Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

" என்னை நன்றாக படம் எடுத்து கூட்டமைப்பிடம் காட்டுங்கள் , சந்தோஷப்படுவார்கள் '' - பிள்ளையான்

Featured Replies

என்னை நன்­றாக படம் எடுங்கள். எடுத்­துக்­கொண்டு ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசியகூட்­ட­மைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்­தோ­ஷப்­ப­டுவர் என முன் னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்) நேற்று நீதி­மன்ற வளாகத்தில் வைத்து குறிப்­பிட்டார்.

Pillayan.jpg

முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் ஜோஸப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கடந்த ஞாயி­றன்று மாலை கைது செய்­யப்­பட்ட பிள்­ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

பிள்ளையான் நேற்று பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் புதுக்­கடை முதலாம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தற்­கான அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

நீதி­வானின் உத்­தி­யோ­க­பூர்வ அறையில் சட்­டத்­த­ர­ணிகள், குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் பிள்­ளையான் ஆகியோர் மட்டும் இருக்க தடுப்புக் காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து திறந்த நீதி­மன்ற பகு­திக்கு பிள்­ளையான் அழைத்து வரப்­பட்ட நிலையில் அங்கு அவ­ரது சட்­டத்­த­ர­ணியால் அவ­ருக்கு ஆலோ­ச­னைகள் வழங்க­ப்­பட்­டன.

' எதிர்­வரும் நவம்பர் 4 ஆம் திகதி உங்­களை இதே மன்றில் முன்­னிலைப் படுத்­துவர். அப்­போது நாம் வருவோம். ஒன்றும் பயப்­பட தேவை­யில்லை. உங்கள் உற­வி­னர்­க­ளுக்கு சனிக்கிழமை உங்­களை பார்­வை­யி­டலாம். உணவும் கொண்­டு­வந்து தரலாம் என இதன் போது அந்த சட்­டத்­த­ரணி பிள்­ளை­யானிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கைவி­லங்­கி­டப்­பட்ட பிள்­ளையான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நீதி­மன்­றத்­துக்கு வெளியே அழைத்து வரப்­பட்டார். இதன்­போது மன்றின் புதுக்­கடை நீதி­மன்ற வளா­கத்தின் பிர­தான வாயிலை பிள்­ளையான் அடைந்த போது அங்­கி­ருந்த புகைப்­படப் பிடிப்­பா­ளர்கள் அவரை புகைப்படம் எடுத்­தனர்.

இதன்­போது தனது விலங்­கி­டப்­பட்ட கைகளை சற்று உயர்த்தி ' நன்­றாக படம் எடுங்கள்... எடுத்துக் கொண்டு போய் ரீ.என்.ஏ.விடம் காட்டுங்கள்.. அவர்கள் மிக்க சந்தோஷப்படுவர்..' என தெரிவித்தவாறு அவர் புலனாய்வுப் பிரிவின் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

http://www.virakesari.lk/articles/2015/10/15/என்னை-நன்­றாக-படம்-எடுத்­து-கூட்டமைப்பிடம்-காட்டுங்கள்-சந்தோஷப்படுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புரியுது. :(

அவயண்ட MP க்கள் இரண்டு பேருக்கு வெடியப் போட்டுட்டு, மீதிப் பேருக்கு பேதி போக வைத்து, இப்ப பிடிபட்ட பிறக்கு, சந்தோசப் படமா, அழவா போகினம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ..............

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்துக்குத் துரோகம் செய்து இனக்கொலையாளர்களுக்கு நிகராக தமிழின அழிப்பில் ஏஈடுபட்டபோதே இவர் போன்றோரது அழிவும் எழுதப்பட்டு விட்டது.

கிழக்கின் விடிவெள்ளி இப்படிக் கைவிலங்குடன் வருவது இவரது அபிமானிகளுக்கும் ஒரு பாடத்தைச் சொல்லும்.

"கிழக்கின் விடிவெள்ளி" - அபாரம்

எதிரியை மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே எண்பதுகளில் நடந்திருந்தால் மேலே போயிருப்பார்.. இப்போது சகோதரப் படுகொலை பட்டியலில் இருந்திருப்பார்..

  • கருத்துக்கள உறவுகள்

இதன்­போது தனது விலங்­கி­டப்­பட்ட கைகளை சற்று உயர்த்தி ' நன்­றாக படம் எடுங்கள்... எடுத்துக் கொண்டு போய் ரீ.என்.ஏ.விடம் காட்டுங்கள்.. அவர்கள் மிக்க சந்தோஷப்படுவர்..' என தெரிவித்தவாறு அவர் புலனாய்வுப் பிரிவின் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

வடக்குக்கும், கிழக்குக்கும் இடையே.. பெரிய்ய்ய கோடு ஒன்றைக் கீறிவிட்டதைத் தவிர.. இவர் பெரிதாக எதையும் வெட்டி விழுத்தவில்லை என்றே நினைக்கின்றேன்!

இவ்வளவு துரோகங்களின் பின்னும் வடக்கும் வாழ்கின்றது.... கிழக்கும் வாழ்கின்றது!

கோடு கீறியவர்களின் விதியை மக்களே எழுதட்டும்!

உண்மை புங்கை!

இவர் போன்றவர்களும், பேரினவாதமும் எதிர்பார்ப்பது அவ்வாறானதொரு நிலையான இடைவெளியைத்தான். ஆனால் அது நடக்க விடக்கூடாது.

அப்படியான ஒரு இடைவெளி இருக்குமானால் அதை இல்லாமல்ச் செய்வது எமது கடமை.

நாம் எல்லோருமே ஈழத் தமிழர்கள்தான். அது கிழக்காக இருந்தாலென்ன, வடக்காக இருந்தாலென்ன!

அதேவேளை, இவ்வாறானதொரு பிரிவை பிள்ளையான் போன்றோர் பேசுவதற்குக் காரணமாக வடக்கிலிருந்து கிழக்கிற்குச் சென்ற பலரின் செயற்பாடுகளும் காரணமாக இருந்தது என்பதனை நான் முற்றாக ஏற்றுக்கொள்கிறேன். அப்படியான ஒரு நிலையை உருவாக்கி கிழக்கின் சகோதரர்களை அந்நியப்பட வைத்தமைக்காக உண்மையாகவே வேதனையும் வெட்கமும் அடைகிறேன்.

புலிகளில் இருந்தவர்களில் இதை விட அதிகம் எதிர் பார்த்தால் அது உங்கள் பிழை .

  • கருத்துக்கள உறவுகள்

புலியை குறை கூறியே  மிகுதி இருக்கும் வாழ்கயையும்  ஓட்ட நினைக்கும் உங்களைப் போன்றவரிடம் இதை விட அதிகம் எதிர் பார்த்தால் அது எங்கள் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் இருந்தவர்களில் இதை விட அதிகம் எதிர் பார்த்தால் அது உங்கள் பிழை .

  யானை விழுந்து விட்டது என்பதற்காக, ஏறி ஊரும்எறும்பு   புத்திசாலி, பலசாலி  என்றுமில்லை. யானை  பலமற்றது என்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் தாசன்களிடம் தான் அதிகம் எதிர்பார்க்க வேண்டும். 

மாணிக்கதாசனுக்கே அஞ்சலி செலுத்தினவர் எல்லோ. 

புலியை குறை கூறியே  மிகுதி இருக்கும் வாழ்கயையும்  ஓட்ட நினைக்கும் உங்களைப் போன்றவரிடம் இதை விட அதிகம் எதிர் பார்த்தால் அது எங்கள் பிழை.

புலியை குறை கூறியே  மிகுதி இருக்கும் வாழ்கயையும்  ஓட்ட நினைக்கும் உங்களைப் போன்றவரிடம் இதை விட அதிகம் எதிர் பார்த்தால் அது எங்கள் பிழை.

எனது மிகுதி வாழ்க்கையுடன் மட்டும் அல்ல அடுத்த தலை முறைக்கும் அதை அழுத்தமாக சொல்லிவிட்டு செல்லவேண்டும் .அரசு செய்த அநியாயங்களை மட்டும் சொன்னால் போதாது  போராட என்று புறப்பட்டு சொந்த மக்களை கொன்று தள்ளியர்வர்களும் அதில் அடக்கம் .

இன்றும் யூதன் கிட்லர் செய்த அநியாயங்களை மீண்டும் மீண்டும் சொல்லியே வருகின்றான் 

நீங்கள் மட்டும் அல்ல சசி ,எனக்கு ஒரு அண்ணையும் ஒரு தம்பியும் இருக்கின்றார்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று போய்விடுவார்கள் ஆனால் எல்லோரும் அப்படியல்ல. கடந்த முப்பது வருடங்கள் ஓடியது படமல்ல பார்த்துவிட்டு போய் படுத்துவிட

தமிழர்கள் பலர் அதே மனநிலையில் தான்   இன்னமும் இருக்கின்றார்கள் .எமது மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டுவைக்க கூடாது .

எதையும் தாண்டி கண்டும் காணமல் போகும் பலருக்கு புலிகள் என்றவுடன் பொத்து கொண்டுவரும் .

டேவிட் ஐயாவின் மறைவுடன் பல பதிவுகள் வாசித்தேன் .ஆள் ,ஆயுத பலத்தால் அராஜகத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்டு அமைப்பை விட்டு சென்ற சந்தியாரை துரோகியாக்கி கொலை செய்த உமா இன்று பலராலும் துரோகியாகவும் சந்ததியார் நேர்மையானவர்கள் ஆகவும் பார்க்கபடுகின்றார்.

நடந்து முடிந்தது என்று எவரும் கடந்து செல்லவில்லை உண்மைகள் வெளிவரவேண்டும் பதிய படவேண்டும் என்றே விரும்புகின்றார்கள் .

12107255_10153461353684130_4380254551939

Edited by arjun
எழுத்து பிழை திருத்தம் .

எனது நண்பர் 3As B எடுத்தவர் கட்டுப்பத்தை கம்பசினை விட்டு, பிளாட்டில் போய் மீண்டு வந்தவர். புலிகளை மன்னித்தாலும் , புளொட் நாதாரிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார்.

என்ன காரணம் என்று விளக்குவீர்களா அர்ஜுன் அண்ண?

  • கருத்துக்கள உறவுகள்

எனது மிகுதி வாழ்க்கையுடன் மட்டும் அல்ல அடுத்த தலை முறைக்கும் அதை அழுத்தமாக சொல்லிவிட்டு செல்லவேண்டும் .அரசு செய்த அநியாயங்களை மட்டும் சொன்னால் போதாது  போராட என்று புறப்பட்டு சொந்த மக்களை கொன்று தள்ளியர்வர்களும் அதில் அடக்கம்

அதைத்தானே 1984முன் புலம்பெயர்ந்த ஆயுதமேந்திய முன்னாள் போராளிகள் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்ற வகையில் செய்து முடிக்கின்றனர்.......என்ன அரசு செய்த அநியாயங்களைவிட புலிகள் செய்தது அதிகம் என எழுதி விருதுகள் பெறுகின்றனர்.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை"

இப்படிச் சொன்னதற்காக அவர் "புலியில் போய் சேர்ந்திருக்கலாம்" என்று கேட்டு ஏளனம் செய்தவர்கள் இன்று நினைவு நாள் நடத்துவது வேடிக்கையானது. 

எனது மிகுதி வாழ்க்கையுடன் மட்டும் அல்ல அடுத்த தலை முறைக்கும் அதை அழுத்தமாக சொல்லிவிட்டு செல்லவேண்டும் .அரசு செய்த அநியாயங்களை மட்டும் சொன்னால் போதாது  போராட என்று புறப்பட்டு சொந்த மக்களை கொன்று தள்ளியர்வர்களும் அதில் அடக்கம் .

இன்றும் யூதன் கிட்லர் செய்த அநியாயங்களை மீண்டும் மீண்டும் சொல்லியே வருகின்றான் 

நீங்கள் மட்டும் அல்ல சசி ,எனக்கு ஒரு அண்ணையும் ஒரு தம்பியும் இருக்கின்றார்கள் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று போய்விடுவார்கள் ஆனால் எல்லோரும் அப்படியல்ல. கடந்த முப்பது வருடங்கள் ஓடியது படமல்ல பார்த்துவிட்டு போய் படுத்துவிட

தமிழர்கள் பலர் அதே மனநிலையில் தான்   இன்னமும் இருக்கின்றார்கள் .எமது மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டுவைக்க கூடாது .

எதையும் தாண்டி கண்டும் காணமல் போகும் பலருக்கு புலிகள் என்றவுடன் பொத்து கொண்டுவரும் .

டேவிட் ஐயாவின் மறைவுடன் பல பதிவுகள் வாசித்தேன் .ஆள் ,ஆயுத பலத்தால் அராஜகத்தின் உச்சியில் நின்று ஆட்டம் போட்டு அமைப்பை விட்டு சென்ற சந்தியாரை துரோகியாக்கி கொலை செய்த உமா இன்று பலராலும் துரோகியாகவும் சந்ததியார் நேர்மையானவர்கள் ஆகவும் பார்க்கபடுகின்றார்.

நடந்து முடிந்தது என்று எவரும் கடந்து செல்லவில்லை உண்மைகள் வெளிவரவேண்டும் பதிய படவேண்டும் என்றே விரும்புகின்றார்கள் .

12107255_10153461353684130_4380254551939

என்றாலும் திரு.பிரபாகரனை சிறந்த தலைவராக பார்த்தவரை/ ஏற்றுக் கொண்டவரை நீங்கள் நினைவு கொள்வது நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்பதான் இருக்க வேண்டிய இடத்தை அடைந்துள்ளார். வவுனியாவில் கொலைக்களம் நடத்திய சித்தார்த்தனையும் உள்ள அனுப்பனும். அவரை மட்டும் சம்பந்தர் ஏன் பாதுகாக்கிறார்..??! tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் தொடர்பான மற்றும் வேறு சில அரசியல் கொலைகள் தொடர்பாக பிள்ளையான் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்! இவரைப் போலவே இலங்கையில் நடந்த அனைத்து அரசியல் கொலைகளுகான சூத்திரதாரிகளும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். மட்டுமல்ல அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் தடைசெய்யப்படவேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான  குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். அதோட பிள்ளையான் புதிதாக எதனையும் செய்துவிடவில்லை அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது அப்படி. தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை பொட்டு வைத்து மேலோகம் அனுப்புவது 30 வருட ஆயுத கலாசார சம்பிரதாயம். அதனையே பிள்ளையானும் செய்திருக்கிறார்.  :unsure:

எனது நண்பர் 3As B எடுத்தவர் கட்டுப்பத்தை கம்பசினை விட்டு, பிளாட்டில் போய் மீண்டு வந்தவர். புலிகளை மன்னித்தாலும் , புளொட் நாதாரிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார்.

என்ன காரணம் என்று விளக்குவீர்களா அர்ஜுன் அண்ண?

 யாழ் இந்துதானே ?  அவர் இப்பவும் எனது நண்பர் தான் .  அது உண்மைதானே .  புலிகள் மாற்று இயக்கத்தவர்களை போட்டு தள்ளினார்கள் புளொட் தமது இயக்கத்தவர்களையே போட்டு தள்ளினார்கள் .

டேவிட் ஐயாவுடன் இருந்தவர்களுடன் இப்பவும் எனக்கு தொடர்பு இருக்கு .அவர் புளொட்டில்  ஜனநாயகம் இல்லை என்று வெளியேறியவர்.ஜனநாயகம் --இந்த விடயத்தில் புலிகள் நிலை பற்றி நான் எழுத தேவையில்லை .விரும்பியிருந்தால் 1984 இல் இருந்து 2009 சேர காலம் இருந்தது . அதைவிட சந்ததியாருடன் மிக நெருங்கியவர் சந்ததியாருக்கும் புலிக்கும் ஆன உறவு உலகு அறிந்தது .ஐயாவின் கடைசி காலத்தில் அவரை பேட்டி கண்டவர்கள் பற்றியும் எங்களுக்கு தெரியும் .சுயஇன்பம் காண்பவர்கள் அதில் திளைத்துக்கொண்டே இருக்கின்றார்கள் .

"அதைத்தானே 1984முன் புலம்பெயர்ந்த ஆயுதமேந்திய முன்னாள் போராளிகள் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்ற வகையில் செய்து முடிக்கின்றனர்.......என்ன அரசு செய்த அநியாயங்களைவிட புலிகள் செய்தது அதிகம் என எழுதி விருதுகள் பெறுகின்றனர்.

Edited 1 hour ago by putthan"

அனைத்து தரப்புகளையும் தான் விமர்சிப்பார்கள் ஆனால் விமர்சனத்தை ஏற்கும்  பக்கும் அற்றவர்கள் ,தம்மை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைப்பவர்களால் சொல்ல படும் விடயம் இது .

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

வாலி உங்கள் கருத்துப்படி பார்த்தால் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டிய, துரோகிகள் என மேடைக்கு மேடை முழங்கிய கூட்டணிக்கார்ர்களை அல்லவா தண்டிக்க வேண்டும். 

ரவிராஜ் தொடர்பான மற்றும் வேறு சில அரசியல் கொலைகள் தொடர்பாக பிள்ளையான் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்! இவரைப் போலவே இலங்கையில் நடந்த அனைத்து அரசியல் கொலைகளுகான சூத்திரதாரிகளும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். மட்டுமல்ல அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் தடைசெய்யப்படவேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான  குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். அதோட பிள்ளையான் புதிதாக எதனையும் செய்துவிடவில்லை அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது அப்படி. தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை பொட்டு வைத்து மேலோகம் அனுப்புவது 30 வருட ஆயுத கலாசார சம்பிரதாயம். அதனையே பிள்ளையானும் செய்திருக்கிறார்.  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வாலி உங்கள் கருத்துப்படி பார்த்தால் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டிய, துரோகிகள் என மேடைக்கு மேடை முழங்கிய கூட்டணிக்கார்ர்களை அல்லவா தண்டிக்க வேண்டும். 

தற்போது அப்படி உசுப்பேற்றிய கூட்டணிக்காரர்கள் (1) உயிரோடு இருந்தால் (2) ஆதாரத்தோடு நிருபித்தால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அநேகமாக அப்படிப்பட்டவர்கள் எல்லோரையும் (எடுத்துக் காட்டாக ஒருவர் அமிர்தலிங்கம்) வளர்த்தகடா மார்பில் பாய்ந்து கொன்றுவிட்டது.<_<

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை கேளுங்கள் எல்லாம் தெரியும். 

தற்போது அப்படி உசுப்பேற்றிய கூட்டணிக்காரர்கள் (1) உயிரோடு இருந்தால் (2) ஆதாரத்தோடு நிருபித்தால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அநேகமாக அப்படிப்பட்டவர்கள் எல்லோரையும் (எடுத்துக் காட்டாக ஒருவர் அமிர்தலிங்கம்) வளர்த்தகடா மார்பில் பாய்ந்து கொன்றுவிட்டது.<_<

கடாவை வளர்த்தவன் கொல்ல நினைக்கையில் வளர்த்த கடா மார்பில் பாய்வதில் தப்பில்லை. 

தலைப்புடன் சம்பந்தப்படாமல் சீண்டும் வகையில் கள உறுப்பினர் no fire zone எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

களவிதிகளைச் சட்டைசெய்யாமல் கருத்துக்கள் பதியப்பட்டால் இறுக்கமான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

தொடர்புபட்ட களவிதி:

தனிநபர்களைத் தாக்குதல், சக கள உறுப்பினர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

தற்போது அப்படி உசுப்பேற்றிய கூட்டணிக்காரர்கள் (1) உயிரோடு இருந்தால் (2) ஆதாரத்தோடு நிருபித்தால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அநேகமாக அப்படிப்பட்டவர்கள் எல்லோரையும் (எடுத்துக் காட்டாக ஒருவர் அமிர்தலிங்கம்) வளர்த்தகடா மார்பில் பாய்ந்து கொன்றுவிட்டது.<_<

1977 ம் ஆண்டு தேர்தலின் திருகோணமலை தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இரா சம்பந்தன் என்ற வேட்பாளரின் தேர்தல் மேடைகளில் மிகவும் ஆக்ரோசமாக வன்முறை தூண்டப்பட்டது.  ஐக்கிய தேசிய கட்சியின் அலை வீசிய அந்த தேர்தலில் தனது வெற்றி அந்த வன்முறையை தூண்டும் பேச்சில் தங்கி இருக்கிறது என்பதை உணர்ந்த இரா சம்பந்தன் மேடைகளில் வீர வசனங்கள் பேசியதுடன் வன்முறையை தூண்டும் பேச்சுக்களை தாராளமாக அனுமதித்தார். வன்முறைப்பேச்சு வெற்றிபெற்றது. அதன் மூலம் இரா சம்பந்தனுக்கு பதவியும் கிடைத்தது. இன்று அதே சம்பந்தர் தனது பதவியை காப்பாற்ற அகிம்ஸை வேடம் தரிக்கிறார். வாலியின் கூற்றுப்படி வன்முறையை தூண்டிய சம்பந்தனும் தண்டிக்கப்படவேண்டியவரே.

பதியப்படும் கருத்துக்கள் திரியின் தலைப்போடு சம்பந்தப்படாமல் வேறு திசையில் நகர்வதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.