Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பாரிய எண்ணிக்கையிலானவர்கள் தமிழீழ விடுதலைக்கு ஒரு துரும்பைத்தன்னும் கிள்ளிப்போடாதவர்களே. அவர்கள் எல்லாம் இப்படியான களியாட்ட நிகழ்ச்சிகளுடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்பவர்களே. உங்கள் நட்புவட்டத்தில் யாருடனாவது ஈழவிடுதலைபற்றியோ அன்றேல் தேசத்தின் தற்போதைய நிலைபற்றியோ பேச்சுக்கொடுத்துப்பாருங்கள் தங்களுக்கு எல்லாம் தெரியுமென்பதாகவும். எல்லாம் முடிஞ்சுபோச்சு இதுக்குப்பிறகு நீங்கள் என்னத்தைக் கதைக்கிறியள் எனவுமே கூறுவர். முள்ளிவாய்க்காலுக்கு முன்பு இப்படிப்பட்டவர்கள் எதையும் விடுதலைக்காக உதவவில்லை. எப்போதுமே உதவமாட்டார்கள்.

நாற்பதினாயிரத்துக்கு அதிகமான மாவீரர்களையும் இறுதிவரை களத்தில் நின்ற தலைவரையும் மனதில் நினக்கும் எவனும் தான் செய்யும் ஒவ்வொரு விடையத்தையும் அதனுடன் பொரந்த்தியே பார்ப்பான். என்னால் ஒரு கணமும் இவற்றினை என் மனதினின்றும் அகற்றிவிட்டு வாழமுடியாது. பல்லாயிரவர்களது ஈகமும் தலைவனது இறுதிக்களமும் ஏதோ ஒரு வகையில் என்னை நேரிய வழியில் செல்ல உதவிசெய்யும். இளையராஜா என்ன அதற்கு மூத்தராஜக்களது இசை நிகழ்சிக்குப்போவோர்கள் போங்கள் அதற்கு முன் என் தேசத்தின் விடுதலைகாய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அச்செல்வங்களை ஒரு நிமிடம் நினைத்துவிட்டுப் போங்கள்.

  • Replies 248
  • Views 19.9k
  • Created
  • Last Reply

இளையராஜா எங்களுக்காக என்ன செய்தார்? 30 வருடம் உயிர்வாழ, தமிழ் வாழ எவ்வளவு தியாகங்கள் செய்தோம்.

தமிழ்சினிமாவில் சக்கை போடு போட்ட இவர் , எங்களுக்காக ஒரு ஒப்பாரி பாடலாவது பாடினாரா?

ஈழத்தமிழன் என்றாலே யார் என்று கேட்கும் அளவுக்கு தான் அவரின் அவரின் அறிவு இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை காலமும் மூச்சு விடாதவர்கள் எல்லாரும் முள்ளிவாய்ய்காலுக்கு பின் வெளிக்கிட்டார்கள்?

எந்த முகத்தோடு வருகிறார்கள்? வெட்கம் இல்லை?

வந்தாலும் செத்த வீட்டுக்கு போனவன் போல பாடிபோட்டு போகட்டும்

நீங்கள் இன்னும் வளரனும் :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சங்கம் :lol:

ஆக எல்லாம் சுத்திச் சுத்தி சுப்பற்ர கொல்லைக்குள் இருந்துதான் அறிக்கைகள் பிறக்கின்றன :rolleyes:

அட போங்கப்பா போய் வேற வேலை ஏதும் இருந்தா பாருங்க

இன்று என்னுடைய வேலை இடத்தில் இதைப்பற்றி பேசினார்கள் நானும் வழமைபோல் வாயை இறுக மூடிக் கொண்டேன்.

எல்லோரும் போவதற்கு தயாரான நிலையில் சேலை உடுத்திச் செல்வதா? சுடிதார் அணிவதா? அல்லது பாண்ட் சேர்ட் அணிவதா என்று அளவளாவினார்கள் என்னிடம் கேட்டார்கள். நான் உங்களுக்கு விருப்பமானதை அணியுங்கள் என்று விட்டு ஒரு கேள்வியை முன்வைத்தேன். இசைஞானியின் நிகழ்வு நடக்கும் இடத்தில் சில கடுந்தேசியவாதிகள் என்று தம்மை தலைப்பாகை கட்டிக்கொண்டு விளம்பரம் செய்யும் ஒரு கூட்டம் பதாதைகளுடன் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் எப்படிப் போவீர்கள் என்றேன்.... அவர்களுக்கு வந்ததே கோபம்.... அப்படி ஆட்டிக் கொண்டு நிற்பவர்கள் நிற்கட்டும் நாங்கள் செல்வோம். எந்தவித நேர்மையும் இன்றி இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு பயந்து ஒதுங்குவதற்கு தாங்கள் ஒன்று ம் அறிக்கை விட்டவர்களின் வீட்டில் குந்தியிருக்கவில்லை என்றார்கள்...... இந்தக்கருத்தை சொன்ன அவர்கள் தாயக உணர்வற்ற மக்கள் என்று ஒதுக்கிவிடவும் முடியாது... முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த நாட்களில் இரவு பகலாக தெருக்களில் நின்று அழுது புலம்பியவர்கள் ஆக மக்கள் இந்நிகழ்வை வெற்றியடைய வைக்கத்தான் போகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்றால் மாவீரர்கள் பெயரால் மக்களைத் தடுத்தவர்களை மீறி மக்கள் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றார்கள் என்று ஒரு செய்தி வெளிவரப்போகிறது.

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத அத தான் நானும் சொல்லுறன் நக்கீரன் ஐயாவும் தலையில ஒரு துண்ட போட்டிட்டு நிகழ்ச்சியில் ஒரு மூலையில இருந்தாலும் ஆச்சரியம் இல்லை ஒரு படத்தில காக்கா ராதா கிருஷ்ணன் மாதிரி

கனடா தமிழ் சங்கத்தினருக்கு அன்பான வேண்டுகோள்..!

இளையராஜா இசை கச்சேரியை எதிர்ப்பதின் மூலம், என்ன சாதித்து விடப் போகிறீர்கள்..? நவம்பர் மாதம் என்றால் புலம் பெயர் மக்களுக்குத் தான் சொந்தம் என்ற ஒரு கருத்தே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள்..? அவர்களின் பின்புலம் என்ன..? அவர்களின் அரசியல் என்ன..? என்பதை விமர்சிக்காமல் ஒட்டு மொத்த நவம்பர் மாதத்தை குத்தகைக்கு எடுப்பதில் என்ன லாபம் ..? என்ன நட்டம்..?

நவம்பர் 26 மாவீரர்கள் தினம், இந்த கருப்பு தினத்தை அனைவரும் துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர் இதுகாறும் ஈழத்து மக்கள் அனைவரும். ஈழ யுத்தத்தில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர், பல லட்சம் மக்கள் தெருவில் திரியவிடப் பட்டிருக்கிறார்கள்.ஐ.நா.வின் அறிக்கை தொடங்கி, இன்று ஈழ அரசியல் அமெரிக்க மற்றும் பிரிக் நாடுகளின் மிக முக்கிய கேந்திரமாக மாறிவிட்டன. அதை நோக்கி அரசியல் காய் நகர்த்துதல்கள் துவங்கி விட்டன.

தா.தே.கூ.வினருக்கு வழங்கப்பட்ட மரியாதை மற்றும் பேச்சு வார்த்தைகள் என்று ஒருபுறம் சூடு பிடிக்க, உலகத் தமிழர்கள், தமிழ் நாட்டு மக்கள் இலங்கையில் நடந்துள்ள கொடும் துயரங்களை தற்பொழுது தான் அறிந்து பெரும் ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர். போர்க்குற்ற நடவடிக்கை வேண்டும் என்று கூற துவங்கிவிட்டனர். இந்நிலையில், தமிழக மக்களால் பெரிதும் ஆதரவு பெற்ற, தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட கலைஞனுக்கு ஒரு இசை விழா நடத்துகிறார்கள் கனடா நாட்டில், அவரின் இசை நிகழ்ச்சிக்கு பின்புலமாக உள்ளவர்களை அம்பலப்படுத்தாமல், பங்கேற்பவரை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்...?

மேலும் நவம்பர் மாதத்தை சொந்தம் கொண்டாடும் போக்கினை மிக கடுமையாக எதிர்க்க வேண்டும். ஒருவேளை கனடா நாட்டின் தமிழ் சங்கத்தில் பல கருப்பு ஆடுகள் இருக்கலாம்..என்று தோன்றுகிறது. நவம்பர் மாதத்தையே கேவலப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம் உளவியல் ரீதியாக புலிகளின் ஆதரவு சக்திகளை, சுதந்திர ஈழம் என்ற கருத்தாக்கத்தை சீர் குலைக்கும் முயற்சியே என்று அறிந்து கொள்ளலாம்.

நாளைடைவில், நவம்பர் மாத கொண்டாட்டங்கள் என்று புற்றீசல் போல கிளம்புவதற்கு இந்த எதிர்ப்பு பயன்படப் போகிறதோ..? என்று அச்சமாக உள்ளது. எனவே இது குறித்து புலம் பெயர் மக்கள் கவனம் கொள்ள வேண்டும். இவை குறித்த பிரச்சனையை எதிர் கொண்டு புலத்து மக்களுக்கு ஒரு புரிதலை அளிக்க வேண்டும், உலகத் தமிழர்களுக்கும் அளிக்க வேண்டும் ஈழ அறிஞர்கள், பெருமக்கள்...! என்று விரும்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

அடிடா சக்கை எண்டானாம். நவம்பர் 26 மாவீரர் தினமாம். அது கருப்பு தினமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்டில் நடக்கும் மாவீரர்நாளை விடவா இதெல்லாம் பெரிய கொண்டாட்டம்????? :unsure:

[size=1]நியானி: சொல் ஒன்று நீக்கம்[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]இளசு வந்து பாடபோறது வெறும் பத்து பாட்டு............[/size]

[size=1]

அதை வைச்சு ஆயிரம் பாட்டு பாடியாகிவிட்டது.[/size]

இளையராவே நிகழ்வை விட்டாலும் நம்மவர்கள் விட மாட்டார்கள்-

யாராவது மாண்டு தமிழீழம் பெற்றுத் தந்தால் ஏற்றுக் கொள்ளலாம்-

மற்றும் படி நாங்க எந்த தியாகமும் செய்ய மாட்டோம் . வேணும் எண்டால் ஒரு கொஞ்ச காசை பிச்சைக் காரனுக்கு எறிந்த மாதிரி உந்த புலிகளுக்கு கொடுக்கலாம். எங்கட சந்தோசத்தை நாங்க யாருக்காவும் விட மாட்டோம் .

நாங்களா சொன்னாங்கள் போய் போராடி சாவுங்கோ எண்டு. லூசு பயலுகள் வாழத் தெரியாதவர்கள். நாங்கள் வெளிநாட்டில இருக்குறோம் இவை ஆர் எங்களை கட்டுப் படுத்த??

2009 இற்கு முன் இவையின் சொல் கொஞ்சம் கேட்டனாங்கள், ஏன் எண்டா புலி ஊரில பலமாய் இருந்தது. சொல்லு கேட்காட்டி பிரச்னை ஊருக்கு போக கஷ்டம்.

அதை விட எப்பவும் வெல்பவன ஆதரிக்கிறது நல்லது தானே. அப்பதானே மேடை கிடைக்கும் அவையின் பெயரில் குளிர் காயலாம் . இப்ப இதெல்லாம் தேவை இல்லை . நாங்க எப்பவும் ஓடுற குதிரையில பணம் கட்டுற ஆக்கள். இப்பதான் புலி ஓடாத குதிரை ஆச்சே. அப்புறம் ஏன் நாங்க இவையளின் சொல்லு கேட்கணும். ஒரு கொஞ்ச பன்னாடையல் புழக்க தெரியாமல் ஒன்னும் தேசியம் எண்டு அழியுதுகள் நாங்க அப்பிடி இல்லை.

முடிஞ்சா மவீரதினத்திலும் நல்ல படம் ஓடினா போய் பார்ப்போம் அது பின்னேரம் தானே 24 மணித்தியாலமும் அவை பற்றி சிந்திக்க அவசியம் இல்லை, வடிவா பாத்திங்கள் எண்டா ஒண்டு தெரியும் முந்தி உண்மையா யாரு தேசியம் எண்டு சொல்லி கஷ்டப் பட்டினமோ அவை தான் இப்பவும் தேசியம் எண்டு திரியினம். முந்தி படம் காட்டி சொகுசா வாழ்ந்தவை இப்ப இன்னும் நல்லா வாழுகினம், சரி சரி அதை பற்றி எங்களுக்கு என்ன நாங்க எங்கட என்ஜோய பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

. நாங்கள் வெளிநாட்டில இருக்குறோம் இவை ஆர் எங்களை கட்டுப் படுத்த??

. ஒரு கொஞ்ச பன்னாடையல் புழக்க தெரியாமல் ஒன்னும் தேசியம் எண்டு அழியுதுகள் நாங்க அப்பிடி இல்லை.

முடிஞ்சா மவீரதினத்திலும் நல்ல படம் ஓடினா போய் பார்ப்போம் அது பின்னேரம் தானே 24 மணித்தியாலமும் அவை பற்றி சிந்திக்க அவசியம் இல்லை,

வடிவா பாத்திங்கள் எண்டா ஒண்டு தெரியும் முந்தி உண்மையா யாரு தேசியம் எண்டு சொல்லி கஷ்டப் பட்டினமோ அவை தான் இப்பவும் தேசியம் எண்டு திரியினம். முந்தி படம் காட்டி சொகுசா வாழ்ந்தவை இப்ப இன்னும் நல்லா வாழுகினம், சரி சரி அதை பற்றி எங்களுக்கு என்ன நாங்க எங்கட என்ஜோய பார்ப்போம்

உண்மையான

நிதர்சனமான எழுத்து

இன்னும் ஒன்றையும் சேர்த்து விடலாம்

ஆடம்பரமாக மாவீரர் நாள் செய்யினம் என்று காது கிழியக்கத்தினம்

இங்கு பரிசில மெழுகு திரி மட்டும கொழுத்தி மாவீரர் நாள் செய்யும்போது எத்தனை பேர் வந்தவ என்பது நாமறிவோம்.

இப்பவும் சுடலையில போய் காலையில விளக்கு வைச்சுவிட்டுத்தான் மாவீரர் மண்டபத்துக்கு போறனாங்கள். அங்க எத்தனை பேர் வாறவை என்று கை விரலால எண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று என்னுடைய வேலை இடத்தில் இதைப்பற்றி பேசினார்கள் நானும் வழமைபோல் வாயை இறுக மூடிக் கொண்டேன்.

எல்லோரும் போவதற்கு தயாரான நிலையில் சேலை உடுத்திச் செல்வதா? சுடிதார் அணிவதா? அல்லது பாண்ட் சேர்ட் அணிவதா என்று அளவளாவினார்கள் என்னிடம் கேட்டார்கள்.

[size=4]அவர்களின் கதையை கேட்டு ............[/size][size=1]

[size=4]சேலை சட்டை என்று அணிந்து விடாதீர்கள். [/size][/size][size=1]

[size=4]குளிருக்கு நல்ல ச்வேற்றர் ஒன்றை அணிந்து போங்கள். உள்ளுக்கு கழட்டி வைக்கலாம் பாட்டு கச்சேரி முடிந்தவுடன் வெளியிலே திரும்பவும் போட்டு கொள்ளலாம்.[/size][/size]

[size=1]

[size=4]காட்சி நடத்த இளைய ராசா வாரார்! அவர் அதை பார்த்து கொள்வார்.[/size][/size][size=1]

[size=4] நீங்கள் தான் உங்களை பார்த்து கொள்ளவேணும்.[/size][/size]

இளையராஜா எங்களுக்காக என்ன செய்தார்? 30 வருடம் உயிர்வாழ, தமிழ் வாழ எவ்வளவு தியாகங்கள் செய்தோம்.

தமிழ்சினிமாவில் சக்கை போடு போட்ட இவர் , எங்களுக்காக ஒரு ஒப்பாரி பாடலாவது பாடினாரா?

ஈழத்தமிழன் என்றாலே யார் என்று கேட்கும் அளவுக்கு தான் அவரின் அவரின் அறிவு இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவரை காலமும் மூச்சு விடாதவர்கள் எல்லாரும் முள்ளிவாய்ய்காலுக்கு பின் வெளிக்கிட்டார்கள்?

எந்த முகத்தோடு வருகிறார்கள்? வெட்கம் இல்லை?

வந்தாலும் செத்த வீட்டுக்கு போனவன் போல பாடிபோட்டு போகட்டும்

புலம்பெயர்ந்த நாம் ஈழத்துக்காக என்ன செய்தோம்?

-புலிகளாலும் பிரச்சனை அரசாங்கத்தாலும் பிரச்சனை என்று அகதி அந்தஸ்த்து பெற்றோம்

-வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசியம் பேசினோம்.

-வெளிநாட்டு ஆதரவை வாங்கித்தாரோம் என்று முள்ளிவாய்க்கால் வரை அழிவுக்கு வழிகாட்டினோம்

-போராடவேண்டாம் எல்லோரும் வெளிநாட்டுக்கு ஓடிவாருங்கள் என்று சனத்துக்கு வழிகாட்டினோம்

-தேசீயத்தை சிதைத்து சிங்களப்பெருந்தேசீயத்தக்கு பேருதவி செய்தோம்

-யுத்தத்துக்கு என்று சேர்த்த காசை கொள்ளைஅடித்தோம்

-தேசீயத்தை கையில் எடுத்து ஆழுக்காள் அந்தஸத்து அடயாளப்போட்டி நடத்துகின்றோம்

-மாவீரர் குடும்பங்களும் முன்னாள் போராளிகளும் உணவுக்குக் கூட வழியின்றி நரகவாழ்க்கை வாழ புலத்தில் இருந்து மாவீரச் செல்வங்கள் குஞ்சுகள் தெய்வங்கள் என்று மகா நடிப்பும் முதலைக் கண்ணீரும் விடுகின்றோம்.

அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்று வக்கணையாக கேள்வி கேட்க முதல் நாம் என்ன மயிரை புடுங்கினோம் என்று ஒரு கேள்வி இருக்கின்றதல்லவா?

சிங்களவன் ஈழத்தமிழனை அடித்தது மட்டும் தமிழர்களுக்கான ஒடுக்குமுறை இல்லை. இன்று நாம் இரண்டாம்தரப் பிரஜைகளாக வெளிநாடுகளினல் வாழ்வதற்கு எம்மில் ஒளிந்திருக்கும் அடிமைக் குணம் காரணமாக இருக்கின்றது. எம்மை ஒரு சக்தி காலாகாலம் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது. மொழி பண்பாடு கலாச்சாரம் இசை ஆன்மீகம் என அனைத்தினுடாகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது. இதன் ஒரு கூற்றில் இருந்து தமிழிசையை மீட்டெடுத்ததில் பெரும் பங்கு இளையாரஜாவை சாரும். ஒரு கேள்வி கேட்கமுதல் அக் கேள்வி கேட்பதற்கான தகுதி எம்மிடம் இருக்கின்றதா என்று சிந்திப்பது அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் மாவீரர்களை கொச்சைப்படுத்த வில்லை எமது ஆதங்கம் எல்லாம் இதே தமிழ் சங்கம் இளைய ராஜாவின் நிகழ்ச்சியை அறிவித்த உடன் எதிர்ப்பு கூறி இருக்கலாம் இப்போ எதிர்ப்பதன் மர்மம் என்ன?

Edited by SUNDHAL

நிகழ்ச்சி அறிவிப்பு வந்தவுடன், நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் பேசி திகதியை மாற்றியிருக்கக் கூடிய எளிய விடயம். அதைச் செய்யாமல் கடைசி நேரத்தில் பொறுப்பற்ற முறையில் இணையத்தில் ஆள் மாறி ஆள் அறிக்கை விட்டு அடிபதுவது பிரிவினைகளைத்தான் கூட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் எழுதிக்களைத்த விடையம் மறுபடி மறுபடி எழுதவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்.., இருக்க,

இளையராஜாவுகோ அல்லது சீமானுகான காழ்ப்புணர்வோ,அல்லது புகழ்பாடுதலோ அல்ல நோக்கம்.

தேசியம் என்பதை ஒரு சிலர் தமது சொந்த நலன்களுக்காய் விலைபேசுவதை,கேவலப்படுத்துவதை சுட்டிக்காட்டவேண்டியது தான் இதில் எழுதும் பலரின் நோக்கமே அன்றி இன்னும் தேசியம் என்ற போர்வையில் மக்களை மந்தைகளாக்கும் செயல்களை ஊக்குவிக்க அல்ல. புலிகளின் ஆதரவாளர்களும்,புலி என்று வக்காளத்து வாங்குபவர்களும்,புலிக்கு கொடி பிடித்தவர்களும் தான் தேசியவாதிகள் என்றால் தேசியம் என்றால் என்ன? என்ற கேள்வியே அடிப்படையில் அடிபட்டு போகிறது.

தேசியம் குறித்த அறிவு,சிந்தனையிருந்தால் இந்தளவு பிரச்சனைகள் தேவையில்லை.

கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாகவோ,துக்கம் அனுஸ்டிப்பதாகவோ கொள்வதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் இப்படியான ஒரு விடையத்தை யார்? எப்போது? உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்?

ஈழத்தமிழ்மக்களைப்பிரகடனப்படுத்தும் அமைப்புக்கள் யாரும் அறிவித்தார்களா? இல்லை இதுபற்றி ஏதும் கருத்துக்கணிப்புக்கள் நடத்தப்பட்டனவா?? அவ்வாறு இல்லை எனில் சொந்தநலனுக்காய்,வியாபாரப்போட்டிகளுக்காய் மாவீரர்களையும்,அவர்தம் தியாகங்களையும்,மாண்டமக்கள்,தேசியத்தின் பெயரில் கொச்சைப்படுத்துவதை அதே தேசியம்,மாவீரர்கள் பற்றி பேசியே எவ்வாறு ஆதரிக்கிறீர்கள்???? தேசியம் குறித்து வாய்கிழியபேசும் அதே கூட்டம் தான் தேசியத்தின் பெயரில் இவற்றை எல்லாம் செய்கிறது.

இன்றைக்கு கார்த்திகை மாதத்தை கொண்டாட சொல்லும் கூட்டம் நாளை இன்னொருமாத்தையும் மாவீரர்,தேசியத்தின் பெயரில் வியாபாரமாக்கும்,ஈழவரலாற்றில் எந்த மாதத்ட்தில்,இழப்புக்களும்,இறப்புக்களும் இல்லை அப்பவும் இதே கூட்டம் தான் தேசியத்தின் பெயரில் சுயநலம் தேடும். அப்பவும் வாய்பொத்தி இருக்க சொல்வீர்களா????

மாற்றுக்கருத்துக்கள் என்ற போர்வையில் எடுக்கும் வாந்திகளும்,அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளும் எப்படி அழிக்கப்படவேண்டுமோ அதே போல தேசியம் என்ற பெயரில் உள்ள சுயநலக்கூட்டங்களும் அடக்கப்படவேண்டும்., இந்த இரு கூட்டமும் இருக்கும் வரை ஈழத்தமிழர்வரலாற்றில் எதுவும் சாத்தியமில்லை இவையிரண்டுமே களையெடுக்க வேண்டிய "பாதீனியச்செடிகளே"!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாம் ஈழத்துக்காக என்ன செய்தோம்?

-புலிகளாலும் பிரச்சனை அரசாங்கத்தாலும் பிரச்சனை என்று அகதி அந்தஸ்த்து பெற்றோம்

-வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தேசியம் பேசினோம்.

-வெளிநாட்டு ஆதரவை வாங்கித்தாரோம் என்று முள்ளிவாய்க்கால் வரை அழிவுக்கு வழிகாட்டினோம்

-போராடவேண்டாம் எல்லோரும் வெளிநாட்டுக்கு ஓடிவாருங்கள் என்று சனத்துக்கு வழிகாட்டினோம்

-தேசீயத்தை சிதைத்து சிங்களப்பெருந்தேசீயத்தக்கு பேருதவி செய்தோம்

-யுத்தத்துக்கு என்று சேர்த்த காசை கொள்ளைஅடித்தோம்

-தேசீயத்தை கையில் எடுத்து ஆழுக்காள் அந்தஸத்து அடயாளப்போட்டி நடத்துகின்றோம்

-மாவீரர் குடும்பங்களும் முன்னாள் போராளிகளும் உணவுக்குக் கூட வழியின்றி நரகவாழ்க்கை வாழ புலத்தில் இருந்து மாவீரச் செல்வங்கள் குஞ்சுகள் தெய்வங்கள் என்று மகா நடிப்பும் முதலைக் கண்ணீரும் விடுகின்றோம்.

அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்று வக்கணையாக கேள்வி கேட்க முதல் நாம் என்ன புடுங்கினோம் என்று ஒரு கேள்வி இருக்கின்றதல்லவா?

சிங்களவன் ஈழத்தமிழனை அடித்தது மட்டும் தமிழர்களுக்கான ஒடுக்குமுறை இல்லை. இன்று நாம் இரண்டாம்தரப் பிரஜைகளாக வெளிநாடுகளினல் வாழ்வதற்கு எம்மில் ஒளிந்திருக்கும் அடிமைக் குணம் காரணமாக இருக்கின்றது. எம்மை ஒரு சக்தி காலாகாலம் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது. மொழி பண்பாடு கலாச்சாரம் இசை ஆன்மீகம் என அனைத்தினுடாகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது. இதன் ஒரு கூற்றில் இருந்து தமிழிசையை மீட்டெடுத்ததில் பெரும் பங்கு இளையாரஜாவை சாரும். ஒரு கேள்வி கேட்கமுதல் அக் கேள்வி கேட்பதற்கான தகுதி எம்மிடம் இருக்கின்றதா என்று சிந்திப்பது அவசியம்.

நியாயமான கேள்விகள்.நன்றி சண்டமாருதன்.

2010இல் கனடாவின் இளையோர் அமைப்பு அந்த ஆண்டுக்கான நவம்பர் மாதத்தை "மாவீரர் மாதம்" எனப் பிரகடனம் செய்ததாக ஒரு செய்தி இருக்கிறது. 2011இல் நவம்பரை மாவீரர் மாதம் எனப் பிரகடனம் செய்தார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

பல அமைப்புக்கள் இப்படியான பிரகடனங்களை செய்யலாம். நாமும் சில பேர் ஒன்று கூடி ஏதோ ஒரு மாதத்தை அல்லது ஆண்டை ஏதோ ஒன்றாக பிரகடனம் செய்யலாம். அதில் தவறு இல்லை.

ஆனால் எமது பிரகடனத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனம்.

இங்கே 2010இலேயே நவம்பரை மாவீரர் மாதமாக பிரகடனம் செய்த இளையோர் அமைப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே இளையராஜாவின் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வந்தவுடன் திகதியை மாற்றும்படி கேட்டிருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். நாமும் ஆதரித்திருப்போம்.

ஆனால் ஆறு மாதம் பேசாது இருந்து விட்டு, இப்பொழுது நிகழ்ச்சியை குழப்ப முனைவதை எக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது

[size=4]உங்களுடைய ஏற்று கொள்ளலையும் [/size][size=1]

[size=4]ஏற்காமையையும் எங்கள் மீது உங்களாலும் திணிக்க முடியாது.[/size][/size]

[size=1]

[size=4]நாங்கள் எதிர்ப்போம்![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியிலை இளையராஜா கனடாவிலை வந்து நிண்டு... எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ??யாரோ அறிவாரோ எண்டு பாடவேண்டி வரப் போகுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரும் எழுதிக்களைத்த விடையம் மறுபடி மறுபடி எழுதவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்.., இருக்க,

இளையராஜாவுகோ அல்லது சீமானுகான காழ்ப்புணர்வோ,அல்லது புகழ்பாடுதலோ அல்ல நோக்கம்.

தேசியம் என்பதை ஒரு சிலர் தமது சொந்த நலன்களுக்காய் விலைபேசுவதை,கேவலப்படுத்துவதை சுட்டிக்காட்டவேண்டியது தான் இதில் எழுதும் பலரின் நோக்கமே அன்றி இன்னும் தேசியம் என்ற போர்வையில் மக்களை மந்தைகளாக்கும் செயல்களை ஊக்குவிக்க அல்ல. புலிகளின் ஆதரவாளர்களும்,புலி என்று வக்காளத்து வாங்குபவர்களும்,புலிக்கு கொடி பிடித்தவர்களும் தான் தேசியவாதிகள் என்றால் தேசியம் என்றால் என்ன? என்ற கேள்வியே அடிப்படையில் அடிபட்டு போகிறது.

தேசியம் குறித்த அறிவு,சிந்தனையிருந்தால் இந்தளவு பிரச்சனைகள் தேவையில்லை.

கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாகவோ,துக்கம் அனுஸ்டிப்பதாகவோ கொள்வதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் இப்படியான ஒரு விடையத்தை யார்? எப்போது? உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்?

ஈழத்தமிழ்மக்களைப்பிரகடனப்படுத்தும் அமைப்புக்கள் யாரும் அறிவித்தார்களா? இல்லை இதுபற்றி ஏதும் கருத்துக்கணிப்புக்கள் நடத்தப்பட்டனவா?? அவ்வாறு இல்லை எனில் சொந்தநலனுக்காய்,வியாபாரப்போட்டிகளுக்காய் மாவீரர்களையும்,அவர்தம் தியாகங்களையும்,மாண்டமக்கள்,தேசியத்தின் பெயரில் கொச்சைப்படுத்துவதை அதே தேசியம்,மாவீரர்கள் பற்றி பேசியே எவ்வாறு ஆதரிக்கிறீர்கள்???? தேசியம் குறித்து வாய்கிழியபேசும் அதே கூட்டம் தான் தேசியத்தின் பெயரில் இவற்றை எல்லாம் செய்கிறது.

இன்றைக்கு கார்த்திகை மாதத்தை கொண்டாட சொல்லும் கூட்டம் நாளை இன்னொருமாத்தையும் மாவீரர்,தேசியத்தின் பெயரில் வியாபாரமாக்கும்,ஈழவரலாற்றில் எந்த மாதத்ட்தில்,இழப்புக்களும்,இறப்புக்களும் இல்லை அப்பவும் இதே கூட்டம் தான் தேசியத்தின் பெயரில் சுயநலம் தேடும். அப்பவும் வாய்பொத்தி இருக்க சொல்வீர்களா????

மாற்றுக்கருத்துக்கள் என்ற போர்வையில் எடுக்கும் வாந்திகளும்,அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளும் எப்படி அழிக்கப்படவேண்டுமோ அதே போல தேசியம் என்ற பெயரில் உள்ள சுயநலக்கூட்டங்களும் அடக்கப்படவேண்டும்., இந்த இரு கூட்டமும் இருக்கும் வரை ஈழத்தமிழர்வரலாற்றில் எதுவும் சாத்தியமில்லை இவையிரண்டுமே களையெடுக்க வேண்டிய "பாதீனியச்செடிகளே"!

சபாஷ் இது தான் சாட்டையடி இந்த ஜீவா இன்னும் களத்தில் வந்து எழுத வேண்டும் என்பது தான் எமது ஆசை கடையை கவனிக்கும் அதே நேரம் களத்தையும் கவனியிங்கள்..... உங்களை மாதிரி அழகாக சிறப்பாக எழுத கூடியவர்கள் மௌனித்து இருக்க கூடாது

ரெண்டிலை ஒண்டைத்தான் செய்யலாம் :) :) :) .

இளையராஜா வந்து நவம்பர் 3 இல் கச்சேரியை வைத்து விட்டு அவர் பாட்டில போயிருப்பார் .இதை ஒரு பிரச்சனையாக ஊதி பெருப்பித்தது யார் ?

நவம்பர் மாதத்தில் எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன .கிறிஸ்மஸ் வருவதால் பெரும்பாலான வேலை இடங்கள், எமது ஊர் பாட்டிகளே நவம்பரில் தான் இதுவரை நடந்தன .இது இப்போ புதிதாக தேசியம் என்ற பெயரில் அடையாளம் தேட வெளிக்கிடும் கோஷ்டிகளும் ,அடையாளம் இழந்த கோஷ்டிகளும் செய்யும் செய்யும் கைங்காரியம் இது .

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான எதிர்ப்புகள் ,அறிக்கைகள் வரும்போது நாடுகடந்த அரசோ அல்லது தமிழர் தேசிய அவை போன்றவையா தமது நிலைப்பாட்டை சொல்வதில்லை.மதில் மேல் பூனைகளாக

மௌனம் காத்துவிடுவார்கள் ,இதுதான் எம்மவர் செய்யும் அரசியல் .இவர்களுக்கென சொந்த கொள்கைகளோ நிலைப்பாடோ அல்லது அதற்கான துணிவோ இல்லை .இவர்கள் எல்லோருமே புலிகளின் நிழலில் இருந்து தேசிய வியாபாரம் செய்தவர்கள் தொடர்ந்தும் அதையே செய்கின்றார்கள் செய்வார்கள் .

[size=4]மலிவு விலையில் கிடைக்கும் நேரங்களில் உங்களுக்கு கொண்டாட்டம்தான்...........[/size][size=1]

[size=4]மொத்தமாக வாங்கி பின்பு சில்லறை வியாபராத்தை சிறப்புடன் செய்யல்லாம்![/size][/size]

அவர் நவம்பர் 27 கூட நிகழ்ச்சி நடாத்தலாம் அது அவரின் பிரச்சனை, நிகழ்ச்சிக்கு போறவர்களின் பிரச்சனை

இதுவரை காலமும் ஒளித்திருந்தவர்கள் எல்லாம் ஈழத்தமிழரிடம் ஏன் இப்போ வருகினம்? காசு பார்க்க வருகிறார்களா? இளிச்ச அகதிதமிழன் எப்படி இருக்கிறான் என்று பார்க்க வருகினமா?

இளசு எல்லாம் கஸ்டப்பட்டு தெருக்களில் பாட்டு பாடி அண்ணனுடன் பாடி திரிந்தவர். பக்கா கிராமத்தான். இப்போ காசு வந்து எல்லாம் மறைத்து போட்டுது.

ஒருநாள் கூட எங்கள் அவல வாழ்வு ,எங்களது நிலை பற்றி வாய் திறக்காதவர், இப்போ ஏன் ஈழத்தமிழரை தேடி வருகிறார் என்பது தான் என் கேள்வி.? மற்றும்படி அவர் நவம்பர் இல் , பாடினால் என்ன மார்கழியில் பாடினால் என்ன நாங்கள் எருமை மாடுகள் தான்

[size=1]நியானி: திருத்தம்[/size]

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.