Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி

Featured Replies

வீங்கித் தானாக வேண்டும் என்ற நிலைவரக் கூடாது, என்பது தான் எனது கருத்து!

இந்த விடயத்தில் மட்டுமே எமக்கு சிக்கல்

அதை மட்டும் நாம் சொல்லிக்கொடுத்துவிட்டால்....

எனது வீட்டில் போன கிழமை நடந்ததை எழுதுகின்றேன்.

மகள் யூனியில் சாதாரணமாக 2 ஈரோக்களுக்குள் சாப்பிடலாம்.

போன திங்கள் வேறு ஒரு இடத்தில் பரீட்சை என்று வெளிக்கிட்டாள்.

சரி வேறு இடம் என்று 10  ஈரோக்களை கைக்குள் வைத்துவிட்டு வந்தேன்.

அவள் பின்னேரம் வீட்டுக்கு வரும்போது பாண் பைக்கற்றுடன் வந்தாளாம்.

வந்து அம்மா

இதில் சண்விற்ச்  நாளைக்கு செய்து வையுங்கோ.  நாளைக்கு கொண்டு   போய்ச்சாப்பிடணும் என்று.

தாய்  கேட்டிருக்கின்றா. ஏன் சாப்பாட்டுக்கு  காசு தரவா என்று.

இல்லையம்மா

ஒரு சண்விற்ச் 6 ஈரோ. ஒரு கொக்கா 3 ஈரோ  கொள்ளை அடிக்கிறார்கள் என்று.

இது என் வளர்ப்பு.

(சாதாரணமாக 1 கொக்கா 1 ஈரோக்கு எங்கும் வாங்கலாம்.பாடசாலைகளில் 50  அல்லது 60 சதம்)

உங்கள்  மண் .

  • Replies 113
  • Views 15.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை, எங்கள் வீட்டில் ஒரு பணக்காரப்பெண் இருக்கிறாள் என்று சுண்டல், சுபேஸ் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கோ என்னவோ! :D

இந்த திரியை எட்ட நின்று வேடிக்கை பார்த்த என்னையும் சுண்டலையும் வேண்டுமென்றே இந்தத் திரிக்குள் கோர்த்துவிட்ட புங்கை அண்ணாவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை எட்ட நின்று வேடிக்கை பார்த்த என்னையும் சுண்டலையும் வேண்டுமென்றே இந்தத் திரிக்குள் கோர்த்துவிட்ட புங்கை அண்ணாவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... :D

அதுதானே நானும் புங்கையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நட்பு வட்டத்தில் சாமத்தியச் சடங்குகளை "சாறிப் பார்ட்டி" என்றே அழைப்போம்! :) 

பெண் பிள்ளைகள் தாங்களும் சாறி அணிந்து மேக்கப் போட்டு ஃபோட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவதால், அவர்களின் பெற்றோர்களும் இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனினும் ஒரு குறித்தளவினர் இப்படியான விழாக்களை தமது பணத்தையும், பகட்டையும் காட்ட ஆடம்பரமாகச் செலவு செய்கின்றனர் என்பது உண்மைதான். இந்த சாமத்திய சடங்குகள் புலம்பெயர் தமிழர்களின் வாழ்வில் ஒரு கட்டாயமான அங்கமாக மாறிவிடும் என்றுதான் தெரிகின்றது.

எனவே என்னதான் சொன்னாலும் (எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும்) இப்படியான விழாக்களைத் தவிர்க்கமுடியாது என்பதுதான் எனது அனுபவப் பாடம். :mellow:  ஆகவே விழாவுக்கான காரணத்தை ஆராய்வதை விட்டு நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சந்தோஷமாகக் குடித்துக் கும்மாளம் அடித்துவிட்டு இறுதியில் மேடையில் ஏறிப் பெண் குழந்தைக்கு "Congratulations! You're a big girl now" என்று சொல்லி கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு வரவேண்டியதுதான் :wub: .

சாமத்திய விழாவுக்குக் கொடுப்பதற்கு என்று நல்ல வாசகம் உள்ள வாழ்த்து அட்டை வாங்குவதுதான் கடினமான விடயம். ஒரு நண்பர் கொடுத்த வாழ்த்து அட்டையில் பின்வரும் வாசகம் இருந்தது. அது இன்றளவும் எமது நண்பர் வட்டத்தில் பேசப்படுகின்றது. :icon_mrgreen:

well-done.jpg

pads.png

Tampax-Tampons-Multipax-Variety-Pack-of-

நான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்.. இதில ஐஞ்சாறு பக்கெட்டுக்களை வாங்கி கிப்ட் பாக்கில போட்டுக் கையில கொடுத்திட்டு.. "have a happy period" என்று வாழ்த்திறதாக்கும் என்று. :lol::D

Edited by nedukkalapoovan

இறைவன் உலகைப்படைத்தான் ............அவற்றை ஆழ மனிதரைப்படைத்தான் ,,,,,,,,,,,,,,,,,மனிதன் தான் வாழ என்ன என்னத்தையோ படைத்தான் ......................மேலே எழுதவிரும்பவில்லை .................வார்த்தைகளும் வரல ..................

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பெண் பருவடைந்ததை விழாவாக கொண்டாட விரும்பினால் நெருங்கின சொந்தங்களை மட்டும் கூப்பிட்டு,பெண்ணுக்கு புடவை கட்டி சடங்குகளை செய்யலாம்.[ஜயரைக் கூப்பிட்டு சடங்கு செய்யாட்டில் திருமணத்தின் பிறகு முதலிரவின் போது பாதிப்பு வருமாம்.இது பற்றி யாராவது கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?]
 
அதை விடுத்து ஊரைக் கூட்டி,உலகத்திற்கு அறிவித்து செய்வதெல்லாம் மிகவும் அநாவசியமானதும்,அநாகரீகமானதும் ஆகும்.பிள்ளைகளது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது அவர்களோடு சேர்ந்து விழாக்கள் கொண்டாட‌ வேண்டும் என்டால் 18,21 வது பிறந்த நாளைக் கொண்டாட‌லாம் தானே!
 
இங்கே பிறந்த வளர்ந்த பிள்ளைகள் அவர்களது பெற்றோரும்,சொந்தக்கார‌ரும் சொல்லிக் கொடுக்கிறதை,செய்கிறதைப் பார்த்து தான் தாங்களும் செய்ய வெளிக்கிடுவினம்.ஒரு தாய் நிறைய நகை போட‌,ஆட‌ம்பர‌மாக உடுத்த விரும்பினால் மகளும் அதைத் தான் விரும்புவார்.குறிப்பிட்ட வயது வந்ததும் மகள் சில நேர‌த்தில் தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.
 
ஒரு பெண் பருவடைந்ததை விழாவாக கொண்டாடுவது அடிமைத் தனமான செயற்பாடு என்பது என் கருத்து.
 
  • கருத்துக்கள உறவுகள்

pads.png

Tampax-Tampons-Multipax-Variety-Pack-of-

நான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்.. இதில ஐஞ்சாறு பக்கெட்டுக்களை வாங்கி கிப்ட் பாக்கில போட்டுக் கையில கொடுத்திட்டு.. "have a happy period" என்று வாழ்த்திறதாக்கும் என்று. :lol::D

குழந்தைகள் பிறந்தால் nappies பரிசாகக் கொடுக்கும் பழக்கம் மேற்கத்தையர்களிடம் இருக்கு. ஆனால் நம்மவர்கள் உடைகளையும், விளையாட்டுச் சாமான்களையும், பணமுடிப்புக்களையும்தானே கொடுக்கின்றார்கள்.

எனவே உங்கள் ஐடியா இப்போதைக்குச் சரிவராது. அடுத்த முறை உங்களை யாரும் அழைத்தால் முயற்சித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். அதுவரை இப்படியான நிகழ்வுகளுக்குப் போகவேண்டிய சந்தர்ப்பம் வந்தால் போன இடத்தில வந்தமா வடையைத் திண்டமா, தீர்த்தத்தைக் குடித்தமா, பெட்டையளோட வழிஞ்சு கதைத்தமா என்று இருப்பது மேல்! :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பருவடைந்ததை விழாவாக கொண்டாட விரும்பினால் நெருங்கின சொந்தங்களை மட்டும் கூப்பிட்டு,பெண்ணுக்கு புடவை கட்டி சடங்குகளை செய்யலாம்.[ஜயரைக் கூப்பிட்டு சடங்கு செய்யாட்டில் திருமணத்தின் பிறகு முதலிரவின் போது பாதிப்பு வருமாம்.இது பற்றி யாராவது கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?]

அதை விடுத்து ஊரைக் கூட்டி,உலகத்திற்கு அறிவித்து செய்வதெல்லாம் மிகவும் அநாவசியமானதும்,அநாகரீகமானதும் ஆகும்.பிள்ளைகளது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது அவர்களோடு சேர்ந்து விழாக்கள் கொண்டாட‌ வேண்டும் என்டால் 18,21 வது பிறந்த நாளைக் கொண்டாட‌லாம் தானே!

இங்கே பிறந்த வளர்ந்த பிள்ளைகள் அவர்களது பெற்றோரும்,சொந்தக்கார‌ரும் சொல்லிக் கொடுக்கிறதை,செய்கிறதைப் பார்த்து தான் தாங்களும் செய்ய வெளிக்கிடுவினம்.ஒரு தாய் நிறைய நகை போட‌,ஆட‌ம்பர‌மாக உடுத்த விரும்பினால் மகளும் அதைத் தான் விரும்புவார்.குறிப்பிட்ட வயது வந்ததும் மகள் சில நேர‌த்தில் தன்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு பெண் பருவடைந்ததை விழாவாக கொண்டாடுவது அடிமைத் தனமான செயற்பாடு என்பது என் கருத்து.

ஐயரைக் கூப்பிட்டு துடக்குக் கழிப்பது எல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றது என்று நினைக்கின்றேன். ஊரில் இப்படியான விடயங்களைக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஐயர் வராவிட்டால் முதலிரவில் பாதிப்பு வரும் என்ற ஐதீகம் இருப்பதை நான் கேள்விப்படவில்லை.

இந்த விழா அடிமைத்தனமாக செயற்பாடு என்று சொன்னாலும் அதனைப் புனிதமாக்கி, கெளரவம் கொடுத்து எமது பண்பாட்டினதும் பாரம்பரியத்தினதும் ஒரு அம்சமாக்கி பல வருடங்கள் போய்விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையும் ஒரு புலம் பெயர்ந்த சாமத்திய வீட்டிற்கும் சொன்றதில்லை. சாமத்தியப் படும் வயசிலும் எனக்கு தெரிஞ்சவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை. இது ஒரு தேவையில்லாத அநியாயச் செலவு என்பது எனது கருத்து. காசிருப்பவர்கள் தங்கட காசில விரும்பிய வரைக்கும் செய்யலாம் ஆனால் இப்பிடியான நிகழ்வுகளை வைத்துத்தான் சிலரை நான் எடை போடுவதுண்டு. என்னதான், படிப்பு, காசு இருந்தாலும் இப்படியான நிகழ்வுகளை நடத்தும் விதத்தில் இருந்து ஒருவரின் உண்மை முகம் தெரிந்து விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிவாக அப்ப உங்கட "யாழ் நண்பன் வல்கன்னோ" வீட்டை நடக்க இருக்கிற "சாறி பாட்டிக்கு"  வருவியளோ வரமாட்டிகளோ, ஒரு கிழமைக்குள்ள சொல்ல வேண்டும், ஹெட் கவுண்ட் கொடுக்கவேண்டும்.

குறிப்பு; நோ தம்போன்ஸ், நோ சானிடரி பட் .

சாமத்தியச் சடங்கு செய்வது மக்களின் அறியாமையே. முன்னைய காலத்தில் சாமத்தியப் பட்டவுடன் கல்யாணம் கட்டிக் கொடுத்துவிடுவார்கள். அதனால் தங்கட வீட்டைல் ஒரு பெண் கல்யாணத்துக்கு ரெடி என்பதற்காக இதனைச் செய்தார்கள். ஏனேனில் அப்போ பெண்கள் வீட்டைவிட்டு வெளிக்கிடுவது இல்லை என்பதால் அவர்களை மற்றவர்களுக்குத் தெரிய சாண்ஸ் இல்லை, அதனால் பெண்காட்டும் படலமாகவும் இருந்தது. ஆனால் இப்போது...............

மொன்றியலில் ஒரு சாமத்தியச் சடங்கில் அந்தப் பெண்பிள்ளையையை பல்லக்கில் வைத்து மாமன்மார் காவிக் கொண்டு வந்தார்களாம் மணவறை மட்டும் என்று அந்தச் சாமத்தியத்துக்குப் போனவர்களை சொன்னார்கள்.....

[ஜயரைக் கூப்பிட்டு சடங்கு செய்யாட்டில் திருமணத்தின் பிறகு முதலிரவின் போது பாதிப்பு வருமாம்.இது பற்றி யாராவது கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?]
 
உங்களுக்கு அநுபவத்தில் தெரிந்திருக்கும் தானே ரதி அக்கை

பெற்றோர் தங்களுடைய ஆசைகளையும், ஆடம்பரங்களையும் பிள்ளைகளுக்குள் திணிக்காமல், பிள்ளைகள் விரும்பினால் செய்கிறதில் தப்பில்லை. நல்ல காலம் எனக்கு ஆசைகளும் இல்லை,பெண்பிள்ளைகளில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் தங்களுடைய ஆசைகளையும், ஆடம்பரங்களையும் பிள்ளைகளுக்குள் திணிக்காமல், பிள்ளைகள் விரும்பினால் செய்கிறதில் தப்பில்லை. நல்ல காலம் எனக்கு ஆசைகளும் இல்லை,பெண்பிள்ளைகளில்லை...

போச்சுடா.

வாழ்க்கையில் 50 சதவீத பாக்கியத்தை பெறத் தவறிய துரதிஸ்டசாலியாகிவிட்டீர்களே? :o:lol:

சாமத்தியச் சடங்கு செய்வது மக்களின் அறியாமையே. முன்னைய காலத்தில் சாமத்தியப் பட்டவுடன் கல்யாணம் கட்டிக் கொடுத்துவிடுவார்கள். அதனால் தங்கட வீட்டைல் ஒரு பெண் கல்யாணத்துக்கு ரெடி என்பதற்காக இதனைச் செய்தார்கள். ஏனேனில் அப்போ பெண்கள் வீட்டைவிட்டு வெளிக்கிடுவது இல்லை என்பதால் அவர்களை மற்றவர்களுக்குத் தெரிய சாண்ஸ் இல்லை, அதனால் பெண்காட்டும் படலமாகவும் இருந்தது. ஆனால் இப்போது...............

மொன்றியலில் ஒரு சாமத்தியச் சடங்கில் அந்தப் பெண்பிள்ளையையை பல்லக்கில் வைத்து மாமன்மார் காவிக் கொண்டு வந்தார்களாம் மணவறை மட்டும் என்று அந்தச் சாமத்தியத்துக்குப் போனவர்களை சொன்னார்கள்.....

உங்களுக்கு அநுபவத்தில் தெரிந்திருக்கும் தானே ரதி அக்கை

மணவறை எப்படி  சாமத்தியச் சடங்கில் ? திருமணத்தில் தானே மணவறை வேண்டும் .     ThinkingSmiley.jpg

  • கருத்துக்கள உறவுகள்

manaverai74.jpg

சாமத்திய வீட்டிலும், மணவறை பாவிக்கிறவர்கள்.

மணவறை, தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புக்களில் ஒன்று.

ஆட்கள் கொடுக்கின்ற மொய்யை... மணவறைக்குப் பின் உள்ள மறைப்புக்களில் நின்று... நெருங்கிய உறவினர்கள் பத்திரப்படுத்தி வைக்க அருமையான இடம். :D

மணவறைக்கு பின் உள்ள பகுதியில்.... ஆண்களை அனுமதிக்காமல், தாய்க்குலங்களே... அவ்விடத்தை ஆக்கிரமித்து நிற்பார்கள்.

கொடுக்கின்ற "என்வலப்புகளில்" ஒன்று, இரண்டை ஆண்கள் உருவிக் கொண்டு போய் விடுவார்களோ... என்ற முன் எச்சரிக்கையாக இருக்கலாம். :lol:  :icon_idea:

Edited by தமிழ் சிறி

மணவறை எப்படி  சாமத்தியச் சடங்கில் ? திருமணத்தில் தானே மணவறை வேண்டும் .     ThinkingSmiley.jpg

அது மணவறை இல்லையா? ஓக்கே, ஓக்கே சாமத்தியப் பெண் நிற்கும் இடம்.

manaverai74.jpg

சாமத்திய வீட்டிலும், மணவறை பாவிக்கிறவர்கள்.

மணவறை, தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புக்களில் ஒன்று.

ஆட்கள் கொடுக்கின்ற மொய்யை... மணவறைக்குப் பின் உள்ள மறைப்புக்களில் நின்று... நெருங்கிய உறவினர்கள் பத்திரப்படுத்தி வைக்க அருமையான இடம். :D

மணவறைக்கு பின் உள்ள பகுதியில்.... ஆண்களை அனுமதிக்காமல், தாய்க்குலங்களே... அவ்விடத்தை ஆக்கிரமித்து நிற்பார்கள்.

கொடுக்கின்ற "என்வலப்புகளில்" ஒன்று, இரண்டை ஆண்கள் உருவிக் கொண்டு போய் விடுவார்களோ... என்ற முன் எச்சரிக்கையாக இருக்கலாம். :lol:  :icon_idea:

நன்றி தமிழ்சிறி விளக்கத்திற்கு  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயரைக் கூப்பிட்டு துடக்குக் கழிப்பது எல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றது என்று நினைக்கின்றேன். ஊரில் இப்படியான விடயங்களைக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஐயர் வராவிட்டால் முதலிரவில் பாதிப்பு வரும் என்ற ஐதீகம் இருப்பதை நான் கேள்விப்படவில்லை.

இந்த விழா அடிமைத்தனமாக செயற்பாடு என்று சொன்னாலும் அதனைப் புனிதமாக்கி, கெளரவம் கொடுத்து எமது பண்பாட்டினதும் பாரம்பரியத்தினதும் ஒரு அம்சமாக்கி பல வருடங்கள் போய்விட்டன.

மன்னிக்கவும் கிருபன் தான் பிழையாக எழுதி விட்டேன்.ஜயரைப் கூப்பிட்டு தொடக்கு கழிப்பது பற்றி சொல்லவில்லை.பருவமடைந்த பெண்ணுக்கு ஆராத்தி எடுப்பது போன்ற சடங்குகளை செய்வார்கள்.அதன் போது அப் பெண்ணின் தீட்டு கழிப்படுதாம் என்று சொல்கிறார்கள்.
 
புலத்தில் பிறந்து,வளர்ந்த சில பெண்களுக்கு அவர்கள் பருவமடைந்த நேரம் அவர்கள் பெற்றோர் இச் சடங்கை செய்திருக்கவில்லை.ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் சாமத்திய சடங்கு செய்து தான் பிறகு திருமணம் செய்து வைத்தார்களாம் என்று கேள்விப்பட்டேன்.
 
என்னைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் மாமனை கட்டும் முறை இருப்பதால் அவர்களிடம் கறப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட சடங்கு ஈழத்திற்கு பரவி விட்டது.என்ன தான் எழுதினாலும் இதை மாற்ற முடியாதது என்பது உண்மை தான்

உங்களுக்கு அநுபவத்தில் தெரிந்திருக்கும் தானே ரதி அக்கை

இப்படியான உங்கள் கொசிப்புகளை யாழில் இருக்கிற உங்கள் கூட்டுகளோடு வைத்திருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  மண் .

நன்றி

ஆனால்  எனது மண்ணை  விதைக்கமுடியும்

அதேநேரம் தேசப்பற்றை அவர்களுக்கு விதைக்கமுடியாது என்ற தங்களது கருத்துக்கள்  ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பருவடைந்ததை விழாவாக கொண்டாட விரும்பினால் நெருங்கின சொந்தங்களை மட்டும் கூப்பிட்டு,பெண்ணுக்கு புடவை கட்டி சடங்குகளை செய்யலாம்.[
 
ஒரு பெண் பருவடைந்ததை விழாவாக கொண்டாடுவது அடிமைத் தனமான செயற்பாடு என்பது என் கருத்து.

உண்மைதான் ரதி

இது ஒன்றும் புலம் பெயர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா அன்று. 

எனவே இது பற்றி  புலம் பெயர்ந்தவர்களை  மட்டும்  விமர்சிப்பது சரியன்று.

இதுவும் உங்கள் வளர்ப்புத்தானே?

சின்ன சின்ன ஆசைகளும்

வாழ்க்கையும் ஒன்றா தமிழச்சி....??? :(

http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

  • கருத்துக்கள உறவுகள்

கூடுதலாக மான ரோசங்களுடன் வாழ்ந்து வரும் சமூகங்களில் தமிழ் சமூகமும் ஒன்று. அப்படியான சமூகத்திலிருக்கும் ஒரு பெற்றோரோ ,உறவினரோ தமது பிள்ளையைக் கேவலப் படுத்துவார்களா ! வீதியால் போறவன் எட்டிப் பார்கிறான் என்று ரெண்டு வரிக் கிடுகை உயரமாய் வைத்துக் கட்டுகிறவர்கள் நாங்கள் .( உடனே பொடியல் சைக்கிள் சீற்றையும் உயர்த்தி விசில் அடித்துக் கொண்டு போறது வேற விடயம்.)

 -  திருமணம் முடிந்ததும் முதலிரவுக்கு கட்டிலை அலங்கரிப்பதும், பெண்ணிடம் பால் பழத்தைக்  கொடுத்து உள்ளே போனதும் உந்தச்சீலையை கழட்டிட்டு மற்றதைப் போட்டுக்கோ என்று சொல்லி அனுப்புவதில் இல்லாத அசிங்கம் இதில் என்ன வந்தது.

- ஹனிமூனுக்கு காஷ்மீர் போனோம், ஆலப்புலா படகு வீட்டில ஒரு வாரம் தங்கினோம் என்று ஜம்பமாய் சொல்லும் பொது வெட்கப் படுரோமா என்ன !

-இப்போ டேட்டிங் போவதும்  கிளப் போவதும்  சாதாரணமாய் வந்து விட்டது !

பெண் பெரிய பிள்ளையானால் ஓரளவு வசதியானவர்களும் கூட  ஆறு மாதம், ஒரு வருடத்துக்குள் சடங்கு செய்வார்கள், கொஞ்சம் கஷ்ட நிலைமையிலிருந்தால் அப்பவே பிள்ளைக்கு தட்டிக் கழித்துவிட்டு ( சருகுகளைத் தலையில் வைத்து முழுக்காட்டி, அலங்காரம் செய்து சுமங்கலிப் பெண்கள் பூவால் ஆரத்தி எடுத்து ,பால் ரொட்டி போன்ற பலகாரத்தால் திருஷ்டி சுத்தி தலையின் மேல் அதை கைகளால் நொருக்கி  நான்கு திசையிலும் எறிந்து கண்ணூறு கழித்து ) பாடசாலைக்கு ,அன்றி வெளியோவோ போக விடுவார்கள்.  பின் அந்தப் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் போது காலையில் சாமத்திய சடங்கு செய்து பின் திருமணத்தை நடத்துவார்கள் .

-  ஒரு சிங் ஆறு முழப் புடவையில் பெரிய தலைப் பாகை கட்டிக் கொண்டு எல்லா நாட்டிலும் கம்பீரமாய் வெளியே திரிகின்றார் .

- இங்கேயும் சுன்னத் சடங்குகள், ஞானஸ்நானம் எல்லாம் சாதாரண விழாக்களாக கொண்டாடப் படுகின்றன .

- வைஷ்ணவ ர்கள்  சிறிதாக நாமம் போட்டுக் கொண்டுதான் நடமாடுகின்றார்கள்.(அது பார்க்க அழகாகவும் இருக்கு.)

- இங்குள்ள பள்ளி வாசல்களில் எல்லா முகமதியரும் அவர்களது பாரம்பரிய ஆடையை தொப்பியோடு  அணிந்து கொண்டுதான் அல்லாவுக்கு  தொழுகை செய்கின்றனர்.

பெரும்பாலும் இவர்கள் யாரும் தத் தம் கலாச் சாரங்களை  விட்டுக் கொடுப்பதுமில்லை, மாற்றுக் கருத்தில்லை அதனால் விவாதிப்பதுமில்லை.

போகட்டும் !

    உதாரணமாக  யதார்த்தத்தில்  நான் பாரிசில் இருக்கின்றேன். இங்கு ஒவ்வொரு சனி  ஞாயிறும் கண்டிப்பாக வேண்டியவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் . எனது மாத வருமானம் சுமார் 1250 ஈரோ . எவ்வளவுதான் குறைத்துப் பார்த்தாலும் மாதம் 400லிருந்து 500 ஈரோ வரை இச் செலவு செய்யப் படும்.

இதன் பின்தான்  வீடு வாடகை ,சாப்பாடு என்று இதர சிலவுகள் எல்லாம். மேற் குடுத்த சிலவுகள் எல்லாம் எனது வீட்டில் நடக்கும் ஒரு விசேசம் மூலம் தான் திரும்பப் பெற முடியும். அதுவும்  ஒரு முதல் தானே .

ஒவ்வொருவருக்கும் மிக நெருங்கிய உறவுகள் ,நண்பர்கள்  பிள்ளைகள்  என்று பார்த்தாலும்  300லிருந்து 500 பேர் வரை வந்துவிடும். நான் ஒரு நிகழ்சி செய்வதை இருந்தாலும் வீட்டுக்குள் செய்ய இடம் போதாது.ஒரு ஹால் இன்று குறைந்தது 2000 ஈரோ விலிருந்து மேலே எல்லையில்லை .அதுவும் ஆறுமாதம் அல்லது கூட முதல் பதிவு செய்யவேண்டும்.இனி சாப்பாடு,இதர செலவுகள் என்று 4000,5000 ஈரோ வரை தேவைப் படும்.

இப்படியெல்லாம் நான் செய்து போட்டு விழா நெருங்கிய நாட்களில் வீட்டில விபத்துக்கள் நடந்தால் கூட அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு வியர்வையில் கண்ணீரைக் கரைத்து விட்டு விழாவை நடத்தியே ஆக வேண்டும்.இல்லையென்றால் வட்டிக்குப் பயந்து விட்டத்தில் தொங்க வேண்டும்.

யாரோ ஒரு சிலர் ஆடம்பரமாய் செய்யலாம், ஆனால் எல்லோரும் அப்படியல்ல.ஒரு பெண்பிள்ளை வைத்திருப்பவர் செய்துதான் ஆக வேண்டும். பிள்ளைக்கு திருமணத்தில் விழும் பணமோ, பரிசில்களோ மாப்பிள்ளை வீட்டாரிடம் சிமூத்தாய்ப் போய் விடும்.

வடிவேலு சொன்னதுபோல் சும்மா இருப்பதென்றால் சுகமென்று நினைக்கின்றாயா , முடிந்தால் இருந்துபார் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- ஹனிமூனுக்கு காஷ்மீர் போனோம், ஆலப்புலா படகு வீட்டில ஒரு வாரம் தங்கினோம் என்று ஜம்பமாய் சொல்லும் பொது வெட்கப் படுரோமா என்ன !

-இப்போ டேட்டிங் போவதும்  கிளப் போவதும்  சாதாரணமாய் வந்து விட்டது !.

-  ஒரு சிங் ஆறு முழப் புடவையில் பெரிய தலைப் பாகை கட்டிக் கொண்டு எல்லா நாட்டிலும் கம்பீரமாய் வெளியே திரிகின்றார் .

- இங்கேயும் சுன்னத் சடங்குகள், ஞானஸ்நானம் எல்லாம் சாதாரண விழாக்களாக கொண்டாடப் படுகின்றன .

- வைஷ்ணவ ர்கள்  சிறிதாக நாமம் போட்டுக் கொண்டுதான் நடமாடுகின்றார்கள்.(அது பார்க்க அழகாகவும் இருக்கு.)

- இங்குள்ள பள்ளி வாசல்களில் எல்லா முகமதியரும் அவர்களது பாரம்பரிய ஆடையை தொப்பியோடு  அணிந்து கொண்டுதான் அல்லாவுக்கு  தொழுகை செய்கின்றனர்.

பெரும்பாலும் இவர்கள் யாரும் தத் தம் கலாச் சாரங்களை  விட்டுக் கொடுப்பதுமில்லை, மாற்றுக் கருத்தில்லை அதனால் விவாதிப்பதுமில்லை.

போகட்டும் !

அந்த படங்களை "பேஸ் புக்கில" போடுற சனத்தை என்ன செய்யுறது.. :mellow:

manaverai74.jpg

சாமத்திய வீட்டிலும், மணவறை பாவிக்கிறவர்கள்.

மணவறை, தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புக்களில் ஒன்று.

ஆட்கள் கொடுக்கின்ற மொய்யை... மணவறைக்குப் பின் உள்ள மறைப்புக்களில் நின்று... நெருங்கிய உறவினர்கள் பத்திரப்படுத்தி வைக்க அருமையான இடம். :D

மணவறைக்கு பின் உள்ள பகுதியில்.... ஆண்களை அனுமதிக்காமல், தாய்க்குலங்களே... அவ்விடத்தை ஆக்கிரமித்து நிற்பார்கள்.

கொடுக்கின்ற "என்வலப்புகளில்" ஒன்று, இரண்டை ஆண்கள் உருவிக் கொண்டு போய் விடுவார்களோ... என்ற முன் எச்சரிக்கையாக இருக்கலாம். :lol:  :icon_idea:

நன்றி தமிழ் சிறி .

  • கருத்துக்கள உறவுகள்
இதை பலரும் தவறு என்று எழுதுகிறார்கள்.
இதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
"செய்வதை செவ்வன செய்" எனும் போது மேல் இருக்கும் கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை.
 
இந்தியாவின் ஒரு பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் (இவர் சில படங்களும் இயக்கி இருக்கிறார்) அவர்களின் ஒரு புத்தகம் படிக்கும்போது  இப்படி எழுதினார் ...........
"திருமணம் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கபட்ட ஒரு விபச்சாரம்" என்று.
வாசித்த எனக்கு மனது பட படக்க தொடங்கிவிட்டது . காரணம் திருமணம் செய்யும் நோக்கில் ஒரு பெண்ணுடன் எனக்கு உறவு அப்போது இருந்தது. தவிர என்னை ஆளாக்கிய அம்மா அப்பா திருமணத்தை செய்திருக்கிறார்கள். இந்த உலகில் பார்த்து நான் தலை குனிய வேண்டிய மரியாதைக்கு உரியவர்கள் பலர் திருமணம் செய்திருக்கிறார்கள். 
அப்போ இவர்கள் எல்லோரும் செய்தது விபச்சாராமா??
இவா என்ன விசர் கதை பேசுறா? என்று அருந்ததி மேல் இருந்த மதிப்பே போய்விட்டது.
புத்தகத்தை தொடர்ந்தும் வாசித்தேன்.......... முடியவில்லை நெஞ்சில் குத்திய முள்ளாக இந்த வார்த்தை இருந்துகொண்டே இருக்கிறது.
 
இவரின் கருத்து எவளவு லூசு தனமானது என்று ஒருமுறை யோசிக்க தொடங்கினேன். யோசிக்கிறேன் ....
யோசிக்கிறேன் .....
யோசிக்கிறேன் .....
அவருடைய கருத்து லூசுதனமானது என்று நிறுவிவிட எதுவும் தோன்றவில்லை.
எந்த அடிப்படியில் அதை நிராகரிப்பது? சில அடைமொழி சொற்களை பாவித்து நிறுவ முடிகிறது. 
புனிதமானது ....
காதல் ....
அன்பு ....
தேவனால் நிச்சயிக்கபட்டது ....
இந்த புனிதத்திட்குள் புனிதத்தை தேடினேன். விபச்சாரம் புனிதமானது என்ற முடிவுக்கு கொண்டு சென்றது.
அங்கே பொய் இல்லை.
இன்னதுக்கு இவளவு என்ற முற்கூட்டிய தெளிவு. எல்லாம் இருக்கிறது.
எனக்கு ஏன் ஒரு பெண் வேண்டும்???
இந்த திசையில் யோசித்தேன். 
இப்போது ஆணுக்கும் ஆணுக்கும் அல்லது ஒரு பால் திருமனத்திற்கு எதிரான வாதங்கள் சுலோகங்கள் எதிர்ப்புகள் என்பன பொய் என்ற ஒரு நிலைக்கு என்னை தள்ளின.
"காதல்" ஒரு புனிதமான ஒன்று என்றால் ஏன் அதை பலபேருடன் பகிர முடியாது?
ஏன் ஆறு ஏழு பெண்களை நான் காதல் கொள்வதை ஒரு பெண் மறுக்கிறாள். அல்லது எனது பெண் வேறு ஆண்களை காதலிப்பதை ஏன் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை?
நான் என்னை காதலிக்கிறேனா? அவளை காதலிப்பதாக நடிக்கிறேனா?
எனது ஆசைகளை அவள்மேல் திணிக்கிறேனா? அவளை அப்படியே ஏற்று அவளை .... அவளாகவே  ஏற்று காதலிக்கிறேனா??
பாலியல் கடந்து இன்னொரு பெண்ணுடன் எவளவு ஆழமாக என்னால் அன்போடு இருக்க முடியும்? அந்த அன்பிற்கான எல்லை ஏன் எனது மனைவியால் வரையறுக்க படவேண்டும்??
எனது மனைவி (இன்னொருவனுடன்) தனது நண்பனுடன் ஒரு இரவு முழுதும் தங்குவதை  என்னால் ஏற்க முடியுமா??
 
இங்கு "புனிதம்" என்பது உண்மையிலேயே புனிதமா? 
அல்லது ஒரு விபச்சார யுத்தியா??
உண்மை எனக்கு இன்னமும் புரியவில்லை.
அதே நேரம் அருந்ததியை மறுக்கவும் முடியவில்லை.
பெண் விலை பேசபடுகிறாள். இதில் பெரும் மோசடி நடக்கிறது. ஆணாத்திக்கம் பெண்ணிடம் .... தந்திரமாக பெண்ணையும் பணத்தையும் பறிக்கிறது.
"பெரியார்" என்பவர்கள் பெரும் மோசடி காரராகவே இருக்கிறார்கள். 
 
விபச்சாரம் என்று வந்த பின்பு. விளம்பரம் இன்றி அமையாதது.......... இன்று விளம்பரம்தான் பல கோடி பெறுமதியான  கொம்பனிகளையே நிர்ணயிக்கிறது. விளம்பர யுத்தியை புதுசு புதுசுகா  சிந்திக்கிறார்கள்.
மகளை விபச்சார சந்தைக்கு மவுசுடன் கொண்டுவருவதென்றால் கெலியில் ஏற்றுவதை என்னால் தவறென்று சொல்லமுடியாது.
என்ன செய்கிறோம் என்ற கேள்விக்கு விடை தெரியாத போது?? செய்வதற்கு எப்படி எல்லையை நிர்ணயிப்பது ?
இதைதான்  செய்கிறோம் என்று தெளிவு இருந்தால்... 
இப்படிதான் செய்யவேண்டும் என்று ஒரு தெளிவு இருக்கும்.
 
ஒரு பெண் பருவம் அடைகிறாள்........ ஒரு பிராமண வீட்டில் பிறந்த ஒரு இளைஞன் எனக்கு இருக்கும் அத்தனை பாலியல்  உணர்வுகளும் கொண்ட அதே உடலை கொண்ட ஒருவன். ஐயர் என்ற பெயரில் வந்து செய்ய என்ன இருக்கிறது??  என்ன செய்ய முடியும்??
ஐயரை அழைத்து வந்த பின்பு இதைதான் செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பது கீழ்த்தரமானது. ஐயர் பெண்ணுடன் உறவு கொண்டாலே ஓரளவு என்றாலும் தொடக்கு கழியும்.
 
(என்னுடைய எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கலாம். சமூகம் அதைவிட கேவலமாக இருக்கும்போது. எனது எழுத்துக்களை எப்படி சீர்படுத்துவது என்று ........ நீங்கள் சொல்லித்தந்தால்  கற்றுக்கொள்ள எனக்கு எப்போதும் ஆவல் இருக்கிறது)  

உண்மைதான் ரதி

இது ஒன்றும் புலம் பெயர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா அன்று. 

எனவே இது பற்றி  புலம் பெயர்ந்தவர்களை  மட்டும்  விமர்சிப்பது சரியன்று.

சின்ன சின்ன ஆசைகளும்

வாழ்க்கையும் ஒன்றா தமிழச்சி....??? :(

http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

பத்தாயிரத்திற்கும் அதிகமாகச் செலவழித்து சாமத்திய வீடு செய்வது சின்னச் சின்ன ஆசை.  ஆனால், ஒரு கிழமை இரண்டு கிழமைகளுக்கு கொஞ்சம் அதிகமாக உணவுக்குச் செலவழித்தால் அது வீண் விரயமா?  நந்தன் கூறியதுபோல, சில விடயங்களை எத்தனை தலைமுறை கழிந்தாலும் மாற்ற முடியாது.  இதனை நான் கனடாவில் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.   நேரடி அனுபவத்தின் காரணமாகவே இதனை இங்கு குறிப்பிடுகிறேன். 

ஒருவரைப் பற்றிப் பிறர் பேசினால்தான் அது பெருமை..........

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரத்திற்கும் அதிகமாகச் செலவழித்து சாமத்திய வீடு செய்வது சின்னச் சின்ன ஆசை.  ஆனால், ஒரு கிழமை இரண்டு கிழமைகளுக்கு கொஞ்சம் அதிகமாக உணவுக்குச் செலவழித்தால் அது வீண் விரயமா?  நந்தன் கூறியதுபோல,

சில விடயங்களை எத்தனை தலைமுறை கழிந்தாலும் மாற்ற முடியாது.  இதனை நான் கனடாவில் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன்.   நேரடி அனுபவத்தின் காரணமாகவே இதனை இங்கு குறிப்பிடுகிறேன். 

ஒருவரைப் பற்றிப் பிறர் பேசினால்தான் அது பெருமை..........

என் தப்புத்தான்

தமிழச்சி வெளியில் வந்த அடுத்த தலைமுறை  என்று கணித்திருந்தேன்

இல்லை அவரும் குண்டுச்சட்டிக்குள்தான் குதிரை ஓட்டுகின்றார் என்று உங்கள் நேரடி அனுபவத்தை வைத்து புரிந்து கொண்டேன். :icon_idea:

நன்றி  வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.