Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த முருகதாஸ்

Featured Replies

2009 தை மாசம் இருப்தேட்டாம் திகதி, இரணைப்பாலை சந்திக்கு புறமாக ஆனந்தபுரத்தின் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருந்த, விடுதலைபுலிகளின் புலனாய்வுத்துறை செய்மதி தொலைத்தொடர்பு மையத்துக்கு, லண்டனில் இருந்த புலனாய்வு முகவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்குரியவர் ஞானவேல் அண்ணைக்குரிய முகவராவர். அவர் ஞானவேல் அண்ணைக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லுவதற்காக அந்த அழைப்பை எடுத்திருந்தார். 
 
 
அந்த செய்தியை என்னிடம் சொல்லும்படி, நான் ஞானவேல் அண்ணையிடம் சொல்லுகிறேன் என்று சொன்னபோது, அவர் லண்டனில் ஒரு பெடியன், புலம்பெயர் தேசங்களில் ஒரு எழுச்சி வேண்டும், தனியே எங்களுக்காக தமிழக தமிழர்கள் தான் தீக்குளிப்பார்களா, நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பதாக ஒரு பெடியனை அறிமுகபடுத்தினார். அவன் தான் முருகதாஸ்.
 
நான் அவனுடன் பேசிய போது, ஏதாவது ஒரு எழுச்சி வேணும் அண்ணே. நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். புலம்பெயர் தேசங்களில் ஒரு மக்கள் எழுச்சி வந்தால் மட்டுமே உங்க நடக்கிற சண்டையை நிப்பாட்ட முடியும் என்று தெளிவாக உறுதியாக பேசினான். ஒரு ஈழத்தமிழன் புலம்பெயர் தேசத்தில் தன்னை ஆகுதியாக்கும் தெளிவுடன் பேசியது என்னை கொஞ்சம் அதிர வைத்தது. அலைபேசியில் ஞானவேல் அண்ணையை தொடர்பு கொண்டு விடயத்தை தெளிவுபடுத்தினேன். 
 
சில மணி நேரங்களில், தமிழ்குமரனுடன் ஞானவேல் அண்ணை, எங்களின் முகாமுக்கு வந்திருந்தார். முருகதாசுடன் தெளிவாக பேசினார். எழுச்சிக்காக மக்கள் விடிவுக்காக இவ்வாறான தியாகங்கள், புலம்பெயர்நாடுகளில் பெரிதாக எடுபடாது என்று சொன்னார். முருகதாஸ் அவனது முடிவில் உறுதியாக இருந்தான். அவன் ஞானவேல் அண்ணாவிடம் இரண்டு கோரிக்கைகள் வைப்பதற்காகவே தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறினான்.
 
முதலாவது கோரிக்கை தனது சாவின் மூலம் ஏற்படும் அந்த எழுச்சியை புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்க கூடிய கட்டமைப்பு, ஒழுங்கமைப்புகளை செய்யும்படி கோரி இருந்தான்.
இரண்டாவது தனது சாவுக்கு முன்னர் ஒரு தடவையாவது தலைவர் அல்லது பொட்டு அம்மானுடனாவது பேசவேண்டும் என்று கோரி இருந்தான். 
 
இந்த கோரிக்கைகள் குறித்து அம்மானிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு கால அவகாசத்தை கோரி இருந்தார் ஞானவேல். பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு பிறகு அம்மான் ஒழுங்குகளுக்கான ஒப்புதல் அளித்திருந்தார். இருந்தாலும் நிச்சயமாக வெளிநாட்டு ஊடகங்களும் அரசாங்கங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்யும் என்று குறிப்பிட்டார்.
மிகவும் இரகசியமான இந்த ஒப்புதல் ஞானவேல் அண்ணை தலைமையிலான ஒரு குழுவுக்கு வழங்கபட்டிருந்தது. அதில் ஞானவேல் அண்ணா, தமிழ்குமரன், சிறி அண்ணா, நான் இடம்பெற்று இருந்தோம். 
 
திரும்பவும் மாசி மாதாம் இரண்டாம் திகதி முருகதாசுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட நாம், தீக்குளிப்பு பின்னரான எழுச்சிக்கான பொறுப்பை கையாளுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக முருகதாசிடம் குறிப்பிட்டோம். இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களை விளக்கி இருந்தோம். எங்களுக்கு தீக்குளிப்புகான திகதியை கோரி இருந்தோம். 
 
தனக்கு லண்டனில் சில கடமைகள் செய்துமுடிக்க வேண்டிய தேவை இருப்பதால் மாசி 12 ஆம் திகதியை தெரிந்தெடுத்திருப்பதாக குறிப்பிட்டான். ஒரு கரும்புலிக்கு நிகரான சாதனையை செய்ய போகும் அவன் மனசில் இருந்த வீரமும் தெளிவும் இன்னமும் எங்களை போராட்டத்தை விட்டு விலகி செல்லவிடுகுது இல்லை. 
 
வான்புலிகள் கொழும்பிலே ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருப்பதை தெரிந்து கொண்ட நாங்கள், அதற்கு முதல் இந்த நிகவு இடம்பெற வேண்டும் என்று மட்டும் தான் மனசிலே நினைத்து இருந்தோம். அது போலவே முருகதாசும் மாசி 12 இனை தெரிந்தெடுத்திருந்தான்.
 
 
மாசி 10, காலை எங்களுக்கு அனுப்பிய ஈமெயில் இல், அவன் தீக்குளிப்புக்கு பின்னர் வெளியிட வேண்டிய கடிதத்தின் நகலை தட்டச்சு செய்து அனுப்பி இருந்தான். எங்களுக்கு அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதா என்று கேட்டு அனுப்பி இருந்தான். மக்களை எழுச்சி கொள்ள செய்ய அதில் ஏதும் வசனங்களை சேர்க்க வேண்டுமாயின் சேர்க்க சொல்லி குறிப்பிட்டு இருந்தான். நாங்கள் சில வசனங்களை அவனின் தியாகம் மூலமாவது மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்று சேர்த்திருந்தோம். அவற்றை அச்சுபிரதி எடுத்து அவற்றை தன்னுடனேயே வைத்திருந்தான்.
 
தனது கடமைகளை முடித்து கொண்ட முருகதாஸ் சுவிசுக்கு பயணமாகி தனது நண்பர்களுடன் தங்கி இருந்தான். அவர்களுக்கு கூட தான் சுவிஸ் வந்ததன் நோக்கம், தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
 
இவ்வளவும் ஏன் தன்னை பெற்ற தாய் தந்தையருக்கு கூட அவன் தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
 
மாசி 12 
 
எங்களது செய்மதி பரிவர்த்தனையும் சரியாக வேலை செய்யவில்லை, அண்மையில் நடந்த கிபிர் தாக்குதல், மறைப்புகள், receiver இருந்த பிரச்சனைகள் காலையில் இருந்தே எங்களுக்கு கரைச்சல் கொடுத்துகொண்டிருந்தது. எங்களுக்கோ பதபதைப்பு இன்றைக்கு நினைச்சபடி முருகதாஸ் சாதிப்பான என்ற பததைப்பு மட்டுமல்ல. ஒரு கரும்புலிக்கு நிகரான வீரனின் தியாகம் வீண்போக கூடாது என்று பதபதைப்பு. 
 
மாலை ஆறுமணிக்கு பின்னர் தான் எங்களின் தொழிநுட்பவல்லுநர்களின் கடுமையான முயற்சிக்கு பின்னர் தொலைத்தொடர்பு கருவிகள் இயங்க ஆரம்பித்தன. பிபிசி முக்கிய அறிவிப்பாளருடன் தொடர்பு கொண்ட சிறி அண்ணா உங்களுக்காக ஒரு முக்கிய செய்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடைக்கும் தயவு செய்து இருட்டடிப்பு செய்யாமல் ஒலிபரப்பு செய்யுங்கள் என்று கேட்டுகொண்டார். எங்களுடன் தொடர்பை ஏற்படுத்த நிறையதடவை முயன்றும் தொடர்பு கிடைக்காமல் கூட தனது கடமையில் தவறாத அந்த வீரன் மாலை 8 மணிக்கு  எங்களை தொடர்பு கொண்ட போது கொஞ்சம் படபடப்புடன் பேசினான்.
 
அண்ணே நான் நினைத்த மாதிரி மாலை 4:30 இற்கு ஐ நா வாசலை அடைய முடியாது. புகையிரதம் தாமதமாக உள்ளது. இனி டாக்ஸி பிடித்து போனால் கூட அது வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும். கொஞ்சம் தாமதமானாலும் நான் அந்த இடத்துக்கு சென்று எப்படியும் தீக்குளிப்பேன் என்று குறிப்பிட்டான். அவனுக்குள் இருந்த அந்த உறுதி தளரா வீரம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஐநா பணியாளர்கள் வேலை முடித்து திரும்பும் வேளையில் தீக்குளிப்பதன் மூலம் தான் ஒரு செய்தியை கூற முடியும் என்று நம்பிய நாங்கள். அவனை அந்த திட்டத்தை கைவிட்டு நாளைய தினத்துக்கு மாற்றும் கேட்டு கொண்டோம். 
 
அதற்கு அவன் இல்லை அண்ணே, நாளை மறுதினம் காதலர் தினம், நான் நாளைக்கு தீக்குளித்தால் காதல் தோல்வியால் தீக்குளித்த மாதிரி ஆகிவிடும் என்ன ஆனாலும் இன்றே செய்கிறேன் என்று உறுதியோடு கூறினான். அவன் ஐநா இடத்தை அடையும்போது ஐந்துமணியை தாண்டி இருந்தது. இறுதியாக சில வசனங்கள் பேசினான். நாங்கள் அவனுக்கு பொட்டம்மான் சொன்ன செய்தியை சொன்னோம். 
 
என்னுடைய இந்த சாவு இங்கே ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கும். அது தலைவரை, உங்களை, எங்கள் மக்களை காப்பாத்தும் என்ற நம்பிக்கையில் தான் நான் எரிகிறேன். இங்கே நிறைய கூட்டம் இல்லை. பஸ் ஸ்டாண்டில் ஒன்று இரண்டு பேர் நிக்கிறார்கள். நான் கடிதத்தை என்னுடன் வைத்திருந்தால் எரிந்துவிடும். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் பறக்காமல் கல்லு வைத்து வைத்துவிடுகிறேன். உங்கட ஆட்களை விட்டு எடுக்க சொல்லுங்க அண்ணே. எனக்கு தெரியும் இங்கே சில நேரம் உங்கட ஆட்கள் நிப்பினம். அவையிடம் சொல்லுங்கோ நான் என்ன கத்தினாலும் என்னை காப்பாத்த வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொன்னான்.
 
இவை தான் அவனின் கடைசி வரிகள்.
 
பார்த்த எங்களின்  முகவர்கள் சொன்னார்கள், அவன் குளிர் தாங்கும் ஜாக்கெட்டுடன் தான் எரிந்தான். அவை உருகி அவன் உடலில் படும்போதும் Stop the War in Sri Lanka என்று கத்தி கொண்டதுதான் இருந்தான். தன்னுடலில் எரிகிறதே என்று விழுந்து படுத்து உருள கூட இல்லை. கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தானோ ஐ நா வாசலை நோக்கி ஓடினான். வாசலை அடையும் முன்னே நிலத்தில் வீழ்ந்துவிட்டான். அவனின் கரிய புகை மட்டும் வானை நோக்கி எழும்பி கொண்டிருந்தது. அது மக்களுக்கு விடிவைதேடி தரும் என்ற நம்பிக்கையில் அந்த தியாக வீரன் உயிரை விட்டிருந்தான்.
 
சுவிஸ் காவல்துறை இதை ஒரு சாதாரண தற்கொலையாக பதிவிட்டு எங்கோ ஒரு மூலையில் செய்தி போட்டது. BBC அன்றைய நாளில் சொல்லாமல் அடுத்த நாளில் அவனது கோரிக்கைகள் கூட சொல்லாமல் ஒரு சாதாரண செய்தியாக வெளியிட்டது.
 
 
இன்று அந்த குழுவில் ஞானவேல் அண்ணே வீரச்சாவு , தமிழ்குமரன் இல்லை, சிறி அண்ணா இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வீரச்சாவு.
 
தன் சாவில் கூட உறுதியோடு இருந்த ஒரு தியாகியின் சாவை கொச்சைபடுத்தும் ஒரு கட்டுரையை பிரசுரித்த பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.முருகதாசின் பெற்றோருக்கு கூட தெரியாத இந்த இரகசியம் என்னுடன் அழிய கூடாது. அழிந்தால் இந்த சாத்திரி மாதிரி ஆயிரம் சாத்திரிகள் தங்களின் எண்ணத்துக்கு கட்டுரைகளை எழுதி சாவு வியாபாரம் நடத்தும். அதை பிரசுரிக்க என்று இணையத்தளங்கள் அலையும். புலிகள் தான் அழிந்தார்கள். அதற்காக உண்மையை சொல்ல ஒருவரும் இல்லை என்று நீங்களே கதைகள் எழுதாதீர்கள். இது அதைவிட ஈனத்தனமான செயல்.
 
இந்த இரகசியத்தை எழுதியமைக்காக புலனாய்வுத்துறை என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்க தயார். ஆனால் அந்த தியாகவீரனின் தியாகத்தை நீங்கள் எழுச்சியாக மாற்ற முடியாவிட்டாலும், தயவுசெய்து கொச்சைபடுத்தாது விடுங்கள்.
 
நன்றி வணக்கம்

Edited by அபிராம்

  • Replies 100
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அபிராம்.. உங்கள் மனதைத் திறந்து கொட்டியிருக்கிறீர்கள்.. எரிந்ததும் காணாதென்று வசவுக்கு வேறு ஆளாகிறார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசின் தற்கொடைக்குப் பின்பும்..... புலம் பெயர் அமைப்புகள் ஒன்று படாதது... வேதனைக்குரியது. இனியாவது... திருந்த முயற்சி செய்யுங்களேன். மற்றவனுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்.

உண்மைக்கும் பொய்யிற்குமான போராட்டத்தில் உண்மை வெல்லும். தகிடுதத்தம் செய்வோரின் உண்மை முகத்தை வெளிப்படுத்த சில முடிச்சுகள் கட்டாயம் அவழ்க்கப்படவேண்டும்.

 

ஆனால் அதில் உண்மையான தியாகிகளின் அர்ப்பணிப்புகள் கொச்சைப்படுத்தப்படாமல் இருத்தல் வேண்டும். போராட்டத்தில் நம்பி கெட்டவர்கள்தான் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

 

வியாபாரம் என்று வந்தபின்  எதை விற்றாலென்ன?????

 

 

செத்த பாம்பை அடிப்பதில் அத்தனை  இன்பம்...............

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மாசி 12, காலை எங்களுக்கு அனுப்பிய ஈமெயில் இல், அவன் தீக்குளிப்புக்கு

பின்னர் வெளியிட வேண்டிய கடிதத்தின் நகலை தட்டச்சு செய்து அனுப்பி

இருந்தான். எங்களுக்கு அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதா என்று

கேட்டு அனுப்பி இருந்தான். மக்களை எழுச்சி கொள்ள செய்ய அதில் ஏதும்

வசனங்களை சேர்க்க வேண்டுமாயின் சேர்க்க சொல்லி குறிப்பிட்டு இருந்தான்.

நாங்கள் சில வசனங்களை அவனின் தியாகம் மூலமாவது மக்கள் எழுச்சி கொள்ள

வேண்டும் என்று சேர்த்திருந்தோம்.

அவற்றை அச்சுபிரதி எடுத்து அவற்றை

தன்னுடனேயே வைத்திருந்தான்.

விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவதையிட்டு  நன்றி  இதையெல்லாம் பதிவு செய்ததையிட்டே  மேற்குலகம்  அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை .  இனியாவது  புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.  30 ஆண்டு கால ஆயுதபோரையே மேற்குலகத்திற்கு புரிய வைக்க முடியாமல்.  முருகதாசன் தற்கொலை செய்ப் போகிறேன் என்று எழுதிய கடிதத்தில் கூட  நீ தற்கொலை செய்ததன் பின்னர் இப்படி  கடிதத்தை வெளியிடு என்று திருத்தம் செய்து அனுப்பி வைத்தார்களாம். எனவே ஒரு தனி மனிதனின் மரணத்தை கூட தடுக்க முடியாதவர்கள்.  இனத்தின் படுகொலையை  தடுக்க முயற்சித்திருப்பார்கள். இது எல்லாம்  வெளிநாடுகள்  கவனிக்கவில்லையென்று சப்பை வாதம் வேறு. அடுத்ததாக  முருகதாசன் என்கிற ஒருவனின் உயிரால் 30 வருட போராட்டத்தை உலகிற்கு தெரிய வைத்து விடலாம் என்கிற முட்டாள்தனம் வேறு. சரி அவனது இறப்பினால் உலகம் புரிந்து விட்டதா??

 

Edited by sathiri

  • தொடங்கியவர்

அது மாசி 10. தவறுதலாக 12 என்று பதியபட்டுவிட்டது. மாற்றம் செய்துள்ளேன்.

 

உண்மைகள் வெளிவரத்தானே வேணும் சாத்திரி. அது மட்டும் பொய்கள் உலாவத்திரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினமே.... அழிஞ்சு போயிட்டுது.
கட்டுரையும்... கதையும்... எழுத பிரயோசனப்படுமே தவிர, இதிலை.... விசயங்களை, அறிஞ்சு... என்ன செய்யிறது.
ஆண்ட பரம்பரையை... மீட்க, நீங்கள்.... ஏதாவது ஐடியா வைச்சிருக்கிறீங்களா?

 தங்கள் பற்றிய கணிப்புகளை  மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தனது கடமைகளை முடித்து கொண்ட முருகதாஸ் சுவிசுக்கு பயணமாகி தனது

நண்பர்களுடன் தங்கி இருந்தான்

. அவர்களுக்கு கூட தான் சுவிஸ் வந்ததன்

நோக்கம், தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை.

அப்போ தகவல்கள் உறுதியாகின்றது. முருகதாசன் மரணம் பற்றிய மேலதிக விசாரணைகளிற்கு இந்த தகவல்கள் மிகவும் உதவும்.எனது கட்டுரையின் நோக்கம் நிறைவேறி விட்டது

Edited by sathiri

  • தொடங்கியவர்

உண்மைதான் சாத்திரி. எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக சொல்ல முடியாது. ஆனால் உண்மைகள் தெரிந்தவர்களும் இந்த உலகத்தில் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு தான் இனிமேல் பொய்க்கதைகள் எழுதுபவர்கள் கவனமாக எழுத வேண்டும்.

 

ஊகங்களை எழுதிப்பிழைக்கும் ஊடகங்களும் எழுத்தாளர்களும் புலிகள் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். தட்டி கேட்க ஆட்கள் இல்லை என்று புனைகதைகள் எழுதி தள்ளுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஙுகு சிலர் காவல் துறைகளுக்கு உதவுகின்றனரா....அல்லது இனம் இனம் என்று சொல்லி ஏமாற்றுகின்றனரா.....

அவர்கள் யாரும் யாருக்கும் உதவ முடியாது. நேரம் வரும் போது அவர்கள் தங்களுக்கே உதவ முடியாது.

 

இந்தியா ஏன் விசாரணையை ஒவ்வொரு பிரேரணையிலும் தடுக்கிறது என்பதை. அரிவரிப் பிள்ளைக்கும் தெரியும். முதுகிலை புண் இருந்தால் அதுதான் பாதை. இந்தியாவின் தேவை விசாரணைகளை உயிரைகொடுத்து தடுக்க வேண்டும். அதானல்த்தான் 2009 ல் வந்த பிரேணையில் இலங்கை தான் செய்தது மனிதாபிமான போர் என்று பிரேரணை எழுதிய போது அதை இந்தியா ஆதரித்து வாக்களித்தது.(ஐ.நா உள்ளக விசாரணை அறிக்கை இப்படி பொய்யாக எழுதி பிரேரணை நிறைவேற்றபட்டது என்பதை வெளிப்படையாகத்தான் சுட்டிக்காட்டுகிறது. அவர்களை யாரும் முட்டாள்களாக்கி அந்த அறிக்கையை மீள எழுத்திக்க முடியவில்லை. அதாவது இவர்கள் யாரையாவது முட்டாள்கள் ஆக்கிவிடலாம் என்றால் அது கனவு.) இன்று சல்மான் குர்திஷ் பாரளுமன்றத்தில் பிரேரணையை தாங்கள் ஏன் ஆதரிக்க முடியாது என்ற காரணத்தை நேராகவே வெளியில் சொன்னார். இனி இந்தியா இலங்கையைக் காப்பாற்ற முடியாது. இலங்கை தன்னைத்தானும் காப்பாற்ற முடியாது.

 

இன்றைக்கு ஒருவரை ஒருவர் காப்பாறிக்கொள்ளும் போது அவர்கள் தாம் 2009 ஐ.நா விசாரணையில் இந்தியாவும் இலங்கையும் தங்களை தாங்கள் காப்பாற்றிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர மறுப்பது அபத்தம்.

 

ஐ.நா.உள்ளக விசாரணை பலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறது. பன்-கி-மூனே சொன்னவர் அந்த அறிக்கைகள் ஐ.நா.வில் எங்கும் தொலைந்து போய்விடும் என்று நினைக்க வேண்டாம் என்று. ஆகையால் விசாரணை வரும்.

 

விசாரணை, அரசும் ஆதரவாளர்களும் ஊதிப்பெருபிக்கும் ஓரிரு சம்பவங்களை பற்றியதல்ல. போரின் போது நடந்த 150,000 கொலைகளை பற்றிய புகை படங்களும் மற்றய தடையங்களை பற்றியதுமே.

 

பல  PhDகள் ஒரு வரி நக்கல் மட்டும் எழுததெரிந்தவர்கள், சின்ன நக்கல் திருப்பி அடிச்சால் அந்த திரியையே விட்டுவிட்டு ஓடுபவர்கள்,  10 நிமிட குறுக்கு விசாரணைகளுக்கு நிண்டு பிடிக்க மாட்டார்கள். வாற PhD களை எல்லாம் குறுக்கு விசாரணையில் சுக்கு சுக்குகாக உடைத்து பல்லிளிக்கவைத்துதான் அனுப்பப்படுவார்கள்.

 

நாம் பொறுமையாகத்தான் இருக்கிறோம். விசாரணையை வரவைப்பதுதான் முக்கியம். அங்கேதான் சவால். இந்த PhD களை உடைப்பதில் அல்ல. மேலும் அந்த முயற்சிகளில் இறங்க இந்த யாழ்க்களம் கோடும் அல்ல.

 

விசாரணையில் 65 வருடகாலம், தமிழருக்காக போராட போன ஜி.ஜி., அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் போன்றவர்களை எல்லாம் எப்படி சிங்கள் அரசின் தேச பிதா "தமிழன் என்றால் சொல்லு, அவனை நான் ஒரு கோப்பை தேத்தண்ணியோடை வாங்கிகாட்டுகிறேன்" என்று தமிழருக்கு எதிராக திருப்பினார்கள் என்றதை எல்லாம் விவாத்திதுதான் தனிநாடு கேட்போம். பிரித்தாளும் தந்திரத்தை சிங்களவருக்கு காட்டிகொடுத்த வெள்ளைகளுக்கு எப்படி சிங்களம் நமக்குள் பிரிவினைகளை செலுத்திக் கொண்டிருக்கிறது என்றதை ஒரு விசாரணையில் நாம் கூறினால் அதை கிரகிக்க கஸ்டப்படப் போவதில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சாத்திரி. எல்லா உண்மைகளையும் ஒரேயடியாக சொல்ல முடியாது. ஆனால் உண்மைகள் தெரிந்தவர்களும் இந்த உலகத்தில் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு தான் இனிமேல் பொய்க்கதைகள் எழுதுபவர்கள் கவனமாக எழுத வேண்டும்.

 

ஊகங்களை எழுதிப்பிழைக்கும் ஊடகங்களும் எழுத்தாளர்களும் புலிகள் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். தட்டி கேட்க ஆட்கள் இல்லை என்று புனைகதைகள் எழுதி தள்ளுகிறார்கள்.

 

உங்கள் பற்றிய உண்மைகள் தெரிந்த பலரும் உயிரோடு இருக்கிறார்கள்  என்பதால் நீங்களும் பொய் கதைகள் எழுதுவதில் கவனமாக இருக்கவும் காரணம் உங்கள் விபரங்கள் பற்றி எழுதியதை நிருவாகம் நீக்கிவிட்டிருக்கின்றது  நிருவாகத்தின் நடவடிக்கைக்கு  இங்கு கட்டுப் படுகிறேன். ஆனால் அவை வேண்டிய  இடங்களில் உங்கள் நாட்டில்  அவை வெளிப் படும்.

ஒவ்வொருவரின் எழுத்துக்களும் அவ்வவர்களின் உள்ளத்தைக்காட்டுகின்றது. மௌனம் கூட ஆற்றல் மிகுந்த ஆயுதமா? காலம் காரியம் சாதிக்கின்றதே.

அர்ஜன்......

 

நிலாந்தன் முன்னுரையில் சொல்லுவதைப்போல “ஒரு காலத்தில் உண்மைகளை உன்னத
லட்சியம் ஒன்றிக்காக காத்திருத்தல் என்பதன் பெயரில் அடைகாத்தார்கள்.
இப்போது எந்த உன்னத லட்சியங்களும் கிடையாது. அடைகாத்த உண்மைகள் பாம்புகளாக
மாறித் துரத்தத் தொடங்கிவிட்டன. அந்தப் பாம்புகள் யாரையும் விட்டுவைக்கப்
போவதில்லை.”

 

இது இது சாத்திரியையும் விட்டுவைக்கப் போவதில்லை, என்னையும் விட்டுவைக்கப்போவதில்லை, போராட்டத்தில் புல்லுப்பிடுங்கியவரையும் விட்டுவைக்கப்போவதில்லை. சாகும்வரை துரத்தத்தான் போகிறது. 

 

ஆனால் சாத்திரி போன்றோர் றால் போடுகிறார்கள் சுறாக்கள் வெளியே வருகின்றன என்பது மட்டும் வெளிப்படை. சுறாக்கள் சாத்திரியையும் விழுங்கலாம்.

அபிராம், நீங்கள் சாத்திரியின் பல சந்தேகங்களை உண்மை என்று நிருபித்திருக்கிறீர்கள். ஒரு இளைஞன் தன்னை எரிக்க முன்வந்தால், அதை தடுக்காத விடுதலைப் புலிகள் ஒரு குழு அமைத்து ஒருங்கிணைத்து எரிய விட்ட முட்டாள்தனம் பற்றி வாக்குமூலம் வழங்கியிருக்கிறீர்கள். சாத்திரி வெறும் சந்தேகம் எழுப்ப, நீங்கள் எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டீர்கள். நீங்கள் நல்லவாரா? கெட்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாஸ் மட்டுமா.. நாட்டுக்காக.. தனது மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த தேசிய தலைவரையே சில சனம் விட்டு வைக்குதில்ல. இதுக்கு அதுகள் இயக்கம் மாறி இயக்கம்.. ஒரு மூனு நாலு வருசம் வால்பிடியா இருந்ததைத் தவிர வேற ஒண்ணும் வெட்டி விழுத்தினதும் இல்ல. எல்லாம் சைக்கிள் காப்பில தான் தான் பெரிசு எல்லாம் தெரிஞ்சவன் என்ற பிலிம் காட்டலுக்கும் பல ஆண்டுகளாக..உள்ளுக்க குமுறும் காழ்புணர்ச்சிக்கும் வடிகால் தேட..  நடக்கும் அடிபாடுகள் தான் இவை. மற்றும்படி.. மக்களில் அநேகர் இவர்களை சரியாக இனங்கண்டிடாங்க. அவர்களே தங்களை இனங்காட்டியும் விட்டாங்க அபிராம்.

 

நல்ல பதிவு. ரிஸ்க் எடுத்தாலும் உங்கள் பக்க நியாயத்தையும் சொல்லனுன்னு நினைச்சதற்குப் பாராட்டுக்கள்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நதி மூலமும், ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது, என்று பெரியவர்கள் காரணத்துடன் தான்  சொல்லி வைத்தார்கள்! ஏனெனில் பார்க்கப்போனால், இரண்டுமே அசிங்கமாக இருக்கும்!

இதன் விளைவாக, நதியிலும் குளிக்க முடியாது!

ரிஷியையும் வணங்க முடியாது!

நட்டம் எங்களுக்குத் தானே!

நதிக்கும் நட்டமில்லை, ரிஷிக்கும் நட்டமில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தகவல்கள் உறுதியாகின்றது. முருகதாசன் மரணம் பற்றிய மேலதிக விசாரணைகளிற்கு இந்த தகவல்கள் மிகவும் உதவும்.எனது கட்டுரையின் நோக்கம் நிறைவேறி விட்டது

 

உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன சாத்திரி ? அபிராமை போட்டுக் கொடுப்பதா ? அல்லது முருகதாசனின் ஈகத்தை பங்கு போடுவதா ?

வரலாறுகள் என்று எழுதப்படுகிற இந்தக்காலத்து எழுத்துக்கள் எங்கள் சனத்தை நம்பி தங்களை அர்ப்பணித்த உன்னதமான உயிர்கள் மீதான தேவையற்ற விமர்சனங்களையே இட்டுச் செல்லும். இதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்களும் ஒருகாலம் ஆயுதம் தாங்கியவர். அப்போதெல்லாம் இந்த ஆயுதவழி பிழையென்றது புரியாது போனதா ?

தங்களை சிதறடித்து இலட்சியக்கனவோடு போனவர்களுக்கு தூண்டியாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர்தானே. இப்போது வந்திருப்பது சுடலை ஞானமா அல்லது கண்கெட்ட சூரிய நமஸ்காரமா ?

அபிராம் தன்னையும் வெறுத்து எழுதிய உண்மை உங்கள் கட்டுரையின் நோக்கத்தை வெல்ல வைத்திருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன ?

அபிராம் தனது பாதுகாப்பு தனது வாழ்வையும் பொருட்படுத்தாமல் உண்மை வெளிவர வேண்டுமென்ற நோக்கத்தில் முருகதாசன் பற்றி எழுதியிருக்கிறார். இதனை எழுதுவதற்கு முன்னும் பின்னும் அபிராமுக்குள் இருந்த வேதனையையும் ஆற்றாமையும் யாரும் புரிந்து கொள்ளப்போவதில்லை.

அபிராமுக்கு,

 

பொறுத்தார் புவியாழ்வார் பொங்கினார் காடாழ்வார்.

புலிகளின் இயங்குதலில் 3 விடயங்கள் உள்ளடக்கம் :-

 

1) உண்மை 2) பொய் 3) இரகசியம்.

உண்மை :- எப்போதும் தனது இலக்கில் நேர்மையுடன் பயணிக்கும்.

 

பொய்:-  தற்காப்பு , புத்திசாலித்தனம் ,  காலத்துக்கேற்ப மாறுபடும் அளவை. இவ்விரண்டும்  ஒருகாலம் வெளிவரும் அவை காலத்தின் தேவையை பொறுத்து.

உண்மையும் பொய்யும் வெளியில் சொல்லப்படலாம்.

 

இரகசியம்:- ஆனால் இரகசியம் எப்போதும் இரகசியமாகவே இருக்க வேண்டும். உலக விடுதலையமைப்புகள் எவ்வளவோ செய்திருக்கிறது. ஆனால் இரகசியத்தை எந்த விடுதலையமைப்பும் சரி விடுதலை

பெற்ற தேசங்களும் சரி வெளியில் சொல்வதில்லை. அதுதான் கொள்கையின் தர்மம்.

கொள்கையின் தர்மத்தை நாங்களும் கடைப்பிடிப்போம்.

 

ஒருமுறை ஒரு தளபதியுடனான உரையாடலில் மாற்றுக்கருத்துகள் எழுதுவோர் பற்றி கதைத்த

போது சொன்னார். அவர்களது கருத்துகளுக்கு நாங்கள் எழுத வெளிக்கிட்டால்

அவர்களுக்கு பதில் எழுதுவதிலேயே காலம் போய்விடும் நாங்கள் தமிழீழத்தை

அடையமுடியாதென்றார். அந்த வார்த்தைகளைத்தான் நான் நெடுக நினைப்பேன். அந்தத்தளபதியின் கையில் வளர்ந்த உங்களுக்கும் அவரது வார்த்தைகளயே ஞாபகப்படுத்துகிறேன்.

 

உண்மை வரலாறு சொல்கிறோம் என்கிறவர்களுக்கு எனது தனிப்பட்ட கருத்து இதுதான் :-

எத்தனையோ விடயங்களை இந்த உலகமும் உலக உளவு அமைப்புகளும் செய்திருக்கிறது. அவர்கள் ஒருநாளும் இப்படித்தான் இதனை பொய்யால் அல்லது சதியால் வென்றோம் என்று சொல்லுவதில்லை.ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மட்டும் ஏதோ சாதனையாளர்கள் போல உண்மைகளை சொல்வதாய் ஒரு இனத்தின் வரலாற்றையும் உலகிற்கு விற்க கங்கணங்கட்டி நிற்கிறோம். இதுதான் வேதனை. நேற்று ஒரு போராளி நண்பன் பேசிய போது சொன்னான். உலகத்தில் வாழத்தகுதியற்ற இனம் தமிழனக்கா என. அவனது வார்த்தைகளை இரவிலிருந்து யோசித்துப் பார்க்கிறேன்.

 

 

அட நீயெல்லாம் புலிகள் பற்றிச் சொல்ல நானெல்லாம் கேட்க வேண்டி வந்த காலத்தை எண்ணி கோபிக்கும் ஆளும் இதே களத்தில் உலவுகிறார். அந்தப் புலிக்காக இது. யாருக்குமே போராட்டம் புலிகள் பற்றி கதைக்க தகுதியில்லையென எழுதியே வெளியில் சொல்லப்பட தேவையற்றவற்றையெல்லாம் இங்கு எழுதி சொல்லி என்னத்தைத்தான் காணப்போகிறீர்களோ தெரியாது.

குறைந்தபட்சம் நீங்கள் இயக்கத்தைவிட்டு விலகும்வரையும் புலிகள் போட்ட சோற்றுக்காகவேனும் நன்றியாக நீங்கள் மௌனமாக இருக்கலாம். இல்லை நீயெல்லாம் எழுத நான் கேட்கவா என நினைத்தால் அது உங்கள் விருப்பம்.

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் சாந்தி அக்கா. யாழில் அன்று பார்த்த சாந்தி அக்காவை இன்று தான் பார்க்க முடியுது. அந்த அனல் பறக்கும் கோபம்.. கண்ணில் தெரியுது. நியாயத்திற்காக பொங்கி எழுவது உள் உணர்வோடு வரும்..!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
சாத்திரி நீங்கள் போராட்டத்தில் போராளியாக இருந்தபோது உங்களுடன் கூட இருந்து போராடி வீரச்சாவை தழுவியவர்கள் தாங்கள் கண்மூடும் பொழுதிலும் அவர்கள் விட்டுச்செல்லும் தமிழீழத்திற்கான பயணத்தை தொடர்ந்தும் முன் நகர்த்தி செவீர்கள் என்ற நம்பிக்கையிலையே அவர்கள் விடுதலைக்கு தம்மை அற்பணித்தார்கள் குறைந்தது அவர்கள் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்காவது போராட்டத்தை கொச்சை படுத்தாமல் இருக்கலாம் தானே ..
 
இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலான பின்பு எழுதுவதில் என்ன நியாயம் உள்ளது ?
 
நான் உங்களைப்போல் பந்தி பந்தியாக எழுதக்கூடிய எழுத்து ஆற்றல் கொண்டவன் கிடையாது எனது மனதில் பட்டத்தை சுருக்கமாக எழுதி உள்ளேன் எனது கருத்தையும் தாங்கள் கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.    

அபிராம், நீங்கள் சாத்திரியின் பல சந்தேகங்களை உண்மை என்று நிருபித்திருக்கிறீர்கள். ஒரு இளைஞன் தன்னை எரிக்க முன்வந்தால், அதை தடுக்காத விடுதலைப் புலிகள் ஒரு குழு அமைத்து ஒருங்கிணைத்து எரிய விட்ட முட்டாள்தனம் பற்றி வாக்குமூலம் வழங்கியிருக்கிறீர்கள். சாத்திரி வெறும் சந்தேகம் எழுப்ப, நீங்கள் எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டீர்கள். நீங்கள் நல்லவாரா? கெட்டவரா?

ஒரு இனத்தையே எரிக்க துடிப்பவர்கள் ஒருமாணவன் இளைஞன் எரிந்ததில் அக்கறை காட்டுவதாலா அபிராம் மீது குற்றம் காண்கிறார்கள்.

 

வேண்டுமென்றே பொய்களை எழுதுவோர் அது பொய் என்று காட்டப்பட்டவுடன் அதை தாங்கள் வைதிருந்த சந்தேகம் என்று மாற்றுவதை அறிந்து கொள்ள முடியாதவர்களா இந்த யாழில் தமிழ் எழுதி வாசிக்கிறார்கள். 

 

இவர்கள் புலிகளோடு தாங்கல் இருப்பத்தாக காட்டிக்கொண்ட போது எழுத்திய ஆய்வுகளின் தரத்தை  வைத்துதான் அந்த நாளைய உறவுகள் இன்றும் இவர்கள் தமிழருக்கு எதிராக திரும்பிய பின்னரும் எழுதும் எழுத்தின் தரத்தை மதிப்பிடுகிறார்கள்.

 

கருணா, செயலாளர் நாயகம் போன்ற ஈனத்துரோகிகள் கூட தங்களைத்தாங்கள் துரோகிகள் என்று ஒத்துகொள்ள மறுக்கும் போது சந்தகம் போட்டு நாம் உண்மை கண்டு பிடித்து போராட்டத்தை கேலியாக்குகிறோம் என்று பச்சைப் படியே வந்து எழுதாமலிருக்க  கொஞ்சம் மானம் தன்னும் மிஞ்சியிருந்திருக்கலாம். 

 

நல்லவர்கள் பலர் தங்களைத்தாங்கள் இலங்கை, இந்தியா  போய்வந்த பிறகு தாங்கள் நல்லவரா கெட்டவரா என்று உறவுகளுக்கு இருந்த சந்தேகளை போக்கி தேவையானதை  நிரூபித்துவிட்டார்கள். இனி  தாங்கள் யார் சொல்லிக்காட்டதேவை இல்லை.

 

இவர்கள் இனி தொடர்ந்து எழுதுவது தமிழரை காட்டிக்கொடுக்காது. (வேறு காட்டிகொடுக்க தமிழரிடம் எதுவும் இல்லை.) இவர்கள் தொடர்ந்து ஐ.நா.பிரேரணைநேரமும், தமிழ் நாட்டு மாணவர் எழுச்சி நேரமும் தொடர்பில்லாத சம்பவங்களை இழுத்து வந்து எழுதும் போது அந்த  எழுத்துக்கள், இலங்கையிடம் இருந்தும், இந்திய உளவுகளிடமிருந்தும் இவர்களுக்கு வந்தடையத் தக்க மிண்டிகளை அனுமானிக்க முடிகிறது. இவர்களின் எழுத்துக்கள் இந்த காலத்தில் எடுக்கும் திசைகளை வைத்து இவர்களுக்கு இந்திய உளவுகளின் தொடர்பு எப்படி வருகிறது இலங்கை அரசின் தொடர்புகள் எப்படி வருகிறது என்றபற்றிய நமது சந்தேகங்கள் பல உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது. இதனால் இவர்கள் தொடர்ந்து எழுதுவது இலங்கை  அரசும் இந்திய ரோவும் மாணவர் போராட்டத்தாலும் பிரேரணையாலும் எவ்வளவு வாதைப்படுகிறது என்றதைதான் காட்டிக்கொடுகிறது.

அபிராம், நீங்கள் நல்லவாரா? கெட்டவரா?

 

 

அபிராம்..
 
1. வயது குறைந்தவர்
2. தற்சமயம் அறிவுறை சொல்ல அவருக்கு ஆளில்லை
3. மிகவும் உணர்ச்சிவசப்படுவார்.
 
தற்கொலைக்கு உடந்தையாக இருப்பது கிரிமினல் குற்றம்.
 
இந்தத்திரியால் யாழுக்கும் சட்டப்பிரச்சனை வரலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவதையிட்டு  நன்றி  இதையெல்லாம் பதிவு செய்ததையிட்டே  மேற்குலகம்  அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை .  இனியாவது  புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.  30 ஆண்டு கால ஆயுதபோரையே மேற்குலகத்திற்கு புரிய வைக்க முடியாமல்.  முருகதாசன் தற்கொலை செய்ப் போகிறேன் என்று எழுதிய கடிதத்தில் கூட  நீ தற்கொலை செய்ததன் பின்னர் இப்படி  கடிதத்தை வெளியிடு என்று திருத்தம் செய்து அனுப்பி வைத்தார்களாம். எனவே ஒரு தனி மனிதனின் மரணத்தை கூட தடுக்க முடியாதவர்கள்.  இனத்தின் படுகொலையை  தடுக்க முயற்சித்திருப்பார்கள். இது எல்லாம்  வெளிநாடுகள்  கவனிக்கவில்லையென்று சப்பை வாதம் வேறு. அடுத்ததாக  முருகதாசன் என்கிற ஒருவனின் உயிரால் 30 வருட போராட்டத்தை உலகிற்கு தெரிய வைத்து விடலாம் என்கிற முட்டாள்தனம் வேறு. சரி அவனது இறப்பினால் உலகம் புரிந்து விட்டதா??

 

 

எப்படியாவது ஒரு திருப்பு முனை வர வேண்டும் என புலிகள் பகீரதபிரயதனம் எடுத்தார்கள் என்பதை அவர்களின் பல செயல்கள் எடுத்துக்காட்டி உள்ளன. 
 
இராணுவரீதியாக சிறிய விமானம் மூலம் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர்.
 
நடேசன் அவர்கள் ஐ.நா , இந்திய அரசு, நோர்வே ,மேற்கு நாடுகள் ஆகியோருடன் போர் நிறுத்தம், சரணடைதல், இன்னும் பல விடயங்கள் பேசப்பட்டன.
 
 நடேசன் சிங்கள அராஜகத்தை நிறுத்த புலம் பெயர் தமிழர்களை வீதியில் இறங்கி போராடும் படி வேண்டிக்கொண்டார்.
 
இந்த வகையில் தமிழ் நாட்டிலும் முத்துக்குமார்  தீக்குளித்து தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வு வர வேண்டுமென வேண்டிக்கொண்டார்.இதன் தொடர்ச்சியாக முருகதாசும் தீக்குளிப்பு போராட்டத்தை ஐ.நாவின் முன் செய்து ஐ.நாவின் கண்களை திறக்க இறுதி முயற்சியை  புலிகள் செய்திருந்தார்கள்.
 
இப்போ மட்டும் ஐ.நா வெட்டி விழுத்தும் என நம்புகிறீர்களா??

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.