Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை  ஒரு பெண் கமல் , அதுதான் படத்துக்குப் படம் வேறுபட்டுத் தெரியுறா !, அவர் ஒரு ஆண் ரஜனி,  எப்பவும் ஒரேமாதிரி...! :)

  • Replies 157
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி.. வல்வை அக்கா.. பியூட்டி பார்லர் போயிட்டு வந்திருக்கா...! அதுதான் உண்மைக் காரணம். பாவம்.. அத்தார் சிரிப்பை தொலைச்சிட்டு நிற்கிறதை பார்க்கத் தெரியல்ல..! :lol::D

அதுசரி எல்லா ஆண்களும் ஏன் மூஞ்சியை உம்.. என்று வைச்சிட்டு இருக்காங்க. :lol:

படத்துக்கு இப்பிடித் தான் அப்பாவி அம்மாஞ்சியள் மாதிரிப் போஸ் குடுப்பீனம் இந்த ஆண்கள்! நிக்கிற ஆக்களிட உண்மையான முகங்கள் வேற நெடுக்கர் :D

(மிக முக்கியமா சசி வர்ணம் அமைதியான அப்பாவி மாதிரி நிக்கிறதப் பாக்க எனக்குப் படீரெண்டு சிரிப்பு வந்திட்டுது! :D  :lol:  :D)

நியானி: ஒரு படம் நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியும் வந்திருக்காக

அடப்பாவிகளா....

பியூட்டி பார்லருக்கு போய்ட்டு தான் வந்த என்று சகாறா அக்காவே ஒப்புக்கொண்டுட்டாவே.. இனி என்ன செய்ய? நெடுக்ஸ் அண்ணாவுக்கு நாளைக்கு வந்து ஒரு லைக் போட்டு விடுவம். :)

படங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. மீராபாரதி தெரிகிறார். ஆதிவாசியைக் காணவில்லை.

நான் இணைத்த அனைத்து படங்களையும் எடுத்தவர் யாழ்வாணன். ஒரு பார்வையாளராக வந்தவர் நான் கேட்டவுடன் மிகவும் சுறு சுறுப்பாக ஒரு புகைப்படல் கலைஞனைப் போல் ஓடி ஓடி படங்களை எடுத்தார். அவருக்கு என் நன்றி

ஆதிவாசி வந்திருந்தார். ஆனால் தன்னை படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். என் உரையைக் கேட்டால் அதன் காரணம் புரியும். :lol::rolleyes:

நிழலியானந்தா.. பிரேமதாச மாதிரி.. துள்ளி.. துள்ளி.. விசுக்கி விசுக்கி பேசுறாரே.. என்னாச்சு. உணர்ச்சி வசப்பட்டிட்டார் போல. :lol::D

இதுதான் நான் ஏறிய முதல் மேடை. தொழில் சம்பந்தமான Presentations / seminars பல செய்து இருந்தாலும், இப்படி பொதுவான மக்கள் வந்திருக்கும் கூட்டத்தில் பேசியது இதுதான் முதல் தடவை. என் கால்களும் உடலும் உண்மையில் தள்ளாடி நடுங்கியது. எந்தளவுக்கு நடுக்கம் இருந்தது என்பதை வீடியோவை  இணைக்கும் போது பார்த்து நாள் முழுதும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

தன் தொகுப்பில் இணைக்காமல் விட்ட சகாறா எழுதிய 'தயங்கு, இயங்கு,முயங்கு, மயங்கு' கவிதையை வாசித்தேன்...  ஆளை மாட்டி விட்டாச்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பளிச்சென்று தெரிஞ்சால் பாலிஸ் போட்டிருக்குன்னு அர்த்தம் அக்கா. இதெல்லாம் தெரியாட்டி.. என்ன பேஸ்புக் உலக ஆம்பிளை..! :lol::D

கிடைச்'ச காப்பில் எழுதிச் தொலைச்சிடுவாங்களே....

பொதுவாக இப்படியான அலங்காரமாக முன் எப்போதும் எவரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை காரணம் கனடாவில் இத்தகைய தோற்றத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பூ, பொட்டு , புடவை என்று சராசரி தமிழ்ப்பெண்ணாக காட்சி கொடுத்தது இல்லை. இந்த நிகழ்வில் அப்படி வெளிப்பட்டிருப்பது பார்ப்பவர்குக்கு மனதிற்குத் திருப்தியாக இருக்கிறது அதுதான் கொஞ்சம் அவர்களின் மனதிற்கு இளமையாகத் தெரிகிறேன்........ நெடுக்கு சொன்னா நம்போணும்  ஆய்வுகள் எல்லாம் செய்யக்கூடாது :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

"திரு" அண்ணா, நல்ல கம்பீரமா மிடுக்கா இருக்கிறார்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று செப்டம்பர் 20, மாலை எனது அன்பு தோழிகளில் ஒருத்தியான சகாராவின் தமிழகத்தில் வெளியிடப்பட்ட இரு நூல்கள் கனடிய மண்ணில் வெளியிடப்பட்டன. பல்வேறு பணிகள் பல்வேறு நிகழ்வுகள்.. அனைத்திலும் முகம் கொடுக்க வேண்டிய சூழலில் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வின் இறுதிப் பாகத்தில் சென்று ஒரு சில உரைகள் குறிப்பாக நூல்களை எழுதிய சகாராவின் ஏற்புரை நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

சகாரா, நெருப்பு வரிகளின் சொந்தக்காரி..வேண்டுமான போது அழகியலை அழகு மிளிர தனக்கே உரித்தான பாணியில் இலக்கிய சுவை சொட்டவும் தர வல்லவள்...அந்த இலக்கிய உயிர்ப்புகளில் அவள் எழுதிய நூல் 'வேங்கையன் காதலி' என்ற காப்பிய நூல். மற்றையது கவிதைத் தொகுப்பு.

நான் உருகிக் கரைந்து போற்றும் எங்கள் களத்துக் கவி புதுவை இரத்தினதுரை ஐயனின் பாசறை பயிலாமலே அவரோடு கொண்ட உற்ற தோழமையால் ஏகலைவியானவள்... அவர் தொனியிலும் அவ்வப்போது அவர் வலிமையின் சாயலிலும் வலிமை திரட்டி உண்மை வரிகளில் கவி படிப்பவள்... மரபுக் கவிக்கும் புதுமைக் கவிகளுக்கும் இடையில் கலப்புக் கவியாய் அனைவரையும் ஈர்க்கும் கவிதைகள் படைக்கும் கவிதை சிற்பி... சொல்லாடல் அரசி...

கால ஓட்டத்தின் வேகத்தில் கை கோர்த்த தோழமைகள் திசைக்கொன்றாய்...எங்கோ எங்கோ.. தூரமாக தொலைந்து போனாலும் தொலையாது எமக்குள் மூளும் தீயும்.. இலக்கழியா சிந்தைகளின் சீர்மைகளும்..

எம்மை கை கோர்க்க வைக்க எமக்காக ஏதேனும் ஒரு புள்ளி என்றுமே தயாராகி நிற்கும்.. நாங்கள் எம்மை தொலைக்காத வரையில் என்பதை இன்று கண்டுகொண்டேன்...

இவள் கவி நாடகங்களில் அவளது நெறியாள்கையில் நாம் நடித்து அரங்கேறிய அந்த கலைப்பயண நாட்கள்..நினைவுகளாய்...

இன்னமும் தோள் கொடுத்த பயண வெளிகளில் திசைகள் கடந்து பறந்த கூடிப் பயணித்த பயணங்கள்... வெற்றிகள்..தோல்விகள்.... உறவுகள்..பிரிவுகள்.. நீண்ட நினைவுகளில் திண்மையின் வார்ப்பாக பெண்ணிவள் என் தோழியாய்...

தூர சென்றாலும் நினைவுகள் தூரமாவதில்லை.... எந்த திக்கில் உன் பார்வைகள் இருந்தாலும் எங்கள் இலக்குகள் என்றும் ஒரே திசையே...!!!

சொல்லாடி தமிழ் களமாடும் இவள் கவிதை விளையாட்டில் கிறங்கிப் போகும் ரசிகை நான்..

எழுத்து இவள் வடமிழுக்கும் திசையில் வெள்ளிகள் உதிர்க்கும்.....வீரமும் பாய்ச்சும்...ஏதேதோ எழுதும் இலக்கியவாதியாய்.. இரு.. அதே போல் இலக்கு தொலைக்காமல் எழுதும் நெருப்பு சிந்தையையும் அணையாமல் காத்திடு...

எழுது... புதைந்து கிடக்கும் எம் வலிமைகள் மேலெழ எழுது...

பூவை பாடு.. அநீதி காண்கையில் பூகம்பமும் ஆகு! எல்லோர் சொல்லும் தமிழ் கேட்பதில்லை.. தமிழை உயிரில் சுமந்து அடிமையானவர்களுக்கு எங்கள் தமிழ் செல்ல குழந்தையாகும். உன் சொல் கேட்கும் தமிழை தாலாட்டு தேவை வந்தால்... அன்னைத் தமிழை கருவியாக்கு!

சிகரம் தொடும் உன் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள் தோழி..

வாழ்த்துக்களுடன்

செந்தமிழினி பிரபாகரன்

அப்ப நான் சொன்னது தான் சரி. நெடுக்ஸ் அண்ணாவுக்கு போடவிருந்த பச்சை வாபஸ். :D

அதுசரி, யாழில் கறார் என்று பேசும் நிழலி அண்ணாவுக்கு நூல்வெளியீட்டில் பேசும் போது நடுக்கம் என்றால் நம்ப முடியவில்லை. :D:lol:

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

அப்பிடி ஒண்டுமில்லை.. இந்தியா வெய்யிலிலை கொஞ்ச கொழுப்பு கரைஞ்சிடுச்சா... அதாலை இருக்கலாம்!!  :o  :D

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக, எடுக்கப்பட்டுள்ளது. நூல்வெளியீடு இனிதாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த அனைத்து படங்களையும் எடுத்தவர் யாழ்வாணன். ஒரு பார்வையாளராக வந்தவர் நான் கேட்டவுடன் மிகவும் சுறு சுறுப்பாக ஒரு புகைப்படல் கலைஞனைப் போல் ஓடி ஓடி படங்களை எடுத்தார். அவருக்கு என் நன்றி

ஆதிவாசி வந்திருந்தார். ஆனால் தன்னை படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். என் உரையைக் கேட்டால் அதன் காரணம் புரியும். :lol::rolleyes:

இதுதான் நான் ஏறிய முதல் மேடை. தொழில் சம்பந்தமான Presentations / seminars பல செய்து இருந்தாலும், இப்படி பொதுவான மக்கள் வந்திருக்கும் கூட்டத்தில் பேசியது இதுதான் முதல் தடவை. என் கால்களும் உடலும் உண்மையில் தள்ளாடி நடுங்கியது. எந்தளவுக்கு நடுக்கம் இருந்தது என்பதை வீடியோவை  இணைக்கும் போது பார்த்து நாள் முழுதும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

தன் தொகுப்பில் இணைக்காமல் விட்ட சகாறா எழுதிய 'தயங்கு, இயங்கு,முயங்கு, மயங்கு' கவிதையை வாசித்தேன்...  ஆளை மாட்டி விட்டாச்சு

அப்ப வல்வை அக்காவுக்கும் யாழில தான் வீரம் அதிகம் போல. யாழில் வல்வை அக்காவுக்கு ஒரு தனி அடையாளம் தந்ததே.. அந்த தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு விதிகள் தானே.

நியூட்டனின் 3 விதிகள் பெளதீகவியலுக்கு எப்படி முக்கியமோ.. குடும்பவியலுக்கு அக்காவின்.. 4 விதிகள் முக்கியம்..!!! அதை மறைச்சது.. ரெம்பக் கொடுமை..!!!! அதை சபையில் வெளிக்கொணரனுன்னா.. கை.. கால் நடுங்கத்தான் செய்யும். அதை கடதாசியை விசுக்கி விசுக்கி.... மறைக்கிறது என்பது.. வாஸ்தவமான நடவடிக்கை தான். :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாழ்கள உறவுகளை படங்களில் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.

ekuruvi_valvai_sahara_20sep2014%20%2875%

நல்ல உள்ளத்திற்கு ஒரு சான்றிதழ் இந்தப்படம். :)  :icon_idea:

கிரிக்கெட் மாட்ச் ஒன்று பார்க்க போனதில் நேரம் ஆறை தாண்டிவிட்டது மாட்ச் முடியவில்லை ஆனால் எமது டீம் நிட்சயம் தோல்வி என்ற நிலை இரண்டு பியர் வேறு அடிதாச்சு அடித்துபிடித்து வீடு வந்து புத்தக வெளியீட்டிற்கு போவம் என்றால் மனுசி வாற மூட்டில் இல்லை ,

நிகழ்வு நடக்கும் இடம் எனது வீட்டில் இருந்து ஐந்து நிமிட ஓட்டமும் இல்லை பாரதி கலாமன்றதிற்குள் புகுந்தாச்சு .சிறுவர்களின் மெல்லிசை போய்கொண்டிருக்கின்றது .அப்பாடா 

பூவும் பொட்டும் மல்லிகையும் கனகாம்பரமும் பட்டு சேலையும் மினுங்கல் சர்வாருமாக எங்கும் பெண்கள் மயம்.

யாயினியும் தமிழச்சியும்  அருகருகில் இருக்க கண்டு காரில் வைத்திருந்த மேசொவினதும் காவலூர் கண்மணி அக்காவினதும் புத்தங்கள் நினைவுவர திரும்ப காருக்குள் போய் எடுத்துக்கொண்டு வந்து 

என்னை தெரியுமா என்று யாயினியிடம் கேட்டேன் ,சிரித்துக்கொண்டே அர்ஜுன் அண்ணா என்றார்.புத்தகத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தமிழசிக்கும் யாழ்வாணனுக்கும் ஒரு வணக்கம் வைத்தேன் .யாயினி அவர் தந்தையாரை காட்டினார் . அவரது தந்தையாரும் எனது தந்தையாரும் நல்ல நண்பர்கள் .

அப்படியே நிழலி ,சகாரா ,அவர் கணவர் எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு திரும்ப மீராபாரதி துணைவியார் சகிதம் வருவதை கண்டு அவர்களுடன் போய் அமர்ந்துவிட்டேன் .இருவரும் ஏற்கனவே பல வருட பழக்கம்.

சிறிது நேரத்தில் சசி வந்து அருகில் இருந்தார் .சசிக்கும் மீரா அவர் மனைவி பழக்கம்.சசிக்கு தெரியாதவர்கள் எவரும் இல்லைபோல கிடக்கு .

நிகழ்ச்சி தொடங்கியது  .முரளி தான் தொகுப்பாளர் .முதலில் கதிர் செல்வகுமார் அறிமுக உரை ,பின்னர் காவலூர் கண்மணி அக்கா கவிதை வடிவில் சகாறா தனது நட்பு பற்றி பேசி ஒரு விருதும் வழங்கினார்  .அடுத்து ஈழவேந்தன் மிக சுருக்கமாக பேசியது மிக ஆச்சர்யம் .இவர் அறிவும் ஆற்றலும் உலகு அறிந்தது ஆனால் காசுக்கு பாட்டெழுதும் புலவர் நிலை இவரது 

அடுத்து எமது நிழலி வந்து மேடை பேச்சு அனுபவம் இல்லை என்று சொல்லிவிட்டு வெளுத்துவாங்கினார் .உடல்மொழியில் சற்று நடுக்கம் தெரிந்தாலும் பேச்சிலும் சொன்ன கருத்திலும் மிக தெளிவு இருந்தது .யாழ் உறவுகளுக்கு தெரியாத ஒரு விடயத்தையும் அதில் போட்டு உடைத்தார்  அப்போது   சகாறா வெட்கி தலை குனிந்தது கண் கொள்ளாகாட்சி .

பின்னர் ஆய்வுரை எனது மிக விருப்பத்திற்கு உரிய எழுத்தாளர் தமிழ்நதி (அரசியலில் நேர் எதிர் ) மிக நேர்மையான விமர்சனம் வைத்தார் .உண்மை சொல்லுகின்றேன் என்று சில சர்சைக்குரிய விடயங்களையும் சொன்னார் .

அடுத்து கலாராஜன் குண்டலகேசி மணிமேகலை எல்லாம் இழுத்து இது ஒரு ஆறாம் காப்பியம் என்றார்.(பொட்டு கதை வேறு ).

அடுத்து விஸ்ணு பாராட்டுரை  இவர் சகறாவை பாராட்டாமல் வல்வையின் சிறப்பு பற்றி மட்டும் பேசினார் .

அடுத்து புத்தக வெளியீடு ,படங்களும் எடுத்தோம் .முடிவில் சகாரா நன்றியுரையும் விளக்கவுரையும் தந்தார் .புதுவையை பற்றி பேசும் போது கண்ணில் கண்ணீர் வேறு வந்தது .

இனிதே நடந்ததது புத்தக வெளியீடு .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. இந்தியாவில் நடந்தைவிட, கனடாவில் சிறப்பாக நடந்திருக்கின்றது என நினைக்கிறேன், சகாறாவின் நண்பர்களும் உறவினர்களும் காரணமாக இருக்கலாம்.

நேற்று செப்டம்பர் 20, மாலை எனது அன்பு தோழிகளில் ஒருத்தியான சகாராவின் தமிழகத்தில் வெளியிடப்பட்ட இரு நூல்கள் கனடிய மண்ணில் வெளியிடப்பட்டன. பல்வேறு பணிகள் பல்வேறு நிகழ்வுகள்.. அனைத்திலும் முகம் கொடுக்க வேண்டிய சூழலில் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வின் இறுதிப் பாகத்தில் சென்று ஒரு சில உரைகள் குறிப்பாக நூல்களை எழுதிய சகாராவின் ஏற்புரை நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.

சகாரா, நெருப்பு வரிகளின் சொந்தக்காரி..வேண்டுமான போது அழகியலை அழகு மிளிர தனக்கே உரித்தான பாணியில் இலக்கிய சுவை சொட்டவும் தர வல்லவள்...அந்த இலக்கிய உயிர்ப்புகளில் அவள் எழுதிய நூல் 'வேங்கையன் காதலி' என்ற காப்பிய நூல். மற்றையது கவிதைத் தொகுப்பு.

நான் உருகிக் கரைந்து போற்றும் எங்கள் களத்துக் கவி புதுவை இரத்தினதுரை ஐயனின் பாசறை பயிலாமலே அவரோடு கொண்ட உற்ற தோழமையால் ஏகலைவியானவள்... அவர் தொனியிலும் அவ்வப்போது அவர் வலிமையின் சாயலிலும் வலிமை திரட்டி உண்மை வரிகளில் கவி படிப்பவள்... மரபுக் கவிக்கும் புதுமைக் கவிகளுக்கும் இடையில் கலப்புக் கவியாய் அனைவரையும் ஈர்க்கும் கவிதைகள் படைக்கும் கவிதை சிற்பி... சொல்லாடல் அரசி...

கால ஓட்டத்தின் வேகத்தில் கை கோர்த்த தோழமைகள் திசைக்கொன்றாய்...எங்கோ எங்கோ.. தூரமாக தொலைந்து போனாலும் தொலையாது எமக்குள் மூளும் தீயும்.. இலக்கழியா சிந்தைகளின் சீர்மைகளும்..

எம்மை கை கோர்க்க வைக்க எமக்காக ஏதேனும் ஒரு புள்ளி என்றுமே தயாராகி நிற்கும்.. நாங்கள் எம்மை தொலைக்காத வரையில் என்பதை இன்று கண்டுகொண்டேன்...

இவள் கவி நாடகங்களில் அவளது நெறியாள்கையில் நாம் நடித்து அரங்கேறிய அந்த கலைப்பயண நாட்கள்..நினைவுகளாய்...

இன்னமும் தோள் கொடுத்த பயண வெளிகளில் திசைகள் கடந்து பறந்த கூடிப் பயணித்த பயணங்கள்... வெற்றிகள்..தோல்விகள்.... உறவுகள்..பிரிவுகள்.. நீண்ட நினைவுகளில் திண்மையின் வார்ப்பாக பெண்ணிவள் என் தோழியாய்...

தூர சென்றாலும் நினைவுகள் தூரமாவதில்லை.... எந்த திக்கில் உன் பார்வைகள் இருந்தாலும் எங்கள் இலக்குகள் என்றும் ஒரே திசையே...!!!

சொல்லாடி தமிழ் களமாடும் இவள் கவிதை விளையாட்டில் கிறங்கிப் போகும் ரசிகை நான்..

எழுத்து இவள் வடமிழுக்கும் திசையில் வெள்ளிகள் உதிர்க்கும்.....வீரமும் பாய்ச்சும்...ஏதேதோ எழுதும் இலக்கியவாதியாய்.. இரு.. அதே போல் இலக்கு தொலைக்காமல் எழுதும் நெருப்பு சிந்தையையும் அணையாமல் காத்திடு...

எழுது... புதைந்து கிடக்கும் எம் வலிமைகள் மேலெழ எழுது...

பூவை பாடு.. அநீதி காண்கையில் பூகம்பமும் ஆகு! எல்லோர் சொல்லும் தமிழ் கேட்பதில்லை.. தமிழை உயிரில் சுமந்து அடிமையானவர்களுக்கு எங்கள் தமிழ் செல்ல குழந்தையாகும். உன் சொல் கேட்கும் தமிழை தாலாட்டு தேவை வந்தால்... அன்னைத் தமிழை கருவியாக்கு!

சிகரம் தொடும் உன் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள் தோழி..

வாழ்த்துக்களுடன்

செந்தமிழினி பிரபாகரன்

செந்தமிழினி (சிவவதனி) அக்காவுடன் நீங்கள் சேர்ந்து நின்று எடுத்த படம்.

10671461_10154525550815012_7371035746813

படம்: முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய நண்பி சகாராவின் 'வேங்கையன் பூங்கொடி' காவியத் தொகுதி, 'காவியத் தூது' கவிதைத் தொகுதி, வெளியீட்டு விழாவின் இவ்இனிய மாலைப்பொழுதில் நட்புரைக்காக, இந் நல்ல நேரத்தை ஒதுக்கி என்னை அழைத்த விழா நாயகிக்கு நன்றி கூறும் இவ்வேளையில் அவையில் அமர்ந்திருக்கும் அறிவுசால் கவிஞர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், வித்துவத் திறமை கொண்ட அத்தனை அன்புறவுகளுக்கும், என் அன்பு வணக்கம்.

வல்லை வெளி தாண்டி,  வானுயர்ந்த மலைதாண்டி,
எல்லையில்லா வயல் தாண்டி,  எத்தனையோ நிலம் தாண்டி,
பனைமரக் காடு தாண்டி,  பரந்த சாகரம் தாண்டி,
பனிவயலில் விழுந்த,  பகல் நிலவு இந்த கவிமலர்

தன் சோலைவனத்தின் பெயர் பாதி
ஒரு பாலைவனத்தின் பெயர் மீதி கொண்ட
வார்த்தையெனும் வாளேந்திய
வஞ்சினம் வல்வை சகாரா

இளமையிலேயே இறக்கை விரித்த
சின்னப் பறவை இவள்
ஆனாலும்
நீலப் பறவையல்ல
நெருப்புக் குயில் இவள்

கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலையில்
முகமது தெரிந்திடா
உறவது தொடர்ந்தது
முடிவிலாத் தொடுவானமாய்

விரிந்திடும் நட்பிது

அத்துடன்
'யாழ்' இணைய மேடை
எம் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் அளித்தது
உறவுகளைப் பலப்படுத்தியது
ஊக்குவித்து உயிர்கொடுத்தது

எம் வீட்டுத் தொலைபேசிக்கு
வாயிருந்தால்
அது பேசும் எம் நேசம் பற்றி
மண்ணையும் மனிதத்தையும்
நேசிக்கும் எம் சுபாவம் பற்றி

நாம் தாராளமாகப் பேசியதில்
ஏராளம் எம் தாய்மண் பற்றி

அது தவிர

எம் வளமான வாழ்க்கை பற்றி
மனதில் வலி சுமந்த நேரம் பற்றி
எம் பெற்றவர் பரிவு பற்றி
உடன் பிறந்தவர் நேசம் பற்றி

நட்பு வட்டத்தின் திறமை பற்றி
கவிஞர்கள் மன ஆழம் பற்றி
கதைகளின் கருப்பொருள் பற்றி
பெண்களின் ஆளுமை பற்றி

இவை மட்டுமல்ல
இடம் பெயர்ந்த குயில்கள் நாம்
மீண்டும் வேடந்தாங்கலிலே
விதவிதமாய் கூவும் காலம் பற்றி

கந்தகத்து முட்களிலே
மீண்டும் எப்போ
குங்குமப் பூ பூக்கும் என்று

காத்திருக்கும் சூரியக் கனவு பற்றி

இவள் கனவுகளின் காலடித்தடங்கள்
காயம் பட்டுவிட்ட பொழுதுகளில்
இயலாமைக்குள் சிக்கி பல சமயம்
எழுத மறுத்திருக்கிறது

இவள் எழுத்தாணி

இவள் பேனா துப்பாக்கி
இவள் எழுத்து வெடிகுண்டு
இவள் உள்ளுக்குள் போராளி

உலகிற்கு கவிதாயினி

ஒப்பனைப் புன்னகை இவளிடம்
ஒரு பொழுதும் கண்டதில்லை
கற்பனையில் சந்தோசம்
கண்டு என்றும் மகிழ்ந்ததில்லை

நெத்தியடியாய் தொடரும்
நிழலையும் உடைத்திடுவாள்
மௌனம் கலைத்துவிடில்
மனதுக்குள் வானம்பாடி

உணர்வுகளை உலுக்கும் கவிவரிகள்

வாழ்வை ஊடுருவிப் பார்க்கும் தனிப்பார்வை
அழகியல் கலந்த ஆழமான சொல்லாடல்
மண்சார்ந்த மட்டற்ற ஏக்கம்

ஈழமண்ணின் வலி சுமந்து
வாழும் மண்ணில் கவிவடித்து
காவியத்தூது சொன்ன கவிதாயினியே
நீ விழிகளில் தீ மூட்டி
வெற்றிக் கொடிகட்டு

என் இனிய தோழி
எம் மறைகள் வேறாக துறைகள் வேறாக
எம் அகவை வேறாக இருந்தாலும்
நட்பென்ற வட்டத்துக்குள் உனக்கும் எனக்கும்
ஏற்றத்தாழ்வுகள் என்றுமே உணர்ந்ததில்லை

நீ தமிழோடு விளையாடும் கலைமகள்
அச்சமின்றி உச்சங்களைத் தொட
நிச்சயம் உன் தேடல் தொடரும்
எம் நட்புக் காலம்
நாம் வாழும் காலம் தாண்டி
பலகாலம் வாழும்

விரித்துவிட்ட சிறகுகளை
விண்ணளவு பறக்க விடு
விண்ணளவு பறந்த பின்னும்
விடியலுக்காய் கவி எழுது

மண்ணினது கனவோடு
மனம் முழுதும் நீராடு
எண்ணமதில் எழும் புரட்சிக்
கனலோடு போராடு

தண்ணிலவில் தமிழீழக்
கடலோரம் நடைபோடு
உன்னளவில் உனக்குள்ளே
ஓர் உலகை உருப்போடு

சிரமங்கள் பல வென்று
சிகரங்கள் பல கண்டு
இமயமாய் நிலைத்திட
என்றும் என் இனிய வாழ்த்துக்கள்

நன்றி

நட்புடன்

காவலூர் கண்மணி

நிகழ்வு சிறப்புற நடந்ததில் மகிழ்ச்சி..

கலந்து கொள்ள முடியாமையை இட்டு வருத்தம்.

கிழமை நாட்களின் மாலை நேரங்களுமம் வார இறுதி நாட்களுமே (பாடசாலை விடுமுறை நாட்கள் தவிர) நான் மாணவர்களீற்கான வகுப்புகளை நடத்த முடியும் என்பதால்  இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. 

 வல்வை அக்காவும் கள உறவுகளும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

மணி உங்களுடைய பணிகள் பற்றி நான் அறிவேன் சங்கடமோ கவலையோ வேண்டாம் . :) உங்களைச்சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது எனது நூல்களைத்தருகிறேன்.

அனைவரது உரைகளையும் நாளை இங்கு இணைக்கிறேன். எதிர்பார்ப்புடன் இருக்கும் நண்பர்கள் மன்னிப்பார்களாக.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி... உந்த புத்தகத்தின் பின் பக்கத்தில நாங்கள் எழுதின வாழ்த்துக்கள் வந்திருக்கோ அதையும் ஒருக்கா ஸ்கான் பண்ணி போட்டா நாங்கள் கொடுப்புக்குள்ள சிரிப்பமல்லோ ......:D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியிடு சிறப்பாக நடை பெற்றதையிட்டு மகிழ்ச்சி.யாயினி,தமிழச்சி போன்றோர் நிகழ்ச்சிக்கு போனது மகிழ்ச்சி.முக்கியமாக யாயினி போனது மகிழ்ச்சி.இனி மேலும் யாயினி இப்படியான பல நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும். தமிழச்சியை படத்தில் பார்த்தது மகிழ்ச்சி. எல்லோரும் சொன்ன மாதிரி சகாறா அக்கா மிகவும் அழகாக இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
சகாரா ஒளிப்பதிவுகளை இணையுங்கோ அல்லது உங்கள் ரசிகைகள் மன்றத்தின் சார்பில் உண்ணும் நோன்பு அனுஸ்டிக்கப்படும்.
 
இணையம் என்பது உலகை உள்ளங்கையில் வைத்திருக்கிறது என்கிறார்கள். சகாரா உங்கள் நூல்வெளியீடு மூலம் கள உறவுகளை தரிசிக்க வைத்துள்ளது. 
இனிதாக நடந்துமுடிந்த விழாவினைப் பற்றிய அர்யுன் எழுதிய குறிப்பு போதாது. அழகன் நிழலி , சசி போன்றோரும் எழுதுங்கள்.
 
அழகன் நிழலியின் உரைய யாராவது இணையுங்கப்பா ! :lol:

அழகன் நிழலியின் உரைய யாராவது இணையுங்கப்பா ! :lol:

நான் முதல் மேடை பயத்தில் நடுக்கத்துடன் தள்ளாடுவதை பார்க்க அவ்வளவு ஆசை...  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் தமிழ்நதியின் வேண்டுகோள் கருதி இவ்விடத்தில் அவருடைய உரையை இணைக்கவில்லை.

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.