Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சாவு! -Photo in

Featured Replies

யாழ்.சுன்னாகம் மல்லாகம் கல்லாரை பகுதியில் இன்று திங்கட்கிழமை மின்சார வயர் (மின்கடத்தி) அறுந்து வீழ்ந்ததில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர். பாலச்சந்திரன் ரஜீவன்(வயது 29) மற்றும் மகனான ரஜீவன் நிரூசன்(வயது 9)ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

minsaram_01.png

இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த போது மின்சார இணைப்பு வயர் அறுந்து நிலத்தில் வீழ்ந்திருந்துள்ளது. அவ்வேளையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகன் ஆகியோர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

minsaram_02.png

மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

minsaram_03.pnghttp://www.pathivu.com/news/39785/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

மின் விநியோகத்தைத் துண்டிக்குமாறு மின்சார சபைக்கு அறிவித்த போதும் 45 நிமிடங்களுக்கு பின்னரே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

http://www.pathivu.com/news/39785/57//d,article_full.aspx

மிக மிகத் திறமையான? மின்சார சபை..! :wub:

மனித உயிர்களுக்கு மதிப்பேயில்லாத ஆசிய நாடுகளின் அன்றாட நிகழ்வு.. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்க உரியவர்கள் ஆவன செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
சைக்கிள் பிரயாணம் + தந்தை + மகன் + மழை + அறுந்து விழுந்த மின்சார வயர் = விதி எனும் இறைவன் கணக்கு 
 
குடும்பத்தவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பெயர் விதியல்ல. மின்னல் அதி அழுத்த இலத்திரன் பாய்ச்சல். அது வயர்களை தாக்குவதும்.. வயர்கள் அறுவதும் எதிர்பார்க்கக் கூடிய விளைவுகள். வயர் போடுறவை.. தான் அதையிட்டு கவனமாக இருக்கனும். மக்கள் நடமாடும் பகுதிகளுக்குள்ளால் உயர் அழுத்த வயர்களை ஏன் போடினம். மேலும்.. நிலக்கீழ் வயர் வலையமைப்பு மூலம் இப்படியான மரணங்களை முற்றாகத் தவிர்க்கலாம்.

இப்படி மரணங்கள் சொறீலங்கா... இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நிகழ்கின்றன. காரணம்.. தவறுகளை சரியான வழியில் திருத்த போதிய அறிவின்மையும்.. மக்கள் பற்றிய அக்கறை இன்மையும் என்று சொல்லலாம்.

தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம்.. வயர்கள் அறுந்தாலோ.. குறுஞ்சுற்று தோன்றினாலோ.. மின்சார விநியோகத்தை துண்டிக்க வழிகள் உள்ள நிலையில்.. சொறிலங்கா... மின்சார சபை இன்னும் முன்னேறல்ல.  ஆனால் மக்களிடம் வசூலிக்கும் தொகை மட்டும் கூடிக்கிட்டு போகுது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இந்த மின்சாரத்தை புறக்கணித்து மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால்.. சில வேளைகளில் பாதுகாப்பான வழிகள் வரக்கூடும். மக்களின் அநியாயச் சாவுகள் தவிர்க்கப்படும். :icon_idea:

Edited by nedukkalapoovan

சைக்கிள் பிரயாணம் + தந்தை + மகன் + மழை + அறுந்து விழுந்த மின்சார வயர் = விதி எனும் இறைவன் கணக்கு 
 
குடும்பத்தவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

எந்த தவறுக்கும் இறைவன் மீதும் விதிமீதும் பழியை போட்டு தப்பிக்க நினைப்பது ஆசிய அடிப்படைவாத  மூடபழக்கம்.  உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்குப் பெயர் விதியல்ல. மின்னல் அதி அழுத்த இலத்திரன் பாய்ச்சல். அது வயர்களை தாக்குவதும்.. வயர்கள் அறுவதும் எதிர்பார்க்கக் கூடிய விளைவுகள். வயர் போடுறவை.. தான் அதையிட்டு கவனமாக இருக்கனும். மக்கள் நடமாடும் பகுதிகளுக்குள்ளால் உயர் அழுத்த வயர்களை ஏன் போடினம். மேலும்.. நிலக்கீழ் வயர் வலையமைப்பு மூலம் இப்படியான மரணங்களை முற்றாகத் தவிர்க்கலாம்.

இப்படி மரணங்கள் சொறீலங்கா... இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நிகழ்கின்றன. காரணம்.. தவறுகளை சரியான வழியில் திருத்த போதிய அறிவின்மையும்.. மக்கள் பற்றிய அக்கறை இன்மையும் என்று சொல்லலாம்.

தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம்.. வயர்கள் அறுந்தாலோ.. குறுஞ்சுற்று தோன்றினாலோ.. மின்சார விநியோகத்தை துண்டிக்க வழிகள் உள்ள நிலையில்.. சொறிலங்கா... மின்சார சபை இன்னும் முன்னேறல்ல.  ஆனால் மக்களிடம் வசூலிக்கும் தொகை மட்டும் கூடிக்கிட்டு போகுது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இந்த மின்சாரத்தை புறக்கணித்து மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால்.. சில வேளைகளில் பாதுகாப்பான வழிகள் வரக்கூடும். மக்களின் அநியாயச் சாவுகள் தவிர்க்கப்படும். :icon_idea:

சிங்களவனுக்கு அதியுச்ச / அடிமட்ட போர் நுட்பங்களையும் பரிசளிக்க தெரிந்த சர்வதேசத்துக்கு இதெல்லாம் பெரிசாய் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

...

தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம்.. வயர்கள் அறுந்தாலோ.. குறுஞ்சுற்று தோன்றினாலோ.. மின்சார விநியோகத்தை துண்டிக்க வழிகள் உள்ள நிலையில்.. சொறிலங்கா... மின்சார சபை இன்னும் முன்னேறல்ல.  ஆனால் மக்களிடம் வசூலிக்கும் தொகை மட்டும் கூடிக்கிட்டு போகுது...

Underground cabling, Short Circuit Analysis, Time delay போன்ற மின்பாதுகாப்பு பொறிமுறைகளை, அதன் சார்ந்த தொழில் நுட்பங்களை மின்சார வலையமைப்புகளில்(Medium Voltage/Low Voltage Electrical Network System) அமுல்படுத்த மின்னனு கருவிகளை, அதற்கான தொழில்நுட்பங்களை கூடுதலாக நிறுவ வேண்டும்.. சிறீலங்கா மின்சார சபையிடம் பணமில்லை போலும்! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... இள வயதில் உள்ள தந்தை, 9 வயது மகன்.
குடும்பத்தில்.... ஒரே நேரத்தில், முக்கிய உறுப்பினர்களை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கெல்லாம் ஏதாவது ஒரு பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் உடனே மின்சார சபையினுடைய இணைப்பு வரைபடத்தில் அந்த விவரம் காட்டப்படும். செல் தொலைபேசி மூலம் இவ்வரைபடத்தைப் பார்வையிடலாம். அல்லது அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டால் தானியங்கி முறையில் பாதிக்கப்பட்ட பகுதி விவரங்கள் உங்களுக்கு சொல்லப்படும்.

இதன்மூலம் தனிப்பட உங்கள் வீட்டில் மின் பிரச்சினையா அல்லது உங்கள் பகுதியில் பிரச்சினையா என்பதை அறிந்துகொள்ள முடியும். மின் இணைப்பு இல்லாவிட்டால் குளிர்காலத்தில் பிரச்சினை ஆகிவிடும். சில மணிநேரங்களில் வீடு குளிர்ந்துவிடும்.

Edited by இசைக்கலைஞன்

இந்தநிலைக்கு சிறீலங்கா வருவதற்கு 100 வருடங்களாகும்...

ஆனால் வடக்கு கிழக்கை   தமிழர்களது கையில் கொடுத்தால்

எம் கண்முன்னே அது சாத்தியம்......... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.