணியம் ஏது.

இதைவிட வேள்வி நடக்கும் இடத்திற்கு மறி(பெண் ) ஆடுகளையும் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள் .விஷயம் விளங்காமல் ஏன் என்று கேட்டு பேச்சு வாங்கினேன் .பின்னர் நேரில் கண்கொண்டு என்ன விஷயம் என்று அறிந்துகொண்டேன் .ஆனால் கிடாய் வைத்திருப்பவர்கள் எல்லோரும் "அதற்கு" சம்மதிக்க மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மாடு இதுவரை தெரிந்து நான் சாப்பிட்டதில்லை.

புத்தன் எழுதிய கதை அப்படியே நிஜத்தைப் பிரதிபலிக்கின்றது.

வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் இந்தத் தொல்லை

தாங்காமல் இருந்ததுண்டு.

கிறுக்கல் மன்னனுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை பங்கு இறைச்சி சாப்பிட்டதில்லை.

இறைச்சி வாங்குவதாக இருந்தால்... 12ம் நம்பர்க் கடையில் தான்... வாங்குவோம்.

புத்தன் அடுத்த முறை 9ம் நம்பர் கடையில் வாங்காமல், 12ம் நம்பர் கடையில் வாங்கி சமைத்துப் பாருங்கள்.

பின்பு... அந்தக் கடையின் வாடிக்கையாளராகி விடுவீர்கள்.

சிறந்த கிடாய்... ஆட்டு இறைச்சிக்கு, 12ம் நம்பர் கடைக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்... :D .

(இதனை... எக்கோ... பண்ணி வாசிக்கவும் :icon_idea: )

நல்ல பகிர்வு புத்தன். :)

Edited by தமிழ் சிறி

ஆட்டின் கொட்டையையும் கூறுபோட்டு சமைத்து உண்பார்களா? என்னையா கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம் :D:rolleyes: ...கதைக்கு நன்றி கண்ணன் :lol:

புத்தனின் கதைக்கு கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள் ரதி

புத்தன்! கதை போற, போக்கைப் பார்த்தால், என்னைச் சைவக்காரனாக்கப் போறீங்க போல கிடக்கு! :icon_idea:

மீன் போடுறதுக்குப் பேர் தான் 'பறி"

இறைச்சி போடுறதுக்குப் பேர் 'குடலை" :D

தகவலுக்கு நன்றிகள் புங்கையூரான்....அசைவம் சாப்பிடவேண்டும் என்னுடுடைய கிறுக்களை நம்பி சைவக்காரனாக வேண்டாம்....

அதானே ரோமியோ...

நானே கனடா வந்துதான் இறைச்சி சாப்பிடப்பழகினேன்....இப்படிக் கதைகளை எழுதி ஆப்பு வைக்கிறது சரியில்லை :lol:

நன்றிகள் வல்வைசகாரா .....இது ஆப்பு அல்ல..... கதையாக்கும் மன்னிக்கவும் கிறுக்கல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வகை இறைச்சியும் சாப்பிட்டுள்ளேன்.

ஆனால் இந்த வேள்வி இறைச்சி

கேள்விப்பட்டுள்ளேன். (ஏன் வீணாக்குவான் என்ற நல்ல யோசனைதான்)

நன்றி கதைக்கும் தகவல்களுக்கும் புத்தன்.

(இதுகளைப்பார்த்து நாம் அவற்றைத்தவிர்ப்போம் என நினைக்கவேண்டாம். இன்னும் அதிகரிக்கும்)

நன்றிகள் விசுகு....நீங்கள் சொன்னது போல் இன்னும் அதிகரிக்கும்....அதிகரிக்க வேணும் ..வேள்வியை தவிர.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பங்கு இறைச்சி சாப்பிட்டதில்லை (ஊரில் இருக்கும்போது தாவர பட்சணி!), ஆனால் சிறுவனாக இருக்கும்போது ஒரு ஆட்டை அடிப்பதை முதலில் இருந்து கடைசிவரை பார்த்திருக்கின்றேன். "பலூன் ஊதப் போகின்றாயா?" என்று ஒன்றை நீட்டியபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பங்கு இறைச்சியில் கடாயின் உறுப்புக்கூடப் பங்கிடப்படும். "அந்த மாதிரி" ருசித்துப் சாப்பிட்டவர்களின் வாயில் அகப்படிருக்கும்! :lol:

நன்றிகள் கிருபன் ....இந்த கிறுக்கல் மூலம் நீங்கள் இன்னும் அதிகம் மாமிசம் சாப்பிட வாழ்த்துக்கள்

சுப்பர் புத்தன். எல்லாம் கடந்துதான் பலரும் வந்திருக்கின்றார்கள் .எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காளி கோவிலில் வேள்வி நடக்கும்.அதைவிட உரும்பிராயில் இருக்கும் காட்டுவயிரவர் கோவில் வேள்விதான் மிக பிரபலமானது .கழுத்து வெட்டிய ஆட்டை கரியலில் கட்டி சயிக்கிளில் கொண்டுபோவார்கள் .இரத்தம் வழி நெடுக ஒழுகிக்கொண்டு இருக்கும் .கிருபன் சொன்ன ஊதத்தந்த அனுபவமும் இருக்கு . பனை ஓலையை பிழா மாதிரி பின்னி இறைச்சியை அதற்குள் போட்டு ஈக்கிலால் கட்டிவிடுவார்கள் .ஒருமுறை பங்கு போட்டவர் தான் இருந்த இடத்தில ஒலைக்குள் ஈரலை ஒழித்து பிடிபட்டு வேட்டுகொத்தில் வேள்வி முடிய பார்த்தது.

சாப்பிட போகும் இறைச்சி பற்றிய நினைப்பு மட்டும் தான் எல்லோருக்கும் இதில் பாவம் புண்ணியம் ஏது.

இதைவிட வேள்வி நடக்கும் இடத்திற்கு மறி(பெண் ) ஆடுகளையும் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள் .விஷயம் விளங்காமல் ஏன் என்று கேட்டு பேச்சு வாங்கினேன் .பின்னர் நேரில் கண்கொண்டு என்ன விஷயம் என்று அறிந்துகொண்டேன் .ஆனால் கிடாய் வைத்திருப்பவர்கள் எல்லோரும் "அதற்கு" சம்மதிக்க மாட்டார்கள் .

நன்றிகள் அர்ஜுன் ..தகவலுக்கும் கருத்து பகிர்வுக்கும்...

ஆடு மாடு இதுவரை தெரிந்து நான் சாப்பிட்டதில்லை.

புத்தன் எழுதிய கதை அப்படியே நிஜத்தைப் பிரதிபலிக்கின்றது.

வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் இந்தத் தொல்லை

தாங்காமல் இருந்ததுண்டு.

கிறுக்கல் மன்னனுக்கு வாழ்த்துகள்.

நன்றிகள் வாத்தியார் என்னுடைய கிறுக்கல் உங்களை மாமிசம் சாப்பிட தூண்டவில்லைதானே

ஆடு மாடு இதுவரை தெரிந்து நான் சாப்பிட்டதில்லை.

புத்தன் எழுதிய கதை அப்படியே நிஜத்தைப் பிரதிபலிக்கின்றது.

வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் இந்தத் தொல்லை

தாங்காமல் இருந்ததுண்டு.

கிறுக்கல் மன்னனுக்கு வாழ்த்துகள்.

நன்றிகள் வாத்தியார் என்னுடைய கிறுக்கல் உங்களை மாமிசம் சாப்பிட தூண்டவில்லைதானே

நான் இதுவரை பங்கு இறைச்சி சாப்பிட்டதில்லை.

இறைச்சி வாங்குவதாக இருந்தால்... 12ம் நம்பர்க் கடையில் தான்... வாங்குவோம்.

புத்தன் அடுத்த முறை 9ம் நம்பர் கடையில் வாங்காமல், 12ம் நம்பர் கடையில் வாங்கி சமைத்துப் பாருங்கள்.

பின்பு... அந்தக் கடையின் வாடிக்கையாளராகி விடுவீர்கள்.

சிறந்த கிடாய்... ஆட்டு இறைச்சிக்கு, 12ம் நம்பர் கடைக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்... :D .

(இதனை... எக்கோ... பண்ணி வாசிக்கவும் :icon_idea: )

நல்ல பகிர்வு புத்தன். :)

நன்றிகள் தமிழ்சிறி....12ஆம் நம்பர் கடை எக்கோ பண்ணுது

ஆட்டின் கொட்டையையும் கூறுபோட்டு சமைத்து உண்பார்களா? என்னையா கொடுமை.

நன்றிகள் கரும்பு வருகைக்கும் கேள்விக்கும்.....அதற்கு ஒரு வியாபார பெயர் உண்டு ....புடு........

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் பழைய ஞாபகங்களை

கிளறிவிட்டீர்கள் .வென்று விட்டீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பழைய ஞாபகங்களை

கிளறிவிட்டீர்கள் .வென்று விட்டீர்கள்

நன்றி லியொ ...எண்ணங்களையும் ஞாபகங்களையும் இலக்கணத்துடன் எழுதினால் அது கதை ..சும்மா எழுதினால் அது கிறுக்கல்

  • கருத்துக்கள உறவுகள்

பங்கிறைச்சி யாழில் இருந்த வேளையில் சாப்பிட்டிருக்கிறேன். மிருக வைத்தியம் படித்த போது, மாடு ஆடு வெட்டும் இடத்தில் போய் எப்படியான நோய்கள் ஒட்டுண்ணிகள் வெளியில் ஆரோக்கியமாகத் தெரியும் ஒரு விலங்கில் இருக்கக் கூடும் என்று நேராகப் பார்த்த பின்னர், பங்கிறைச்சி சாப்பிடவே பயம். எந்தப் பரிசோதனையும் செய்யப் படாமல் விற்கப் படும் இறைச்சியைச் சாப்பிடுவது கொஞ்சம் ஆபத்தானது. வெளிநாடுகளில் bush meat எனப்படும் பரிசோதனை செய்யப் படாத இறைச்சியைத் தொடவே வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு வேள்விக்காக வளர்க்கப்படும் ஆடுகளை (எனது உறவினர்) பார்த்துள்ளேன்.அவை கிடாய் ஆடுகள்.மறி ஆடுகள் வேள்விக்கு வளர்த்ததாகவோ வெட்டியதாகவோ கேள்விப்படவில்லை.

கடையில் அனேகமாக இறைச்சி வாங்குவதில்லை (யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை).ஏனெனில் இறைச்சிக்கடை காரரை எமக்கு(எனது குடும்பம் மற்றும் அயலவர்)தெரியும்.அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் மறி ஆடுகள்,குட்டி போடாத ஆடுகள்,நோயான ஆடுகள் என்பவற்றை மலிவாக வாங்குவார்கள்.விற்பவர்களும் எவ்வளவு கெதியாக விற்க முடியுமோ அவ்வளவு கெதியாக விற்று விடுவார்கள்.இந்த ஆடுகள் தான் இறைச்சி ஆக்கப்பட்டு நகரில் விற்கப்படுகிறது.

ஊரில் நல்ல ஆடு வாங்குவதில் இருந்து பங்கு போட்டு இரத்தவறை வரை எல்லாம் செய்து தருவார்.அவருக்கு பணமும் போத்தலும் ஒரு பங்கு இறைச்சியும் கொடுத்தால் போதுமானது.சுவையை பற்றி சொல்லி வேலையில்லை.

வேள்வி பார்த்ததில்லை.ஆனால் ஆடு கொல்லப்பட்டதில் இருந்து இரத்தவறை சமைக்கும் வரை எல்லா காட்சிகளையும் பார்த்ததுண்டு.

புத்தனின் கிறுக்கலுக்கு நன்றி.

இந்த வேள்வி இறைச்சி / பங்கு இறைச்சி ஊரில் சாப்பிட்டதில்லை. கடையில் வாங்கித்தான் திண்போம். கலியாணம் காட்சி என்றால் மாத்திரம் பின் வளவில் ஆடு கட்டப்பட்டிருக்கும். அதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.இந்த பங்கு இறைச்சி 'ட்ரெண்ட்' இங்கு வந்துதான் தெரியும். ஒருதரம் சாப்பிட்டிருக்கிறேன். சொல்வது மாதிரி பெரிய ருசியாக இருந்ததில்லை. இங்கு கடைகளில் இதற்குப் பெருமதிப்புள்ளது. நீண்டகாலமாக 'தொட்டாச்சிணுங்கி இலை' சாப்பிட்ட ஆடுகளுக்கு ஊரில் மவுசு அதிகம். அதன் இறைச்சி அந்தமாதிரியிருக்கும்

புத்தனின் கிறுக்கல் நல்லாயிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன்! நல்லதொரு சமூக கதையை சொல்லிருக்கிறியள்...அதுவும் அவுஸ்ரேலியாவிலை இருந்து கொண்டு....நல்ல விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிறுக்கல் புத்ஸ் அண்ணா. வேள்வியில் ஆடுகளின் கழுத்தை வெட்டிக் கொல்லும் முறை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்கிறைச்சி யாழில் இருந்த வேளையில் சாப்பிட்டிருக்கிறேன். மிருக வைத்தியம் படித்த போது, மாடு ஆடு வெட்டும் இடத்தில் போய் எப்படியான நோய்கள் ஒட்டுண்ணிகள் வெளியில் ஆரோக்கியமாகத் தெரியும் ஒரு விலங்கில் இருக்கக் கூடும் என்று நேராகப் பார்த்த பின்னர், பங்கிறைச்சி சாப்பிடவே பயம். எந்தப் பரிசோதனையும் செய்யப் படாமல் விற்கப் படும் இறைச்சியைச் சாப்பிடுவது கொஞ்சம் ஆபத்தானது. வெளிநாடுகளில் bush meat எனப்படும் பரிசோதனை செய்யப் படாத இறைச்சியைத் தொடவே வேண்டாம்!

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் Justin

புத்தனின் கிறுக்கலுக்கு நன்றி.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

'தொட்டாச்சிணுங்கி இலை' சாப்பிட்ட ஆடுகளுக்கு ஊரில் மவுசு அதிகம். அதன் இறைச்சி அந்தமாதிரியிருக்கும்

புத்தனின் கிறுக்கல் நல்லாயிருக்கு.

இது ஒரு புதிய தகவல் நன்றிகள் தப்பிலி

புத்தன்! நல்லதொரு சமூக கதையை சொல்லிருக்கிறியள்...அதுவும் அவுஸ்ரேலியாவிலை இருந்து கொண்டு....நல்ல விசயம்.

நன்றிகள் குசா

நல்ல கிறுக்கல் புத்ஸ் அண்ணா. வேள்வியில் ஆடுகளின் கழுத்தை வெட்டிக் கொல்லும் முறை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிச்சயமாக ஏற்க முடியாத ஒன்று இருந்தும் செய்கிறார்கள் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வைரவர் கோயிலை தொடங்கி கவுணாவத்தை எண்டு பேரை வைச்சிட்டு புத்தனும் வேள்வியை தொடங்கவேண்டியதுதானே வியாபாரம் அந்மாதிரி போகும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வைரவர் கோயிலை தொடங்கி கவுணாவத்தை எண்டு பேரை வைச்சிட்டு புத்தனும் வேள்வியை தொடங்கவேண்டியதுதானே வியாபாரம் அந்மாதிரி போகும். :)

நன்றிகள் சாத்திரியார் முதலாவது பலி ஆடு நானாக இருக்கும்......ஐயோ நினைக்கவே பயமாய் இருக்கு

கிறுக்கல் வழமை போல சுவாரஸ்யமாக இருக்கிறது புத்தன்.

லண்டனிலும் சில ஆட்கள் வெட்டும் இடத்துக்குச் சென்று ஆட்டை வாங்கி வந்து பங்கு போடுவார்கள்.

ஒருமுறை எனது நண்பனும் வாங்கி வந்தான். அந்த இறைச்சியில் சூடு குறையாமல் இருந்தது. அதன் பிறகு எனக்கு ஆட்டிறைச்சி என்றால் அவ்வளவு விருப்பம் இல்லை!

சிட்னியிலும் தொடங்கிவிட்டார்கள் போல.

உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி

மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.

ஆட்டின் தலை:

இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்.

ஆட்டின் கண்:

கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.

ஆட்டின் மார்பு:

கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்.

ஆட்டின் இதயம்:

தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்.

ஆட்டின் நாக்கு:

சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்.

ஆட்டின் மூளை:

கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.

ஆட்டின் நுரையீரல்:

உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.

ஆட்டுக் கொழுப்பு:

இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்.

ஆட்டின் குண்டிக்காய்:

இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.

ஆட்டுக்கால்கள்:

எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.