Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காமக் களியாட்டம் பார்த்து இரசித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள். (காணொளி )

Featured Replies

thaaitamil4-100x100.jpgமுக்கிய குறிப்பு : வாய்க்குள் பூருவது தெரியாது மெய்மறந்து இரசித்த தமிழத் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் trans.gifமற்றும் உதயன் ஆசிரியர் பிறேம் . தமிழத் தேசியத்திற்கு ஆதாரவானவர்கள் அனேகர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடக்கம்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் நடைபெற்ற அதிர்ச்சிச் சம்பவங்களின் தொகுப்பு.

யாழ்ப்பாணம் றோட்றிக் கிளப் என்னும் பணக்காரக் கழகம் நடாத்திய காமக் களியாட்டம் சிங்க கொடி ஏற்றி கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் அரங்கேறியுள்ளது. சேவையின் ஊடான சமாதானம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் யாழ்ப்பாணத்தின் பிரபல பணக்காரர்களும் சமூகத்தில் முக்கிய பொறுப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களும் பாடசாலை மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதில் முக்கியமாக விடயம் என்னவெனில் தேசியத்தின் குரல் எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும்; உதயன் பத்திரிகையின் முதலாளியும் தமிழத் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் மற்றும் உதயன் ஆசிரியர் பிறேம் ஆகியோர் மேடையில் நடைபெற்ற குத்தாட்டத்தை மெய்மறந்து ரசித்தார்கள்.

றோட்றிக் கழக்ததின் அழைப்பின் பேரில் வந்திருந்த ஏனைய தமிழத் தேசியத்திற்கு ஆதாரவானவர்கள் அனேகர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடக்கம்.

ஏனைய தமிழ்த்தேசியம் கதைப்பவர்களும் தமிழத் தேசியத்திற்காகப் பிறந்தேன் என வீராப்புடன் கதைப்பவர்களும் பணக்கார அதிகாரத்தினரும் அரச உயரதிகாரிகள், வைத்தியர்கள் ஆகியோரும் வாய்க்குள் ஈ பூருவது தெரியாது மெய்மறந்து ரசித்தார்கள்.

குடாநாட்டுப் பாடசாலை மாணவிகளையும் வரவழைத்துவிட்டு அவர்களுக்கு முன் அங்கு குத்தாட்டம் போட்டமை அங்கு சென்ற பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாடசாலை மாணவிகளுடன் அங்கு வந்திருந்த பெரும் பணக்காரப் புள்ளிகள் வாய் இழித்துக் கதைத்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

இன்னும் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் மேலும் சில சட்டவிரோத கருக்கலைப்புக்கள் நடைபெறலாம். ஆதற்கு யாழ்றோட்டறிக் கழகம் நிச்சயம் உதவி செய்யும்.

கிறிஸ்தவப் பாதிரிமார், கிறிஸ்தவ மதகுருமார் என பலரும் இந்தக் குத்தாட்டத்தைக் கண்டு களித்தது மிகுந்த வேதனையைத் தந்தது. ஏற்கனவே கிறிஸ்தவ பாதிரிகள்,மற்றும் மத போதகர்கள் மீது யாழ்ப்பாணத்தில் பாலியல் புகார்கள் இருக்கின்றது. இவ்வாறான குத்தாட்டங்கள் மூலம் மேலும் பல புகார்களை அவர்கள் மேல் திணிப்பதற்கு தூண்டு கோலான அமையும்.

யாழ்ப்பணத்திற்கே உரிய கலை கலாச்சாரங்களைப் பிரதிபலிக்காது இவ்வாறான குத்தாட்டங்களை ஒழுங்கு செய்த றோட்டிறிக் கிளப் உறுப்பினர்களின் நடத்தை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது.

http://thaaitamil.com/?p=31933

நியூசுக்குமா தட்டுப்பாடு? விலைவாசி ஏற்றம் ....

அங்கு இருப்பவர்களை அப்ப என்னதான் செய்ய சொல்லுகின்றீர்கள்.

காவி உடை போட்டு தவம் இருக்கவேண்டுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதில எங்க காமக்களியாட்டம் இருக்குது (போற போக்கப்பார்த்தா புள்ளையே பெத்துக்க கூடாதுபோல இருக்கு ) :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை எங்கை காமக்களியாட்டம் இருக்கு? :o

தமிழ்த்தேசிய ஊடகம், தேசிய ஊதுகுழல்கள் என்று தமக்கு தாமே பட்டம் சூட்டிக்கொண்ட இணையத்தளங்கள் சிலவற்றின் மூன்றாம் தர செய்திகள் எல்லாம் வேறு வேறு தளங்களிலும்,சொந்த ப்ளொக்கிலும் வெட்டி ஒட்டி மீண்டும் யாழுக்கும் வந்து விட்டது. :wub:

புலத்திலிருந்து இந்தியா முதலான நாடுகளுக்கு போய் உங்களில் யார் பிரபுதேவா,ஜோடி நம்பர் வன் , சூப்பர் சிங்கர் என்று எம்மவர்கள் பங்குபற்றுவதை ஆதரிக்கும் தேசிய ஊடகங்கள் எல்லாம் தாயகத்தில் நடப்பதை எல்லாம் காமக்களியாட்டம்,ஆபாசம் என்று யாரை வெள்ளையடிக்கிறார்கள்??? <_<:wub:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் மனிதர்களப்பா.

அதை எப்போ நாம் புரிந்து கொள்ளப்பாகின்றோம்............??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சண் டிவி கலைஞர் டிவி பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சண் டிவி கலைஞர் டிவி பார்க்கலாமா?

-பார்க்கலாமாம்,

மக்கள் தொலைக்காட்சி மட்டும் பார்க்கமுடியாதம்.

யாழில் பிள்ளைகள் எல்லாம் கூத்தும் கும்மாளமுமாக காமக் களியாட்டம் ஆடுகிறார்கள்.

இந்தச் செய்தியை தந்த இணையத் தளக்காரரின் பிள்ளைகள், குடும்பம் எல்லாம் ஆயுதம் ஏந்தி விடுதலைக்காகப் போராடுகிறார்கள்.

நீங்களும் உங்கள் செய்தியும்.முடிந்தால் இணையத்தை மூடி விட்டு, குடும்பமாய் நாட்டுக்குப் போய்ப் போராடுங்கள்.

ஐயோ ஐயோ யாருக்கோ புகழை உருவாக்க படாத பாடுபடுகினமோய்..... வரவர எல்லாரும் காமடி பண்ண ஆரம்பிச்சாங்களே....

அங்க நடக்கிறதெல்லாம் சரி எண்டு சொல்லமுடியாது ஆனால் அங்கு மேடையில் ஆடவச்சிதான் பாக்கிறாங்கள் புலம்பெயர் நாடுகளில எண்டால் போற எல்லாரும் சேர்ந்து குத்தாட்டம் போடுவாங்கள் தண்ணியடிச்சிபோட்டு ஆண் பெண் வித்தியாசம் இல்லாம கட்டிப்புடிச்சும் ஆடுவாங்கள்.புலத்தில இருந்து கதைக்கிறவங்கள் நல்லா இருந்தால் அதையே ஒரு உதாரணமா எடுத்து அங்க ஒழுங்கா நடப்பாங்கள். இங்க குத்தாட்டம் போடுறது மட்டும் இல்ல அத வீடியோ எடுத்து ஊருக்கும் அனுப்புவாங்கள் துகளை பார்தால் அங்க இருக்கிறதுகளுக்கும் ஆசை வரத்தான் செய்யும்...

இதில என்ன தப்பு? நாங்க பார்க்காததையா அவர்கள் பார்க்கிறார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இதுதான் காமக்களியாட்டமா?? :lol: இதை விட வெளிநாட்டிலை வந்து எத்தனையோ பாத்த மற்ற எம்.பி மாருக்கு இதைப் பாத்து வெறுத்துப்போய் வெளியாலை போயிருப்பாங்கள்.

எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் செய்தி போட :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரனுக்கு ஆம்ஸ்ரோங் போன காலத்தில் இப்பவும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது காமக் களியாட்டம் என்றால்.. புலம்பெயர் நாடுகளில் நம்மவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இருந்து பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகள்.. எங்கனும் இதுதானே நடக்குது..!

மேலும்...

சிங்கக் கொடியின் கீழ்.. இதைத் தவிர..வேறு எதனை எம் மக்களால்..நிறைவேற்ற முடியும்..! அதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நிகழ்ந்த போது மானும் மயிலும் தான் சன்ரிவீயில் ஆடிக் கொண்டிருந்தன..! அது வளர்த்தெடுத்துள்ள இந்த வாரிசுகளுக்கு.. ரோற்றரிக் கழகம் நல்ல களம் அமைத்துக் கொடுக்கிறது.

ஒரு காலத்தில் ரோற்றிக் கழகம்.. சார்ந்திருந்தவன் என்ற வகையில்.. அதன் குறிக்கோள்.. ஐக்கிய இலங்கையோ.. ஒன்றுபட்ட உலகமோ அல்ல..! இன.. மத.. பண.. கொடி மதிப்புகளுக்கு அப்பாலான மனிதாபிமான சமூக நடவடிக்கை என்பது தான். அந்த இலக்கில் இருந்தும் ரோற்றிக் கழகம் தடம் புரள்வது வருந்தத்தக்கது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

யார் இந்த அறிவிப்பாளர்? பாவம் நல்ல பப்பாசிப்பழமா வாங்கிக் கொடுங்கோ.. மூலக் கொதியில் பெரிதும் அவதிப்படுகிறார்... :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோட்றிக் கழக்ததின் அழைப்பின் பேரில் வந்திருந்த ஏனைய தமிழத் தேசியத்திற்கு ஆதாரவானவர்கள் அனேகர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெளியேறியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடக்கம்.

இஞ்சை எங்கடை சனத்தின்ரை சாமத்தியவீட்டுக்கொண்டாங்களிலை......குமர்ப்பெட்டையள் போடுற குத்தியாட்டத்தை பாத்தவைக்கு உந்த சீன் சுந்தராம்பாளைத்தான் ஞாபகப்படுத்தியிருக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை எங்கடை சனத்தின்ரை சாமத்தியவீட்டுக்கொண்டாங்களிலை......குமர்ப்பெட்டையள் போடுற குத்தியாட்டத்தை பாத்தவைக்கு உந்த சீன் சுந்தராம்பாளைத்தான் ஞாபகப்படுத்தியிருக்கும் :D

அதுதான் வேலைப் பிடித்ததென்ன என்ன என்டபடி வெளியேறியிருப்பினம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இதிலாவது எல்லோரும் ஒற்றுமையாய் கருத்து எழுதிச்சினமே :lol:

http://www.sangeetho...hp?songid=24766

சாத்திரியார் ஞாபகப்படுத்தியது

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்

முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்

கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்

மயிலையும் அவன் திருக்கை

அயிலையும் அவன் கடைக்கண்

இயலையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ

வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்

சொல்லுங்கோ

வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னன் வேலும் வரல்ல மயிலும் வரல்ல பக்கத்துக்கு வீடு மான் குட்டி தான் வந்திச்சு....

மான் குட்டியே...மான் குட்டியே சொல்லுங்கோ.....

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே....

உன் கொலு கொலு கன்னங்கள் பாத்து என் மனசுல தெருக்கூத்து...

சொல்லுங்கோ மல்லை அண்ணா.....

சொன்னன் வேலும் வரல்ல மயிலும் வரல்ல பக்கத்துக்கு வீடு மான் குட்டி தான் வந்திச்சு....

மான் குட்டியே...மான் குட்டியே சொல்லுங்கோ.....

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே....

உன் கொலு கொலு கன்னங்கள் பாத்து என் மனசுல தெருக்கூத்து...

சொல்லுங்கோ மல்லை அண்ணா.....

அட உங்களுக்கு "மான்" குட்டி மட்டும்தான் வந்தாரா?

அப்பா நான் பரவாயில்லை!

சுண்டல் நீங்க சொல்லித்தந்த பாட்டை நான் பாட

எனக்கு பக்கத்து விட்டு "வுமான்" குட்டியே வந்திட்டா. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த அறிவிப்பாளர்? பாவம் நல்ல பப்பாசிப்பழமா வாங்கிக் கொடுங்கோ.. மூலக் கொதியில் பெரிதும் அவதிப்படுகிறார்... :D:lol:

சிரித்தே விட்டேன் குட்டி அண்ணா. நான் சொல்ல வந்ததும் இதுதான். அண்ணோய், சின்னவன் செய்தி இல்லாவிட்டால் hits கூட்டுவதற்காக கண்ட சொறிச் செய்திகளை உங்கட இணையங்களில வேணுமெண்டால் போடுங்கோ. யாழிலே போடுவதற்கு யாழ் ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல. காமக் களியாட்டமாம், அதுக்க இது தேசிய ஊடகம் வேறயாம். உருப்பட்ட மாதிரித் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி செய்திக்கு பெருமளவிலானோர் எதிர்க்கருத்துக்களைப் பதிவு செய்து இருக்கின்றீர்கள். இதில் மட்டும் ஒரு நேர்கோட்டில் நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்கள் என்பதனை பார்க்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

யதார்த்தத்தினைப் புரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ளவே மாட்டோம் என்றுதான் புலத்தில் உள்ள 99 வீதமான இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதலில் மேற்படி செய்தி போட்டவர்கள் சரியான தமிழிலும் எழுத்துப் பிழை இன்றியும் பதிவு செய்ய முனைய வேண்டும். முதல் பத்தியிலேயே குழப்பமாக உள்ளது.

அதாவது, சரவணபவனும் பிறேமும் வெளியேறினர் என்று குறிப்பிட்டு விட்டு பின்னர் தொடர்ந்து அவர்கள் பார்த்து இரசித்தனர் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

இங்கே என்னிடம் எழுகின்ற கேள்வி யாதெனில், புலத்தில் நாம் மகிழ்வாக இருக்கலாம். ஊரில் உள்ளவர்கள் மகிழ்வாக இருக்கக்கூடாதா?

புலத்தில் எத்தனை அசிங்கங்களை பொது இடங்களில் இளைய சமூகத்தினரை விட தமிழ்ச் சமூகத்தில் ஊறி வளர்ந்த வயது வந்தவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

இந்தச் செய்தியினை வெளியிட்ட இணையத்தளத்தினை கூர்ந்து கவனித்தால், இணையத்தளத்தின் நோக்கமும் புரிகின்றது.

புலத்து செயற்பாட்டாளர்களின் தாளத்துக்கு ஆடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறீதரன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை நல்லவர்களாகக் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கெட்டவர்களாகக் காட்டவே தொடர்ந்தும் முனைகின்றனர்.

அட, இன்னுமா நீங்கள் திருந்தவில்லை?

கிழக்கில் பரப்புரைப் பலவீனத்தால்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது.

தமிழ்த் தலைமைகளிடம் இருந்து இன்று கிழக்கு மாகாணம் பறி போய் இருக்கின்றது. இது தொடர்பில் உங்களுக்கு சிறிதுதானேனும் கவலையே இல்லையா?

இவ்வாறுதான் புலத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து சிந்திப்பீர்களானால் விரைவில் வடக்கு ஆட்சியும் சிங்களத் தலைமைகளிடமே சென்றடையும்.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.