Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முயல் பிடிக்கிற நாயை......

Featured Replies

  • தொடங்கியவர்

உண்மையிலேயே எனக்கு களவு சரிவராதோ என்று என்னை நானே பல சந்தர்ப்பங்களில் கேட்டு கொண்டதுண்டு.

இருந்தாலும் சில சின்னக்களவுகளை நான் வெற்றிகரமாக முடித்த வரலாறுகளும் உண்டு.

எனது சில வெற்றிகர தாக்குதல்களை பட்டியலிடுகிறேன். இதில் எந்த தாக்குதலிலாவது நீங்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டிருந்தால், தயவு செய்து என்னிடம் மானநஷ்ட வழக்கு போட வேண்டாம் என்று தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிக்கூட இடைவேளையில் கை கழுவப்போற நேரத்தில்  யார்ரையும் ஸ்கூல் bag ஐ திறந்து சாப்பாட்டு பாக்ஸ் களவெடுத்து அவங்கள் வாறதுக்குள்ளே அவுக் அவுக்கேண்டு சாப்பிட்டு ஒண்டும் தெரியாதவன் மாதிரி புத்தகம் படிச்சு தப்பி இருக்கிறேன்.

கண்டீனில் ரோல்ல்சை எடுத்துவைச்சிட்டு காசு மாத்த போற நேரத்தில், அல்லது இன்னொருவனுக்கு விக்கிற நேரத்தில் ரோல்ல்சை ஆட்டையை போட்டு இருக்கிறோம்.அதன் சுவையே தனி. ஒரு நாளைக்கு நீங்களும் ஆட்டையை போட்டு சாப்பிட்டு பாருங்க அதன் சுவை தெரியும்.

 நாங்கள் செய்து முடிச்சு சத்தம் போடாமல் இருக்க, வாத்திமாருக்கு பெரும்பாலும் மிஸ்மாருக்கு  தாங்கள் தான் வகுப்பிலே விண்ணன்கள் என்று பிலிம் காட்ட ஓடிப்போய் அவர்களின் மேசையை சுத்தி நிண்டு வாளிவைக்க கொப்பி காட்டுற ஆட்களுக்கு ரப்பர் பாண்டில் நெல்லிக்காம்பு வைச்சு அடிச்சு பெரும்பாலும் தப்பி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு நாள் அந்தப்பன்னி  குனிய நெல்லிக்காம்ப்பு போய் மிஸ்ஸின் நெத்தியிலே பட மூன்று மணித்தியாலம் பள்ளிக்கூடம் முடிய முட்டுக்காலில் நிண்டும்  இருக்கிறேன்.

கிரிக்கெட் ப்ராக்டிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது அங்கே இங்கே கடலை போட்டு இருட்டாகிவிடும். ஆரும் தெரிஞ்ச பொம்பிளை பிள்ளைகளின் வீட்டு கேட்டடியிலே போய் அவளிண்ட பேரை சொல்லி கூப்பிட அவளின் அப்பாதான் வருவார் ஆர் எண்டு பாக்க "செந்தமிழிலில்" ஒரு கவிதை பாடுவோம். அவரும்  தனக்கு தெரிஞ்ச "செந்தமிழில்" சில வசனங்கள் பேச நாங்கள் பொறுக்கி வைச்சிருந்த கல்லுகளை ஓட்டுக்கு மேல எறிஞ்சிட்டு ஓடி தப்பி இருக்கிறோம்.

பிறகும் கொழும்பு வெள்ளவத்தை மனிங் ப்ளேசில் உள்ள பெண்கள் விடுதியில், கிறிஸ்மசுக்கு நாடகம் பழகிற பெட்டைகளுக்கு வாட்சேருக்கு தெரியாமல் உள்ளே போய் சீறுவானம் விட்டு தப்பி இருக்கிறோம்.

தெகிவெல பிரேசர் அவனியு கிரவுண்டிலே கிரிக்கெட் விளையாடிவிட்டு காலி வீதியில் கடைக்கு வெளியிலே அடுக்கி இருக்கும் சொகிலட் மில்க் போத்திலை களவெடுத்து வாயாலே மூடி திறந்து ஒவ்வொரு நாளும் குடிப்போம்.

அங்கிலிக்கன் பெட்டையை எண்ட நண்பன் ஒருத்தன் விரும்பிறான் என்று நியூ இயருக்கு முதல் நாள் பன்னிரண்டு மணி பூசைக்கு தெகிவளை சேர்ச்சில், போய் எப்போ எழும்புவாங்கள் எப்போ இருப்பாங்கள் என்று தெரியாமல் ஒரு இரண்டு மணித்தியாலம் நடிச்சு, அவங்கள் தோத்திரம் சொல்லும்போது எல்லாம் நாங்கள் "சொற்றுணை வேதியன்" பாடி பிடிபடாமல் தப்பினோம்.

இப்படி பல வெற்றிகர தாக்குதல்களை நடாத்தி முடிச்சாலும் மனசில் சில நெருடல்கள்  இருக்கத்தான் செய்தன. ஒரு மிகப்பெரிய வெற்றிகர தாக்குதலை நடாத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனசில் நிலையாக குடி கொண்டது.

செப்டம்பர் 2008 இன் இறுதி நாட்களில் ஒரு நாள்.

வன்னியை விட்டு உதவி நிறுவனங்கள் எல்லாம் வெளியேறிய பின்னர், கிளிநொச்சிக்கும் செல் வர தொடங்கிய  நாட்களில் ஒரு நாள்.

உதவி நிறுவனங்கள் சில பொருட்களை மட்டுமே எடுத்து சென்று இருந்தது. பல நிலையான பொருட்களை வன்னியிலே விட்டு சென்று இருந்தது. அதற்கு காவலாக உள்ளூர் பணியாளர்களை நிறுத்தி இருந்தது.

உள்ளூர் பணியாளர்களோ தங்களின் வெள்ளைக்கார எசமான் விசுவாசத்தில் உண்மையில் அவர்களுக்கு உதவாது என்று தெரிந்தும் போராட்டத்துக்கு தர மறுத்தார்கள். இன்னும் சில நாட்களில் ஒரு செல் தாக்குதலில் உடையக்கூடிய, இராணுவத்தால் கைப்பற்றி அவர்களுக்கே போக கூடிய பொருட்களை கூட தர மறுத்தார்கள். எல்லாரையும் சொல்ல முடியாது சிலர் சில பிரிவுகளுக்கு கொடுத்து உதவினார்கள்.

எங்கட பிரிவுக்கு தேவையானது ஒரு சட்டர்லைட் சட்டி. அதிலையும் டிவி பார்க்கிற சட்டி இல்லை, இன்டர்நெட் எடுக்கிற சட்டி. அதிலையும் இரண்டு வகை உண்டு. ஒண்டு KU Band - சின்ன சட்டி, C - Band பெரிய சட்டி.

எங்கட பிரிவுக்கு கஷ்ட காலத்துக்கு C - Band சட்டி தான் தேவைப்பட்டது. அது வன்னியில் தட்டுப்பாடு. வெளியிலே இருந்து கொண்டுவரவும் முடியாது. எங்கட சட்டி இருக்கிற இடத்துக்கு எந்தநாளும் கிபிர் அடிப்பான்.எண்டைக்கோ ஒரு நாள் எங்கட சட்டி அரிதட்டாக மாறிவிடும் என்பதில் எங்கட பிரிவுக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அப்படி மாறினால் எங்கட கதி அவ்வளவு தான். சரி அதுக்க்கு மாற்றீடாக ஒரு சட்டி வேண்டும் என்று அலுமினிய தகரத்தை எடுத்து வெட்டி அளவுகள் எல்லாம் சரிபார்த்து ஒரு சட்டி செய்தால் அதிலே டிவி கூட இழுக்கவில்லை. தலைவர் வந்து பார்த்திட்டு இதை வைச்சிருங்கடா வடகம் காயப்போடலாம் என்று சொன்னது எங்களுக்கு ஒரு மாற்று  சட்டி வேணும் என்ற ஆவலை மேலும் தூண்டினது.

எங்கட பிரிவு பெடியன் ஒருத்தனை பேச்சு வார்த்தைக்கு அனுப்பினோம். அவன் அந்த உதவி நிறுவன உள்ளூர் பணியாளனிடம் சட்டியை தந்து உதவுமாறு பணிவாக கேட்டான். அதுக்கு அந்த உள்ளூர் பணியாளன் மறுத்துவிட்டான். அந்த நிறுவனத்திலே வேலை செய்யும் எத்தனையோ பணியாளர்கள் சொல்லியும் அந்த தலைமைப்பணியாளன் சட்டியை தர மறுத்துவிட்டான்.அந்த சட்டிக்கு உண்மையில் நாலைஞ்சு பிரிவுக்குள் போட்டி. கணினிப்பிரிவு, புலனாய்வுத்துறை, இராணுவ புலனாய்வுத்துறை, அரசியல் துறை, நிதிப்பிரிவு, அனைத்துலக செயலகம், கடற்புலிகள் இவை எல்லாம் தனித்தனியே போய் அந்த பணியாளனிடம் கேட்டுப்பார்த்தாச்சு. எங்களுக்கு தெரிஞ்சு போச்சு இதிலே எதோ ஒரு பிரிவு நிச்சயம் ஆட்டையை போடுவாங்கள் என்று. அதுக்கு முதல் நாங்கள் ஆட்டையை போடுவம் என்று முடிவு எடுத்தாச்சு.

எங்கட பிரிவுப் பொறுப்பாளர் இந்த களவை ஒரு மதி நுட்பத்தோட தான் செய்ய வேணும் என்று விரும்பினார். பிடிபட்டாலும் எங்கட பிரிவு என்றோ, இயக்கம் என்றோ தெரியாமல் செய்ய வேண்டும் என்று விரும்பினார். முகத்திலே இயக்கம் என்று தெரியாத, வெளியிலே பரிச்சயம் இல்லாத அப்பாவி முகம் உள்ள வடிவான ஒருத்தனை  இதற்கு நியமிக்க வேண்டும் என்று எண்ணினார்.

இதுக்கு பிறகும் நான் பில்டப் கொடுக்க வேண்டுமா நேயர்களே !, அவருக்கு உடனே ஞாபகம் வந்தது என் முகம் தான். என்னை இந்த தாக்குதலுக்கு பொறுப்பாக நியமித்தார்.

களவு தொடரும் 

Edited by பகலவன்

  • Replies 57
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானநஸ்ட வழக்கு போடத் தான் வேணும் ஆனால் நான் போடமாட்டன். :D:lol:

நான் இப்படிச் செய்தேன் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டாங்கள் அந்தளவுக்கு வெளிய நம்மடை இமேஜ் ஜை(அப்படி ஒன்று இருக்கோ என்று கேட்கக் கூடாது சும்மா முசுப்பாத்திக்கு தான்)  காப்பாத்திக்கொண்டு  பெரிய விளையாட்டு எல்லாம் காட்டி இருக்கிறன். அதுவும் ஓ.எல் வரைக்கும் பள்ளிக்கூடத்திலை எத்தனை களவு. எல்லாம், மாங்காய்,கொப்பரா,மரவள்ளிக் கிழங்கு, வாழைக்குலை ஐட்டம் தான். பிடிபட்டு அதுக்காக மணித்தியாலக் கணக்கா வெய்யில்லை முட்டுக்கால்லை எல்லாம் நிக்க வச்சிருக்கிறாங்கள். ஏ/எல் லில் கனக்க சான்ஸ் கிடைச்சும் செய்த குழப்படிக்காகவோ என்னவோ எங்களைப் பிடிச்சு ப்ரிஃபெக்ட் டா போட்டதாலை களவுக்கு எல்லாம் லீவு விட்டிருந்தம்.

ரப்பர் பாண்டிலை நிழல்மரவள்ளி தண்டை அளவா வெட்டி வச்சு அடிச்சால் அந்த மாதிரி சுணைக்கும்.

அமாவாசையட்டைப் படிக்கேக்குள்ளை ஒரு பெட்டைக்கு அடிச்சு கன்னம் மின்ன அடிவாங்கி இருக்கிறன். எங்கண்டை புறக்கணிப்புப் போராட்டம் :rolleyes::lol:  ஆரம்பிச்சதெல்லாம் அங்கை இருந்து தான். எங்கள் வயதொத்த அனேகம் பேர் அங்கை படிச்ச ஆக்கள் இப்ப யாழ்களத்திலை இருக்கிறம். அதை எல்லாரும் எழுதினால் சூப்பரா இருக்கும்.

வீட்டுக்காரருக்கே எங்களைக் காவாலி என்று தெரியும். :icon_mrgreen::icon_idea:

அதெல்லாம் ஒரு பொற்காலம். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கோ அண்ணா. :)

.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வீர விளையாட்டைத் தொடருங்கோ பகலவன் :D

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த நகைச்சுவையுடன் தொடரும் உங்கள் பதிவு  எங்களுக்கும்

பல பழைய நினைவுகளை மீட்டுத்தருகின்றன .

தொடருங்கள் பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிடல், முன்னோக்கிய பார்வை, செயல்திறன், இவ்வளவும் நிறைந்த ஒரு மனிதன், களத்தில் இருப்பதை நினைக்க, நெஞ்சு பெருமையால் விம்மிக் கொள்கின்றது!

இன்னும் தொடர்ந்து விம்மிக்கொண்டேயிருப்பதால், தொடர்ந்து கருத்தெழுத இயலவில்லை. :D

தொடருங்கள், பகலவன்! :icon_idea:

தாக்குதல்கள் தொடரட்டும் ,வாசிக்கும் போது ரசித்து சிரிக்கின்றேன் .

எனது வீட்டிற்கு பின் மதிலுடன் பெரியதொரு விளாமரம் நிற்கின்றது .அது காய்த்து பழங்கள் விழும்பபோது அரைவாசி அடுத்து இருக்கும் ஒழுங்கைக்குள் விழுந்துவிடும் .ஒழுங்கைக்குள் இருக்கும் பழத்தை எடுக்க வந்து பின்னர் மதிலேறி வீட்டு வளவிற்குள்  பாய்ந்தவர்கள் பலர் .மழை காலம் என்றால் கொட்டிகிடக்கும் .சீனி போட்டு சாப்பிட அந்தமாதிரி இருக்கும் .

விளாங்காயும் உப்பு தூளுடன் தின்ன ஒருவித உவர்ப்பாக இருக்கும் .

இதெல்லாம் களவுக்குள் வருமோ பகலவன் :lol: கதை நல்லாயிருக்கு கெதியில முடியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

இயக்கம் களவெடுத்ததில்லை என்ற எனது எழுத்தக்களை கேள்விக்குறியாக்கி

நாளைக்கு எங்கு எழுதினாலும் பகலவனின் கதையை வாசிக்கவும் என்ற வரிகள் இப்பொழுதே ஞாபகம் வருகின்றன.

இருந்தாலும் அவர்களும் மனுசர்தானே

நம்முக்குள் இருந்து வந்தவர்தானே என்றும  எழுதுவதால் தப்பித்தேன்

தொடருங்கோ

காட்டிக்கொடுப்புக்களை :lol:

சீ

களவுகளை......... :D  :D  :D

  • தொடங்கியவர்

மானநஸ்ட வழக்கு போடத் தான் வேணும் ஆனால் நான் போடமாட்டன்.

நான் இப்படிச் செய்தேன் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டாங்கள் அந்தளவுக்கு வெளிய நம்மடை இமேஜ் ஜை(அப்படி ஒன்று இருக்கோ என்று கேட்கக் கூடாது சும்மா முசுப்பாத்திக்கு தான்)  காப்பாத்திக்கொண்டு  பெரிய விளையாட்டு எல்லாம் காட்டி இருக்கிறன். அதுவும் ஓ.எல் வரைக்கும் பள்ளிக்கூடத்திலை எத்தனை களவு. எல்லாம், மாங்காய்,கொப்பரா,மரவள்ளிக் கிழங்கு, வாழைக்குலை ஐட்டம் தான். பிடிபட்டு அதுக்காக மணித்தியாலக் கணக்கா வெய்யில்லை முட்டுக்கால்லை எல்லாம் நிக்க வச்சிருக்கிறாங்கள். ஏ/எல் லில் கனக்க சான்ஸ் கிடைச்சும் செய்த குழப்படிக்காகவோ என்னவோ எங்களைப் பிடிச்சு ப்ரிஃபெக்ட் டா போட்டதாலை களவுக்கு எல்லாம் லீவு விட்டிருந்தம்.

ரப்பர் பாண்டிலை நிழல்மரவள்ளி தண்டை அளவா வெட்டி வச்சு அடிச்சால் அந்த மாதிரி சுணைக்கும்.

அமாவாசையட்டைப் படிக்கேக்குள்ளை ஒரு பெட்டைக்கு அடிச்சு கன்னம் மின்ன அடிவாங்கி இருக்கிறன். எங்கண்டை புறக்கணிப்புப் போராட்டம் :rolleyes: ஆரம்பிச்சதெல்லாம் அங்கை இருந்து தான். எங்கள் வயதொத்த அனேகம் பேர் அங்கை படிச்ச ஆக்கள் இப்ப யாழ்களத்திலை இருக்கிறம். அதை எல்லாரும் எழுதினால் சூப்பரா இருக்கும்.

வீட்டுக்காரருக்கே எங்களைக் காவாலி என்று தெரியும்.

அதெல்லாம் ஒரு பொற்காலம். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கோ அண்ணா. :)

.

நன்றி ஜீவா உங்கள் கருத்து பகிர்வுக்கு. எல்லாரும் அவர்களின் இளமைக்கால குறும்புகளையும் அனுபவங்களையும் எழுதினாலே களம் நல்ல சுவையாக இருக்கும். ஜீவா நாங்கள் ஒரே அலைவரிசையில் வேறு வேறு மீடிறனில் இருக்கிறோம். நினைவுகளும் எண்ணங்களும் ஒன்று தான்.

உண்மையில் அது போர்க்காலத்தின் நடுவே ஒரு பொற்காலம்.

உங்கட வீர விளையாட்டைத் தொடருங்கோ பகலவன் :D

நன்றி சுமே அக்கா.  உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும்.

மிகுந்த நகைச்சுவையுடன் தொடரும் உங்கள் பதிவு  எங்களுக்கும்

பல பழைய நினைவுகளை மீட்டுத்தருகின்றன .

தொடருங்கள் பகலவன்

நன்றி வாத்தியார். எல்லாருமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்.

திட்டமிடல், முன்னோக்கிய பார்வை, செயல்திறன், இவ்வளவும் நிறைந்த ஒரு மனிதன், களத்தில் இருப்பதை நினைக்க, நெஞ்சு பெருமையால் விம்மிக் கொள்கின்றது!

இன்னும் தொடர்ந்து விம்மிக்கொண்டேயிருப்பதால், தொடர்ந்து கருத்தெழுத இயலவில்லை. :D

தொடருங்கள், பகலவன்! :icon_idea:

புங்கை அண்ணா இப்போ விம்முறது நிண்டுவிட்டுதா. இல்லையென்றால் கொஞ்ச சுடு சாம்பல் எடுத்து நெஞ்சிலே நல்லா தேயுங்கோ நிண்டுவிடும். :lol:

தாக்குதல்கள் தொடரட்டும் ,வாசிக்கும் போது ரசித்து சிரிக்கின்றேன் .

எனது வீட்டிற்கு பின் மதிலுடன் பெரியதொரு விளாமரம் நிற்கின்றது .அது காய்த்து பழங்கள் விழும்பபோது அரைவாசி அடுத்து இருக்கும் ஒழுங்கைக்குள் விழுந்துவிடும் .ஒழுங்கைக்குள் இருக்கும் பழத்தை எடுக்க வந்து பின்னர் மதிலேறி வீட்டு வளவிற்குள்  பாய்ந்தவர்கள் பலர் .மழை காலம் என்றால் கொட்டிகிடக்கும் .சீனி போட்டு சாப்பிட அந்தமாதிரி இருக்கும் .

விளாங்காயும் உப்பு தூளுடன் தின்ன ஒருவித உவர்ப்பாக இருக்கும் .

நன்றி அர்ஜுன் அண்ணா. இப்போ நினைத்தாலும் நாவிலே எச்சில் ஊரும் விடயங்களில் ஒன்று விளாங்காயும் உப்பும். லாவுலு என்று ஒரு மஞ்சள் பழம் மா மாதிரி இருக்கும் சாப்பிட்டு இருக்கிறீங்களா. எனக்கு பிடிச்சது அன்னமுன்னா பழம். அது கனிஞ்சு இருக்கும்போது பனை வளவுக்குள்ளே புடுங்கி சாப்பிடுவோம். அந்த மாதிரி இருக்கும்.

இதெல்லாம் களவுக்குள் வருமோ பகலவன் :lol: கதை நல்லாயிருக்கு கெதியில முடியுங்கோ

நன்றி ரதி அக்கா. களவு என்று சொல்ல முடியாது சில வெற்றிகர நடவடிக்கைகள் செய்து பிடிபடாமல் தப்பினதுக்குள் அடங்கும் என்று கூறி வைச்சேன்.

ராசா

இயக்கம் களவெடுத்ததில்லை என்ற எனது எழுத்தக்களை கேள்விக்குறியாக்கி

நாளைக்கு எங்கு எழுதினாலும் பகலவனின் கதையை வாசிக்கவும் என்ற வரிகள் இப்பொழுதே ஞாபகம் வருகின்றன.

இருந்தாலும் அவர்களும் மனுசர்தானே

நம்முக்குள் இருந்து வந்தவர்தானே என்றும  எழுதுவதால் தப்பித்தேன்

தொடருங்கோ

காட்டிக்கொடுப்புக்களை :lol:

சீ

களவுகளை.........

விசுகு அண்ணா,

அவர்களும் மனுசர் தானே. மக்களுக்காக தான் களவும். அந்த நேரம் தொடர்பாடலுக்கான கருவிகளை முக்கியமா சட்டியை வெளிநாடுகளில் இருந்து எடுத்து வன்னிக்கு நகர்த்த முடியவில்லை. எப்படியோ அவர்களிடம் இருந்து அழிந்துவிடும் இல்லை ஆமி எடுத்திடுவான். மக்களுக்காவது பயன்படட்டும் என்று தான் அந்த களவும். கிட்டத்தட்ட ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் செய்கிற களவு மாதிரி.

எந்த களவையும் நியாயப்படுத்த முடியாது. பிழை தான் இருந்தாலும் வேறு வழி இருக்கவில்லை என்பது தான் எனது கருத்து.

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

..

எங்கட பிரிவுப் பொறுப்பாளர் இந்த களவை ஒரு மதி நுட்பத்தோட தான் செய்ய வேணும் என்று விரும்பினார். பிடிபட்டாலும் எங்கட பிரிவு என்றோ, இயக்கம் என்றோ தெரியாமல் செய்ய வேண்டும் என்று விரும்பினார். முகத்திலே இயக்கம் என்று தெரியாத, வெளியிலே பரிச்சயம் இல்லாத அப்பாவி முகம் உள்ள வடிவான ஒருத்தனை  இதற்கு நியமிக்க வேண்டும் என்று எண்ணினார்.

இதுக்கு பிறகும் நான் பில்டப் கொடுக்க வேண்டுமா நேயர்களே !, அவருக்கு உடனே ஞாபகம் வந்தது என் முகம் தான். என்னை இந்த தாக்குதலுக்கு பொறுப்பாக நியமித்தார்.

களவு தொடரும் 

தம்பி களவுக்கும் ஒரு ராசியும் மூஞ்சியும் வேணும். :lol: எண்டாலும் கடைசியில அந்த வடிவான பொடியனை நீங்கள் இம்சை பண்ணீட்டீங்கள். :icon_idea:

சிலவற்றை மீள நினைத்தல் துயர்தரு நினைவாக இருந்தாலும் மனசை மீளவும் புதுப்பிக்க ஆதாரமாகும். அதுபோலவே உங்கள் அனுபவ பதிவுகள்.

களவுக்கு ஏற்ற மூஞ்சை இல்லை எண்டாலும் பரவாயில்லை. ராசியும் இல்லை என்று சொல்லி போட்டியள் இரவு முழுக்க நித்திரை இல்லை அக்கா. :lol:

ஊரிலே வந்து கேட்டுப்பாருங்க எவ்வளவு வடிவான பெடியன் எண்டு. :icon_idea:

சோகங்கள் நிறைந்த வாழ்க்கை என்றாலும் சுகங்களும் நிறைந்தவை. சோகங்களை சொல்வதை விட சுகங்களை பகிர்வதால் மற்றவர்களையும் சந்தோசமாக வைச்சிருக்க முடியம் அல்லவா.

இது எல்லாருக்கும் ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலே வந்து கேட்டுப்பாருங்க எவ்வளவு வடிவான பெடியன் எண்டு. :icon_idea:

ஊரிலை போய் என் மினக்கெடுவான் ஏற்கனவே பார்த்த முகம்தானே. :D

இனி இதுக்காக கவலையெல்லாம் பட்டு குறும் தாடி வளர்த்து சோகமாக வேண்டாம். அழகின் தன்மை ஒவ்வொருவர் கண்ணிலும்தான் இருக்கு. :lol:

பகலவன் உங்களது இந்தப் பதிவை இன்று தான் கண்ணுற்றேன். குறிப்பாக முதலாவது கதை மிகவும் கவர்ந்து விட்டது.

காரணம் கதையின் இடையில நீங்க தந்த ருவிஸ்ற் இருக்கே... சுப்பர்...

தொடர்ந்து எழுதுங்கள்...

  • தொடங்கியவர்

நன்றி மணிவாசகன் உங்கள் வருகைக்கும் ஊக்கம் நிறைந்த கருத்துக்கும்.

  • தொடங்கியவர்

என்ர பொறுப்பாளர் நிபந்தனைகளை அடுக்கி கொண்டே போனார்.

எந்த காலத்திலும், பிடிபட்டால் கூட இயக்கம் என்று தெரியக்கூடாது.

உன்னை தவிர மிச்ச எல்லாபேரையும் சனத்திலே  தெரிவு செய்.

இயக்க வாகனங்கள், சொத்துகள் இந்த களவுக்கு பயன்படக்கூடாது.

எந்த கட்டத்திலும் ஆயுதங்கள் கொண்டுபோகவோ, பயன்படுத்தவோ கூடாது.

எந்த கட்டத்திலும், அங்கெ இருக்கிற ஊழியர்களுக்கு அடிக்கவோ, காயப்படுத்தவோ கூடாது.

என்று மூச்சு வாங்க சொல்லிமுடிக்கவும்.

அண்ணே முடிஞ்சுதா இன்னும் இருக்கா என்று கேட்டேன்.

ஏனடா என்றார்.

அண்ணே இதுக்கு நாங்கள் போய் அவங்களிட்ட காலிலே விழுந்து பிச்சையாக கேட்டு வாங்கி கொண்டு வரலாம் என்று சொன்னேன்.

அவர் அதுக்கு இதுவும் ஒரு அனுபவம் தான் போய் சொன்னதை  செய் என்று சொன்னார். 

சரி அண்ணே வார பெடியளுக்கு இரவு போண்டா வேண்டி கொடுக்க காசு தருவீங்களோ என்று கேட்டேன்.

எங்கட பிரிவு நிதிக்காரனிடம் நூறு ரூபா வாங்கி கொண்டு போ என்று சொன்னார்.

நான் வேண்டாம் அண்ணே நாங்கள் உதவி நிறுவன கிச்சின்லையே களவெடுத்து சாப்பிடுறோம் என்று சொல்லிப்போட்டு வந்திட்டேன். நூறு ரூபாய் என்னத்தை காணும்.

அங்கே இங்கே தேடிபிடிச்சு ஒரு நாலு பெடியளை சேர்த்துப்போட்டன். தென்றல், விபுலன், சங்கர், ரூபன் எல்லாம் எங்களுக்கு சாப்பாடு தாற வீடுக்காரரின் பெடியங்கள்.

வேவு எடுக்கிறதுக்காக நிசாம் அண்ணையின் பேசுக்கு போய் சிலம்பனின் கொட்டிலிலே அவனுக்கே தெரியாமல் கடலை போட்டு உதவி நிறுவனத்தை நோட்டம் விட்டாச்சு. சட்டி இருக்கிற இடம் கொண்டுவரப்போற பாதை என்று ஆனையிறவு அடிக்கிற ரேஞ்சிலே மப்,மண்ணிலே டம்மி மொடல் எல்லாம் செய்து பெடியளுக்கு விளங்கபடுத்தியாச்சு.

இப்போ எனக்கு உள்ளுக்குள்ளே இருந்து ஒரு வேவு தேவைபட்டுது. அங்கே சாரதியாக வேலை செய்கிற இரண்டு பெடியங்களிண்ட விலாசம் தேடிபிடிச்சு, விசாரிச்சு, அதிலே ஒருத்தன் மடிவான் என்று தெரிஞ்சு, தர்மபுரம் உழவனூர் போய் அவனை வீட்டை பிடிச்சு, ஊழியர்கள் படுக்கிற நேரம், ஆட்கள் எண்ணிக்கை, படுக்கிற இடங்கள் எல்லாம் குறிச்சு தாக்குதலுக்கு நல்ல நாளும் குறிச்சாச்சு.

சனத்தை பிடிச்சு ஒரு ரக்டர் வாடைக்கு எடுத்து, இரவு கொண்டுபோய் நாளைக்கு தாறம்  கொஞ்சம் வயல் உழ வேணும் என்று சொல்ல, என்னடா தம்பி இன்னும் இரண்டு கிழமையிலே ஆமி பிடிச்சிடுவான் உழுது என்ன செய்யபோறீங்கள் என்று சந்தேகத்தோட தான் ரக்ரர்காரன் ரக்டரை தந்தான்.

கண்டி வீதி அம்பதைஞ்சாம் கட்டையடியில் தான் தாக்குதல் இலக்கு. இரவு மூன்று மணி கண் எல்லாம் 5 தொன் கனக்கும் நேரம் தான் தாக்குதல் நேரம். அதிகாலை இரண்டு மணிக்கே நிலையெடுக்க வேணும். குலைக்கிற நாய்க்கு மயக்கமருந்து கலந்த இறைச்சி.

அந்த இறைச்சி கூட அண்டைக்கு பின்னேரம் தான் இறைச்சிக்கடைக்காரன் எறிஞ்ச கொழுப்பு குடல் எல்லாம் அள்ளி கொண்டுவந்து மயக்கமருந்து கலந்து வைச்சிருந்தம்.

12 மணியிலே இருந்து எல்லாம் பக்காவா நடக்கவேணும் என்று எல்லாருக்குள்ளேயும் ஒரு படபடப்பு. நான் கிளிநொச்சி சத்ஜெயவுக்கு வேவு எடுக்கும் போது கூட இப்படி படபடத்ததில்லை. எனக்கும் களவுக்கும் தான் எட்டாப்பொருத்தம். இதையாவது என் வாழ் நாள் சாதனையாக செய்யவேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் தான்.

மலையாளபுரத்திலே இருந்த ஒரு தெரிஞ்ச அக்கா வீட்டுக்கு போய், ஆழ ஊடுருவும் படையணிக்கு ஒரு அம்புஸ் குடுக்க போறம் எண்டு பொய் சொல்லி ஐஞ்சு பிளேன் ரீ வாங்கி குடிச்சம். (ஐஞ்சு ப்ளைன் ரீக்காக ஆழ ஊடுருவும் படையணியை எல்லாம் இழுக்க வேண்டி வந்ததே என்று மனசிலே ஒரு தாக்கம் தான்) அங்கெ வைச்சு  சிவில் சேட்டு, பழைய ஜீன்ஸ் எல்லாம் மாத்தி போதாதுக்கு அவங்கள் பிடிக்கும் போது வழுக்கட்டும் என்று எண்ணெய் பூசுவம் என்றால் அக்கா எண்ணெய் விக்கிற விலைக்கு புது எண்ணெய் எல்லாம் தரமாட்டன் என்று சொல்ல, மத்தியானம் கருவாடு பொரிச்ச எண்ணையை மணக்க மணக்க அப்பி (மனசுக்குள்ளே ஒரு பயம் இந்த மணத்துக்கு ஊர் நாயெல்லாம் எங்களுக்கு மேலே தான் பாயப்போகுது. ஆனாலும் வேறு வழி இல்லை) நாங்கள் தாக்குதலுக்கு ரெடி. மொக்கு அக்காவுக்கு கூட தெரியவில்லை கருவாட்டு மணத்தோட யாரும் அம்புஸுக்கு போவாங்களா என்று.

இரவு இரண்டு மணிக்கு ஐந்து நிமிசம் இருக்கையில், நான் தான் ரக்றரை எடுத்து பெடியளை ஏத்தி கொண்டு கண்டிவீதியில் இருந்த ஒரு பெரிய மரத்துக்கு கீழே ரக்றரை விட்டிட்டு பெடியளை இறக்கிப்போட்டு, அப்பையும் ரக்ரர்காரன் சொன்னவன் தம்பி இது நிண்டால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ணவேணும்.   சில நேரம் ஸ்டார்ட் பண்ணாது என்று சொன்னதுக்காக அதை ஸ்டார்டிலேயே விட்டிட்டு எங்கட அணி மூவ் எடுக்க தொடக்கி இருந்தது.

அந்த உதவி நிறுவனம் இருந்த ஒழுங்கைக்குள்ளே இரண்டு பக்கமும் வேலியோராமாக ஐந்தடி இடைவெளியில் நாங்கள் இலக்கை நோக்கி நகரத்தொடங்கவே அபசகுனமாய் நாயொண்டு ஊளையிட தொடங்கியது. குலைக்கிற நாய்க்கு எல்லாம் மயக்க மருந்து கலந்த குடல் கொழுப்பு பிரட்டலை போட அவுக் அவுக் என்று சாப்பிட்டு முனகி கொண்டு விழுந்திச்சினம். எல்லாம் நல்ல படியாக நடந்தது. நாங்கள் இலக்கை நெருங்கிட்டம். உள்ளுக்குள்ளே எல்லா லைட்டுகளும் அணைஞ்சு டிவி மாதிரி வெளிச்சம் மட்டுமே இருந்தது.

முதலாவது ஆள் மதிலை ஏற நாங்கள் மதிலுக்கு கீழே பதுங்கி நிலையெடுக்கவும்  ஹெட் லைட் போட்டபடி ஒரு பிக்கப் எங்களை நோக்கி வெளிச்சம் அடிச்சபடி வரவும் சரியாக இருந்தது.

களவு தொடரும் 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுவனுக்கை காவல் கடைமையிலை   கள்ளக்கோழி  பிடிச்சவன்.   உதவி நிறுவனத்தின்ரை வானை  கடத்தி  பெயின்ற் அடிச்சு  மாத்தினவன்.புன்னாலை கட்டுவனுக்கை  களவா கள்ளு இறக்கி அடிச்சவன்.  எண்டு பலபேர் இங்கை யாழுக்கை  நிக்கினம். ஆனால் எழுத மாட்டினம் தொடருங்கள்  :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கருவாடு பொரிச்ச எண்ணையின்ர மணத்துக்கு, நல்ல எறும்பு மொய்ச்சிருக்குமே, தம்பி பகலவன்? :o

தொடருங்கோ, பாப்பம், எவ்வளவு தூரம் போகுது எண்டு! :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனநாள் விடாமல்  தொடருங்கோ பகலவன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 2 years later...
  • தொடங்கியவர்

கிட்ட வந்தாப்பிறகு தான் தெரிஞ்சுது அது கறுப்பு கலர் பிக்கப்.

எங்களை கண்டதும் கொஞ்சம் தூரத்திலேயே நிப்பாட்டி போட்டு, சாரதி துவக்கிலே சேம்பரை ஏத்தியபடியே கிட்டவந்தான்.

காலுக்கு கீழே சுடமுதலே எங்கட பெடியங்கள் கையை உயர்த்திப் போட்டாங்கள்.

அண்ணை முதல்ல ஹெட் லைட்டை நிப்பாட்டுங்கோ என்றபடி நான் நிலைமையை சமாளிக்க பிக்கப்பை நோக்கிவந்தேன். கண்ணாடியை இறக்கிப் போட்டு "அடே நீயாடாப்பா நான் வேற ஆட்கள் எண்டெல்லோ பெடியனை அனுப்பினான் " என்று ஒற்றை காலுடன் இறங்க முற்பட்ட ஜவான் அண்ணையை , "பரவாயில்லை அண்ணை இந்த இடத்தை தாண்டுமட்டும் கொஞ்சம் லைட்டை நிப்பாட்டி போங்கோ அண்ணே, எங்கட பயிற்சி பெடியங்கள் கொஞ்சபேர் தப்பி ஓடிட்டாங்கள் தேடி வந்தனாங்கள் என்று சமாளிச்சு போட்டேன்.

புலிகளின் குரல் வானொலி ஒளிபரப்பை முடிச்சு போட்டு பெண் போராளிகளை இறக்கிறதுக்கு வந்த ஜவான் அண்ணை, அண்டைக்கு நான் சொன்ன பொய்யை நம்பிட்டார். (பிறகு ஒரு நாள் ஞாபகம் வந்து தான் கேட்டார், டேய் ஓடின பெடியங்களை பிடிக்கிறதுக்கு நீங்கள் ஏன்டா எண்ணெய்  பூசி கொண்டு வந்தனீங்கள் என்று )

என்னடா தாக்குதலை தொடங்க முதலே அபசகுனம் என்று தாக்குதலை கைவிடம் மனம் எண்ணினாலும், ச்சே இதை முடிச்சு எப்படியாவது பொறுப்பாளரிடம் பேர் எடுத்திட வேணும் என்று மனம் அடிச்சு கொண்டே இருந்தது.

அந்த NGO மதில் கொஞ்சம் உயரம், ஒருத்தன் குனிஞ்சு நிக்க மிச்ச ஆட்கள் அவன்ட முதுகிலை ஏறி மதிலால பாய்ந்தால், கட்டடம் ஏதோ கட்ட வைச்சிருந்த சல்லி மண் கொட்டி வைச்சிருந்தவங்கள் போல, எல்லாருமே முழங்கால் மட்டும் மண்ணுக்குள்ளே புதைய தான் விழுந்து கிடந்தோம்.

கையிலே பெரிய ஸ்பானர், கொஞ்ச சாவி கொத்துகள், ஆளை மாறி ஆள் மணலை அள்ளி வெளியிலே வரவே 15 நிமிஷம். 

அவங்கட கட்டிடத்துக்குள்ளே பார்த்தோம், மின்பிறப்பாக்கி போட்டு படம் பார்த்து கொண்டு இருந்தாங்கள். வாசலிலே ஒருத்தனை காவலுக்கு போட்டுவிட்டு, ஸ்பானரை வைச்சு ஒவ்வொரு நட்டாக கலட்ட தொடங்கினோம். அது சிமெந்து தரையிலே வைச்சு பிணைச்சு இருந்தது, இரண்டு மூன்று தரம் அடி கொடுத்து தான் நட்டை கழட்ட வேண்டி இருந்தது.

big%20dish%20spain.jpg

அப்பத்தான் விபுலன் கேட்டான், அண்ணே நாங்கள் இந்த பெரிய சட்டியை கலட்டினாலும் மதிலுக்கு மேலால கொண்டு போக ஏலாது. அப்பத்தான் எனக்கும் பொறி தட்டியது, எப்படி தான் வெளியிலே கொண்டு போறது எண்டு. அவனிட்டையே அப்பாவித்தனமாக கேட்டேன். நீயே சொல்லு எப்படி கொண்டு போறது என்று.

ஒரே வழி தான் அண்ணே இருக்கு, "உள்ளே படம் பார்க்கிறவங்களிட்டை மனிதாபிமானபடி கேட்டை திறந்துவிட சொல்லி" கேட்டு பார்ப்போம் அண்ணே. கழட்டியாச்சு தானே நாங்கள் பாவம் என்று விடுவாங்கள் என்று சொல்லி முடிச்சான். என்னக்குள்ளே இருந்த ஈகோ விடவில்லை. இருந்தும் வேற வழி இல்லை. பெடியளும் களைச்சு போனாங்கள். சட்டியை கழட்டி எடுத்துகொண்டு போய்  கேட் மட்டும் வைச்சு போட்டு கூப்பிடுவோம் என்று சொன்னேன்.

கேட் மட்டும் கஷ்டபட்டு தூக்கி கொண்டுவந்தாப்பிறகு, விபுலனையே சொன்னேன் சரி கூப்பிட்டு கேள் என்று.

விபுலன் வாசலிலே போய் "அண்ணே ..அண்ணே "..என்று செந்தில் கவுண்டமணியை கூப்பிடுற மாதிரி கூப்பிட்டான். அவங்களுக்கு கேட்கவே இல்லை. பட ருசியிலே இருந்தாங்கள்.

நான் தான் வரப்போறதை கூட கொஞ்சமும் ஜோசிக்காமல், முன்னுக்கு போய் "அண்ணோய் " பிலத்தா கூப்பிட்டேன். கொஞ்சம் தடியானவன் ஒருத்தன் எழும்பி சரத்தையும் கட்டி கொண்டு ஓடிவந்தான். பின்னாலேயே நாலைஞ்சு பேர். 

பெரிய டோச் ஒண்டை கொண்டு வந்து முகத்திலேயே அடிச்சான், பிறகு கேட் பக்கம் அடிச்சு வாச் மென் எண்டு கத்தினான், எங்களுக்கு அதுக்கு பிறகு தான் தெரியும் கேட்டுக்கு பக்கத்திலே வாச் மென் அறையிலே ஒருத்தன் படுத்திருக்கிறான் என்று. அவனும் கண்ணை கசக்கி கொண்டு வர, கேட்டுக்கு பக்கத்திலே அந்த பெரிய சட்டியையும் பார்த்த உடனேயே அந்த NGO  பெரியவனுக்கு எல்லாம் விளங்கிட்டு. 

எங்களிடம் என்ன என்று கூட கேட்கவில்லை பிடிச்சு கட்டுங்கடா இவங்களை என்று மட்டும் கேட்டது தான் தெரியும். பெடியள் நாலா பக்கமும் சிதறி ஓட, விபுலன் பிடிபட்டு போனான். நம்பி வந்த பெடியன் சரியில்லை என்று நானா போய் சரணடைந்தேன். எங்கட பிரிவையும் சொல்ல ஏலாது, கைளிலே வைச்சிருக்கிற ஸ்பனராலையும் குடுக்க ஏலாது. 

கையை பின்னாலே கட்டிப்போட்டு முழங்காலிலே இருத்தி போட்டாங்கள். NGO எல்லாத்துக்கும் பாதுகாப்பு தருவம் என்றும், என்ன பிரச்சனை என்றாலும் தங்களுக்கு சொல்ல சொன்ன நடேசண்ணைக்கு சட்டலைட் போனிலே அடிச்சு கூப்பிட்டது மட்டும் கேட்டது. அந்த காலமை அவர் எங்க வரபோறார். இவங்களை எப்படியும் பேசி சமாளிக்கலாம் என்று மனசுக்குள்ளே நினைச்சு கொண்டேன்.

எனக்கும் அவருக்கும் வேறு ஒரு பிரச்சனை அண்ணை மட்டத்திலே ஓடிக் கொண்டிருந்தது. அந்தாளிட்டை மாட்டினால் அதையும் வைச்சு சாதிக்குமே. மனம் ஒரு கணம் திக் என்றது.

என்னதான் செய்வம் என்று யோசிக்கிறதுக்குள்ளேயே அவர்ர வாகனங்கள் வெளிச்சத்தோட NGO  வாசலிலே வந்து கோன்  அடிச்சுது.

(தாக்குதல் தொடரும்)

குறிப்பு : நீண்ட நாட்கள் எழுதாமல் விட்டதுக்கு எல்லாரும் ஒருக்கா என்னை மன்னிச்சு விடுங்கோ. இன்று யாழின் 18 ஆவது வயசு, எல்லாரையும் திரும்ப யாழுக்கு கூப்பிட என்ன வழி என்று யோசிச்சு.. என்னால இயன்றது.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டிக்கு என்ன நடந்ததென்று அறிய ஆவலாக உள்ளோம்.
தொடருங்கள் பகலவன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், பகலவன்!

ஈழப்பிரியனின் கேள்வியே எனது கேள்வியும்...!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பகலவன்.....

  • கருத்துக்கள உறவுகள்

முயலை பிடிச்சீங்களா இல்லையா 

கதை நன்றாக போகிறது . இப்படி ஆடிகொருதரம் அமாவாசைக்கு ஒருதரம் என்று எழுதாமல் எழுதிமுடியுங்கோ பகலவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குதல் தொடரட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.