Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோற்ற(ம்) விம்பங்கள் : நிழலி.. (வயது வந்தவர்களுக்குத்தான் உகந்தது)

Featured Replies

இது என் வாழ்வில் நான் எழுதும் இரண்டாவது கதை என்று சொல்லப்படக் கூடிய ஒரு பதிவு. முதலாவது சரிநிகரில் 21 வயதில் வெளியானதன் பின் மீண்டும் இரண்டாவதை 37 ஆவது வயதில் எழுத முயல்கின்றேன். கதை எழுதுவதற்குரிய எழுத்து ஆற்றல் இல்லை என்பதே கதை எழுதாமல் விட்டதன் காரணம்.

இது சர்வநிச்சயமாக இலக்கிய தரமாக இருக்கவே இருக்காது. ஒரு மர்ம நாவல் எழுதும் மனதையே என்றும் கொண்டிருந்தேன் என்பதும் நான் கதை எழுதாமல் விட்டதற்கான முக்கிய காரணம்.

இதுவும் ஒரு மர்ம கதை அல்லது நாவல் தான்.

ஆனால் எல்லாமே கற்பனை என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை....

-------------------------------------------------------------------------------------------------------------

தோற்ற(ம்) விம்பங்கள்:

பாகம் 1;

முன் அத்தியாயம்: 01

என் பெயர் அகிலன்.

கனடாவின் ஒட்டாவா நகரில் இருந்து உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். இது நாள் வரைக்கும் ஒருநாளும் உங்களை தொடர்பு கொண்டதில்லை. இப்ப ஒரு அவசரம்.

உங்களால் எனக்கு உதவ முடிந்தால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

இன்று காலை உதயன் ஒன்லைனில் மேயும் போது அவளது படத்தைப் பார்த்தேன்.

அவள் பெயர் இலக்கியா (நான் இசக்கி என்று செல்லமாகக் கூப்பிடுவேன். உயரம் 5 அடி 6 அங்குளம், நேர் மூக்கு, சின்ன இடை,....32 அளவுதான் தான் வாங்குவது என்பாள். என் கைகளால் அளக்கும் காலம் ஒரு நாளும் வாய்க்கவில்லை)

மரண அறிவித்தலின் கீழ் அவளது படம் இருந்தது. பிறப்பு 1973-06-24 என்றும் இறப்பின் கீழ் ஒரு கிடைக் கோடும் இருந்தது. அவள் எப்படி இறந்தாள் அல்லது இறந்து விட்டாளா என்று புரிய முடியாமல் அந்த அறிவித்தல் எனக்கு இருந்தது.

ஒரு 18 வருடங்களின் பின்பு அவள் பற்றி நான் அறியும் முதல் தகவல் இது. இருக்கின்றாளா இல்லையா என்பது கூட சொல்ல முடியாத ஒரு தகவலைக் கண்ட பின் தான் உங்களின் வருகின்றேன். தான் நேசித்த ஒரு பெண் பற்றி தகவல் தெரியாமல் இருப்பதே பெரிய கொடுமை என்பதை அறிந்த உங்களுக்கு அதை விடக் கொடுமை அவள் உயிரோடு இருக்கின்றாளா இல்லையா என தவிப்பது என்று தெரிந்து இருக்கும்.

எனக்கு ஒரு உதவி வேண்டும்.

அவள் என்னவானாள், உண்மையில் இறந்துவிட்டாளா இல்லை இருக்கின்றாளா அல்லது இந்த விளம்பரமே பொய்யா? என்று பார்த்து சொல்லுங்கள்.

எனக்குத் தெரியும் இதை வாசிக்கும் உங்களில் யாருக்கேனும் இவள் பற்றித் தெரிந்து இருக்கும்,

ஒரு பதிலாவது சொல்லுங்கள்:

-------------

தொடரும்...

Edited by நிழலி
சில திருத்தங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமா எழுதி இருக்கிறிங்கள்.

தொடருங்கள்

  • தொடங்கியவர்

பாகம் ஒன்று

முன் அத்தியாயம்: 02

என் பெயர் இலக்கியா.

உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசரம் எனக்கு.

உங்களில் யாருக்காவது அகிலனைத் தெரியுமா? சுருட்டை முடி, முழிக் கண்கள், நல்ல உயரம், முகத்தில் வலது கண்ணுக்கு கீழ் சின்ன மச்சம், எவரைப் பார்த்தாலும் சினேகம் கொள்ளும் முகம்.

எனக்கு அவனைத் தெரியும். இனிமேல் அவனில்லாமல் நான் இல்லை என்று சத்தியம் செய்து கொடுக்க துடித்த கணங்களுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பாக என் கண்களில் இருந்து காணாமல் போனவன்.

நெடுக நாட்களின் பின் இன்று மதியம் தான் அவனைப் பற்றி மீண்டும் அறிய முடிந்தது.;

அம்மா தொலைபேசி இருந்தார், அகிலன் 6 மாதங்களுக்கு முன்பே ஒட்டாவா நகரில் நிகழ்ந்த ஒரு பூகம்பத்தில் இறந்து போனான் என.

------------------

மர்மமா இருக்கு

தொடருங்கோ வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிவராத்திரி அண்டைக்கு, சிவபெருமான் ஜோதி வடிவாக நிற்க, அடியும் முடியும் தேடிய, விஷ்ணுவின் நிலையில் நிற்கிறோம்!

பாப்பம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமா எழுதிறது வாசிக்க இலகுவாக இருக்கு.. :D தொடர்க..

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்களுக்கான... கதை என்ற படியால், கட்டாயம் வாசிக்கத்தான் வேணும்.

அந்தக் கதையள்ளைதான், விறு..விறுப்பு... இருக்கும்.banana_smiley_136.gif

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்களுக்கான... கதை என்ற படியால், கட்டாயம் வாசிக்கத்தான் வேணும்.

அந்தக் கதையள்ளைதான், விறு..விறுப்பு... இருக்கும்.banana_smiley_136.gif

திடீர் திருப்பங்கள் .................நிறைந்த :D

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் திருப்பங்கள் .................நிறைந்த :D

கதைகளில்... திடீர், திருப்பம் வராட்டி... நிழலி அண்ணருக்கு... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி... கழுதையிலை... ஏத்திவிட வேண்டியதுதான். :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் ஆவியுலகத்தில் இருந்து தொடர்பு கொள்கின்றார்களா? நிழலி மீடியமாக இருக்கின்றார் போலிருக்கின்றது :icon_mrgreen:

அவள் பெயர் இலக்கியா (நான் இசக்கி என்று செல்லமாகக் கூப்பிடுவேன். உயரம் 5 அடி 6 அங்குளம், நேர் மூக்கு, சின்ன இடை,....32 அளவுதான் தான் வாங்குவது என்பாள். என் கைகளால் அளக்கும் காலம் ஒரு நாளும் வாய்க்கவில்லை)

திரைச்சித்ரா, பருவகாலம் இலக்கியங்களுக்கு ஒப்பான நடை.

அதி தீவிர இலக்கிய ரசிகர்களை கிளர்ந்தெள வைத்துள்ளது. நிறைய எதிர்பார்க்கிறோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க எழுதியதால் படிக்க சிரமாய் இருக்கின்றது அடுத்த பாகத்தை ஒரு வரியொடு நிறுத்தி விடுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மர்மக்கதைகள் என்றால் எனக்கு வாசிக்க பிடிக்கும்.

  • தொடங்கியவர்

பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

தமிழ்சிறி.. இனி கழுதை இருக்கும் ஊர் பக்கமே தலை காட்ட மாட்டேன்.

நந்தன், வருகைக்கு நன்றி.

கிருபன்... தொடர்ந்து வாசியுங்கள்... இது நிச்சயம் ஆவியுலகம் சம்பந்தப்பட்ட கதை அல்ல. காணாமல் போனவர்கள் பற்றிய கதை. ஒரு சில உண்மை சம்பவங்களை வைத்து எழுத முற்பட்டது.

தப்பிலி, கஷ்டப்பட்டு நான் சில வரிகளை எழுதாமல் விட்டு விட்டேன்.. இல்லாவிடில் இன்னும் ரசிகர்கள் கிளர்ந்தெழுந்து இருப்பர். திரைச்சித்திரா, பருவகாலத்தை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். இவ் இரு புத்தகங்களையும் எனக்கு முதலில் அறிமுகப்படுத்தி வாசிக்கச் சொன்னவர் என்னை விட 7 வயது கூடிய ஒரு பெண்... மிச்சத்தை எழுத இன்னொரு கதையை புதிதாக எழுதத் தொடங்க வேண்டும்.

சாத்து, என்னால் உங்களைப் போல எல்லாம் ஒரே அடியாக பல வரிகள் எழுத முடியாது. எப்படித்தான் நீங்கள் எல்லாம் எழுதுகின்றீர்களோ தெரியாது. அத்துடன், பிள்ளைகளும் மனிசியும் படுத்த பிறகு தான் கொஞ்ச நேரமாவது நிம்மதியாக இருந்து எழுத முடிகின்றது.

சகாறா, வருகைக்கு நன்றி..

------------

நேற்று ஓரளவு மப்பில் எழுதியமையால் சில வரிகள் தவறாக எழுதியிருந்தேன் (உதாரணம் மரண அறிவித்தல் ஒன்றை இறந்து விட்டாரா இல்லையா எனத் தெரியாமல் கேள்விக் குறி போட்டு இருந்தனர் போன்ற factual mistakes)..அவற்றை திருத்தியுள்ளேன்.

அத்துடன் காலம் பற்றிய ஒரு குறிப்பை ஒவ்வொரு அத்தியாயத்திலும் போட இருந்தேன்...விடுபட்டு விட்டது. இப்ப முன் அத்தியாயம் என்ற குறிப்பை போட்டுள்ளேன்.

  • தொடங்கியவர்

பாகம்: 01

அத்தியாயம் 01:

வருடம்: 1990.

நல்லூர் கோவில் திருவிழா கோட்டையில் இருந்து அடிக்கும் ஷெல்களுக்கும் மத்தியில் தன் களையை இழந்து இருந்தாலும் சனத்துக்கு குறைவாக இருக்கவில்லை.

பல சைக்கிள் ஸ்ரான்ட் இடங்களும் பெடியல் எடுத்து நடத்திக் கொண்டு இருந்தனர். கோவில் வீதிகளில் இடை மறிப்பு போட்டு வருகின்றவர்களை மெல்ல மெல்ல உள்ளே விட்டுக் கொண்டு இருந்தனர் சிலர். வழக்கத்தை விட ஐஸ்கிரீம் விற்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருந்தனர். நல்லூருக்கு சிங்களவர் ஒன்றும் செய்ய மாட்டினம் என்ற ஒரு நம்பிக்கையில் சனம் வழிபட்டுக் கொண்டு இருந்திச்சினம். இந்த விசயத்தில் இந்தியன் ஆமியை விட சனம் இலங்கை ஆமியை நம்பிச்சினம். கரண்ட் இல்லாததால் எல்லாமே பகல் பொழுதில் நடந்து கொண்டிருந்தது. முருகனும் பாவம் சனங்கள் கஷ்டப்படுகுது என்று தன் ரைம் ரேபிளில் சில மாற்றங்களைச் செய்ய ஒத்துக்கொண்டு இருந்தார். அவருக்கு பூங்காவனம் எப்ப என்ன நாளில் நடக்கும் என்ற ஒரே கவலை தான் இருந்தது.

அகிலன் கோண்டாவில் காம்புக்கு அவசரமாக போய்க்கொண்டு இருக்கும் போது எதுக்கும் நல்லூரானை ஒருக்கால் கும்பிட்டு விட்டுப் போவம் என்று கோயில் பக்கம் அவனது லுமாலாவை (சைக்கிள்) திருப்பி இருந்தான். அவன் கொண்டு சென்ற புத்தகங்களில் புலிகளின் இலச்சினை இருந்தமையால் வரிசை மாறி அவனை மட்டும் உள்ளே உடனே அனுப்புவினம் என்ற நினைப்பினை அங்குள்ளவர்கள் மாற்றி விட்டினம். இயக்கத்தைக் கூட சைக்கிள் நிறுத்த வரிசையில் தான் உள்ளே அனுக்க சொல்லி இருக்கினம் என்று சொல்லி சமதர்மம் பற்றி குட்டி demo இனைக் காட்டி அவனை வெறுப்பேத்திக் கொண்டு இருக்கும் போதுதான் அவன் முதன் முதலில் அவளைக் கண்டான்.

மெல்லிய வியர்வை நெற்றியில் துளித் துளிர்களாக அரும்பிக் கொண்டு இருக்கும் போது தன்னை உடனடியாக வரிசை மாற்றி உள்ளே விடவேண்டும் என்று சண்டை பிடித்துக் கொண்டு இருந்தாள். தன்னையே உள்ளே விட மறுக்கும் இவர்கள் இவளை எப்படி உள்ளே விடப் போகினம் என்று இவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவளை உள்ளே விட்டதைப் பார்த்து பொங்கிப் போய்ட்டான். "என்ன தம்பி எங்களை உள்ளே விட மாட்டீர்கள்..ஆனால் பெட்டை என்றதும் உள்ளே விட்டு விட்டீர்கள்" என்று கேட்டான். "இல்லை அண்ணை, பெண்களை எப்பவும் வரிசையில் காத்து நிற்க நாங்க விடுறதில்லை..இருட்டு என்பதால் வேறு சில பிரச்சனைகள் இருக்கு" என்று சொன்ன பதிலால் அவனால் திருப்தி அடைய முடியாவிட்டாலும் ஒத்துக் கொள்ள முடிந்தது.

அகிலன் அப்ப, புலிகளின் செய்திப்பலகையில் செய்திகளை ஒட்டுவதற்காக கோண்டாவில் காம்பில் இருந்து ஒரு நாளைக்கு இரு தடவை செய்திகளைப் பெற்று அதனை கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இருக்கும் காம்புக்கு சமர்பித்துக் கொள்ளும் பணியில் இருந்தான்.

ஓ எல் பரீட்சை எடுத்து பெறுபேறுகளுக்காக காத்து இருக்கும் இடைக்காலத்தில் இயக்கத்துக்கான பொதுப் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருந்த காலம் அது. யாழ் நகரப் பாடசாலைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தது. பற்றிக்ஸிலும் சென்ரலிலும் ஷெல்கள் விழா நாட்கள் இல்லை என்றளவில் ஆமிக்காரனுக்கு அவற்றில் அதீத பாசம் இருந்தது. ஒவ்வொரு நாளும் சுண்டிக்குளியில் இருந்து கோண்டாவில் வரைக்கும் இரு தடவைகள் சைக்கிள் உழக்கி செய்தி சேகரித்து அதனை காம்பில் ஒப்படைக்க, அங்கு வரும் மிச்ச பணியாளர்கள் ஒவ்வொரு கரும்பலகைகளிலும் ஒட்டுவர். அப்படி செய்தி பெறப் போன ஒரு பிற்பகலில் தான் எதுக்கும் இருக்கட்டும் என்று முருகப் பெருமானுக்கு hallow சொல்ல போயிருந்தான்.

தொடரும்....

வாசிக்க சுலபமாக இருக்கின்றது. முன்னர் இரண்டு பகுதியும் மிகச் சிறிதாக அடுத்த பகுதி அளவாக இருக்கின்றது. இனிவரும் காலங்களில் இவ்வாறான எழுத்து நடைதான் ஏற்றதோ என்று உங்கள் நடை யோசிக்க வைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை வாசிக்க நல்ல சுவாரசியமாய்ப் போகிறது...எனக்கு க்ரைம் கதை வாசிக்கிறது என்டால் நல்ல விருப்பம்...அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் நிழலி...ஒரு சந்தேகம் கதை 90ம் ஆண்டு தொடங்குகிறது பிறகு எப்படி இலக்கியா 90ம் ஆண்டு பிறந்திருப்பார் :unsure: ...இது நிழலியின் சொந்தக் கதை,சோகக் கதை போல இருக்குது :) :)

இப்படி பெண்களை முன்னுக்கு விடுவது இலங்கை போன்ற பெண்னடிமை நாடுகளில் ஓ.கே.ஆனால் வெளிநாடுகளில் சமௌரிமை பெற்ரபின் அதை பெண்கள் சில இடங்களில் துஸ்பிரயோகம் செய்வது ஆண்களின் எத்தனையோ நியாயமான உரிமைகளை பறிக்கிறார்கள்.நல்ல கதை நிழலி.ஆரம்பமே அசத்தலாய் இருக்கு.விருவிருப்பு குறையாமல் கொண்டுசெல்லுங்கள்.நல்லவேலை நாற்சந்தியில் இல்லாததால் தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து வாசிக்கலாம் வாசகனாய்.

கிரைம் செக்ஸ் வாசிக்க அந்தமாதிரி இருக்கும் .Harold Robbins,James Hadley Chase என்று கொஞ்ச காலம் இழுபட்டதுண்டு .தமிழில் படிக்கும் ஏற்படும் கிக் அலாதி.ஆரம்பமே 32 உடன் களை கட்டுது தொடருங்கள் .

கோண்டாவில் என வாசிக்கும் போது என்னவோ செய்யும் ,அங்கு என் வெற்று பாதம் படாத இடங்களே இல்லை எனலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பெண்களை முன்னுக்கு விடுவது இலங்கை போன்ற பெண்னடிமை நாடுகளில் ஓ.கே.ஆனால் வெளிநாடுகளில் சமௌரிமை பெற்ரபின் அதை பெண்கள் சில இடங்களில் துஸ்பிரயோகம் செய்வது ஆண்களின் எத்தனையோ நியாயமான உரிமைகளை பறிக்கிறார்கள்.நல்ல கதை நிழலி.ஆரம்பமே அசத்தலாய் இருக்கு.விருவிருப்பு குறையாமல் கொண்டுசெல்லுங்கள்.நல்லவேலை நாற்சந்தியில் இல்லாததால் தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து வாசிக்கலாம் வாசகனாய்.

பிரச்சனைக்குரிய அறிவிலி என்கிற டன் தாங்களோ :lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஆனால் மப்பிலை வேண்டாம்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம் தொடக்கமே ஒரு இதாத்தான் இருக்கு சரி பாப்பம் :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்க நிழலி அண்ணா. வயசு பற்றிய ரதி அக்காவின் கேள்வி எனக்கும் வந்தது. உங்கட அடல்ஸ் ஒன்லி கதை எண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்தா இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே. உங்களிட்ட இருந்து இன்னும் கனக்க எதிர்பார்க்கிறோம்.

நிழலி தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் எழுத்து நடை.

தொடருங்கள் இடையில் விடாமல்

Edited by வந்தியதேவன்

  • தொடங்கியவர்

அத்தியாயம் 02:

என் அலுவலகத்துக்குள் நுழையும் போதே ஏதோ ஒரு அசாதாரணம் என்னை சூழ்கின்றது. வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்று நிகழ்ந்து இருந்தால் சில நேரம் மனம் அதை நுணுக்கமாக காட்டிக் கொள்ளும். இன்றும் அப்படித்தான்,

என் மேசையில் இருந்த குறோட்டன் செடியில் இருந்த இலை திரும்பியிருந்தது. பூச்சாடியில் இருந்த பூ ஒன்று சற்று வெளிறிப் போய் வெறுப்புடன் சிரித்தது போலத் தோன்றியது.

வழக்கமாக அகில் என்று கூறி சின்னதாக hug பண்ணும் ஜோர்ஜ் என்னை பார்த்து முறைத்து விட்டுப் போனான். (அகிலன் என்ற பெயரை அகில் என்றே அழைப்பது அவன் வழக்கம்)

பெக்காம் எதுவும் பேசாமல் தனது வேலையில் கவனமாக இருப்பதாக காட்டிக் கொண்டு இருந்தார்.

முன்னால் இருந்த சில்வி என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. (குளிரிலும் அவள் உடுத்தி இருந்த உடை அவளை நன்கு காட்டிக் கொண்டு இருந்தது. ஒரு வினாடிக்கு சற்றே குறைவான நேரத்தில் அவள் மறைக்க விரும்பா அழகை கண்கள் scan பண்ணி மனதுக்குள் அனுப்பியது.)

ஏதோ அசாதரணமாக நடந்து இருக்கு.

உதயன் ஒன்லைனில் வந்த தகவலின் பின் எனக்கு இலக்கியா பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் கழிந்து விட்ட 4 நாளாம் நாள் இவை நடக்கின்றன.

என் மேசையில் எனக்கு வந்த ஒரு கடிதம் ஒன்று இருந்தது. அதிர்ந்தே போனேன்.

என் வேலை என்னவென்பதும் எங்கே வேலை செய்கின்றேன் என்பதும் மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் பாதுகாப்பப்படும் விடயங்கள் என்பதால் தான் ஆரம்பத்திலேயே உங்களுக்கும் சொல்லாமல் தவிர்த்து இருந்தேன். ஆனால் மிகவும் ரகசியமாக பாதுக்காக்கப்பட்ட என் அலுவலகத்துக்கு என் பெயரில் விலாசமிட்டு கடிதம் வந்து இருந்தது. பார்த்தவுடன் வியர்த்தது.

"அகிலன் கண்டிப்பாக பார்க்கவும் நீ தேடிக் கொண்டு ஒரு தகவல் " என்று மட்டும் இருந்த கடிதத்தை அவசரமாக பிரிக்கின்றேன்.

ஒரு வெள்ளை நிறத்தாளில் கரும் கறுப்பு நிறை மையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.

அந்த கடிதம் வெறும் 2 வரிகளில் மாத்திரம் இருந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க எனது கண்கள் மெல்ல மெல்ல சிவப்பாகின்றன. உடலின் பாகங்களில் அதிர்வு மெல்ல மெல்ல குடிகொள்கின்றது. கைகளின் நடுக்கத்தை விரல்கள் வாங்கிக் கொள்கின்றன. அருகில் இருந்த சிரிக்கும் புத்தரின் சிலை மெல்ல தடுமாறுகின்றது போன்று தோன்றியது. ஒரு கிளாஸ் brandy இருந்தால் நல்லம் என்று சொன்னது மனசு.

எம் அலுவலகத்துக்கு எவரும் எந்தவொரு கடிதமும் எழுத வாய்ப்பில்லை. மிகவும் ரகசியமான வேலைக்காக பிரத்தியேகமாக வேலை செய்கின்றோம். என் பெயருக்கு கடிதம் வந்தமையே மற்றவர்களின் கோபத்துக்கு காரணம். இது பற்றி இனி விசாரணை (inquiry) இருக்கும் என்பதுக்கும் அப்பால் எனக்கு கொஞ்சம் பயமும் வரத் தொடங்கி இருந்தது.

"நான் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றேனா"

மீண்டும் மீண்டும் கடிதத்தில் வந்த அந்த இரண்டு வரிகளை வாசிக்கின்றேன்.

"அகிலன் நான் உன் பிரியா எழுதுகின்றேன்" ('உன்' என்பதன் கீழ் அடிக்கோடு இருந்தது)

"வரும் சனிக்கிழமை பின்னேரம் 7 மணிக்கு ஸ்ரிப் அவுட் (Strip Out) கிளப்பில் உன்னை சந்திக்க காத்திருப்பேன்"

------தொடரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.