Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும்.

இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம்.

இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒரு சீனப் பெண் தலையை எவ்விதத்திலும் சரிக்காமல் நேராக இருந்து தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்கும் கொஞ்சநேரம் தூங்கினால் என்ன என்ற ஆசை எழுகிறது. மனதை அடக்கியபடி மீண்டும் மற்றவர்களில் பார்வையைப் பதிக்கிறேன்.

அடுத்த தரிப்பிடத்தில் பலரும் இறங்க இருக்கைகளில் பல வெறுமையாக, ஒரு தந்தையுன் மகனும் வந்து எனக்கு முன்னால் அமர்கின்றனர். தந்தை மொட்டைத் தலையுடன் பார்க்கும் போதே அவரில் ஒரு கள்ளப் பார்வை தெரிவதுபோல் என்மனம் உணர்கிறது. மகனுக்கு ஒரூ பத்து வயதாவது இருக்கும். ஆனால் கால்களைத் தூக்கி தந்தையின் கால்களில் போட்டபடி சூப்பிப் போத்தலில் பாலை அருந்தியவாறு இருக்கிறான். அவன் பாலை அருத்துகிறானா அல்லது சும்மா வாயுள் அதை வைத்திருக்கிறானா என்பதில் எனக்குச் சந்தேகம்.

நான் childcare படிக்கும்போது பலவிதமான சிறுவர் பாலியல்த் துர்ப்பிரயோகம் பற்றி ஆசிரியை கூறியவை எல்லாம் என் கண் முன்னால் வந்து என் நின்மதியைக் கெடுக்கின்றன.

இவர்கள் உண்மையிலேயே தந்தையும் மகனும்தானா??? அல்லது இந்தப் பையனை எங்கிருந்தாவது கடத்திவந்து இவன் வைத்திருக்கிறானோ ?? அப்படியாயின் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டுப் போவது தவறு என்று உள்மனம் கூற இவர்களைப் பற்றி அறியவே வேண்டும் என என்மனம் ஆசை கொள்கிறது. தெரியாத ஒரு அந்நிய ஆணிடம் அதுகும் எந்தவித அழகோ அன்றி நல்ல மனிதனுக்குள்ள உருவ அமைப்போ இல்லாத அவனிடம் எப்படிக் கதைப்பது என என்மனம் சண்டித்தனம் செய்கிறது.

பெரிய பெடியனாக இருக்கிறான். பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பது சட்டப்படி குற்றம் என்று எண்ணியபடி அந்தப் பையனைப் பார்த்து நீ பாடசாலைக்குப் போகவில்லையா என்று கேட்கிறேன். அவன் எனக்கு எந்தப் பதிலும் சொல்லாது சூப்பிப் போத்தலை வாயில் வைத்திருக்கிறான். தந்தையைப் பார்த்தால் அவர் விளங் காததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார். மீண்டும் தந்தையைப் பார்த்தே கேள்வியைக் கேட்கிறேன்.

அவனோ நான் கேட்டது விளங்காததுபோல் என்ன என்கிறான் மீண்டும். உன் பிள்ளை பள்ளிக்குச் செல்வதில்லையா என்று பொறுமையை வரவழைத்துக்கொண்டு மீண்டும் கேட்கிறேன். அந்தச் சிறுவன் நேராக இருப்பதற்கு முயற்சி செய்கிறான். அவனோ அப்பையனை அப்படி இருக்க விடாது கால்களை தன் கால்களின் மேல் இழுத்து வைப்பதுமாக சிறுவன் மீண்டும் முயல்வதுமாக சிறுவன் என்ன விடு விடு என்று கூறியபடி கால்களை இழுக்கிறான். அவனோ விட்டபாடு இல்லை. பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு என்கால்களை அவன் இழுத்து வைப்பதுபோல் இருக்க, ஏன் அவனைத் தடுக்கிறாய். நேராக இருக்க விடு என்கிறேன்.

அவன் கோபத்துடன் புரியாத மொழியில் எதோ சொல்கிறான். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சிறுவன் என்னை விடு என்று ஆங்கிலத்தில்த்தான் கூறினான். இவன் ஏன் வேறு மொழி பேசுகிறான் என்று எண்ணியவாறே உனக்கு ஆங்கிலம் தெரியாதா என்கிறேன். அவன் மீண்டும் அந்த மொழியிலேயே எதோ சொல்ல எனக்குக் கோவம் வருகிறது.

இப்பொழுது அந்தப் பெட்டியில் நானும் அவர்களும்தான். அவன் சிறுவனிடம் குனிந்து காதுக்குள் குசுகுசுக்கிறான். எனக்கு இவன் என்ன சொல்கிறான். பாவம் அந்தப் பையனை இவன் தவறாகத்தான் பயன்படுத்துகிரான்போல என்று எண்ணியபடி இவன் உன் மகனா என்று அவனைக் கேட்கிறேன். அவன் எந்தப் பதிலும் கூறாது எங்கோ பார்க்கிறான். நான் சிறுவனைப் பார்த்து இவர் உன் அப்பாவா என்று கேட்கிறேன். சிறுவன் இல்லை என்று தலை ஆட்டியவன் அவன் எதோ உறுக்க மீண்டும் ஓம் என்று மேலும் கீழுமாய்த் தலையை நிறுத்தாமல் ஆட்டுகிறான்.

ஒரு குற்றத்தைக் கண்டாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அதுபற்றி உரியவர்களிடம் அறிவிக்க வேண்டியது ஒவ்வொருப்வரின் கடமை. எனக்கு இவன் நேர்மை இல்லை என்று மனம் சொல்கிறது. ஆனாலும் அதை எப்படி நிரூபிப்பது என்று தெரியாமல் யோசனையுடன் இருக்கிறேன். மீண்டும் அவனைப் பார்த்து நீ எங்கே வசிக்கிறாய் என்று கேட்கிறேன். அவன் எதோ திட்டிவிட்டு அந்தப் பையனை இறுக்க அணைத்தபடி என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து அமர்ந்திருக்கிறான்.

இன்று இவனை விடுவதில்லை என்று மனதில் எண்ணிக்கொண்டு சில திட்டங்களைப் போடுகிறேன். ஆனாலும் மனதில் ஒரு படபடப்பும் கூட ஒட்டிக் கொள்கிறது. அவர்கள் இருவரையுமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஒருமுறை என்பக்கம் திரும்பிப் பார்த்தவன் நான் அவர்களையே பார்ப்பதை கண்டதும் சடாரெனத் தலையைத் திருப்பிக் கொள்கிறான்.

அடுத்த தரிப்பு வந்ததும் எதிர்பாராது பையனை இழுத்துக்கொண்டு அவன் இறங்க நானும் விரைந்து என் கைப்பையைத் தூக்கியபடி பின்னால் இறங்குகிறேன். பையனுடன் விடுவிடு என்று கொஞ்சத்தூரம் சென்றவன் திரும்பிப் பார்க்கிறான். நான் வருவதைக் கண்டதும் அவனின் நடை துரிதமாகிறது. அவனை எப்படியும் தவறவிடக்கூடாது என்னும் ஆர்வத்தில் நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். எப்படியாவது வெளியே வந்தவுடன் போலிசுக்கு போன் செய்துவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வது தான் என் திட்டம். அதனால் மற்ற எதுவும் கண்ணில் படவிடாது அவனையே பார்த்தபடி தொடர்கிறேன்.

எப்படியும் நகரும் படிக்கட்டில் வைத்து அவனைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியபடி அந்த திருப்பத்தில் திரும்ம எதுவோ என்னில் வேகமாக மோத, கைப்பை ஒருபுறமும் ஒரு காலணி ஒருபுறமும் போக விழ இருந்த என்னை ஒரு காப்பிலி இழுத்து நிறுத்துகிறான். என்னை இடித்துவிட்டு தொடருத்தைப் பிடிக்க ஓடிய வெள்ளையும் சொறி சொல்லிவிட்டு மீண்டும் ஓட, நான் காலனியை எடுத்து அணிந்துகொண்டு கைப்பையையும் எடுக்கிறேன். 

அதன் பின்தான் எனக்கு முதல் விடயம் நினைவுக்குவர விரைந்து சென்று படிகளில் தாவித்தாவி ஏறி பிரயாணச் சீட்டை அழுத்திவிட்டு வெளியே வந்தால் தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்.

இது சிறுகதை!!! அருமை. பாராட்டுகள். 

பிறகு என்னப்பா நடந்தது?? என்னெண்டாலும் துணிந்த பெண் தான் நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவத்தை விறுவிறுப்பாக எழுதிய சுமேரியருக்குப் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கதை விறுவிறுப்பாக இருந்தது.. இன்னும் முடியவில்லைதானே?!

ஐயோ பிறகு என்ன  நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

 தேர்த்திருவிழா போல மக்கள் கூட்டம்............  என்ன நடந்தது ... பிடிபட்டுவிடானா ? 

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு .................

நல்ல கதை சுமோ ,மிஸ்கின் ரசிகை ஆகிவிட்டீர்கள் போலிருக்கு .

சுமே அக்காவின் கதைகளில் இது ஒரு பரிமாணம் :)

நன்றாக இருக்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

:D எப்பிடித் தான் இப்படி பக்கத்தில இருக்கிறவனயெல்லாம் சந்தேகப் பட்டுக் கொண்டு நிம்மதியில்லாமல் சீவிக்கிறீங்களோ தெரியாது! ஒருத்தன்  உங்கள் பார்வைக்கு உவப்பாக இல்லா விட்டால் அவன் கிரிமினல் தான் போல! பின் பக்க சீட்டில கோட் சூட் போட்டுக் கொண்டு ஒருத்தன் குழந்தையைக் கடத்திக் கொண்டு போயிருப்பான்! கண்டிருந்தாலும் கோட் சூட்டோட போற  கீரோ எண்டு பேசாமல் போயிருப்பீங்கள் போல! நல்ல vigilante தான் போங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த சோழியன், அலை,வாத்தியார், இசை, கரன், நிலா அக்கா, நுணா, அர்யுன், கவிதை, ஜஸ்டின் ஆகிய உறவுகளே நன்றி. நாளைக்குத் தொடரும் கவலை வேண்டாம். :D :D

நாளைக்குத் தொடரும் கவலை வேண்டாம். :D :D

 

எப்பிடித் தான் உங்களுக்கு மனம் வருகுதோ தெரியாது எங்களைக் காக்திருக்கச் சொல்ல நாளை வரை! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சனக்கூட்டத்துக்க அவனை எங்க தேடித் பிடிக்கிறது. திரும்பிப் போவமோ என்று எண்ணிய மனதை இழுத்து நிறுத்தி, இந்து அவனை ஒருகை பாக்காமல் போறேல்லை என்னும் முடிவுக்கு வந்து சனத்துக்குள் இறங்குகிறேன்.

எனக்கோ இந்த இடம் புதிது. இன்றுதான் முதல் முதல் வருகிறேன். சரி இருக்கவே இருக்கு வாய் என்று எண்ணிக்கொண்டு வலதுபக்க வீதிக்கு விரைந்து சென்று பார்க்கிறேன் அவன் என் கண்களுக்குத் தென்படவில்லை. நேரம் நிறைய ஆகவில்லை. ஆதலால் அவன் நிறையத் தூரம் சென்றிருக்க முடியாது. திரும்பி இடது பக்க வீதியைக் குறிவைத்து விரைகிறேன்.

விரைவாக நடந்ததில் மூச்சு வாங்குகிறது. இரண்டு மூன்றுபேரிடம் கால் கைகளில் இடித்ததில் திட்டு வாங்கியபடி அசட்டுச் சிரிப்புடன் மன்னிக்கவும் என்று சொல்லிக்கொண்டு கிட்டத்தட்ட ஓடுகிறேன். தூரத்தில் அவன் போவது தெரிகிறது. மனதில் படபடப்பும் கூடுகிறது. அவன் என்னைப் பார்க்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டு ஒரு இடைவெளியை வைத்துக்கொண்டே நடக்கிறேன்.

என் கெட்ட காலம் தற்செயலாகத் திரும்பியவன் என்னைக் கண்டுவிட்டான். இப்பொழுது அவன் ஓட்டமும் நடையுமாகப் போகிறான். அந்தப் பையன் நடக்க முடியாமல் கைகளைப் பின்னுக்கு இழுக்க இழுக்க இஅவனும் எதோ திட்டித் திட்டிக் கொண்டே கொற இழுவையில் பையனைக் கொண்டு போகிறான்.

எதற்கும் போலிசுக்கு போன் செய்துகொண்டே அவனைத்துரத்துவோம் என எண்ணிக்கொண்டே கைப்பையைத் திறந்து என் போனை எடுக்கிறேன். போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது.

இப்பொழுது அவனுக்கும் எனக்குமான இடைவெளி கூடியிருந்தது. எனக்குப் பதட்டம் அதிகரிக்க பக்கத்தில் போனவன் ஒருவனை நிறுத்தி ஒருக்கா போலிசுக்குப் போன் செய்கிறாயா என்று கேட்கிறேன். ஏன் என்று கேட்கிறான். அதில் போகும் ஒருவன் ஒரு சிறுவனைக் கடத்திக்கொண்டு போகிறான். உடனே பொலிசுக்குச் சொல்லு நான் அவனைத் தொடர்கிறேன் என்று கூற உனக்கு என்ன பயித்தியமா என்று சொல்லிவிட்டு பயித்தியங்களைப் பார்த்துச் சிரிப்பதுபோல் என்னை நக்கலாகப் பார்த்துச் சிரித்துவிட்டு அவன் போய்விட்டான்.

எனக்கு கோவம் ஒருபுறம். அவமானம் ஒருபுறம், அவனை விடக்கூடாது என்று ஒருபுறம் வீதியைப் பார்க்கிறேன். அவனைக் காணவில்லை. அட வீணாக இவனிடம் கதைத்து அவனைக் கோட்டை விட்டுவிட்டேனே என அங்கலாய்ப்புடன் ஓடுகிறேன். வீதி மேம்பாலம் ஒன்றில் அவன் தலை தெரிகிறது. அவன் பாலத்தால் இறங்குமுன் அவனைப் பிடித்துவிடவேண்டும் என்னும் வெறி எழுகிறது.

நான் பாலத்தால் ஏறி இறங்க அவன் எப்படியும் தப்பிப் போய்விடுவான். அவனை விடக்கூடாது என்றபடி வீதியைக் கடப்போம் என எண்ணினால் வீதியில் இரு மருங்கும் ஆட்கள் கடக்காதவாறு இரும்புத் தடை போட்டுள்ளார்கள். என்னதான் செய்வது என்று ஒரு செக்கன்தான் எண்ணியிருப்பேன் என்ன ஆனாலும் சரி என எண்ணியபடி இரும்புத் தடைக்கு மேலால் ஏறி வீதியில் இறங்க வாகனங்கள் விரைவாகச் சென்றுகொண்டிருக்கின்றன. ஐயோ அவன் இறங்கிறானே. விட்டால் போய்விடுவான் என்னும் பதட்டத்தில் இடையில் புகுந்து வாகனச் சாரதிகளின் காது கிழியும் கோர்ன் சத்தத்தையும் சட்டை செய்யாது ஓடிவருக்கிறேன். அந்தப்பக்கம் இருந்ததுபோல் ஏறுவதற்கு வசதியாகக் கம்பிகள் இல்லை.

அவனோ கீழே வந்துவிட்டான். அவனைப் பிடியுங்கள் அவனைப் பிடியுங்கள். அவன் அந்தச் சிறுவனைக் கடத்திக்கொண்டு போகிறான் என்று கத்துகிறேன். யாரும் நான் கூறுவதை நம்பியதுபோல் தெரியவில்லை. அவன் போகும் பக்கமாகவே வீதியின் கரையாக ஓடுகிறேன். அவனும் இப்ப ஓட ஆரம்பித்துவிடான். திடகாத்திரமான ஒரு ஆபிரிக்க இனத்தவன் வருகிறான். அவனை நிப்பாட்டு என்கிறேன். அவனோ எதற்கு என்று என்னையும் அவனையும் மாறிமாறிப் பார்க்கிறான்.

இவனுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியாது என்று எண்ணி, எனக்கு அந்தப் பக்கம் வர உதவி செய் என்று கேட்க அவனும் என் கைகளைப் பிடித்து வா என்கிறான். நான் கால் ஊன்றி ஏறுவதற்கு வசதியாக ஏதும் இல்லை. அவன் அதை விளங்கிக் கொண்டு தான் பாய்ந்து இந்தப் பக்கம் வருகிறான். என் இடுப்பின் இரு பக்கமும் என்னைப் பிடித்து அந்தப் பக்கம் தூக்கி விடுகிறான்.

நான் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் தலைதெறிக்க ஓடுகிறேன். நான் சிறுவயதில்  விளையாட்டுப் போட்டிகளில் ஓடியவை எல்லாம் என் நினைவில் வந்து என்னை விரைந்து ஓடச் செய்கின்றன. நான் அவனை அண்மித்துவிட்டேன். என் களைப்பையும் பொருட்படுத்தாது நில்லு என்று கத்தியபடி இரண்டு கைகளாலும் அவனை எட்டிப் பிடிக்கிறேன். 

கேய் என்று யாரோ என்னைப் பிடித்து உலுப்புகிறார்கள். நான் திடுக்கிட்டுக் கண்விழிக்கிறேன்.ரெயின் இதுக்கு மிஞ்சிப்  போகாது இறங்கு என்று மஞ்சள் உடை போட்ட ஒருவன் எனக்குக் கூறுகிறான். அட நான் இத்தனை நேரமும் கண்டது கனவா என்னும் ஏமாற்றம் என்னைத் தழுவ, சோர்வுடன் இறங்குகிறேன்.

இறங்கியபின் பார்த்ததால் நான் இறங்கவேண்டிய இருப்பிடம்  கழிந்து ஒரு மணிநேரம் ஆகியிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே தொடக்கமும் முடிவும் வாசித்து விட்டேன். இனித்தான் நடுவால வாசிக்கவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதமும், கடுப்பேத்த்திய விதமும் நல்லாயிருக்கு! :icon_idea:

 

நான் உங்கட பிக்காடில்லி லயினில ஏறி, Cockfosters  தரிப்பிடத்தில, ரயிலைத் துப்புரவு செய்யிற ஆக்கள், நித்திரையால எழுப்பி, வெளியால கொண்டுவந்து விட்ட கதையும் இருக்கு! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போலவே தொடக்கமும் முடிவும் வாசித்து விட்டேன். இனித்தான் நடுவால வாசிக்கவேணும்

 

இதில் ஒரு பந்தி எழுதும்போது உங்கள் ஞாபகம்தான் வந்தது நந்தன். நீங்கள் சொல்லாமலேயே நீங்கள் முழுவதும் வாசிக்கவில்லை என்று தெரிகிறது.

 

முதல் பாகத்தை படித்த பொழுது, இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பினேன். இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே புரிந்து விட்டது, இது கனவு என்று.

ஒரு திடகாத்திரமான ஆபிரிக்கன் உங்கள் இடுப்பை பிடித்து தூக்கியதாக நீங்கள் கனவில் கண்ட காட்சி ஆராயத்தக்கது :-)

Edited by சபேசன்

நல்லவேளை கனவா போட்டுது நான் பயந்து போனன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதமும், கடுப்பேத்த்திய விதமும் நல்லாயிருக்கு! :icon_idea:

 

நான் உங்கட பிக்காடில்லி லயினில ஏறி, Cockfosters  தரிப்பிடத்தில, ரயிலைத் துப்புரவு செய்யிற ஆக்கள், நித்திரையால எழுப்பி, வெளியால கொண்டுவந்து விட்ட கதையும் இருக்கு! :o

 

அந்தக் கதையையும் எழுதிறதுதானே புங்கை.

 

நல்லவேளை கனவா போட்டுது நான் பயந்து போனன் :lol:

 

உங்களையே கலைச்சனான். :lol:  :lol:  நீங்கள் எதுக்குப் பயப்பிட வேணும் ????

 

முதல் பாகத்தை படித்த பொழுது, இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பினேன். இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே புரிந்து விட்டது, இது கனவு என்று.

ஒரு திடகாத்திரமான ஆபிரிக்கன் உங்கள் இடுப்பை பிடித்து தூக்கியதாக நீங்கள் கனவில் கண்ட காட்சி ஆராயத்தக்கது :-)

 

:D :D

 

  • கருத்துக்கள உறவுகள்
அவன் அதை விளங்கிக் கொண்டு தான் பாய்ந்து இந்தப் பக்கம் வருகிறான். என் இடுப்பின் இரு பக்கமும் என்னைப் பிடித்து அந்தப் பக்கம் தூக்கி விடுகிறான்
தொடர் கனவுக்கு நன்றிகள்......ஒரெ வித்தியாசமான கனவா காண்கிறீர்கள்

முதலாவது பகுதியோடே நிறுத்தி இருக்கலாம். கதைக்கான விடயம், பாத்திரங்களின் விவரிப்பு, சூழலின் சித்தரிப்பு, முடிவில் சிறு திருப்பம் என முழுமையான ஒரு சிறுகதைக்கான அம்சங்கள் யாவும் அதில் இருந்தன. அதனால்தான் அதை சிறுகதை எனக் குறிப்பிட்டேன். 2ஆம் பகுதியை போட்டு...???  :wub:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கனவுக்கு நன்றிகள்......ஒரெ வித்தியாசமான கனவா காண்கிறீர்கள்

 

கனவில வந்ததைச் சொன்னன். :D

 

போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது. ////

 

ஒரு முற்றிலும் மாறுபட்ட கட்டத்திற்கு உங்கள் அக்கம் செல்கின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . அதே வேளையில் கதை சொல்லும்பொழுது நம்பகத்தன்மையையும் கவனத்தில் எடுப்பது நன்று . இன்றைய கைத்தொலைபேசிகள் யாவுமே உள்ளுர் அவசரத்தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஐரோப்பிய அவசரத்தொலைபேசி அழைப்புகள் ( 112 ) அவை எந்த நிலையிலும் இருக்கும் பொழுதும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன . நல்ல கதையைத் தந்த சுமேரியருக்குப் பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

போனை இயக்கினால் இயங்கவில்லை. என்ன இது சரியாகத்தானே இருந்தது போன் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் போனை உயிர்ப்பிக்க முயல்கிறேன். லோ சாச் என்று சொல்லிவிட்டு மீண்டும் போன் நின்றுவிடுகிறது. ////

 

ஒரு முற்றிலும் மாறுபட்ட கட்டத்திற்கு உங்கள் அக்கம் செல்கின்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . அதே வேளையில் கதை சொல்லும்பொழுது நம்பகத்தன்மையையும் கவனத்தில் எடுப்பது நன்று . இன்றைய கைத்தொலைபேசிகள் யாவுமே உள்ளுர் அவசரத்தொலைபேசி அழைப்புகள் மற்றும் ஐரோப்பிய அவசரத்தொலைபேசி அழைப்புகள் ( 112 ) அவை எந்த நிலையிலும் இருக்கும் பொழுதும் இயங்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன . நல்ல கதையைத் தந்த சுமேரியருக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

மின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா? இது நம்ப முடியாமல் இருக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.