Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் ஒரு புலி - ஒன்று

Featured Replies

 

1984ம் ஆண்டு!

 நாம் உயர்தரம் படிக்க ஆரம்பிக்கின்றோம்.

 சுற்றியிருந்த கிராம, சமூக, பிரதேச, தேச.. சுழல் எதாவது ஒரு இயக்கத்தில்சேர நம்மை ஊந்தியது. ஆகவே ஒரு இயக்கத்தில் இணைந்து கிராம மட்டத்தில்செயற்பட ஆரம்பிக்கின்றோம்.

 ம்…இது இன்னுமொரு கதை…அதை விரிவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்….

 1986ம் ஆண்டு ஆரம்பம்….

எனக்கு டெலோவிலும் புலிகளிலும் ஆரம்பம் முதலே விருப்பமில்லாமல் இருந்தது.

பொபி தாஸ் பிரச்சனையில் தாசுக்கு ஆதரவாக முத்திரச்சந்தியில் ஊர்வலம் சென்ற மக்கள் மீது டெலோ இயக்கம் சுட்டது. இது அவர்கள் மீது மேலும் வெறுப்பை உருவாக்கியது. இது போதாது என்று…

ஒரு நாள் யாழ் ஆஸ்பத்திரி முன்னாலிருந்த பொன்ட் தனியார் நிலையத்தில் வகுப்பு முடிந்து மதியம் இரண்டு மணிக்குப் பின் அதிலிருந்த உணவகம் ஒன்றில் இடியப்பமும் பருப்பு சாப்பிட்டு ஆஸ்பத்திரி வீதியால் நடந்து செல்கின்றேன்….

ஆஸ்பத்திரிக்குள் இருந்து தீடிரென வெடிச் சத்தங்கள் கேட்டன…

நெஞ்சு ஒருக்கா படக் படக் என்று அடித்து அமைதியானது. இவ்வாறு சத்தங்கள் கேட்பது வழமைதான்… ஆனால் ஆஸ்பத்திரிக்குள் இருந்து வந்ததே புதுமையாக இருந்தது… ஏனெனில் ஆஸ்பத்திரிக்குள் யாரும் ஆயுதங்களுடன் செல்லக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது… நான் நகரில் தொடர்ந்தும் நிற்காமல் வீட்டுக்கு சென்றேன். இப்படித்தான் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக வீட்டுக்கு செல்வதற்கான வழியைத் தேடுவோம். சிலநேரம் நின்று பார்ப்போம். என்ன நடக்கின்றது என்பதை அறிய…..

ஆஸ்பத்திரிக்கு தாஸ் குழுவினரை உரையாட அழைத்த பொபி குழுவினர் மறைத்து வைத்த ஆயுதங்களால் சுட்டனர் என்ற செய்தி அடுத்த நாள் வெளிவந்தது.

இதேபோல் நாம் செயற்பட்ட இயக்கத்திற்குள்  அக முரண்பாடுகள் மற்றும் அராஜகசெயற்பாடுகள் நடைபெறுவதை அறிகின்றோம்.சுதுமலையில் நான்கு புலிப் போராளிகளைக் கொலை செய்தது முக்கியமான முரண்பாடாக உருவெடுக்கின்றது.இதை ஏற்கனவே அறிந்திருந்த நமது பொறுப்பாளர் நாம் எவ்வளவு கேட்டும் நம்மை இந்தியப் பயிற்சிக்கு அனுப்ப உடன்படவில்லை.

நண்பர்கள் ம1, பி. ,சி, 1, 2, 2, மற்றும் நானும்இயக்க உள் முரண்பாடுகளாலும் அதன் தவறான போக்காலும் இயக்க செயற்பாடுகளிலிருந்துதுங்கிப் படிக்க ஆரம்பிக்கின்றோம்.

 

 

இதில் நண்பர்கள் ம1, பி, சி ஆகியோர் ஏற்கனவே பல்கலைக்கழத்தில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். நண்பர் ர 86ம் ஆண்டு உயர்தரப் பரிட்சையை எடுப்பதற்காகப் படிக்கின்றார். கடுமையாக படிக்கின்றார் என எழுத முடியாது. ஏனெனில் அவர் திறமையானவர்.

நண்பர்கள் அ1 உம் அ2 உம் 86ம் ஆண்டு பரிட்சையை எடுக்காது 87ம் ஆண்டு எடுப்பதற்காக படிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
நான்  முதலாம் தரம் சித்தியடைய மாட்டேன் எனத் தெரிந்தும் ஒரு அனுபவத்திற்காக 86ம் ஆண்டுப் பரிச்சையை எடுப்பதற்குப் படித்துக் கொண்டிருக்கின்றேன்.

நாவற்குழி பாலத்தடியில் இராணுவ முகாம் இருந்தபடியால்,   யாழ் நகரிலிருந்த மாஸ்டர்ஸ் இன்சிடிடீயூட் தனியார் வகுப்புக்குப் போவதற்காக, நாம் கைதடி வெளியால் கோப்பாய் சந்தி ஊடாக  சைக்கிளிலில் செல்வது வழக்கம்.

இன்றும் அவ்வாறே யாழ் நகர் சென்று கொண்டிருக்கின்றோம்.

புலிக்கும் டெலேவிற்கும் பெரும் மோதல் நடைபெறுகின்றது என காதுவழி செய்திகளை யாழில் இருந்து வருகின்றவர்கள் சொல்லிக் கடந்து செல்கின்றனர்….
நமக்கும் யாழ் நகர் பக்கமாக இருந்து சாராமாரியான சுட்டுச் சத்தங்கள் கேட்கின்றன..

நாம் யாழ்-பருத்துறை வீதியால் சென்று கொண்டிருக்கும் பொழுது கல்வியங்காட்டுக் பக்கமாகப் போக முடியவில்லை. போவதற்கு விடவில்லை… ஆகவே குறுக்கு வழியால் சென்று ராச வீதியால் யாழ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

ஆடியபாதம் வீதிக்கு அருகில் வரும் பொழுது ஆங்கிலப்படம் பார்த்ததுபோல் இருந்தது.
புலிப் போராளிகள் அந்த சந்தியிலிருந்து  கல்வியங்காட்டில் இருந்த டெலோவின் முகாமைத்தாக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் அதனைப் பார்வையிட்டுவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் திண்ணவேலி சந்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். போகின்ற வழியில் சந்தி ஒன்றில் புலிப் போராளிகள் இரண்டு டெலோப் போராளிகளை டயர் போட்டு   உயிருடன் எரித்துக்கொண்டிருந்தார்கள்.
நம் மனதுக்குள் கோவம் இருந்தபோதும் ஒன்றும் கதைக்க முடியாது.  நாமும் சனங்களைப் போல அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தடுக்காது அமைதியாகக் கடந்து செல்கின்றோம். யாழ் நகரை அடைந்தபோது, அங்கு வானத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் றெலியிலிருந்து   சுட்டுக்கொண்டிருந்தது. நாம் நமக்குள் அடிப்படுகின்ற செய்தியைக்  கேட்டு மகிழ்ச்சியில் மேலிருந்த சுட்டார்களா அல்லது தம்மைத் தான் தாக்குகின்றார்கள் எனத் தெரியாது பயத்தில் சுட்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் அவர்கள் சுட்டது பொதுமக்கள் மீது.

இதனால் தனியார் வகுப்புகள் மூடப்பட்டன.
வீதிகளில் புலிப் போராளிகளின் நடமாட்டம் மட்டுமே அதிகமாக இருந்தது.
இதைப் பார்ப்பதற்கு நம் மனதுக்குள் பயமாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்ட நம் தன்முனைப்பு விடவில்லை. ஏனெனில் அவர்களை நோக்கிய ஒரு எதிர்ப்புணர்வு நமக்குள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.
பழைய பூங்கா வீதியில் ஒரு வாகனத்தில் தப்பி சென்று கொண்டிருந்த கிழக்கு மாகாண டெலோப் பொடியளை குண்டு வைத்து தாக்கியதில் அவர்களது தசைகள் அந்த அடர்ந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றதாம் என சனங்கள் கதைக்க ஆரம்பித்தார்கள்….
நாம் யாழ்  நகரில் நிற்பது நல்லது அல்ல என நினைத்து மீண்டும் வீடு நோக்கி சென்றோம்.

ஆனால் தொடர்ந்து படிப்பதை மட்டும் கைவிடவில்லை நாம்.

அப்பாவின் நண்பரும் ஈபிஆர்எல்எவ் ஆதரவாளருமான பொறியியளார் வேந்தனின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்து  உயர்தரப் பரிட்சைக்காகப் படித்து 1986ம் ஆண்டு பரிட்சை எடுத்தேன்.

பின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றோம். ஒரு நாள் பரிட்சை முடிவுகள் வந்தன…..

நண்பர் ர நான்கு பாடங்களிலும் சித்தியடைந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவானார்.

நான்  எதிர்பார்த்ததுபோல் இரண்டு பாடங்களில் மட்டும் சதாரண சித்தியடைந்திருந்தேன். ஆனால் கவலைப்படவில்லை.
தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற விருப்பம்…. ஆனால் வீட்டில் கஸ்டம்….நாம் இப்பொழுதும் அகதிகளாக நாவற்குழி கடற்கரை ஓரமாக சுடலைக்கு அருகிலிருந்த கோயில் காணியில் கொட்டில் ஒன்று போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்….

அப்பா இவ்வளவு காலமும் வேலை இல்லாமல் இருந்து இப்பொழுதான் ஈபிஆர்எல்எவ் இயக்கத்திடம் வேலைக்குச் செல்கின்றார்..
ஆகவே நானும் வேலை செய்து கொண்டு படிப்போம் என யோசிக்கின்றேன். ஆகவே நண்பர் மு விடம் ஒரு வேலை எடுத்து தரும்படி கேட்டேன். இவர் தனது நண்பரின் கடையில் விசாரித்து பில் கிளார்க் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

ரவி அன் ராஜ் கடை முதலாளிக்கு கஸ்துரியார் வீதியில் ஒரு சாப்பாட்டுக் கடை இருந்தது. அதில் ஒரு வெள்ளிக்கிழமை நான் வேலைக்குச் சேர்ந்தேன். பில் கிளாக் என்று தான் சேர்ந்தேன். ஆனால் சர்வர் வேலை செய்யும் படி கேட்டார்கள். மறுப்பின்றி செய்தேன். அன்று மாலை நான் கனவு கண்டபடி நான் (ஒரு தலையாகக்) காதலிக்கும் பெண் தனது நண்பியுடன் வந்தார். எனக்கு ஒரு பக்கம் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம். மறுபக்கம் தயக்கம்! வெட்கம்!. அதானல் ஒதிங்கி நின்று முதலாளியின் கண்ணுக்கும் படாமல் அவரைக் களவாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்..

மரக்கறி உணவகம் என்றபடியால் வாடிக்கையாளர்கள் நிறைந்த நாள். ஓடியாடி வேலை செய்து களைத்துப் போய்விட்டேன். இப்படி வேலை செய்து கொண்டு படிக்க முடியாது என உணர்ந்தேன். முதலாளியிடம் சென்று எனது பிரச்சனையைக் கூறினேன். அவர் தனது ரவி அன் ராஜ் புடவைக் கடையில் தனது மகனின் கீழ் வேலை செய்ய சேர்த்துவிட்டார். அங்கு ஒரு மாதம் வேலை செய்தேன்.

நாவற்குழியலிருந்து சைக்கிளில் வந்து வேலை செய்து கொண்டு பின் படிப்பது சாத்தியம் எனத் தோன்றவில்லை. இப்படியே தொடர்ந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என யோசித்து விட்டு ஒரு மாத சம்பளத்தையும் பெறாமல் முதலாளியிடம் சொல்லாமல் நின்று விட்டேன். இதன் பின் படிப்பதில் முடிழுமையாக கவனம் செலுத்தினேன்.

அப்பா ஈபிஆர்எல்எவ்வில் வேலை செய்ததால் நாம் யாழ் நகருக்கு குடிபெயர்ந்தோம். யாழ் கன்னியர் பாடசாலைக்கு அருகிலிருந்த பேக்கரி லேனில் ஒரு மாடிவிட்டின் மாடியில் குடியிருக்க ஆரம்பித்தோம். இக் காலங்களில் நாம் மூன்று நேரமும் ஒழுங்காக சாப்பிட உணவு கிடைத்தது.

ஆனால் கஸ்டத்திற்கு நாம் நன்றாக சாப்பிடுவது பொறுக்க முடியவில்லைப்போல. நமக்கு மீண்டும் கஸ்டம் வந்தது….

ஏன்?

 
தொடரும்....
மீராபாரதி

Edited by meerabharathy

  • Replies 103
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனக்க எழுத்துப் பிழைகள் இருக்குது அண்ணா, கவனத்தில் எடுங்கள்.

  • தொடங்கியவர்

நன்றி மன்னிக்கவேண்டும்....

வீட்டுக்குப் போனவூடன் திருத்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கும் டெலேவிற்கும் பெரும் மோதல் நடைபெறுகின்றது என காதுவழி செய்திகள் வருகின்றன....

யாழ் நகரில் சாராமாரிறயாக சுட்டுச் சத்தங்கள் கேட்கின்றன..

 

 

"ரெலோவை புலிகள் அடித்த போது யாழ் நகரில் சரமாரியான சுட்டுச் சத்தங்கள்" என்பதை நம்ப முடியவில்லை.

 

ரெலோ - புலிகள் சண்டையில் பிரதான இடம்பிடித்தது கள்வியங்காட்டுப் பகுதியில் நடந்த சண்டை. சிறீலங்கா விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் அங்கு தான் ரெலோவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தின..!

 

அதேவேளை சாவகச்சேரி.. நுணாவில் பகுதிகளிலும் ரெலோ  புலிகளோடு மோதி அழிவுகளைச் சந்தித்தது.

 

புலிகள் மட்டுமல்ல.. ரெலோவும்.. யாழ் நகரின் அண்மையில் உள்ள கல்லூரி வீதியின் நீராவியடிக்கு அருகில் உள்ள கோவில் பின் வீதியில் 4 புலிப் போராளிகளின் வெற்றுடலங்களைக் கொண்டு வந்து ரயர் போட்டு எரியூட்டி விட்டுச் சென்றனர். அந்த அடையாளம் பல ஆண்டுகளாக இருந்தது..!

 

ஒரு வரலாற்றுப் பதிவை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி எழுதும் போது.. கூடிய அளவு உண்மைகளை உரைக்க முயல வேண்டும்.

 

பொபி.. தாஸ் ரெலோ உள் சண்டை தான் யாழ் நகரில் நடந்தது. ரெலோ.. புலிகள் சண்டை யாழ் நகரில் அவ்வளவாக நடக்கவில்லை. அதற்கு வெளியில் தான் நடந்தது. அதுவும் புலிகள் ஒலி பெருக்கிகளில் சரணடையச் சொல்லி அறிவிப்புக்கள் வழங்கிய போதும் ரெலோ வலிந்து சண்டைக்குப் போனது..! :icon_idea:

 

இந்த ஆக்கம் யாழுக்கான இன்னொரு மெட்ராஸ் கபே ஆகாமல் இருக்கப் பார்த்துக் கொண்டால் நல்லம்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னர் ரெலோவின் முகாமுக்கு பேச்சுவார்த்தைக்குப் போன கப்டன் லிங்கத்தை கேள்வியில்லாமல் சுட்டுக் கொன்றது ரெலோ.. பின்னர் எங்கள் ஊரில் எல்லாம் புலியை தேடித் திரிந்தார்கள்.. புலி ஒளித்துத் திரிந்தது..

பிறகு தேடித்திரிந்த ரெலோவை புலி முடித்துவிட்டது.. இதில் பெரும் சோகம் மெட்ராஸ் கஃபே காரருக்குத்தான்..!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்........  எழுத்துப் பிழைகளை  கவனத்திலெடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலும்.. தேசம் பாணியில் தேச விரோத சக்திகளை தேசப் பிதாக்கள் ஆக்க சிலர் முயற்சிக்கிறார்கள் போலத் தெரிகிறது.

 

மக்களின் அழிவை.. புலி அழிவாகக் கொண்டாடுபவர்கள்.. ரெலோவை புலிகள் அழித்ததாக அழுபவர்கள்.. மீண்டும்.. அந்நியப் படைகளோடு வந்து நின்று..கொண்டு  மக்களை.. தேசத்தை.. அழித்தவர்கள்... அழிக்கின்றவர்கள்.. (இன்றைய சிறீ ரொலோவின் பயங்கரவாதம் இதற்குச் சாட்சி...) இதையே அன்று செய்ய முற்பட்டு புலிகளால் தண்டிக்கப்பட்டார்கள். அன்று இவர்கள் தண்டிக்கப்படாமல் விட்டிருந்தால்.. எமது போராட்டம் 30 வருடங்களுக்கு முன்னரே அழிந்து போயிருக்கும்..!

 

சிறி தாஸ் பொபி.. சண்டையில்... சிறீ சபாரட்ணத்தால்.. கொல்லப்பட்ட தாஸ், பீற்றர், காளி, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், லிங்கம் ஆகியோருக்கும் ஏன் அஞ்சலி செய்வதில்லை..!!! அவர்கள் என்ன சிறி ரெலாவா..  அல்லது செல்வம் ரெலோவா..????????! அல்லது புலிகளா..???!

 

இதில.. யாழ் களம்.. சரி நிகர் கணக்கா...?????????????! சரிந்து கொட்டின்ற பாதையை தேடுதா..????! :icon_idea::rolleyes:

 

மீண்டும் இந்த துரோகிகள்.. முளைவிட்டு.. எமது தேசத்தின் மிச்ச சொச்ச இன அடையாளங்களையும்.. காட்டிக் கொடுத்தே அழிக்கப் போகிறார்களா..???! இவர்கள் பூண்டோடு அழியும் நாளே தமிழினத்திற்கு விடிவுக்கான வேளையாக அமையும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

மீராபாரதி எழுத்து பிழைகளை கவனத்தில் எடுத்து தொடருங்கள் .

இங்கு வானத்தில் இருந்து வைகுண்டம் போபவர்கள் பற்றி அக்கறை பட தேவையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களம் முழுக்க டெரறிஸ்ட்/ டெரறிஸ்ட் பமிலி போலத்தான் கிடக்குது...D பழைய பூங்காக்கு அருகில் அவர்களில் கம்ப் இருந்த்திருக்க வேண்டும்.(ஓல்ட் பார்க் ரோட் இல்) முறிந்த பருத்த மரங்களையும், அதில் தொங்கிய ராயர்/ சைக்கிள் பார்த்த ஞாபகம் இருக்கு. அந்த இடத்தில் இருந்த காரியும், சுவரில் இருந்த உடைவுகளும் பல காலம் இருந்தது..பிற்காலத்தில் அது ஒரு சைனீஸ் ரெஸ்டாரெண்ட் ஆக இருந்தது. இன்றைக்கு இன்னுமொருவர், புத்தகம் வாசித்து கதை எழுதுகிறவர் என்று தன்னையறியாமல் வெளிவந்தார். டெலோவை புலி சரணடைய சொன்ன நாடகம் எந்த உலகத்தில நடந்தது என்று சொன்னால் நன்றாக இருக்கும்..:), டெலோவிக்கு சப்போடாக ஸ்ரீ லங்கன் ஹெலி....ஐயோ ஐயோ ... மற்றது யாழில் எழுதுபவர்கள் விதனையிடம் சத்திய கடுதாசி எடுத்து போட்டு எழுதினால், கதை கட்டுரை எழுதும் நண்பர்கள்/ அன்பர்களின் கொசுத் தொல்லை குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள், மீராபாரதி!

 

பக்கச் சார்பு நிலையேதும் எடுக்காமல், நடந்த நிகழ்வுகளை நீங்கள் எழுதுங்கள்!

 

முடிவுகளை வாசகர்களிடம் விட்டு விடுங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி, உங்கள் திரியை பூட்ட வைக்கிற அளவுக்கு.... எழுத்துக்களை கையாளாதீர்கள்.
இது, எச்சரிக்கை அல்ல... "அட்வைஸ்". :D  :lol:  :icon_idea:

பகுத்தறிந்து வாசிக்கும் பக்குவம் பெரும்பாலான யாழ் உறவுகளிடம் இருக்கின்றது.

தயக்கமில்லாமல் தொடருங்கள்....! ஆனால், உண்மையை உண்மையாய் எழுதுங்கள்! :)

அனுபவப் பகிர்வு தொடரட்டும்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திறனாய்வு, மீள் பரிசோதனை, சுய விமர்சனம், மீளாய்வு, அசை போடல் etc..etc..என்று முடியும்?

வட்டத்தை விட்டு வெளிவருவது எப்போது? ஈழத்தமிழர்களின் தாகம் தீர்வதும் எப்போதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

 டெலோவிக்கு சப்போடாக ஸ்ரீ லங்கன் ஹெலி....ஐயோ ஐயோ ... மற்றது யாழில் எழுதுபவர்கள் விதனையிடம் சத்திய கடுதாசி எடுத்து போட்டு எழுதினால், கதை கட்டுரை எழுதும் நண்பர்கள்/ அன்பர்களின் கொசுத் தொல்லை குறையும்.

 

நிஜமாகவே ஊரோடு வாழ்ந்து.. நேர்மைத் திறனும் இருந்தால்.. யார் யாரின் பேச்சைக் கேட்டு யார் யாரைத் தாக்கப் போய் சரணடையும் நிலைக்கு வந்தார்கள் என்பதை வரலாறு சொல்லும்.

 

மெட்ராஸ் கபே இயக்குனர்கள் போன்ற ஒரு சிலர் இந்த உலகில் வாழ்கின்றனர். யாழிலும் அவர்கள் உள்ளனர்.

 

இவர்கள் செய்ய வேண்டியது இப்போது கள்வியங்காட்டில் வசிக்கும் அன்றைய ரெலோ ஆதரவு மக்களை சந்திக்க வேண்டியது.. உண்மைகள் என்ன என்பதை அறிய வேண்டியது.. அதன் பின் தங்களின் புலி விரோதத்தை வாந்தி எடுப்பதா இல்லையா என்பதை இதய சுத்தியோடு தீர்மானிப்பது.

 

யாழ் களத்தில்.. 1985 காலத்திலேயே வாழும் ஒரு சில வாந்திவாதிகளால்.. வரலாறு திரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

 

அன்றைய காலத்தில் புலிகளை இலக்கு வைத்து ரெலோவுக்கு சார்ப்பாக.. சிறீலங்கா படைகள் செயற்பட்டன. அதற்கு முன் புலிகளை இலக்கு வைத்து றோ ரெலோவை இயக்கியது. அப்புறம் சிறீலங்காப் படைகளுக்கு சார்ப்பாக டெலோ செயற்பட்டது. ரெலோவை அதன் கடும்போக்கு வாதிகளிடமும் சிறீசபாரட்ணம் போன்ற சந்தர்ப்பவாத தலைமைகளிடமும் இருந்து காப்பாற்றி..மக்கள் விரோத தவறான வழியில் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்து புலிகளோடு நெருங்கச் செய்து மக்களுக்காக உழைக்க முன் வந்த பெருமை.. செல்வம் போன்ற ஒரு சிலரைச் சாரும்.

 

ரெலோ.. புளொட்டு.. ஈபி (இவர்கள் மக்களுக்காக எதுவும் வெட்டி விழுத்தேல்ல. தங்கள் வயிற்றுப் பாட்டுக்கு ஆயுதம் தூக்கிட்டு அசைலம் அடித்ததும் எதிரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அவர்களுக்காக சொந்த மக்களை வேட்டையாடியதுமே... செய்த சாதனைகள்..!) சரணடைவுகள்.. இந்தியப் படைகளின் பின்னான ஒட்டுக்குழு (எல்லாம் செய்தா கலவை) சரணடைவுக்கள் பற்றி ஒட்டுக்குழுக்களே கதை பேச வெளிக்கிட்டால்.. வரலாறு இப்படித்தான் ஆகும்..! இதை தான் அவர்கள் இத்தனை ஆண்டுகளும் மாற்றுக் கருத்தாக பதிந்தும் வருகிறார்கள். ஒட்டுக்குழுக்களின் வாழ்வில்.. புலிகள் தான் முதன்மை எதிரிகள்..! தமிழ் மக்கள் இரண்டாம் எதிரி...! அவர்களின் போராட்ட இலட்சியம் எதிரிகளுக்காக புலிகளை தமிழ் மக்களை அழிப்பது.

 

இவர்களிடம் போய் நாங்கள் உண்மையைப் பேச முடியாது. துப்பாக்கியை நீட்டுவார்கள். இல்ல வசவை ஆரம்பிப்பார்கள். யாழிலும் இப்போ அதையே செய்ய முற்படுகிறார்கள். யாழ் வரலாற்றுத் திரிபுகள் அடங்கிய ஒட்டுக்குழு ஊடகமாவது ஜனநாயம் அல்ல.! தொடரும்.. தமிழின சாபக்கேடுகளில் ஒன்று...! தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் பிரயோசனமற்ற ஒட்டுக்குழு கதைகளும் கட்டுரைகளும் மக்களுக்கு சாதித்தவை என்றால்.. துரோகத்தை ஊட்டி வளர்த்ததை தவிர.. எதிரிக்கு பாதம் நக்கியதை தவிர வேறு எதுவும் இல்லை. அப்படியான மனோநிலையில் உள்ளவர்களிடம்.. கீதையை கிருஷ்ணனாலும் போதிக்க முடியாது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த திறனாய்வு, மீள் பரிசோதனை, சுய விமர்சனம், மீளாய்வு, அசை போடல் etc..etc..என்று முடியும்?

வட்டத்தை விட்டு வெளிவருவது எப்போது? ஈழத்தமிழர்களின் தாகம் தீர்வதும் எப்போதோ?

 

 

நல்லதொரு கேள்வி, குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இருக்கும் வரை கஷ்டம், தங்களும் இருக்கிறம் என்பதை நினைவுபடுத்த இப்படிப்பட்ட பதிவுகள் தேவை, ஆக்கபூர்பமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இவர்களிடம் இருப்பது பூச்சிய நிலை, ஆனா உலக அரசியல் கரைத்து குடித்த வின்னார்கள். தாளம்போட பலர். எங்கே இவர்களின் ஒரு பதிவு டாக்கி, கோத்தா இவர்களை பற்றி எழுதியதை பார்ப்போம் அல்லது உலக அரங்கில் தமிழர்களின் அடுத்த நகர்வு.....?????

ஏன் அண்ணை  நான் ஒரு புலி என்று பெயர் வைத்திருக்கிறியள்?
பார்த்தா அப்பிடி தெரியயில்லையே.புலி என்று பெயர் போடாட்டி ஒருத்தரும் வாசிக்க மாட்டினம் என்றோ.

மீராபாரதி தான் புலியில் இணைந்த கதையை எழுத போகிறார்....ஏன் மக்கள் அவதிப்படுகிறீர்கள்?

 

இந்த யாழ் களமே இப்படி என்றால்....... 2006 க்கு முன் ... ம்ம்ம் :)

அப்ப சரி அண்ணை. 

  • கருத்துக்கள உறவுகள்

"நான் ஒரு புலி" என்று சொல்லிக்கொண்டே புலி விரோத.. தேச விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்கள் ஏராளம். அது டக்கிளஸ் கொழும்பில் காசு பறிக்க மேற்கொண்டிருந்த முக்கிய நடவடிக்கைகளிலும் ஒன்று. டக்கிளஸ் வழிநடந்த ஈபியின் வால்கள் தான் இவர்களாக இருக்க முடியும்..! :):icon_idea:

இந்த திறனாய்வு, மீள் பரிசோதனை, சுய விமர்சனம், மீளாய்வு, அசை போடல் etc..etc..என்று முடியும்?

 

ஒருபோதும் முடியாது. ஏனெனில் அதை ஈழத்தமிழர்கள் செய்வதில்லை. இந்த தலைப்புகளில் செய்வதெல்லாம் ஒருவரை ஒருவர் சொறிதல் நுள்ளுதல் கிள்ளுதல் போன்ற சில்லறைத்தனங்களே ! அதில் ஒரு சுய இன்பம் ! சுய விமர்சனம் என்பது  சமூகத்தின் நடுவில் தன்னை நிதானமான நிறுத்தி தன்னில் இருந்து ஆரம்பிப்பது, ஈழத்தமிழரில் நடப்பதும் தொடங்குவதும் தான் 101 வீதம் தூய்மையானவன் மற்றவர் பிரச்சனை என்றுதான். அடுத்தவன் நோக்கிய சுட்டுவிரலை நீட்டுவதுதான். நீ அந்தச் சாதி நான் இந்தச்சாதி, நீ அந்த மதம் நான் இந்த மதம் அந்த ஊர் இந்த ஊர் என்பதன் நீட்சியாக அந்த இயக்கம் இந்த இயக்கம் என்று தொடர்கின்றது. இது மரபணு சார்ந்த உளவியல் பிரச்சனை. இதற்கு முடிவில்லை. இதனால் பலனும் இல்லை.

  • தொடங்கியவர்

நட்புடன் நண்பர்களுக்கு....
உங்களின் ஆதரவான எதிரான நடுநிலையான அவதுhறான அனைத்துக் கருத்துக்களுக்கும் நன்றி....
நேற்று எழுத்துப் பிழைகளை திருத்த முடியவில்லை..
இன்று முயற்சிக்கின்றேன்.....
ஈகலப்பையில் எழுதும்போது பிரச்சனையில்லை..... ஆனால் நான் யூனிக்கோட்டில் எழுதுகின்ற இடத்தில் சிலவற்றை திருத்த முடியாமல் இருக்கின்றது....
அடுத்த பதிவை இயன்றளவூ எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுகின்றேன்....
தமிழ்த் தவறுகளுக்கு மன்னிக்கவூம்.....
நன்றி

Edited by meerabharathy

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஆரம்ப கட்டங்களை நான் நேரில் பார்த்தது கிடையாது. பலர் பலவிதமாக சொன்னதை வைத்து இப்படி இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தான் வர முடிந்தது. 

 

சுருக்கமாக சொன்னால் ஆரம்ப காலங்களில் இருந்த இயக்கங்கள் உத்தமர்கள் என்று சொல்லிவிடமுடியாது. சிலர் குறைவாக தப்பு செய்தனர், சிலர் அதிகமாக செய்தனர். இதில் இங்கு பலர் உடன்படுவீர்கள் என நினைக்கின்றேன். இதில் யார் செய்தது சரி பிழை என்பது பற்றிய ஆராய்ட்சியை தவிர்க்கலாம். இந்த ஆராய்ட்சி தற்பொழுது உள்ள காலத்திற்கு ஏற்ற சிந்தனையல்ல. 

 

பல இயக்கங்கள் இதிலிருந்து விடுபட்டு அடுத்த நகர்விற்கு அடியெடுத்து வைத்தார்கள். ஆனால் சில இயக்கங்களை பொறுத்த வரை அவர்களின் வாழ்க்கை கடிகாரத்தில் காலம் இந்த சம்பவங்களுடன் நின்றுவிட்டது. அதனை தாண்டி அவர்கள் வர மறுக்கிறார்கள். 

 

வேற்றுமை ஆயிரம் இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான ஒரு சந்திப்புப்புள்ளி உள்ளது என்பதை மறந்துவிட்டோம். அந்த புள்ளி தான் தமிழீழம்! 

அனைத்து இயக்கங்களும் இந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவை தான் (அப்படி இல்லாவிடின் அறியத்தரவும்). புலிகள் இல்லாத இந்த காலத்தில் எந்த இயக்கம் தமிழீழக்கொள்கையை நோக்கி பயணிக்கின்றது? அந்தப் பயணம் ஆயுதப்போராட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல.

 

தமிழீழம் என்பது தற்பொழுது (அல்லது எப்பொழுதுமே) தேவையில்லை என்று சொல்லும் இயக்கங்கள் ஐனநாயகம் பற்றி வாய்கிளிய பேசுவார்கள். ஆனால் தமிழீழம் தேவையா இல்லையா என்பதையே ஐனநாயக ரீதியில் முடிவெடுக்க (பொதுவாக்கெடுப்பு மூலம்) இவர்கள் முன்வருவார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழீழம் தேவையில்லை என்று முடிவாகும் பட்சத்தில் அதன் பின்னர் யாரும் (அல்லது என்னை போன்றவர்கள்) இங்கு தமிழீழம் பற்றி வாய்திறக்கப்போவதில்லை. 

 

இப்பொழுதும் அவர் இவரை கொன்றார், இவர் அவரை கொன்றார் என்று பேசும் நாம் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற சிங்களவனை மன்னித்து அவனுடன் சேர்ந்து வாழ்வது சரி என்போம். நண்பரை ஒரு இயக்கம் கொன்றுவிட்டது என்பதற்காக  அந்த இயக்கத்தை வெறுக்கும் போராளிகளே, இத்தனை லட்சம் உங்கள் சொந்தங்களை கொன்றவனை நீங்கள் எப்படி மன்னிக்கமுடிந்தது? அவர்கள் இல்லாவிட்டால் என்ன? நான் எடுக்கின்றேன் தமிழீழ கோரிக்கயை என்று ஏனைய இயக்கங்கள் பயணிக்கவேண்டாமா? 

 

"காலம் அனைத்து காயங்களையும் மாற்றிவிடும்" என்று எங்கேயோ படித்த ஞாபகம். தயவுசெய்து அந்த காயத்தை மீண்டும் மீண்டும் சொறிந்து புதிப்பிக்க வேண்டாமே. அந்த காயம் தந்த வலிகள் கொடுமையானவையாக இருக்கலாம். ஆனால் அதற்கு பழி தீர்கும் நேரம் இதுவல்ல என்பது புரிந்துகொள்வோமாக. வாருங்கள் ஒரே நேர்கோட்டில் நாம் பயணிக்கலாம்! 

 

 

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

"காலம் அனைத்து காயங்களையும் மாற்றிவிடும்" என்று எங்கேயோ படித்த ஞாபகம். தயவுசெய்து அந்த காயத்தை மீண்டும் மீண்டும் சொறிந்து புதிப்பிக்க வேண்டாமே. அந்த காயம் தந்த வலிகள் கொடுமையானவையாக இருக்கலாம். ஆனால் அதற்கு பழி தீர்கும் நேரம் இதுவல்ல என்பது புரிந்துகொள்வோமாக. வாருங்கள் ஒரே நேர்கோட்டில் நாம் பயணிக்கலாம்! 

 

நன்றி  ஐயா

ஒருபோதும் முடியாது. ஏனெனில் அதை ஈழத்தமிழர்கள் செய்வதில்லை. இந்த தலைப்புகளில் செய்வதெல்லாம் ஒருவரை ஒருவர் சொறிதல் நுள்ளுதல் கிள்ளுதல் போன்ற சில்லறைத்தனங்களே ! அதில் ஒரு சுய இன்பம் ! சுய விமர்சனம் என்பது  சமூகத்தின் நடுவில் தன்னை நிதானமான நிறுத்தி தன்னில் இருந்து ஆரம்பிப்பது, ஈழத்தமிழரில் நடப்பதும் தொடங்குவதும் தான் 101 வீதம் தூய்மையானவன் மற்றவர் பிரச்சனை என்றுதான். அடுத்தவன் நோக்கிய சுட்டுவிரலை நீட்டுவதுதான். நீ அந்தச் சாதி நான் இந்தச்சாதி, நீ அந்த மதம் நான் இந்த மதம் அந்த ஊர் இந்த ஊர் என்பதன் நீட்சியாக அந்த இயக்கம் இந்த இயக்கம் என்று தொடர்கின்றது. இது மரபணு சார்ந்த உளவியல் பிரச்சனை. இதற்கு முடிவில்லை. இதனால் பலனும் இல்லை.

என்னை கேட்டிங்கள் எண்டால் நீங்கள் சொல்வது தான் 100% உண்மை...!

இங்கு யாருமே சரியான தலைமை அமையாமல் போராட போவது இல்லை... அந்த மக்களுக்கு தேவையான அர்பணிப்பு மிக்க எந்த வித கொள்கை சமரசமும் செய்து கொள்ளாத தலைமையை யாராரும் விமர்சனங்கள் மூலம் அமைத்து தர முடியாது...

அதை விட முக்கியமாக தமிழ் மக்களுக்கு எது தேவை என்பதை கூட கண்டு பிடிக்க முடியாதவர்கள் தான் விமர்சகர்கள்... வெறும் புலிகளை தாக்குவதால் எதை சாதிக்க முயல்கிறார்கள் என்பதில் யாருக்கும் தெளிவு கிடையாது...

30 வருட போர் எண்டு சொல்லும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் யாருக்கும் உங்களுக்கோ எனக்கோ இல்லை புலிகளின் தலைமைகோ மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை... புலிகள் தீர்வு ஒண்றை பெற்று போரை முடிவுக்கு கொண்டுவர போராடினார்கள்... ஆனால் முடியவில்லை முடியாத போதும் அதனோடு அந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களின் முடிவாக இருந்தது... புலிகள் நினைத்து இருந்தால் இப்போதும் போரை தொடரும் வண்ணம் விலகி போய் இருந்து இருக்க முடியும்... ஆனாலும் செய்யவில்லை... காரணம் அவர்கள் போரை முடித்துக்கொள்ள விரும்பினார்கள்... போருக்கு இதோடு நாங்களும் முற்றுப்புள்ளியை வைப்பதே நல்லது...

இந்த போர் முடிவு மூலம் வரும் கொஞ்ச பலனை மக்கள் அனுபவிக்க வேண்டுமானால் இண்டைக்கு செய்ய வேண்டியது எதுவோ அதையே செய்ய வேண்டும்...

இண்டைக்கு பொருளாதார நலன்களே நாடுகளின் உறவுகளை விருத்தி செய்யும் காலம் என்பதால் எனது திடமான முடிவு மக்களின் அபிவிருத்தியே இந்த மக்களை பொருளாதார தன்னிறவையும் மற்றவர்களை திரும்பி பார்க்கும் அளவுக்கு ஒரு தனித்துவ நிலையையும் தோற்றுவிக்கும்... அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே கேக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.