Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தில் விடுதலைக்காகப் போராடியவர்கள் பட்டினியில் - இலண்டனில் நாடுகடந்த கும்பல் குத்தாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும், போராளிகளுக்கு உறுதுணையாக நின்ற மக்களும் தமிழீழத்தில் வேலை வாய்ப்புக்கள் இன்று பட்டினியால் வாடும் நிலையில் இலண்டனில் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசு என்ற குழுவினரால் குத்தாட்ட நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.
tgte%20kutthaddam.JPG
TGTE-Dance6.jpg
கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்தக் குத்தாட்ட நிகழ்வில் நாடுகடந்த கும்பலின் இலண்டன் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சம்பேய்ன், உவைன் போன்ற மதுபானங்களை அருந்தித் திழைத்தும், நடனமாடியும் குத்தாட்டத்தை மேற்கொண்டதை உறுதிசெய்யும் நிழற்படங்கள் வெளிவந்துள்ளன.
TGTE-Dance2.jpg
நாடுகடந்த அரசு என்ற கும்பலின் தாயக அபிவிருத்தி அமைச்சராக விளங்கும் பாலாம்பிகை முருகதாஸ் என்பவரும், அவரது அமைச்சுச் செயலாளரான தாமோதரம்பிள்ளை முருகதாஸ் என்பவரும் இணைந்து இந்தக் குத்தாட்ட நிகழ்வை நடத்தியுள்ளனர்.
TGTE-Dance3.jpg
TGTE-Dance4.jpg
TGTE-Dance5.jpg

http://www.sankathi24.com/news/39156/64//d,fullart.aspx

நியானி: சில படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • Replies 50
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கறுமம்பிடிச்சதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மை லாட் நிர்வாகம் அவர்களே

ஒரு ந.க.த.அ. உறுப்பினர் அவரது முகநூல் பக்கத்தில் சாதி வெறியை தூண்டும் விடயங்களை பகிர்ந்ததை ஆதரத்துடன் இங்கு பதிவிட்டதை தனிநபர் தாக்குதல் என்று தூக்கிய நீங்கள் (அதற்கு சரியான காரணமும் சொல்லப்படவில்லை) இதனை ஏன் தூக்கவில்லை? 

உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசு என்ற குழுவினரால் குத்தாட்ட நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.

அது எப்படி உங்களால (சங்கதி) கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பொய் சொல்ல முடியிது? இது ஒருவரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம். அவர் ந.க.த.அரசில் இருக்கின்றார் என்பதற்காக அவரின் குடும்பவிழா ந.க.த.அரசின் விழாவாகிவிடுமா? 

1932359_722338147811338_119733653_n.jpg

Edited by செங்கொடி

இவர்கள் அமெரிக்க பிரேரணையில் இருக்கும் குழிகளை மக்கள் கவனித்து அதன் மீது ஆர்வம் காட்டிவிடாமல் இருக்கட்டும் என்று தேவையில்லாதவற்றை போட்டு துளைக்கிறார்கள்.  உண்மையாக அரசுடன் சேர்ந்து இயங்கும் துரோகிகள். 

இந்த படங்கள் கிடைத்தால் அதை உடனே பிரசுரிப்பதல்ல ஊடக முறை சம்பந்த பட்டவர்களிடம் அது பற்றி விபரம் கேட்டு அதையும் இணைப்பதுதான் முறை.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமார் அண்ணையையும் நாடு கடந்த தமிழீழ அரசையும்.. சிங்களவனை விட சில தமிழர்கள் அதிகம் வெறுக்கிறார்கள் என்பது புரிகிறது. இதில் உருத்திரகுமார் அண்ணை எங்க நிற்கிறார்..??! சங்கதிக்கு.. பங்கு சரியா வந்து சேரல்ல என்ற கவலை போல..???!

போராளிகளின் நல வாழ்வை இட்டு கவலைப்படுற ஆக்கள்.. என்ன செய்திட்டு கவலைப்படினம்.. என்று கேட்டால்..???! நத்திங். இதில அடுத்தவனுக்கு.. அறிவுரைக்கு குறைச்சலில்லை. நாங்கள் வழி நடத்தால்... மிச்சப் பேர்.. அதன் வழி நடக்க முயல்வார்கள். அதைவிட்டிட்டு..???! :icon_idea::)

Edited by nedukkalapoovan

நாடு கடந்த அரசில், பொது வாழ்க்கையில், மக்களுக்கான அமைப்புகளில் இருப்பவர்கள் தனித் தமிழீழம் கிடைக்கும் வரைக்கும்  பின்வருமாறுதான் வாழ வேண்டும்:

1. கக்கூசுக்கு போய் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடாது. அப்படியே கழிக்க வேண்டி வந்தாலும் பெரிய சத்ததுடன் வாயு பிரிக்கக் கூடாது.

2. பாட்டுக் கேட்கக் கூடாது

3. படம் பார்க்கக் கூடாது

4. பிள்ளைகளுடன் விளையாடக் கூடாது

5. வாழ்க்கைத் துணையுடன் காதல் கொள்ளக் கூடாது

6. எந்த ஒரு வைபவங்களுக்கும் போகக் கூடாது

7. பிள்ளைகளினதோ அல்லது நெருங்கியவர்களினதோ அல்லது அவர்களதோ பிறந்த நாட்களின் போது கூட கருப்பு சட்டை அணிந்து ஊரில் இருப்பவர்களை கூட்டிக் கொண்டு வந்து குய்யோ முய்யோ என்று ஒப்பாரி வைக்க வேண்டும்

8. திருமண நிகழ்வில் தாலியை அறுத்தோ, அல்லது மோதிரத்தினை பறித்தோ கலாட்டா செய்ய வேண்டும்

9.  ஒரு உல்லாசப் பயணமும் போகக் கூடாது. அவ்வளவு ஏன், அலுவலகத்துக்கு கூட காரிலோ அல்லது ரயிலிலோ போகக் கூடாது. நடந்து மட்டும் தான் போக வேண்டும். அதுவும் காலில் செருப்பு அணியாமல் போனால் இன்னும் நல்லம்.

10. முக்கியமாக கலர் கலராக ஆடை அணியக் கூடாது. முடிந்தால் கதர் ஆடை அல்லது காவி ஆடை மட்டும்தான் அணிய வேண்டும்.

இப்படிக்கு,

மேலே கூறிய விதமாக மட்டுமே வாழ்ந்து மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் சங்கதி போன்ற உணர்ச்சி மிக்க தமிழர்கள் சபை

06/மார்ச்/2014

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு சங்கதிகாரர்களின் கூத்தை இன்னொரு தளம் வெளியிடும். இப்படி மாறி மாறி மற்றவனின் முதுகுகளையே பாருங்கள். எங்களுக்கு நாடும் கிடைச்சிடும் விடிவும் கிடைச்சிடும்.

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்களப்பா  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தில் நாகம் கக்கிய நஞ்சு மனிதருக்கு மருந்தும் ஆவதுபோல்... காழ்ப்புணர்ச்சியில் சங்கதி கக்கிய நாடுகடந்த அரசைப்பற்றிய ஒரு பொய்யான செய்தியானது; நாடுகடந்த அரசின்மேல் படிந்திருந்த மாசு ஒன்றை துடைத்துள்ளதோடு. யாழ்களத்தின் மூலமாகவும், உண்மையைத் தமிழ்மக்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தையும், கள உறவு 'தமிழரசு' அவர்கள் ஊடாக வழங்கியுள்ளது. :rolleyes::icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடியின் கையொப்பத்தின் மாற்று வடிவம் தான் நினைவுக்கு வருகிறது.

எழ எழ வீழ்த்துவோம்

இதுக்கு முடிவு கிடையாது

ஒரு கதை

  • கருத்துக்கள உறவுகள்

செய்திய விடுங்க, ஆனாலும் அறுபதாம் வயதுப் பிறந்த நாளுக்கு இந்த சைஸ் கேக்கும் குத்து டான்சும் கொஞ்சம் ஓவர்! தனி மனித சுதந்திரம் தான் எண்டாலும், கொஞ்சம் ஓவர்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உத்தமர்கள் கல்லை  எறியுங்கள் என்பது தான் பதிலாகும்

ஆனால் நாடு கடந்த அரச மாநாட்டில்  அல்லது நாடுகடந்த அரச  செலவில் இவை  நடந்தால் கண்டிக்கத்தக்கவை...

உத்தமர்கள் கல்லை எறியுங்கள் என்பது தான் பதிலாகும்

ஆனால் நாடு கடந்த அரச மாநாட்டில் அல்லது நாடுகடந்த அரச செலவில் இவை நடந்தால் கண்டிக்கத்தக்கவை...

அங்க ஒரு சதமும் இல்லை. தொண்டர்களும், அமைச்சர்கள் தங்கள் காசை போட்டு தான் வேலை செய்கிறார்கள்.

பொது வாழ்விற்கு வந்துவிட்டால் சற்று முன்னுதாரணமாக நடக்க வேண்டும் .அதுவும் நாட்டில் மக்கள் பட்டினியால் வாடுகின்றார்கள் என்று அரசியல் செய்துகொண்டு உந்த ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் எல்லாம் டூமச் ,

அதுவும் அவருடன் நின்று டான்ஸ் ஆடுபவர் இடம்பெயர்ந்தோரின் பணத்தை சுருட்டியவர் என்று யாழில் பதிவில் வந்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்

செய்திய விடுங்க, ஆனாலும் அறுபதாம் வயதுப் பிறந்த நாளுக்கு இந்த சைஸ் கேக்கும் குத்து டான்சும் கொஞ்சம் ஓவர்! தனி மனித சுதந்திரம் தான் எண்டாலும், கொஞ்சம் ஓவர்! :lol:

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பிறந்தநாள், திருமண நாள், சாமத்திய வீடு என்று எல்லாவற்றையும் பகட்டாகச் செய்வதுதான் தங்கள் முன்னேற்றம் என்று கருதுகின்றார்கள். முன்னேறிய பிரிவினர் மீது பொறாமையும் எரிச்சலும் கொண்டவர்கள்தான் இது எல்லாம் ஓவர் என்று நினைப்பார்கள்.

இப்போதெல்லாம் இப்படியான விழாக்களுக்கு அழைப்பு வந்தால் அழைப்பை அனுப்பியவர்கள் மனங்கோணக் கூடாது என்று கலந்து சிறப்பித்து குடித்து விருந்துண்டு நடனமாடி மகிழ்வதுதான் நம்மால் செய்யக்கூடியது! எனவே எதுவித குற்ற உணர்வும் வருவதில்லை!

சண்டை பிடிக்காமல் ஸ்ரீலங்காவில் இதை விட பிரமாதமாக கொண்டாடியிருக்கலாமே.........சிங்கள பைலா பாட்டெல்லாம் போட்டு...

இவர் ஆடுறதும் சிங்கள பைலாக்கோ தெரியாது.....

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பிறந்தநாள், திருமண நாள், சாமத்திய வீடு என்று எல்லாவற்றையும் பகட்டாகச் செய்வதுதான் தங்கள் முன்னேற்றம் என்று கருதுகின்றார்கள். முன்னேறிய பிரிவினர் மீது பொறாமையும் எரிச்சலும் கொண்டவர்கள்தான் இது எல்லாம் ஓவர் என்று நினைப்பார்கள்.

இப்போதெல்லாம் இப்படியான விழாக்களுக்கு அழைப்பு வந்தால் அழைப்பை அனுப்பியவர்கள் மனங்கோணக் கூடாது என்று கலந்து சிறப்பித்து குடித்து விருந்துண்டு நடனமாடி மகிழ்வதுதான் நம்மால் செய்யக்கூடியது! எனவே எதுவித குற்ற உணர்வும் வருவதில்லை!

உது எனக்கு "வெளிக் குத்தா" அல்லது படத்தில ஆடுற ஆக்களுக்கு "உள் குத்தா" எண்டு ஒரே குழப்பம்! இருந்தாலும் benefit of doubt ஐ கிருபனுக்கு சார்பாக்கி ஒரு பச்சை குத்தி வைக்கிறேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன், நாடுகடந்த அரசுக்கு மட்டும்தாம் தாயகத்தில் வாடும் மக்கள் தொடர்பில் அக்கறை இருக்கிறதா?? வேறு எவருக்கும் இல்லையா?? எம்மில் எத்தனை பேர் 2009 இற்குப்பின்னர் தண்ணி, கூத்து கும்மாளம் போன்றவற்றை விட்டு விட்டு, ஒரு வேளை கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறோம்?? எத்தனை பேர் இன்னும் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்? உண்மையைச் சொல்லப்போனால், அப்படி ஒருத்தர் கூட இல்லை. எல்லோரும் முன்னரைப் போலவே குடியும் கும்மாளமுமாகத்தான் இருக்கிறோம். என்ன, ஒரே வித்தியாசம், முன்னரென்றால், முகமாலலையில் என்ன ஸ்கோர், அநுராதபுரத்தில் என்ன ஸ்கோர் என்று அரசியல் அரங்கம் நடத்துவோம், இப்போது வேறு வழியில்லாமல் கிரிக்கெட் பற்றியும், உள்ளூர் கசமுசாக்கள் பற்றியும் அரட்டை அடிப்போம். ஆக நாங்கள் இவையெல்லாம் செய்யலாம, ஆனால் தனது சொந்தப்பணத்தில், சொந்த நேரத்தில் மக்களுக்காக உழைக்கும் சிலர் தண்ணியடித்தால் குற்றம், ஆடினால் குற்றம்.............

சங்கத்திக்காரருக்கும் , பதிவுக்காரருக்கும் இப்போது செய்தியில்லாமல் போய்விட்டது. ஆகவே உள்ள ஒரே வழி நாடுகடந்த அரசையோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ வசைபாடுவது. இப்படி மற்றவனை எங்கே குழி பறிக்கலாம் என்று திரியும் இவர்களுக்கு எம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்கிற விளக்கமாவது இருக்கிறதா??

நாடு கடந்த அரசில், பொது வாழ்க்கையில், மக்களுக்கான அமைப்புகளில் இருப்பவர்கள் தனித் தமிழீழம் கிடைக்கும் வரைக்கும்  பின்வருமாறுதான் வாழ வேண்டும்:

1. கக்கூசுக்கு போய் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடாது. அப்படியே கழிக்க வேண்டி வந்தாலும் பெரிய சத்ததுடன் வாயு பிரிக்கக் கூடாது.

2. பாட்டுக் கேட்கக் கூடாது

3. படம் பார்க்கக் கூடாது

4. பிள்ளைகளுடன் விளையாடக் கூடாது

5. வாழ்க்கைத் துணையுடன் காதல் கொள்ளக் கூடாது

6. எந்த ஒரு வைபவங்களுக்கும் போகக் கூடாது

7. பிள்ளைகளினதோ அல்லது நெருங்கியவர்களினதோ அல்லது அவர்களதோ பிறந்த நாட்களின் போது கூட கருப்பு சட்டை அணிந்து ஊரில் இருப்பவர்களை கூட்டிக் கொண்டு வந்து குய்யோ முய்யோ என்று ஒப்பாரி வைக்க வேண்டும்

8. திருமண நிகழ்வில் தாலியை அறுத்தோ, அல்லது மோதிரத்தினை பறித்தோ கலாட்டா செய்ய வேண்டும்

9.  ஒரு உல்லாசப் பயணமும் போகக் கூடாது. அவ்வளவு ஏன், அலுவலகத்துக்கு கூட காரிலோ அல்லது ரயிலிலோ போகக் கூடாது. நடந்து மட்டும் தான் போக வேண்டும். அதுவும் காலில் செருப்பு அணியாமல் போனால் இன்னும் நல்லம்.

10. முக்கியமாக கலர் கலராக ஆடை அணியக் கூடாது. முடிந்தால் கதர் ஆடை அல்லது காவி ஆடை மட்டும்தான் அணிய வேண்டும்.

இப்படிக்கு,

மேலே கூறிய விதமாக மட்டுமே வாழ்ந்து மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் சங்கதி போன்ற உணர்ச்சி மிக்க தமிழர்கள் சபை

06/மார்ச்/2014

நீங்கள் வேற, இதையெல்லாம் செய்யுங்கள் என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், ஊருக்குத்தான் உபதேசமெல்லாம். 

சும்மா ஒரு பொதுமகன் தண்ணியை போட்டுவிட்டு ரேஸ்ரோண்டில் நின்று கத்தினால் அது செய்தி இல்லை டொராண்டோ மேயர் அதை செய்தால் அது செய்தி .

இது கூட விளங்காமல் அரசியல் செய்கின்றோம் . :icon_mrgreen:

பொதுமகனோ மேயரோ யாரும் அரசியல் மேடையில் தண்ணியை போட்டுவிட்டு ஆடினால் அது செய்தி. பொது மகனோ மேயரோ வீட்டில் தண்ணியைப்போட்டுவிட்டு ஆடினால் தனிப்பட்ட வாழ்க்கை. 

இதை வடிவாக விளங்க்கிகொண்டும் ஏமாற்று எழுதுகிறோம்.  <_<

அண்ணை வீட்டில் டி வி இல்லை போலிருக்கு . :icon_mrgreen:

அண்ணை வீட்டில் டி வி இல்லை போலிருக்கு . :icon_mrgreen:

வேண்டித்தாறன் என்று சொன்ன பொய் ஞாபகம் இல்லைபோலை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசில், பொது வாழ்க்கையில், மக்களுக்கான அமைப்புகளில் இருப்பவர்கள் தனித் தமிழீழம் கிடைக்கும் வரைக்கும்  பின்வருமாறுதான் வாழ வேண்டும்:

1. கக்கூசுக்கு போய் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடாது. அப்படியே கழிக்க வேண்டி வந்தாலும் பெரிய சத்ததுடன் வாயு பிரிக்கக் கூடாது.

2. பாட்டுக் கேட்கக் கூடாது

3. படம் பார்க்கக் கூடாது

4. பிள்ளைகளுடன் விளையாடக் கூடாது

5. வாழ்க்கைத் துணையுடன் காதல் கொள்ளக் கூடாது

6. எந்த ஒரு வைபவங்களுக்கும் போகக் கூடாது

7. பிள்ளைகளினதோ அல்லது நெருங்கியவர்களினதோ அல்லது அவர்களதோ பிறந்த நாட்களின் போது கூட கருப்பு சட்டை அணிந்து ஊரில் இருப்பவர்களை கூட்டிக் கொண்டு வந்து குய்யோ முய்யோ என்று ஒப்பாரி வைக்க வேண்டும்

8. திருமண நிகழ்வில் தாலியை அறுத்தோ, அல்லது மோதிரத்தினை பறித்தோ கலாட்டா செய்ய வேண்டும்

9.  ஒரு உல்லாசப் பயணமும் போகக் கூடாது. அவ்வளவு ஏன், அலுவலகத்துக்கு கூட காரிலோ அல்லது ரயிலிலோ போகக் கூடாது. நடந்து மட்டும் தான் போக வேண்டும். அதுவும் காலில் செருப்பு அணியாமல் போனால் இன்னும் நல்லம்.

10. முக்கியமாக கலர் கலராக ஆடை அணியக் கூடாது. முடிந்தால் கதர் ஆடை அல்லது காவி ஆடை மட்டும்தான் அணிய வேண்டும்.

இப்படிக்கு,

மேலே கூறிய விதமாக மட்டுமே வாழ்ந்து மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் சங்கதி போன்ற உணர்ச்சி மிக்க தமிழர்கள் சபை

06/மார்ச்/2014

நிழலிஇன் கருத்ததை வழி மொழிகிறேன்

சங்கதிக்கு செய்தியில்லாட்டில் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

மெத்தப்படிச்ச ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து ஹவார்ட் வரையில் படித்து விட்டு தமிழர்களின் விடுவிர்க்காக என்ன செய்யலாம் என்று சதா சிந்தித்த வண்ணம் இருக்கும் இந்த புலி எதிர்ப்பு வாந்திகள் மாற்றுக்கருத்து மன்னர்கள்..... புலிகள் போராடும் போது இந்த புலிகளுக்கு என்ன தெரியும் மொக்கு கூட்டங்கள் என்று சொல்லி திரிந்தார்கள்.... சரி இப்போ புலிகள் இல்லை என்னத்த பற்றி வாந்தி எடுக்கலாம் என்று திரிந்த இந்த கூட்டத்திற்கு இப்போ கிடைத்திருப்பது நாடு கடந்த அரசு அதில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் ஆக அவர்களை மொக்கு கூட்டம் என்று சொல்ல முடியாது...... அவர்களின் தனிப்பட்ட குடும்ப விழாக்களில் எடுத்த படத்தை சந்தியில் போட்டு நடுத்தெரு அரசியல் நடத்துகின்றன இந்த தமிழன் என்ற உணர்ச்சியும் உணர்வும் சிறிதும் இல்லாமல் வெறும் புலி எதிர்ப்பு வாந்தியையும் தமிழின எதிர்ப்பு கோஷத்தையும் தங்கள் உடம்பு பூரா விஷமாக கொண்டு தமிழர் என்ற பேரில் நடமாடி திரியும் இவர்களுக்கு தமிழ் மக்களுக்காக யார் போராடினாலும் குரல் கொடுத்தாலும் தங்கள் விஷம் பொருந்திய கோர பற்களால் கடித்து குதறவே காத்திருக்கின்றன.

தாங்கள் சொல்லுவதே எல்லாம் சரி தாங்கள் செய்வதே எல்லாம் சரி மற்றவர்கள் எல்லாம் மொக்கு கூட்டங்களும் கேனைக்கூட்டங்களும்

பாவம் தமிழ் மக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.