Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies



 

அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு
இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று
பின்னேரம்  ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு
வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா
வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும்
ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி
போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான்
பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி
கையை  காட்டுகின்றா கீழே போனால்
சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள்
கூட்டம்..



 

“இவர்தான் தம்பி”என அக்கா என்னை அவர்களுக்கு
அறிமுகபடுத்தி “டேய் உனக்கு ஒண்டும் 
சொல்லாமல் கூப்பிட்டு விட்டன். இது கனடா வேம்படி கொமிட்டி ,இந்த முறை
கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?
வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).



 

“யோசித்து சொல்லுகிறன்” என்றேன்



 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை
விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்
காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி
“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க
போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து
ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை
இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு
இல்லை . 



 

“எதற்கும் நாளைக்கு முடிவு சொல்கின்றேன் “
என்றேன்.



 

“நாடகத்தில் உன்ரை தங்கச்சிக்கும் ஒரு லவர்
இருக்கு அதற்கும் ஒரு பெடியன் தேவை உனக்கு தெரிந்த நல்ல? பெடியன் யாரும் இருந்தா
கேட்டுப்பார் ,அடுத்த கிழமை ரிகர்சல் தொடங்க வேணும்.”என்றார் அக்கா .



 

“எனக்கும் உங்களை மாதிரி ஒரு வடிவான பெடியனை
பாருங்கோ” இது ராகினி.



 

நக்கலோ உண்மையோ என்று விளங்கவில்லை இருந்தாலும்
“அது ரொம்ப கஷ்டம் “ என்றுவிட்டு வந்து காரை எடுக்கிறேன் ,எடுத்த எடுப்பில்லேயே
கார் நூறில  பறக்குது. மதுசிறி ,ராகினி
இரண்டு பேரையும் நாட்டிலேயே எனக்கு தெரியும்,எத்தனை பெடியங்களை பின்னால அலைய
விட்டு  யாழ்பாணத்தில் டியுசனுக்கு
சயிக்கிளில் சுற்றிய ஆட்கள். ஏதோ தாங்கள் தேவதைகள் என்ற நினைப்பில் மிதந்தவர்கள்.



 

நான் நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டன். மற்ற
ஆளுக்கு யாரை பிடிக்கலாம் என்று நினைக்கையில் பலகுரல் மன்னன் பிரேம்சங்கர் நினைவு
வந்தான் ,அவன்தான் மேடை கூச்சம் இல்லாதவன்.யாழ் இந்து கல்லூரி நிகழ்வுகளுக்கும்
வந்து அமிர்தலிங்கம்,விசுவநாதன்,பொன்னம்பலம் போன்றவர்களின் குரல்களில் பேசி கை
தட்டு வாங்குபவன் ,உந்த  நாடகத்தில் நான்
தற்செயலாக வசனங்கள் மறந்தாலும் இவன் சமாளித்துவிடுவான்.பிரேமிற்கு போனை அடித்தேன்.விஷயத்தை
கேட்டு விட்டு நடிக்கிறது பிரச்சனை இல்லை மச்சான் ஆனால் அன்று பகல் தனக்கு  ஊர் பிக்னிக் இருக்கு என்றான் ,கலைவிழா
இரவுதானே பிக்னிக் முடிய வந்தால் காணும் என்று சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டேன்.



 

கிழமைக்கு மூன்று,நாலு நாட்கள்  ரிகேர்சல் அக்கா வீட்டு பேஸ்மேன்டிற்குள் நடக்கும்,இரண்டு
பேரும் ஒவ்வொரு நாளும் அந்த மாதிரி உடுப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு கிழமையில் எல்லோரும் அன்னியோன்னியம் ஆகி நாடகத்தில் சீரியஸ் ஆகிவிட்டோம்.



 

அக்கா தான் இயக்குனர் கண்டபடி வேறு கதைகள்
கதைக்க இடம் தரமாட்டா. மதுசிறி ,ராகினி இரண்டுபேருமே தங்களுக்கும் ஊரில என்னை
நீண்ட  மயிருடன் பெரிய பெல்போட்டத்துடன்  கண்ட ஞாபகம் இருப்பதாக சொன்னார்கள்.அவர்
அப்படிதான் திரிந்து படிப்பை கோட்டை விட்டவர் என்று அக்கா ஒரு குத்தில் என்னை
நொக்அவுட் ஆக்கிவிட்டார்.சும்மா சொல்ல கூடாது அவ்வளவு வசனங்களையும் மனப்பாடம்
பண்ணுவது ஒன்றும் இலகுவானதில்லை .பிரேம்சங்கர்,மதுசிறி இருவரும் வெகு இயல்பாக
நடிக்க தொடங்கிவிடார்கள் .மதுசிறி யாழ் பல்கலைகழகத்தில் ஏற்கனவே தனக்கு நடித்த
அனுபவங்கள் உண்டென சொன்னார்.



 

வெள்ளி இரவு கடைசி ரிகேர்சல்.ரென்சன் நன்றாக
குறைந்து விட்டிருந்தது. மிக இயலப்பாக நடிப்பும் வசனமும் எல்லோரிடமும் இருந்து
வந்ததில் அக்காவிற்கு நல்ல சந்தோசம். நாலு ஐந்து தடவைகள் ஒத்திகை
பார்த்தோம்.இனியென்ன நாளை மேடையில் சந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்



 

நாளை சனி நிகழ்சிக்கு முதல் ஒரு  சனியன் பிடிக்க போகின்றது என்று எவருக்கும் அப்ப
தெரியவில்லை.



 

தொடரும் . .  ..



 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

“அதற்கெல்லாம் நேரம் இல்லை அடுத்த மாதம் கலை

விழா ,ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி ,நீ வாசித்து பார்த்து பாடமாகுவாய் என்றால்

காணும்”என்றார். அங்கு மிக அழகாக திரிஷா,ஷ்ரேயா போல் இருந்த இரண்டு பேரைகாட்டி

“இது மதுசிறி உனக்கு மனைவியாக நடிக்க போகிறவர் ,இது ராகினி உனக்கு தங்கையாக நடிக்க

போகிறவர்” என்றார். (கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா). இருவரும் என்னை பார்த்து

ஒரு வேம்படி சிரிப்பை உதிர்த்தார்கள். எனக்கு ஊரில அவர்களை கண்ட ஞாபகம் நல்லவேளை

இவர்களை  பின்னால் துரத்தினதாக நினைவு இல்லை .

 

திரிஷாக்கு வயசு கூடுதான், அதுக்காக..நீங்கள் துரத்தின/ துரத்தின கால பொண்ணுகள் உடன் ஒப்பிடுவது ..டூஊஊஊஊஊ மச்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நகைச்சுவை இழையோடும் திரிபோல் இருக்கு.. :D தொடருங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, அர்ஜுன்!

 

தொடருங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான இடத்தில்... கதையை நிற்பாட்டி விட்டீர்கள், அர்ஜூன். :)

உங்களுக்கு பிடித்த சனியனை வாசிக்க, ஆவலாக உள்ளோம். :D

  • தொடங்கியவர்

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

தொடருங்கள் அர்ஜுன்

  • கருத்துக்கள உறவுகள்

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, அந்த உயரமான 'ராகினியா; அர்ஜுன்!

 

அவளும் இப்ப அங்கால வந்திட்டாளா? :o

  • கருத்துக்கள உறவுகள்

லட்டுகள் கொஞ்சம் பழசாய் இருக்கும்போல இருக்கு   :lol:  தொடருங்கள்.

 

-----

இந்த முறை கலைவிழாவிற்கு நாடகம் ஒன்று போடப் போகின்றோம்.நடிப்பதற்கு இரண்டு பெடியங்கள்?

வேண்டும் நீ நடிக்கிறியோ “ என்று கேட்டார் .(கண்ணா லட்டு தின்ன ஆசையா).

 

நாடகத்தில் நடிப்பதற்கு பெடியன்கள் வேடத்தில் அர்ஜுன் நடிக்கும் போது, புது லட்டு... எதிர்பார்க்கலாமா. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரைத்தான் விட்டுது

அர்ஜுன் அண்ணா தொடர்ந்து நடியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

லட்டு எல்லாம் இப்ப திருப்பதி சைசா? :D

நல்லா எழுதுகிறீங்கள். தொடருங்கள் அர்ஜுன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வோல்கானோ திரிசாவையும் ,ஸ்ரேயாவையும் சிறிதேவி ,சிறி பிரியா என்று வாசிக்கவும் .

 

உண்மையிலேயே அப்படி சொல்லி இருக்க கூடாது என்று நினைக்கிறேன்..தவறுக்கு வருந்துகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

லட்டு  காய முன் எடுத்து விடுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள் ஆவலாக காத்திருக்கிறோம்.

பதின்ம வயதில் நெஞ்சில் பதிந்திருந்தால் பூசணிக்காயும் 'லட்டு' ஆகத் தெரியும். :lol:

 

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் லட்டு திண்ண ஆசையாயிருந்தது :D கடைக்கு போய் வாங்கிச் சாப்பிட்டேன் :lol: ...நீங்கள் உங்கள் கதையைத் தொட‌ருங்கள் அண்ணா வாசிக்க ஆவலாய் உள்ளேன் :)

கெதியாய் எழுதி முடியுங்கோ, வாசிக்க ஆவலாய் உள்ளோம்!

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுனுக்குப் பாராட்டுக்கள் . பழைய காயளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

Edited by கோமகன்

எனது நீண்ட நாள் கோரிக்கையை தீர்த்துவைத்து இந்தப்பக்கம் கைபதிக்கும் அர்ஜுன்னுக்ப் பாராட்டுக்கள் . பழைய காய்யளின்ரை பேர் எழுதிறது பிரச்சனை இல்லையோ :lol: :lol: ???

 

 

அர்ஜுன் அண்ணாவும் , சாத்திரியும், சாந்தியும், சுமேயும்  ஓட்டைவாய்கள் என்று யாழறிந்த விடயமாச்சே, அதே போல அர்ஜுன் அண்ணாவின் பழைய லட்டுக்களும் அர்ஜுன் அண்ணா பற்றி அறிந்திருப்பினம்.

  • தொடங்கியவர்

பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி .

நேற்று கடையில் கிடைத்த இடைவெளியில் முகபுத்தகத்தில் மதுசிறியின் பதிவு ஒன்றை பார்த்ததில்  பழையதை மீட்டு இதை எழுதினேன் .சும்மா பகிடிக்கு இட்ட தலைப்பு .அவர்கள் பெயர்களும் உண்மையானது இல்லை புங்கையூரான் .

இன்று ஞாயிறு கடை அவ்வளவு பிசியாக இல்லை களத்தில இறங்க்குவம் என்று யோசிக்கின்றேன் .

சந்திப்பம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி
நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் biggrin.png

 

அர்சுன் வாழ்த்துகள்

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு ஆள் இல்லாவிட்டால் ஒருக்கா நெடுக்கருக்கு அறிவியுங்கோ இல்லாட்டி நான் உங்கட நாட்டுக்கு ரிக்கட் போடுகிறேன் :D

 

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர். உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

50 வ‌யதுக்கு மேற்பட்ட பெடியள் தான்... கதைக்குத் தேவை முனிவர்.

உங்களுக்கு அம்பது வயசு ஆச்சுதா? biggrin.png

யோவ் சிறி என‌க்கு வ‌ய‌து இப்பதான் 18 பாய்ந்து பாய்ந்து அடிக்கிற‌ வய‌து சீசீ ந‌டிக்கிற‌ வ‌ய‌து :lol: :lol:

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.