Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது அப்பா எனும் மிருகம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரகு முதலில் தைரியமாக,வெளிப்படையாக உங்கள் சொந்தக் அனுபவத்தை எழுதியதற்கு நன்றி.உங்கள் அப்பாக்கள் மாதிரி அப்பாக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் ஈழத்திலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உங்கள் கதை மூலம் தெரிந்து கொண்டேன்.ஆனால் ஒரு ஆதங்கம் உங்கள் தம்பி கொழும்பிற்கு உங்களைத் தேடி வந்த போது அவரை உங்களோடு வைத்திருந்தால் அவர் அநியாயமாக செத்திருக்க மாட்டார் அல்லவா?...ஆனாலும் விதியை ஒன்றும் செய்யேலாது

என்ட அப்பாவும் பெரிய குடிகாரார்.அரச உத்தியோகத்தராய் இருந்தும் எடுக்கும் சம்பளத்தை குடித்தே அழித்து,கடைசியில் குடியாலேயே ஈரல் அழுகி செத்துப் போனார்.ஆனால் அப்பா சாகும் வரைக்கும் அம்மா மேலையோ அல்லது எங்கள் மேலையோ கை ஓங்கியதில்லை:)

Edited by ரதி

  • Replies 59
  • Views 135.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இளைய வயதில் நடந்த கொடுமையான அனுபவத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ரகுநாதன். உடைந்து போகாமால் உறுதியாக வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கின்றீர்கள். இப்படியான ஓர்மம் உள்ளவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்கமுடியும்.

என்றுமே என்மீதோ, எனது சகோதரங்கள் மீதோ கைநீட்டாத அப்பா எனக்கு வாய்த்ததால் ஒரு அப்பா இப்படிக் குரூரமான முறையில் தனது சொந்தப் பிள்ளைகளுடன் நடந்திருப்பார் என்பதும், அதிலும் போர்க் காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளும் இப்படியாக இருந்தார் என்பதும் வாசிக்கும்போதே மிகுந்த வலியைத் தந்தது. குடிகாரர்களான, கொதியர்களான, மனைவிமாரை அடித்து முறிக்கும் சிலரைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர்கள் தமது பிள்ளைகள் மீது அன்பாகத்தான் இருந்திருக்கின்றார்கள். தனது பிள்ளைகளை விரோதிகளாகப் பார்த்த ஒரு அப்பாவை அப்பா என்று சொல்லவே முடியாது.

நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தால் படித்து வாழ்வில் முன்னேறக்கூடிய சிறுவர்கள் இப்போதும் ஆச்சிரமங்களில் இருக்கின்றார்கள், அப்படியானவர்களுக்கு எம்மாலியன்ற சிறு உதவிகளையாவது செய்யவேண்டும் என்பதும் இந்தப் பதிவில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்... அவருக்குள் இருந்த உளவியல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டு தீர்த்திருந்தால்.. இன்று அவரும் நல்ல அப்பாவா இருந்திருக்கக் கூடும்.

இதில் படித்தும்.. செயலற்றுப் போய் இருந்த.. உங்கள் அம்மா மீது தான் கோபம் வருகிறது.

ஒரு மனிதனை கெட்டவன் ஆக்குவது வெகு சுலபம். அவனையே நல்லவனாக்க நாம் நிறையச் செய்ய வேண்டும். அதில் எதுவுமே இங்கு நடக்கல்ல. இது யார் தவறு..????????????! :icon_idea::rolleyes:

ஆண்கள் ஏதாவது குற்றங்கள் செய்தால் மனநிலை சரியில்லை,உளவியற் பிரச்சனை.இதே பெண்கள் குற்றம் செய்தால் நடத்தை கெட்டவள் என்று தொடங்கி இல்லாத பட்டப் பெயர்கள் எல்லாம் வழ்ங்க்கப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தால் படித்து வாழ்வில் முன்னேறக்கூடிய சிறுவர்கள் இப்போதும் ஆச்சிரமங்களில் இருக்கின்றார்கள், அப்படியானவர்களுக்கு எம்மாலியன்ற சிறு உதவிகளையாவது செய்யவேண்டும் என்பதும் இந்தப் பதிவில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

அருமையான

முன்னுதாரணமான

தமிழருக்கு இன்று தேவையான கருத்து

நன்றி  ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ஏதாவது குற்றங்கள் செய்தால் மனநிலை சரியில்லை,உளவியற் பிரச்சனை.இதே பெண்கள் குற்றம் செய்தால் நடத்தை கெட்டவள் என்று தொடங்கி இல்லாத பட்டப் பெயர்கள் எல்லாம் வழ்ங்க்கப்படும்

நம்மவர்களுக்கு எத்தனை முறை  எப்படிச் சொன்னாலும் புரியாது ரதி...நான் இப்போ எல்லாம் பெரிதாக இவை பற்றி எழுத,விவாதிக்க எல்லாம்  விருப்பப்படுவது இல்லை.இன்றும் அவப் பெயர்கள் பெண்கள் மீது விழுந்து கொண்டே இருக்கிறது..பிரச்சனை இல்லை.ஆண் ஒன்றைச் செய்தால்,அதிலிருந்து விடுபட்டால் புத்திக்காரர்களாகத் தான் உலகம் நினைக்கிறது.அதுவே பெண்கள் அடிமைகளாவும்,வேண்டாதவர்களாவும் தான் ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இப்படியான போக்கை உடைய எந்த ஒரு ஆணையும் திருத்த முடியாததும் உண்மை.

அன்பால் திருத்தலாமாம்.சொல்வது இலகு ஆனால் மனத்தை வேறை,வேறை இடங்களில் எல்லாம் அலை பாய விடுபவர்களுக்கு எந்த ஒரு அன்பாலும் திருத்த முடியாது.

தன் பெற்ற பிள்ளைக்கே பெல்டால் அடிக்கும் தந்தை,  தன் மனைவிகுக்கு இதை விட மேலான  சித்திரவதைகளைத் தான் செய்திருப்பார் என்பது அப்பட்டமாக புரிகிறது..திருமணமே வேணாம் என்று சிவனே என்று இருப்பது எவ்வளவோ மேல்...ஏன் எனில் பெண்கள் தாங்களும் சித்திரவதைப்பட்டு,பின் அவர்களுக்கு என்று வரும் பிள்ளைகளையும் சித்திரவதைப்படுவதை விட ஒன்றும் இல்லை என்ற குறை ஒன்றோடு  மட்டும் இறுதிவரை வாழ்ந்து விடுதல் மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரகுநாதன்,
மனதை கணப்படுதிய ஒரு பதிவு.  இதை பட்டவர்த்தனமாக பலரோடு பகிர்ந்தும் உள்ளீர்கள்.
சில வரிகளை வாசிக்கும் போது என் கண்கள் நனைத்தது உண்மை.
இந்த நிமிடத்தில் நான் என் மறைந்து போன தந்தையாரை நினைவு கூறுகிறேன் ... அவர் எங்களை அரவணைத்த விதம் நினைத்து வியந்து நிற்கிறேன் (எங்கள் குடும்பம் மிகப் பெரியது 12 சகோதரங்களில் நான் தான் கடைசி ) ... நான் அவருக்கு அல்லது அவரோடு சேர்ந்து செய்ய வேண்டும் என நினைத்த சில சின்ன விடயங்களை என்னால் செய்ய முடியாமல் போன வருத்தம் இன்றும் எனக்குள் இருக்கிறது.
மறைந்து போன உங்கள் தாயாரினதும், போராளி தம்பியினதும், (தந்தையினதும்) ஆத்மா சாந்தி அடையட்டும். நீங்கள் வாழ்கையில் சந்தித்த அவலங்களை எல்லாம் கடந்து எங்கோ வந்து விட்டீர்கள்.
மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்கள் சுற்றங்களுடன் உங்கள் வாழ்வு நந்தவனமாய் அமையட்டும்.

உங்கள் பதிவில் இருந்து நான் கற்றுக் கொண்டது - என் மூன்று பிள்ளைகளோடு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே நெருக்கமாய், அன்னியோன்யமாய், நண்பனாய் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு இன்று வேலை தலத்தில் இருந்து வீடு போகின்றேன்... (வீட்டில் நான் கொஞ்சம் கண்டிப்பானவன் என்ற தோற்றம் இனி உடைக்கப்படும்)

நன்றி கலந்த தோழமையுடன் ..சசி

ரகு அண்ணே ஒரு மென்மையான போக்குள்ள அப்பாவுடன் வளர்த்ததால் (குடிப்பதை தவிர) இங்கதையை வாசித்து கொண்டு வரும்போது உண்மைக்கும் கண்ணீர் விட்டேன் நிஜத்தில் இப்படி ஒரு அப்பாவா என்று ...என்ன இந்த மனுஷன் கொம்பியூட்டர் பார்த்து கண்ணீர் விடுகுது என என் மனைவி கேட்கும் அளவு என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை ....இதிலும் இருந்தது மீண்டு உங்களால் சாதிக்க முடித்து இருக்கு என்றால் உண்மையில் நிங்கள் போற்றப்படவேண்டியவர் எப்பொழுதும் இவ்வாறு தளராத மனநிலையில் நீங்கள் இருக்க இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நாதன் உங்களுக்குக் கிடைத்த அப்பாவைப் போல ஒரு அப்பா
வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது.
பல இடங்களில் பல விடயங்கள் நடப்பது கண்டுள்ளேன்.
உங்கள் அனுபவம் கொடுமையிலும்  கொடுமை.
நான் எனது அப்பா( சில சந்தர்ப்பங்களில்) தான் கொடுமைக்காரன் என எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.

இப்போது அவரின் மேல் இருந்த   பாசம் இன்னும் அதிகரிக்கின்றது.

ம்.......  என்னத்தை எழுதுவது எண்டு தெரியவில்லை.

நீங்கள் நல்லதொரு நிலையை அடைந்தமை மிகவும் சந்தோசமாய் இருக்கிறது. 

பாவம்... அவருக்குள் இருந்த உளவியல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டு தீர்த்திருந்தால்.. இன்று அவரும் நல்ல அப்பாவா இருந்திருக்கக் கூடும்.

இதில் படித்தும்.. செயலற்றுப் போய் இருந்த.. உங்கள் அம்மா மீது தான் கோபம் வருகிறது.

ஒரு மனிதனை கெட்டவன் ஆக்குவது வெகு சுலபம். அவனையே நல்லவனாக்க நாம் நிறையச் செய்ய வேண்டும். அதில் எதுவுமே இங்கு நடக்கல்ல. இது யார் தவறு..????????????!  :icon_idea:  :rolleyes:

நெடுக்கரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு முதலில் தைரியமாக,வெளிப்படையாக உங்கள் சொந்தக் அனுபவத்தை எழுதியதற்கு நன்றி.உங்கள் அப்பாக்கள் மாதிரி அப்பாக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் ஈழத்திலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உங்கள் கதை மூலம் தெரிந்து கொண்டேன்.ஆனால் ஒரு ஆதங்கம் உங்கள் தம்பி கொழும்பிற்கு உங்களைத் தேடி வந்த போது அவரை உங்களோடு வைத்திருந்தால் அவர் அநியாயமாக செத்திருக்க மாட்டார் அல்லவா?...ஆனாலும் விதியை ஒன்றும் செய்யேலாது

என்ட அப்பாவும் பெரிய குடிகாரார்.அரச உத்தியோகத்தராய் இருந்தும் எடுக்கும் சம்பளத்தை குடித்தே அழித்து,கடைசியில் குடியாலேயே ஈரல் அழுகி செத்துப் போனார்.ஆனால் அப்பா சாகும் வரைக்கும் அம்மா மேலையோ அல்லது எங்கள் மேலையோ கை ஓங்கியதில்லை :)

உண்மைதான் ரதி, தம்பியை நாங்கள் எங்களுடன் மறித்திருக்கலாம். ஆனால் அப்போதிருந்த எங்களின் பண நிலமை அதற்கு வழிவிடவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த சிறிய பணத்தை எங்கள் நால்வருக்கும் பிரித்துப் பயன்படுத்துவதே பெரிய விடயமாகி இருந்தது. இதற்குள் தம்பி வேறு சேர்ந்துவிட்டால், நிலமை மோசம் என்று சொல்லித்தான் எனது தாயாரின் சிறிய தங்கை அவனை மறிக்கவில்லை. பாவம், கொழும்பிலிருந்து போய் சில மாதங்களில் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். 5 வருடங்களில் இறந்தும் விட்டான். அவனுக்காக நான் எதையுமே செய்யவில்லை என்கிற கவலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவன் வயதில் எவரைப் பார்த்தாலும் இயல்பாகவே தம்பி என்றழைக்க மனம் விரும்புகிறது. கொடுத்துவைத்தது அவ்வளவுதான். 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைய வயதில் நடந்த கொடுமையான அனுபவத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ரகுநாதன். உடைந்து போகாமால் உறுதியாக வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கின்றீர்கள். இப்படியான ஓர்மம் உள்ளவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்கமுடியும்.

என்றுமே என்மீதோ, எனது சகோதரங்கள் மீதோ கைநீட்டாத அப்பா எனக்கு வாய்த்ததால் ஒரு அப்பா இப்படிக் குரூரமான முறையில் தனது சொந்தப் பிள்ளைகளுடன் நடந்திருப்பார் என்பதும், அதிலும் போர்க் காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளும் இப்படியாக இருந்தார் என்பதும் வாசிக்கும்போதே மிகுந்த வலியைத் தந்தது. குடிகாரர்களான, கொதியர்களான, மனைவிமாரை அடித்து முறிக்கும் சிலரைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர்கள் தமது பிள்ளைகள் மீது அன்பாகத்தான் இருந்திருக்கின்றார்கள். தனது பிள்ளைகளை விரோதிகளாகப் பார்த்த ஒரு அப்பாவை அப்பா என்று சொல்லவே முடியாது.

நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தால் படித்து வாழ்வில் முன்னேறக்கூடிய சிறுவர்கள் இப்போதும் ஆச்சிரமங்களில் இருக்கின்றார்கள், அப்படியானவர்களுக்கு எம்மாலியன்ற சிறு உதவிகளையாவது செய்யவேண்டும் என்பதும் இந்தப் பதிவில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்.

நீங்கள் சொல்லும் ஓர்மம் எல்லாம் எனக்குள் இருக்கிறதென்று நான் நினைக்கவில்லை கிருபன். மற்றையவர்களைபோலவே நானும் பலவீனமும், சுயநலமும் கொண்டவன். தாழ்வு மனப்பான்மையும் உண்டு.  யார் செய்த புண்ணீயமோ தெரியாது, இன்றைக்கும் அவுஸ்த்திரேலியாவில் தப்பி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 

உங்கள் அனைவரினதும் கரிசனையான கருத்துக்களைப் படிக்கும்போது, எனது பிள்ளைகள் மேல் இன்னும் இன்னும் அன்பாகவும், கரிசனையாகவும் இருக்கவேண்டும் என்று உறுதிபூணத் தோன்றுகிறது.

வணக்கம் ரகுநாதன்,

மனதை கணப்படுதிய ஒரு பதிவு.  இதை பட்டவர்த்தனமாக பலரோடு பகிர்ந்தும் உள்ளீர்கள்.

சில வரிகளை வாசிக்கும் போது என் கண்கள் நனைத்தது உண்மை.

இந்த நிமிடத்தில் நான் என் மறைந்து போன தந்தையாரை நினைவு கூறுகிறேன் ... அவர் எங்களை அரவணைத்த விதம் நினைத்து வியந்து நிற்கிறேன் (எங்கள் குடும்பம் மிகப் பெரியது 12 சகோதரங்களில் நான் தான் கடைசி ) ... நான் அவருக்கு அல்லது அவரோடு சேர்ந்து செய்ய வேண்டும் என நினைத்த சில சின்ன விடயங்களை என்னால் செய்ய முடியாமல் போன வருத்தம் இன்றும் எனக்குள் இருக்கிறது.

மறைந்து போன உங்கள் தாயாரினதும், போராளி தம்பியினதும், (தந்தையினதும்) ஆத்மா சாந்தி அடையட்டும். நீங்கள் வாழ்கையில் சந்தித்த அவலங்களை எல்லாம் கடந்து எங்கோ வந்து விட்டீர்கள்.

மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்கள் சுற்றங்களுடன் உங்கள் வாழ்வு நந்தவனமாய் அமையட்டும்.

உங்கள் பதிவில் இருந்து நான் கற்றுக் கொண்டது - என் மூன்று பிள்ளைகளோடு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே நெருக்கமாய், அன்னியோன்யமாய், நண்பனாய் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு இன்று வேலை தலத்தில் இருந்து வீடு போகின்றேன்... (வீட்டில் நான் கொஞ்சம் கண்டிப்பானவன் என்ற தோற்றம் இனி உடைக்கப்படும்)

நன்றி கலந்த தோழமையுடன் ..சசி

உங்களின் கரிசனைக்கு நன்றி சசி. உங்களின் பிள்ளைகள் மேல் நீங்கள் காட்டும் அன்பிற்கு உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதை நினைப்பதற்கு எனது கதை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியே.

ரகு அண்ணே ஒரு மென்மையான போக்குள்ள அப்பாவுடன் வளர்த்ததால் (குடிப்பதை தவிர) இங்கதையை வாசித்து கொண்டு வரும்போது உண்மைக்கும் கண்ணீர் விட்டேன் நிஜத்தில் இப்படி ஒரு அப்பாவா என்று ...என்ன இந்த மனுஷன் கொம்பியூட்டர் பார்த்து கண்ணீர் விடுகுது என என் மனைவி கேட்கும் அளவு என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை ....இதிலும் இருந்தது மீண்டு உங்களால் சாதிக்க முடித்து இருக்கு என்றால் உண்மையில் நிங்கள் போற்றப்படவேண்டியவர் எப்பொழுதும் இவ்வாறு தளராத மனநிலையில் நீங்கள் இருக்க இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் அண்ணா .

வணக்கம் அஞ்சரன்,

உங்களால்த்தான் இவை எல்லாமே. நீங்கள் அப்பாக்கள் தினத்தில் உங்கள் தந்தைக்கு கவிதை வடித்திருக்காவிட்டால், நான் இப்படியொன்றை எழுதியிருப்பேனோ என்று தெரியவில்லை. எனது மனக் கவலையைக் கொட்டித் தீர்ப்பதற்கு வடிகால் உருவாக்கிக் கொடுத்தது உங்கள் கவிதை. அதற்கு முதற்கண் எனது நன்றிகள். மனம் இப்போது லேசாகிவிட்டது. அதேநேரம் பலரைக் கவலைப்ப்டுத்திவிட்டேன் என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் வெளிப்படையான போலிகளற்ற துணிவைப் பாராடியே தீரவேண்டும். வாசித்து முடிக்கும் மட்டும் மனது கோபத்தில் துடித்தது. ஆனாலும் நீங்கள் அவரை மீண்டும் போய்ய் பார்த்திருக்கக் கூடாது. உங்களில் கோபம் தான் வருகிறது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு நாதன் உங்களுக்குக் கிடைத்த அப்பாவைப் போல ஒரு அப்பா

வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது.

பல இடங்களில் பல விடயங்கள் நடப்பது கண்டுள்ளேன்.

உங்கள் அனுபவம் கொடுமையிலும்  கொடுமை.

நான் எனது அப்பா( சில சந்தர்ப்பங்களில்) தான் கொடுமைக்காரன் என எண்ணிக் கொண்டிருக்கின்றேன்.

இப்போது அவரின் மேல் இருந்த   பாசம் இன்னும் அதிகரிக்கின்றது.

வாத்தியார்,

மற்றையவர்களுக்கு நடந்தவற்றை அறியும்வரை எவருமே கெட்டவர்கள் இல்லை. என்னைப் பொறுத்தவரை மற்றைய எல்லா அப்பாக்களுமே நல்லவர்கள். எனென்றால் நான் அவர்களை அளப்பது எனது அப்பாவை வைத்துத்தான். என் அப்பாவைப் போல ஒரு கொடுமையானவர் இனி இருக்க முடியாது. 

முதலில் உங்கள் வெளிப்படையான போலிகளற்ற துணிவைப் பாராடியே தீரவேண்டும். வாசித்து முடிக்கும் மட்டும் மனது கோபத்தில் துடித்தது. ஆனாலும் நீங்கள் அவரை மீண்டும் போய்ய் பார்த்திருக்கக் கூடாது. உங்களில் கோபம் தான் வருகிறது.  

சரியாகச் சொல்வதென்றால், எதற்காக அவரை நான் மீண்டும் போய்ப் பார்த்தேன் என்று தெரியவில்லை. நான் வெளிநாடு போகுமுன்னர் எனது ஊரைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். அதனால் யாழ்ப்பாணம் போனேன். போகுமிடத்தில் இறுதியாக அவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் எண்ணினேன். எனது இறுதிப்பயணம் கூட இப்படிக் கொடூரமானதாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. 

ம்.......  என்னத்தை எழுதுவது எண்டு தெரியவில்லை.

நீங்கள் நல்லதொரு நிலையை அடைந்தமை மிகவும் சந்தோசமாய் இருக்கிறது. 

உங்களின் கரிசனைக்கு நன்றிகள் அலைமகள். 

ரகு உங்களுக்கு நடந்த விடயம் இது தான் முதல் முறை ஒரு பாதிக்கபட்டவரின் உண்மையான உணர்வோடு கேட்டது...இதுவே எங்களுக்கும் நல்ல ஒரு படிப்பினை எப்படி பிள்ளைகள் மற்றும் அனைவரோடும் நாம் நடக்கவேண்டும் என்று எம்மை/எமது செயல்களை அவ்வப்போது சீர்தூக்கி பார்த்து திருத்த வேண்டும்...

உங்களது அப்பாவின் இந்த வெறித்தனம் அவர் ஒரு பெரிய சுயநலமி என்றே சொல்லுகிறது...இது அவரின் பெற்றோரின் பிழை..அவரது பிரச்சனையை அவர்கள் முதலே திருத்தியிருக்க வேண்டும் அதால் பாதிக்கப்பட்டது அவரை நம்பியோரே (அவரால் முதன்மையாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்)..உங்களது தம்பிக்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன்....

எங்களை உங்களது நண்பர்களாக பாவித்து உங்களை பற்றி சொன்னதும் உங்கள் திறந்த மனத்தை காட்டுகிறது...நாங்களும் அப்படியே இருக்கவும் வேண்டும்...

நன்றி நாந்தான்,

அப்பாவின் மிருகத்தனத்திற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் அவரது தகப்பனார்கூட அவரை கடுமையாகத் தண்டித்திருப்பதாக ஒரிருமுறை கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை பள்ளியில் சேட்டை விட்டதற்காக நெற்றியில் கல்லொன்றை வைத்து அது விழாமல் வெய்யிலில் முழங்காலில் இருத்திவைத்தாரம் அவரது தந்தை என்று கூறியிருக்கிறார்.

அவர் சுயநலமி என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் பிள்ளைகளுக்காக என்று ஊரைப் பேய்க்காட்டி கலியாணம் செய்துவிட்டு பிள்ளைகளை முதலாம் வருடத்திலேயே திரத்தி விடுவாரா??

வணக்கம் ரகுநாதன். இத்தனை சவால்களைக் சமாளித்து நீங்கள் வென்றதில் மிக்க மகிழ்ச்சி.
 
குரூரம் இழைத்தவர்
 
தான்செய்வது பிழை என்று தெரிந்தால் தானே உறுத்தல் இருக்கும். எத்தனையோ காரணிகள் ஒரு மனிதன் தயக்கமின்றிக் குரூரத்துடன் (எமது பார்வையில்) வாழ்வதற்கு ஏதுவாகின்றன. எமது பெறுமதிகள், எமது அன்பிற்குரியவர்கள் மீது நாம் உணரும் பிணைப்பு இவற்றிற்கூடாக மட்டுமே எந்த உறவையும் எம்மால் எடுத்த எடுப்பில் பார்க்க முடியும். ஆனால் உலகில் அன்பு என்பதனையோ, இரக்கம் என்பதனையோ, குற்ற உணர்வையோ உணர முடியாத மனிதர்கள் இருக்கிறார்கள். தவறு சார்ந்து தண்டனை அல்லது தவறிழைத்தவர் மனம் வருந்துவதை நாம் இயல்பாக எதிர்பார்க்கிறோம். ஆனால் தவறு சரி போன்றவற்றைப் பிரித்தறியமுடியாதவர்கள் இருக்கிறார்கள்.
 
பல சமூகங்களில் காலிற்கு மேல் காலைப்போட்டு இருப்பது அல்லது கால்நீட்டி இருப்பது அவமதிப்பாகப் பார்க்கப்படுகிறது. சவுதியரேபியருடனான மேற்கின் வியாபார நடவடிக்கைகளில் பிழையான கால் வைத்திருப்பால் வியாபாரங்கள் கவிழ்ந்துள்ளன. எங்கள் சமூகத்தில் கூட புத்தகத்தைக் காலால் மிதியாதே, கோவிலில் கடவுளிற்குக் கால் நீட்டி அமராதே என்ற போதனைகள் உண்டு. ஆனால், கால் என்பது கைபோன்று உடலின் ஒரு பாகமாக மட்டுமே தெரியும் ஒருவனிற்கு, சாமியைக் கையெடுத்துக் கும்பிடலாம் ஆனால் கால்நீட்டக்கூடாது என்பது புரியாது. புரியாதவர் சாதாரண மனிதராயின் அவரிற்குத் தெரிந்த ஏதேனும் ஒரு அவமதிப்போடு ஒப்பிட்டு இந்தப் பெறுமதியினை விளக்க முயலலாம். ஆனால் புரியாதவர், அமதிப்பு என்றால் என்னவென்றே தெரியாதவராயின் எப்படி இதனை விளக்கமுடியும்? அவமதிப்பு என்பதை உணராத புரியாத ஒருவனிற்கு எதை வைத்து அதை விளங்கப்படுத்துவது? அதுபோல் மற்றவரிற்குத் தான் இழைக்கும் துன்பங்கள் அவர்களில் ஏற்படுத்தும் தாக்கத்தினைப் புரியமுடியாதவர்கள் உலகில் இருக்கிறார்கள். இவர்களை எமது பெறுமதிகளிற்குட்பட்ட பார்வையால் நாம் புரிந்து கொள்ளமுடியாது. பிழையாகப் புறோகிறாம் பண்ணப்பட்ட ஒரு றோபோட்டாகவே நாம் இவர்களை நோக்க முடியும் (குழந்தைக்கு குரூரமிழைக்கும் பெற்றோர்கள் மட்டுமல்ல, பெற்றோருட்படப் பலரிற்குக் குரூரமிழைக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள்). குழந்தைகள் சார்ந்து எமக்கு இருக்கும் மனநிலையில் இவர்களை நாம் அணுகமுடியாது. 
 
இப்படியான மனிதர்களிடம் இருந்து தள்ளியிருப்பது தான் வினைத்திறன் மிக்கது. உங்கள் அப்பா மிருகம் எனப் பார்ப்பது ஒரு பார்வை. தறவாக உருவாக்கப்பட்ட றோபோட் என்பது இன்னுமொரு பார்வை. பின்னையது ஒருவேள உங்களது விரைவான மனவமைதிக்கு உதவலாம்.
 
குரூரம்
 
உங்கள் பதிவைப் படித்தபோது, மலையகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணத்து வீடுகளில் வேலைக்காரராக விடப்பட்டிருந்த சிறுமிகளும் சிறுவர்களும் எனக்கு ஞாபகம் வந்தார்கள். எனது பிள்ளை என்று வருகையில் நான் கரைந்துபோவதால் நானொன்றும் உயர்ந்துவிடப்போவதில்லை. அது பெரும்பான்மையானவரிற்கு இயல்பாய் நடப்பது. உங்கள் கதையில் உங்கள் அப்பா உங்களிற்கு இழைத்த கொடுமைகள் யாழில் ஏராளம் வீடுகளில் வேலைக்காரச் சிறுவர்களிற்கு நடந்திருக்கிறது. ஒரு சுழை பலாப்பழம் உண்டதற்காக அடித்துக் கொலைசெய்யப்பட்ட சிறுமியின் கதை எங்கள் பிரதேசத்தில் நடந்தது. குழைக்காட்டில் ஒரு சுழை பலாப்பழத்திற்கு ஒரு உயிர்க்கொலை! உங்கள் அப்பா தனது பிள்ளைக்கு நிகழ்த்திய கொடுமையினைச் சமூகம் எடுத்த எடுப்பில் புரிந்து கொள்கிறது. ஆனால் இதே சமூகத்திற்கு இந்தக் கொடுமைகளின் பாகங்களை அனுசரித்த அனுமதித்த வரலாறு இருக்கிறது (இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை). கையாலாகாத குழந்தையினை வழர்ந்தவர் இன்னல் படுத்துவது, சொந்தத் தந்தை செய்தால் மட்டும் கொடுமை அல்லவே!
 
கையறுநிலையில் மருதனாமடத்தில் மயக்கத்தின் விழிம்பில் நீங்கள் பஸ்சிற்கு இரண்டு ரூபாய் கேட்ட இடத்தை நீங்கள் விபரித்த இடம் நெஞ்சைப் பிழிந்தது. உங்களை ஏற்றிப்போய் விட ஒரு நல்ல உள்ளம் வந்தது. நீங்கள் போராடி வென்று வாழ்கிறீர்கள். குழந்தையாய் வேலைசெய்ய ஆரம்பித்து வேலைக்கார முதியவராய் இறந்தவர்களை நான் கண்டிருக்கிறேன்.
 
வீட்டில் இருந்து குழந்தை கிழம்பி பள்ளி சென்று வருவதற்குள் தமது குழந்தை மீது துட்டர்கள் பார்வை பட்டுவிடுமோ என்று பதறுவது பெற்றோர்கள் இயல்பு. யாரென்றே தெரியாத எசமானர் வீட்டில் பத்து வயதுக் குழந்தையினைக் கொண்டுவந்து வேலைக்கு விட்டார்கள் தானே யாழ்ப்பாணத்தில்.
 
உங்கள் கதை எடுத்த எடுப்பில் ஒரு புறத்தில் குரூரமிழைத்தவரையும் பிறிதொரு கோணத்தில் குரூரத்தையும் பற்றி எண்ணத்தூண்டுகிறது. பதிவிற்குச் சற்று வெளியே பின்னூட்டம் சென்றதற்காக வருந்துகிறேன்.
 
இதைக்கேட்பது தவறாயின் மன்னியுங்கள். தவறில்லையாயின் உங்கள் அனுபவத்தில் இருந்து பின்வருவதை அறிந்துகொள் விரும்புகிறேன்:
 
உங்கள் சிற்றன்னையிடம் உங்கள் அப்பா அடங்கிப்போனதற்கான அடிப்படைக்காரணம் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அதாவது ஊரெ அறிந்த கட்டுப்படுத்தமுடியாத உங்கள் தந்தையினை எவ்வாறு அவர் கட்டுப்டுத்தினார்?
 
நன்றி

Edited by Innumoruvan

நீங்கள் பதிவிடும் ஒவ்வொரூ அங்குலமும் நான் வாழ்ந்து கழித்த இடங்கள் .அயலில் இருந்தவர்கள் இது பற்றி தெரியாமல் இருந்தார்கள்  ,நம்ப முடியாமல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரகுநாதன்.

பெற்றோர்களுடன் வாழ வேண்டிய வயதில் ரொம்பவும் மனமுடைந்து அலைந்து திரிந்து நல்ல ஒரு நிலையில் இருக்கிறீர்கள்.

ஆரம்பம் முதலே ஏதோ ஒரு ஈர்ப்பு உங்களை நோக்கி இருக்கிறது.

அதனாலோ என்னவோ எனது விபரங்கள் கேட்ட உடனேயே ஏன் எதற்கு என்று கேட்காமல் தந்துவிட்டேன்.

எப்போதும் உங்களை நினைத்து பெருமைப்கடுகிற ஒரு விடயம் என்னவென்றால்

யாழ் இணையத்தில் எந்த ஒரு ஆங்கில செய்தியோ கட்டுரையோ உடனேயே மொழி பெயர்த்து தமிழில் தட்டச்சு செய்யும் ஒருவர் என்றால் அது நீங்கள் தான்.ஏறத்தாள பத்து வருட யாழ் அனுபவத்தில் இன்னும் எப்படியான ஒருவரைக் காணவில்லை.

வணக்கம் இன்னுமொருவன்,

எனது அப்பா சிற்றன்னைக்கு ஏன் பயந்து இருந்தார் என்பது இதுவரை எனக்கு விளங்கவில்லை. சிலவேளைகளில் அப்பா கொஞ்சம் குரலை உயர்த்தி அவவுடன் பேசினாலே போதும், கோபித்துக்கொண்டுபோய் படுத்திடுவா. அன்றைக்கு எல்லோரும் பட்டினிதான். அப்போது அம்மாவை நினைத்துப் பார்ப்பேன். அப்பா அம்மாவை அடிமைபோலத்தான் நடத்தினார். அப்பாவின் இவ்வள்வு கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு அம்மா, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவருக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுப்பா. ஒருமுறை அவருக்கு குரக்கன் புட்டு அவித்துக் கொடுக்கும்போது தலைமயிர் ஒன்று புட்டினுள் இருந்ததென்று அவர் கோப்பையை அம்மாவின் முகத்தில் எறிந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்படியெல்லாம் அட்டகாசம் காட்டிய அப்பா சிற்றன்னை மீது ஒருபோதும் கடுமையாக நடந்துகொண்டது கிடையாது. இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. 

நீங்கள் பதிவிடும் ஒவ்வொரூ அங்குலமும் நான் வாழ்ந்து கழித்த இடங்கள் .அயலில் இருந்தவர்கள் இது பற்றி தெரியாமல் இருந்தார்கள்  ,நம்ப முடியாமல் இருக்கு .

அர்ஜுன்,

எனது அயலவர்களுக்கு அப்பாவின் குணம் தெரியும். அவர்கள் அவருடன் கதைப்பதேயில்லை. எங்களுடனும் அம்மாவுடனும்தான் அவர்களது பழக்கமெல்லாம். ஆனால், அவர்கள்தான் என்ன செய்யமுடியும்? 

என் அயலவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள்தான். இராசரத்தினம் ஐய்யா, தங்கராஜா மாஸ்டர்....இப்படிப் பலர். சிங்கப்பூர் பென்ஷனியர் பப்பாவின் வீட்டுக்குப் பின்னால் உள்ள ஒழுங்கையில் இருந்தது எனது வீடு.

வணக்கம் ரகுநாதன்.

பெற்றோர்களுடன் வாழ வேண்டிய வயதில் ரொம்பவும் மனமுடைந்து அலைந்து திரிந்து நல்ல ஒரு நிலையில் இருக்கிறீர்கள்.

ஆரம்பம் முதலே ஏதோ ஒரு ஈர்ப்பு உங்களை நோக்கி இருக்கிறது.

அதனாலோ என்னவோ எனது விபரங்கள் கேட்ட உடனேயே ஏன் எதற்கு என்று கேட்காமல் தந்துவிட்டேன்.

எப்போதும் உங்களை நினைத்து பெருமைப்கடுகிற ஒரு விடயம் என்னவென்றால்

யாழ் இணையத்தில் எந்த ஒரு ஆங்கில செய்தியோ கட்டுரையோ உடனேயே மொழி பெயர்த்து தமிழில் தட்டச்சு செய்யும் ஒருவர் என்றால் அது நீங்கள் தான்.ஏறத்தாள பத்து வருட யாழ் அனுபவத்தில் இன்னும் எப்படியான ஒருவரைக் காணவில்லை.

நன்றி ஈழப்பிறேன்,

அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆனால் என்ன செய்ய, கொடுத்துவைக்கவில்லை. 

ஆங்கிலத்தில் வருகின்ற கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவை அநேகமாக தமிழில் வருவதில்லை. அதனால் நான் படித்த கட்டுரைகளை தமிழில் எழுதி மற்றவரும் படிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு. அதுமட்டுமல்லாமல் எம்மைப் பற்றி வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் என்ன கூறுகின்றன என்பதை எனக்குத் தெரிந்தவர்களும் அறியவேண்டும் என்று ஆசை. அதனால் அவ்வப்போது எழுதிவந்தேன். இப்போது அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. எல்லோருமே படிக்கிறார்கள், இணைக்கிறார்கள்.  

Edited by ragunathan

வணக்கம் ரகு, நான் இந்தப் பகுதிக்கு வருவது மிகவும் குறைவு.  ஆனால், நீங்களிட்ட தலைப்பு என்னை வரவழைத்து விட்டது.  நானும் இவ்வாறானவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன்.  ஆனால், உங்களது வாழ்வு மிகவும் கொடியது.  எமது சமூகத்தில் பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும் திருமணம் முடிந்ததும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றுதான் வாழவேண்டிய நிர்ப்பந்தம்.   அதனால் அந்தக் காலகட்டத்தில் உங்கள் அம்மாவால் பிரிந்துபோவதற்கான முடிவையும் எடுக்க முடியாது.   அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண் கணவனை விட்டுப் பிரிந்திருப்பது சாத்தியமற்ற ஒன்று.  அப்படி இருப்பதாக இருந்தால் அது அந்த ஆணால் கைவிடப்பட்டிருக்கவேண்டும் அல்லது அந்தப் பெண்ணின் குடும்பத்தின் ஆதரவு இருக்கவேண்டும்.   

உங்கள் அப்பா போன்றவர்கள் என்றைக்குமே தாம் செய்த தவறை உணர மாட்டார்கள்.  சாகும்வரை அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள்.  திருந்துபவர்கள் வெகுசிலரே.   இது ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டம்.  உங்கள் சிற்றன்னைக்கு அவர் அடங்கிப் போனதற்குக் காரணம் அவர் மூலம் கிடைத்த சுகமே தவிர, அன்பினாலல்ல.   உங்கள் அப்பா உங்களிடம் அப்படி நடந்து கொண்டதற்கு அவரது சிறுவயது அனுபவங்களே காரணம் (உங்களதுஅப்பப்பா).  அதைவிட, உங்கள் அம்மா, உங்கள் அப்பாவை விட அதிகம் படித்திருந்ததால் புத்திசாலியாகவும் இருந்திருப்பார்.  அதனால், ஆரம்பத்தில் அவருக்கு அதிகம் புத்திமதிகளைக் கூறியிருப்பார்.  ஆரம்பத்தில் அது சுகமாக இருந்திருக்கும்.  பின்னர் அது தாழ்வு மனப்பான்மையாக உருவெடுத்து மனஉளைச்சலை உண்டாக்கியிருக்கிறது.  ஏற்கனவே அவரது சிறுவயதுத் தாக்கத்தினால் தாழ்வு மனப்பான்மையோடு, உங்கள் அம்மாவை மணந்தபின்பு இன்னும் அதிகமாகியிருக்கும்.  ஆகவே, அவரால் அவற்றை வெளிப்படையாகக் காட்டத் தெரியாமல் உங்கள் மீது காட்டியிருக்கிறார்.   நன்றாகப் படித்து முன்னேறி, முதலாம்தர நாட்டில் வாழும் உங்களுக்கே தாழ்வுமனப்பான்மை அவ்வப்போது வரும்போது ஆணாதிக்கம் மிகுந்த நாட்டில் வாழ்ந்த அவருக்கு மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது.  பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்.  ஆனால், இது பரம்பரை விடயம்.  நீங்கள் பத்தாம் வகுப்போடு அல்லது 12ஆம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு நாட்டிலேயே வாழ்ந்திருந்தால் நீங்களும் கிட்டத்தட்ட உங்கள் அப்பா மாதிரித்தான் நடந்திருப்பீர்கள்.  உங்கள் படிப்பும் புலம்பெயர்வும் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றியிருக்கு.   உங்களின் அந்தக் கடைசி வரியை நானும் அதிகம் யோசித்துப் பார்ப்பதுண்டு.  எனக்கும் விடை கிடைக்கவில்லை.  மிகவும் நியாயமான வரிகள்.  ஆனால், எம் கண்முன் நடப்பது மிகவும் அரிது.  

உங்கள் தம்பிக்குத்தான் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.  உங்கள் அக்கா, மற்றும் அவவின் பிள்ளைகளையாவது கஸ்டம் தெரியாமல் வளர்க்க உதவி செய்யுங்கள்.   நாம் கஸ்டப்பட்டோம் என்பதற்காக வளரும் சந்ததியும் கஸ்டப்படவேண்டியதில்லை.  நாம் பட்ட கஸ்டம் அவர்கள் படவிடாமல் பார்ப்பதே நாம் பட்ட கஸ்டத்தை உணர்ந்ததற்குச் சமம்.   இவ்வாறான கஸ்டங்களை நீங்கள் மட்டும் அனுபவித்ததாக நினைக்காதீர்கள்.  இப்படிக் கடைசிவரை திருந்தாத மற்றவர்கள் திருத்த முயற்சித்தாலும் திருந்த மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்கள் எனது குடும்பத்திலும் இருக்கிறார்கள்.  அதுவும் புலம்பெயர்ந்த நாட்டில்.  இவர்களால் நான் எனது வாழ்க்கையையே இழந்திருக்கிறேன்.   எனக்குக் கைகொடுத்தது நான் வாழும் நாட்டின் வாழ்வுமுறையும் (Life Style) நான் கற்ற கல்வியும்தான்.  ஆகவே, பலருக்கும் கஸ்டம் வருவதுண்டு.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் வருகிறது.  எனது விருப்பமெல்லாம் எமது அடுத்த சந்ததியாவது நன்றாக வரவேண்டும் என்பதே.  அதற்கு எம்மால் முடிந்தவரை முயற்சி செய்வோம்.  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் வெளிப்படையான போலிகளற்ற துணிவைப் பாராடியே தீரவேண்டும். வாசித்து முடிக்கும் மட்டும் மனது கோபத்தில் துடித்தது. ஆனாலும் நீங்கள் அவரை மீண்டும் போய்ய் பார்த்திருக்கக் கூடாது. உங்களில் கோபம் தான் வருகிறது.  

சுமே, இந்த இடத்தில் தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்துகின்றீர்கள்! :unsure:

ரகுநாதன் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்! :D

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்'
  • கருத்துக்கள உறவுகள்
ரகு அண்ணா, 
 
மனம் திறந்து உங்கள் அனுபவத்தை வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள். ஈழத்தமிழர்  பிரதேசதங்களில் இத்தகையதொரு கொடுமைக்கார அப்பாவை யாரும் நினைத்துப் பார்த்திருக்கவில்லையென்ற உண்மையை பலரது கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்கிறேன். 
 
உங்கள் அப்பாபோல பலரை எனது சிறுவயது பராயத்திலிருந்து பார்த்திருக்கிறேன். எனது அம்மப்பா கூட கிட்டத்தட்ட உங்கள் அப்பாபோன்றதொரு கொடியவன். (இன்னொரு திருமணம் மட்டும் செய்யவில்லை. மற்றும்படி சரியான மனிதனில்லை) சிறுவயதில் எனது அம்மா சகோதரங்களை அம்மம்மாவை கொடுமைப்படுத்திய கொடியவன்.
 
ஒருபோதும் என்னால் அம்மப்பா என உரியையோடு கூப்பிட முடியாத எனது முதல் எதரியாகவே அம்மப்பா எனது சிறுவயது நினைவுகளில் நின்றார். ஆனால் எல்லா கொடுமைகளையும் தாங்கி ஒரு பெண்ணாக தனித்து நின்று சமூகத்தின் சகல பழிகளையும் தாங்கி தனது ஆறுபிள்ளைகளையும் வளர்த்த அம்மம்மாவே நான் சிறுவயதில் பார்த்த இன்றுவரையும் நேசிக்கும் முதல் துணிச்சலான புதுமைப்பெண். 
 
அம்மப்பாவின் மரணத்தை ஆட்கள் வந்து சொல்லி இறுதியாக அம்மம்மாவை வருமாறு அழைத்த போது அம்மம்மா அந்த கொடியவனின் மரணத்தில் கலந்து கொள்ளாமல் அழாமல் தோட்டத்தில் புகையிலைக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றியது இன்றும் கண்ணில் நிழலாடுகிறது.
 
சிலவேளை இத்தகை அப்பாக்களை நகர்ப்புறத்தார் அறிய வாய்ப்புகள் இல்லாது போயிருக்கலாம் ஆனால் கிராமங்களில் இத்தகையவர்களை காணலாம். 
 
எனது அப்பாமீது அப்பாவென்ற பாசம் இருக்கிறது. 2008இல் மரணித்துப்போனார். ஆனால் பொறுப்பான அப்பாவாக எங்களுக்காக வாழவில்லை. சிறுவயது நினைவுகள் பலதருணங்களில் நிம்மதியை தொலைக்க காரணமாகியுள்ளது எனக்கும். ஆனால் இன்றும் அம்மா எல்லோரையும் மன்னிக்கவும் தவறுகளை மறந்து உறவுகளை வலுப்படுத்த வேண்டுமெனவே சொல்லுவா. ஆனால் குழந்தைக்கால மகிழ்ச்சிகளை , விருப்பங்களை அச்சத்துடனே கழிக்க வைத்த அம்மப்பா ,அப்பா மீதும் இப்போதும் மன்னிக்க முடியாத கோபம் வரும். 
 
எனது பிள்ளைகளுக்கு எனது சிறுவயது கால கசப்பான நினைவுகளை பலமுறை சொல்லியிருக்கிறேன். அவர்கள் எனது வாழ்விலிருந்து நிறைய கற்றுக் கொள்ளும் வகையில் பலவிடயங்களை பகிர்ந்திருக்கிறேன். கணவருக்கும் அடிக்கடி நினைவுபடுத்தும் விடயம் நல்ல தந்தையாக தந்தையின் அன்பை பிள்ளைகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். அம்மாக்களில் இயல்பாகவே பிள்ளைகளுக்கு பாசம் வரும். ஆனால் அப்பாக்கள் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும் பிள்ளைகளுக்கு.
 
எழுத்து என்பது கூட ஒருவகை மனநல வைத்தியம்தான். உங்கள் மனசில் துயர் தரும் நினைவுகளை எழுதி முடியுங்கோ. அதுவே உங்களை புத்துணர்வுடன்  மீள புதுப்பிக்கும்.
 
நன்றி சாந்தி,

இவர்போல பலர் இருக்கிறார்கள். ஆனால் வெளியில் தெரிவதில்லை. இந்தத் திரியில் இன்னும் பலர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்கள் நிலமை நெஞ்சை கனக்க செய்கிறது.ஆனாலும் உங்கள் அப்பாவின் செய்கை முலம் உங்கள் குழந்தைகள் அருமையான தந்தையை பெற்றுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.