Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஒரு புலி - ஒன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட போர் எண்டு சொல்லும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் யாருக்கும் உங்களுக்கோ எனக்கோ இல்லை புலிகளின் தலைமைகோ மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை... புலிகள் தீர்வு ஒண்றை பெற்று போரை முடிவுக்கு கொண்டுவர போராடினார்கள்... ஆனால் முடியவில்லை முடியாத போதும் அதனோடு அந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களின் முடிவாக இருந்தது...

 

புலிகள் நினைத்து இருந்தால் இப்போதும் போரை தொடரும் வண்ணம் விலகி போய் இருந்து இருக்க முடியும்...

ஆனாலும் செய்யவில்லை... காரணம் அவர்கள் போரை முடித்துக்கொள்ள விரும்பினார்கள்... போருக்கு இதோடு நாங்களும் முற்றுப்புள்ளியை வைப்பதே நல்லது...

இந்த போர் முடிவு மூலம் வரும் கொஞ்ச பலனை மக்கள் அனுபவிக்க வேண்டுமானால் இண்டைக்கு செய்ய வேண்டியது எதுவோ அதையே செய்ய வேண்டும்...

இண்டைக்கு பொருளாதார நலன்களே நாடுகளின் உறவுகளை விருத்தி செய்யும் காலம் என்பதால் எனது திடமான முடிவு மக்களின் அபிவிருத்தியே இந்த மக்களை பொருளாதார தன்னிறவையும் மற்றவர்களை திரும்பி பார்க்கும் அளவுக்கு ஒரு தனித்துவ நிலையையும் தோற்றுவிக்கும்...

அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே கேக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும்...

 

இது தானய்யா  இன்றைய தேவை

என்னால் முடிந்தவரை

எனது ஊரையும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் செய்கின்றேன்.

நண்பர்கள்

உறவுகளையும் அதில்  ஊக்கப்படுத்தி இணைந்து செய்து வருகின்றேன்

அதுநேரம்

 எமக்காக எல்லாவற்றையும் தந்த மாவீரர்களதும் மக்களதும்  தியாகங்கள்  வீண்போகாதவகையில் அந்த மக்களுக்கான தீர்வு ஒன்றை வேண்டி மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவைக்கொடுத்து வருகின்றேன்.

  • Replies 103
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி, ராதாவோடும் நளினியோடும் கும்மி அடித்த ஆட்களையும் மறக்காமல்  எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

மீராபாரதி, ராதாவோடும் நளினியோடும் கும்மி அடித்த ஆட்களையும் மறக்காமல்  எழுதுவீர்கள் என நம்புகிறே

மீராபாரதி என்ன எழுத போகின்றார் என்று தெரியமுதலே அதை முளையில் கிள்ள மட்டுநர் தொடக்கம் கிளம்பி விட்டார்கள் ,உருப்பட்ட மாதிரிதான் .

Edited by arjun

மீராபாரதி, உங்கள் திரியை பூட்ட வைக்கிற அளவுக்கு.... எழுத்துக்களை கையாளாதீர்கள்.

இது, எச்சரிக்கை அல்ல... "அட்வைஸ்". :D  :lol:  :icon_idea:

 

ஏன் ஆறின புண்ணை ஆழமாக சொறிகிறார் மீராபாரதி  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி என்ன எழுத போகின்றார் என்று தெரியமுதலே அதை முளையில் கிள்ள மட்டுநர் தொடக்கம் கிளம்பி விட்டார்கள் ,உருப்பட்ட மாதிரிதான் .

 

 

 

ஈழத்தில் சகோதர யுத்தம்

2:02 AM Posted by Siva Sri 26 Comments

ஈழத்தில் சகோதர யுத்தம்

பாகம் ஒன்று.

ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு புரிய வைப்பதே என்னுடைய இந்தக்கட்டுரையாகும்.

சகோதர யுத்தம் பற்றி விரிவாக எழுதுவதானால் பல பக்கங்கள் தேவை எனவே சுருக்கமாக இரண்டு பாகங்களாக எழுத முயற்சிக்கிறேன். புலிகள் அமைப்பிலிருந்து முரண்பாடுகள் காரணமாக அதன் மத்திய குழுவிலிருந்து உமா மகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதும்.பின்னர் அவர் புதியபாதை என்னும் குழுவின் தலைவர் சுந்தரத்துடன் இணைந்து புளொட்(P.L.O.T )என்னும் அமைப்பினை தொடங்கி அதற்கு தலைவரான பின்னர். தமிழ்நாடு பாண்டிபஜாரில் பிரபாகரனிற்கும் உமா மகேஸ்வரனிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமே அன்றைய காலகட்டத்தில் பெரியதொரு சகோதர யுத்தமாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்தச் சம்பவம்தான் இந்திய மத்திய அரசிற்கு ஈழவிடுதலைப்போராட்டஇயக்கங்களுடனான தொடர்புகள் அமையவும் காரணமாயிருந்தது.ஆனால் காலப்போக்கில் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள் முரண்பாடுகளினால் அந்தஇயக்கதினர் தாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டும் அழித்துக்கொண்டும் இறுதியாய் புளொட் உறுப்பனராலேயே அதன் தலைவர் உமாமகேஸ்வரனும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியும் வேறுசிலரும் சகோதர யுத்தம் என்று சொல்லிக்கொண்டிருப்பது ரெலோ(T.E.L.O )இயக்கத்தினை புலிகள் தடைசெய்ததனையே . இந்தியா உதவியும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இயக்கங்களில் புலிகள் இந்தியா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கண்மூடித்தனமாக நம்பவில்லை அதேபோல இந்தியாவும் புலிகள் தாங்கள் சொல்வதெற்க்கெல்லாம் பிரபாகரன் தலையாட்டுவார் என்று நம்பவுமில்லை.இதனால் புலிகளிற்கும் இந்திய உளவுத்துறைக்கும் ஆரம்பகாலங்களிலிருந்தே ஒருவித பனிப்போர் நடந்துகொண்டேயிருந்தது.அதே நேரம் பிரபாகரளை தங்கள் தலையாட்டிப்பொம்மையாக்கியே தீருவது என்று கங்கணம்கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்த புலிகளின் பயிற்சி முகாம்களை பலவந்தமாக மூடியும்.ஆயுதங்களை பறித்தும். புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளை பறித்தும்.அன்ரன் பலசிங்கத்தை நாடு கடத்தியும் தொடர்ந்து பலவித நெருக்கடிகளை கொடுத்துவந்தனர்.

ஆனால் றோ அதிகாரிகள் எள் என்றதும் எண்ணெயாகி அவர்கள் உச்சந்தலையிலே உருகிவழிந்த ரெலோ தலைவரிற்கு வேண்டிய வசதிகளை றோ அதிகாரிகள் செய்தது மட்டுமல்ல . எண்பதுகளில் தமிழ்சினிமாவில் உச்சத்திலிருந்த இரண்டு பிரபல நடிகைகளையும் கொடுத்து மாமாவேலையும் செய்தனர். அதில் ஒருவர் இப்பொழுதும் சின்னத்திரையில் வில்லியாக வந்து பயமுறுத்திக்கொண்டிருக்கிறார். மற்றவர் காணாமல் போய்விட்டார்.இப்படி சிறீசபாரத்தினத்தை தங்கள் பிடிக்குள்ளேயே வைத்திருந்துகொண்டு தமிழீழத்திலும் புலிகள் அமைப்பிற்கு றோ அமைப்பு நெருக்கடிகளை கொடுக்கத்தொடங்கியது.இப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையாய் மாறிவிட்ட சிறீசபாரத்தினத்தின் போக்கு பிடிக்காமல் ரெலோ அமைப்பின் முக்கிய இராணுவத்தளபதியாக இருந்த தாஸ் என்பவர் இயக்கத்திலிருந்து பிரிந்து போய்விடுவதென முடிவெடுத்தபொழுது அவரையும் அவரது முக்கியமான நண்பர்கள் 5 பேரையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் வாருங்களென்று அழைத்து யாழ் வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்றார்கள். அதே நேரம் புலிகளை எப்படியாவது வம்புச்சண்டைக்கிழுத்து புலிகளை அழித்துவிடும் றோவின் திட்டத்திற்கு சரியான சந்தர்ப்பம் பார்த்து ரெலோவும் ஈழத்தில் தாவடிப்பகுதியில் தமிழ்பாராழுமன்ற உறுப்பினர்களாகிய ஆலால சுந்தரம். மற்றும் தர்மலிங்கம் ஆகியோரை சுட்டுகொன்று விட்டு அதனை புலிகள் செய்தார்கள் என்று பிரச்சராப்படுத்தியது.

தொடச்சியாய் பலகொள்ளைகளை நடத்திக்கொண்டிருந்த (முக்கியமாக வாகனக்கொள்ளைகள்) ரெலோ உறுப்பினர்களிற்கு இடைஞ்சலாயிருந்த இரவு நேரக்காவல் கடைமையில் ரோந்து வரும் புலிகள் அமைப்பினரை கடத்துவது. துன்புறுத்துவது என்று தொடருந்துகொண்டிருந்ததபொழுது அவர்கள் எதிர்பார்த்த சர்ந்தர்ப்பமும் வந்தது. .......86 ம் ஆண்டு புலிகளிற்கும் இலங்கைக் கடற்படைக்கும் நடந்த ஒரு மோதலில் புலிகளின் தளபதியாகவிருந்த அருணாவும் வேறு சிலரும் இறந்து போய்விட்ட செய்தியறிந்து (அருணா அந்தத் தாக்குதலில் இறந்திருக்கவில்லையன்பது பின்னர்தெரியவந்தது) பொதுமக்கள் யாழ்குடாவெங்கும் வாழை தோரணம் கட்டி இறந்த போராளிகளின் உருவப்படங்களிற்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார்கள். அருணாவின் ஊரான கல்வியங்காடுதான் சிறீசபாரத்தினத்தின் ஊருமாகும்.

கல்வியங்காட்டிலும் மக்கள் தோரணங்கள் கட்டி அருணாவின் உருவப்படங்களை வைந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தவேளை அங்கு வந்த ரெலோ உறுப்பினர்கள் தோரணங்களை அறுத்தெறிந்து உருவப்படங்களையும் கிழித்தெறிந்து பொது மக்களையும் தாக்கியபொழுது அந்த இடத்திற்கு சென்று அவற்றை தடுக்க முயன்ற புலிஉறுப்பினர்களான முரளி என்பவரையும் மூத்த உறுப்பினரான பசீர்காக்காவையும் பலவந்தமாய் அடித்து இழுத்துச்சென்று தங்கள் முகாமில் அடைத்துவிட்டார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சிறீசபாரத்தினம் அதேகல்வியங்காட்டிலுள்ள முகாமில்தான் இருந்தார். முரளியையும் காக்காவையும் அடைத்து வைத்து விட்டு அவர்களை மீட்க எப்படியும் புலிகள் தாக்குதலிற்கு தயாராக வருவார்கள் அவர்கள் மீது தாக்குதலை தொங்கி அப்படியே தொடர்ச்சியாய் புலிகளை அழித்துவிடலாமென்கிற திட்டத்துடன் ரெலோ அமைப்பினர் தாக்குதலிற்கு தயாரான நிலையிலேயே இருந்தனர். ஊர் நிமைமைகள் அன்றைய புலிகளின் யாழ் மாவட்ட தளபதியான கிட்டு உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தபட்டு முரளியையும் காக்காவையும் ஒரு தாக்குல் மூலம் மீட்கலாமா அல்லது பேச்சுவார்த்தைமூலம் தீர்க்கலாமா என ஆலோசனை கேட்டிருந்தார்.

பிரபாகரனும் நிலைமைய சிக்கலாக்கமால் பேசித்தீர்க்கலாமென்கிற முடிவுடன் பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்பாமல் அப்பொழுது தமிழ்நாட்டின் மதுரை மாவட்ட புலிகளின் அலவலகத்திலிருந்த மூத்த உறுப்பினரும் சிறீசபாரத்தினத்திற்கு நன்கு பழக்கமான லிங்கத்தினை சிறீசபாரத்தினத்துடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார். காரணம் கிட்டுகொஞ்சம் கோபக்காரர்.இப்படியான சந்தர்ப்பங்களில் அமைதியாகப்பேசமாட்டார். ஆனால் லிங்கம் எப்படிப்பட்ட சிக்கலான நிலைமையிலும் கோபப்படாமல் அமைதியாக பேசிகோபத்திலிருப்பவர்களையும் அமைதியாக்கி விடுவார். அதனால்தான் அவரிற்கு புலிகளின் மதுரை அலுவலகத்தினை நிருவகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவசரமாக மாதகலில் வந்திறங்கிய லிங்கம் மேலும் இருவரை அழைத்தகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி கல்வியங்காட்டில் சிறீசபாரத்தினம் இருந்த முகாமிற்கு சென்று அங்கு தன்னை அறிமுகப்படுத்தி சிறீயுடன் கதைக்கவேண்டும் எனகேட்டதுமே லிங்கத்தை நோக்கி துப்பாக்கி சடசடத்தது. லிங்கம் அந்தவிடத்திலேயே இறந்துபோக அவருடன் கூடசென்றவர்களால் லிங்கம் கொல்லப்பட்ட செய்தி கிட்டுவிற்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கு மேலும் ரெலோவுடன் பேசிப்பயனில்லையென்று தெரிந்துகொண்ட புலிகள் அதிரடியாக ரெலோவின்மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த முரளியையும் பசீர் காக்காவையும் மீட்டு இறுதியாய் சிறீசபாரத்தினமும் கொல்லப்பட்டதுடன் ரெலோவின் ஆதிக்கம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பினரைப்போலவே ஆட்பலத்திலும் ஆயுதபலத்திலும் சமமாய் இருந்தவர்கள் எனக்கருதப்பட்ட ரெலோ அமைப்பு புலிகளால் சுலபமாக அழிக்கபட்டதற்கு என்ன காரணங்களென பார்த்தால்.

lingam.jpg

ரெலோ வினால் கொல்லப்பட்ட லிங்கம் அம்மான்

1)ரெலோ அமைப்பு தனக்கு பின்புலத்தில் இந்தியா இருக்கின்றதென்கிற தைரியத்தில் தன்னுடைய சக்தியை அளவுக்கு மீறியதாக கற்பனை செய்து கொண்டதனாலும் . அவர்களது அடாவடித்தனங்கள் அதிகரித்தமையாலும்.உதாரணமாக யாழ்குடாநாட்டில் ஒரு வீட்டிலாவது ஒரு வாகனம் உருப்படியாய் நிற்க முடியாது முக்கியமாய் மோட்டார்சைக்கிள்கள். அவற்றை உடனேயே கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் அவற்றை தமிழ்நாடுவரை கொண்டு சென்று அங்கு பெரும்பணக்காரர்களிற்கு விற்றுவிடுவார்கள். அடுத்தது தொடர்ச்சியாய் பல கொள்ளைகள். இதனால் மக்கள் மனங்களிலிருந்து அன்னியப்படத்தொடங்கினார்கள்.

2) புலிகளுடனான மோதலை வழிநடத்த சரியான அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி இல்லாததும் ஒருகாரணம். அவர்களிடமிருந்த தாக்குதல்களை வழிநடத்துவதில் சிறந்தவர்களான தாஸ் மற்றும் காளியையும் அவர்களே யாழ்வைத்திய சாலையில் வைத்து சுட்டுக்கொன்று தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டனர்.அது மட்டுமல்ல அதந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் நடாத்திய ஊர்வலத்திலும் பகிரங்கமாக கண்மூடித்தனமாக சுட்டதிலும் ஒருவர் இறந்து போனது மக்களிற்கு ரெலோ மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

3) புலிகளிடம் இருந்த அளவு ஆயுத ஆட்பலம் இருந்திருந்தாலும் ரெலோ அமைப்பிடம் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை . அதனால் அவர்களால் உடனுக்குடன் தலைமைக்கும் மற்றவர்களிற்குமிடையினாலான செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் பல குழுக்களாக தனித்துப்போயிருந்தனர்.

4)புலிகளுடனான சண்டை தொடங்கியதும் அதனை முன்னின்று வழிநடத்தாமல் தான் எப்படியாவது தப்பித்து தமிழ்நாட்டிற்கு ஓடிவிட்டால் போதுமென்கிற நினைப்பில் சிறீ சபாரத்தினம் தலைமறைவாகியதும் மற்றைய ரெலோ அமைப்பினரிற்கு ஒரு சலிப்பை கொடுத்தது. அவர்களும் தாங்களும் ஆயுதங்களை போட்டு விட்டு எப்படியாவது தப்பியோடி விடலாமென முடிவெடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் புளொட் இயக்க முகாம்களில் ஓடி ஒழிந்து கொண்டது.

5) எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய காலகட்டத்தில் புலிகளும் ரெலோவும் இராணுவ ரீதியில் சமபலத்துடன் இருந்ததாகவே பலரும் எண்ணினர். ஆனால் ரொலோ அமைப்போ தாங்கள் புலிகளைவிட பலமாக இருப்பதாகவே எண்ணினர். அவர்களின் இந்த எண்ணம்தான் புலிகளை தொடர்ச்சியாய் வலுச்சண்டைக்கு இழுக்கக் காரணமாயிருந்தது. ஆனால் புலிகள் ஆரம்பம் முதற்கொண்டு இன்று வரை தங்கள் முழுமையான ஆயுத இராணுவபலம் இதுதானென்று வெளியில் காட்டிக்கொண்டதேயில்லை. அதுமட்டுமல்ல புலிகளின் யுத்தஅனுபவங்களும் அவர்களின் ஆன்ம பலமும்தான் வழைமைபோல ரெலோவுடனான யுத்தத்திலும் வெற்றிபெறவைத்தது.

எனவே எடுத்ததற்கெல்லாம் மகாபாரதத்திலும் பகவத்கீதையிலும் உதாரணம் காட்டுபவர்கள்.புலிகளின் இந்த யுத்தத்தையும் சகோதர யுத்தமல்ல தர்மயுத்தம் என்று ஏற்க மறுப்பது பகிடியாய்தான் இருக்கின்றது.அன்று நடந்ததும் தர்மத்திற்கான யுத்தம்தான்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட போர் எண்டு சொல்லும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் யாருக்கும் உங்களுக்கோ எனக்கோ இல்லை புலிகளின் தலைமைகோ மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை... புலிகள் தீர்வு ஒண்றை பெற்று போரை முடிவுக்கு கொண்டுவர போராடினார்கள்... ஆனால் முடியவில்லை முடியாத போதும் அதனோடு அந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களின் முடிவாக இருந்தது... புலிகள் நினைத்து இருந்தால் இப்போதும் போரை தொடரும் வண்ணம் விலகி போய் இருந்து இருக்க முடியும்... ஆனாலும் செய்யவில்லை... காரணம் அவர்கள் போரை முடித்துக்கொள்ள விரும்பினார்கள்... போருக்கு இதோடு நாங்களும் முற்றுப்புள்ளியை வைப்பதே நல்லது...

இந்த போர் முடிவு மூலம் வரும் கொஞ்ச பலனை மக்கள் அனுபவிக்க வேண்டுமானால் இண்டைக்கு செய்ய வேண்டியது எதுவோ அதையே செய்ய வேண்டும்...

இண்டைக்கு பொருளாதார நலன்களே நாடுகளின் உறவுகளை விருத்தி செய்யும் காலம் என்பதால் எனது திடமான முடிவு மக்களின் அபிவிருத்தியே இந்த மக்களை பொருளாதார தன்னிறவையும் மற்றவர்களை திரும்பி பார்க்கும் அளவுக்கு ஒரு தனித்துவ நிலையையும் தோற்றுவிக்கும்... அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே கேக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும்...

 

இது, இதைத்தான் எதிர்பார்கிறோம், இதுக்காகத் தான் எழுதுகிறோம்.

இப்படி எல்லாரும் சிந்திச்சால் எந்தக் கொம்பனாலையும் எம்மை அசைக்க முடியாது. ஆனால் இந்தத் தலைப்போடு மட்டும் போகாமல் இதே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினால். விடியல் என்பது தூரம் இல்லை. நன்றி தயா அண்ணா மற்றும் செங்கொடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே இல்லாத காலத்தில் புலிகளைப் பற்றி
மாற்றுக் கருத்து வைப்பதில் பிரயோசனம் இல்லை
புலிகளால் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் எனக் கூறப்படும் மாற்றுக் கருத்தாளர்களும்
மாற்றுக் குழுக்களும் இப்போது என்ன செய்கின்றார்கள் என்பது தான் இப்போது அலசப்பட வேண்டிய விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

மீரா நீங்கள் எழுதிய குறிப்பில் இருந்ததைப்போல  அன்று இலங்கை இராணுவம் கெலியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியிருந்தது காரணம்  அன்றைய காலத்தில் அனைத்து இயக்கங்களும் யாழ் கோட்டைப்பகுதியில் காப்பரண்களை  வைத்திருந்தார்கள்  யாழ் தொலைத்தொடர்பு முகாம் பக்கமாக  நேர் முதல் பக்கமாக புலிகளில் காப்பரணும்  அதற்கு பின்னர் பண்ணைப் பக்கமாக தம்பா T.E.A  மற்றும் ரெலோவின் காப்பரண்களும் இருந்தது புலிகள் ரெலோவின் காப்பரண் மீது தாக்குதலை நடத்தியபோது  கோட்டையில் இருந்த இருந்த இராணுவம் தங்கள் மீதுதான் இயக்கங்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என   நினைத்ததால் மண்டை தீவு இராணுவ முகாமில் இருந்த வந்த உலங்கு வானுர்தி  அந்தப் பகுதியில் துப்பாக்கி சூடுகளை நடத்தியிருந்தது. புலிகளும் ரெலோவும் மோதுகிறார்கள் என்கிற செய்தி செய்தி இராணுவத்திற்கு தெரிய வந்திருந்ததே அடுத்தடுத்த நாட்களில்தான் அதுவும்  யாழ் கொழும்பு  பயணிகளால்தான்.அதே நேரம் பழைய பூங்கா முன்னால் நடந்த கண்ணி வெடித் தாக்குதல் பற்றி விபரமாக எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். வொல்கனோ எழுதியது போல் அங்கிருந்த மலை வேம்பில்  ஒரு சைக்கிள் பல வருடமாக தொங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு சாதாரண வழிப்போக்கரின் சைக்கள்  அரியாலையை  சேர்ந்தவர் அவரும் அதில் இறந்து போயிருந்தார்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

புலி - ரெலோ சண்டைக் காலத்தின் போது.. இராணுவம் கோட்டையை விட்டு வெளியேறி வர முயற்சிக்கின்ற காலம். கொட்டடிப் பக்கம் நிலை கொண்டிருந்தது பெரும்பாலும் புலிகள். தம்பா.. பரல் கொண்டு வந்து வேடிக்கை காட்டப் போய் நடந்த சண்டையில் ஹெலி எல்லாம் பறந்து பறந்து அடிக்கவில்லை. செல் தான் அடித்தார்கள். அப்புறம் தம்பா வழமை போல ஓடிவிட்டது.

 

அந்தக் காலத்தில்.. பலாலியில் இருந்து வரும் ஹெலி கோட்டைக்குள் வந்து இறக்கிச் செல்லும். அதற்காகவே கவனத்தை திசை திருப்ப.. இராணுவம்... வெளில வந்து போறது..!

 

யாழ் நகரில்.. அதுவும் கோட்டையைச் சுற்றி புலி - ரெலோ சண்டை பெரிசாக சண்டையே போடவில்லை..!

 

ரெலோ.. புலி சண்டை மூர்க்கமாக நடந்த.. கல்வியங்காடு.. கோப்பாய்.. நீர்வேலிப் பகுதியில் ஹெலி அடித்தது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இவை நடந்தன..! அதுவும் பலாலியில் இருந்து வந்து.

 

எப்படி எப்படி எல்லாம் சம்பவங்களை திரிக்கிறார்கள்..! இவற்றை நூல்களிலும் வேற எழுதுகிறார்கள்..??! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் யாழ்கள celebrities ரூம் போட்டு யோசிச்ச பிறகு இதை மீராபாரதி எழுதுகிறார் போலகிடக்கு என எண்ணத்தோன்றுகிறது....மீராபாரதி தொடரை தொடருங்கோ....... போராட்டமும் ஒரு தொடர்கதைதானே

நான் ஒரு சிங்கம் - இப்பிடி ஒரு கதையை எடுத்துவிடவே. :icon_idea::lol:
ஒரு காட்டுவழிப் பாதையில் நாலைஞ்சு வெறிபிடிச்ச சிங்கங்களும் நரிகளும் அப்பாவிப் புலிக்குட்டிகளை கடித்துக் குதறிக் கொண்டிருந்தன..................................................... என்று தொடங்கி சின்னப்பிள்ளையளுக்கு கதை சொல்லுறமாதிரி சொல்லலாம் பாருங்கோ. :rolleyes::lol:
 

இங்கு மீராபாரதி தனது "சொந்த அனுபவத்தை..தனது பார்வையில்" எழுதும் போது..சிலபேருக்கு ஏன் எரியுதோ தெரியவில்லை....

 

எல்லாரு"மே..மே..மே..மே" கூட்டமாக இருக்கனுமா?

இந்த பதிவுதான் என் ஞாபகத்திற்கு வருது:

 

இன்றைய வலையுலகில் ஒரு தனிமனிதனுக்கு கிடைத்த சுதந்திரமும், அதனால் கிடைத்த நன்மைகளையும் பற்றி என் கருத்துக்களை பரிமாறினேன். தன் இஷ்டப்படி என்ன வேணுமானாலும் அநியாயமாக எழுதிக்கொண்டு பிழைப்பை ஓட்டிய பத்திரிக்கைகளையும் அதில் எழுதும் பிரபல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும், அவர்கள் பொய்யை எழுதும்போது இப்போதெல்லாம் நாம் ஒரு வழி பண்ணிவிடலாம் என்றும், பத்திரிக்கை தொழிலில் இல்லாதவர்கள், ஆனால் விபரம் அறிந்தவர்கள் இதுபோல் பத்திரிக்கைகளில் வரும் உண்மைக்கு புறம்பானதை எழுதுபவர்களை நார் நாராக கிழித்து எடுக்கலாம் என்றும் எழுதினேன் நான்.

ஒரு பக்கம் இதுபோல் நமக்குக்கிடைத்த சுதந்திரம் சந்தோஷப்பட வேண்டிய விசயமென்றாலும், தனிமனித கருத்துச் சுதந்திரத்தால் இன்று பொய்மூட்டைகளை வலைபதிவுகளில் எழுதி பல உண்மைகளை படுகொலை செய்கிறார்கள் பல இளம் வலைபதிவர்கள். இது ஒரு மிக மிகவும் வருந்தத்தக்க விசயம். ஒரு பொய்யை எழுதி, அதற்கு சில பொய்யர்கள் நடத்தும் பொய் வலைபதிவுப் பதிவுகளை மேற்கோள் காட்டி, சில பொய்யர்களை பின்னூட்டமிட வைத்து, பொய்யை மெய்யாக்கிக் கொண்டு வருகிறது இந்த அரைவேக்காடுகள் நிறைந்த வலையுலகம்!

இதைப்போல் எழுதப்படும் பொய்மூட்டைகளை பார்த்து, வாசித்து வரும் சில விசயம் அறிந்த பெரியவர்களும், வாசகர்களும் இவ்வலைபதிவர்கள் படுகஷ்டத்துக்கு ஆளாக்குகிறார்கள். எதனால் இந்த நிலைமை என்று பார்த்தால் இந்த “வலையுலக கருத்துச் சுதந்திரம்”தான் காரணம். வெறும் வாசகர்களாக இருக்கும் பல விபரமறிந்தவர்களுக்கு அந்தக்காலத்து ஆட்கள் நினப்பது என்னவென்றால் பத்திரிக்கைகள் பரவாயில்லை இந்த இன்றைய வலையுலகத்துக்கு என்று. வலையுலகம் என்றாலே ஏதோ அரை டவுசர்கள் எழுதும் அர்த்தமில்லாத உளறல்கள் என்று பலர் நம்பும்படி ஆகிவிட்டது இப்போது.

தவறு நடக்காத இடமே இல்லை. தவறாக எழுதுவதும் மனித இயல்புதான். ஆனால் தன் சுயநலத்திற்காக உண்மைபோல் ஜோடிக்கப்பட்ட பொய்களை எழுதுபவர்கள் சில கீழ்த்தரமான வலைபதிவர்கள். இவர்கள் எழுதும் பொய்களைக்காட்டி இவர்களை தண்டிக்க இன்று சட்டத்தில் இடமில்லை! இவர்களை மேற்கோள் காட்டி விமர்சித்தாலும் அது தனி நபர் தாக்குதல் என்றாகும் அபாயமும் இருக்கிறது.

இன்று ஒரு வலைபதி(வரின்)வின் நிலைமை, அந்தப் பதிவரின் பிழையில்லாமல் எழுதும் சுத்தமான தமிழினாலும், அரசியல் ஞானத்தினாலும், உயரத்தான் செய்கிறது என்றாலும் அந்தப்பதிவர் உண்மைக்குப் புறம்பானதை எழுதுகிறார் என்றால் காலப்போக்கில் அவர் பாதாளத்தில் விழப்போவதென்னவோ உண்மை

 

http://timeforsomelove.blogspot.com.au/2009/11/blog-post.html

 

 

  • தொடங்கியவர்

நான் ஒரு புலி - ஒன்று - பகுதி 2
 
 

1986ம் ஆண்டு மார்கழி மாதம்…

அடுத்த அடி இபிஆர்எல்எவ்க்கு விழுந்தது… ஒருவரும் நம்பவில்லை ஈபி இப்படி பின்வாங்கும் என… எல்லோரும் நினைத்தார்கள்… நம்பினார்கள்… டெலோவை அழித்ததுபோல் ஈபியை அவ்வளவு இலகுவாக அடித்து அழிக்க முடியாது என… தமது மோட்டர்களால் புலியை  அடித்து விடுவார்கள் என… ஆனால் டெலோ நின்றளவு கூட ஈபி தாக்குப்பிடித்து நிற்கவில்லை…..  ஏதோ கிழக்கில் மட்டும் சிறிது சண்டை நடந்ததாக செய்திகள் கூறியது.

 

இந்த நிகழ்வால் அப்பாவிற்கு மீண்டும் வேலைபோனது….

எங்கள் குடும்பத்திற்கு மீண்டும் வறுமை வந்தது….

இப்பொழுது கஸ்டத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது….

  
அப்பா புலிகளிடம் சரணடைந்து அல்லது கதைத்து அல்லது இரண்டையும் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார்…. இவருக்கு நெருக்கமாக இருந்த இரு ஈபி போராளிகளையும் சரணடையச் செய்து வெளியே எடுத்தார். ஆனால் சிலரை மட்டும் வெளியே எடுக்க முடியவில்லை. அப்பாவால் இதுவெல்லாம் எப்படி சாத்தியம் என்பது ஆச்சரியமாகவே இருக்கும்.   அப்பாவிற்குத் தெரிந்ததெல்லாம் மும் மொழிப் புலமையும் அரசியலும் தான். இவற்றை வைத்துக் கொண்டு தன் வாழ்வை எப்படியோ ஓட்டினார்.
 

இதற்கிடையில் புளொட்டும் தன் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் தானே நிறுத்துவதாக பத்திரிகையில் அறிவித்தது.   இதன் பின் யாழ் நகர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது….

ஒரு நாள்…
நாம் குடியிருந்த பேக்கரி லேன் பகுதிக்கு அருகாமையில்  இரவு ஏழுமணிக்குப் பின் சில  சுட்டுச் சத்தங்கள் கேட்டன.. பின் வாகனங்கள் விரைந்து செல்லும் சத்தங்கள் கேட்டன…அதன் பின் பெரும் மாயான அமைதி நிலவியது… இது வழமைக்கு மாறான அமைதியாக இருந்தது…

“கிட்டு அவரது காதலி வீட்டுக்குப் போகும் பொழுது யாரோ சுட்டுப் போட்டாங்களாம்… அவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார்” என அயலவர்கள் சிறிது நேரத்தில் வந்து செய்தியைப் பரிமாறிச் சென்றனர்…….

சிலர் “ஈபியிலிருந்த போராளிகள் கிட்டுவைப்  பழிவாங்கியிருக்கலாம்” என்றனர்….
சிலர் “பிரபாகரன் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வரும் பொழுது கிட்டு பெரும் புகழ் அடைந்திருப்பதை  பிரபாரகன் விரும்பவில்லை என்றும் அதனால் அவர் இப்படி செய்திருக்கலாம்” என்றும் பல வதந்திகள் பரவின…
என்ன நடந்தது? எது உண்மை? என்று ஒருவருக்குமே தெரியவில்லை….

“கிட்டுவை சுட்ட கோவத்தில் அருணா என்ற புலிப் போராளி “டெம்பில் ரோட்டி”லிருந்த கந்தன் கருணை வீட்டில் தாம் பிடித்து வைத்திருந்த 53 ஈபி போராளிகளை சுட்டுக்கொன்றார்” என்ற இன்னுமொரு தகவல் பரவியது… இதில் எங்கள் வீட்டுக்கு  வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த வைத்தியர் பென்சமினும் கொல்லப்பட்டதாக  அறிந்தோம். இது எமக்கு மிகவும் கவலையாக இருந்தது….  அப்பாவிற்கு அவரை வெளியில் எடுக்க முடியவில்லை என்று  கவலைப்பட்டார்…. அழுதார்…..

 (ஆனால் சிறிய குழுவான தீப்பொறி தான் கிட்டுவை தாக்கியது என  காலம் கடந்து இப்பொழுது  உரிமை கோருகின்றனர்).

அப்பா  மீண்டும் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததால்…..
எனக்கும் அவருக்கும் முரண்பாடுகள் வந்தன… சண்டை பிடித்தோம்…

“நான் படிக்கவேண்டும்… ஆனால் வீட்டில் சாப்பாடு இல்லை… டீயூசனுக்கு கட்ட பணம் இல்லை….. எப்படி படிப்பது….” என சிந்தித்தேன்…
அப்பாவிற்கு   நான் படிக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாத நிலை…
அவரது நிலையைப் புரிந்து கொள்ள முடியாத இளம் வயது எனக்கு …

வீட்டை விட்டு போய் எதாவது தேவாலயத்தில் தங்குவோம் என நினைத்தேன்… எனது சாமான்ககளை ஒரு பெட்டியில் கட்டி சைக்கிளை எடுத்துக் கொண்டு பெரிய கோயிலில் போய் ஒரு மரத்திற்கு  கீழ் இருந்த சிமேந்து கட்டில் குந்தியிருந்தேன்…
இரவு  8 மணி…இருள் கவ்வியிருந்தது…. ஆனாலும் மின்விளக்குகளின் ஒளி தன்னைச் சுற்றி இருந்த  இருளை ஒரு வட்டத்திற்கு  அப்பால்   விரட்டி… ஒளி ஏற்றியிருந்தது…….
அப்பொழுது சில இளைஞர்கள் என்னை நோக்கி வந்து “இஞ்ச என்ன செய்கின்றீர்” என வினாவினார்கள்… நான் வீட்டில் நடந்ததையும் எனது விருப்பத்தையும் கூறினேன். அவர்கள் என்னை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்… அப்பாவுடனும் ஏதோ கதைத்து விட்டு சென்றார்கள்…. மீண்டும் அடுத்த நாள் வந்து என்னை அழைத்து நான் பிரச்சனையில்லாமல் இருக்கின்றேனா என அக்கறையுடன் விசாரித்தார்கள்.
 
 இவ்வாறான ஒரு நிலையில் நானும் என்ன கஸ்டம் வந்தாலும்  கற்பதைக் கைவிடுவதில்லை என முடிவு எடுத்திருந்தேன்…. ஆனால் தனியார் வகுப்பு கட்டணத்திற்கு காசு கட்ட பணம் இல்லை.   தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் சிவத்தம்பி “சேர்” தலைவரா இருந்தார். அவரிடம் போய் எனது நிலையை கடிதம் ஒன்று எழுதி தெரிவித்தேன். அவர் தனது உதவியாளர் முருகையாவை அனுப்பி தனியார் வகுப்பு நிர்வாகியுடன் கதைத்து கட்டனம் இல்லாது படிக்க அனுமதி வாங்கித்தந்தார்.  இதேவேளை முதல் தரமே சித்தியடைந்த நண்பர் ர யாழ் நகரில் இருந்தார். அவர் வீட்டிலும் போய் படித்தேன். அவர் என்னிடம் பணம் வாங்கவில்லை..
 
மீண்டும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன்…..
அதேநேரம் 1987ம் ஆண்டு…. வடமாரட்சி “ஒப்ரேசன் லிபரேசன்” ஆரம்பித்தது……..
பல மாணவர்கள் வடமாராட்சியிலிருந்து இடம் பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள்….
பல இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் பூசாவிற்கு  அள்ளிக் கொண்டு சென்றனர்..
உயர்தரப் பரிட்சை எடுக்க முடியாது அந்த மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்…

இப்பொழுது புலிகளின் அதிகாரம்  மட்டுமே குடா நாட்டில் இருந்தது.. அவர்கள் வைத்ததே சட்டம்… ஒழுங்கு எல்லாம்.. இந்த நிலையில்
வடமாராட்சி மாணவர்கள் பரிட்சை எடுக்க முடியாததால் உயர்தரப் பரிட்சையைப் பகிஸ்கரிக்ககோரி விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான சோல்ட்டின் பொறுப்பாளர் முரளி அறிவித்தார். இதற்காக  யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்கின்றார்.
 
நான் உயர்தரப் பரிட்சைக்கு இரண்டாம் தரம் முயற்சி செய்து கடுமையாகப் படித்துக்கொண்டிருக்கின்றேன்..
 
நாம் செயற்பட்ட இயக்கத்தின் செயற்பாடுகளாலும் மற்றும் சக இயக்கங்கள் செயற்பட்ட முறைகளாலும் இயக்க அரசியலில் வெறுப்படைந்திருந்தோம். மேலும் கடந்த வருடம் விடுதலைப் புலிகள் டெலோவை அழித்த முறையிலும் ஈப்ஆர்எல்எவ்வை தடை செய்த முறையிலும் உடன்பாடின்மையால் இயக்க அரசியலில் இருந்து விலகியிருந்தோம். ஆகவே கற்பதில் மட்டுமே எமது கவனம் இருந்தது… அதில் அக்கறையுடனும் செயற்பட்டோம்.

அப்பா இப்பொழுது புலிகளில் வேலை செய்து கொண்டிருந்தார்.  இருப்பினும் நாம் ஏழைக் குடும்பம்.  வறுமையில் இருந்தது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால் நான் படிக்கவேண்டும். மேலும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவதாக இருந்தாலும் கற்பது முக்கியம் எனக் கருதியிருந்தேன்.

இப்படியான ஒரு சுழ்நிலையில் புலிகளின் மாணவர் அமைப்பு உயர்தரப் பரிட்சையை பகிஸ்கரிப்பதை நான் விரும்பவில்லை. ஆகவே அதற்கு எதிராகப்  பேசுவதற்காக குறிப்பிட்ட கூட்டத்திற்கு சென்றேன்.

கைலாசபதி அரங்கம் முழுவதும்  இந்த வருடம் உயர்தர பரிட்சை எடுப்பவர்கள் நிறைந்திருக்கின்றார்கள். மேடையிலும் மேடைக்கு அருகிலும் சோல்ட் உறுப்பினர்களும் அவர்களது பல்கலைக்கழ ஆதரவு மாணவர்களும் இருக்கின்றனர். ஒவ்வொருவராகப் பேசுகின்றனர். பொதுவாக மாணவர்கள் பரிட்சை பகிஸ்கரிப்புக்கு எதிராகப் பேச. சோல்ட் மாணவர்கள் திட்டமிட்டவகையில் ஒவ்வொரு எதிர்ப்புக்கும் மறுப்புத் தெரிவித்து ஆதரவாகவும் அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் வடமாரட்சி மாணவர்களின் பிரச்சனைகளையும் கூறினர்.
 
இவ்வாறு திட்டமிட்டு சோல்ட் மாணவ உறுப்பினர்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க பொறுக்க முடியாமல் நான் ஒரு கட்டத்தில்  மேடைக்குச் சென்று பேசினேன். புலிகளைப் பற்றி தெரிந்திருந்தும் ஒரு அசட்டு தைரியத்தில் மேடையேறினேன். “கல்வியை நாம் கைவிடமுடியாது” எனவும் “நாம் சிறீலங்கா அரசாங்கத்தின் செல்களுக்கும் குண்டுகளுக்கும் மற்றும் பல்வேறு கஸ்டங்களின் மத்தியிலும் கற்கின்றோம்” … “ நாம் கல்வி கற்காமல் விடுவதும்… பரிட்சை எடுக்காமல் விடுவதும் தான் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற வெற்றி” என்றும் “அதுவே அவர்கள் விருப்பம்” எனவும் “ஆகவே நாம் பரிட்சையைப் பகிஸ்கரிக்க கூடாது” எனக் கூறினேன்.    மேலும் “கிழக்கு மாகாண மாணவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புள்ளுக்கும் பிரச்சனைகளுக்குள்ளும் வாழ்பவர்கள்.  அப்பொழுதெல்லாலாம் பரிட்சையை பகிஸ்கரிக்காத நாம் இப்பொழுது பகிஸ்கரிப்பது நியாமில்லை” எனப் பகிஸ்கரிப்புக்கு எதிராகப் பேசினேன்.
 
ஆனால் சோல்ட் பொறுப்பாளரும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் விடுவதாக இல்லை. ஏதோ மாணவர்களின் ஏகோபித்த குரலாக பரிட்சை பகிஸ்கரிக்கப்படுகின்றது என்ற முடிவை நோக்கி திட்டமிட்டவகையில் மெதுவாக சென்று கொண்டிருந்தனர். இந்தப் போக்கு எனக்குள் கோவத்தை உருவாக்கியது.  மீண்டும் மேடைக்கு ஏறி “நீங்கள் பகிஸ்கரிப்பற்கு ஆதரவாகவும் அவ்வாறான முடிவையே இறுதியாக எடுப்பதாக இருந்தால், பரிட்சையைப் பிற்போடச்சொல்லி அரசாங்கத்தை நிர்பந்தித்து உண்ணாவிரதம் இருப்போம். அதை நான் இப்பொழுதே ஆரம்பிக்கின்றேன்” எனக் கூறி மேடையின் நடுவில் அமர்ந்துவிட்டேன். இதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் “சோல்ட்” அமைப்பு இதைத் தமக்கு சாதகமா பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மேடையில் வாக்குவாதம் நடைபெற்றது. இறுதியாக ஊர்வலம் ஒழுங்கு செய்வது என்றும் தாம் பகிஸ்கரிக்கப் போவதாக மகஜர் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. எனக்கு அதனுடன் உடன்பாடில்லாதபோதும் சிலர் என்னை சமாதானப்படுத்தி மேடையிலிருந்து வெளியே கொண்டு சென்றனர். 

 ஆனால் நான் அத்துடன் விடவில்லை. எனது நிலைப்பாட்டுக்கு ஆதரவான நண்பர்களுடன் கலந்துரையாடினேன்.  ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று உயர்தர வகுப்பு மாணவர்களுடன் கதைப்பது என முடியாயிற்று. இருப்பினும்  வீட்டுக்கு கவலையுடன் சென்றேன்.  விடியும் வரை காத்திருந்தேன்.  விடிந்தவுடன் வெளிக்கிட்டு ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்றோம். முதலில் சென்றது பெண்கள் பாடசாலை என்பதில் சந்தேகமில்லை. பரிட்சையைப் பகிஸ்கரிப்பதற்கு எதிராக நாம் எதாவது செய்யவேண்டும் என உரையாடினோம். மேலும் பல மாணவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் “சொல்ட்” அமைப்பு பரிட்சையைப் பகிஸ்கரிப்பதில் உறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இன்று காலை ஊர்வலம் நடைபெற  இருந்தது. நான்  காலையிலையே  அப்பா வேலை செய்த  மாம்பழ்ச் சந்திக்கும் பரமேஸ்வரா சந்திக்கும்  இடையில் இருந்த புலிகளின் அலுவலகத்தற்குச் சென்றேன்.. அங்கு சென்று அப்பாவுடன் கோவமாகக் கத்தினேன். அங்கு வேலை செய்த அரசியல் பிரிவிலுள்ள உறுப்பினர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  நான் பயப்பிடவில்லை. “இவர்கள் என்ன செய்கின்றார்கள்… இன்று ஊர்வலத்தை நடாத்த விடமாட்டேன்” எனவும் “இவர்கள் என்ன செய்கின்றார்கள் பார்ப்போம்” எனக். கூறிவிட்டு அங்கிருந்து சென்றேன். அப்பாவுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஊர்வலத்திற்கு உயர்தர மாணவர்கள் மிகவும் குறைவாகவே வந்திருந்தனர். வந்தவர்களில் “சோல்ட்”டின் ஆதரவாளர்கள் அதிகமானவர்கள். மற்றும்படி கீழ் வகுப்பு மாணவர்களையும் சிறுவர் சிறுமிகளையும் வாகனங்களில் அள்ளிக் கூட்டிக் கொண்டுவந்திருந்தனர்.
 
அங்கிருந்த சில நண்பர்களுடன் கதைத்தேன். ஒரு புறம் எதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு. மறுபுறம் சிறிது தயக்கம். அல்லது பயம். ஊர்வலத்திற்கு முன் படுத்து தடைசெய்வதற்குதான் வந்தேன். ஆனால் செய்ய முடியவில்லை.
இறுதியாக ஊர்வலத்துடன் நடந்து போனேன். ஊர்வலத்திற்கு உயர்தர மாணவர்களின் ஆதரவின்மையால் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகியது. 
இதன் விளைவாக  ஒரு வாரத்தின் பின் மீண்டும் கைலாசபதி அரங்கில் இது தொடர்பான கூட்டம் நடந்தது. ஆனால் இம் முறை இதற்குத் தலமை தாங்கியவர் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலிபன்.
“சோல்ட்” பொறுப்பாளர் முரளி பரிட்சையைப் பகிஸ்கரிக்க வேண்டும் என வாதிட்டார்.  ஆனால் திலிபன் மேடையிலையே “உயர்தர மாணவர்களின் ஆதரவைப் பெற முடியுமா” என முரளியைப் பார்த்துக் கேட்டார்.  அவரிடம் பதில் இல்லை.  ஆகவே மாணவர்களின் ஆதரவில்லாமல் பரிட்சையைப் பகிஸ்கரிக்க முடியாது என்று திலிபன் அறிவித்தார். 

எனக்கு பெரும் நிம்மதியாக மகிழ்வாக இருந்தது….
இந்த நிகழ்வு  பொதுவெளியில் என்னை அறிமுகப்படுதியது. ஆனால் எனது மொழி யாழ்பாண மொழியாக இல்லாதிருந்ததால்….பலருக்கு குழப்பம்….” புலி என்னை பயன்படுத்தி நாடகமாடியதா..” எனவும் “நான் புலியா அல்லது புலி எதிர்ப்பாளனா” என மாணவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவியது.
 
ஆனால் நான் மீண்டும் பரிட்சைக்கு நிம்மதியாகப் படிக்க ஆரம்பித்தேன்.

தொடரும்…

Edited by meerabharathy

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மீராபாரதி தனது "சொந்த அனுபவத்தை..தனது பார்வையில்" எழுதும் போது..சிலபேருக்கு ஏன் எரியுதோ தெரியவில்லை....

 

எல்லாரு"மே..மே..மே..மே" கூட்டமாக இருக்கனுமா?

 

மீரா அவரது பார்வையில் எழுதுகிறார்.. அதில் தவறேதும் இல்லை. ஆனால் முழுமையான காட்சியை வெளிக்கொணர்வது ஏனைய வாசகர்களின் கடமை.. இல்லாவிட்டால் புதியவர்கள் இக்கதையை வாசிக்கும்போது பக்கத்து பங்கரில் நின்ற புலிகள் ரெலோவின் பங்கருக்குள் காரணமில்லாமல் சுட்டார்கள் என்கிற விம்பம்தான் கிடைக்கும்..

 

ஒரு உதாரணத்துக்கு இப்படி ஒரு கதை..

 

கழுத்து இறுகிகிறது.. வலியின் அகோரம் புரிந்து பின்னர் ஒரு பரவச நிலை.. நினைவு தவறுகிறது.. மனித உயிரை இன்னொரு உயிர் பறித்துவிட்டது.. :( ஆட்டோ சன்கரை தூக்கில் போட்டுவிட்டார்கள்.. :(

 

எப்பிடி இருக்கு? :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்முறை எழுத்துப் பிழைகள் குறைவு, ஆனாலும் ஆங்காங்கே இருக்கு அதையும் கவனத்தில் எடுத்து தொடருங்கள் அண்ணா... :)

மீரா.. !   கந்தன் கருணை வீட்டில் கொல்லப்பட்டவர்கள் தொகை சரியா...??  எனக்கும் உறுதியாக தெரியவில்லை...   ஞாபகத்தில் இருக்கும் மட்டில் 47 பேராக இருக்க வேண்டும்...    அதில்  EPRLF காறர்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு  அவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த 4 புலிகளும் அடக்கம்... 

 

 

அண்ணோய்! கந்தன் கருணை வீடு என்பது பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி நீங்கள் பார்த்ததை மட்டும் ஒரு பக்க சார்ப்பில்லாமல் எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்! கந்தன் கருணை வீடு என்பது பிழை.

 

கந்தன் கருணை வீடு... ஸ்ரான்லி வீதியிலுள்ள... முன்னாள் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான மூன்றுமாடிகளைக் கொண்ட அவரின் வதிவிடம் என நினைக்கின்றேன் கரன்.

மீராபாரதி குறிப்பிடுவதைப் போல... கோவில் வீதியில் கந்தன் கருணை வீடு இருக்கின்றதா.... என்று சரியாகத் தெரியவில்லை.

சிறி அண்ணை,கந்தன் கருணை வீடு கோயில்வீதியில தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கரன் நீங்கள் கூற நினைப்பதை எழுதலாமே ஏன் தயக்கம்??

தொடருங்கள் மீராபாரதி. அனைத்துப் பக்கங்களையும் நாம் அறியத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன்;
கனடா கதா(தை)நாயர்களுக்கு நாங்களும் வருவோமோ? இப்படியாவது எங்கடை செட்டஸ் கூட்டுவம் எண்டுதான்...

எனக்கு மீரா மாதிரி இப்படி அதிகம் தெரியாது, நாங்கள் அவரை விட யூத் கண்டிக்களோ, ஆனால் இந்த ஊர்வலம் கொஞ்சம் ஞாபம் இருக்கிறது.

 

இதுதான் எமது போராட்த்தின் ஆரம்ப நிலை என்று எண்ணாமல், இப்படியும் எமது போராட்டம் மக்களால் விளங்கப்பட்டது/விளங்கி கொள்ளப்பட்டாது  என்று என்று இன்னும் 10 பேர் புரிந்து கொண்டாலே இந்த மாதிரி பதிவுகள் தமது இலக்கை அடைந்து விடும் என்று எண்ணுகிறேன்.

போராட்டத்தின் கதாநாயர்கள் சில காலம் வில்லங்களாகவும் இருந்தார்கள், சிலருக்கு அந்த பாத்திரம்தான் தொடர்ந்து பொருந்துவதுதான் கவைலையான விடயம். அதே நேரத்தில் சில கதாநாயர்கள் தங்கள் பிறக்கும் போதே, ஒரு கையில் ஸிரிப்ட் உம், மற்றக்கையில் ஹன்ஸிகா ஆகவும் பிறந்தார்கள் என்று அளப்பாதுதான் கொடுமை. அந்த கனவு கதாநாயர்கள் தங்களுக்கு வாய்ப்புகள் குறைந்த போதோ அல்லது புதிய ?கதாநாயர்கள் வரும்போதோ காலத்திர்க்கு காலம் வில்லன் பாத்திரம் எடுத்தது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை.

இப்படியான பதிவுகள், எந்த இடத்தில் யார் யார் என் மாறினார்கள் என்றும் எதற்காக அப்படி செய்தார்கள் என்றும் சொன்னால் மாறி மாறி "சொறி தேய்க்கும்" அன்பர்கள் நண்பர்கள் ஒரு ஆளுக்கு ஆள் மருந்து மாத்திரையாக வருவார்கள்.
தந்தை செல்வா களத்தில் இருந்து அகலும் போது சொன்னது, தமிழரை  கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று, ஆனால் இன்று  பிரபாகரன் களத்தில் இல்லாத  போது அதுவும் இல்லை என்பது யோசிக்க வேண்டிய விடயம். இன்னுமொரு இடத்தில் நான் நினைக்கிறேன் ஜீவா என்று, சொன்னது, விடுதலைபுலிகளின் தியாத்தில் அவர்களது குறைகள் சொல்லுவது பிழை என்று பலர் எண்ணுகிறார்கள் என்று. மிகச்சிறந்த ஒரு கருத்து. இங்கே சிலர் சொல்லவருகிறார்கள் அவர்களின் பிழைகளை சொல்லுவதன் மூலம் அவர்களின் தியாகம் மறைக்க அல்லது மழுங்கபடுகிறது என்று. அது ஒரு தவறான கருத்து அல்லது கருதுகோள்.

 

மீரா பாரதி சொல்லுவாரோ தெரியவில்லை;
எனக்கு அந்த கால நினைவுகள் வந்தால் சொல்லுகிறேன், டெலோவை அடிப்பதற்க்கு முன், ஊர் முழுக்க கொள்ளை. நாங்கள் இருந்த இடத்தில் ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை, அதை தவிர, எங்கள் வீட்டுக்கு கிட்ட ஒரு புகையிர நிலையமும், அதற்க்கு முன்னாள் ஒர் போஸ்ட் உம் இருந்தது, பாடசாலைக்கு போகிற நாளில் மாதத்தில் 3- 4 அல்லது அதற்க்கு  கூடவோ தெரியவில்லை, காட்டிக்கொடுத்தவர் இருப்பார் கழுத்தில் மட்டையுடனும் நெற்றியில் துப்பாக்கி போட்டுடனும், பத்தில் உள்ள சுவரில் அவர் செய்த குற்றம் என்று ஒரு பட்டியல் இருக்கும்..ஒருநாள் 2 ஓ 3...பக்கத்து பக்கத்து இடங்களில்..அதை பார்த்து விட்டு இரவில் விட்டு ஒண்டுக்கும் போக ஏலாது.
புலி எல்லோரையும் தடை செய்தபிறகு கிட்டத்தட்ட எல்லாம் நின்றாமாதிரி..பிறகு எனக்கு தெரிய 2 பேர் தான் இப்ப ஞாபகம் இருக்கு. வலு குறைவு..பிறகு பங்கர், சுட்டுபோட்டு வீட்டை கொடுப்பது போன்ற தண்டனைகள் தொடங்கியது..அது போஸ்டில் கட்டுவதை விட ஆயிரம் மடங்கு பெட்டர். அதே போல களவுகளும் குறைந்து, கடைகார்களை பிடித்து வைப்பதும், ஒவ்வொரு குடும்பவும் பவுன் கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் வந்தது. ...வில்லனாகவும் கதாநாயகன் ஆகவும் மாறி மாறி எங்கள் போராட்டம் மக்கள் தலையில் பொறிந்தது. மக்களும் அதற்க்கு ஏற்றது போல பங்காளிகளாகவும் திருட்டு சி‌டி இல் பார்பவர்களாகவும் மாறினார்கள். எங்கும் உள்ளது போல ?மத்திய தர வர்க்கம்  அதிகம் பாதிக்க பட்டது. இன்னுமொரு இடத்தில் நெடுக்கால போவான் எழுதியிர்ந்தார், EP பிள்ளை பிடித்த போது  யாரிடம் 10 ஆயிரம் இருந்த்து என்று. அது உண்மையே. என்னிடம்/ எனது குடும்பத்திடம் அது இருந்திந்தால், எனக்கு நல்ல காலமும் இருந்திருந்தால், எமது வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம்   முன்னுக்கு போயிருக்கலாம். நாங்கள் பல்கலையில் 2வருட சோதினைக்கு படிக்கும் போது, எங்களோடு வளவு கிரிக்கெட் விளையாடினவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைகளாகத்தில் இருந்து முதல் வகுப்பில் சித்தி அடைந்து இருந்தார். அதை பார்த்த போது ஏன் வரதராஜா பெருமாளும் ,பிரேமசந்திரனும், பத்மநாபாவும் .......  இன்னும் 4 வருடம் ஆட்சி செய்யவில்ல என்று தோன்றியது....
பிறகு வருகிறேன்.
நன்றி சாத்திரி. எனது ஞாபக சத்தி இன்னும் மங்கி போகவில்லை என்று சான்றிதல் தந்ததிற்க்கு. 

அந்த கந்தன் கருணை வீட்டில் இருந்த 53 ஓ 47 பேரும் திருடர்களா?

 

ஒருத்தன் காதலி வீட்டுக்கு போயி துவக்கால் சுட்‌டு விளையாடினதுக்கு...யாருக்கோ சாவு...

நல்ல வேளை .....

கிட்டு அண்ணைக்கு துவக்கால் சுடவில்லை கிரனைட் எறிந்தார்கள்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.