Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தொடருங்கள்.

  • Replies 130
  • Views 20.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமோ

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] ஆய்வுக் கட்டுரை தொடர வாழ்த்துக்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கடை வழித்தோன்றலா?? :lol: எதுக்கும் டி என் ஏ எடுத்து பாப்பம்... நீங்கள் தொடங்குங்கள்.

Edited by sathiri

"வல்காவில் இருந்து கங்கை வரை" என்னை பொறுத்த வரை பல விடயங்களை தெளிவு படுத்துகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

"வல்காவில் இருந்து கங்கை வரை" என்னை பொறுத்த வரை பல விடயங்களை தெளிவு படுத்துகின்றது

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

அதன்படி..

தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம்.

மாநிறமும், மஞ்சள் மற்றும் சிவப்பாக உள்ளவர்கள் ஆரியரினதும், அராபியரினதும் (பாரசீகரினதும்) கலப்பினால் உருவானவர்கள். பிற்காலத்தில் போர்த்துக்கீச, டச்சு கலப்பினால் இன்னும் சிவப்பானவர்களும் உள்ளனர்.

எனவே மாநிறமும், மஞ்சள், சிவப்பு (வெள்ளை?) என்று தங்களை நினைத்துக்கொள்பவர்கள் தாங்கள் சுமேரியரின் வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்ளலாம் :)

நல்ல முயற்சி சுமோரியர்.

எனக்குத் தெரிந்து வழித்தோன்றல் என்பது : கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றியது தமிழ். அதை ஆய்வுசெய்ய முடியாது.

வரலாறு என்பது : முருகன் சூரனை வென்றதும் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததும். ஆதியும் அந்தமும் இல்லாத சமயம்.

இவ்வாறே சிறுவயதில் கற்றுத் தரப்பட்டது. 10ஆம் வகுப்பு வரை இலங்கையில் படித்திருக்கிறேன். எந்த வகுப்பிலும் மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர தமிழர்களின் வரலாறு படித்ததாக ஞாபகம் இல்லை. எதுவுமே ஆராச்சிக்குட்பட்டது. நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது. எமது வரலாறு ஆராயப்பட்டு எமது மூதாதையர் பற்றி நிறைய அறிந்துகொள்ள வேண்டும். மூட நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கும் எமது இனம் இதன்மூலம் விழிப்படைய வேண்டும்.

உங்கள் ஆய்வைத் தொடர வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம் புரியுது இங்கயும் பலபேர் :)

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள்.. வாசிக்க ஆவலாக உள்ளோம்..!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்றால் என்ன ?

இந்த நூற்றாண்டின் சம்பவங்கள் அடுத்த நூற்றாண்டின் பேசப்படும் போது அது வரலாறு ஆகும்

வரலாறு எப்போது யாரால் எழுத ஆரம்பிக்கப்பட்டது ?

வரலாறை எவரும் எழுத முடியாது அது தலைமுறை,தலைமுறையாக சொல்லக் கேட்டு வருவது...அதை மாற்றவும் முடியாது

நாகரிகம் என்றால் என்ன?

இப்படித் தான் இருக்க என்று தனக்கென கோட்பாடுகளை ஒவ்வொருவரும் புகுத்தும் போது நாகரீகம் உருவானது

முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்?

உடுப்பில்லாமல் அம்மணமாய் அலைந்த மனிதன் இலை,குழைகளை அணியும் போது நாகரீக மாந்தனானான்.

எனக்கும் வர‌லாற்றுக்கும் தூர‌மோ தூர‌ம்...நான் சும்மா எனக்குத் தெரிந்ததை எழுதினேன் சுமேரியர் நீங்கள் கோவிக்காமல் உங்கள் கட்டுரையை எழுதுங்கோ :D

எழுதுங்கள் சுமோ நாம் தானே இருக்குறம் வாசிச்சிட்டு கல் எறிய!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள கேள்வி கேகுரத விட்டுட்டு எழுத தொடங்குங்க..... வாழ்த்துக்கள் சுமோ அக்கா :D

[size=4]

வரலாற்றின்படி ஆரியர் வொல்கா நதிக்கரையிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியே வந்து, கைபர் கணவாய் ஊடாக இந்திய உபகண்டத்தை அடைந்தனர். இது திராவிடரை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது. ராகுல சங்கிருத்தாயன் என்ற பெளத்த முனிவர் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் படித்தால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம். அதிலுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிடினும், அப்புத்தகம் ஆரிய, திராவிட கருத்துக்களை அறிய முதற்படி என்பது என் கருத்து.

அதன்படி..

தமிழர் அரக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கறுப்பாயும், குள்ளமாயும், விகாரமான பற்களையும் கொண்டுள்ளனர். இதுதான் திராவிடரின் அடையாளம்.

மாநிறமும், மஞ்சள் மற்றும் சிவப்பாக உள்ளவர்கள் ஆரியரினதும், அராபியரினதும் (பாரசீகரினதும்) கலப்பினால் உருவானவர்கள். பிற்காலத்தில் போர்த்துக்கீச, டச்சு கலப்பினால் இன்னும் சிவப்பானவர்களும் உள்ளனர்.

எனவே மாநிறமும், மஞ்சள், சிவப்பு (வெள்ளை?) என்று தங்களை நினைத்துக்கொள்பவர்கள் தாங்கள் சுமேரியரின் வழித்தோன்றல்கள் என்று கருதிக்கொள்ளலாம் :)

by A. L. Basham: A Cultural History of India [/size]

books.jpg

[size=4]இந்த புத்தகத்தை பஷம் பல ஆசிரியர்களின் கட்டுரைகளில் இருந்து தொகுத்திருக்கிறார். அதற்கு தான் ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார். அதன் 4ம் அல்லது 6ம் பக்கத்தில் திராவிடரின் உருவத்தை விவரித்திருக்கிறார். புத்தகம் ஆப்பிட்டால் பக்கத்தை நீங்கள் தவற விடக்கூடிய சந்தர்ப்பம் குறைவு.

"மென்மையான பார்வையும், அருள் வடியும் உருவமும், உளியால் செதுக்கிவிட்ட அவயவங்களும் கொண்டவரகள் இந்த இனம். இப்பொழுது இந்தியா எங்குமே இனம் கலப்பு நிகழ்ந்து விட்டதால் நீங்கள் வழிதெருவில் சுத்த திராவிடர் ஒருவரை சந்திக்க தக்க சந்தர்ப்பம் குறைவு. இருந்தாலும் உயரிய திராவிட பாசைப் பிரயோகம் உடைவர்களிடம் நீங்கள் இந்த திராவிடர்களின் அவய அதிசயங்களை தெளிவாக காணலாம்"

திராவிட ர் நீக்குறோக்கள் அல்ல என்பதும் திராவிடர் (ஒரு வகையில்)ஆரியர் என்பதும் இப்போது வைக்கப்படும் கருது கோள்கள்.

இதில் ஆரியர் என்ற சொல் வெள்ளையர் என்பதாகும். [/size]

[size=4]10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரை கடல் பகுதியில் இருந்து வந்து 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளியில் குடியேறிய இனம் இது. எனவே உண்மையான உறவு திராவிடருக்கும் சுமேரியருக்கும் குறந்தது 4000 ஆண்டுகள் இடைவெளி. 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மதிய கிழக்கில் தங்கிவிட்டவர்கள் சுமேரியர். தொடர்ந்து கிழக்கே வந்தவர்கள் திராவிடர். சிந்து வெளியில் காணப்படும் திராவிடருக்கும் சுமேரியருக்கும் உடல் உருவில் 4000-5000 வருட வேறுபாடு.

கடைசி நாகரிக காலங்களில் இருவருக்கும் இடையில் இருந்த வர்த்தக, கலாச்சார உறவுகளால் குழம்புவோர் இருவரும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் 4000 வருட பிரிந்து வாழ்ந்துவிட்ட இடைவெளி அங்கிருப்பதால், சுமேரியர் சுமேரியர்; திராவிடர் திராவிடர். இந்தியாவில் வைத்து இனம் கலந்த திராவிடர் நீக்குறோக்கள் அல்ல.[/size]

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு என்பது, மனித குலம், நடந்து வந்த பாதை!

பாறைகளிலும், குகைகளிலும், வாழ்ந்த மனிதன், கரித்துண்டால்,அல்லது எலும்புத் துண்டால் முதலாவது,கோடு வரைந்தபோதே, வரலாறு, எழுத ஆரம்பிக்கப் பட்டு விட்டது!

நாகரீகம் என்பது விலங்கிலிருந்த தோன்றிய மனிதன், விலங்கின் குணங்களை, இழந்து, மனிதாக மாறும் பரிணாம நிலை!

இது ஒவ்வொரு காலகட்டத்திற்கும், ஏற்ப மாறிகொண்டிருக்கும்.

உடையணியாதவன், கோவணத்துண்டு கட்டும் போது, அது நாகரீகம் என ஒரு காலத்தில் நம்பப் பட்டது!

உடையில்லாமல், அல்லது அரை குறை உடையில் திரிவது, நாகரீகமாக, இப்போது பார்க்கப் படுகின்றது!

தனிமை, என்ற நிலையைத் தாண்டிச் சமூகம் என்ற கருதுகோழுக்குள் அவன் நகர்ந்த போது, அந்தச் சமூக ஒழுங்கைக் காப்பதற்காகச் சில நடைமுறைகளை, அவன் கடைப்பிடித்தாக வேண்டி வந்தது.

அன்றிலிருந்து, அவன் நாகரிக மாந்தனானான் என்று எடுத்துக் கொள்ளலாம்!

உங்கள் வரலாற்றுப் பதிவை, வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமோ; உடல் உறுப்புக்களை பாதுகாக்க வேண்டிய தேவை வந்த போது, கிடைத்த பொருட்களை பாவிக்க தொடங்கினான், இதுவே பின்னர் நாகரீகமாக வளர தொடங்கியது

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையாக மாமிசத்தை உண்டவன், நெருப்பை கண்டுபிடித்து... சுட்டுச் சாப்பிட்டதை நாகரீகம் என்பதா....

அம்மணமாக திரிந்தவன்... இலை, குழையை அணிந்ததை.. நாகரீகம் என்பதா...

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் நாகரீகம் வேறுபடும் என் நினைக்கின்றேன்.

சுமோ, உங்கள் கட்டுரையில்... அதனையும் விரிவாக தொட்டுச் செல்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு சிவகணேசன் அவர்களுடன் இது பற்றிக் கதைத்திருக்கிறேன்.நிறைய விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்.அவர் எழுதிய புத்தகம் ஒன்றும் இருக்கிறது. நேரம் வரும்போது இணைக்கிறேன்.

[size=4]அனைவருக்கும்[/size][size=4]வணக்கம்[/size][size=4].[/size]

[size=4]தமிழர்கள் [/size][size=4]பற்றிய[/size][size=4] ஆராய்வு[/size][size=4] ஒன்றை[/size][size=4] உங்கள் முன் [/size][size=4]வைக்கிறேன்[/size][size=4]. [/size][size=4]களத்தில்[/size][size=4] பல்துறைசார்[/size][size=4] அறிவுடையோர்[/size][size=4] இருக்கின்றீர்கள்[/size][size=4]. [/size][size=4]உங்கள் [/size][size=4]சிந்தனையில்[/size][size=4],[/size][size=4]வினாக்களின்[/size][size=4] மூலம் [/size][size=4]இத்தொடரை [/size][size=4]நகர்த்துவது[/size][size=4] எனக்குப [/size][size=4] பல[/size][size=4]பரிமாணங்களைக்[/size][size=4] காட்டும்[/size][size=4] என்பதோடு [/size][size=4]மேலும்[/size][size=4] என்னையும் [/size][size=4]தெளிவடைய[/size][size=4]வைக்கும்[/size][size=4] என[/size][size=4]நம்புகிறேன்[/size][size=4]. [/size][size=4]இத்தொடருக்குப்[/size][size=4] பலமான[/size][size=4] கல்வீச்சும் [/size][size=4]இருக்கும் [/size][size=4]என்பதிலும்[/size][size=4] சந்தேகமில்லை[/size][size=4]. [/size]

[size=4]முக்கியமாக[/size][size=4] இத்தொடரை[/size][size=4] எழுதுவதற்கான [/size][size=4]தகுதி [/size][size=4]என்னிடம்[/size][size=4] உள்ளதா[/size][size=4] என்று[/size][size=4] என்னையே [/size][size=4]நான்[/size][size=4] கேட்டதுண்டு[/size][size=4]. [/size][size=4]இதை [/size][size=4]எழுதும்[/size][size=4]நோக்கம்[/size][size=4] எனக்குத் [/size][size=4]தெரிந்த [/size][size=4]ஒன்றை[/size][size=4] மற்றவர்க்கும்[/size][size=4] தெரியப்படுத்த வேண்டும்[/size][size=4] என்பதும்[/size][size=4] , [/size][size=4]என்[/size][size=4] எழுத்து[/size][size=4] மேலும்[/size][size=4] பலரை[/size][size=4] ஆய்வுக்குத்[/size][size=4]தூண்டாதா[/size][size=4] என்னும் [/size][size=4]நப்பாசையும்[/size][size=4] தான்[/size][size=4]காரணம்[/size][size=4]. [/size]

[size=4]என்[/size][size=4] தமிழ்[/size][size=4] ஆர்வத்தை[/size][size=4]கண்டு[/size][size=4] எனக்கு[/size][size=4] சுமேரியர்[/size][size=4]பற்றி [/size][size=4]ஆர்வத்தை[/size][size=4] ஏற்படுத்தி[/size][size=4] இன்று [/size][size=4]உங்கள் முன்[/size][size=4] எழுதுமளவு [/size][size=4]தூண்டியவர்[/size][size=4] சிவகணேசன்[/size][size=4] அண்ணா[/size][size=4]. [/size][size=4]அவருக்கு [/size][size=4]நன்றி கூறிக்கொண்டு[/size][size=4] உங்கள்முன்[/size][size=4] சில [/size][size=4]வினாக்களை[/size][size=4] வைக்கின்றேன்[/size][size=4].[/size]

வரலாறு என்றால் என்ன ?

இது எப்பவுமே சர்ச்சைக்குரியது . அந்தந்தக் காலகட்டங்களில் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்றவகையில் வரலாறு என்று எழுதப்பட்டதாகும் . இதை வேண்டுமானால் கூட்டல் கழித்தல்கள் வைத்து ஒரு சம்பவத்தை எழுதும் பொழுது ஆதாரமாக சேர்த்துக்கொள்ளலாம் .

வரலாறு எப்போது யாரால் எழுத ஆரம்பிக்கப்பட்டது ?

நட்சத்திரவெடிப்பின் ஆரம்பமே வரலாறு தொடங்கிவிட்டது . எழுதியது மனிதன் தானே ??

நாகரிகம் என்றால் என்ன?

பொதுவாக சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் மனித நாகரீகத்தின் அடிப்படை என்று நினைக்கின்றேன் . இவைகளும் காலத்திற்குக் காலம் மாறுபடக்கூடியவையே .

முதல் மனிதன் எங்கே எப்போது நாகரிக மாந்தனானான்?

மிருகங்களுடன் மிருகமாகத் திரிந்தமனிதன் குழுமங்களாக உருவாகி உறவுநிலைகள் தோன்றியபொழுது நாகரீகமாந்தனாகியிருந்தான் .

Edited by கோமகன்

Neanderthal மனிதனில் இருந்து ஆபிரிக்காவில் ஆரம்பித்து உலகின் பல பகுதிகளுக்கும் குடிபரம்பல் ஏற்பட்டதாக பேராசிரியர் ஒருவரின் உரையில் கேட்டேன். அவர் தனது உரையில் நாம் கறுவல்களிலிருந்தே - ஆபிரிக்காவிலிருந்து தோன்றினோம். எனவே, நிற வேறுபாடுகள் எல்லாம் அர்தமற்றவை என்று கூறினார்.

இங்கு சாத்திரி அறிவுபூர்வமான ஒரு விடயத்தை நகைச்சுவையாகக்கூறியுள்ளார். டீஎன்ஏ ஒப்பீட்டு ஆராய்ச்சி வெவ்வேறு விடயங்களை ஆழமாக அறியவுதவும்.

489px-Homo_neanderthalensis_2_cogitas3d.png

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்திற்கு நன்றி கரும்பு. இத்தொடரில் DNA பற்றிய தகவல்களும் வரும் பொறுத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வால்காவிலிருந்து கங்கைவரை என்னும் நூலை எழுதிய ராகுல் சாங்கிருத்தியாயன் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவர் சிறந்த எழுத்தாளரே அன்றி ஆய்வாளர் அல்ல. அவர் பாளி, திபெத், சம்ஸ்கிருத நூல்களைக் கற்று அந்தப் பாதிப்பில் நூல்களை எழுதியவர். பாளி மொழியில் மகாநாமதேரரால் ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தய வரலாறு எப்படிக் கற்பனை கலந்து எழுதப்பட்டதோ அப்படியானதுதான் வால்காவிலிருந்துகங்கைவரை நூலும்.எவராவது தன்னினத்திலும் விட மற்றைய இனம் மேலானது எனத் தெரிந்தாலும் எழுதமாட்டார்கள் தமிழனைத் தவிர. அப்படியிருக்க ஆரிய வழித்தோற்றல் ராகுல் மட்டும் என்ன விதிவிலக்கு.

தமிழர்கள் எல்லோரும் கறுப்பானவர்கள் என்பது உண்மைதான் ஆனால் குள்ளமாக விகாரமான பற்களுடனுமா தமிழினம் இருக்கிறது???அவர்கள் எழுதுகின்றனர் என்றால் உங்கள் புத்தி எங்கே போயிற்று கிருபன். கம்பன் என்னும் தமிழ்ப் புலவன் புகழ் போதையில் தன்னினத்தையே இகழ்ந்து எழுதிய காப்பியம் தான் கம்பராமாயணம். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் கோரமான பற்களுடன் மாமிசம் உண்ணும் அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தான் என ராமாயணத்தை ஆய்வுசெய்த ஒரு அறிஞர் எழுதியிருந்தார். இலக்கிய நயம் சொட்டக் கம்பன் எழுதியவுடன் அவரின் கற்பனை வளத்தின்முன் நாமெல்லாம் கட்டுண்டு இன்றுவரை நின்றுகொண்டிருக்கிறோம்.எமக்குள் நாம் பெருமை கொள்ள வேண்டுமே தவிர உலகிற்கே எழுத்தறிவித்த நாம் உலகின்முன் தலை குனிய வேண்டியதே இல்லை.

புங்கையூரானும் , தமிழ்ச் சிறியும் சில உண்மைகளைத் தொட்டு நிற்கின்றீர்கள்.நாகரிகம் என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லும் அறிவு எனக்கு இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன். நாகரிகம் என்பது மனித இனத்தின் புறத்தோற்ற வளர்ச்சியே.உடை அணிவதில்,உணவு உண்பதில், மற்றவருடன் தொடர்பாடலை ஏற்படுத்துவதில், நீங்கள் சொன்னதுபோல் ஈழத்தில் சேலையை மட்டும் அணிந்த பாட்டி வெளிநாடு வந்தால் குளிருக்குக் காற்சட்டை அணிவது உட்பட நாகரிகம்தான்.நாகரிகம் இடத்துக்கேற்ப மக்களுக்கேர்ப்ப காலத்துக்குக் காலம் மாறுபடும்.ஆனால் பண்பாடு பெரும்பாலும் மாறாது.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Neanderthal மனிதனில் இருந்து ஆபிரிக்காவில் ஆரம்பித்து உலகின் பல பகுதிகளுக்கும் குடிபரம்பல் ஏற்பட்டதாக பேராசிரியர் ஒருவரின் உரையில் கேட்டேன். அவர் தனது உரையில் நாம் கறுவல்களிலிருந்தே - ஆபிரிக்காவிலிருந்து தோன்றினோம். எனவே, நிற வேறுபாடுகள் எல்லாம் அர்தமற்றவை என்று கூறினார்.

இங்கு சாத்திரி அறிவுபூர்வமான ஒரு விடயத்தை நகைச்சுவையாகக்கூறியுள்ளார். டீஎன்ஏ ஒப்பீட்டு ஆராய்ச்சி வெவ்வேறு விடயங்களை ஆழமாக அறியவுதவும்.

மிக்க மந்த புத்தியும், அலுத்த சலுத்த கனதியான உடம்பையும் கொண்ட நீயோண்டத்தாக்களை, விறு விறுப்பானதும் சிறியதுமானதுமான உடலும், நுணுக்கமாக ஆராயும் மூளையும் கொண்ட மனித குலம்(ஹொமொசப்பியர்கள்)25,000- 50,000 ஆண்டுகளுக்கு கிட்ட ஐரோப்பா எங்கும் வைத்து அழித்துவிட்டார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான் எங்கிருந்து இப்படியான தகவல்கள் பெற்றீர்கள் என்றும் கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]by A. L. Basham: A Cultural History of India [/size]

books.jpg

[size=4]இந்த புத்தகத்தை பஷம் பல ஆசிரியர்களின் கட்டுரைகளில் இருந்து தொகுத்திருக்கிறார். அதற்கு தான் ஒரு முன்னுரை கொடுத்திருக்கிறார். அதன் 4ம் அல்லது 6ம் பக்கத்தில் திராவிடரின் உருவத்தை விவரித்திருக்கிறார். புத்தகம் ஆப்பிட்டால் பக்கத்தை நீங்கள் தவற விடக்கூடிய சந்தர்ப்பம் குறைவு.

"மென்மையான பார்வையும், அருள் வடியும் உருவமும், உளியால் செதுக்கிவிட்ட அவயவங்களும் கொண்டவரகள் இந்த இனம். இப்பொழுது இந்தியா எங்குமே இனம் கலப்பு நிகழ்ந்து விட்டதால் நீங்கள் வழிதெருவில் சுத்த திராவிடர் ஒருவரை சந்திக்க தக்க சந்தர்ப்பம் குறைவு. இருந்தாலும் உயரிய திராவிட பாசைப் பிரயோகம் உடைவர்களிடம் நீங்கள் இந்த திராவிடர்களின் அவய அதிசயங்களை தெளிவாக காணலாம்"

திராவிட ர் நீக்குறோக்கள் அல்ல என்பதும் திராவிடர் (ஒரு வகையில்)ஆரியர் என்பதும் இப்போது வைக்கப்படும் கருது கோள்கள்.

இதில் ஆரியர் என்ற சொல் வெள்ளையர் என்பதாகும். [/size]

[size=4]10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய தரை கடல் பகுதியில் இருந்து வந்து 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளியில் குடியேறிய இனம் இது. எனவே உண்மையான உறவு திராவிடருக்கும் சுமேரியருக்கும் குறந்தது 4000 ஆண்டுகள் இடைவெளி. 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மதிய கிழக்கில் தங்கிவிட்டவர்கள் சுமேரியர். தொடர்ந்து கிழக்கே வந்தவர்கள் திராவிடர். சிந்து வெளியில் காணப்படும் திராவிடருக்கும் சுமேரியருக்கும் உடல் உருவில் 4000-5000 வருட வேறுபாடு.

கடைசி நாகரிக காலங்களில் இருவருக்கும் இடையில் இருந்த வர்த்தக, கலாச்சார உறவுகளால் குழம்புவோர் இருவரும் ஒரே குலம் என்கிறார்கள். ஆனால் 4000 வருட பிரிந்து வாழ்ந்துவிட்ட இடைவெளி அங்கிருப்பதால், சுமேரியர் சுமேரியர்; திராவிடர் திராவிடர். இந்தியாவில் வைத்து இனம் கலந்த திராவிடர் நீக்குறோக்கள் அல்ல.[/size]

நல்லது. சந்தர்ப்பம் வரும்போது படித்துப் பார்க்கின்றேன். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் எப்படி உருவானது என்று விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து சொல்ல முனைபவர்கள் மனிதனின் பரம்பலையும் துல்லியமாகச் சொல்லும் காலம் வரும்தானே. அதுவரை கருதுகோள்களை வெறும் கருதுகோள்களாக நினைத்து நான் தமிழன் என்றே வாழ்வேன்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழர்கள் எல்லோரும் கறுப்பானவர்கள் என்பது உண்மைதான் ஆனால் குள்ளமாக விகாரமான பற்களுடனுமா தமிழினம் இருக்கிறது???அவர்கள் எழுதுகின்றனர் என்றால் உங்கள் புத்தி எங்கே போயிற்று கிருபன். கம்பன் என்னும் தமிழ்ப் புலவன் புகழ் போதையில் தன்னினத்தையே இகழ்ந்து எழுதிய காப்பியம் தான் கம்பராமாயணம். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் கோரமான பற்களுடன் மாமிசம் உண்ணும் அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டிருந்தான் என ராமாயணத்தை ஆய்வுசெய்த ஒரு அறிஞர் எழுதியிருந்தார். இலக்கிய நயம் சொட்டக் கம்பன் எழுதியவுடன் அவரின் கற்பனை வளத்தின்முன் நாமெல்லாம் கட்டுண்டு இன்றுவரை நின்றுகொண்டிருக்கிறோம்.எமக்குள் நாம் பெருமை கொள்ள வேண்டுமே தவிர உலகிற்கே எழுத்தறிவித்த நாம் உலகின்முன் தலை குனிய வேண்டியதே இல்லை.[/size]

புத்தகத்தில் இருந்ததைத்தான் பதிந்திருந்தேன் :)

தமிழன் என்பதில் பெருமைதான் ஆனால் தமிழினம் என்பதில் பெருமை கொள்ளும் காலம் இன்னமும் கனியவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.