Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் திருமணம் புரிந்ததால் புலிகள் கடும் கோபம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளதால், புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

நகுலன் போர் நடைபெற்ற போது இறந்து விட்டார் என்று கருத்திய போதிலும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் செய்து இல்லறவாழ்கையில் நுழைந்துள்ளார்.

 

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர், புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு நகுலன் தலைமையேற்பார் புலம்பெயர் புலிகளின் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் நகுலனின் திருமணம் வைபவத்தில் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உட்பட முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93367/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கேர்ணல் நகுலன் திருமணம் செய்ததையிட்டு,
புலம்பெயர் தேசத்தில், புலிகள் கோபம் கொண்டதாக... நான் இதுவரை அறியவில்லை.
சிங்கள இணையத்தளம் செய்தி கிடைக்காமல், பொய்ச் செய்திகளை இணைத்து... சிங்கள வாசகர்களை "கிளு,கிளுப்பில்" வைத்திருக்க முயல்கின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நகுலன் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

இச்செய்தியை இரண்டு நோக்கங்களுக்காக இப்படி வெளியிட்டிருக்கிறார்கள்.

 

1. நகுலனின் நன்மதிப்பை தாயகத்துக்கு ஆற்றிய சேவையின் மதிப்பை மக்கள் மத்தியில் குலைப்பது.

 

2. நகுலனின் உயிருக்கு உலை வைப்பது..! :icon_idea:

 

இன்றைய நிலையில் மக்கள் முன்னாள் போராளிகள் திரும்பப் போராடுவார்கள் என்ற எதிர்பார்ப்பையே வைச்சிருக்கல்ல. அவர்கள் எப்படியாவது தப்பி வாழ்ந்தால் போதும் என்றே நினைக்கிறார்கள். மக்கள் ஆக்கிரமிப்பாளனின் பலம் பலவீனம் அறிந்தே உள்ளனர். ஆனால் சிங்களவன் தமிழர்களை இன்னும்.. குழந்தைப்பிள்ளைன்னு நினைச்சுக் கிட்டு இருக்கிறான். ஒட்டுக்குழுக்கள் தங்கள் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். காட்டிக்கொடுக்கிறவனுக்காகவது விசுவாசமா வேலை செய்யுங்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நகுலனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்..!

Nakulan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

இச்செய்தியை இரண்டு நோக்கங்களுக்காக இப்படி வெளியிட்டிருக்கிறார்கள்.

 

1. நகுலனின் நன்மதிப்பை தாயகத்துக்கு ஆற்றிய சேவையின் மதிப்பை மக்கள் மத்தியில் குலைப்பது.

 

2. நகுலனின் உயிருக்கு உலை வைப்பது..! :icon_idea:

 

இன்றைய நிலையில் மக்கள் முன்னாள் போராளிகள் திரும்பப் போராடுவார்கள் என்ற எதிர்பார்ப்பையே வைச்சிருக்கல்ல.

அவர்கள் எப்படியாவது தப்பி வாழ்ந்தால் போதும் என்றே நினைக்கிறார்கள். மக்கள் ஆக்கிரமிப்பாளனின் பலம் பலவீனம் அறிந்தே உள்ளனர்.

 

 

போன  கிழமை

ஊரிலிருந்து (கிளிநொச்சி)இங்கு தற்பொழுதுதான் வந்தஒருவரைச்சந்தித்தேன்.

பொதுமகன்  அவர்.

ஆனால் முள்ளிவாய்க்கால் வரை நின்று சிறை  சென்று கடைசிவரை அவரை பொதுமகன் என சிங்களம் நம்பாததால் இங்கு வந்துள்ளார். திருமணம் ஆகி 2 குமர்ப்பிள்ளைகளுக்கு அப்பா.

 

அவர் சொன்னார்

கம்பீரமாக நடந்த போராளிகள் தத்தி தத்தி ஒரு 100 மீற்றரைக்கடக்க பல நிமிடங்கள் செல்லுமாம்

போய்ப்பேச உதவி  செய்ய மனம் தள்ளுமாம்

ஆனால் அவர்களை  தாங்கள் பார்ப்பதைவிட பல கண்கள் அவர்களை  உற்று நோக்கியபடி இருக்குமாம்

தாம் போய் ஏதாவது பேசினால் தமக்கும் அவர்களுக்கும் வரும் இடைஞ்சல்களை  நினைத்து உள்ளுக்குள்ளேயே  அந்த மக்கள் அழுவதை யாரும் அறியமாட்டார்கள். ஆனால் வெளியில் இணையங்களில் போராளிகளைக்கைவிட்ட மக்கள் என்று பார்க்கும் போது எம் மக்களையோ இன்றைய களநிலையையோ  எவரும் புரிந்து கொள்ளவில்லை என்றே தான் நினைப்பதாக.... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் அரசியல் கருத்துக்கள் எழுதுவதில்லை என்றே இருந்தேன் அதற்குரிய நாகரீகமான நடத்தைகளை அதிகம் காணாததால் ஒதுங்கி இருக்கவே விரும்பினேன் ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் அதற்குரிய தேவையை எழுப்பியவாறே என்னைத்தள்ளிச்செல்கிறது. இருக்க,

 

உண்மையில் தனக்குத்தானே தமிழ்த்தேசிய இணையம் என்று பெயரிடப்பட்ட, யாழில் தடை செய்யப்பட்ட இணையத்தில் வந்த செய்தி நகுலனின் திருமணப்போட்டோவுடன் செய்தி இறுதி யுத்தத்தில் தப்பி காட்டில் இருக்கிறேன் 100 போராளிகளுடன் சேர்ந்து மறுபடியும்  கிழக்கிலிருந்து போராட்டம் வெடிக்கும்,தமிழீழம் மலரும் என்று TR வசனம்  சொல்லி லண்டனில் இருந்து காசு வாங்கி இலங்கைப் புலனாய்வுக்கும் குடுத்து, தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியதாக சொல்கிறது, முகப்புத்தகத்திலும் தேசியத்தூண்கள், தமிழீழக்காவலர்கள் என்று சொல்லி அவரை துரோகி, "சீ..தூ நாயே இவனை எல்லாம் நம்பி தலைவர் தன்ரை பக்கத்திலை வச்சிருந்திருக்கிறார்களே என்று" பின்னூட்டம் வேறை. உண்மையில் இங்கு யாழில் இரண்டு,மூன்று மாற்றுக்கருத்தாளர்களை ஒட்டுக்குழு, ஓணான் குழு, துரோக்கி, காட்டிக்குடுக்கிறாங்கள், சிங்கள,ரோ புலனாய்வுத்துறை என்று சொல்லி உண்மையாகவே தேசியத்தின் குரல், தேசியத்தூண் என்று தமக்கு தாமே பட்டம் சூட்டிக்கொண்டு விபச்சாரக்கருத்துக்களை எழுதுபவர்களை எல்லாம் தேசியத்தின் பெயரில் ஏற்றுக்கொள்கிற்றோமா என்ற ஆதங்கம் தான் மேலெழுகிறது. இப்படியானவர்கள், இப்படியான பிரச்சார வலையமைப்பு இருக்கும் போது  ஒட்டுக்குழுக்களும், புலனாய்வு அமைப்புக்களும் எதற்கு?

 

இதே தளத்தில் வந்த செய்தி கருப்பு ஜூலைக்குப் பதிலடி லண்டனில் கொடுத்தாச்சு என்று ..

ஒரு இனப்படுகொலையை சாதாரண கவனயீர்ப்புப் போராட்டத்திற்குச் சமனாக நிறுவி படுகொலைசெய்யப்பட்ட அப்பாவி உயிர்களையும் அவர்தம் குடும்பங்களையும் கொச்சைப்படுத்த இப்படியானவர்களால் மட்டும் தான் முடியும்.

எந்த வித முன்யோசனையும் இன்றி எழுதும் இந்தக்காவலர்கள் இருக்கும் வரைக்கும் எதுக்கு ஒட்டுக்குழுக்கள் எல்லாம்?

இத்தனை வருடங்களாக இந்த இனத்திற்காய் போராடிய தளபதிகளையே துரோகிகள், மக்கள் பணத்தில் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்றும் வரைக்கும் நகுலன் என்ன தேசியத்தலைவர் வந்தால் கூட இப்படியானவர்கள் சாணி அடிப்பர்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இரண்டு வகையான குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் புலிகள் பற்றி எது வந்தாலும் விமர்சிக்கும் மனநிலையில் உள்ளோர். அது சரியா தவறா என்பதற்கப்பால் புலிகளைக் குறை சொல்லும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்கிற ஒரே நோக்கத்திற்காகக் எழுதுபவர்கள். இவர்கள் ஒன்றில் மாற்றியக்க உறுப்பினர்களாகவோ அல்லது புலிகளுடனிருந்து பின்னர் அரச பக்கம் தாவியவர்களாகவோ அல்லது புலிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கலாம். 

 

மற்றைய சாரார் புலிகள் பற்றி எது வந்தாலும் ஆகா ஓகோ, இந்தா தமிழீழம் மலரப் போகிறது, சிங்களவனை லண்டனில் நைய்யைப் புடைத்துவிட்டோம், பதிலடி கொடுத்திருக்கிறோம், நாளைக்கே விடுதலை சாத்தியம் என்று கனவுலகில் சஞ்சரிப்பவர்கள். 

 

இவர்கள் இருவராலும் எமது விடுதலைக்கு எந்த உதவியும் கிடைக்கப்போவதில்லை.

 

இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே பொதுவான குணாம்சம்தான் யதார்த்தத்தை பார்க்க மறுப்பது. முதாலம் குழுவினர்க்கு புலிகளைக் குறை சொல்லுவதென்பது மக்களின் அவலங்களுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும் எவ்வளவிற்கு முக்கியமானதோ, அதேயளவு முக்கியத்துவத்தை மற்றைய குழுவினர் மக்களின் அவலங்களைக் காட்டிலும் கனவுலக சஞ்சரிப்பிற்குக் கொடுக்கிறார்கள். 

 

எனக்குத் தெரிந்த பலர் (முன்னர் யாழுடன் இருந்தவர்கள்), இப்போது இந்தக் காரணத்துக்காகவே யாழுக்கு வருவதில்லை. ஒன்றில் திட்டித் தீர்த்துவிடுகிறீர்கள், அல்லது ஆகா ஒகோ என்று புழுகுகிறீர்கள் என்று குறை சொல்கின்றனர். உண்மையும் அதுதான் என்று நான் நினைக்கிறேன். 

 

என்னைப்பொறுத்தவரையில் யாழ் என்பது பலருக்கு ஒரு பொழுது போக்குத் தளம், இன்னும் சிலருக்கு இது செய்தி வாசிக்கும் தளம், கொஞ்சப்பேருக்கு தாயக் அசவலங்களை அறியவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் உதவும் தளம். ஒரு களத்தில் பலவாறான கருத்துக்களும் விமர்சனங்களும் வருவது தவிர்க்க முடியாதது. தனிப்பட்ட நபர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு இங்கே எவரும் ஆசிரியர்களும் இல்லை. ஆனால் எழுதும்போது யதார்த்தத்திற்கு அமைவாகவும், அவலங்களக் கூட்டாமலும் எழுதினால் எல்லோருக்கும் நலம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இரண்டு வகையான குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் புலிகள் பற்றி எது வந்தாலும் விமர்சிக்கும் மனநிலையில் உள்ளோர்.

எனக்குத் தெரிந்த பலர் (முன்னர் யாழுடன் இருந்தவர்கள்), இப்போது இந்தக் காரணத்துக்காகவே யாழுக்கு வருவதில்லை. ஒன்றில் திட்டித் தீர்த்துவிடுகிறீர்கள், அல்லது ஆகா ஒகோ என்று புழுகுகிறீர்கள் என்று குறை சொல்கின்றனர். உண்மையும் அதுதான் என்று நான் நினைக்கிறேன். 

 

இந்த குழுவினர்கள் இப்ப மட்டும் அல்ல முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் இருந்தார்கள் இப்பவும் இருக்கிறார்கள் தொடர்ந்தும் இருப்பார்கள் பெயர்கள்தான் வேறு.அதற்காக யாழைவிட்டு ஒதுங்க வேண்டிய அவசியம் வாசகர்களுக்கு இல்லை.வாசித்து மனிதன் புரணமடைய வேண்டுமே தவிர ஒதுங்குவது என்பது சரியான முடிவல்ல.சிலர் எதற்கு எடுத்தாலும் சொல்வார்கள் எங்கன்ட சனத்தைப்பற்றி தெரியும்தானே அதுகளோடு வாழ ஏலாது எண்டு....எங்கன்ட சனத்தோட வாழ முடியாதவன் வேறு எந்த சனத்தோடும் வாழமாட்டான்.... :D.... த கிரேட் தமிழன்டா

ரகுநாதனின் பதிவை பார்க்க சிரிப்பாக இருந்தது .

எதிலும் ஆணித்தரமாக இருப்பவர்களால் தான் சாதிக்க முடியும் .அது புலி ஆதரவாளர்களாக இருக்கடும் அல்லது எதிர்பாளர்களாக இருக்கட்டும் .இரண்டுக்கும் இடையில் அல்லாடுபவர்கள் வெறும் பச்சோந்திகள் .இவர்கள் எதற்கும் தலையாட்டுவார்கள் .

கனடாவில் படித்த சமூகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பலர் (உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் சிவில் அமைப்பு ) இதைதான் செய்கின்றார்கள் .இவர்களுக்கு என்று ஒரு கொள்கை அபிப்பிராயம் இல்லை .இவர்கள் பாசை எது நடந்தாலும் மௌனம்தான்

நாட்டிற்காக போராட வந்தவர்களை அழிக்கும் போதும் மௌனம் அமிர்தலிங்கத்தை புலிகள் சுடும் போதும் மௌனம் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் போதும் மௌனம் உலகம் புலிகளை தடைசெய்யும் போதும் மௌனம் பின்னர் புலிகள் அழியும் போது மௌனம் .

யாழில் என்னை எவ்வளவு கேவலமாக் பலர் திட்டினாலும் அவர்கள் பிழையாகவேனும் ஒன்றை நம்புகின்றார்கள் என நினைப்பேன் .இரண்டுக்கும் இடையில் வேஷம் போடுபவர்களை எந்த நாளும் நம்ப மாட்டேன் .

அவர்கள் அதுவும் சரி என்பார்கள் இதுவும் சரி எனபார்கள் .

இனிய திருமண வாழ்த்துக்கள்! பதினாறும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்க நகுலன் தம்பதியினர்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதுவுமே சாதிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் அதி தீவிர புலியெதிர்ப்பாளராகவிருந்து இதுவரை சாதித்தவற்றைக் கூறுங்கள். நான் பச்சோந்தியாக இருந்தாலும் ஒருபோதும் உங்களுக்குத் தலையாட்டப் போவதில்லை. உங்களுக்கிருக்கும் கொள்கையுடன் ஒப்பிடும்போது அப்படியொரு கொள்கையில்லாமலிருப்பதே எவ்வளவு மேல் என்று நினைக்கிறேன். 

 

புலிகள் செய்தவற்றை நான் எல்லாமே சரியென்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மக்களுக்காகப் போராடப் போகிறோம் என்று கூறிக்கொண்டு கழகத்திற்கு வந்த தோழர்களையே உள்வீட்டுப் பிரச்சினையில் கொன்று தள்ள்விட்டு வீதியில் வீசியவர்களைப் புலிகள் கொன்றபோது நான் சரியென்றுதான் கூறினேன். அதுமட்டுமல்லாமல் சொந்த மக்களுக்காகப் போராட வெளிக்கிட்ட நீங்கள் அந்தச் சொந்த மக்கள் மாலைதீவில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டது தவறென்றும் நினைக்கிறேன்.

 

புலிகள் அழியும்போது மெளனம் காத்தேனா?? நல்ல விடயம், ஆனால் ஒரு வித்தியாசம் என்னெவென்றால், நான் மெள்னம் காத்த அதேநேரம் நீங்கள் விழாக் கொண்டாடினீர்கள். 

 

நீங்கள் நம்பவேண்டும் என்று யார் அழுதார். அதுமட்டுமல்லாமல் நீங்கள் சரியென்று நினைப்பதெல்லாம் உண்மையில் சரியாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒன்று கட்டாயமில்லையே.

 

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதனின் பதிவை பார்க்க சிரிப்பாக இருந்தது .

எதிலும் ஆணித்தரமாக இருப்பவர்களால் தான் சாதிக்க முடியும் .அது புலி ஆதரவாளர்களாக இருக்கடும் அல்லது எதிர்பாளர்களாக இருக்கட்டும் .இரண்டுக்கும் இடையில் அல்லாடுபவர்கள் வெறும் பச்சோந்திகள் .இவர்கள் எதற்கும் தலையாட்டுவார்கள் .

கனடாவில் படித்த சமூகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பலர் (உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் சிவில் அமைப்பு ) இதைதான் செய்கின்றார்கள் .இவர்களுக்கு என்று ஒரு கொள்கை அபிப்பிராயம் இல்லை .இவர்கள் பாசை எது நடந்தாலும் மௌனம்தான்

நாட்டிற்காக போராட வந்தவர்களை அழிக்கும் போதும் மௌனம் அமிர்தலிங்கத்தை புலிகள் சுடும் போதும் மௌனம் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் போதும் மௌனம் உலகம் புலிகளை தடைசெய்யும் போதும் மௌனம் பின்னர் புலிகள் அழியும் போது மௌனம் .

யாழில் என்னை எவ்வளவு கேவலமாக் பலர் திட்டினாலும் அவர்கள் பிழையாகவேனும் ஒன்றை நம்புகின்றார்கள் என நினைப்பேன் .இரண்டுக்கும் இடையில் வேஷம் போடுபவர்களை எந்த நாளும் நம்ப மாட்டேன் .

அவர்கள் அதுவும் சரி என்பார்கள் இதுவும் சரி எனபார்கள் .

 

நீங்கள் இன்னும் சரியான படித்த கூட்டத்தை கனடாவில் சந்திகாதது அதிசயம் தான்.பலர் இருக்கிறார்கள்.உங்களீன் புளுக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு கேள்வி. யாழ் மாவட்டத்தில் புலிகளூக்கு கேடில்ஸ்  தென்மராட்சி இராணுவ பொறுப்பாளராக இருந்த அதே நேரம் புளட்டுக்கு தென்மராட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் யார்? அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா? போன்ற விபரங்களை உங்களால் தர முடியும் எனின் உங்களுடன் விவாதிக்க ஒரு சின்ன துரும்பை அனுப்புகிறேன். ஏனெனில் உங்களின் புளுகு மூட்டைகளை தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நகுலனுக்கு திருமண வாழத்துக்கள்!!!!!

அர்ஜுன் அண்ணன்,  ஒன்றை விளங்க வேண்டும்ஆரம்பத்தில் ஆயிரக் கணக்கில்  இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்ததும், சனம் அமோக ஆதரவு தந்ததும், சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான். இயக்கச் சண்டைகளுக்கு விளக்குப் பிடிப்பதற்கல்ல. அதைவிட இயக்கத் தவறுகளைக் கண்டித்திருந்தால், இயக்கங்களின் துப்பாக்கி மக்களை நோக்கித் திருப்பப் பட்டிருக்கும்.  

 

எந்த இயக்கமாக இருந்தாலும் விமர்சனங்களை ஏற்கும் நிலையில் இருக்கவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறதுதொண்ணூறு வீத பேரினவாத குழுவிற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட வெறும் பத்து வீத இனக் குழுமத்திற்கு என்ன மயிரிற்கு 32 இயக்கங்கள். ஆரம்பமே பிழை. ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சிங்களவன் முள்ளிவாய்க்காலில் உணர்த்தியும், இன்னும் திருந்தியபாடாய்த் தெரியவில்லை.

 

தேசியப் பூசாரிகளுக்கு தாங்கள் சொல்வதுதான் சரிஎன்ற நினைப்புமாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கு தங்கட மூக்கு அறுபட்டாலும் எதிரிக்கு சகுனப் பிழையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை. இந்தப்போக்கு இன்னும் இன்னும் தமிழர்களிற்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முடியுமே தவிர விடுதலை பெற்றுத் தராது.  

 

ஆணித்தரமான ஆரோக்கியமான விமர்சனம் என்பது வேறு. வன்மம் பாராட்டிக் கொண்டு சண்டையைத் தொடர்வது என்பது வேறுஅழிவில்தான் முடியும். முடிந்தது. பலாலியில் இருந்த ஆமியை படலைக்குள் கொண்டு வந்து விட்டிருக்கிறது. நந்திக் கடலோரம், கோவணத்துடன் முள்ளிவாய்க்காலில் வெள்ளி பார்த்தது ஈழத் தமிழனின் தனித் தாயகக் கனவு.

 

பாவற்குளத்தில் 500 அடி புத்தர் சிலை வைக்கும் பொழுதும் சண்டை பிடிக்கிறீர்கள், நாமல் ராஜபக்க்ஷ 'யாப்பண பட்டுவ' வின் முதல்வராகப் பதவி ஏற்கும் பொழுதும்நீ சரியா நான் சரியா என்று சண்டை பிடிப்பீர்கள்.  இதுதான் தமிழனின் தலைவிதி.

 

நேரமின்மையால், ஆழ்ந்த கவலையுடன் 'நமோ நமோ தாயே' வணக்கம் பாடி இத்துடன் முடிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் திருமணம் புரிந்ததால் புலிகள் கடும் கோபம்?

 

செய்தி  இது தான்

இது புலம் பெயர் தமிழர் அவரில் கோபமாக உள்ளனர் என்று சொல்கிறது

ஆனால் இங்கு கருத்து எழுதிய  எவரும் கோபமாக எழுதவில்லை

மாறாக வாழ்த்துச்சொல்கின்றனர்

 

சிங்கள பத்திரிகையில் வந்த எமக்கு எதிரான செய்திக்கு நாம் பலரும்  அடித்துக்கொள்வது

எமது அரசியல் அறிவின்மையையே  எடுத்துரைக்கிறது.........

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் தொடர் போராட்டங்கள் சிங்கள இனவாத அரசிற்குக் 

கண்ணுக்கை குத்திக் கொண்டிருக்கின்றது . எப்படியாவது ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமிடையில் 

பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களது  நோக்கம்.

அந்தவகையில் இப்படியான செய்திகளுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பது இயல்பே 

 

திருமண பந்தத்தில் இணைந்த நகுலனுக்கு வாழ்த்துகள்   

இனிய திருமண வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்

News: புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் திருமணம் புரிந்ததால் புலிகள் கடும் கோபம்?

Sundal: ஆ அப்புறம்?

சுண்டல் ... ஆ அப்புறம் ...

news ............குறுக்கு கேள்வி கேட்ககூடாது . :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.