Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகைப்படம் எடுக்கும் போது பாலியல் தொந்தரவு – கனடிய தமிழர் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படம் எடுக்கும் போது பாலியல் தொந்தரவு – கனடிய தமிழர் கைது.
Peter December 02, 2015 Canada

பதின்ம வயது இளம் பெண்களை அவர்களது நிகழ்வுகளிற்கான போட்டோ சூட் புகைப்படம் எடுக்கும் போது அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகைப்பட நிறுவன உரிமையாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டாப்பட்டுள்ளது.

56 வயதுடைய மேற்படி நபர் புகைப்பட நிபுனர் என்ற தனது தொழிலுரிமத்தைப் பாவித்து இளம் பெண்களை புகைப்படங்கள் எடுக்கும் பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளன.

இந்தக் கைது குறித்து தனது முகநூலில் செய்தி பிரசுரித்துள்ள ஒரு பெண்பிள்ளை தனது சாமத்திய வீடு நடந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இரண்டு வாரங்களிற்கு முன்னர் தானே பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு போட்டோ சூட்டிங் என பூட்டிய அறைக்குள் நடந்த சம்பவங்களைப் போல பல பெண்களிற்கும் நடந்திருக்கும் எனவும் அவர்கள் அப்படியான சம்பவங்கள் நடந்திருந்தால் அவற்றை வெளிக் கொணர வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

சிவசுப்பிரமணியம் என்ற இந்த புகைப்பட நிபுனர் 2000த்தின் ஆரம்ப ஆண்டுகளில் இவ்வாறாக “பாலியல் தொந்தரவு” [sexual assault] கொடுத்ததாக மூன்று குற்றச்சாட்டுக்களும், “பாலியல் இடையூறு” [sexual interference] விளைவித்ததாக மூன்று குற்றச்சாட்டுக்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

- See more at: http://www.canadamirror.com/canada/53283.html#sthash.AKkbWnYl.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...  சாமத்திய வீட்டில் சமஞ்சி நிற்க்கும் ஒரு பெண் பிள்ளையை ஒரு முன் பின் அறியாத  போட்டோ கிராபருடன்  தனி அறையில் விட்டு படம் எடுக்க விட்ட அப்பா அம்மாவை என்ன செய்யலாம். 
இவர் டொராண்டோவில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபல புகைப்படக் கலைஞ்சர்.
கல்யாணம் பேசி முகூர்த்தம் பார்ப்பதற்கு முதலில்  இவரை தான் போய் பார்த்து பேசி திகதி குறித்து... வில்லங்கத்தை விலைக்கு வாங்கி... 
   
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் எடுக்கேக்கை தொழில் ரீதியாய் கை அங்கை இஞ்சை படத்தான் செய்யும்......எண்டு வாதாடவும் சனம் இருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

பத்து பன்னிரண்டு வயதுப் பிள்ளயள்... ஊரில விட்ட விளயாட்ட உங்க காட்டப் பாத்திருப்பார்...

அவையளுக்கு உங்க பள்ளிக்கூடத்தில எல்லாம் சொல்லிக் குடுக்கினம் எண்டு ஆளுக்கு தெரியேல்லப் போல கிடக்கு.

உங்க லண்டனில ஒரு தமிழ் கணக்கு வாத்தி ரீயூசன் பிள்ளயளோட கணக்கு விடப் போய், கம்பி எண்ணி கணக்குப் போடுறார். :oO:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உப்ப அங்கிள்மார் ஆண்டிமார் காட்டிலைதானே மழை! ஜமாய்ங்க சாமிகளா சாமி மாமிகளா!

  • கருத்துக்கள உறவுகள்

இவரது படத்தை அர்ஜீன் அண்ணா செய்தித் திரட்டிப் பகுதியில் இணைத்திருந்தார்.மூஞ்சியை பார்க்கவே ஆள் எப்படிப்பட்டவர் என்று தெரியுது?...இவரை நம்பி அறைக்குள் தங்கள் மக்ள்மாரை விட்ட அம்மாமாரை முதலில் செருப்பால் அடிக்கோனும்

4 hours ago, ரதி said:

இவரது படத்தை அர்ஜீன் அண்ணா செய்தித் திரட்டிப் பகுதியில் இணைத்திருந்தார்.மூஞ்சியை பார்க்கவே ஆள் எப்படிப்பட்டவர் என்று தெரியுது?...இவரை நம்பி அறைக்குள் தங்கள் மக்ள்மாரை விட்ட அம்மாமாரை முதலில் செருப்பால் அடிக்கோனும்

ரதி, முகத்தை பார்த்து ஒருவரை எடை போடலாம் என்கின்றீர்களா? பார்க்க அழகாக அல்லது கம்பீரமாக இருக்கும் முகம் உடையவர்கள் எல்லாரும் நல்லவர்களா?

அத்துடன் இவர் 2000 ஆண்டுகளின் முற்பகுதியில் செய்த பாலியல் சீண்டல்கள் மற்றும் அத்து மீறல்களை பற்றி கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின் முறைப்பாடு செய்து இருக்கின்றார்கள். இது பெரியளவில் குற்றச்சாட்டு பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. நீதிமன்றத்திலும் நிரூபிப்பது மிகக் கடினம்.

நான் இப்படி எழுதுவதன் அர்த்தம், பாலியல் குற்றவாளிக்கு பரிந்து பேசுவதற்கு அல்ல. இவர் உண்மையிலேயே குற்றம் செய்து இருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால் குற்றச்சாட்டு மீது சந்தேகம் வருகின்றது. கடந்த வருடமும் ஒரு தமிழ் மருத்துவரை பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக கைது செய்து, அவர் பெயரை நாசமாக்கிய பின்  இறுதியில் பெண் உறவுக்கு இணங்கித்தான் விடயம் நடந்தது என்று நீதிமன்றம் முடிவு செய்தது. பலர் குறுகிய நோக்கங்களுக்காகவும் இப்படி குற்றச்சாட்டுக்களை சுமத்துவது இங்கு அதிகரித்து வருகின்றது.

50 minutes ago, நிழலி said:

இது நான் எதிர்பார்க்காத ஒன்று நிழலி 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அப்படி சொல்ல முடியாது. சும்மா ஒரு இளம் பெண், துணிவாக வந்து முறையிடுகிறார் என்றால்...??!

அதேவேளை பொம்பிளையள், பொய்க் குற்றச்சாட்டு சொல்வதும் அதிகரிக்கின்றது.

ஒரு வெள்ளைப் பெண் பயணி, தனது ரக்ஸி காரில் ஏறுகையில், என்ன  நினைத்தாரோ, தெய்வச் செயலோ, தனது சாம்சுங் கைத் தொலை பேசி, ஒலிப் பதிவை அழுத்தி வைத்து உரையாடி இருக்கிறார்.

இறங்க வேண்டிய இடத்தில் பணம் தாரது,  இனத்துவேசத்துடன் அந்த ஆசிய முஸ்லிம் டிரைவரை திட்டிவிட்டு போய்விட்டார்.

ஒரு மணிநேரத்தில் பாலியல் பலாத்க்கர குற்றச்சாட்டில் கைதாகி தனது கைபேசி பதிவினால் தப்ப, பெண் 18 மாதம் உள்ள போனார்.

அப் பெண், போதைக்கடிமையான, பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு தரும் நஸ்ட ஈடு பெறவே இந்த வேலை செய்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஒருவர் வெள்ளையா,கறுப்பா எனப் பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என சொல்ல வேண்டியதில்லை...கறுப்பாகவோ,வெள்ளையாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களது பார்வையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணிக்கலாம்.

ரவுடிகள் மாதிரித் தெரிபவர்களை விட சாது மாதிரி அமைதியாக இருப்பவர்களைத் தான் அதிகம் நம்பக் கூடாது. ஆனால் அவர்களை கூட அவர்கள் பார்வையை வைத்தே எப்படிப்பட்டவர்கள் என்பதே கண்டு கொள்ளலாம் என்பதே எனது கருத்து.

இவற்ற பார்வையை வைத்தே இவர் எப்படிப்பட்டவர் எனச் சொல்லலாம்...இந்த விடயத்தில் இவர் குற்றம் செய்து இருந்தாலும்,தனியறைக்குள் முன்,பின் தெரியாத ஒரு ஆளோடு தங்கள் பெண் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோரையே முதலில் குற்றம் சொல்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

இது ஏற்றுக் கொள்ளக் கடினமான வாதம் ரதி. தீவிர வாதத் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப் படும் இஸ்ரேல், எப்படி குற்றம் புரிய முதலே ஒருவரை அவரது முகம், பார்வை, நடை உடை என்பனவை வைத்துக் கண்டு கொள்வது என்று பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வருகிறது. இன்னும் அவர்களால் எதுவும் தோற்றத்தை வைத்துக் கண்டு கொள்ள முடியவில்லை! நீங்கள் சொல்கிற சாது என்பது உளவியலில் introverts இற்குச் சமன். Introvert ஆக இருப்போர் அதிகமாக எந்தக் குற்றங்களையும் செய்யும் பேர்வழிகள் என்று எங்கும் நிறுவப் படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த படியால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது. பெண்களின் நிகழ்வுகளை பெண்களே கவர் பண்ண விட்டால்.. இது நடக்காது தானே. 

எனி பெண்களை புகைப்பட அணியில் கொண்டிருக்காத புகைப்படக்காரர்களை பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு அழைக்காதீர்கள்.

அண்மையில் பிரிட்டனில்.. ஒருத்தி தான் ஒரு பிரபல்ய ஆடை வர்த்தக நிலையத்தில் வைத்து.. குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்.. அங்கு பால்கொடுக்கத் தடை என்று பிள்ளையை தன்னிடம் இருந்து பறித்தெடுத்ததால்... பிள்ளையின் பல்லுப்பட்டு தன் மார்புக்கு சேதாரம்.. வலி என்று சிந்துபாடி இருந்தார். ஆனால் அவர் சொன்னது எல்லாம் பொய் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு இப்ப அக்காச்சி கம்பி எண்ணிக்கிட்டு இருக்க வேண்டிய நிலை. இப்படியும் சீப்பான பொண்ணுங்க இருக்காங்க. அதனால்.. பெண்களையும் புகைப்பட அணியில் இடம்பெற வைப்பதால்.. இரட்டிப்பு பாதுகாப்போடு.. பெண்கள் சிலர் செய்யும் சுயலாப குற்றச்சாட்டுக்களில் இருந்து ஆண்கள் தப்பிக்கவும் முடியும். :rolleyes:tw_blush:

Caroline Starmer's account of being asked to stop breastfeeding was certainly shocking, and it created national headlines.

She claimed to have been discreetly nursing one of her twin daughters when a security guard asked her to leave the Primark store in Leicester.

The guard allegedly removed the baby from her breast - "causing a lot of pain" because the girl's teeth had been "clamped down" - then walked away with the child.

The story turned out to be a lie, and Starmer was prosecuted for intending to pervert the course of justice and given a suspended sentence.

http://www.bbc.co.uk/news/uk-england-leicestershire-34974989

Edited by nedukkalapoovan

கடைசியில் அவரில் பிழைஇல்லை ,

பெண்ணில் பிழை ,அவர் பெற்றோரில் பிழை ,பெண் போட்ட உடையில் பிழை ,படம் எடுக்க போனது பிழை ,பெண்தான் முதல் அவருடன் சேட்டை விட்டார் என்று முடித்துவிடுவம் .

நன்றி உறவுகளே .

 வழக்கு நடக்குது சரியான தீர்ப்பு வரும்   என்ற நம்பிக்கையும் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இது ஏற்றுக் கொள்ளக் கடினமான வாதம் ரதி. தீவிர வாதத் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப் படும் இஸ்ரேல், எப்படி குற்றம் புரிய முதலே ஒருவரை அவரது முகம், பார்வை, நடை உடை என்பனவை வைத்துக் கண்டு கொள்வது என்று பல ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வருகிறது. இன்னும் அவர்களால் எதுவும் தோற்றத்தை வைத்துக் கண்டு கொள்ள முடியவில்லை! நீங்கள் சொல்கிற சாது என்பது உளவியலில் introverts இற்குச் சமன். Introvert ஆக இருப்போர் அதிகமாக எந்தக் குற்றங்களையும் செய்யும் பேர்வழிகள் என்று எங்கும் நிறுவப் படவில்லை!

6 hours ago, ரதி said:

நிழலி ஒருவர் வெள்ளையா,கறுப்பா எனப் பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என சொல்ல வேண்டியதில்லை...கறுப்பாகவோ,வெள்ளையாகவோ இருக்கலாம். ஆனால் அவர்களது பார்வையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணிக்கலாம்.

ரவுடிகள் மாதிரித் தெரிபவர்களை விட சாது மாதிரி அமைதியாக இருப்பவர்களைத் தான் அதிகம் நம்பக் கூடாது. ஆனால் அவர்களை கூட அவர்கள் பார்வையை வைத்தே எப்படிப்பட்டவர்கள் என்பதே கண்டு கொள்ளலாம் என்பதே எனது கருத்து.

இவற்ற பார்வையை வைத்தே இவர் எப்படிப்பட்டவர் எனச் சொல்லலாம்...இந்த விடயத்தில் இவர் குற்றம் செய்து இருந்தாலும்,தனியறைக்குள் முன்,பின் தெரியாத ஒரு ஆளோடு தங்கள் பெண் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோரையே முதலில் குற்றம் சொல்வேன்.

ஜஸ்டின் நீங்கள் சொல்வது பயங்கரவாதிகள் மீதான பார்வை மதிப்பீடு. ரதி அக்கா சொல்வது 'வேற பார்வை'. 'விழுங்கி விடுவது போல் பார்ப்பான்' என்று எனது அக்காமார் சொல்வதன் அர்த்தம் புரிய பல நாட்கள் எடுத்தன.

சில வேளைகளில் பெண்கள், வேறு பெண்களுக்கு ரகசிய எச்சரிக்கை செய்வார்கள். 'அவன் பார்வை சரியில்லை. மேலிருந்து, கீழ் வரை பார்ப்பான்', கவனமா இருந்து கொள்' என்பார்கள். அந்த வகையான ஒரு எச்சரிக்கை உணர்வினை குறித்தே அவர் சொல்கிறார் என்று நினைக்கின்றேன்.

அவர் சொல்வதுடன் நானும் ஒத்துப் போகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அப்படிக் கண்ணையெல்லாம் பார்த்து ஆளின் பாலியல் சேட்டைகளின் உண்மை பொய் அறிய முடியுமெனில் ஏன் இந்தப் பொலிஸ், தடய விசாரணையெல்லாம் வீணாக? ஒரு பெண்ணையே மோப்பம் பிடிக்கிற நாய் போல "பார்க்க" விட்டு குற்றவாளியைக் கண்டு பிடிச்சு விட்டுப் போகலாமே?:cool: இந்தப் பைப்படி ஆச்சி மாரிட நம்பிக்கைகளில இருந்து வெளியே வாங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

குடுகுடுப்பைகாரர்கள் தான் மூஞ்சியையும் கண்ணையும் பார்த்து குறிசொல்லுவது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

அப்படிக் கண்ணையெல்லாம் பார்த்து ஆளின் பாலியல் சேட்டைகளின் உண்மை பொய் அறிய முடியுமெனில் ஏன் இந்தப் பொலிஸ், தடய விசாரணையெல்லாம் வீணாக? ஒரு பெண்ணையே மோப்பம் பிடிக்கிற நாய் போல "பார்க்க" விட்டு குற்றவாளியைக் கண்டு பிடிச்சு விட்டுப் போகலாமே?:cool: இந்தப் பைப்படி ஆச்சி மாரிட நம்பிக்கைகளில இருந்து வெளியே வாங்கோ!

விதண்டாவாதம் பண்ணாமல், விவாதம் செய்ய நான் ரெடி... ஆனால்.... பெண்களின் உள்ளுணர்வு குறித்து சொன்னால், நீங்கள் போலீஸ், அது இது என்று தொடர்பில்லாமல்....

நல்லது ஐயா....... நன்றி, வணக்கம் :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சில பெண்கள் "காவாலி! பார்வையைப் பார்! பார்க்கிறான்!"எண்டு சொன்னதெல்லாம் பொய்யா? (சத்தியமா நெஞ்சிலை ஒரு சொட்டு வஞ்சகமில்லாமலுக்குத்தான் பார்த்தனான்:rolleyes:

53 minutes ago, வாலி said:

அப்ப சில பெண்கள் "வாலி! பார்வையைப் பார்! பார்க்கிறான்!"எண்டு சொன்னதெல்லாம் பொய்யா? (சத்தியமா நெஞ்சிலை ஒரு சொட்டு வஞ்சகமில்லாமலுக்குத்தான் பார்த்தனான்:rolleyes:

வெள்ளிக்கிழமை இரவு பொறுத்தருளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தொடரும் தமிழ் பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் – தெரிவித்து நிற்கும் செய்தி என்ன?
Peter December 05, 2015 Canada

கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் அண்மையில் தனது பூப்புனித நீராட்டு விழாவில் புகைப்படக்காரரால் இடம்பெற்ற பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டை மேற்கொண்டவர் ஒரு கலாநிதிப் பட்டம் பெற்ற இளம்பெண் என்ற தகவல் வெளிவந்தது.

சாதாரண பட்டப்படிப்டை மேற்கொண்டு அதற்கடுத்த பட்ட மேற்படிப்பு எனப்படும் இரட்டைத் தகுதிநிலை பெற்று பின்பு கலாநிதிப் படிப்பைப் பூர்த்தி செய்வதென்பது ஏதோ இலகுவான காரியமல்ல. இவ்வளவையும் செய்தவர் தெளிவானராக மனநிலையில் உறுதியானவராக இருந்திருக்க வேண்டும் என்பதே முதலாவது செய்தி.

குற்றச்சாட்டை மேற்கொண்ட அந்த பெண்ணின் முகப்பதிவு நூலில் இன்னொரு பெண் இட்டுள்ள பதிவில் தனக்கு தெரிந்த இன்னொரு பெண் பிள்ளையொன்று ஒன்பது வயது முதல் இவ்வாறான அவலங்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனவே கல்வியறிவுள்ள, சமூகத்தில் உயர்நிலையிலுள்ள, கனடாவின் சட்ட திட்டங்களையறிந்த இளம்பராயத்தினர் மேற்கொள்ளும் இத்தகைய குற்றச்சாட்டுகள் பற்றிய ஆராய்வை மேற்கொள்ள வேண்டிய தேவையொன்று சமூகத்தில் எழுந்துள்ளது.

அதேபோன்று இன்னொரு பெண்பிள்ளையொன்று இவ்வாறான அடக்குமுறையை கையாள்வதற்கான வழிமுறைகள் அறியாமல் மன அழுத்த நிலையை அடைந்து அது தனது தாயின் மரணச் சடங்கில் கூட கையறு நிலையில் இருந்ததாக சட்டவறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான பாதிப்பிற்கு உள்ளான பெண்கள் பிறகு தங்களது திருமண பந்தத்தில் ஈடுபடுபவருடன் கூட சிலவேளைகளில் உளமாரச் செயற்பட முடியாது என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை என்பதையும், இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் அந்த விவகாரத்தை தங்களின் பெற்றோர்களினோடோ அல்லது உறவுகளுடனோ பகிர்ந்தால் அவற்றிக்கான பரிகாரம் காண அவர்கள் ஆரம்பத்திலேயே உதவ வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று இன்னொரு பெண்பிள்ளை 13 வயது தொடக்கம் இவ்வாறான சிக்கலில் சிக்குண்டு தவித்த போதும் சட்டங்கூட அந்தப்பிள்ளைக்கு பக்கபலமாக நிற்கமுடியாதபடி குற்றஞ்சாட்டப்பட்டோர் அவரை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மதுவிற்கு அடிமையான அந்தப் பெண்பிள்ளையின் தந்தையை பகடையாகப் பாவிப்பதாகவும் இன்னொரு பிரமுகர் தெரிவித்தார்.

இதற்கும் மேலாக பதின்மவயதடைந்த பெண்களிற்கும், வாழ்க்கைத் துணையின்றி தனியே வசிக்கும் இளைஞிகளிற்கும் பாலியல் வன்முறையைப் பிரயோகித்த கூட்டங்கள் கூட எம் மக்களிடையே இருக்கின்றது. இவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்களெல்லாம் எழுகின்றன.

போதைப்பொருட்களைக் கொடுத்து அல்லது மயக்க வில்லைகளைக் கொடுத்து பெண்களைச் சீரழிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுமிடத்து அந்தப்பெண்கள் இந்தக் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க வழியேற்படும் என்ற எண்ணக்கருவும் இப்போது ஏற்பட்டுள்ளது.

ஆனால் சமூகத்தில் பொருளாதார ரீதியில் உயர்ந்த ஆண்களை மயக்கும் செயல்களில் ஈடுபடும் பெண்களும் அவர்களது வலையில் வீழ்ந்து மீளமுடியாமல் தவிக்கும் ஆண்களும் உள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டுமெனக் கூறிய ஒரு பிரமுகர் பதின்ம வயதுகளைக் கடந்த இவர்களது செயல்கள் பாலியல் துஸ்பிரயோகமாக அல்லாது தங்களது துணைகளிற்கான நம்பிக்கைத் துஸ்பிரயோகமாகக் [adultery] கருதப்படும் என்பதையும் தெரிவித்தார்.

இவ்வாறு அண்மையில் நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்ட தமிழ் ஆண் ஒருவர் தான் சென்ற வீட்டிலேயே உயிரிழந்ததாகவும் அதனையடுத்து இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததால் மேற்படி தமிழ்ப் பெண் கூடத் தற்கொலை செய்து கொண்டதையும் அவர் உதாரணமாகத் தெரிவித்தார்.

இவ்வாறாக பல உதாரணங்கள் இருந்தாலும் இவ்வாறு துணிவாக இந்த பெண்பிள்ளைகள் தங்கள் உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொணர்வதற்கு ஊக்கம் கொடுத்தது கனடாவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் யுவதிகளால் நடத்தப்படும் என்ற இணையத்தில் வெளிவந்த கட்டுரைகளும் காரணம் என்பதை அந்த பாதிக்க்பபட்டவர்கள் நினைவு கூர்கின்றார்கள்.

பாரதி கண்ட புதுமைப்பெண்ணிற்கும் மேலாக ஒருபடி மேற்சென்று எமது தமிழ் இளைஞிகள் தங்களிற்கு இடம்பெற்ற நிகழ்வுகளை அறிய வைப்பது எதிர்கால சந்ததிகளின் மேல் இவ்வாறான பாலியல் அழுத்தங்களைப் மற்றவர்கள் புரியாமல் இருப்பதற்கு வழி வகுக்கும் என்று நம்புவோமாக.

கனடாவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகளால் நடாத்தப்படும் ஒரு இணையத்தில் வெளிவந்த பாலியல் வன்முறை தொடர்பான கட்டுரையொன்று உங்கள் பார்வைக்காக:
<http://tamilculture.com/finding-hope-in-the-hopeless-sexual-abuse-in-the-tamil-community/#.VlKzZ0uc6Sk.facebooka href=”http://tamilculture.com/finding-hope-in-the-hopeless-sexual-abuse-in-the-tamil-community/#.VlKzZ0uc6Sk.facebook”>

- See more at: http://www.canadamirror.com/canada/53520.html#sthash.G3I0eKRe.dpuf

http://www.canadamirror.com/canada/53520.html#sthash.G3I0eKRe.dpbs

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2015, 1:00:59, nedukkalapoovan said:

புகைப்படத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த படியால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது. பெண்களின் நிகழ்வுகளை பெண்களே கவர் பண்ண விட்டால்.. இது நடக்காது தானே. 

எனி பெண்களை புகைப்பட அணியில் கொண்டிருக்காத புகைப்படக்காரர்களை பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு அழைக்காதீர்கள்.

அண்மையில் பிரிட்டனில்.. ஒருத்தி தான் ஒரு பிரபல்ய ஆடை வர்த்தக நிலையத்தில் வைத்து.. குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்.. அங்கு பால்கொடுக்கத் தடை என்று பிள்ளையை தன்னிடம் இருந்து பறித்தெடுத்ததால்... பிள்ளையின் பல்லுப்பட்டு தன் மார்புக்கு சேதாரம்.. வலி என்று சிந்துபாடி இருந்தார். ஆனால் அவர் சொன்னது எல்லாம் பொய் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு இப்ப அக்காச்சி கம்பி எண்ணிக்கிட்டு இருக்க வேண்டிய நிலை. இப்படியும் சீப்பான பொண்ணுங்க இருக்காங்க. அதனால்.. பெண்களையும் புகைப்பட அணியில் இடம்பெற வைப்பதால்.. இரட்டிப்பு பாதுகாப்போடு.. பெண்கள் சிலர் செய்யும் சுயலாப குற்றச்சாட்டுக்களில் இருந்து ஆண்கள் தப்பிக்கவும் முடியும். :rolleyes:tw_blush:

Caroline Starmer's account of being asked to stop breastfeeding was certainly shocking, and it created national headlines.

She claimed to have been discreetly nursing one of her twin daughters when a security guard asked her to leave the Primark store in Leicester.

The guard allegedly removed the baby from her breast - "causing a lot of pain" because the girl's teeth had been "clamped down" - then walked away with the child.

The story turned out to be a lie, and Starmer was prosecuted for intending to pervert the course of justice and given a suspended sentence.

http://www.bbc.co.uk/news/uk-england-leicestershire-34974989

பெண் புகைப்படக் கலைஞர்களால், ஒரு ஆண் படமெடுக்கும் கோணத்திலிருந்து ஒரு போதும் படமெடுக்க முடியாது நெடுக்கர்!

அந்தப் 'பார்வை' பெண்களிடம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

பெண் புகைப்படக் கலைஞர்களால், ஒரு ஆண் படமெடுக்கும் கோணத்திலிருந்து ஒரு போதும் படமெடுக்க முடியாது நெடுக்கர்!

அந்தப் 'பார்வை' பெண்களிடம் இல்லை!

அந்தப் பார்வை தானே இப்ப பிரச்சனையே. கனடா பொலிஸ்காரன் பப்பில பார்க்கிற பார்வையை உந்தக் கமராவால பிடிச்சால்.. உலகம் நாறும். என்ன அதுக்கு எல்லாம் அனுமதி இருக்குது. tw_blush::rolleyes:

ம். வயதுக்கு வந்த பெண் பிள்ளையைக் குளிக்க விட்டு போட்டோ வீடியோ எடுப்பது, பின்னர் போட்டோ வீடியோ எடுத்தவன் நடத்தை சரியில்லை என்று புலம்புவது. என்ன உலகமப்பா இது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களின் செயல்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பவர்களும் எங்கள் மக்கள் தான்..ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டால் அந்த நபரை விலக்கி கொள்ள வேண்டும் இல்லை,விலகிக் கொள்ள வேண்டும்...சாமத்திய வீடு செய்ய விருப்பபடாத பெற்றோரைக் கூட அந்த நிகழ்வை செய்ய வைச்சு கூத்தடிக்கிற திறன் இவரிடமிருக்கிறது...இவரைப் பற்றி வீடுகளில் பேசினால் உங்களுக்கு எல்லாத்துக்கும் சந்தேகமும்,குறை கண்டு  பிடிப்பதும் தான் வேலை என்று அந்த நபர் பக்கம் பரிந்து பேசும் பெண்கள் கூட்டமும் இருக்கவே செய்கிறது... 

ரதி சொல்லி இருப்பது போல், வீடுகளிலிலிருக்கும் பெண்களில் சிலருக்கு விளக்குமாறால் குடுக்கனும்....  

 தான் படம் எடுக்கும் போது வேறும் யாரும் அந்த இடத்தில் படம் எடுத்தால் வயது வரம்பின்றி கெட்டை பேச்சால் பேசுவதிலிருந்து நிறைய விடையங்கள் அத்துப்படி என்று பல வருடங்களாக அறிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது..ஏன் பெண்களை படம் பிடிக்கும் போது தோளில்,இடுப்பில் பிடித்து தானாம் திரும்பி நிக்க சொல்லுவார்...இப்படி நிறைய சொல்ல முடியாத சங்கடங்களை எல்லாம் பார்த்தும்,கேட்ட வண்ணமும் தான் உள்ளோம்.

உண்மையில் இந்த நபர்,இவரைப் போன்று இன்னும் பலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே....உள்ளே போய் இருந்து கொண்டும் சும்மா இருக்கவில்லை..மீடியாக்கள் தன் மானத்தை வாங்கி விட்டார்கள் என்ற தம்பட்டம் வேறு..வாழ வேண்டிய வயதில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒரு தந்தை செய்யும் செயல்பாடா இது...???
 
  • 3 weeks later...

தனியாக ரூமுக்குள் போட்டோ எல்லாம் தேவையோ .....சாமத்திய வீடு என்பது இப்பவெல்லாம் களியாட்ட விழாவாகத்தான் கொண்டாடப்படுகின்றது .....பெண் வயதுக்கு வந்த செய்தியை இப்படி சொல்ல வேண்டுமா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.