Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலீனா ஜோலி, அன்ரோனியோ பன்ட்டாறஸ் மற்றும் யாழ் களம்

Featured Replies

குறிப்பு: இந்தப் பதிவு பேசாப்பொருள் பகுதில் பதியப்பட்டுள்ளது என்பதைக் கவனத்திற்கொள்க. இங்கு பேசப்படும் விடயம், பலரிற்குப் பலத்த முரண்பாட்டையோ, கட்டுக்கடங்காத ஆத்திரத்தையோ, மன உழைச்லையோ உருவாக்கலாம். இதற்கு மேல் படிப்பது உங்கள் பொறுப்பு. இங்கு பேசப்படும் கருத்துக்கு விவாதபூர்வமாக முன்வைக்கப்படும் கருத்துக்களோடு ஒன்றில் விவாதிக்க அல்லது நான் பார்க்கத்தவறிய கோணங்களைப் பார்ப்பதற்கு முயற்சிக்கிறேன். 
 
ஒரு படத்தில் அம்மணமான அஞ்சலினா ஜோலி மீது அம்மணமான அன்ரோனியோ பன்டாறஸ் கட்டில் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது யாழ்களம் மனதில் தோன்றியது. அண்மையில், யாழ் களத்தில் திருமணத்தின் பின்னரான இதர உறவுகள் மற்றும் கவர்ச்சிகள் சார்ந்து கணிசமான கருத்துக்கள் பதியப்பட்டிருந்தன. அந்தப் பின்னணியில் அஞ்சலினா, அன்ரோனியோ மற்றும் பதிவின் இறுதியில் பேசப்பட இருக்கும் ஒரு நீயாநானாப் பையன் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவு இது.
 
ஒரு கட்டத்தில் மனிதன் பெண்ணை தனக்குச் சாத்தியப்பட்ட அந்தப்புறத்தில் பூட்டி வைத்தான். சில சமயங்களில், அந்தப்புரப்பூட்டுக் காணாது என்றுணர்ந்து, பூட்டுக்களுடன் அமைந்த ஆடைகள் தைத்து அவளது இனப்பெருக்க உறுப்பைப் பூட்டிவைத்தான். பௌதீக ரீதியாகப் பெண் அந்தப்புரத்தில் இருப்பது மட்டுமல்ல அவளது மனத்திலும் எந்த எண்ணமும் தன்னைத் தாண்டி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இலக்கியங்கள் புராணக்கதைகள் என்று பல குறழிவித்தைகளைக் கட்டவிழ்த்து விட்டான். அத்தோடு, முக்காடு போன்ற நடமாடும் அந்தப்புரங்களைப் கண்டுபிடித்தான். பிறகு, தெருவில் நடக்கலாம் ஆனால் குனிந்ததலை நிமிரக்கூடாது என்றான். பின்னர், கைகொடுக்கலாம், நாகரிகமாக உத்தியோகபூர்மாககத் தழுவலாம் என்று வளர்ந்து அஞ்சலினா அன்ரோனியோ காட்சிவரை தொழில் சார்ந்து மனிதன் என்ற குழுமத்தின் ஒவ்வொரு மூலைகளில் ஒவ்வொரு மாற்றங்கள் பெண்ணின் வரம்பு சார்ந்து நிகழ்ந்தன நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தன, என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன எனப் பார்பின் அதில் ஒரு பொதுமை தென்படும். 
 
ஒருவனிற்கு ஒருத்தி என்ற நம்பிக்கைக்கு முரணான நடைமுறைக்கான ஆதாரங்கள் இயற்கையின் அம்சங்களில் இருந்தே தேடிக் காட்டப்படுகின்றன. உதாரணமாக, ஆண்குறியின் முற்பகுதியின் வடிவம் கூர்பில் 'கள்ளத்தொடர்புக்காகவே' வந்தது என்று ஒரு கருத்து இருக்கிறது. அதாவது, உட்சென்று வெளிவருகையில், பிற ஆணின் விந்துகளை இயன்றவரை வெளியே இழுத்துக்கொண்டுவருவதற்காகவே ஆண்குறியின் முற்பகுதி காளானின் குடைபோன்று இருப்பதாக அமைகிறது அந்த ஆராய்ச்சி. அது மட்டுமல்ல, சில விலங்குகள், உடலுறவைத்தொடர்ந்து, சிமென்ற் போன்ற ஒரு பதார்த்தத்தின் வாயிலாகத் தாம் உடலுறவுகொண்ட பெண் விலங்கின் உறுப்பினை மூடிவிடுகின்றன. அந்த சிமென்ற் போன்ற பதார்த்தத்தின் காரணமாக, இதர ஆண்களுடனான தொடர்பு குறித்த பெண்ணிற்கு சில நாட்களிற்குச் சாத்தியப்படாது போய், மூடிய விலங்கின் விந்திற்குக் கருக்கட்டும் சாத்தியம் அதிகரிக்கப்படுகிறது. அதாவது, ஆணின் பெண்சார்ந்த கட்டுப்பாடுகள் பயங்கள் என அனைத்துமே தனது மரபணுக்களைப் பரப்புதல் என்ற அடிப்படையில் இருந்து தான் எழுகின்றன. 
 
கலாச்சார நகர்வின் ஒரு கட்டத்தில், கேட்கும் பாடல், ரசிக்கும் நாடகம், விரும்பும் உணவு என அனைத்தும் கணவனின் ரசனையினை ஒத்ததாகவே பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்று இருந்து (அமெரிக்காவில் கூட ஐம்பதுகள் வரை இப்படித்தான் அதிகம் இருந்தது). பின் படிப்படியான சிந்தனை மாற்றங்களின் வாயிலாக இன்று பாலியல் உறவு என்பது மட்டும் திருமணத்தால் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கிறது. என்ன தான் எவர் கட்டுப் படுத்தினாலும், கள்ளத் தொடர்புகளும், விட்டுவிட்டு ஓடுதல்களும் நடந்த வண்ணமே இருக்கின்றன. பல ஆண்களிற்குத் திருமணம் சார்ந்து பயங்கள் கூட இருக்கின்றன. கோபங்கள் பதிவுகளில் தெளிவாக வெளிப்படுகின்றன. இந்த இடத்தில் தான் அஞ்சலினாவை மீண்டும் பதிவிற்குள் கொண்டுவாறம்.
 
அஞ்சலினாவின் மேற்படி காட்சியினைப் பார்க்கும் பிறாட் பிற்றிற்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். அதாவது, உயிரியல் ரீதியாக தனக்கும் அஞ்சலீனாவிற்கும் மூன்று குழந்தைகளும், தத்தெடுப்பின் வாயிலாக மேலும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றன. அந்தவகையில், தனது மரபணுக்களின் பரம்பலிற்கான போட்டியில் அன்ரோனியோவின் மரபணுக்களோடு போட்டி போடவேண்டிய அவசியம் பிறாட் பிற்றிற்கு அறவே இல்லை. இந்தப் போட்டி மற்றும் பயம் நீக்கப்பட்ட பின்னர், அன்ரோனியோ சார்ந்து பொறாமையோ, பயமோ மிகப்பெரிய அளவில் பிறாட்டிற்குள் அகன்றுவிடும். அதன் பின்னர், ஒரு உத்தியோகத்திற்கான நேர்முகத்தேர்வில் ஒரு சாதாரணமானவனின் மனைவி, நேர்முகத்தேர்வு செய்பவரிற்குக் கொடுக்கும் கைகுலுக்கலிற்கும், அன்ரோனியோ அஞ்சலீனா மீது நடிக்கும் கட்டில் காட்சிக்கும் பிறாட்டின் மனதில் அதிக வேறுபாடு இருக்கப்போவதில்லை. இதை பொதுமைப் படுத்திப் பார்ப்பின், அன்ரோனியோ அன்ஞ்சலீனாவிற்குக் கமராவில் செய்யும் தொழில் ரீதியான செயல்கள், திருமணத்திற்கு அப்பால் இரு ஆணும் பெண்ணும் பொழுதுபோக்காகச் செய்வது ஏன் சாத்தியப்படாது? நடிகைககள் அப்படித் தான் என்றோ, அல்லது பிறாட்டை விட எங்கட குடும்பம் இமயமளவு உயர்வானது என்றோ, அல்லது வெள்ளைக்காரன் தொலைந்துபோன ஆடு என்றோ சொல்வதற்கு அப்பால் எங்களிடம் என்ன பதில் உள்ளது. பிறாட்டிற்கு அஞ்சலீனாவில் அன்பிருக்காது, இருந்தாலும் எமக்கு எம்மனைவி மீது இருக்கும் அளவிற்கு இருக்க முடியாது என்று எம்மால் கூறிவிடமுடியுமா? தாம் பெத்த மூன்றிற்கு மேலால் இன்னும் மூன்றைத் தத்தெடுப்பது கருத்தொருமிக்காத தம்பதியரிற்குச் சாத்தியமா? (குறிப்பு: வெள்ளைக் காரர் என்றால் போல் எல்லோரும் சுவிங்கேர்ஸ் தான் என்று கருதக் கூடாது. கள்ளத்தொடர்பு என்பது அவர்களாலும் முற்றுமுழுதாக எங்களைப் போன்றே பெரும்பாலும் பாக்க்ப்படுகிறது. அவர்களிற்கும் எங்களிற்குமான வித்தியாசயம், மீள ஏற்றல் என்ற முனையில் தான் பார்க்கப்படக்கூடியது).
 
பல வருடங்களிற்கு முன்னர் நான் ஒரு தமிழரைச் சந்தித்தேன். அவரது மனைவி விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்திருந்தார். அவரது முன்னைநாள் மனைவியின் புதுக்கணவர் ஒரு தொழில்சார் நிபுணர். நான் பார்த்த மனிதர், அந்தப் புதுக்கணவரின் தொழில்சார் வாடிக்கையாளாராக இருந்தார். அதாவது முன்னைநாள் மனைவியின் புதுக்கணவரிற்கு இவர் தனது பணம் செலுத்தி தொழில்சார் சேவை பெற்றுக்கொண்டிருந்தார். அன்றைய நிலையில் எனக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இப்பிடியும் ஒரு சுரணை கெட்ட மனுசன் இருப்பானா என்று. ஆனால், வருடங்களின் நகர்ச்சியில், அந்த மனிதரின் செயல் எத்தனை சாதாரணமானது என்று தெரிகிறது. பார்வைகள் தான் அனைத்துப் பிரச்சினைகளினதும் அடிப்படை.
 
'மறுக்கப்பட்ட அப்பிள்' என்ற உளவியல் விடயம் மனிதனோடு கூடவே வருகிறது. தடுக்கப்பட்ட விடயங்கள் சார்ந்து கற்பனை கரைபுரண்டு ஓடுவது இயல்பு. ஆண், தனது தனக்கே விளங்காத பயம் சார்ந்து, ஏற்படுத்தும் கட்டுப்பாடுகள் சார்ந்து பெண்ணிற்குப் புதிய கற்பனைகள் பாலியல் முனையில் சாத்தியப்படுகிறது. ஒன்று மற்றையதைப் பெருப்பித்த வண்ணம் கள்ளத்தொடர்புகள் தொடர்கின்றன.
 
தனது மனைவி தோழிகளுடன் வெளியே சென்று மகிழ்ந்திருந்து வருவது ஏற்றுக் கொள்ளப்பட்டதைப் போல, குழந்தை உருவாகாத வண்ணம், நோய் ஏற்படா வண்ணம், பொருளாதார பிரச்சினைகளோ சட்டப்பிரச்சினைகளோ உருவாக வண்ணம், ஆணும் பெண்ணும், பிறருடனான உடலுறவை பொழுதுபோக்கு என்ற அழவில் பார்க்கும் பக்குவம் அடைவது சாத்தியம். காதலும் காமமும் உண்மையில் முற்றாகப் பிரிக்கப்படுவது அடையப்படக்கூடியது. கணவனிற்குப் பிடிக்காத உணவையோ இசையையோ புத்தகத்தையோ மனைவி அனுபவிப்பதை ஒத்ததாக பாலுறவு கூடப் பார்க்கப்படலாம். திருமணம் என்பதும், இருவரின் சேர்ந்த பயணிப்பு என்பதும், உடலுறவுக் கட்டுப்பாடுகளைக் கடந்ததாய் அறியப்படலாம். இதற்கு ஒரு சின்ன உளவியற் பரிசோதனை என்று பார்த்தால், கிழமையில் பல நாட்கள் வீட்டில் நிற்கமுடியாத ஒருவனின் மனைவி, வைப்றேற்றர் பாவிக்க விரும்பின் அதனைக் கணவே பெற்றுக் கொடுப்பது இப்போதே பலரிற்குச் சாத்தியமாகலாம். ஏனெனில் வைப்றேற்றர் எந்த மரபணுவையும் கடத்தப்போவதுமில்லை அதற்கு மனம் அல்லது குணவியல்பு என்று ஒன்று இல்லை. வைப்ப்றேற்றரிற்குப் பதில் வேறொரு ஆண் இநத சமன்பாட்டில் நுழைக்கப்படின் ஏகப்பட்ட குழப்பங்கள் கூடவே வரும். முதற்காரணம் மரபணு, இரண்டாவது மனம் மற்றும் குணவியல்பு சார்ந்த பொறாமை மற்றும் பயங்கள். ஆனால், உடலுறவிற்குத் தயாராக இருக்கும் இருவர், தொடர்ந்த நீண்ட உறவிற்குத் தயாராக இருப்பர் என்றோ, செல்வத்தையோ அல்லது இதர வளங்களையோ பங்குபோடத் தயாராக இருப்பர் என்றோ கூறிவிட முடியாது. காமமும் காதலும் வெற்றிகரமாகப் பிரிக்கப்படுகiயில், உண்மையில் காமம் வலுவிழக்கும் (அரைப்பங்கிற்கு மேல் கற்பனையும் மனமும் தான் காமத்தைக் கட்டியாழ்கின்றன). எந்தப்பாடலையும் கேட்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்காக எவரும் பாட்டுக்கேட்பதுமில்லை அத்தனை பாட்டையும் கேட்டுவிடவேண்டும் என்று நினைப்பதும் இல்லை.
 
திருமணத்திற்கு அப்பாலான உறவுகள் ஏற்றுக்கொள்ளப்படாத இன்றைய காலகட்டத்தில், கள்ளத்தொடர்பை வைத்திருக்காதவர்கள் எவரும் அது பற்றிச் சிந்திக்காதவர்கள் என்றோ "பரிசுத்தமானவர்கள்" என்றோ ஆகிவிடாது. கணவனோடு மட்டும் உடல்சார்ந்த உறவை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தடவையும் மனதில் வேறெவரையும் நினைப்பது கூடச் சாத்தியம். அப்படி எதுவம் சாத்தியமில்லை என்று எம்மை நாம் சமாதானம் செய்வதால் மட்டும் அப்படி எதுவும் இருந்துவிடாது என்பதல்ல. 
 
குற்றவாழிகள் சார்ந்து பெரியசிறைச்சாலைகளையும் கண்டிப்பான சட்டங்களையும் மட்டுமே தீர்வாகச் சிந்திப்பது ஒரு முறை. குற்றங்கள் ஏன் இழைக்கப்படுகின்றன, எதனால் அவை குற்றமாகின்றன என்ற அடிப்படைகள் சார்ந்து குற்றவாழியைக் காட்டிலும் குற்றத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பது பிறிதொரு முறை. என்னைப் பொறுத்தவரை இதில் இரண்டாவதே அதிகம் வினைத்திறன் மிக்கது. ஆனால் சமூகத்தில், பெரிதும் முதலாவது முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. சட்டங்களும் காவலர்களும் மட்டும் தான் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால், அத்தனை சட்டங்களையும் காவலர்களையும் தாண்டிக் 'குற்றங்கள்' தொடர்கின்றன என்கையில், பூரணமான தீர்வு என்பது, குற்றத்தைப் புரிந்துகொள்வதிலும் அது பற்றிச் சிந்திப்பதில் இருந்தும் தான் பிறக்கமுடியும் என்பது எனது அபிப்பிராயம்.
 
கேட்பதற்கு ஏதோ பலத்த அந்நியமானதாக அந்தக் கருத்துத் தோன்றினும், அந்தப் பக்குவத்தை அடைவது அத்தனை சிரமமானதல்ல. அத்தகைய பக்குவம் வரும் வரை கள்ளத்தொடர்புகள், விட்டுவிட்டுஓடுதல்கள் மற்றும் விவாத முறிதல்கள் என்பனவும் அவை சார்ந்த உழல்தல்களும் பாலியலை மையமாகக்கொண்டு அர்த்தமற்று நடந்தபடி தான் இருக்கும். மேற்படி மாற்றத்தைச் சிந்தித்தும் செயற்படுத்தலாம், அறிவிற்கு ஓய்வு கொடுத்தும் செயற்படுத்தலாம். பின்னையது முன்னையதைக் காட்லும் இலகுவானது.
 
கடந்த விடுமுறை காலத்தில் பழைய நீயா நானா நிகழ்வொன்றை பார்த்தபோது அதில் இளைஞன் ஒருவன் பேசிய சிறப்பான பேச்சுக்களில் இருந்து இருவரிகள் : 'அவளைப் பாக்கிறது ஒரு விழிப்புணர்வுடன் ஏற்படும் விபத்து', 'அவளைப் பார்க்கு முன்னரும் அறிவு என்னைத் தின்றது. அவளைப் பாhத்த பின்னரும் அறிவு என்னைத் தின்று கொண்டிருக்கின்றது. அவளைப் பார்த்த அந்தக் கணத்தில் நான் வாழ்ந்தேன்'.
 
'விழிப்புணர்வுடன் ஏற்படும் விபத்து' என்ற வசனத்தை எத்தனை தரம் மீட்டிப் பார்த்தாலும் ஆழம் அறிய முடியாததாக அற்புதமாகத் தெரிந்து கொண்டே இருக்கிறது. மேற்படி இளைஞனின் கூற்று கவனத்திற்குரியது. பல சந்தர்ப்பங்களில் கையில் உள்ளதை அனுபவிக்க முடியாமல் மனிதன் உழல்வதற்கு மனிதனின் அறிவே காரணம்.
 
ஆங்கிலக் கவிஞன் தோமஸ் கிறேயின் 1742ம் வருடக் கவியின் கடைசிவரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன்:
( தனது பள்ளியில் இளமையில், ஏதேதோ அபிலாசைகளுடன் தன்னுடன் படித்துக்கொண்டிருந்த அழகிய இளையவர்கள் மத்தியில் 'ஈற்றன் பள்ளியின் எதிர்காலம் பற்றிய பாடல்' என்று எழுதப்பட்டது)
 
'....
  அனைவரிற்கும் உழல்தல்கள் உண்டு: அனைவரும் மனிதர்கள்,
 முனகுவதற்காய்ச் சமத்துவமாய்ச் சபிக்கப்பட்டவர்கள்;
 தமது வலிகள் மரத்துப் போய் மற்றையோர் வலி மட்டும் உணரப்படும்.
 ஆனால் இப்போ எதற்கு அந்த விதியினை அவர்கள் அறியவேண்டும்?
 துன்பம் எப்போதும் அதிகம் பிந்துவதில்லை,
 இன்பம் நொடிக்குள் பறந்து போகும்,
 எதிர்காலம் பற்றிய சிந்தனை அவர்கள் சுவர்க்கத்தை நிர்மூலமாக்கிவிடும்.
 வேண்டாம்:
 அறியாமையே பரமானந்தமான உலகில் அறிவு முட்டாள்த் தனம்'
 
  • Replies 53
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேன்.. கருப்பொருள் விளங்கியது. என்ன எழுதுவதென்றுதான் தெரியவில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நானும் வாசித்தேன்.

 

இசையைப்போல முழுசிக்கொண்டு நிற்கிறேன். :blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் கட்டுரை சார்ந்த விடயம் ஒன்றை நேற்று இணையத்தில் படித்திருந்தேன் என்பது தற்செயலானது என்றுதான் நினைக்கின்றேன்!

 

கட்டற்ற கலாச்சாரப் புரட்சிகள் நடக்கும் மேற்கு நாடுகளில் கூட ஒரு நாட்டினை ஜனநாயக ரீதியாக ஆள்பவருக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருக்கக்கூடாது என்ற சிந்தனை உள்ளவர்கள் அதிகமாக உள்ளார்கள். எனினும் மேலுள்ள குறிப்பில் இருப்பதுபோல் பாலுறவும் ஒரு பண்டமாற்றுப் பொருளாக மாறக்கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். ஆனாலும் தமிழ் சமூகத்தில் இது பேசாப் பொருளாகவும், மறைவில் குசுகுசுக்கும் விடுப்புக் கதையாகவும் தொடர்ந்திருக்கச் சாத்தியம் அதிகம்..

  • தொடங்கியவர்
நன்றி இசைக்கலைஞன், நுணாவிலான், வல்வை சகாரா மற்றும் கிருபன். கொஞ்சம் சங்கடமான பதிவு தான்.
 
கிருபன், 
இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ளதைப் போல, இப்பதிவு எனக்குள் உருவானது 'ஒறிஜினல் சின்' படத்தைப் பாத்துக் கொண்டிருக்கும் போது தான். நீங்கள் குறிப்பிடும் கட்டுரையினையும் இணையுங்கள்.
 
தமது ஆட்சியாளர்கள் தமது பெறுமதிகளைக் காவிக்கொண்டு, அதே நேரம் தம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களாக வெளிப்படவேண்டும் என்பது பொதுநிலை தான் என்பது மறுப்பதற்கில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

நானும்  முழுசாக வாசித்தேன்

கொஞ்சம  புரிந்தது

ஆனால் எழுதும்  அளவுக்கு ஒன்றுமே விளங்கல.......... :lol:  :D

வித்தியாசமான சிந்தனைதான். பாலியல் குற்றங்களின் பிரழ்தலுக்கு மாற்றுச் சிந்தனை வைக்குமுன் இந்த திருமணம் என்ற கட்டமைப்பு ஏன் வந்தது?  அது எப்போது வந்தது? எல்லா இனக் குழுக்களிலும் ஏன் பின்பற்றப்பட்டது ? என்பது பற்றியும் கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

ஆதி மனிதனுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆதி சமூகத்தில் பெண் தனக்கான உணவுகளைத்(பழங்கள், கொட்டைகள் (nuts),  சின்னப் பூச்சிகள்)   தானே தேடிக் கொண்டாள். அப்பொழுது ஆணைச் சார்ந்து பெண் இல்லை. கலவிக்காக மட்டுமே பெண் ஆணை நாடினாள். இயற்கைச் சீற்றங்களினாலோ அல்லது அங்கு வாழ முடியாத சூழலில் அவர்கள் வேறு இடம்பெயர நேர்ந்தது. அப்பொழுது  அவர்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்தார்கள். வேட்டையாட ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் தேவையாக இருந்தது. அப்பொழுது ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில்(hunt partner) ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். இதுவும் சில வருடங்கள் தான் அடுத்த துணை கிடைக்கும்வரை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் ஒரு குழுக்களாக வாழ ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்தில் ஏறக்குறைய முப்பது முதல் ஐம்பது மனிதர்களைக் கொண்ட ஒரு குழுவாக வாழ்ந்தார்கள்.   ஒரு பெண் எந்த ஆணுடனும்/ ஆண் எந்தப் பெண்ணுடனும் கூடலாம் என்றே நிலை இருந்தது.  

பிறகு அவர்கள் தனக்கு வேண்டிய உணவுகளை தாங்களே தயாரிக்க / விளைவிக்க முனைந்தார்கள். இது  வேட்டைச் சமூகத்தில் இருந்து வேளாண் சமூகத்திற்கு  மாறிய காலம். இந்தக் காலம் தான் மனித உறவுகள் மலரத் தொடங்கிய காலம். இங்கு வேலைகளை தங்களுக்குள் பங்கு போடத் தொடங்கும்போது இயற்கையாகவே குழந்தைகளுடன் பிணைப்பாக இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகள், குழந்தைகள் வளர்ப்பது எனவும் ஆண்கள் வயல்களில் உழைப்பது எனவும் வாழ ஆரம்பித்தனர். இங்கு மாந்தர்கள் விளைச்சல் நிலங்களுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள். இங்குதான் திருமணம் தோற்றுவிக்கப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டது.  பிறகு நிலம் என்பது ஆணின் உடமையானது. பெண் என்பவள் ஆணைச் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை என்று ஆனவுடன் அவளுக்கென்று விதிமுறைகளும், அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டன. கலவிக்கான தகுதி இல்லாத போதும் பெண் ஆணுடன் சேர்ந்து வாழ பணிக்கப்பட்டாள். இங்கு தான் விதி மீறல் ஆரம்பிகிறது. இது தொடரத்தான் செய்யும்.

பெண்கள் முற்றிலும் பொருளாதரத்தில் / அடிப்படை தேவைகளுக்கு ஆண்களை சார்ந்து வாழாத நிலை ஏற்படும்போது கற்பின் இலக்கணமும் கலவியின் வரைமுறையும் மாறிப்போகும். அதுவரை இந்த மாதிரி கற்பு குடும்பம் என்ற கட்டுப்பாடு இருக்கும் என்பது எனது கருத்து.    
 

நல்ல பதிவு/

 

இது பற்றி நான் என் இன்றைய அனுபவங்களின் மூலம் நிறைய எழுத முடியுமாயினும் யாழ் களமும் யாழ் களத்தின் எனது பாத்திரமும் எழுவதுக்குரிய சரியான தளம் அல்ல என்று நம்புகின்றேன். மற்றப்படி, தமிழ் சமூகத்தில் இவை இப்போது நடந்து கொண்டுதானிருக்கின்றது. நிறையப் பேரினை எனக்குத் தெரியும் என்தை எழுதுவதுடன் நிறுத்திக் கொள்கின்றேன். :)

  • தொடங்கியவர்
நானும்  முழுசாக வாசித்தேன்

கொஞ்சம  புரிந்தது

ஆனால் எழுதும்  அளவுக்கு ஒன்றுமே விளங்கல.......... :lol:  :D

 

 

நன்றி உங்கள் கருத்திற்கு.
 
ஆதித்திய இளம்பிறையன்,
உங்களது கருத்தில் பெரிதாக முரண்பாடில்லை. ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ப"ெண்ணின் பொருளாதார விடுதலையில் இருந்து தோன்றக்கூடிய வரைவிலக்கண மாற்றத்திற்கான முயற்சி" என்ற கருத்தில் ஒரு சிக்கல் தெரிகிறது. அதாவது, ஆண் மனநிலை மாறாது பெண்ணின் ஆளுமை வீச்சின் அதிகரிப்பில் ஆண் அடக்கப்படுவதான அடிப்படை அதில் உள்ளது. அடக்கி ஏற்படுத்தப்படும் எந்த மாற்றமும் அடிப்படை மாற்றமாக நிலைக்கமுடியாது--பொருளாதாரத்திற்கு அப்பாலான பிறிதொரு தழையினை அடையாளங்காணும் வேட்கையினை அத்தகைய அடக்குமுறை தோற்றுவிக்கலாம். அடிப்படைப் பெறுமதி பற்றிய மீள் விசாரணையில் இருந்தே அந்த மாற்றம் ஆரம்பிக்க முடியும் என்று தோன்றுகின்றது. பார்வை மாறுகையில் பிரச்சினையே காணாமல் போகலாம்.
 
எந்தச் சமூகவியல் கேள்வியினைப் போலவும், இதற்கும் இது மட்டும் தான் சரியான பதில் என்று எதுவுமில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே.
 
நிழலி,
உங்கள் கருத்திற்கு நன்றி. யாழ்களத்தில் உங்கள் பாத்திரம் சார்ந்து நீங்கள் கருத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சங்கடம் புரிகிறது. உண்மையில்,
நேற்றுக் காலை 11 மணியளவில் இந்தப் பதிவினை யாழில் தட்டச்சுச் செய்துவிட்டு, பின்னர் போடாது விட்டுச் சென்றேன். பலத்த தயக்கம் இருந்தது. பின்னர், இன்று காலை பேசாப்பொருள் என்று ஒரு பக்கமே இருக்கையில், இந்தச் சமூகத்தின் ஒரு அங்கத்தவன் தனக்குத் தோன்றியதைப் இயன்றளவு நாகரிகத்தோடு பேசமுடியவில்லை எனில், என்னத்தைத் தான் பேசலாம் என்று தோன்றியது. பேச அனுமதிக்கப்பட்டதை மட்டும் பேசுவதும் பேசாதிருப்பதும் பெரிதில் வேறுபாடனவை அல்ல என்று தோன்றியது. அதானல் பதிவிட்டேன். எனினும், பேச்சுச் சுதந்திரம் என்பது வரையறைக்குட்பட்டதாய்த் தான் வழக்கத்தில் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. 
ஆண் மனநிலை மாறாது பெண்ணின் ஆளுமை வீச்சின் அதிகரிப்பில் ஆண் அடக்கப்படுவதான அடிப்படை அதில் உள்ளது. அடக்கி ஏற்படுத்தப்படும் எந்த மாற்றமும் அடிப்படை மாற்றமாக நிலைக்கமுடியாது--பொருளாதாரத்திற்கு அப்பாலான பிறிதொரு தழையினை அடையாளங்காணும் வேட்கையினை அத்தகைய அடக்குமுறை தோற்றுவிக்கலாம். அடிப்படைப் பெறுமதி பற்றிய மீள் விசாரணையில் இருந்தே அந்த மாற்றம் ஆரம்பிக்க முடியும் என்று தோன்றுகின்றது. பார்வை மாறுகையில் பிரச்சினையே காணாமல் போகலாம்.
 
 
 
ஆணின் மனநிலை எப்பொழுது மாறும்?? அந்த மாற்றத்திற்கான திறவுகோல் எது ?? நற்போதனைகளால் எதையும் இங்கு விதைத்து காக்க முடியாது.   ஒரு செயலை செய்ய தூண்டும் வினை சூழல் தான்.  பெண்ணின் பொருளாதாரச் சூழல் மாறும்போது அதற்கு ஏற்றவாறு ஆண்களின் மனநிலையும் மாறித்தான் ஆகும். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் அது நடந்தே தீரும்.
 

 

எந்தச் சமூகவியல் கேள்வியினைப் போலவும், இதற்கும் இது மட்டும் தான் சரியான பதில் என்று எதுவுமில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே.

 

ஏற்றுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பில் இன்னுமொருவனை சந்திப்பதில் மகிழ்ச்சி...பாலியலை பண்டமாற்றாக தமிழ்நாட்டில் எப்பவோ பயன் படுத்தத் தொடங்கிட்டார்கள் என 7,8 வருடங்களுக்கு முன் சஞ்சிகைகள் வாசிக்கும் போது தெரிந்து கொண்டேன்...கணவர்மார் தங்களது பதவி உயர்வுக்காக தங்களது மனைவிமாரை மேலதிகாரிகளுட‌ன் படுக்க அனுப்புதல் போன்றன எப்பவோ நட‌க்கத் தொட‌ங்கிட்டுது...பாட்டிகளுக்குப் போனால் ஜோடி மாத்தி செக்ஸ்சை அனுபவிக்கிறதும் நட‌ந்து கொண்டு தானே இருக்குது...நடுத்தர‌,உயர்தர‌ வச‌தியுடையான ஆட்கள் தான் இப்படியான செய்கையில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
 
எங்கட‌ தமிழ் சமுகத்தில் இப்படி நட‌க்கின்றதை நான் இன்னும் கேள்விப்பட‌வில்லை...என்னைக் கேட்டால் வயிற்றுக்குப் பசிச்சால் சாப்பிடுவது மாதிரி உட‌ம்பு பசிச்சால்,ஒரே ஆளுட‌ன் படுக்க போராடித்தால்,குடும்பம் பிரியக் கூடாது என்டால்,வேற வழி இல்லாமல் தாங்களும் மற்றவர்கள் மாதிரி முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் பாலியல் பண்ட‌மாற்று செய்யலாம்...அது அவர்கள்,அவர்களோட‌ விருப்பம்.
 
நானோ அல்லது இதை எழுதிய இன்னுமொருவனோ எங்கள் குடும்பத்தில் இப்படி நட‌க்க விட‌ மாட்டோம்...குறைந்த பட்ச‌ம் எங்கட‌ சமுதாயத்திலே இப்படி யாராவது செய்யினம் எனக் கேள்விப்பட்டால் மற்றவர்களிட‌ம் சொல்லி கொசிப்படிப்பேன்[நக்கலடிப்பேன்]...சாதர‌ண மனிதர்கள் பண்ட‌மாற்று மூலம் உட‌லுறவில் ஈடுபடுவோர் பற்றி நிச்சயமாய் ஒரு கூடாத எண்ணம் தான் வைத்திருப்பார்கள் அதே போல ப.மாற்று மூலம் உட‌லுறவில் ஈடுபடுவோர் எப்படி சாதர‌ண மனிதர்கள் முகத்தில் விழிப்பர்[அவர்களுக்கு தெரிந்தால் உட‌ம்பும்,மனமும் கூசாது]...எதிர்காலத்தில் இது பாரிய கலாச்சார சீர்கேட்டை கொண்டு வரும்...எல்லோரும்,எல்லோருடனும் படுத்தால் பிறகு எதற்கு குடும்பம் என்றதொரு வரையறை?
 
எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாது...ஒருவரை ஒருவர் நன்கு பிடித்த தம்பதியினர் என்டால் உட‌லுறவின் போது வேறு ஒருவரையும் நினைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் இதே ஒருவரையொருவர் பிடிக்கவில்லை என்டால் தங்களுக்குப் பிடித்தவர்களை நினைக்க வேண்டியது...சாதர‌ணமாகவே மனம் அலை பாய்ந்து கொண்டு இருக்கும்...புத்திக்கு இது பிழை என தெரிந்தாலும் மனது ஏற்றுக் கொள்ளாது
 
பி;கு;நான் சரியாக விளங்கிக் கொண்டு தான் என்னிடைய பதிலை எழுதினேனோ தெரியாது...பிழை என்டால் பொறுத்தருள்க :D
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முதிர்ச்சி அடையாத சமூகங்கள் இதனை இன்னும் பேசாப் பொருளாக.. பேசும் பொருளாக.. வைத்திருக்கின்றன... ஏன் இன்னும் சொல்லப் போனால் இப்ப தான் பேச ஆரம்பித்துள்ளன. ஆனால் மேற்குலகில் இவை சாதாரணமாகவே சாதாரணமானவர்களால் எடுக்கப்படுகிறது.

 

கிளிங்டன்.. மோனிக்கா விவகாரம்.. பத்திரிகைகளில் கொழுந்துவிட்டு எரியச் செய்யப்பட்டாலும்.. உள்வீட்டில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.. அதுவே முதிர்ச்சிக்கான அடையாளம்.

 

என் பார்வையில்.. இது முதிர்ச்சி அடையாதோரின் முதிர்ச்சிக்கான தேடலை நோக்கிய.. ஒரு ஆக்கம். ஆக.. முதிர்ச்சி அடையாதது நாமே தவிர.. சம்பந்தப்பட்டவர்கள் அல்ல.

 

ஆனால் எங்கும் தனிமனித விருப்பு வெறுப்பு என்ற ஒன்றுண்டு. அது தனிமனித சுதந்திர எல்லைக்குள் கட்டுப்பட்டுள்ளது. அதற்குள்.. இதனை விரும்பாத மனிதர்கள் முதிர்ச்சி அற்றவர்கள் என்ற பார்வையும் தவறு..! அதில் தனிநபர் உளவியலும் செல்வாக்குச் செய்கிறது.  :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
நன்றி ரதி மற்றும் நெடுக்காலபோவான்.
 
ரதி,
நீங்கள் குறிப்பிடுகின்ற பண்டமாற்றில் ஒரு விடயம் பொருந்துகிறது. அதாவது, பண்டமாற்றில் ஈடுபடும் சோடியின் மனநிலை, பாலியல் உறவு என்ற நிலையினைக் கடந்து தமது உறவை வரைவிலக்கணப்படுத்திவிட்டது. பாலியல் exclusiveness இருந்தால் மட்டும் தான் அது குடும்பம் ஆகமுடியும் என்ற வரையறையினைத் தாண்டி அவர்கள் தங்களிற்கான பொதுமையினை அடையாளப்படுத்திவிட்டார்கள். அது நிச்சயமாக முன்னேற்றம் தான்.
 
ஆதித்திய இளம்பிறையன்,
போதனைகளால் எதையும் விதைத்துக் காக்கமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் போதனைகளால் எண்ணங்கள் நிச்சயமாக மனங்களில் நாட்டப் படலாம். நாட்டப்பட்ட நாற்றுக்களின் வளர்ச்சியோ கருகுதலோ அது அந்த அந்தத் தளங்களைப் பொறுத்தது. சூழல் பல செயல்களைத் தூண்டுகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் சாவிகொடுத்த பொம்மைத் தனங்களான நடைமுறை மாறுவது சுயசிந்தனையில் இருந்து தான் சாத்தியம் என்பது எனது அபிப்பிராயம்.
 
புதிய பொருளாதார மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்ற சூழலில் வாழ்ந்தபடி பார்க்கையில் பெண்ணின் பொருளாதார சாத்தியங்கள் அனைத்தையும் மாற்றிவிடும் போலத் தான் தோன்றும். ஆனால் பொருளாதார சாத்தியங்கள் அறுபது வருடங்களிற்கு முன்னரே நிகழ்ந்து விட்டசூழல்களில் கூட பல பழைய சிந்தனை முறைகள் மாறாது தான் இருக்கின்றன. 

 

Edited by Innumoruvan

நன்றி பகிர்வுகு இன்னுமொருவன். இப்படி முன்னேறுவதற்கு எமது சமூகம் பல ஆண்டுகள் கடக்க வேண்டியிருக்கு. ஆனாலும், எந்த ஒரு முன்னேறிய நாட்டிலும் தனக்குரியவள் வேறு ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டிருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள், அது ஆணா பெண்ணாயிருந்தாலும் சரி, இப்படிப்பட்ட நிகழ்வுகள் சினிமா கார ர்கள், மேட்டுக்குடிகளில் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
 
 
ஆணின் மனநிலை எப்பொழுது மாறும்?? அந்த மாற்றத்திற்கான திறவுகோல் எது ?? நற்போதனைகளால் எதையும் இங்கு விதைத்து காக்க முடியாது.   ஒரு செயலை செய்ய தூண்டும் வினை சூழல் தான்.  பெண்ணின் பொருளாதாரச் சூழல் மாறும்போது அதற்கு ஏற்றவாறு ஆண்களின் மனநிலையும் மாறித்தான் ஆகும். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் அது நடந்தே தீரும்.
 

 

 

 

 

ஆணின் மனநிலை உலகம் உள்ளளவும் மாறப் போவதுமில்லை. ஆண்  இருக்கும் வரை தன் சார்ந்த சுயநல ஆசைகள் அவனுக்கு இருக்கும் வரை பெண் சுயமாக வாழ்வதையும் சுதந்திரமாக வாழ்வதையும் ஏற்றுக்கொள்ளவும் போவதுமில்லை. வேறு வழியின்றி ஆண் பார்த்துக் கொண்டிருப்பானேயன்றி கண்ணியமானதாக எப்போதுமே நோக்கான்.

 

தொடர்ந்து உங்கள்  கருத்துக்களை முன் வையுங்கள் இன்னுமொருவன்

  • தொடங்கியவர்
நன்றி பகிர்வுகு இன்னுமொருவன். இப்படி முன்னேறுவதற்கு எமது சமூகம் பல ஆண்டுகள் கடக்க வேண்டியிருக்கு. ஆனாலும், எந்த ஒரு முன்னேறிய நாட்டிலும் தனக்குரியவள் வேறு ஒருவருடன் உடல் உறவில் ஈடுபட்டிருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள், அது ஆணா பெண்ணாயிருந்தாலும் சரி, இப்படிப்பட்ட நிகழ்வுகள் சினிமா கார ர்கள், மேட்டுக்குடிகளில் இருக்கலாம்.

 

 

வந்தியத்தேவன், 
உங்கள் கருத்து பதிவிற்குள் பதிவுசெய்யப்பட்டுள்ளது:  " (குறிப்பு: வெள்ளைக் காரர் என்றால் போல் எல்லோரும் சுவிங்கேர்ஸ் தான் என்று கருதக் கூடாது. கள்ளத்தொடர்பு என்பது அவர்களாலும் முற்றுமுழுதாக எங்களைப் போன்றே பெரும்பாலும் பாக்க்ப்படுகிறது. அவர்களிற்கும் எங்களிற்குமான வித்தியாசயம், மீள ஏற்றல் என்ற முனையில் தான் பார்க்கப்படக்கூடியது)."
 
இந்தப் பதிவு செய்ய விழைந்தது ஒரு சிறு காட்சி கொண்டு சில பெரிய கேள்விகளை அணுகியதுதான். அவ்வாறு எழுப்பப்பட்ட சாத்தியங்கள், அவரவர் சார்ந்து ஒவ்வொருவிதத்தில் பதிவாகும்.
 
எமது சமூகத்தின் மாற்றம் சார்ந்து ஒன்றைக் கூறமுடியும், எமது இளையவர்களைப் பொறுத்தவரை (குறைந்தபட்டசம் புலத்தில் வளர்ந்த இளையவர்கள்) தாம் மணம் முடிக்க இருப்பவர் virgin ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் மாறியுள்ளது.
 
உங்கள் கருத்துக்கு நன்றி சுமேரியர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன், உங்கள் பதிவுகளில், எப்போதும் ஒரு புரட்சியான சிந்தனை இருக்கும்!

 

இந்தப் பிரச்சனை, எமது முன்னோர் காலத்திலும் இருந்தது, என்பதற்கு வள்ளுவரின் பின்வரும் குரலே சாட்சி!

 

'சிறை காக்கும் காப்பு, எவண் செய்யும், மகளிர்,

 நிறை காக்கும் காப்பே தலை"

 

என்னைப் பொறுத்த வரையில், ஒருவன் தனக்கு விருப்பமான ஒருத்தியுடன் சேர்வது தவறே அல்ல!

 

ஆனால், அதைத்  திரை மறைவில், மனைவிக்கோ அல்லது காதலிக்கோ தெரியாமல் செய்வது தான் தவறு என நினைக்கின்றேன்!

 

அது ஒரு நம்பிக்கைத் துரோகம்!

காடுகளில் வாழ்ந்த காலங்களில் எனின், அடி பிடி படலாம்! ஆனால் நவீன உலகில் அது சாத்தியப் படாது! :o

 

விருப்பமில்லாவிட்டால், விட்டு விட்டு விலகிப் போவதே நல்லது!

 

அதை விட்டு விட்டு, ஆசைக்கொருத்தி, ஆஸ்திக்கு இன்னொருத்தி, என்று அலைவதில் எனக்கு உடன்பாடில்லை!

ஆனால், அதைத்  திரை மறைவில், மனைவிக்கோ அல்லது காதலிக்கோ தெரியாமல் செய்வது தான் தவறு என நினைக்கின்றேன்!

 

அது ஒரு நம்பிக்கைத் துரோகம்!

அதை விட்டு விட்டு, ஆசைக்கொருத்தி, ஆஸ்திக்கு இன்னொருத்தி, என்று அலைவதில் எனக்கு உடன்பாடில்லை!

 

 

 

இன்னுமொருவனின் இந்தப் பதிவு, கள்ளொழுக்கம் பற்றி பேசவில்லையே புங்கை. நம்பிக்கைத் துரோகம் என்பதும் இந்த திரியில் சொல்லப்பட்ட பிரதான கருத்தும் நேர் எதிரானது. மீண்டும் பொறுமையாக வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொருவனின் இந்தப் பதிவு, கள்ளொழுக்கம் பற்றி பேசவில்லையே புங்கை. நம்பிக்கைத் துரோகம் என்பதும் இந்த திரியில் சொல்லப்பட்ட பிரதான கருத்தும் நேர் எதிரானது. மீண்டும் பொறுமையாக வாசியுங்கள்.

 

நன்றிகள், நிழலி!

 

வேலையில இருந்து, அவக்கேண்டு கடிச்சதால வந்த பிரச்சனை!

வீட்டை போய், வடிவா வாசிப்பம்! 

  • கருத்துக்கள உறவுகள்
first of all swinging isn't always married couples. but when it is a married couple both usually both love each other and know that variety is the spice of life and instead of cheating on each other they both agreed that sex is fun and sex with new partners is exciting and they are secure in their relationship not jealous that their mate is going to runoff with someone else the chances of getting an std from another married couple that only swings with other married couples is very low. swingers aren't possessive like insecure people and they trust each other. they don't lie to each other like non swingers are pron to do. swingers are open about their feelings and they are not judgmental about their spouses feelings. they really love their spouse and really want them to be happy even if its at a loss to them. swingers learn new tricks to do in the bedroom and love sharing with their spouse w/o getting hit with a bunch of questions on how did u find out about this or that. swingers are a laid back relaxed couple who aren't embarrassed about their sexuality fetishes kinks and quirks. as a couple swingers are all around the best type people i've ever known. and i'm proud to be in this class of people. 
Source(s):
love of life

வணக்கம் இன்னுமொருவன்,

உங்கள் தகவல்களிற்கும், சிந்தனைகளிற்கும் நன்றி. கட்டுரையில் நீங்கள் கூறிய சில விடயங்கள் பற்றி...

1. துரியோதனன் திரெளபதியை துகிலுரிந்தபோது திரெளபதியின் சேலை முடிவின்றி தொடர்ச்சியாக வளர்ந்தது என மகாபாரதக்கதையில் பார்த்தோம். வெவ்வேறு பாலினரிற்கான உடைகளின் கலாச்சாரத்தின் பின்னணி, அதாவது ஓர் உதாரணத்திற்கு பெண்களிற்கு சேலை அணிவித்ததன் அடிப்படைக்காரணமே இலகுவாக பிரிதொரு ஆண் புணர்வில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக இருக்குமோ என நான் இப்போது யோசிக்கின்றேன். ஆண்கள் அணியும் கீழாடை தேவையேற்படும்போது இலகுவில் பாலியல் உறுப்பை வெளிக்காட்டத்தக்கதாகவும், பெண்கள் அணியும் கீழாடை பாலியல் உறுப்பை வெளிக்காட்டி புணர்வில் ஈடுபடுவதற்கு ஒப்பீட்டளவில் சற்று அதிகநேரத்தை எடுக்கக்கூடியதாகவும் அமையப்(அமைக்கப்)பெற்றது நீங்கள் மேலே கூறியவாறு சந்ததிவிருத்திக்கான போட்டி, மற்றும் வேற்று ஆண்களிடமிருந்து பெண்களை பாதுகாத்தல் (பாலியல் வண்புணர்வு) போன்றவற்றின் அடிப்படைகளில் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்றும் நினைக்கின்றேன்.

2. செயற்கையாக விந்தணுமூலம் கருத்தரித்தல் சம்பந்தமாக ஓர் கட்டுரையை முன்பு வாசித்தேன். அதில் கூறப்பட்டதோர் பரபரப்பான விடயம்: செயற்கை முறையில் குழந்தையை உருவாக்கும் மருத்துவநிபுணர் சம்பந்தப்பட்ட ஓர் சம்பவம்.

வழமையில் ஓர் பெண் கருப்பம் அடைவதற்கு தேவையான சூல் குறிப்பிட்ட தாயிடமிருந்தும், ஆனால் விந்து ஆரோக்கியமான வெவ்வேறு ஆண்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டும் பயன்படுத்தப்படும் சூழ்நிலையில், இம்மருத்துவ நிபுணர் செய்த சில்மிசம் என்ன என்றால்... தனது மருத்துவ நிலையத்திற்கு வந்த செயற்கை முறையில் கருத்தரித்த ஏராளம் பெண்களிற்கு, அவர்கள் கருத்தரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து நன்கொடை விந்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தனது விந்துக்களையே ஒருவருக்கும் தெரியாமல் (கருத்தரித்த தாய்மாருக்கு முன்கூட்டியே கூறாமலும், அவர்களின் அனுமதி பெறாமலும்) பயன்படுத்தியுள்ளார். தனது சந்ததியைப் பெருக்குவதில் உயர்தொழிநுட்ப மருத்துவத்துறையில் சேவையாற்றும் இந்த மருத்துவநிபுணர் நுணுக்கமான முறையில் புகுந்து விளையாடியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆண்கள் தமது சந்ததியை (மரபணுவை) கடத்துவதில் எவ்வளவு ஆர்வம்(போட்டி) காட்டுகின்றார்கள் என்பதற்கு நவீன உலகில் இச்சம்பவமும் ஓர் உதாரணம்.

(குறிப்பு: கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் வழங்கிய எச்சரிக்கையை பார்த்துவிட்டு இந்தத்தடவை நான் உங்கள் கட்டுரையையும், அதற்கு எழுதப்பட்ட பதில்களையும் கீழிருந்து மேலாகப்படித்தேன். முதலில் கீழிருந்து மேலாக பதிற்கருத்துக்களையும், அதன்பின்னர் கட்டுரையை அடியிலிருந்து மேல்நோக்கியும் வாசித்தேன்.)

Edited by கலைஞன்

எந்த ஒரு செயலுக்கும் ஒரு விழைவு இருக்கின்றது. அவ் விழைவு குறித்த அனுமானமே அச் செயலை ஒழுங்கமைக்க முற்படும். காமத்தின் விழைவு ஒரு குழந்தை தொடர்சியாக ஒரு மனித உருவாக்கம் எனலாம்.

 

காமத்தை இரு உடல் இரு மனம் சம்மந்தப்பட்டதை தாண்டி மூன்றாவதாக அதன் விழைவால் ஏற்படும் பெறுமானம் சார்ந்தே ஒழுங்குகள் அமையும். ஆனால் அதை நாம் அவதானிக்கத் தவறுகின்றோம்.

 

தொடர்ச்சியான மனித இருத்தல் என்பது ஆண் மற்றும் பெண் இருவரது கூட்டு முயற்சியே. இங்கே ஒழுக்கம் பொருளாதாரம் மற்றும் இன்ன பிற காரணிகள் சார்ந்து அமையும்.

 

தமிழர் வரலாற்றில் ஒழுக்க நெறிகள் (திருக்குறள் உட்பட )பிரதானப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பாலியல் ஒழுக்கக் கேடுகள் மிக மோசமாக இருந்திருக்கின்றது என்ற கருத்தும் உண்டு. அதே நேரம் இவை சாதியத்தை கட்டிக்காப்பாற்றவும் என்ற கருத்தும் உண்டு.

 

விழையாட்டுப்போட்டிகள் அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு சார்ந்தது. ஆனால் அவைகள் போட்டிகளுக்கேற்ப நாட்டின் கெளரவப் பிரச்சனையாக கூட மாறிவிடுகின்றது. மிகப்பெரும் வணிகம் அரசியல் சம்மந்தப்பட்டது. இது அதைவிடச் சிக்கலானது.

 

இனி உருவாகும் அடுத்த தலைமுறைகள் தெழில்நுட்பம் சார்ந்தது. இப்போதே தொழில்நுட்பம் என்பது வீடியோ சாட்டிங் போன்ற சாதனங்கள் ஊடாக இன்பத்தை அனுபவிக்கும் தன்மைகொண்டது. இதன் வளர்சிப்போக்கு வித்தியாசமானது. உறவு நிலையில் ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் என்பது விரிவாக்கம் அடைகின்றது. பரபரப்பான வேகமான வாழ்க்கை. வாழ்க்கை நேரமின்மையால் தவிக்கின்றது. இதற்குள் காமத்தை தணிக்க கருவிகள் பொம்மைகள் தெழில்நுட்பங்கள் என பல நுழைகின்றது. இவ்வாறான கோணத்தில் இனிவரும்தலைமுறைகளுக்கு காமம் ஒரு பொழுதுபோக்காக அமைய அதிக வாய்ப்புண்டு அதே நேரம் மனித இருத்தல் வளரப்பு உற்பத்தி தரமானதாக இருக்குமா என்பதுக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு இன்னுமொருவன். திருமண பந்தத்திலே கணவன் மனைவி இடையே ஏற்றப்படும் காதலையும் காமத்தையும் பிரிக்க முடியாது/பிரிப்பது மிகக் கடினம் என நினைக்கிறேன். திருமண வெளிக்கு அப்பால் இது சாத்தியமானதே. நீங்கள் எழுதியது "சுவிங்கர்ஸ்" சோடிகளுக்கு மிகவும் பொருந்தும் விடயம். பல உயர் கல்விகள் கற்ற, நல்ல பதவிகளில் இருக்கும் தம்பதிகள் சொடிமாற்றம் செய்ய தம்பதிகளை அணுகுவது மேலை நாடுகளில் இப்போது சாதாரண விடயமே. சோடி மாற்ற ஆரம்பத்தில் எரிச்சல் ஏற்ற்பட்டலும் போகப் போக அது வித்தியாசமான திருப்தியை அளிப்பதாக கூறுகிறார்கள். ஆண் அல்லது பெண் இருபால் ஈர்ப்பு (Bisexual) கொண்டவராக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களது சோடியே மற்ற துணையை தேட உதவி செய்கிறது. கிட்டத்தட்ட ஒரு Give and take policy.

"அதன் பின்னர், ஒரு உத்தியோகத்திற்கான நேர்முகத்தேர்வில் ஒரு சாதாரணமானவனின் மனைவி, நேர்முகத்தேர்வு செய்பவரிற்குக் கொடுக்கும் கைகுலுக்கலிற்கும், அன்ரோனியோ அஞ்சலீனா மீது நடிக்கும் கட்டில் காட்சிக்கும் பிறாட்டின் மனதில் அதிக வேறுபாடு இருக்கப்போவதில்லை. இதை பொதுமைப் படுத்திப் பார்ப்பின், அன்ரோனியோ அன்ஞ்சலீனாவிற்குக் கமராவில் செய்யும் தொழில் ரீதியான செயல்கள், திருமணத்திற்கு அப்பால் இரு ஆணும் பெண்ணும் பொழுதுபோக்காகச் செய்வது ஏன் சாத்தியப்படாது"

இதுதான் கட்டுரையின் சாராம்சம் என்று நம்புகின்றேன் .இது என் கருத்து மாத்திரமே .(விதிவிலக்குகள் பற்றி அல்ல )

 மனிதன் நாகரீகம் அடைய அடைய தனது வாழ்வியல் நிலைப்பாட்டில் பல சட்டம் ,ஒழுங்கு என்ற நிலைப்பாடுகளை கொண்டுவருகின்றான் ,அது பொருளாதாரம் ,சுகாதாரம் சார்ந்த தேவைகளாகவும் இருக்கின்றன .இன்னுமொருவன் சொல்லும் அந்த நிலைதாண்டிதான் இன்று இருக்கும் ஒரு கட்டுப்பாடான நிலைக்கு வந்திருக்கின்றோம் என நம்புகின்றேன் .

ஆண் பெண் உறவு மனம் சார்ந்தது .எனவே இந்த கட்டுப்பாடுகளையும் மீறி தொடர்புகளும் உறவுகளும் வரலாம் அதற்காக முழு மனிதர்களும் அப்படியான ஒரு நிலைக்கு வருவார்கள் என்பது சாத்தியமாறது.

அன்டோநியாவும் அன்ஜ்சலினாவும் வைக்கும் உறவு தொழில் ரீதியானது ,பிரட் பிட்டுக்கும் அன்ஞ்சலினவிற்குமான உறவு கணவன் மனைவி உறவு .நான் எனது பாலியல் தேவைக்கு ஒரு விபச்சாரியிடம் போவதற்கும் மனைவியுடன் உறவு கொள்வதற்கும் கட்டாயம் வித்தியாசம் இருக்கு .பாலியல் தேவைகளுக்கு அப்பால் அதில் ஓர் அன்னியோன்யம் இருக்கு.

கிளிண்டன் மொனிக்கா உறவு மிகவும் பெரிதுபடுத்துப்பட்டு விசாரணைகள் கூட நடந்தன ,அதைப்பற்றி  கிலாரி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதெல்லாம் பொய்.(Primary colours பார்க்கவும்).இந்த விடயத்தில் எம்மவர்கள்(சீனர்கள் கூட) பலே கில்லாடிகளாக இருந்ததற்கு கஜுராஹோ சிற்பங்களும் காமசூத்திராவும் சாட்சி .

எம்மைவிட மேற்கத்தைய நாட்டவர்கள் தான் திருமணத்திற்கு பின் பிற உறவுகள்  வைத்துக்கொள்வதை  ஏற்றுக்கொள்வதில்லை .

இன்னொருவன் பேசும் பொருள் இதுவோ?
 
பௌதீக ரீதியாகப் பெண் அந்தப்புரத்தில் இருப்பது மட்டுமல்ல அவளது மனத்திலும் எந்த எண்ணமும் தன்னைத் தாண்டி ஏற்பட்டுவிடக்கூடாது என ஆண் கருதினான்.
 
பின்னர் மாற்றங்கள் பெண்ணின் வரம்பு சார்ந்து நிகழ்ந்தன வளர்ந்தன.
 
ஒருவனிற்கு ஒருத்தி என்ற நம்பிக்கைக்கு முரணான நடைமுறைக்கான ஆதாரங்கள் இயற்கையின் அம்சங்களிலும் உண்டு. அது தவறில்லை.
 
ஆணின் பெண்சார்ந்த கட்டுப்பாடுகள் பயங்கள் என அனைத்துமே தனது மரபணுக்களைப் பரப்புதல் என்ற அடிப்படையில் இருந்து தான் தொடங்குகின்றது. இதற்கு உத்தரவாதம் கிடைத்தால் பொழுது போக்கு உறவை அனுமதிக்க மனம் தயாராக வேண்டும்.
 
எல்லாம் சரி ஆனால்,  பாலியல் உறவு என்பது மட்டும் திருமணத்தால் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கிறது. இதனால்தான்  கள்ளத் தொடர்புகளும், விட்டுவிட்டு ஓடுதல்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. 
 
கற்பனையும் மனமும் தான் காமத்தைக் கட்டியாழ்கின்றன.
 
குழந்தை உருவாகாத வண்ணம், நோய் ஏற்படா வண்ணம், பொருளாதார பிரச்சினைகளோ சட்டப்பிரச்சினைகளோ உருவாக வண்ணம், ஆணும் பெண்ணும், பிறருடனான உடலுறவை பொழுதுபோக்கு என்ற அழவில் பார்க்கும் பக்குவம் அடைவேண்டும். இது சாத்தியமாகக்கூடியதே.
 
எனவே, இம் மாற்றத்தின் மூலம் கள்ளத்தொடர்புகள், விட்டுவிட்டுஓடுதல்கள் மற்றும் விவாத முறிதல்கள் என்பவற்றினை தடுக்கலாம். அதற்கு மீள ஏற்றல் என்ற பக்குவத்தை நாம் அடைதல் வேண்டும். இன்பமான வாழ்வுக்கு இதுவே வழி. 
 
ஒன்றாக வாழ்வோம் ஒன்றித்து நன்றாக வாழ்வோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.