Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே 
இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை.

கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட.

எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி.

 நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம்.

பத்து வயசிலையே அந்த அம்மன் கோவிலில் வைத்து "சிவ தீட்சை" எடுத்துவிட்டேன்.
ஐயர் பூசையாக்கும் போது கேட்டுக்கேட்டே எனக்கும் சில மந்திரங்கள்
அத்துப்படி. அந்தளவுக்கு அம்மாளாச்சி என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டா.

ஆனால் அப்பாவுக்கு அப்படியல்ல,

அப்பாவின் முன்னோர்கள் வழி வந்த கோவில் என்று அப்பாவும்,அவர் சகோதரர்களும்
சொல்லுவார்கள். பிற சாதியினர் செல்வதற்கு எல்லாம் தடைவிதிக்கப்பட்டிருந்த
காலங்கள் அவை வெளியில் இருந்து தான் கும்பிடலாம், கோவிலுக்குள்
நுழைவதோ,சுவாமி தூக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்தது, மீறினால் தண்டனைகளும்
வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பிறகாலத்தில் இயக்கங்களின் வருகையோடு பல
மாற்றங்கள் நடந்தது அப்படித்தான் இங்கும் "கிரகப்பிரவேஷம்" என்ற பெயரில்

புலிகளால் அனைத்து சமூகத்தவர்களும் கோயிலுக்குள் செல்லவும், திருவிழாவின்
போது ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு திருவிழாவும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
இதை முன்னின்று செய்தது கூட ஒரு வகையில் எமக்கு பெரியப்பா முறை தான்,
அவர்களே திரும்பவும் கோவில் நிர்வாகத்தை பொதுச்சபையைக் கூட்டி திர்ம்ப
வந்தது போன்ற பல சம்பவங்களால் அப்பா கோவிலுக்குள் போவதே இல்லை. எப்போதாவது
வாசலில் நின்று கும்பிட்டு விட்டு வந்திடுவார்.

ஆனால் என்ரை அம்மாளாச்சியும் கன ஷெல்லடியளை எல்லாம் தாங்கினவாவாம்.
எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த
இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து
வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை
தானாம் இருந்ததுகள், அப்ப ஆமிக்காரன் ஆட்லறி அடிச்சு எவ்வளவோ சனம்
உடல்சிதறிப்பலியானார்களாம். எல்லாற்றை சடலமும் பக்கத்திலை இருந்த
பள்ளிக்கூடத்திலையும், கோயில் மடத்திலையும் தான் புதைச்சாங்களாம்.

அந்த கொடுமையுக்குள்ளையும் கனக்கச் சனம் கொண்டுவந்த நகையள், பிணங்களிலை இருந்த நகையளைக் கூட கொள்ளையடிச்சதுகளாம்.

அப்படி அம்மாளச்சியும் தன்ரை வாசல்லை கனக்க கண்டுபோட்டா.

அதே போல அம்மாளாச்சியைப் பற்றிய கதைகளுக்கும் கூடக் குறைவில்லை.

அதுக்காக நான் வரலாறுகளை எல்லாம் சொல்ல வரேல்லைப் பாருங்கோ.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இளைஞர்களிடம் தான் கோயில் நிர்வாகம்
இருந்தது. அப்ப தான் பொடியள் கனகாலத்துக்குப் பிறகு கோயிலுக்கு
கும்பாபிசேகம் செய்வதற்காக பல திட்டங்கள் போட்டிருந்தார்கள்.

கேணிகட்டுவது

பூங்காவனம் கட்டுவது

சித்திரத் தேரும்,மணிமண்டபமும்.

அன்னதான மடம்

இப்படிப் பல..

கும்பாபிசேகத்துக்காக இரவு,பகலா பொடியள் வேலை செய்துகொண்டிருந்த காலம்.
ஒருநாள் எல்லாரும் கோயிலடியிலை படுத்திருந்திருக்கிறாங்கள். விடிய
எழும்பிப் பார்க்க குகனை மட்டும் காணேல்லையாம். தேடிப் பார்க்க கனக்கத்
தூரம் தள்ளி ஒரு கடை வாசலிலை ஒவ்வொரு படியிலையும் தலை மேலை,கால் கீழை
இருக்கிற மாதிரி கிடத்தி இருக்காம். அவன் நல்ல நித்திரையாம். "அம்மாளாச்சி
தான் அங்கை தூக்கிக் கொண்டுபோய் போட்டிட்டா" என்று சொல்லுவாங்கள்.

அதை விட சாமப் பூசை முடிஞ்சதும். கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்
நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.
சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்.

ஆனால் எனக்கு அப்பவே இது உண்மையா என்று பார்க்க வேணும் என்று ஆசை. என்னை
அக்கா தான் எப்பவும் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவாள். ஒரு நாள் கோயில்
திருவிழா நேரம் நான் அண்ணாட்டை கடைக்குப் போறேன் என்று சொல்லிப்போட்டு
சுவாமி வெளிவீதி வர நான் ஓடிப்போய் உள்ளை படுத்திட்டன்.

"அம்மாளாச்சி வருவா வருவா என்று பார்த்தால் வரவே இல்லை, சலங்கை சத்தம்
கூடக் கேட்கவே இல்லை" பிறகு என்ன நடந்தது என்றே தெரியலை படுத்திட்டன்.

யாரோ என்னை எழுப்புற மாதிரி இருந்திச்சுது அம்மாளாச்சி தான் வந்திட்டா
"வரம் கேட்டிட வேண்டியது தான்" போல என்று பயந்து, நடுங்கி எழும்பிப்
பார்த்தால் அண்ணாவும்,அக்காவும், கோயில்லை மணி அடிக்கிறவனும்
நிக்கிறாங்கள்.

தொடரும்..

கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்

நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.

சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்

எல்லாரும் பினாட்டு தீத்திறாங்கள் எண்டு கிளியறாய் விளங்குது  :lol:  :lol: .  இந்தக் கதையை உங்கள் வலைப்பூவில் படித்தளவில் ,  யாழில் மீண்டுமொரு அதிர்வு ஏற்படுவதற்கான சமிக்கைகளைக் காண்கின்றேன் . இளயதலைமுறையை சேர்ந்த உங்களின் சாதியம் பற்றிய கண்ணோட்டத்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் .வலிமிகுந்த உண்மைகள் பேசப்பட்டு , அதனால் தெளிவுகள் ஏற்பட்டு நாம் போகப்போகின்ற பாதை செப்பனிடப்படவேண்டும் . உங்கள் தொடருக்கு எனது வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சி ஓகே.ஆனால் இந்த தொடரும் என்கிறதிலதான் பிரச்சனையே.

தொடருங்கள் ஜீவா...

நானும் ஒரு காலத்தில் கொழும்புத்துறையை கடந்து போனால் இருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தவறாமல் போனவன். அங்கு தான் என் மச்சளுக்கு சின்ன முத்தமும் கொடுத்து ஆரம்பித்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை வாசித்ததும்  எங்கள் ஊர் அம்மன் நினைவும் அது சார்ந்த விடயங்களும் நினைவில் வந்திட்டுது. வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
எனது வீட்டுக்கு போகும் வழியிலும் ஒரு அம்மன் கோவில்.அதில் ஊர் பெடியள் தான் சிரமதானம் செய்கிறது.பிறகு இரவாக களவாக கோழி பிடித்து கோழிப்புக்கை சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் இன்றும் நினைவில் உண்டு. :D  :D
 
கோயில் பூசை தொடக்கம் அன்னதானங்கள் வரை கீழ் சாதியினர் வெளியில் நின்று தான் திருநீறு தொடக்கம் பிரசாதம் வரை வாங்குவார்கள்.மனதில் பெரிய மனவுறுத்தலாக இருக்கும்.சிலகாலத்தில் கோயிலுக்கு போவதையே நிறுத்தி விட்டேன்.
 
தொடருங்கள் ஜீவா.
  • கருத்துக்கள உறவுகள்

செல்லடியில்....கணப்பொழுதில் உயிர் தப்பியவனில் நானும் ஒருவன்.....அதை இன்று நினைத்தாலும் பயம் போகவில்லை....நீங்கள் சொன்னவைகள் யாவும்  உண்மை...இவைபற்றிய கதைகளும் எனக்கு தெரியும்.... தொடருங்கள் ...வாசிக்க ஆவலாய் உள்ளேன்..

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா, ஒரு தன்னிலைத்தன்மையில் கதை சொல்லுகின்றீர்கள்!

ஒரு குழந்தை கதை சொல்வது போல, அழகாக இருக்கின்றது!  :D

தொடருங்கள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ  அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் போல? தொடர் மச்சி.

 ஜீவா நீங்கள் அப்பவே கடவுளைக்காண வெளிக்கிட்டிருக்கிறியள் .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவா...

உங்களது எழுத்துப்பணி  தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

குறிப்பிட்ட சம்பவங்களில் நேரடித்தொடர்பு இல்லாமல் கேள்விப்பட்டவற்றையே எழுதுவதால், ஒரு கதை சொல்லியாக என் வரம்புக்குள் நடந்த சம்பவங்களின் கோப்புக்களாகவே எழுத முனைகிறேன்.

ஆனால் இது சாதியத்திற்கான ஒரு பதிவு அல்ல. :)

பினாட்டு தீத்துறது என்பது புதிய உரைநடையாய் இருக்கிறது. :rolleyes:

நன்றி கோமகன் அண்ணா உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும். :)

நான் நகைச்சுவைக்கே அந்த சொல்லாடலைப் பாவித்தேன்  .  பினாட்டு தீத்துறது எண்டால் குணசறீபுலூட்டோ சாப்பிடுறதுக்கு முதல் வேர்சன்  :lol: :lol: :D :D  ( ஒருவரை இலகுவில் ஏமாற்றுதல் ) .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜீவா...ஆவலுடன் எதிர்பாக்கிறன் மீதியை...

  • கருத்துக்கள உறவுகள்

ஆராச்சியில அம்மாளாச்சியைக் கூட விட்டு வைக்க இல்ல...ம்ம்ம்.. தொடரட்டும். :)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த
இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து
வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை
தானாம் இருந்ததுகள்,

உங்கடை கதை வாசிச்சன் . நல்லாய்தான் எழுதிறியள் . நீங்கள் சொல்லிற கோயில் அல்வாய் முத்துமாரிஅம்மன் கோயில் எண்டு நினைக்கிறன் . அதிலை மில்லர் நெல்லியடியிலை அடிக்கமுதலே , ஆமி கெலியிலை வந்து நோட்டீஸ் போட்டு சனங்களை இந்தக்கோயிலிலை இருக்கசொன்னவங்கள் . அப்பதான் இந்த செல்லடி நடந்தது . அந்த செல் அடியும் ஆர் அடிச்சதெண்டு சனம் கன்னைகட்டி கதைச்சது . அதிலதான் சனம் கூட செத்திது . கிட்டமுட்ட முள்ளிவாய்க்கால் மாதிரி . அப்ப இந்த மீடியாக்கள் இல்லாததாலை விசயம் வெளியாலை வரேலை . நானும் முதல் உதவி இரத்த தானத்துக்கு எல்லாம் போனனான் . மறக்கவேணும் எண்டு நினைக்கிற விசையங்களை எழுதி இருக்கிறிங்கள் . உங்களுக்கு என்ரை பாராட்டுக்கள் தம்பி :)  .

Edited by மைத்திரேயி

  • கருத்துக்கள உறவுகள்

ஜுவா  ஒப்பிறேசன் லிபரேசன்  ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தால்  உலங்கு வானூர்திகளில் இருந்து   மக்கள்  தஞசமடையவேண்டி  இடங்கள் என  குறிப்பிட்டு துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன  அதில் நீங்கள் கதையில் சொல்லும்  கோயிலின் பெயரும் ஒன்று என  நினைக்கிறேன். அதே நேரம்  பலாலியில் இருந்து  ஒலிபரப்பான வானொலியிலும்  மக்கள் தஞ்சமடைய சொல்லி சில இடங்களின் பெயர்களை  அறிவித்துக் கொண்டிருந்தா்கள்.  அதனால் சனங்கள்  சண்டை ஆரம்பித்ததுமே  இலங்கையரசு அறிவித்த  இடங்களில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தார்கள். இறுதி  முள்ளி வாயக்கால் சண்டையில் மக்கள்  இலங்கையரசு அறிவித்த  பாது காப்பு  பிரதேசங்களில்  பெருமளவான மக்கள்  தஞ்சமடைந்ததை போல.  பிறகு  பெருமளவாக  இறந்து போனார்கள். நீங்கள் எழுதும் கோயிலடியில்  குறைந்தது  ஆயிரம் பேர் அன்றே  கொல்லப் பட்டிருந்தனர். மந்திகை வைத்திய சாலை நிறைந்து வழிந்திருந்தது  அதற்கு மேல் எழுத விருப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் அருள் என்றும் கிடைக்க வேண்டும்.... அம்மன் அருள் தொடர வாழ்த்துக்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்
இந்த சின்ன வயசிலேயே உங்களுக்கு நல்ல எழுத்தாற்ற‌ல் ஜீவா..தொட‌ருங்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாளாச்சி ஓகே.ஆனால் இந்த தொடரும் என்கிறதிலதான் பிரச்சனையே.

நேரப்பிரச்சனை தான் காரணம். வேலையில் இருந்தபடியே எழுதுவதால் அதிகம் எழுதமுடிவதில்லை.

காக்கவைக்காமல் விரைவிலெயே முடித்து விடுகிறேன்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

தொடருங்கள் ஜீவா...

நானும் ஒரு காலத்தில் கொழும்புத்துறையை கடந்து போனால் இருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தவறாமல் போனவன். அங்கு தான் என் மச்சளுக்கு சின்ன முத்தமும் கொடுத்து ஆரம்பித்தவன்.

கோயில்லையே கிஸ்ஸா ஆ?????? :rolleyes::icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையை வாசித்ததும்  எங்கள் ஊர் அம்மன் நினைவும் அது சார்ந்த விடயங்களும் நினைவில் வந்திட்டுது. வந்திட்டுது.

அநேகமா எல்லா ஊரிலையும் ஒரு அம்மன் கோவிலாவது இருக்கும், அந்த வகையில் அநேகம் பேருக்கு அதனோடு தொடர்புடைய ஞாபகங்களும் இருக்கும். ஆனால் ஏன் எக்கோ பண்ணுறிங்கள்???? :lol::icon_mrgreen:

நன்றி அக்கா உங்கள் வரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

எனது வீட்டுக்கு போகும் வழியிலும் ஒரு அம்மன் கோவில்.அதில் ஊர் பெடியள் தான் சிரமதானம் செய்கிறது.பிறகு இரவாக களவாக கோழி பிடித்து கோழிப்புக்கை சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் இன்றும் நினைவில் உண்டு. :D  :D
 
கோயில் பூசை தொடக்கம் அன்னதானங்கள் வரை கீழ் சாதியினர் வெளியில் நின்று தான் திருநீறு தொடக்கம் பிரசாதம் வரை வாங்குவார்கள்.மனதில் பெரிய மனவுறுத்தலாக இருக்கும்.சிலகாலத்தில் கோயிலுக்கு போவதையே நிறுத்தி விட்டேன்.
 
தொடருங்கள் ஜீவா.

அப்ப நுணா அண்ணாவும் பெரிய விளையாட்டெல்லாம் காட்டியிருக்கிறிங்கள் போல .. :D

உண்மை. பல கோவில்களில் இன்றும் அதே தான் தொடருகிறது. பிரபலமான ஆலயங்களில் விருப்பம் இல்லையெனினும் கூட வருமானத்துக்கு வேண்டியாவது அனுமதித்தாலும், சுவாமி தூக்குவது போன்றவற்றை உள்ளூர்வாசிகளே செய்கிறார்கள். சில விதிவிலக்குகளும் உண்டு. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லடியில்....கணப்பொழுதில் உயிர் தப்பியவனில் நானும் ஒருவன்.....அதை இன்று நினைத்தாலும் பயம் போகவில்லை....நீங்கள் சொன்னவைகள் யாவும்  உண்மை...இவைபற்றிய கதைகளும் எனக்கு தெரியும்.... தொடருங்கள் ...வாசிக்க ஆவலாய் உள்ளேன்..

அப்ப உங்கள் வயதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. :rolleyes:

பல சம்பவங்கள் கேள்விப்பட்டவற்றையே வைத்து எழுதுவதால் சிலதை தவிர்த்தே எழுதுகிறேன்.

ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி அல்வாயான் அண்ணா, உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, ஒரு தன்னிலைத்தன்மையில் கதை சொல்லுகின்றீர்கள்!

ஒரு குழந்தை கதை சொல்வது போல, அழகாக இருக்கின்றது!  :D

தொடருங்கள்!

இதில் சில சம்பவங்கள் நான் தவழ்ந்து கொண்டு இல்லை அம்மாவின் வயிற்றினுள் இருக்கும் போது நடந்தவை அதனாலோ என்னவோ தெரியவில்லை. :rolleyes:

நன்றி அண்ணா,வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

ஓ  அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் போல? தொடர் மச்சி.

ஆக மொத்தம் என்னைக் காட்டிக்கொடுக்கிற பிளானோ மச்சான்???? :unsure::rolleyes:

விரைவில் முடித்து விடுகிறேன். நன்றி நண்பா :)

 ஜீவா நீங்கள் அப்பவே கடவுளைக்காண வெளிக்கிட்டிருக்கிறியள் .

:D :D :D

கொடியேற்றத்துக்கு முதல் நாள் வைரவரைக்கட்டுறது என்று கேள்விப்பட்டிருக்கிறியளோ?

அப்படித்தான் காவலுக்கு அம்மன் வெளிய வருவா என்று சொல்லுவார்கள் அதான் எப்படி இருப்பா என்று பார்க்கலாம் என்று தான். :rolleyes:

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஜீவா...

உங்களது எழுத்துப்பணி  தொடர வாழ்த்துக்கள்.

நன்றி விசுகு அண்ணா, :)

உங்கள் அனைவரின் ஊக்கம் தரும் உறசாகம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு ஜீவாவின் பதிவு.தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன்.ஆனால் சாத்திரி சொன்ன தகவலைப் பாத்தவுடன் நெஞ்சு கன்க்குது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.