Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் திருமணத்திற்கு பிரான்சில் ஒரு கோடிக்கு மேல் செலவாம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்கத்தேய நாட்டுக்காரிகளின் குத்தாட்டத்துடன் அரங்கில் இருந்தவர்களை அசரவைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பணம் செலவு செய்து தனது திருமணத்தை நடாத்தி அன்பு மனைவியைக் கை பிடித்தார் பிரான்ஸ்வாழ் தமிழ் மாப்பிளை. அதனது ஒளிப்பதிவு இணையவலையில் சக்கைபோடு போடுகிறது. நீங்களும் கண்டு ளிக்க மகிழ உங்களுக்காக இதோ. அவரது எதிர்காலம் சிறந்து இல்லறம் கண்டு வாழ்கவென வாழ்த்துவோம் நாமும்.

http://www.youtube.com/watch?v=fPdJJrNtBnw#t=379

நன்றி -http://www.jvpnews.com/srilanka/58626.html

Edited by நிழலி
காணொளி இணைப்பைச் சரிப்படுத்த

  • கருத்துக்கள உறவுகள்

Super!

wow!!

Wonderful!!!

மிகவும் அற்புதமான ஒளிப்படப்பிடிப்பு. சிறப்பான திருமண வைபவம். மணமக்கள் யாரென்று தெரியாவிட்டாலும் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். மிக சிறந்த உயர் தரத்துடன் படப்பிடிப்பை மேற்கொண்ட ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்பதிவு அருமை வாவ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நொக்கச்சி! ஊர் உலகம் தெரியாமல் இருக்கிறியள்?????

உதை விட இன்னும் அப்பனுக்கு அப்பனான கண்கடைதெரியாத கொண்டாட்டங்களை பாத்திட்டு பிரசர்குளிசையோடை காலத்தைகொண்டுபோற எனக்கு ...... :(

தயவுசெய்து ஒரு பொலிடோல் போத்தில் வாங்கி அனுப்பவும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... வர, வர.. பிரான்சிலிருந்து... மோசமான செய்திகள் வருது.
விசுகு, கொஞ்சம் கவனியுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நொக்கச்சி! ஊர் உலகம் தெரியாமல் இருக்கிறியள்?????

உதை விட இன்னும் அப்பனுக்கு அப்பனான கண்கடைதெரியாத கொண்டாட்டங்களை பாத்திட்டு பிரசர்குளிசையோடை காலத்தைகொண்டுபோற எனக்கு ...... :(

தயவுசெய்து ஒரு பொலிடோல் போத்தில் வாங்கி அனுப்பவும்.

கெதியா விலாசத்தை எழுதுங்கோ

இது ஒரு சாதாரண திருமணமே...இதை செய்தியாக போட்டவர்கள் அந்த தம்பதியை அவமானபடுத்துவதற்காக போலிருக்கிறது....அந்த மண்டபத்தை பார்த்தால் ஒரு சாதாரண மண்டபமாக தெரிகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

அவன் காசு அவன் செலவழிக்கிறான். நமக்கென்ன. அங்க கொடு இங்க கொடுன்னு.. பாடம் எடுக்கிறது சுலபம்.. அதனை மனம் உவந்து செய்யப் பண்ணுறது கஸ்டம். அது தானா அமையனும். இல்ல.... நம்மாள முடியல்லைன்னா.. கம்முன்னு இருக்க வேண்டியது தானே. :)

1522045_10201916636651629_1681736600_n.j

பல கோடிகள் இப்படி.. ஓரிடத்தில்.. கொடிகளாய் தொங்குவதும் உண்டு. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இடை நடுங்கி ஆட, மாங்கனிகள் குலுங்கி ஆடும் அற்புத நடனத்திற்கு பிறேசில் பெயர் போனது.

பிரஞ்சுத் தமிழன் தமிழிச்சி திருமணத்திற்கு நடனக் குழுவை ஒழுங்கு செய்யவே கோத்தபாய பிறேசிலுக்குச் சென்றவர். அதற்கு ஆதாரமாக வீடியோவும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனைத் தப்பாகப் புரிந்துகொண்ட எங்கள் உறவு, தமிழரசு! ''பிறேசிலுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்டார் கோத்தா'' என்று தலைப்பிட்டு என்னென்னமோ எல்லாம் ஒரு திரிபோட்டு எழுதிவிட்டார்!. :(

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  இரவு வீட்டுக்கு போனபோது

மனைவி  இதைப்போட்டுக்காட்டி  ஒரு கோடிக்கு மேல் செலவாம் என்றார்

பார்த்தேன்

அப்படி எதுவும் தெரியல.

ஆனால் பிரான்சில் இதைவிட ஆடம்பரமாக  எல்லாம் செய்திருக்கிறார்கள்

செய்கிறார்கள்.

அது அவரவர் சொந்த விடயம்

பணம் என்பதும்

வருமானம் என்பதும் ஒரு கொடை

அதை சரியாக பாவிப்பதுடன்

முடிந்த அளவு தானங்களையும் செய்யணும்

இவர்களிடமே பணமும் செல்வங்களும் நிலைத்திருக்கும்

ஆனால்

வீட்டுக்குள் குடைபிடித்தவர்கள்

காலுக்கு கால்ச்சலங்கை  பவுணில் போட்டவர்கள்

50 பவுணில் முதன் முதலாக தாலி  கட்டி வெருட்டியவர்கள்

சாப்பாட்டுக்கு வழியற்று பலரிடமும்  கையேந்தி  நின்றதையும்  என் கண்களால்  பிரான்சில்  கண்டுள்ளேன்

Edited by விசுகு

இது ஒரு சாதாரண கலியாணம் இதை தங்கள் வீடியோ விளம்பரத்துக்கு இப்படி போட்டு திரியுறங்கள் அருந்தி விடியோ  கம்பனி இதை நம்பி நாங்க இன்னும் முச்சா விளம்பரம் பண்ணுறம் அவ்வளவுதான் .

எல்லாம் நம்பும் குணம் எமக்கு :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கிந்திக்காரரின்ர திருமணமோ ? தமிழிலை ஒன்றையும் காணேல்லை

இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது!

ஈசியாக கிடைத்ததாக இருக்கோணும் கஸ்ரப்பட்டு உழைத்ததை இப்படி செலவழிக்க மாட்டினம் 

ஈசியாக கிடைத்ததாக இருக்கோணும் கஸ்ரப்பட்டு உழைத்ததை இப்படி செலவழிக்க மாட்டினம் 

நண்பா, இப்படி எழுந்தமானமாக ஒருவரைப் பற்றி தெரியாமல் குற்றம் சாட்டுவது தவறு.

உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர் கடினப்பட்டு உழைக்காமல் இலகுவாக உழைத்த (அதாவது 'அடித்த') காசில் தான் வாழ்கின்றார் என்று எப்படி கூறுகின்றீர்கள்? கஷ்டப்படாமல் கூட இலகுவாக ஆனால் நேர்வழியில் உழைக்கும் வழிகள் கூட இன்று இருக்கின்றதே.... 3 ஷிப்ட் வேலை செய்து நன்கு உழைத்த காசில் கூட இதனை விட ஆடம்பரமாக வைபவங்களுக்கு செலவழித்த எவ்வளவோ ஆட்கள் இருக்கினம். (நானும் ஒரு முறை blue label party பற்றிக் குறிப்பிட்டு இருக்கின்றேன்)

ஆனால்

வீட்டுக்குள் குடைபிடித்தவர்கள்

காலுக்கு கால்ச்சலங்கை  பவுணில் போட்டவர்கள்

50 பவுணில் முதன் முதலாக தாலி  கட்டி வெருட்டியவர்கள்

சாப்பாட்டுக்கு வழியற்று பலரிடமும்  கையேந்தி  நின்றதையும்  என் கண்களால்  பிரான்சில்  கண்டுள்ளேன்

..அருமை!

சிலர் குறிப்பிட்டுள்ளது போன்று வீடியோ எடுத்தவர்கள் தமது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். மிகவும் நேர்த்தியாகவும் தொழில்முறை நுட்பமாகவும் எடுத்துள்ளனர்.

மணமக்கள் நீடூழி வாழட்டும்.

இந்த திருமணத்திற்கு ஒரு கோடியா??  :blink:  :blink:
இங்கு இதை விட எவ்வளவோ ஆடம்பரமாக நடக்கின்றது அதற்கே ஒரு கோடி செலவாவதில்லை...........  <_<

Spoiler
கேக்கிறவன் கே- - - ன் என்றால் எருமைமாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்  :icon_idea:  :icon_idea:

எனிவே இந்த திருமண தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

‪#‎படித்ததில்‬ பிடித்தது

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல

பெண்களிடம் சேலைகள் இல்லை.....

ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ

சம்பளம்...

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக

ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்

கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்

தேசம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெதியா விலாசத்தை எழுதுங்கோ

பொலிடோல் அனுப்பவோ இல்லாட்டி வீடுதேடிவந்து காலாலை கோலம் போடவோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது!

மை லாட்... கறுப்பியின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. இது முக்கியமான கேள்வி. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

‪#‎படித்ததில்‬ பிடித்தது

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை....

பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........

சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல

பெண்களிடம் சேலைகள் இல்லை.....

ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்.....

சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடி மக்களின் ஒரு வருஷ

சம்பளம்...

ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக

ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்....

சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்.....

சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப் பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்.....

சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்.....

நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்......

பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன.....

கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்

கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்

தேசம்...

1506658_10152124759380295_1039888981_n.j

  • கருத்துக்கள உறவுகள்

Shristi Mitallஇன் திருமணம் 65 மில்லியன் செலவில் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நடந்து முடிந்தது.

//தங்கத்தில சாறி கட்டுற அளவுக்கு இந்தியா வல்லரசாகிட்டுதா??//

1459805_426832417443919_1344598675_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சாதாரண திருமணம். ஏன் இப்படி மிகைப்படுத்துகின்றனரோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம், இலட்சம் என்று கட்டித் திருமணம் நடாத்தியதை அப்படியா! இப்படியா! என்று வியக்கும் உறவுகளே..!  நான் என் மகளின் திருமணத்தை, ஒரு கோடி கட்டி நடாத்தி முடிச்சனான் என்றால் நம்பவா போகிறீர்கள்...!! :o

உங்கள் வாழ்வின் முழு  சம்பாத்தியத்தையும் அன்று ஒரு நாளுடன் தொலைத்துவிட்டீர்கள் என  சொல்லவா போகின்றீர்கள்??? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம், இலட்சம் என்று கட்டித் திருமணம் நடாத்தியதை அப்படியா! இப்படியா! என்று வியக்கும் உறவுகளே..!  நான் என் மகளின் திருமணத்தை, ஒரு கோடி கட்டி நடாத்தி முடிச்சனான் என்றால் நம்பவா போகிறீர்கள்...!! :o

இருப்பவனுக்கு ஒரு கோடி இல்லாதவனுக்கு பலகோடி இதை நான் சொன்னாலும் நம்பவா போகிறீர்கள்? :lol:

இந்தத் திருமணத்தைக்காட்டிலும் எவ்வளவோ ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களை ஒவ்வொரு வார இறுதியிலும் காண்கிறோம்.... இதெல்லாம் சும்மா டமாசு..

இன்றைய கனடா நிலவரப்படி

ஒரு திருமண நிகழ்வின் கொண்டாட்டங்கள் ஆவன....

1. மணமகளின் நண்பிகளுடன் பார்ட்டி

2. மணமகனின் நண்பர்களுடன் பார்ட்டி

3.மணமக்களின் நண்பர்களுடன் பார்ட்டி

4. மணமக்களாக உறுதிப்படுத்திக் கொள்ளும் நிகழ்வு

5. மருதாணிப்பார்ட்டி

6. பொன் உருக்குதல்

7. மதசம்பிரதாயத்துடன் திருமணம் ( கவனிக்கப்படவேண்டியது மணமகளும் மணமகனும் வெவ்வேறு மதங்களாயின் அவ்விரு முறைப்படியும் திருமணம் வெவ்வேறாக இருமுறை நடாத்தப்படுதல்)

8. விருந்தினர் உபசாரம்

9. தேனிலவு முடித்த தம்பதியினரை வரவேற்கும் பிரமாண்ட விருந்து....

இன்னும் கொஞ்சக்காலம் போனால் இதில் இன்னும் சில விடயங்கள் சேர்ந்து விடும்......

இவையெல்லாம் முடிந்தபின்னர் திருமணத்தம்பதியினர் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு ஒரு வருடம் இணைந்து வாழ்ந்தால் அதற்கு ஒரு பெரும் பார்ட்டி... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.