Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு

Featured Replies

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.

சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.

ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.

கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.

jk_2363415f_2367539a.jpg

எழுத்தாளர் ஜெயகாந்தனை நினைவு கூரும் பதிவு:

எழுத்து அவர் ஜீவனமல்ல; ஜீவன்!- டாக்டர் என்.ராம்

ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தன்னுடைய ஞானத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர். ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே., பாலதண்டாயுதம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர்கள் மூலம் மார்க்ஸையும் பாரதியையும் கற்றவர்.

இதனால், மனிதநேயம் என்பது அவருடன் இரண்டறக் கலந்த இயல்பாகிவிட்டது. எனவேதான், மக்கள் கவனத்தைப் பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை - அவலம் அனைத்தையுமே தன் கதைகளின் பாடுபொருளாக்கிக் காட்டினார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி வாழ்ந்தவர் என்ற காரணத்தால், அவருடைய பாத்திரங்கள் உயிர்த் துடிப்புடன் இலக்கிய வீதியில் உலா வருகிறார்கள்.

மனிதநேய ஆன்மிகம் “பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்க வர்ணனை நடத்தி விடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து, அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்” என்று அவரே விளக்கிக் காட்டியபடி சேரிவாழ் மக்களையும், நடைபாதைவாசிகளையும் இலக்கியப் பாத்திரங்களாக நடமாட விட்டார். ‘உன்னைப் போல் ஒருவன்' சிட்டியும், ‘யாருக்காக அழுதான்' சோசப்பும், ‘பிரளயம்’ அம்மாசிக் கிழவனும், ரிக்ஷாக்காரன் கபாலியும் மறக்கக் கூடிய பாத்திரங்களா? அதற்குக் காரணம் ‘வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் தண்டிக்கப்பட்டவர்களிடமும் சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவை' அவர் நாடிச் சென்றதே ஆகும். ஜெயகாந்தனுடைய ஆன்மிகம் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

“எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனிதநேய அடிப்படையில் மனுஷகுல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றத் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லௌகிக லாபங்களை எல்லாம் மறுத்து அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறானோ அவனே ஆன்மிகவாதி” என்பது அவர் தரும் விளக்கம். சிறுகதைச் சக்ரவர்த்திகள் ஏழை எளிய மக்களை மனமார நேசிக்கும் ஜெயகாந்தன் சொல்லுகிறார்: “நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.

“45 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் வரவேற்புரையில் ‘சிறுகதை மன்னர்' என்று யாரோ அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழின் வெளிச்சத்தையும் ஏழை மக்களை நோக்கியே திருப்பி அந்த மேடையில் அவர் கேட்டார்: “என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங் களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’

ஏதோ அவர்களிடம் கேட்டதை, அவர்களிடம் பார்த்ததை நான் உங்களுக்குத் தருகின்றேன் - எழுதத் தெரிந்த ஒரே காரணத்தால். ஆனால், சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?” அரங்கத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று! அடித்தட்டு வாழ்க்கையின் கலைமனநோயாளிகளைப் படம்பிடித்துக் காட்டிய ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' மக்களைச் சிந்திக்க வைத்த தொடர். ‘பிறருக்குத் தெரியாத, தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற, தெரிந்துவிடக் கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்துகொள்ளுகிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி - என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட - என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?' என்ற சாட்டையடிக் கேள்வி மனசாட்சியை உலுப்பி மனநோயாளிகளை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. ஏழை மக்களை வசதி படைத்தோர் ஏமாற்றுவதை ‘பிரளயம்' கதையில் எடுத்துக்காட்டி, இலவசங்களை நம்பி உழைப்பை மறந்துவிடும் சோம்பேறித்தனத்தைச் சாடுகிறார்.

சிற்பி கூறியதுபோல, ‘தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! ‘குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன்.

மூலம்-தமிழ் இந்து .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

எழுத்துலகுக்கு ஈடில்லா இழப்பு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்தாளனுக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
 
ஞானபீடம் விருது பெற்ற 
எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
jeyaganthan.jpg
 
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(8.4.2015) காலமானார்.
 
யாருடைய சாயலும் இல்லாமல் தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்டு,  எழுத்துலகில் புகழ்பெற்று விளங்கிய காலத்திலேயே எழுதுவதை நிறுத்தி கொண்டிருந்த ஜெயகாந்தன், கடந்த பல மாதங்களாகவே உடல்குன்றியிருந்து வந்து, சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் இன்று பிரிந்தது.
 
 1934-ல் கடலூரில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார் ஜெயகாந்தன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.  வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
 
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ கட்சியின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப்பட்டது. ஆதலால் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். 
 
இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராஜருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
 
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். 
 
இவரது நாவல்களான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’,   ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகியவை  இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாக வந்தன. ‘ஊருக்கு நூறு பேர்’ என்ற கதையை இயக்குநர் லெனின் திரைப்படமாக்கினார். ’உன்னைப் போல் ஒருவன்’ படத்தை இவரே இயக்கினார்.  சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.
 
சாகித்திய அகாதமி விருது,  ஞான பீட விருது,  பத்ம பூஷன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர் இன்று 8.4.2015 இரவு 9 மணிக்கு காலமானார்.ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
 
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று(8.4.2015) காலமானார்.
 
---------------
 
கண்ணீரஞ்சலி.
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன், பிரபல தமிழ் எழுத்தாளராக இருக்கலாம்.
இவர் வாழ்ந்த காலத்தில் தான்.... ஈழப் போராட்டமும் நடந்தது.
அதனைப் பற்றி.... இவர் தனது எழுத்துக்களில், பிரதி பலிக்காதது பெரும் குறை.
இவரது வயதை உடையவரும், இளமைக்கால நண்பரும் தான்... அமரர் வாலி.
அவருக்கு இருந்த ஈழப் பற்றில்... ஒரு துளியேனும், ஜெயகாந்தனிடம் இருந்ததில்லை.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய முன்னோடி ஜெயகாந்தனுக்கு எனது அஞ்சலிகள்.

சாண்டில்யனின் கதைகளை வாசித்துக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமான ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தமிழ் நாவல்களிலும், சிறுகதைகளிலும் பெருவிருப்பை உண்டாக்கியிருந்தது. அவர் உருவாக்கிய கதைமாந்தர்கள் மூலம் தமிழ்நாட்டுக்குப் போகாமலேயே அங்குள்ளவர்களின் வாழ்வையும் சிந்தனைமுறைகளையும் அறியக்கூடியதாக இருந்தது.

  • தொடங்கியவர்

ஜெயகாந்தன், பிரபல தமிழ் எழுத்தாளராக இருக்கலாம்.

இவர் வாழ்ந்த காலத்தில் தான்.... ஈழப் போராட்டமும் நடந்தது.

அதனைப் பற்றி.... இவர் தனது எழுத்துக்களில், பிரதி பலிக்காதது பெரும் குறை.

இவரது வயதை உடையவரும், இளமைக்கால நண்பரும் தான்... அமரர் வாலி.

அவருக்கு இருந்த ஈழப் பற்றில்... ஒரு துளியேனும், ஜெயகாந்தனிடம் இருந்ததில்லை.

அஞ்சலிகள்.

ஈழப்போராட்டம் பற்றி வாலியை விட ஆயிரம் மடங்கு பேசியவர் எழுதியவர் ஜெயகாந்தன் .உங்கள் கண்ணில் படவில்லை என நினைக்கின்றேன் .

அதைவிட ஜெயகாந்தன் எழுதிய ஊருக்கு நூறு பேர் ,மூங்கில் காட்டு நிலா இந்த இரண்டு நாவல்களும் போதும் நாம் போராட .(ஊருக்கு நூறு பேர் இந்தியா ,இலங்கையில் தடை என்று நினைக்கிறேன் .நான் 80 ஆம் ஆண்டு வாசித்ததாக நினைவு  )

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Vigil-Candle.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து சிங்கம்’ ஜெயகாந்தன் காலமானார்!

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார். 81 வயதான அவர் சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இன்று இரவு கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

சிறுகதை, நாவல், உரைநடை, சினிமா என எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்தவர். இவரது பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளன. இவரே மூன்று திரைப்படங்கள் இயக்கியுள்ளார். சாகித்ய அகாடமி, பத்மவிபூஷன், ஞானபீடம் என பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தார்.

jayakanthan2.jpg

விகடனில் முத்திரைக்கதைகள் மூலம் வாசகர் பரப்பில் மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியவர். மானுடத்தின் மீது மாறாத நம்பிக்கை கொண்டு  எளிய மக்களின் இலக்கியவாதியாகத் திகழ்ந்தார்.  எந்த அறிவியல் கண்டுபிடிப்பாலும் மானுடத்தை அழிக்கமுடியாது என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். தன் எழுத்தின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கே  தனி கம்பீரத்தை அளித்தவர்.

தன் எழுத்தளவிற்கு பேச்சிலும் விவாதங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்த ஜெயகாந்தன் கடைசி நாட்களில் பேசாமலேயே படுக்கையில் இருந்தார்.சமீபத்தில் மறைந்த விகடன் நிறுவனர் பாலசுப்ரமணியன்  பற்றி எழுதிய அஞ்சலிக்குறிப்பில் "எல்லோரும் இங்கே தானே இருக்கப் போகிறோம். பார்த்துக்கொள்ளலாம் என இருந்து விட்டேன்" என வருந்தியிருந்தார். இன்றைக்கு ஜெயகாந்தன் இல்லை.

ja2(2).jpg

ja1.jpg

vikatan.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன் 'நடை' என்று தமிழுக்கு ஒரு எழுத்து நடையை அறிமுகப் படுத்தியவர்!

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

LTTE ஐ ஆதரிப்பவர்கள் கோழையாக இருக்க வேண்டும், அல்லது கைக்கூலி வாங்கி இருக்க வேண்டும். மனிதாபிமானமுடைய, நெறியுடைய அரசியலறிந்த எவரும் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். தனி ஈழம் கேட்பவர்கள் ஏன் அந்த மண்ணைவிட்டு ஓடி வர வேண்டும், சாப்பாடு கேளுங்கள் நாங்கள் தருகிறோம்.

-1-9-90- ஜெயகாந்தன். - 

ஆத்மா சாந்தியடையட்டும்...!     

(முகப்புத்தகத்தில் ஒரு நண்பர்)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் பற்றி வாலியை விட ஆயிரம் மடங்கு பேசியவர் எழுதியவர் ஜெயகாந்தன் .உங்கள் கண்ணில் படவில்லை என நினைக்கின்றேன் .

அதைவிட ஜெயகாந்தன் எழுதிய ஊருக்கு நூறு பேர் ,மூங்கில் காட்டு நிலா இந்த இரண்டு நாவல்களும் போதும் நாம் போராட .(ஊருக்கு நூறு பேர் இந்தியா ,இலங்கையில் தடை என்று நினைக்கிறேன் .நான் 80 ஆம் ஆண்டு வாசித்ததாக நினைவு  )

LTTE ஐ ஆதரிப்பவர்கள் கோழையாக இருக்க வேண்டும், அல்லது கைக்கூலி வாங்கி இருக்க வேண்டும். மனிதாபிமானமுடைய, நெறியுடைய அரசியலறிந்த எவரும் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். தனி ஈழம் கேட்பவர்கள் ஏன் அந்த மண்ணைவிட்டு ஓடி வர வேண்டும், சாப்பாடு கேளுங்கள் நாங்கள் தருகிறோம்.

-1-9-90- ஜெயகாந்தன். - 

ஆத்மா சாந்தியடையட்டும்...!     

(முகப்புத்தகத்தில் ஒரு நண்பர்)

அர்ஜூன்... நான் நாவல்கள் வாசிப்பது குறைவு என்ற வகையில்,

ஜெயகாந்தன் ஈழம் சம்பந்தமாக எழுதிய, புத்தகங்கங்கள் எனது கண்ணில் படாமல் போயிருக்கலாம்.

ஆனால் ஈழப் போராட்டத்தை... சோ, சுப்பிரமணிய சாமி  போன்றவர்களின் நிலையில்  இருந்தே பார்த்து வந்தார்.

அதற்கு..... சாட்சியாக, சோழியானின் இணைப்பை மேற்கோள் காட்டியுள்ளேன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ஜெயகாந்தன் 83 இற்கு முன்னால் எழுதியவை தான் இன்றும் பலர் மனதில் இடம் பிடித்திருக்கு .எனக்கு கூட "ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் " தான் அவரது பெஸ்ட்.

ஜே கே யின் ஈழத்து அரசியல் தனிப்பட அவர் ஈ பி தோழர்களோடு வைத்த உறவு குறிப்பாகக பத்மநாபாவில் அவர் வைத்திருந்த மதிப்பு .இதே தான் எழுத்தாளர் வாஸந்தி கேதிஸ் மீது வைத்திருந்த மதிப்பும் .

சீமானும் நெடுமாறனும் பிரபாகரனில் வைத்திருந்த மதிப்பு போல் தான் இதுவும் .

சோ ,சுவாமியுடன் ஜே கே யை ஒப்பிட்டால் பிழை உங்கள் மீதுதான் ,

அதைவிட வாலி -இவர் காசுக்கு பாடும் நல்ல கவிஞர் கருணாநிதியை இவர் போற்றி பாடிய அளவு எவரும் பாடவில்லை (இவர் போற்றி பாடியவர்கள் பட்டியல் ரொம்ப நீளம் ).

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு

Aufträge online finden - Ausschreibungen für Ihre Region. Zugriff auf 600.000 Aufträge!www.dtad.de/Ausschreibungen
COMMENT (85)   ·   PRINT   ·   T+  
 
newPic_3212_jpg_20_2367537f.jpg
ஜெயகாந்தன் | கோப்புப் படம்: பிஜாய் கோஷ்
இலக்கிய பிதாமகனை இழந்தோம்!

*

தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81.

சென்னை கே.கே.நகர் நாகாத்தம்மன் கோயில் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபா என்ற மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர்.

ஜெயகாந்தன் 1934-ம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் விழுப்புரத்தில் அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அங்கு அவருக்கு பொதுவுடைமைக் கோட்பாடுகளும் பாரதியாரின் எழுத்துகளுக்கும் அறிமுகமாயின. பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

அங்கு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ஜனசக்தி அச்சகத்தில் பணிபுரிந்தா. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்ட போது தஞ்சையில் கடை ஒன்றில் பணிபுரிந்தார். அப்போது முதல் ஏராளமான படைப்புகளை உருவாகினார்.

பின்னர் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கிய அவர் தீவிர எழுத்துப்பணியில் ஈடுபட்டார். 1950-ல் அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. தொடர்ந்து சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாகின. இவரது படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். சில படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன. "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றது.

இத்தகைய எழுத்து ஆளுமைமிக்க இலக்கிய பிதமாகன் ஜெயகாந்தனின் இழப்பு சகலதரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

jk_2363415f_2367539a.jpg

எழுத்தாளர் ஜெயகாந்தனை நினைவு கூரும் பதிவு:

எழுத்து அவர் ஜீவனமல்ல; ஜீவன்!- டாக்டர் என்.ராம்

ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தன்னுடைய ஞானத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர். ஜீவானந்தம், எஸ்.ஆர்.கே., பாலதண்டாயுதம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர்கள் மூலம் மார்க்ஸையும் பாரதியையும் கற்றவர்.

இதனால், மனிதநேயம் என்பது அவருடன் இரண்டறக் கலந்த இயல்பாகிவிட்டது. எனவேதான், மக்கள் கவனத்தைப் பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை - அவலம் அனைத்தையுமே தன் கதைகளின் பாடுபொருளாக்கிக் காட்டினார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி வாழ்ந்தவர் என்ற காரணத்தால், அவருடைய பாத்திரங்கள் உயிர்த் துடிப்புடன் இலக்கிய வீதியில் உலா வருகிறார்கள்.

மனிதநேய ஆன்மிகம் “பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்க வர்ணனை நடத்தி விடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து, அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்” என்று அவரே விளக்கிக் காட்டியபடி சேரிவாழ் மக்களையும், நடைபாதைவாசிகளையும் இலக்கியப் பாத்திரங்களாக நடமாட விட்டார். ‘உன்னைப் போல் ஒருவன்' சிட்டியும், ‘யாருக்காக அழுதான்' சோசப்பும், ‘பிரளயம்’ அம்மாசிக் கிழவனும், ரிக்ஷாக்காரன் கபாலியும் மறக்கக் கூடிய பாத்திரங்களா? அதற்குக் காரணம் ‘வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் தண்டிக்கப்பட்டவர்களிடமும் சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவை' அவர் நாடிச் சென்றதே ஆகும். ஜெயகாந்தனுடைய ஆன்மிகம் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

“எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனிதநேய அடிப்படையில் மனுஷகுல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றத் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லௌகிக லாபங்களை எல்லாம் மறுத்து அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறானோ அவனே ஆன்மிகவாதி” என்பது அவர் தரும் விளக்கம். சிறுகதைச் சக்ரவர்த்திகள் ஏழை எளிய மக்களை மனமார நேசிக்கும் ஜெயகாந்தன் சொல்லுகிறார்: “நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.

“45 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் வரவேற்புரையில் ‘சிறுகதை மன்னர்' என்று யாரோ அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழின் வெளிச்சத்தையும் ஏழை மக்களை நோக்கியே திருப்பி அந்த மேடையில் அவர் கேட்டார்: “என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங் களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’

ஏதோ அவர்களிடம் கேட்டதை, அவர்களிடம் பார்த்ததை நான் உங்களுக்குத் தருகின்றேன் - எழுதத் தெரிந்த ஒரே காரணத்தால். ஆனால், சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?” அரங்கத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று! அடித்தட்டு வாழ்க்கையின் கலைமனநோயாளிகளைப் படம்பிடித்துக் காட்டிய ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' மக்களைச் சிந்திக்க வைத்த தொடர். ‘பிறருக்குத் தெரியாத, தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற, தெரிந்துவிடக் கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்துகொள்ளுகிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி - என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட - என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?' என்ற சாட்டையடிக் கேள்வி மனசாட்சியை உலுப்பி மனநோயாளிகளை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. ஏழை மக்களை வசதி படைத்தோர் ஏமாற்றுவதை ‘பிரளயம்' கதையில் எடுத்துக்காட்டி, இலவசங்களை நம்பி உழைப்பை மறந்துவிடும் சோம்பேறித்தனத்தைச் சாடுகிறார்.

சிற்பி கூறியதுபோல, ‘தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! ‘குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதி (அட்டூழிய) படையின் செயல்களை ஆதரித்தவர். விடுதலைப் புலிகளை கழுதைப் புலிகள் என்று அழைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதி (அட்டூழிய) படையின் செயல்களை ஆதரித்தவர். விடுதலைப் புலிகளை கழுதைப் புலிகள் என்று அழைத்தவர்.

5ம் வகுப்புக்கு மேல பள்ளிக்கூடம் போகாதவர். சில யதார்த்தங்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்திருக்கும். விடுங்க இசை.

எனி இவரை வைச்சு புலிகள்.. திட்டுறவைக்கு.. பஞ்சம் தான்.

இருந்தாலும் இவரளவுக்கு இல்லாமல்.. சக மனிதனின் சாவு என்ற வகையில்.. ஆழ்ந்த இரங்கல்கள் வெளிப்படுவது இயல்பு தானே... இசை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் பற்றி வாலியை விட ஆயிரம் மடங்கு பேசியவர் எழுதியவர் ஜெயகாந்தன் .உங்கள் கண்ணில் படவில்லை என நினைக்கின்றேன் .

அதைவிட ஜெயகாந்தன் எழுதிய ஊருக்கு நூறு பேர் ,மூங்கில் காட்டு நிலா இந்த இரண்டு நாவல்களும் போதும் நாம் போராட .(ஊருக்கு நூறு பேர் இந்தியா ,இலங்கையில் தடை என்று நினைக்கிறேன் .நான் 80 ஆம் ஆண்டு வாசித்ததாக நினைவு  )

  • கருத்துக்கள உறவுகள்

 எழுத்தாளனாக இன்று வரை ஒரு வித்தியாசமான பிரமிப்பிற்குரியவராக இருக்கும்  ஜெயகாந்தன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.