Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரான்சுக்கு வந்து மூன்று வருடங்களின் பின் மனைவியையும் பிள்ளைகளையும் கூப்பிட்டு விட்டேன் . பிறகு எனது மாமியிடமிருந்து முதல் கடிதம் வருகிறது. (அப்போல்லாம் போனைவிட  அவ கடிதம் எழுதுவதுதான் அதிகம். நானுந்தான். அதில் மகளுக்கு எழுதியிருக்கின்றா  பிள்ளை சுவியைக் கவனமாய் பார்த்துக் கொள்.) எல்லாப் பொறுப்பும் அவளிடம்தான் . அதுவும் ஒரு சுகம்தான்.கிழமைக்கு முப்பது  ரூபாய் தருவாள், மறக்காமல் சொல்வாள் அப்பா மறக்காமல் இருபதுருபாக்கு  டீசல் அடித்து விடுங்கோ.நான் பதினைந்துக்குத்தான். கடையளுக்குப் போனால் வண்டிலுக்கு ஒரு ஈரோ போட்டு  எடுப்பாள், நான்தான்  வண்டிளைக் கொண்டுபோய் விடுவது. இதெல்லாம் சின்னச்  சின்னச் சந்தோசங்கள். அவளுக்கும் தெரியும். :D

:D

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

4300132503ca5ba8c0255ee9f4750bb8

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் வந்தநாள்தொடக்கம் கொண்டுவந்த சாறத்டோடையே படுத்தெழும்புறன்....ரவுசரும் அப்பிடியே கிழியாமல் வைச்சிருந்து அப்பப்ப பாவிக்கிறன். :mellow:  ^_^  :o  :(
 
சாமத்தியவீடு ஒண்டுக்காக போனகிழமை இவள் பாவி ஒருக்கால் கட்டுறதுக்காக  599 ஈரோவுக்கு ஒருசாறி வாங்கியாச்சு........இப்ப என்னடாவெண்டால் லைனிங் வைச்சு பிளவுஸ் தைக்க 25 ஈரோவாம்........"ஒருக்கால் கட்டின சாறி இன்னுமொருக்கால் கட்டமாட்டம்". :o  :o  :huh: .... நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.. :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாறிப்பிரச்சனை சட்டைப்பிரச்சனை உங்கை கன இடங்களில பெரிய தொல்லைதான். உங்கள் உழைப்பை சாமத்தியவீடொன்றுக்காக இழப்பது உரிமை மீறல். கனம் கோட்டார் அவர்களை குமாரசாமிக்கு சரியான தீர்ப்பை வழங்குமாறு குமாரசாமியின் வழக்கறிஞராக இத்தால் வேண்டுகிறேன்.

சரியான தீர்ப்பை சுமேயக்கா தராவிட்டால் இத்தலைப்பில் உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும். :lol:
பி.கு :- சுமேயக்கா இது வெறும் சவுண்டு. கோதாரி பிறகு எனக்கு வட்டம் கட்டி அடிக்கிறேல்ல முதலே சொல்லீட்டன்.nordic-frau.gif

ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் ? தான் யாழுக்கு வருபவர்கள் .புலம் பெயர்ந்தும் நினைக்க முடியாத அடக்குமுறையில் பல பெண்கள் வாழ்வதுதான் உண்மை .வடிவேலு கோவை சரளா பாணியில் விரலை காட்டி எண்ண சொல்லி அடிக்கும் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள் .

அந்த ஒரு வட்டம் இருக்கு மட்டும் தான் ---------- பலரின் பிழைப்பும் நடந்தது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண் சிங்கங்கள் ஒரேயொரு பழையை கசங்கின பட்டுவேட்டியை அயன்பண்ணி...அயன்பண்ணி எல்லாகொண்டாட்டதுக்கும் கட்டுறம்....ஆனால் இவளவையள் மட்டும் ஒவ்வொரு பங்ஷனுக்கும் புதிசுபுதிசாய் கல்லுபதிச்ச சாறியளாய் வாங்கி எங்கடை கழுத்தை திருகிறாளவை.........இப்ப சொல்லுங்கோ ஆருக்கு சுதந்திரம் கூட????? இன்னும் எழுதினனெண்டால் அழுதிடுவன் :(  :(  :(

உங்களுக்காகத் தான் பரிமளம் விலை உயர்ந்த சாறி எல்லாம் வாங்குறா.  வெளிக்கிடுப் போகேக்கை ஆட்கள் கதைப்பினம் எல்லே பார் குசா என்ன மாதிரி மனிசியை வைச்சிருக்கிறார் எண்டு. எல்லாம் புண்ணியமும் உங்களுக்குத் தான் குசா. அதை விளங்காமல் உப்பிடி .......................

குசா அண்ணையின்ர வேட்டியையும், சாரத்தையும் பாத்திட்டுப் பரிமளம் அன்ரியைப் பற்றிப் பிழையா விளங்க மாட்டினமா, அலை?

ஒரு செத்த வீட்டுக்குக் கூட மனுசன் அந்தப் பட்டு வேட்டியைத் தானே கட்டுதெண்டு! :D

சூப்பர் நெடுக்கு.  Realistic.

நன்றி. படத்தில் எல்லாமே நல்ல இருக்கு. (கதை, சம்பவங்கள், சூழ்நிலைகள்... etc. ) 

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

இந்தப்பக்கமும் அதே நிலைதான்.............
இந்த நாடுகளில் பணம் ஒரு மனிதனை பாதாளம் வரை கொண்டு செல்லும் ஆபத்து இருப்பதால்.
அது ஒரு பாதுகாப்பு என்றுதான் படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் ? தான் யாழுக்கு வருபவர்கள் .புலம் பெயர்ந்தும் நினைக்க முடியாத அடக்குமுறையில் பல பெண்கள் வாழ்வதுதான் உண்மை .வடிவேலு கோவை சரளா பாணியில் விரலை காட்டி எண்ண சொல்லி அடிக்கும் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள் .

அந்த ஒரு வட்டம் இருக்கு மட்டும் தான் ---------- பலரின் பிழைப்பும் நடந்தது .

எமது கல்வி முறை ஒரு காரணம் என்று நான் நம்புகிறேன். இது படித்த மட்டத்தில் நிறையவே இருக்கிறது. (நீங்கள் அதை மறுத்துத்தான் ஆகவேண்டும் உங்கள் வேஷம் அப்படி). சமூகம் சார்ந்த அறிவு அரிதாகவே இருக்கிறது. வெறும் புத்ததகத்தை பாடமாக்கி அதில் பாசாகியவர்களே எமது சமூகத்தில் படித்தவர்கள்.
அவர்களிடம் பாசாங்கு அளவின்றி இருக்கிறது. பண்பு என்று எதுவுமே இல்லை.
அறிவு என்ற சொல்லுக்கு அடிப்படையே அங்கே இல்லை.
 
ஏழைகளை  பொறுத்த மட்டில்  அவர்களால் முடிந்ததைத்தான் செய்ய முடியும். ஏழ்மையில் இருந்து அவர்களை தூக்கும் வரைக்கும் அங்கே எல்லா தவறுகளும் நடந்துகொண்டே இருக்கும். ஒரு அறிவுள்ள மனிதனால் அவர்களை கை நீட்டி சாட  முடியாது. அவர்களுடைய வாழ்வு ஒரு வட்டத்திட்குள்தான் இருக்கும். 
 
நான் படித்தவன் ...... படித்தவன் என்று சொல்லுவோர்கள்.......
படிக்கும் வரை இவற்றை மாற்ற முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காகத் தான் பரிமளம் விலை உயர்ந்த சாறி எல்லாம் வாங்குறா. வெளிக்கிடுப் போகேக்கை ஆட்கள் கதைப்பினம் எல்லே பார் குசா என்ன மாதிரி மனிசியை வைச்சிருக்கிறார் எண்டு. எல்லாம் புண்ணியமும் உங்களுக்குத் தான் குசா. அதை விளங்காமல் உப்பிடி .......................

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தி எங்கட உடம்பை ரணகளமாக்கியதுதான் மிச்சம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் உள்ள தமிழ்ப் பெண்களின் சுதந்திரம் என்னவென்று அறிய வெளிக்கிட்டபோது, இங்கும் பெண்களை வெளியுலகம் தெரியாதபடி வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதே வாழ்வின் விதி என்று வாழ்கின்றார்களாம். சமூக அக்கறையுள்ள மெசோ ஆன்ரி போன்ற பெண்கள் இப்படியானவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு ஆரம்பித்தால் நல்லது. :icon_idea:

நான் ஏற்கனவே ஒரு அமைப்பைப் பதிவுசெய்துவிட்டேன். ஆரம்பிக்கும் போது உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்களை அனுப்புங்கள்.

இந்தத் திரியை உருவாக்கிய சுமேக்கு நன்றிகள் கோடி. எவ்வளவு சந்தோசமாய் இருக்கு வாசிக்க  :lol:

அலைமகளுக்கு விடுப்புச் சுந்தரி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறேன். :lol: :lol:

மனைவியின் சுதந்திரம்பற்றிய ஆய்வுகளில் இங்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தங்கள் கேள்வி ஞானத்திற்கிணங்கவும், அனுபவத்திற்கு இணங்க உண்மையாகவும், நகச்சுவையாகவும் பகிர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், இயற்கையின் தத்துவத்தை உணர்ந்த பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் உணரப்படவில்லை. பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். ஆண்பாதுகாக்க வேண்டியவன். இது இயற்கையின் தார்ப்பரியம் யாராலும் மீறமுடியாதது. பெண் அளவிடமுடியாத அதீத சக்தி உடையவள். அந்தச் சக்தியை எளிதில் அடக்கவே முடியாது ஆகையால்தான் பெண்ணை பூப்போல மென்மையாக்கி அடக்கமாக இயற்கை வைத்துள்ளது. பெண்ணால் அடக்கி ஆளப்படும் ஆண்கள் நிறையவே உள்ளனர். ஆனால் அவர்களைப் பெண்கள்கூட உயர்வாக மதிப்பதில்லை அதுமட்டுமல்ல ஆண்களை அடக்கிவாழும் பெண்களையும் பெண்களே உயர்வாக மதிப்பதில்லை என்பதும் அனுபவபூர்வமான உண்மை.

இதனை உணர்ந்துதான் திருவள்ளுவரும் பெண்ணின் மென்மைக்கு இணையான நாணத்தை தனது குறளில் இவ்வாறு கூறியுள்ளார்.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

திருவள்ளுவர் ஆண் இல்லையா?????

ஈசன்ர லவ் இப்படியானது. அது அவருக்கு மட்டுமே தான் விளங்கும்..!

நல்லதொரு குறும்படம்.எவ்வளவு பொருத்தமாக ஈசனின் நிலையைக் கண்டுபிடித்துப் போட்டுள்ளீர்கள் நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வந்தநாள்தொடக்கம் கொண்டுவந்த சாறத்டோடையே படுத்தெழும்புறன்....ரவுசரும் அப்பிடியே கிழியாமல் வைச்சிருந்து அப்பப்ப பாவிக்கிறன். :mellow:  ^_^  :o  :(
 
சாமத்தியவீடு ஒண்டுக்காக போனகிழமை இவள் பாவி ஒருக்கால் கட்டுறதுக்காக  599 ஈரோவுக்கு ஒருசாறி வாங்கியாச்சு........இப்ப என்னடாவெண்டால் லைனிங் வைச்சு பிளவுஸ் தைக்க 25 ஈரோவாம்........"ஒருக்கால் கட்டின சாறி இன்னுமொருக்கால் கட்டமாட்டம்". :o  :o  :huh: .... நோட் திஸ் பாய்ன்ட் யுவர் ஆனர்.. :icon_idea:

சிலருக்கு பழைய ஆடைகளை திரும்பத் திரும்பப் போடுவதில் ஆனந்தம். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை. நான் ஒரு நாளுமே பணத்தை விரயமாக்கி சேலை எடுப்பதில்லை. நீங்கள் உங்களுக்குப் புதிய ஆடை வாங்காதது உங்கள் தவறு. நீங்கள் கேட்டு மனைவி இல்லை என்று சொன்னாரா???? அதுக்கும் இல்லையே???  நீங்கள் கஞ்சப்பிசினாரியாக இருந்துகொண்டு மனைவியை ஏன் குறை சொல்லுவான்.

துணிஞ்சு காலை நிலத்தில வடிவா ஊண்டி நிண்டு கேள்வி கேட்கவேணும் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான தீர்ப்பை சுமேயக்கா தராவிட்டால் இத்தலைப்பில் உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

பி.கு :- சுமேயக்கா இது வெறும் சவுண்டு. கோதாரி பிறகு எனக்கு வட்டம் கட்டி அடிக்கிறேல்ல முதலே சொல்லீட்டன்.nordic-frau.gif

நீங்கள் சவுண்டை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைச்சதால சரி உங்களை அப்பிடியே விடுறன்.

ஓரளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் ? தான் யாழுக்கு வருபவர்கள் .புலம் பெயர்ந்தும் நினைக்க முடியாத அடக்குமுறையில் பல பெண்கள் வாழ்வதுதான் உண்மை .வடிவேலு கோவை சரளா பாணியில் விரலை காட்டி எண்ண சொல்லி அடிக்கும் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள் .

அந்த ஒரு வட்டம் இருக்கு மட்டும் தான் ---------- பலரின் பிழைப்பும் நடந்தது .

நீங்கள் ஒருவராவது ஒத்துக்கொண்டீர்களே அண்ணா.

குசா அண்ணையின்ர வேட்டியையும், சாரத்தையும் பாத்திட்டுப் பரிமளம் அன்ரியைப் பற்றிப் பிழையா விளங்க மாட்டினமா, அலை?

ஒரு செத்த வீட்டுக்குக் கூட மனுசன் அந்தப் பட்டு வேட்டியைத் தானே கட்டுதெண்டு! :D

உண்மையிலேயே இங்க அப்பிடி ஒண்டு நடந்தது. இங்கு பிறந்து வளர்ந்து கலியாணம் கட்டின ஒருவரின் மாமனார் இறந்ததற்கு அவரைப் போய் வெட்டி கட்டிக்கொண்டு வந்து நில்லுங்கோ என்று கூற அவர் தன் திருமண வேட்டி சட்டையைப் போட்டுக்கொண்டு வந்தது செத்தவீட்டுக்குப் போனவர்களுக்கு அதிர்ச்சி.

இந்தப்பக்கமும் அதே நிலைதான்.............
இந்த நாடுகளில் பணம் ஒரு மனிதனை பாதாளம் வரை கொண்டு செல்லும் ஆபத்து இருப்பதால்.
அது ஒரு பாதுகாப்பு என்றுதான் படுகிறது.

அப்பிடி ஒத்துக் கொள்ளுங்கோ மருதங்கேணி. :D

சிலருக்கு பழைய ஆடைகளை திரும்பத் திரும்பப் போடுவதில் ஆனந்தம். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை. நான் ஒரு நாளுமே பணத்தை விரயமாக்கி சேலை எடுப்பதில்லை. நீங்கள் உங்களுக்குப் புதிய ஆடை வாங்காதது உங்கள் தவறு. நீங்கள் கேட்டு மனைவி இல்லை என்று சொன்னாரா???? அதுக்கும் இல்லையே???  நீங்கள் கஞ்சப்பிசினாரியாக இருந்துகொண்டு மனைவியை ஏன் குறை சொல்லுவான்.

துணிஞ்சு காலை நிலத்தில வடிவா ஊண்டி நிண்டு கேள்வி கேட்கவேணும் அண்ணா.

:lol:  :lol: ம்ம்....

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் ஆண் இல்லையா?????

திருவள்ளுவர் சிலைவடிக்க கருநாநிதிக்கு உளி எடுத்துக் கொடுத்த மெசொபொத்தேமியா சுமேரியருக்கே சந்தேகமா????? :huh:  :o  :(  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் சிலைவடிக்க கருநாநிதிக்கு உளி எடுத்துக் கொடுத்த மெசொபொத்தேமியா சுமேரியருக்கே சந்தேகமா????? :huh:  :o  :(  

அவர் பெண் சுதந்திரம் பற்றி எங்காவது கூறியுள்ளாரா பாஞ்ச்?????

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் பெற்றுத்தருவது சுதந்தரமல்ல. எங்களுடைய முயற்சியால் பெற்றுக்கொள்ளும் சுதந்திரமே நிலைத்து நிற்கும். இயற்கையுடனும் போராடித்தான் ஒரு உயிர் சுதந்திரமாக வாழ முனைகிறது. :)

திருவள்ளுவர் ஆண் என்பதுதான் உண்மையென்று வரலாற்றில் உள்ளது ஆனால் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதியவர்கள் எல்லோருமே உண்மையை எழுதியுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழவைக்கும் உதாரணத்தையும் காணுங்கள்: :rolleyes:

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

தினமும் தெய்வத்தை தொழுபவள், தெய்வத்திற்குப் பதிலாக வயலை உழவுசெய்யும் ஏரைத் (கொழுவிற்கு ஏர் என்றும் பொருளுண்டு) தொழுதெழுகிறாள். உழவுத்தொழில்பற்றி அதீத ஞானமுடையவள் என்றும் அப்பெண்ணை வள்ளுவர் காண்பதாக, அவருடைய குறளுக்கு ஏன் பொருள் கொள்ளக்கூடாது!. அத்துணை திறன் கொண்ட பெண்ணுக்கு மழை எப்போது பெய்யும் என்பதை சொல்லியா கொடுக்கவேண்டும்!. அவள் மழை பெய்யுமென்றால் பெய்யும்!  :wub:

மகளிருக்குக் கல்வியும் மிக முக்கிய காரணம். அவர்களும், ஆண்களுக்கு நிகராக உயர கல்வி பெற்று, அனைத்துத் துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், திருவள்ளுவர் பெயரிலேயே, திருவள்ளுவர் பல்கலைக் கழகம் ஒன்று தமிழகத்தில் உள்ளதாகவும் அறிந்துள்ளேன். :o  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அலைமகள் தான்.... உண்மையான தமிழ்மகள். ஊர் விடுப்பு அறிவதில், அவ்வளவு சந்தோசம் போல இருக்கு. :D:lol:

அலை அக்காக்குக்கு சந்தோசம் வீட்டு காரர அடக்கி அதிகாரம் பண்ணுறதில எல்லா பொண்டாட்டிங்களும் தன்ன மாதிரியே இருக்காங்க எண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் பெற்றுத்தருவது சுதந்தரமல்ல. எங்களுடைய முயற்சியால் பெற்றுக்கொள்ளும் சுதந்திரமே நிலைத்து நிற்கும். இயற்கையுடனும் போராடித்தான் ஒரு உயிர் சுதந்திரமாக வாழ முனைகிறது. :)

திருவள்ளுவர் ஆண் என்பதுதான் உண்மையென்று வரலாற்றில் உள்ளது ஆனால் தி

நாமாகப் பெற்றுக்கொள்வதிலும் யாராவது பெற்றுக் கொடுப்பதையே பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் விரும்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் மற்றவரைப் பார்த்து உடனே திருந்தவா போகின்றனர். அதற்கு ஊருக்கு பத்துப்பேர் என்போன்றவர்கள் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் மற்றவரைப் பார்த்து உடனே திருந்தவா போகின்றனர். அதற்கு ஊருக்கு பத்துப்பேர் என்போன்றவர்கள் வரவேண்டும்.

 கடவுள்தான் காப்பாற்றவேண்டும். :blink:  சுமேரியரையா! ஊரையா! என்பதை உறவுகள்தான் முடிவுசெய்யவேண்டும். :lol:  :D  :o  

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர்களை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நீங்கள் குடும்பம் என்ற பொதுமைச் சிறைக்குள் நின்றுகொண்டு அந்தச் சிறைக்குள் எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்று அளவுகோல் கேட்கிறீர்கள்....... :icon_mrgreen:  

இருப்பதே சிறைக்குள்..... :unsure: அதற்குள் என்ன பெரிதாக சுதந்திரம் இருக்கப்போகிறது? :(  ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லாம் சமமே :D

இதைத்தான் நானும் எழுதியிருந்தேன்

நானே அடிமை

என்னிடம் சுதந்திரம்  கேட்கின்றீர்கள் என்று........ :lol:  :D

சமூகக்கட்டுப்பாடுகளுக்குள்ளும்

அதன் வழி நடத்தல்களுக்குள்ளும்  கட்டுப்பட்டு

என்னைத்துலைத்து வாழும் அடிமை நான்.

என்னிடமிருந்து எப்படி நீங்கள் உரிமையை  எதிர்பார்க்கமுடியும்???

எனது பிள்ளைக்கே 

சில தடைகளை  என்னால் விலத்தமுடியாத போது.........

மனைவிக்கு............??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.