Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம

[ Wednesday, 2 December 2015 ,11:19:16 ]
ericibctamil1.PNG

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணை
ஒன்றினை ஐ.நா விதந்துரைத்துள்ள நிலையில், நிராயுதபாணிகளாக
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை
சிறிலங்கா அரச படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றதாக நோர்வேயின் முன்னாள்
சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.

ஐ.பி.சி தமிழின் "ஈழத்தமிழரும் சர்வதேச அரசியலும்" நிகழ்ச்சிக்கு வழங்கிய
பிரத்தியேக செவ்வியிலேயே எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார்.

 

 

நோர்வேயின் முன்னாள் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம்
 ஐ.பி.சி தமிழின் "ஈழத் தமிழரும் சர்வதேச அரசியலும்" நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுவடிவம் எழுத்தில்.... 

கேள்வி: உங்களுடன் நீண்ட நேர்காணலை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை
வழங்கியமைக்காக நன்றி.. இந்தப் புத்தகத்தின் பின்னணி என்ன?

பதில்: இந்தப் புத்தகம் இலங்கையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகள் குறித்த
நோர்வேயின் பார்வை பற்றியது. இதில் இலங்கையின் முழுவரலாறு பற்றியதோ, ஏனைய
விடயங்கள் பற்றியதோ அல்ல. இது 1998 இல் விடுதலைப் புலிகள்
அமைப்பினராலும், இலங்கை அரசினாலும் நடுநிலையான சமாதான அனுசரணைப் பணிகளை
மேற்கொள்ளும்படி அழைக்கப்பட்டதிலிருந்து, 2009 இல் யுத்தம் முடிவடையும்
வரையில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு நூலாகும்.

கேள்வி: அவ்வாறாயின் நாம் இதனை நோர்வே தரப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு
என்று கொள்ளலாமா?

பதில்: இது நோர்வே அரசினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையல்ல.
ஆனால் இது சமாதான முயற்சிகளின் முக்கிய அனுசரணைப்பங்கு வகித்த விதார்
ஹெல்கெசனுடையதும், என்னுடையதும் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது.

கேள்வி: நீங்கள் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
சமாதானத் தரகராகச் செயற்பட்டிருக்கிறீர்கள். இந்தச் சமாதான முயற்சியின்
தோல்விக்கான முக்கிய காரணம் என்ன?

பதில்: இதன் தோல்விக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக
அப்போதைய ஜனாதிபதியையும், பிரதமரையும், ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒருங்கே கொண்டுவர ஒருவராலும்
முடியவில்லை. அதாவது, சிங்களத் தரப்பிற்குள் உட்பூசல் காரணமாக, ஒருவரால்
முன்னெடுக்கப்படும் சமாதான முன்னெடுப்புக்களை மற்றையவர் முதுகிலே குத்தி
நிர்மூலம் செய்யும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தனர். இரண்டாவதாக,
பிரபாகரனுடைய பிடிவாதத்தன்மையும், வெளியுலகம் குறித்த
மட்டுப்படுத்தப்பட்ட புரிந்துணர்வு. அவரிடம் சமஷ்டி தீர்வாக
முன்வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதைப் பற்றிக்கொள்ளவில்லை. அத்துடன்
யுத்தத்தின் கடைசி மூன்று வருடத்தில் வன்முறைதான் தீர்வு என்று
நம்பிக்கொண்டு அவர் அனைத்துத் தவறுகளையும் விட்டிருந்தார். மூன்றாவதாக,
சர்வதேச சமூகம் இன்னமும் ஒருங்கிணைந்த வகையில் விடுதலைப் புலிகளுடன்
நெருங்கிச் செயற்பட்டிருக்கவேண்டும். அவர்கள் விடுதலைப் புலிகளைத்
தடைசெய்திருக்கக்கூடாது. அத்துடன் சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும்
இணைந்திருக்க இருதரப்புக்கள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகித்திருக்க
வேண்டும்.

கேள்வி: இந்தச் சமாதான முயற்சியானது இரண்டு தரப்புக்கும் இடையிலான இராணுவ
சமநிலையின் அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் அடிப்படையாக
விளங்கியது சர்வதேச அழுத்தம். இந்தச் சர்வதேச அழுத்தம் தான் இரண்டு
தரப்புக்களையும் பேச்சு மேசைக்கு அழைத்துவந்தது. ஆனால் இந்த சர்வதேச
அழுத்தம் சமமாகப் பிரயோகிக்கப்படவில்லை என்றும், இதுவே சமாதான முயற்சிகள்
தோல்வியுற்றமைக்கான முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. இதை நீங்கள்
ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: நான் இந்தக் கருத்துடன் முரண்படவிரும்பவில்லை. இலங்கை அரசு மீது
போதுமான அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் இதற்கு விடுதலைப்
புலிகளின் சில நடவடிக்கைகளும் காரணம். ஏனெனில் அவை சர்வதேச சமூகத்தினால்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. புலிகள் இது குறித்து பிறிதொரு
நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கக்கூடும். தெற்கிலுள்ள சிங்கள அரசியல்
தலைவர்களைத் தொடர்ந்தும் கொலைசெய்துவந்தால், நீங்கள் இறுதியில்
தடைசெய்யப்படுவீர்கள் என்று நான் பிரபாகரனிடம் பலதடவைகள்
சொல்லியிருக்கிறேன். இது என்னுடைய பார்வை அல்ல. என்னைப் பொறுத்தளவில்
விடுதலைப் புலிகளைத் தடைசெய்தது தவறு. ஆனால் முன்னாள் வெளிநாட்டமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலையினைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள்
தடைசெய்யப்பட்டனர். அது மிகவும் கொடுரச் செயலென அனைத்து வெளிநாட்டுத்
தலைவர்களினாலும் பார்க்கப்பட்டது.

கேள்வி: ஆனால், கடந்த மாதம் இது குறித்துப் பாராளுமன்றத்தில்
கருத்துவெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள்
வெளிநாட்டமைச்சரின் படுகொலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும்,
விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலே
மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்திருக்கிறாரே?

பதில்:என்னிடம் அவை குறித்த எவ்வித கருத்துக்களும் கிடையாது. பிரதமர்
இப்படியேதான் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. தமிழ்
வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்பதனைத் தடுக்கும் வகையில்
பிரபாகரனுக்கும், மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று
இருப்பதாகவும், இதனூடாக மஹிந்த தெரிவுசெய்யப்படலாம் என்றும், இதனை
நிறைவேற்றுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது என்று
தானும், எனையோரும் நம்புவதாகவே அவர் தெரிவித்திருந்தார். புலிகளுக்குப்
பணம் ஏதாவது கைமாறப்பட்டதா இல்லையா என்பதனை என்னால் கூறமுடியாது. ஆனால்
பிரபாகரன் வன்னியுள்ள மக்களை 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களிக்க
அனுமதித்திருந்தால், மஹிந்த ராஜபக்ச இலங்கையில் ஜனாதிபதியாகத்
தெரிவுசெய்யப்பட்டிருக்க மாட்டார். ரணில் அந்தத் தேர்தலில் நிட்சயமாக
வென்றிருப்பார்.

கேள்வி: நீங்கள் அனுசரணை வழங்கிய சமாதான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது
மட்டுமல்ல, லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படவும்
வழிவகுத்திருக்கிறது. நீங்கள் அனுசரணையளித்த ஒரு முயற்சி இவ்வாறானதொரு
சூழ்நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதையிட்டு நீங்கள் எப்போதாவது
வருந்தியதுண்டா?

பதில்: நான் நோர்வேயின் செயல்களுக்காக நான் வருந்தியது கிடையாது. ஏனெனில்
அங்கே இடம்பெற்ற வன்முறைகளுக்கு மூன்றாம் தரப்பொன்றினைக்
குறைகூறமுடியாது. இந்த வன்முறைகள் இரண்டு தரப்பினராலேயே
தூண்டிவிடப்பட்டன. இதில் ஒன்று அரசின் உயர் மட்டத் தரப்பு, மற்றையது
விடுதலைப் புலிகள். அங்கே தனிப்பட்டோர் இருக்கவில்லை. அத்துடன்,
பிரபாகரன் வன்முறைகளை நிறுத்துகிறேன் என்று உறுதியளித்த போதெல்லாம்
வன்முறைகள் நிறைவுக்கு வந்திருந்தன. அதேபோல, ரணில் விக்கிரமசிங்க அரச
படைகளைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தபோதும் வன்முறைகள்
முடிவுக்கு வந்தன. மோதல்களில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினராலேயே
வன்முறைகள் தூண்டப்பட்டன. எம்மால் முடிந்தவரை நாம் அவை
நிறுத்தப்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். அதில் நாங்கள்
தோல்வியடைந்தோம். ஆனால் அதற்காக எங்கள்மீது நிட்சயமாகப் பழிபோட முடியாது.
மக்களைக் கொன்றழித்தவர்களை இதற்கான பழியை ஏற்கவேண்டும்.

கேள்வி: ஐ.நாவின் உள்ளக விசாரணை அறிக்கையான "பெற்றி அறிக்கை", ஐ.நா
மோதல்களின்போது மக்களைப் பாதுகாக்கும் தனது பொறுப்புக்களிலிருந்து
தவறியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. மோதல்களிலிருந்து மக்களைப்
பாதுகாக்கும் கொள்கை இலங்கையில் பிரயோகிக்கப்படவில்லை என்றும், இதனாலேயே
பாரிய அழிவுகள் அங்கே ஏற்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறது. ஐ.நா வின்
ஒரு அங்கமாக இருக்கும் ஒரு அங்கத்தவ நாடு என்ற வகையிலும், அனுசரணையாளர்
என்ற வகையிலும் நீங்கள் இதனை எவ்வாறு பரிசீலிக்கின்றீர்கள்?

பதில்: அது மிகவும் நியாயமான விமர்சனம். இறுதி யுத்தத்தின்போது இலங்கை
அரசின் பல்வேறு அழுத்தங்களை ஏற்கொள்வதுபோல் ஐ.நா செயற்பட்டது. ஐ.நா
வெளிப்படையாகத் தெரிவித்திருந்த அளவிலும் பார்க்க யுத்தத்தின் அழிவுகள்
பாரியது. தாம் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்படுவதனை அவர்கள்
ஏற்றுக்கொண்டிருந்தனர். ஐ.நா இது குறித்து வேறுவிதத்தில்
செயற்பட்டிருக்கவேண்டும். துரதிஷ்டவசமாக இதனை பான் கீ மூனும், ஐ.நாவும்
ஏற்றுக்கொண்டிருந்தது. ஐ.நா எதிர்காலத்தில் இவ்வாறான மோதல்களின்போது
செவ்வனே செயற்படும் என நம்புகிறேன்.

கேள்வி: இலங்கையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்திருக்கின்ற நிலையிலும்,
வன்முறைகள் இன்னமும் இடம்பெற்றுவருகின்றன. ஆனால், இந்த அரசு ஆட்சிக்கு
வந்தவுடன் அதனை வரவேற்று நீங்கள் 'இந்து' பத்திரிகையில் கட்டுரையொன்றை
வரைந்திருந்தீர்கள். இந்த அரசின் தலைவர்கள் மேற்குலகநாடுகளில்
வரவேற்கப்படுவார்கள் என்றெல்லாம் அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நீங்கள் எதிர்வுகூறியது இப்போது நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவிசாரணை போன்ற விடயங்களில், இந்த அரசின்
போக்கு உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?

பதில்: இந்த அரசின் போக்குடன் மகிழ்ச்சியாக இருப்பதனை
அங்கீகரிக்கவேண்டியது நான்மட்டுமல்ல. தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும்
பேரளவில் திரண்டு வாக்களித்தமையினாலேயே இந்த அரசு பதவிக்கு வந்தது.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவிற்கே
வாக்களித்திருந்தனர். ஆகவே, தமிழ், முஸ்லிம் மக்களது அளப்பரிய
ஆதரவினாலேயே ரணிலும், சிறிசேனவும் தற்போது ஆட்சியிலிருக்கிறார்கள். நான்
மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் அனைவருமே இந்த அரசினை
வரவேற்றிருக்கின்றனர். ஆனால், இந்த அரசு இப்போதுதான் தமது ஆட்சியை
ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டிலிருந்து பாரிய முன்னேற்றங்களை
அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மக்கள் தமது கருத்துக்களை
வெளியிடக்கூடியதாக இருக்கிறது. பொருட்களின் விலை
குறைக்கப்பட்டிருக்கிறது. ஊடக நிலைமைகளில் பாரிய முன்னேற்றம்
ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
வரவேற்கக்கூடியவை. ஆனால், வடக்கில் பாரியளவில் நிலைகொண்டிருக்கிறது.
மக்களின் நிலங்களிலும், வீடுகளிலும் நிலைகொண்டிருக்கிறது. இது
குறைக்கப்படவேண்டும். இன்னமும் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று
வருகின்றன. அவை நிறுத்தப்படவேண்டும். கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
இந்த விடயங்களில் மேற்கொள்ளப்படுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன.
ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேள்வி: இந்த முன்னேற்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை வழங்கும்
ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் செல்லுமா?

பதில்: உண்மையைக் கண்டறிவதே பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிக் கரிசனையாக
இருக்கிறது. நீங்கள் ஒரு விதவையாக இருந்தாலோ, அல்லது தனது கணவரை உயிருடன்
இராணுவத்தினரிடம் கையளித்திருந்தாலோ அல்லது அதனைப் பார்த்ததற்கான
சாட்சிகள் இருப்பின், அந்த நபர் அநேகமாக இறந்திருப்பதற்கான வாய்புக்களே
அதிகம். உண்மையைக் கண்டறியாது, குடும்பத்தவருக்கு என்ன நடந்தது என்பதனை
அறியாது அவரது குடும்பம் எவ்வாறு வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியும்.
ஆகவே, அவர்களது உடனடிக் கரிசனையென்பது, இதுகுறித்த சரியான உண்மையைக்
கண்டறிவதே. ஆனாலும், காலப்போக்கில் போர்க்குற்றங்கள் விசாரணை
செய்யப்படவேண்டும். அவர்கள் இலங்கையில் விசாரணை செய்யப்படுவதையே
விரும்புகிறேன். குறித்த காலத்திற்குள் அது இடம்பெறவில்லையாயின், சர்வதேச
சமூகம் அவர்களை விசாரணை செய்யவேண்டும்.

கேள்வி: ஜனவரி 17 தேர்தலுக்கு முன்னர், சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள்
குறித்து பல்வேறு அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தினாரால் பேசப்பட்டது.
பிரித்தானியப் பிரதமர் வடக்கே சென்று சர்வதேச விசாரணையொன்றையும்
உறுதியளித்திருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது
வழங்கப்பட்டிருப்பது ஒரு வெறும் உள்நாட்டுப் பொறிமுறையே! ஐ.நா வின்
அறிக்கையில் நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறைக் கட்டமைப்பு
குறைபாடுகள் குறித்து விலாவாரியாகத் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்,
இலங்கை அரசின் கைகளில் இந்த விசாரணைக் கையளிப்பது விரும்ப்பப்படும்
முடிவினைக் கொடுக்குமா?

பதில்: சர்வதேச சமூகத்தின் இலங்கை அரசுமீதான நம்பிக்கையினை உறுதிசெய்வது
இறுதியில் இலங்கை அரசின் கையிலேயே தங்கியிருக்கிறது. அவர்கள் பல்வேறு
நல்ல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். இலங்கை அரசு ஐ.நா
தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு
விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அது நேர்த்தியான
அறிக்கையல்ல. ஆனாலும், முதன்முறையாக ஒரு சிங்கள ஆணைக்குழு, யுத்தக்
குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது. ஆகவே இந்த
நடமுறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது, அது நாளைக்கே முடிவடைந்துவிடாது.
உலகின் ஏனைய நாடுகளான சேர்பியா, சிலி போன்ற நாடுகளில் யுத்தக் குற்ற
விசாரணைகள் நிறைவேறுவதற்கு சில காலங்கள் பிடித்திருக்கின்றன.
இலங்கையிலும் இது நடக்கும், ஆனால் அதற்குச் சில நாட்கள் பிடிக்கும்.

கேள்வி: ஆனால் இலங்கை அரசாங்கத்திற்குத் தன்னைத்தானே விசாரிக்கும்
தார்மீக உரிமை கிடையாது என்றும், சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள்,
வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கியதான ஒரு கலப்புப் பொறிமுறையூடாகவே
விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஐ.நா தெரிவித்திருக்கிறது. ஆனால் ஐ.நா
தீர்மானத்தில் அது நீர்த்துப்போயிருக்கிறது. ஒரு உள்ளூர் விசாரணை
நீதியைப் பெற்றுக் கொடுக்குமா?

பதில்: அது குறித்து இப்போதைக்கு எமக்கு எதுவும் தெரியாது. ஆனால் உலகின்
ஏனைய நாடுகளைப் பார்க்கும்போது இது படிப்படியாகவே இடம்பெற்றிருக்கிறது.
ஆனால், இந்த விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கம் உலக அபய ஸ்தாபனம், மனித
உரிமை கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச மனித உரிமை சமூகம் போன்ற
சக்திகள் இதிலிருந்து விலகிப்போகாது. மிகவும் காத்திரமான புலம்பெயர்
தமிழர்களும் இதற்கான அழுத்தங்களைப் பிரயோகித்துக்கொண்டேயிருப்பார்கள்.
ஆகவே, காலப்போக்கில் இது இடம்பெறும். ஆனால், அரசாங்கம் இதற்குள் சிங்கள
மக்களையும் உள்வாங்கவேண்டிய ஒரு தேவை இருக்கிறது. முதலில் மிகவும்
முக்கியமான படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்தல்
நடைமுறைச்சாத்தியமானதாக இருக்கும். கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்புச்
சிறைச்சாலையில் சுட்டுக்கொல்லப்பட்ட எனது நண்பர் ஜோசப் பரராஜசிங்கத்தின்
படுகொலை குறித்த விசாரணைகளைக் குறிக்கலாம். இது குறித்து சிலர்
கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான விசாரணைகளை நீதிமன்ற
விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். அதேபோல, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை
விசாரணையும் மேற்கொள்ளப்படவேண்டும். திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட
தன்னார்வத் தொண்டர் நிறுவன தமிழ் ஊழியர்களின் படுகொலை மற்றையது.
இவற்றினூடாக, போர்க்குற்ற விசாரணைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற
விடயத்தினைத் தெளிவுபடுத்தலாம்.

கேள்வி: போர்க்குற்றம் தொடர்பான முக்கிய விடயங்களில் வெள்ளைக்கொடி
விவகாரமும் ஒன்று. அதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பதில்: புலிகள் தரப்பில் எம்முடன் மிகநீண்டகாலமாக எம்முடன் தொடர்புகளைப்
பேணிவந்தவர் புலித்தேவன். அவர் மே 17 (2009 ஆம் ஆண்டு) எங்களைத்
தொடர்புகொண்டார். அன்றையதினம் நோர்வேயின் தேசிய தினம் என்பதால் எங்களால்
மறக்க முடியாது. அவர் எம்மைத் தொடர்புகொண்டு தாங்கள் இலங்கை அரசிடம்
சரணடையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஒரு சரணடைவினை எம்மால்
ஒழுங்குபடுத்தித் தரமுடியுமா என்று எங்களிடம் கேட்டார். துரதிஷ்டவசமாக
அப்போது சரணடைவு ஒன்றினை ஏற்படுத்தித் தருவதற்குக் காலதாமதமாகிவிட்டது
என்று நாம் கூறினோம். சில வாரங்களுக்கு முன்பதாக இதனைக் கேட்டிருந்தால்
எம்மால் அதனை ஏற்படுத்திக்கொடுக்க முடிந்திருக்கும் என்றும், இப்போது
எம்மால் முடியாது என்று கூறியிருந்தோம். ஆனால், வெள்ளைக்கொடியை
உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அவர்களது விருப்பத்தை வெளியிடக்கூடிய
ஒலிபெருக்கி போன்ற ஒன்றின் உதவியுடன் சரணடையும்படி அவரிடமும்,
நடேசனிடமும் சிபார்சு செய்தோம். இந்த விடயத்தை நாம் இலங்கை
அரசாங்கத்திற்கும் அறிவித்தோம். இதில் நாங்கள் மட்டும்
சம்பந்தப்பட்டிருக்கவில்லை. புலித்தேவன் ஏனைய பலரையும்
தொடர்புகொண்டிருந்தார். நாம் இலங்கை அரசாங்கத்திற்கு இது குறித்து
அறிவித்தோம். மற்றையவர்களும் அதனைச் செய்தார்கள். மறுநாள் காலை, இவர்கள்
அனைவரும் இறந்துகிடப்பதாக எமக்குத் தகவல் கிடைத்தது. உண்மையிலேயே என்ன
நடந்தது என்பதனை என்னால் கூறமுடியாது. ஆனால், அவர்கள் இலங்கை அரச
படைகளினால் வேண்டுமென்றே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எவ்வித
சந்தேகமும் கிடையாது.

கேள்வி: இது குறித்து இலங்கை அரச தரப்பில் யாருக்கு நீங்கள் அறிவித்தீர்கள்?

பதில்: நாம் பஸில் ராஜபக்சவிற்கு அறிவித்தோம்.

கேள்வி: அவருடைய பதில் என்னவாக இருந்தது?

பதில்: அது....அப்படி.....எனக்கு அவர் சரியாக என்ன சொன்னார் என்பது
குறித்து நினைவுகூர முடியாமலுள்ளது. ஏனெனில் நான் அவருடன் நேரடியாகப்
பேசவில்லை. ஆனால் அவர்கள் அப்படி....அதன் பிரகாரம் செயற்படுவார்கள் என்று
சொன்னார்கள். எதாவது உறுதிமொழி வழங்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது.
இது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாகச் சிலர்
தெரிவித்திருப்பதனை ஊடகங்களில் கண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் விஜய் நம்பியார் பற்றித்தானே கூறுகிறீர்கள்?

பதில்: நான் அது குறித்துக் கருத்துக்கூறமுடியாது. அதனை நம்பியாரே
தெளிவுபடுத்தவேண்டும். ஆனால், இதுவிடயத்தில் நாங்கள் அறியத் தேவையானவற்றை
அறிந்திருக்கிறோம். அதாவது அவர்கள் சரணடைய முன்வந்திருக்கிறார்கள்,
அவர்கள் அதனைச் செய்யத் தயாராக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அரச
படைகளினால் வேண்டுமென்றே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி: உள்நாடோ, வெளிநாடோ, கலப்புப் பொறிமுறையோ இவற்றினை விசாரனை
செய்வதற்காக விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற
முயற்சிகளில் உள்வாங்கப்பட்டிருக்கிறீர்கள் அல்லது அது குறித்த விடயங்களை
அறிந்து வைத்திருக்கிறீர்கள். இரண்டு தரப்புடனும் தொடர்பில்
இருந்திருக்கின்றீர்கள். நீங்கள் இந்த வெள்ளைக் கொடிவிவகாரத்தில்
சாட்சியம் அளிப்பீர்களா?

பதில்: நிட்சயமாக. நான் ஏற்கனவே இது குறித்து ஐ.நா விசாரணை
ஆணைக்குழுவிற்கும், அமெரிக்க விசாரணைக்கும் சாட்சியமளித்திருக்கிறேன்.
இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விசாரணையாக இருந்தாலும் சரி, சர்வதேச
விசாரணையாக இருந்தாலும் சரி, நான் எந்தவொரு காத்திரமான விசாரணைக்கும்
சாட்டியமளிக்கத் தயாராகவிருக்கிறேன். ஆனால், இங்கு இடம்பெற்றவைக்கு
பிரபாகரனும் முக்கிய பங்கேற்கவேண்டும் என்பது இங்கு மிகமுக்கியமானது.
இந்த யுத்தத்தினை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிவிற்குக்
கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை எம்மால் மேற்கொள்ள முடியும் என்று
அவருக்குத் தெரிவித்திருந்தோம். அனைத்துத் தமிழ் சிவிலியன்களின்
உயிர்களும் காவுகொள்ளப்படிருக்காது. விடுதலைப் புலி உறுப்பினர்களின்
உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கும். அவர்கள் அனைவரும் புகைப்படம்
எடுக்கப்பட்டு, பதிவுசெய்யப்பட்டு கப்பலொன்றின் மூலமாக
கொண்டுவரப்பட்டிருப்பார்கள். ஆனால், அவர் இதற்கு இணங்க மறுத்துவிட்டார்.
இறுதிவரை சண்டியிடுவதனையே விரும்பினார். அவர் அதனை
ஏற்றுக்கொண்டிருப்பாராயின், விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் இன்று
உயிருடன் இருந்திருப்பார்கள் என்பதுடன், இராணுவ வழியில் அல்லாது சிவில்
முறையூடாகத் தமது போராட்டத்தினைத் தொடர்ந்திருக்கலாம்.

கேள்வி: விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டதனாலேயே
பலவீனப்படுத்தப்பட்டார்கள் என்ற கூற்றினை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: விடுதலைப் புலிகள் தமது இராணுவ பலத்தின் உச்சக் கட்டத்தில்
இருந்தபோதே சமாதான முயற்சிகளுக்கு உடன்பட்டிருந்தார்கள். 2000-2001
காலத்தில் அவர்கள் மிகவும் பலமாக இருந்தார்கள். இலங்கை ஆயுதப்படையின்
மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை அவர்கள் தோற்கடித்திருந்தார்கள். இந்தப்
பகுதியில் யாழ் குடாநாட்டினை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றும் தறுவாயில்
இருந்தார்கள். கட்டுநாயக்கா பண்டாரநாயக்க விமானநிலையம் மீதான புலிகளின்
தாக்குதலின் பின்னர், சிறிலங்காவின் பொருளாதாரம் கடைநிலைக்குச்
சென்றுகொண்டிருந்தது. அவர்கள் அப்போது பலத்தின் உச்சக்கட்டத்தில்
இருந்தார்கள். ஆகவே, விடுதலைப் புலிகள் இதயசுத்தியுடன் சமாதான
முயற்சியில் ஈடுபடத் தயாராக இருந்தார்கள். இராணுவ பலத்தில்
உச்சக்கட்டத்தில் இருந்த புலிகள், சமாதான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு
வேறேதும் காரணங்கள் இருக்க முடியாது. ஆனாலும், அதன் பின்னரான காலத்தில்
அவர்கள் அதனைத் தவறாகக் கையாளத் தலைப்பட்டார்கள். சமஷ்டித் தீர்வு
வழங்கப்பட்டபோது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: அந்த உறுதிமொழிகள் உண்மையானவை?

பதில்: ஆம், நிட்சயமாக.

கேள்வி: இலங்கை அரசாங்கங்களின் கடந்தகால வரலாறுகளை
வைத்துப்பார்க்கும்போது, அவர்கள் தாம் பலவீனமான நிலையில்
இருந்தபோதெல்லாம், இவ்வாறு காலத்தினை இழுத்தடிக்கும் செயற்பாடுகளில்
ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறதே. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம்
பேச்சுமேசைகளில் வைத்தே பலவீனமாக்கப்பட்டது என்றும், கருணாவினுடைய
பிளவும் அவ்வாறானதொன்றே என்றும் தெரிவிக்கப்படுகிறதே?

பதில்: ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் சமஷ்டியை நிராகரித்தது விடுதலைப்
புலிகளே, அரசாங்கம் அல்ல. நீங்கள் மறுதரப்பினை நம்பவில்லையென்றாலும்,
அதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கிப் பார்த்திருக்கலாம். விடுதலைப்
புலிகள்தான் சமஷ்டியை ஏற்பதற்குத் தயங்கினார்கள். பாலசிங்கம் அதற்குத்
தயாராக இருந்தார், ஆனால் பிரபாகரன் அதற்குத் தயாராக இருக்கவில்லை.
இதனால், அரசாங்கம் எல்லாவற்றையும் சரியாகவே செய்தது சொல்லவில்லை.
அவர்களும் பாரியளவில் தவறிழைத்திருக்கிறார்கள். மற்றைய சந்தர்ப்பங்களில்
அவர்களே பிரச்சனைக்குரியவர்கள். ஆனால், சமஷ்டித் தீர்வென்ற விடயத்தில்
விடுதலைப் புலிகளே பிரச்சனைக்குரியவர்கள்.

கேள்வி: சர்வதேசத்தை நம்பவைக்க முடியாதமை சமாதான முயற்சிகளின் தோல்விக்கு
ஒரு காரணம். ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள்
தடைசெய்யப்படக்கூடாது என்று நீங்கள் வலியுறுத்தியதாக முன்னர்
கூறினீர்கள். அவ்வாறானதொரு சர்வதேச அழுத்தத்தினை நோர்வே
கொண்டுவரமுடியாமல் போனமையும் அதற்கான தோல்விகளில் ஒன்று. இதனை நீங்கள்
ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: விடுதலைப் புலிகளைத் தடைசெய்தமை முழுக்க முழுக்க ஒரு தவறான
நடவடிக்கை. அதற்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியமும், ஏனையோரும் விடுதலைப்
புலிகளின் தொடர்புகளைப் பேணுவதனூடகவும், பிரபாகரனுடன் பேச்சுக்களை
நடாத்துவதனூடாகவும் விடுதலைப் புலிகளை உள்வாங்கி, அவர்களுக்கு சர்வதேச
சமூகம் குறித்த புரிதலை ஏற்படுத்தியிருக்கவேண்டும். சமாதான
முயற்சிகளுக்கு அவை மிகவும் சாதகமானதாக இருந்திருக்கும். ஆனாலும்,
மிகமுக்கியமான சிங்களத் தலைவர்களைத் தொடர்ந்தும் கொலைசெய்தால் அவர்கள்
உங்களைத் தடைசெய்வார்கள் என்று நான் பிரபாகரனுக்குத் திரும்பத்திரும்பச்
சொல்லியிருந்தேன். நான் அதனை விரும்பவில்லை, ஆனால் அவர்கள் அதனைச்
செய்வார்கள் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன். கதிர்காமரின்
படுகொலைக்குப் பின்னர் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பே
இருக்கவில்லை. ஆகவே இது அவருடைய தவறு, அவர் அதனைத் தவறாகக்
கையாண்டிருந்தார். ஆனாலும் சர்வதேசம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தமை
மிகத் தவறானசெயல். அவர்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது.

கேள்வி: சர்வதேச சமூகம் பரந்தளவில் விடுதலைப் புலிகளை இலங்கையின் சமாதான
முயற்சிகளுக்கான ஒரு தடையாகவே நோக்கியது. விடுதலைப் புலிகள் ஆறு
வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் சமாதானம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. சர்வதேசத்தின் இந்தக்
குற்றச்சாட்டு சரியானதா?

பதில்: தோல்விகளுக்குப் புலிகளின் மீது மட்டுமே பழி சுமத்துவது
நியாயமற்றது. சிங்களத் தலைமைகளுக்கிடையேயுள்ள இணக்கமின்மையும் இதற்கு
முக்கிய காரணம். ஆனால் விடுதலைப் புலிகளே பெரும்பாலான தவறுகளை
விட்டிருந்தார்கள். இறுதிவரை போராடுவோம் என்று அவர்கள்
தீர்மானித்திருக்கவில்லையாயின் யுத்தத்தின் இறுதிப் பகுதியில் பெருமளவான
உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். கதிர்காமரின் படுகொலைகள் போன்ற
கொலைகள் விடுதலைப் புலிகள் மேலும் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுத்தன.
அரசாங்கத்தரப்பிலும் பெரும்பாலான தவறுகள் விடப்பட்டிருக்கின்றன.
இறுதிக்காலத்தின் முக்கியமான யுத்தக் குற்றங்கள் இலங்கை
அரசாங்கத்தினாலேயே புரியப்பட்டன - கண்மூடித்தனமாகத் தமிழ் சிவிலியன்களைக்
கொன்றது, அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் கொலைசெய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும், ஒரு
ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவது
குறித்தும் தெரிவித்தீர்கள். அது என்ன?

பதில்: 2009 ஆம் ஆண்டு, இலங்கை அரசு யுத்தத்தினை வெற்றிகொள்ளப்போகிறது
என்று தெரியவந்தபோது, நாம் இந்த யுத்தத்தினை ஒழுங்குபடுத்தப்பட்ட
முறையில் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று அவர்களிடம் கேட்டிருந்தோம்.
நாம் சரணைடைதல் என்ற பதத்தினைப் பிரயோகிக்க விரும்பவில்லை. ஏனெனில் அது
புலிகளுக்கு ஒரு அவமானமாக அமைந்திருக்கும். நாம் அங்கு கப்பலொன்றை
அனுப்புவோம் என்றும், அனைத்துப் போராளிகளினதும் பெயர்கள்
பதிவுசெய்யப்பட்டு, அவர்களுடைய புகைப்படங்கள் எடுக்கப்படும் என்றும்,
அதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், ஏனெனில்,
அதற்குப் பிறகு அவர்களைக் கொல்லுவதென்பது கடினமானதாக இருந்திருக்கும்
என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தோம். ஆனால், புலிகளின் முன்னாள்
வெளிநாட்டமைச்சர் என்றும் கருதப்படும் கே.பி இதனை சிபார்சு செய்தார்.
நாங்களும் சிபார்சு செய்தோம். ஆனால், பிரபாகரன் அதனை
நிராகரித்திருந்தார். இது நடந்திருந்தால் எல்லாப் போராளிகளும் இன்று
உயிருடன் இருந்திருப்பார்கள் என்பதுடன், யுத்தத்தின் இறுதியில்
கொல்லப்பட்ட பெரும்பாலான மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

கேள்வி: 13,000 ற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்தாகக் கூறப்படுகிறது.
இவர்களில் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றபோதிலும், இதில் எவரும்
உண்மையான முறையில் புனர்வாழ்வளிக்கப்படவில்லை என்பதுடன் இவர்களில் பலர்
காணாமற்போயிருக்கிறார்கள். இப்போதுகூட காணாமற்போனோரின் உறவினர்களும்,
தடுத்துவைக்கப்பட்டோரின் உறவுகளும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
புதிய அரசு ஆட்சிக்குவந்து எட்டு மாதங்களாகியும் இவர்களுக்கு இன்னமும்
ஒரு பதில் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் சர்வதேச
சமூகம் கூறியதுபோல, நீங்கள் சிபார்சு செய்ததுபோல சரணடைந்திருந்தால்,
அவர்கள் இப்போதும் உயிருடன் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஆமாம். உறுதியாக உயிருடன் இருந்திருப்பார்கள். ஏனெனில் இது
முற்றிலும் வேறான நடைமுறையாக இருந்திருக்கும். இவர்கள் இலங்கை அரசினால்
மட்டுமன்றி, சர்வதேச சமூகத்தினாலும், இந்தியாவாலும், அமெரிக்காவினாலும்
பதிவுசெய்யப்பட்டிருப்பார்கள். ஆகவே இவர்கள் சர்வதேசத்தின் முழுமையான
ஆதரவினையும், பாதுகாப்பினையும் பெற்றிருப்பார்கள். அந்த வகையில் அவர்கள்
இன்னமும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

கேள்வி: அப்படியாயின், யுத்தத்தின்போது சரணடைந்த இந்தப் போராளிகளின்
பாதுகாப்பினை ஏன் சர்வதேசத்திற்கு உறுதிசெய்ய முடியாமற்போனது?

பதில்: ஏனெனில், பிரபாகரனுக்குச் சிபார்சு செய்ததுபோன்ற ஒரு பொறிமுறை
இங்கிருக்கவில்லை. அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அது
இடம்பெறவில்லை.

கேள்வி: தமிழர்களது உரிமைகளைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத்
தரப்போவதில்லை. தமிழர்கள் அதனைப் போராடியே பெறவேண்டுமென நீங்கள் இந்தப்
புத்தக வெளியீட்டின்போது கூறினீர்கள். இதன்மூலம் நீங்கள் கருதியது என்ன?

பதில்: சிங்களவர்கள் மிகவும் இளகிய மனம்படைத்தவர்கள், அவர்கள்
வடக்கு-கிழக்கில் தமிழர்களுக்கான சுயாட்சியை அவர்கள் அன்பான
அன்பளிப்பாகத் தருவார்கள் என்று எண்ணுவது நடைமுறைச் சாத்தியமற்றது. இது
போராட்டங்கள் மூலமாகவே பெறப்படமுடியும். நான் ஆயுத வன்முறைகளை
நிராகரிப்பவன். ஆனால், இந்தப் போராட்டத்தினை மேற்கொள்வதற்கு -
உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் போன்ற பல்வேறு அரசியல் ரீதியான வழிவகைகள்
இருக்கின்றன. காந்தியம் அண்டைநாடான இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆயுதப்
போராட்டத்திற்கு, தமிழர்களைத் தவிர வேறெங்கும் ஆதரவு கிடைக்கவில்லை.
வேறுவழிகளில் போராடுவார்களாயின் அவர்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல
நாடுகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.

கேள்வி: அவ்வாறாயின், விடுதலைப் புலிகள் இல்லாதொருநிலையில், தமிழர்கள்
தமது உரிமைகளைப் பெறும் நல்லதொரு நிலையில் இருக்கிறார்கள் என்று
கூறுகிறீர்களா?

பதில்: கடந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் நல்லதொரு நிலையில்
இருக்கிறார்கள். ஏனெனில் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு செய்வது மிகவும்
ஆபத்தானதாக அமைந்திருக்கும். மைத்திரி-ரணில் ஆட்சியில் அரசியல்
முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான ஒரு அரசியல் இடைவெளி
ஏற்பட்டிருக்கிறது.

கேள்வி: சர்வதேச சமூகம் இந்த அரசை கண்மூடிதனமாக ஆதரிக்கிறது
போலத்தெரிகிறது. இந்த அரசு பொறுப்புக்கூறல், உண்மை, மற்றும் நீதியை
நிலைநாட்டுதல் போன்ற விடயங்களில் தனது நம்பிக்கைத் தன்மையினை
வெளிக்காட்டியிருக்கிறதா?

பதில்: அவர்கள் அதற்கான நடைமுறையை ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போதுள்ள
இடத்தில் அது நிறுத்தப்படுமாயின், அது நம்பிக்கைக்குரியதாக இருக்காது.
தான் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவுக்குச் சென்று பலதரப்பட்ட நல்ல
வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். அவற்றை நிறைவேற்றும் தருணம் இது.
இரண்டொரு வருடங்களில் அதை நிறைவேற்றத் தவறுவார்களாயின், சர்வதேச சமூகம்
மீண்டும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயலவேண்டும்.

கேள்வி: நீங்கள் மஹிந்த ராஜபக்சவின் அச்சுறுத்தல் குறித்துப்
பேசினீர்கள். அந்த அபாயம் இன்னமும் இருக்கிறதா?

பதில்: மஹிந்த முத்திரை சேகரித்துக்கொண்டும், வீட்டுத்தோட்டம்
செய்துகொண்டும் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை. அவர் அரசியலில்
மீள்நுழைவதற்கான முயற்சிகளில் எப்போதுமே ஈடுபட்டுக்கொண்டுதான் இருப்பார்.

கேள்வி: இந்தப் புதிய அரசு இரண்டு வருடங்கள் கூட்டாட்சிக்கே ஒப்பந்தங்களை
மேற்கொண்டுள்ளது. நீங்கள் இந்த அரசின் பாரிய முயற்சிகளை ஆரம்பிக்க இரண்டு
வருடங்கள்வரை பிடிக்கலாம் என்று கூறுகிறீர்கள். இந்த இரண்டு
வருடங்களுக்குள் காத்திரமான முன்னேற்றம் ஏற்பட முடியுமா?

பதில்: நிட்சயமாக. ஒரு நடைமுறையை ஆரம்பித்து தொடர்ந்தும் முன்னேறுவதே
அரசியலில் முக்கியமானது. உலக நாடுகளில் இவ்வாறுதான் நடக்கிறது. இதற்குக்
காலம் பிடிக்கும். ஆனால் இது வெறுமனே பொறுப்புக்கூறும் விடயம்
குறித்ததல்ல. இது இலங்கையிலுள்ள முக்கியமான விடயங்களில் ஒன்று. அடுத்த
முக்கிய விடயங்களாக, பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும்
இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தியடைய அடைய, பிணக்குகளைத் தீர்ப்பதற்கான
வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

தமிழர்களின் தன்னாட்சில் பிரச்சனையைப் பொறுத்தவரை 1950 களில் அது
ஆரம்பித்தபோது, பெடரல் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1970
களில் பிரபாகரனும், ஏனையோரும் இதற்காக ஆயுதம் ஏந்திப்போராடினார்கள்.
அவர்கள் தனிநாட்டுக்காக அல்லது வடக்குக் கிழக்கில் தாய்நாடு ஒன்றிற்காகப்
போராடினார்கள். இந்தப் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை. இறுதியில்
இதற்கான தீர்வு அதிகாரப் பகிர்வாகவோ, சமஷ்டி அல்லது வடக்கு கிழக்கில்
தமிழருக்கான தன்னாட்சியாக அமையவேண்டும்.

கேள்வி: சமாதான முயற்சிகளின் போது நீங்கள் வெளிநாட்டு உதவிகளை சமாதான
முயற்சிகளின் முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்தியிருந்தீர்கள். இலங்கை
இப்போது சுமார் நான்கு பில்லியன் ரூபாய்களை யுத்ததினால் பாதிக்கப்பட்ட
பொருளாதார மீட்சிக்காக சர்வதேச சமூகத்திடம் எதிர்பார்த்திருக்கிறது. இது
ராஜபக்ச அரசின் ஊழல் மோசடி நடவடிக்கைகளினால் மேலும் மோசமடைந்திருந்தது.
சர்வதேச சமூகம் இந்த நிதியுதவிகளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும்
அரசியல் தீர்வுக்கான முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்த வேண்டும் என்று
நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இல்லை. இவ்வாறான அழுத்தங்கள் பயனளிக்கும் என்று நான் கருதவில்லை.
எதிர்மறையில் நோக்குவோமாயின், தென்கொரியத் தலைவர் கிம் டே ஜுங், சன்ஷைன்
கொள்கைகளை பிற்காலப் பகுதியில் வடக்கிற்கு வகுத்திருந்தார். சர்வதேச
சமூகம் அரசாங்கத்துடன் இணைந்து ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில்
ஈடுபடவேண்டும். இதன்மூலமாகத் தொடர்ச்சியாக முன்னேறுவதற்கு அழுத்தங்களைப்
பிரயோகிக்கவேண்டும். இலங்கை அந்தளவுக்கு ஒரு வறிய நாடல்ல. பொருளாதார
உதவிகளே முக்கியமான விடயம். இலங்கைக்கு உல்லாசப் பயணத்துறை, மற்றும்
மீன்பிடி போன்றதுறைகளில் முதலீடுகள் தேவைப்படுகின்றன. சர்வதேச சமூகம்
அவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும். முன்னேறிச்செல்ல ஊக்கமளிக்க
வேண்டும்.

கேள்வி: இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, ஐ.நா கூட இலங்கை
விடயத்தில் தான் தவறிழைத்திருப்பதாக ஒத்துக்கொண்டிருக்கிறது. நோர்வே
அனுசரணைப் பணியை ஆற்றியிருக்கிறது. அனுசரணை முயற்சிகள் தோல்வியில்
முடிவடைந்து, யுத்தம் கோரமாக முடிவடைந்தமைக்கு நோர்வே நாட்டிற்கும் பங்கு
இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நாம் பாரிய எண்ணிக்கையில் தவறுகளை விட்டிருக்கிறோம். அதற்காக
இலங்கையில் யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு நோர்வேயின் மீது
பழிசுமத்த முடியாது. வன்முறைகளுக்கு ஏனையோரே காரணம். ஒரு மூன்றாம்
தரப்பாக நாம் எம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்து இரு தரப்பினரையும்
வேறுவழிகளில் திசைமாற்ற முயன்றோம். நோர்வே இந்தப் பிரச்சனையில் சர்வதேச
சமூகத்தின் பங்களிப்பினை மேலும் அதிகரிப்பதற்கும், இந்தியாவையும்,
அமெரிக்காவையும் மேலும் உள்வாங்குவதற்கும், இருதரப்பின் மீது
அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்
என்று நீங்கள் கேட்கலாம். தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும்
சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு மேலதிக நடவடிக்கைகள்
எடுத்திருக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். இது போன்ற பலவாறான கேள்விகளை
நீங்கள் கேட்கலாம். ஆனால், ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நோர்வே மீது
பழிசுமத்த முடியாது. இதற்கான பொறுப்பினை பிரபாகரனும், மஹிந்த ராஜபக்சவுமே
ஏற்கவேண்டும். அதேபோல, சிரியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கு ஐ.நாவையோ,
ஊடகங்களையோ குறைகூற முடியாது. சிரியாவில் மோதல்களில் ஈடுபட்டுள்ளவர்களே
அதற்கான பொறுப்பினை ஏற்கவேண்டும்.

கேள்வி: நோர்வே அனுசரணையாளர்கள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்று
கூறினீர்கள். நீங்கள் விட்ட மிகப்பெரிய தவறு என்ன?

பதில்: நாம் இரு தரப்பின் மீதும் அதிகளவு சர்வதேச அழுத்தத்தினைப்
பிரயோகிக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கவேண்டும், குறிப்பாக,
இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா
சுதந்திரக் கட்சி மீதும் இணைந்து செயற்படும்படி சர்வதேச சமூகம் அதிகளவு
அழுத்தத்தினைப் பிரயோகித்திருக்கவேண்டும். இந்த விடயத்தில் நாம்
சிறப்பாகச் செயற்பட்டிருக்க முடியும்.

கேள்வி: இன்னொரு யுத்தத்திற்கு முகம்கொடுக்காது இலங்கை சமாதானமாக
வாழமுடியும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: ஆம். நிட்சயமாக. நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கடந்த
காலத்தில் இலங்கை மிக மோசமான சில அரசியல்வாதிகளைக் கொண்டிருந்தது. இது
கடவுளால் ஆசீவதிக்கப்பட்ட ஒரு உன்னதமான தேசம். இங்கே அளப்பரிய வளங்களும்,
படித்தவர்களும், நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆதலால், நாம் மிகவும்
நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.

கேள்வி: இதற்கான உங்களது கால எல்லை என்ன?

பதில்: இப்போதிருந்து, மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிச் செல்லும்
அதேவேளை, ஒருமித்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு தன்னாட்சியும்
கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன்.

ibctamil.com

  • Replies 114
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கேள்வி: நீங்கள் கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும், ஒரு
ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவது
குறித்தும் தெரிவித்தீர்கள். அது என்ன?

பதில்: 2009 ஆம் ஆண்டு, இலங்கை அரசு யுத்தத்தினை வெற்றிகொள்ளப்போகிறது
என்று தெரியவந்தபோது, நாம் இந்த யுத்தத்தினை ஒழுங்குபடுத்தப்பட்ட
முறையில் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று அவர்களிடம் கேட்டிருந்தோம்.
நாம் சரணைடைதல் என்ற பதத்தினைப் பிரயோகிக்க விரும்பவில்லை. ஏனெனில் அது
புலிகளுக்கு ஒரு அவமானமாக அமைந்திருக்கும். நாம் அங்கு கப்பலொன்றை
அனுப்புவோம் என்றும், அனைத்துப் போராளிகளினதும் பெயர்கள்
பதிவுசெய்யப்பட்டு, அவர்களுடைய புகைப்படங்கள் எடுக்கப்படும் என்றும்,
அதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், ஏனெனில்,
அதற்குப் பிறகு அவர்களைக் கொல்லுவதென்பது கடினமானதாக இருந்திருக்கும்
என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தோம். ஆனால், புலிகளின் முன்னாள்
வெளிநாட்டமைச்சர் என்றும் கருதப்படும் கே.பி இதனை சிபார்சு செய்தார்.
நாங்களும் சிபார்சு செய்தோம். ஆனால், பிரபாகரன் அதனை
நிராகரித்திருந்தார். இது நடந்திருந்தால் எல்லாப் போராளிகளும் இன்று
உயிருடன் இருந்திருப்பார்கள் என்பதுடன், யுத்தத்தின் இறுதியில்
கொல்லப்பட்ட பெரும்பாலான மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

அந்த நேரம் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாட்டு அமைச்சராக இருந்தார் என்று எரிக் சொல்ஹெய்ம் இதில் குறிப்பிடுகின்றார்.

இந்தப் பேட்டியின் படி பார்த்தால் விடுதலைப் புலிகள் தமக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை கை நழுவ விட்டதாகவே கருத வேண்டி உள்ளது.

அன்று சமஸ்டியினை ஏற்றிருந்தால் இந்த நிலமை இன்று வந்து இருக்காது. 

கே.பி.யின் திட்டப்படி பிரபாகரன் அன்று சம்மதித்து இருந்தால் பல போராளிகளை காப்பாற்றி இருக்கலாம். இவர்கள் சரணடையாமல் இறுதி வரை போராடி இறந்து இருந்தால் கே.பி.யின் முயற்சி வீண் என்று நானே கூறுவேன். ஆனால், இவர்கள் இறுதி நேரத்தில் தாமாக சரணைடய முயற்சிகளை மேற்கொண்ட போது அனைத்தும் கை மீறியதாகவே போய்விட்டது.

விடுதலைப் புலிகளும் பிரபாகரனும் தமது நிகழ்ச்சி நிரலின்படியே உலகம் இயங்க வேண்டும் என எதிர்பார்த்தன் விளைவு அனைத்தும் நாசமாகி விட்டது.

இதில் இருந்து புலம் பெயர் மீட்பர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள். தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள முயற்சிக்காது விட்டால் எதிர்கால சந்ததிக்கு நாம் பிழையான வழிகாட்டுதலை தொடர்ந்து கூறிக்கொண்டு இருப்பவர்களாக இருப்போம். 

உண்மையில் இந்தப் பேட்டியினை கேட்ட போதும் சரி படித்த போதும் சரி வேதனையாக இருந்தது. எமக்கான சந்தர்ப்பங்களை எல்லாம் எம்மவர்கள் வீணடித்து விட்டார்களே என்கின்ற கோபம்தான் அதிகமாக வருகின்றது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முன் பன்னிரண்டு பெயர்கள் கொண்ட மாகாண கவுன்சில் உருவாக்கபட்டது .இதில் புலிகள் எட்டு பெயர்களை உள்ளடக்க கூடியதாக இருந்தது .

அந்த கவுன்சிலுக்கு தலைவராக தெரிவு செய்ய மூன்று பெயர்கள் தரும்படி ஜே ஆர் புலிகளிடம் கேட்டிருந்தார் ஆனால் அந்த மூன்றில் ஒருவரை தான் தலைவராக தெரிவு செய்வேன் என்று .

பத்மநாதன் ,சிவஞானம் ,துரைராஜா இந்த மூன்று பெயர்களை புலிகள் கொடுத்தார்கள் ஜேஆர் சிவஞானத்தை தலைவராக அறிவித்தார் ஆனால் பின்னர் பத்மநாதனை தலைவராக மாற்றும் படி கேட்டார்கள் ஜே ஆர் அதை மறுத்துவிட்டார் .அதுவும் அந்த மாகாணசபை குழம்ப ஒரு காரணமாகிவிட்டது .இன்று முகபுத்தகத்தில் பத்மநாதன் இறந்த செய்தி பார்க்கும்போது இந்த மாகாணசபை கவுன்சில் நினைவு வந்தது .

அதை அன்று ஏற்றிருந்தால் இந்தியன் ஆமியும் வந்திராது ,அதன் பிறகு நடந்த யுத்தங்களும் நடந்திராது இவ்வளவு அழிவுகளும் வந்திராது மக்களும் இறந்திருக்க மாட்டார்கள் .வடக்கு கிழக்கை புலிகளின் நிர்வாகமே நடத்தியிருக்கும் .

கெடு குடி சொற்கேளாது .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, arjun said:

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முன் பன்னிரண்டு பெயர்கள் கொண்ட மாகாண கவுன்சில் உருவாக்கபட்டது .இதில் புலிகள் எட்டு பெயர்களை உள்ளடக்க கூடியதாக இருந்தது .

அந்த கவுன்சிலுக்கு தலைவராக தெரிவு செய்ய மூன்று பெயர்கள் தரும்படி ஜே ஆர் புலிகளிடம் கேட்டிருந்தார் ஆனால் அந்த மூன்றில் ஒருவரை தான் தலைவராக தெரிவு செய்வேன் என்று .

பத்மநாதன் ,சிவஞானம் ,துரைராஜா இந்த மூன்று பெயர்களை புலிகள் கொடுத்தார்கள் ஜேஆர் சிவஞானத்தை தலைவராக அறிவித்தார் ஆனால் பின்னர் பத்மநாதனை தலைவராக மாற்றும் படி கேட்டார்கள் ஜே ஆர் அதை மறுத்துவிட்டார் .அதுவும் அந்த மாகாணசபை குழம்ப ஒரு காரணமாகிவிட்டது .இன்று முகபுத்தகத்தில் பத்மநாதன் இறந்த செய்தி பார்க்கும்போது இந்த மாகாணசபை கவுன்சில் நினைவு வந்தது .

அதை அன்று ஏற்றிருந்தால் இந்தியன் ஆமியும் வந்திராது ,அதன் பிறகு நடந்த யுத்தங்களும் நடந்திராது இவ்வளவு அழிவுகளும் வந்திராது மக்களும் இறந்திருக்க மாட்டார்கள் .வடக்கு கிழக்கை புலிகளின் நிர்வாகமே நடத்தியிருக்கும் .

கெடு குடி சொற்கேளாது .

உண்மையில் உங்களுக்கு நன்றி  சொல்லணும்

நாங்க மறந்தாலும்

மாறினாலும்

நீங்க அவர்களையும் விடமாட்டீர்கள்

எங்களையும் விடமாட்டீர்கள்

எழுதிக்கொண்டே இருங்கள்

நாங்க தூங்கக்கூடாதல்லவா......

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

உண்மையில் உங்களுக்கு நன்றி  சொல்லணும்

நாங்க மறந்தாலும்

மாறினாலும்

நீங்க அவர்களையும் விடமாட்டீர்கள்

எங்களையும் விடமாட்டீர்கள்

எழுதிக்கொண்டே இருங்கள்

நாங்க தூங்கக்கூடாதல்லவா......

நாம் விதண்டவாதம் செய்ய வரவில்லை என்பதனை மீண்டும் மீண்டும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் பல தடவை இதில் வலியுறுத்தி வருகின்றேன்.

40 வருடத்துக்கு முன்னர் தோல்வியடைந்த கியூப விடுதலைப் போராட்டத்தின் தவறுகளை சரி செய்தே பிடல் காஸ்ட்ரோ வென்றார் என்கின்ற வரலாற்று  உண்மைகள் ஊடாக நாமும் அவ்வாறு மீள் எழுச்சி அடையலாம். ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் எம்மத்தியில் வராது என்றே தோன்றுகின்றது.

தவறுகளையே விடுதலைப் புலிகள் விடவில்லை என்று அல்லவா நீங்கள் இங்கே வாதிடுகின்றீர்கள். நாம் ஏன் சுயவிமர்சனம் செய்யக் கூடாது என்பதுதான் எனது கேள்வி.

உட்படுகொலைகளை பிற இயக்கங்கள் செய்யவில்லை என்று நான் எந்த இடத்திலும் மறுக்கவில்லை.

மாற்று இயக்கங்கள் காட்டிக் கொடுப்புக்களை செய்யவில்லை என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை. 

ஆகவே, எரிக்கின் பேட்டியின் பின்னராவது நாம் விட்ட தவறுகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

91 ஆம் ஆண்டு ஆனையிறவு மீட்புச் சமரில் தலைக்கு கீழே இயங்க முடியாத ஒரு போராளி புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு உதவி கேட்கின்ற நிலமைதான் தற்போது ஊரில் உள்ளது. அவரும் உதவி செய்து இருக்கின்றார்.

இவ்வாறு காயமடைந்து செயல் இழந்த போராளிகளுக்கு எத்தகைய வேலைத்திட்டங்களை புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செய்கின்றது? கேட்டால் நாம் எவ்வளவோ செய்கின்றோம் அதனை எல்லாம் உங்களுக்கு கூறிக்கொண்டு இருக்க முடியுமா?

தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டால் நாம் கணக்கு விபரங்களை கூறுவோம் என்பார்கள். இப்படி கூறியதனை நம்பி தொடர்பு கொண்ட எனது நண்பரை அவர்கள் மிரட்டியது தனிக்கதை.

 

தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைத்தது அவர்கள் நிம்மதியாக இருக்கும்போது நான் இப்படி ஒரு கருத்தை எழுதினால் அது மனோ வியாதிதான் ,

ஆனால் எவ்வளவு மக்கள் இழப்பு ,சொத்துகள் நாசம் இன்னமும் படங்களுடன் தொலைந்தவர்களை தேடி அலைபவர்களும் மீள் குடியேற்றத்திற்கு ஏங்கி அலைபவர்களும் எதுவித தீர்வும் கிடைக்காமல் அலையும் இனம் நடந்தவற்றை எப்படி மறக்க முடியும் .ஒவ்வொரு நிமிடமும் செய்திகள் வாசிக்கும் போது ஏற்படும் கோபத்திற்கு அளவேயில்லை .

இழந்தவர்களுக்கு தான் அந்த நினைப்பு .

போராட்டத்தை வைத்து உழைத்தவர்களுகும் போராட்டம் முடிந்த பின்பும் அதை வைத்து உழைப்பவர்களுக்கும்  இழப்புகளை பற்றி எப்படி அக்கறை வரும் .

கப்பல் அனுப்புவதற்கு பதிலாக போரை நிறுத்தி இருக்கலாமே , அதை செய்யாமல் இருந்து விட்டு தனது தவறுகளை மறைக்க இப்பொழுது புலியில் பிழை கண்டு பிடிக்குறார்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான், நோர்வே புலிகளை எதிர்த்துப் போரில் ஈடு பட்டிருந்ததால் சொல்கைம் போரை  நிறுத்தியிருந்திருக்கலாம் தான்! :rolleyes:

5 hours ago, arjun said:

தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைத்தது அவர்கள் நிம்மதியாக இருக்கும்போது நான் இப்படி ஒரு கருத்தை எழுதினால் அது மனோ வியாதிதான் ,

ஆனால் எவ்வளவு மக்கள் இழப்பு ,சொத்துகள் நாசம் இன்னமும் படங்களுடன் தொலைந்தவர்களை தேடி அலைபவர்களும் மீள் குடியேற்றத்திற்கு ஏங்கி அலைபவர்களும் எதுவித தீர்வும் கிடைக்காமல் அலையும் இனம் நடந்தவற்றை எப்படி மறக்க முடியும் .ஒவ்வொரு நிமிடமும் செய்திகள் வாசிக்கும் போது ஏற்படும் கோபத்திற்கு அளவேயில்லை .

இழந்தவர்களுக்கு தான் அந்த நினைப்பு .

போராட்டத்தை வைத்து உழைத்தவர்களுகும் போராட்டம் முடிந்த பின்பும் அதை வைத்து உழைப்பவர்களுக்கும்  இழப்புகளை பற்றி எப்படி அக்கறை வரும் .

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்: இன்னும் அதே பழைய பாதையில் "அடிக்கிறேன் பிளக்கிறேன்" என்று மிதவாதிகளை அச்சுறுத்தியவாறு போக முயற்சிக்கும் போதும் இவற்றைப் பேசாமல் இருக்க முடியாது!   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, arjun said:

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முன் பன்னிரண்டு பெயர்கள் கொண்ட மாகாண கவுன்சில் உருவாக்கபட்டது .இதில் புலிகள் எட்டு பெயர்களை உள்ளடக்க கூடியதாக இருந்தது .

அந்த கவுன்சிலுக்கு தலைவராக தெரிவு செய்ய மூன்று பெயர்கள் தரும்படி ஜே ஆர் புலிகளிடம் கேட்டிருந்தார் ஆனால் அந்த மூன்றில் ஒருவரை தான் தலைவராக தெரிவு செய்வேன் என்று .

பத்மநாதன் ,சிவஞானம் ,துரைராஜா இந்த மூன்று பெயர்களை புலிகள் கொடுத்தார்கள் ஜேஆர் சிவஞானத்தை தலைவராக அறிவித்தார் ஆனால் பின்னர் பத்மநாதனை தலைவராக மாற்றும் படி கேட்டார்கள் ஜே ஆர் அதை மறுத்துவிட்டார் .அதுவும் அந்த மாகாணசபை குழம்ப ஒரு காரணமாகிவிட்டது .இன்று முகபுத்தகத்தில் பத்மநாதன் இறந்த செய்தி பார்க்கும்போது இந்த மாகாணசபை கவுன்சில் நினைவு வந்தது .

அதை அன்று ஏற்றிருந்தால் இந்தியன் ஆமியும் வந்திராது ,அதன் பிறகு நடந்த யுத்தங்களும் நடந்திராது இவ்வளவு அழிவுகளும் வந்திராது மக்களும் இறந்திருக்க மாட்டார்கள் .வடக்கு கிழக்கை புலிகளின் நிர்வாகமே நடத்தியிருக்கும் .

கெடு குடி சொற்கேளாது .

தகவலுக்கு நன்றி அண்ணா. தகவலுக்கு நன்றி அண்ணா.தகவலுக்கு நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை உளவு பார்த்து.. அவர்களின் தந்திரோபாயங்களை தெரிந்து கொண்டு அதன் தலைமைத்துவக் கட்டமைப்பை சிதைக்க உதவியவர்களில் சொல்கைம் முக்கியமானவர். இவரை இன்னும் தமிழர்கள் நல்லவனுன்னு நம்பிறதுதான் கொடுமை. tw_angry:

இப்ப பழியை சிங்கள இராணுவம் மீது மட்டும் திணித்துவிட்டு தன்னை பாதுக்காக்க முனைகிறார் இவர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nirmalan said:



 

நான் இவ்வளவு நாளும் நம்பிகொண்டிருந்தேன் .தவறுதலாக அவ‌ர்களின் துப்பாக்கி வெடித்ததால் எல்லோரும் இறந்தவ‌ர்கள் என்று....எரிக் சொல்கைம் நல்ல மனிசன் உண்மை சொல்லி போட்டார்.........

இங்கு எழுதுபவ‌ர்கள் சொல்வது போன்று புலிகள் மகா தப்பு செய்திட்டார்கள் என்று வைத்து கொள்வோம்....மன்னிக்க முடியாத தப்பு என்றும் சொல்லுவோம்....சிங்கள் அரசியல் தலமைகள் எல்லோரும் நல்லவர்கள் என்றும் சொல்வோம்......புலிகள் அழிக்கப்பட்டு ஆறு வருடங்களாகி விட்டன ...அகிம்சை தலமைகளாகிய சமபந்தன்,சுமத்திரன்,விக்கியர்,மாவை எல்லோரும் இன்னும் பிரச்சனை இருக்கு என்று ஏன் குரல் கொடுக்கினம் ...சிங்களசிமான்கள் எதாவது கொடுத்திருக‌லாமே.

7 hours ago, Justin said:

முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள்: இன்னும் அதே பழைய பாதையில் "அடிக்கிறேன் பிளக்கிறேன்" என்று மிதவாதிகளை அச்சுறுத்தியவாறு போக முயற்சிக்கும் போதும் இவற்றைப் பேசாமல் இருக்க முடியாது!   

தயவு செய்து அப்பிடி அடிக்கிறன் பிளப்பவர்கள் யார் என்பதை அடையாளம்  காட்டி அவர்களுக்கு இதுகளை சொல்ல முயற்சி செய்யுங்கள்...  இந்த யாழ்களத்தில் நீண்ட காலமாக  நிறைய பேர் அரைச்ச மாவை அரைச்சு கொண்டு இருப்பதுக்கு  தங்களை போண்ற  உசுப்பேத்திகளே காரணம்..

கடந்த ஆறு வருடங்களாக திருப்பி திருப்பி ஒரே விசயத்தை பேசி நீங்கள் யாராவது ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதையாவது முதலில் சொல்லி போட்டு மீண்டும் வாங்கோ... 

 போர்தற் பாதுகாப்புக்காக தான் நிகழ்த்த பட்டது... 

இந்த போர் இல்லாத இந்த 6 வருடங்களில் நீங்கள் எல்லாம் என்ன வெட்டி முறித்தீர்கல்  என்பதை சொல்லி போட்டு விசயத்துக்கு வாங்கோ... 

 

3 hours ago, putthan said:

......புலிகள் அழிக்கப்பட்டு ஆறு வருடங்களாகி விட்டன ...அகிம்சை தலமைகளாகிய சமபந்தன்,சுமத்திரன்,விக்கியர்,மாவை எல்லோரும் இன்னும் பிரச்சனை இருக்கு என்று ஏன் குரல் கொடுக்கினம் ...சிங்களசிமான்கள் எதாவது கொடுத்திருக‌லாமே.

இப்படி எல்லாம் எடுத்து எறிந்து வெட்டும் குத்துவம் எண்று பேச கூடாது...  கிடைக்கும் சந்தர்பங்களை பயன் படுத்த அவர்கள் காத்து இருக்கிறார்கள்...  ஆனால் என்ன சந்தர்பங்கள் தான் வாய்க்காம இருக்கின்றன...   20 - 30 வருடங்களுக்குள்ளை அப்படி ஒரு சந்தர்ப்பம் நிச்சயமாக அமையும்... 

நம்பிக்கையோடை காத்திருங்கள்...  

  • கருத்துக்கள உறவுகள்

 பிரபாகரன் தட்டிக்களித்த சமஸ்டியை இப்ப தந்தால் அது அப்போ நடந்திருக்கும் என்று பிரபாகரனை குறை கூறலாம். அவன்ர நாடகத்துக்கு இவர் கட்டியம் கூறுகிறார். அரச சார்பற்ற நிறுவனங்களை வெளிஏறச்சொன்னவுடன் துண்டைக்காணோம், துணியைக்காணோம் எண்டு ஓடி ஒளிஞ்சவை சாதிச்சிருப்பினமாம். இவருக்கு சிங்களவனையும் தெரியேல, தமிழரின் அகிம்சை போராட்டமும் தெரியேல. அவர் ஏதோ சொல்லுறார். எல்லாம் முடிஞ்சுது. உதுகளின்ர அரட்டை இனி என்னத்தை சாதிக்கப்போகுது? நம்  இனத்தின் அழிவையும், இழப்பையும் ரசிக்க நம்மால மட்டும்தான் முடியுது. பாலுக்கு பூனையை காவல் வைச்சமாதிரி,  அமெரிக்காவையும், இந்தியாவையும் கூப்பிடுகிறார். ஒரு போர்க்குற்ற விசாரணைக்கே சம்மதிக்க வைக்க முடியேல, மற்றதெல்லாம் செய்து விழுத்தப் போகினம். இன்னும் இரண்டு வருடம் போக அரசு மாறிவிடும். அதுக்கு இரண்டு வருடம். இப்படியே காலம் போய் இனமும் அழிஞ்சு போகும். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nirmalan said:

நாம் விதண்டவாதம் செய்ய வரவில்லை என்பதனை மீண்டும் மீண்டும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் பல தடவை இதில் வலியுறுத்தி வருகின்றேன்.

40 வருடத்துக்கு முன்னர் தோல்வியடைந்த கியூப விடுதலைப் போராட்டத்தின் தவறுகளை சரி செய்தே பிடல் காஸ்ட்ரோ வென்றார் என்கின்ற வரலாற்று  உண்மைகள் ஊடாக நாமும் அவ்வாறு மீள் எழுச்சி அடையலாம். ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் எம்மத்தியில் வராது என்றே தோன்றுகின்றது.

தவறுகளையே விடுதலைப் புலிகள் விடவில்லை என்று அல்லவா நீங்கள் இங்கே வாதிடுகின்றீர்கள். நாம் ஏன் சுயவிமர்சனம் செய்யக் கூடாது என்பதுதான் எனது கேள்வி.

உட்படுகொலைகளை பிற இயக்கங்கள் செய்யவில்லை என்று நான் எந்த இடத்திலும் மறுக்கவில்லை.

மாற்று இயக்கங்கள் காட்டிக் கொடுப்புக்களை செய்யவில்லை என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை. 

ஆகவே, எரிக்கின் பேட்டியின் பின்னராவது நாம் விட்ட தவறுகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

91 ஆம் ஆண்டு ஆனையிறவு மீட்புச் சமரில் தலைக்கு கீழே இயங்க முடியாத ஒரு போராளி புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு உதவி கேட்கின்ற நிலமைதான் தற்போது ஊரில் உள்ளது. அவரும் உதவி செய்து இருக்கின்றார்.

இவ்வாறு காயமடைந்து செயல் இழந்த போராளிகளுக்கு எத்தகைய வேலைத்திட்டங்களை புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செய்கின்றது? கேட்டால் நாம் எவ்வளவோ செய்கின்றோம் அதனை எல்லாம் உங்களுக்கு கூறிக்கொண்டு இருக்க முடியுமா?

தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டால் நாம் கணக்கு விபரங்களை கூறுவோம் என்பார்கள். இப்படி கூறியதனை நம்பி தொடர்பு கொண்ட எனது நண்பரை அவர்கள் மிரட்டியது தனிக்கதை.

 

நிர்மலன்

உங்களது தற்போதைய  கருத்துக்கள் சார்ந்து  உடன்படாமை இருந்தாலும்

தோற்பதற்கு முன்னர் நீங்கள் எழுதிவற்றை

ஒத்துழைத்தவற்றை அறிவேன்.

அந்தவகையில் தோல்வியின் பின் எனக்கும் புலிகளுடனும் அதன் தலைமையுடனும் பிறழ்வு உண்டு

அதேநேரம்

புலிகள் தமிழரின் தாகத்துக்காகவே சகலதையும் செய்தார்கள். தமிழருக்கு ஒரு நிரந்தரத்தீர்வுக்கு உழைத்தார்கள்

உயிரைக்கொடுத்தார்கள் என்பதிலும்

சிங்களமோ இந்தியாவோ எதையும் தரமறுத்து

 எல்லாவற்றையும் தடுத்தது எம்மை அழித்தது என்பதிலும் நூறுவீதம் நம்பிக்கையுண்டு.

நீங்கள் பல விடயங்களை தாயக மக்களுக்கு செய்து வருகின்றீர்கள்

அதை தொடருங்கள்

ஒரு புள்ளியில் நிச்சயம் நாம் எல்லோரும் சந்திப்போம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கப்பலில் எல்லாப் போராளிகளையும்,தலைவர் உட்பட‌ ஏத்தி ஓரேயடியாய் கடலில் வைத்து மூழ்கடித்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியில்  எரிக் சொல்கைமின் பூசி மெழுகல்கள் நன்றாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

29 minutes ago, ரதி said:

ஒரு கப்பலில் எல்லாப் போராளிகளையும்,தலைவர் உட்பட‌ ஏத்தி ஓரேயடியாய் கடலில் வைத்து மூழ்கடித்திருப்பார்கள்

அப்பவும்  காவித்திரிவோம்

முட்டாள்கள்

கூப்பிட்டதும் ஓடிப்போய் ஏறிவிட்டார்கள் என்று...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

பேட்டியில்  எரிக் சொல்கைமின் பூசி மெழுகல்கள் நன்றாகவே தெரிகிறது.

ஆனால் சொல்ஹேய்ம் பல உண்மைகளையும்  சொல்லியிருக்கிறார் என்பதனையும் ஈசியா மறந்துவிடக் கூடாது நுணா!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

பேட்டியில்  எரிக் சொல்கைமின் பூசி மெழுகல்கள் நன்றாகவே தெரிகிறது.

எரிக் சொல்கை  இலங்கையில் தமிழர் பிரச்சினையை தீர்க்கவந்த சமாதான தூதுவர் அன்று

அவரது நோக்கம் வேறு

எந்த முடிவையும் எடுக்கும் வலுவோ

அல்லது சுயமாக செயற்படும் தன்மையோ இவருக்கு இல்லை என்பதைவிட

அதை வேறு இடத்தில் வைத்திருந்தார்கள் என்பதை

ஒவ்வொரு சந்திப்புக்கள் மாநாடுகளுக்கும் பின்னால் இவர் இந்தியாவுக்கு செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்ததைப்பார்த்தால் புரியும்

அதன்படி முடிவுகளை எடுக்கும் நிலையிலிருந்தவர்கள் யார் என்பதும் புரியும்

அப்படி முடிவுகளை எடுக்கும் நிலையிலிருந்தவர்களால் தான் 

இவரது கப்பலும் தடுக்கப்பட்டதும்

போரை அவசரமாக முடிக்க உத்தரவுகள் கொழும்பிலிருந்தவாறே முடக்கவிடப்பட்டதும்

அழிவுகளை கணக்கிலெடுக்கக்கூட தேவையில்லை என்றவாறு போருக்கு பக்கபலமாக நின்றதும்

நாம் கண்ணால் கண்ட வரலாறு.

இதை தற்பொழுது எரிக் சொல்கை 

தன்னை பரிசுத்தனாக்க கதை வசனம் எழுதுவதையும்

அதை எம்மவர் சிலர் நம்புவதைத்தான் 

இனி அதிகம் நாம் திரைப்படமாக பார்க்கலாம்...

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்கைம் பூசி மெழுக வேண்டிய அல்லது தன்னைப் பரிசுத்தனாக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று யாராவது சொல்லுங்கள். இந்த அவசியத்தை வைத்துக் கொண்டே அவரது கருத்துகளின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பது  என் அபிப்பிராயம்.

அவர் தமிழர்களிடம் எதிர்காலத்தில் வாக்குக் கேட்டு வரப் போகிறாரா? அல்லது அவரை யாராவது நீதி மன்றுக்கு இழுக்கப் போகிறார்களா? எனக்கு இது இரண்டும் நடக்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னொன்று: எதிர்காலத்தில் சொல்கைம் சொல்லும் தரவுகளை வன்னியில் இருந்த யாராவது உள்வீட்டு நபர் உறுதி செய்தால் அப்போதும் அவரைக் கூலி என்று திட்டி விட்டு எம் வேலையைத் தொடர்வோம்!

ஆக மொத்தத்தில் ஒருவர் சொல்வதை அப்படியே நம்ப வேண்டியதில்லை, ஆனால் உடனடியாக தரவுகள் பொய், பூசிமெழுகல் என்று சொல்வதை நாம் தவிர்க்க வேண்டும்! இதுவே என் கருத்து.

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது உண்டியல் குலுக்கியவர்களுக்கு இந்தியா என்னசெய்தது ,நோர்வே என்ன செய்தது என்று சிறிதளவேனும் தெரிந்திருந்தால் இப்படி விளங்காத வியாக்கியானங்கள் வராது .

சிங்கள அரசு எதுவும் தராது என்று சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கலாம் அதைவிட்டு எவ்வளவோ சிக்கல்களுக்கு இடையில் இலங்கை அரசையும் தமிழர் தரப்பையும் இழுத்துக்கொண்டு வந்து மேசையில் அமர்த்தி ஒரு தீர்வை கொண்டுவரலாம் என்றால் அத்தனையையும் குழப்பியடித்தது பிரபாகரன் என்ற தனி மனிதனே .

இலங்கை -இந்திய  ஒப்பந்த காலத்தில் இலங்கை அரசை மேசைக்கு கொண்டுவர இந்தியா பட்ட பாடு சொல்லிமாளாது .ஒருவாறு அவர்களை வெருட்டி மேசைக்கு கொண்டுவந்தாச்சு அனைத்து தமிழர்கள் தரப்புகளும் தலையை ஆட்டிவிட்டன பிரபாகரன் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று ஒற்றைகாலில் நின்றார் .ஜே ஆரை விட பிரபாவுடன் பின்னர் நேரத்தை செலவழித்தது ஆனால் ஒரேயடியாக மறுத்துவிட்டார் .

அதன் பிறகுதான் இந்தியா -புலிகள் பிளவு வந்தது .இந்தியன் ஆமி வந்தது ,பிரபாவை பிடிக்க முயன்றது யுத்தம் தொடங்கியது இந்திய இராணுவத்தின் அராஜகம் எல்லாம் அதன் பின்னர் தான் நடந்தது .

எரிக் சொல்வது அத்தனையும் உண்மை அதுவும் குறிப்பாக குறிப்பாக சமஸ்டியை ஏற்க மறுத்தது .

எரிக் சூல்ஹெய்ம் நல்லவரா? கெட்டவரா? சட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

41 minutes ago, ஜீவன் சிவா said:

எரிக் சூல்ஹெய்ம் நல்லவரா? கெட்டவரா? சட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

எரிக் நல்லவரா கெட்டவரா என்பதல்ல இங்கு விவாதம். யாழ் களத்தில் உள்ள இரண்டு எதிர் கோஷ்டிகளுக்கும் ஒருவரை ஒருவர் வசைபாட ஏதோ ஒரு தலைப்பு தேவை. இன்டைக்கு எரிக் கிடைத்துள்ளார். நாளைக்கு எவரோ கிடைப்பார். 

எரிக் , தான் செய்த நரி தனத்தால எவ்வளவாயிரம் மக்கள் இறந்துள்ளார்கள் என்ற கவலை இல்லாமல் இப்ப உளற , அவர் எதோ சமாதன தெய்வம் மாதிரி இங்க கொஞ்ச கொசுறுகளின் தொல்லை தாங்க முடியல ..

எப்பதான் அறிவு வந்து நாட்டு பிரச்ச்னைகள் உங்களுக்கு புரிய போகுது ...எரிக் என்ன செய்தார் எனற சின்ன அறிவு கூட இல்லாமல் ...அவரை சரி என்று சொல்லும் ....வேண்டாம் ....

Edited by நியானி
ஒருமையில் விளித்தது திருத்தப்பட்டுள்ளது

1 hour ago, arjun said:

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது உண்டியல் குலுக்கியவர்களுக்கு இந்தியா என்னசெய்தது ,நோர்வே என்ன செய்தது என்று சிறிதளவேனும் தெரிந்திருந்தால் இப்படி விளங்காத வியாக்கியானங்கள் வராது .

சிங்கள அரசு எதுவும் தராது என்று சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கலாம் அதைவிட்டு எவ்வளவோ சிக்கல்களுக்கு இடையில் இலங்கை அரசையும் தமிழர் தரப்பையும் இழுத்துக்கொண்டு வந்து மேசையில் அமர்த்தி ஒரு தீர்வை கொண்டுவரலாம் என்றால் அத்தனையையும் குழப்பியடித்தது பிரபாகரன் என்ற தனி மனிதனே .

இலங்கை -இந்திய  ஒப்பந்த காலத்தில் இலங்கை அரசை மேசைக்கு கொண்டுவர இந்தியா பட்ட பாடு சொல்லிமாளாது .ஒருவாறு அவர்களை வெருட்டி மேசைக்கு கொண்டுவந்தாச்சு அனைத்து தமிழர்கள் தரப்புகளும் தலையை ஆட்டிவிட்டன பிரபாகரன் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று ஒற்றைகாலில் நின்றார் .ஜே ஆரை விட பிரபாவுடன் பின்னர் நேரத்தை செலவழித்தது ஆனால் ஒரேயடியாக மறுத்துவிட்டார் .

அதன் பிறகுதான் இந்தியா -புலிகள் பிளவு வந்தது .இந்தியன் ஆமி வந்தது ,பிரபாவை பிடிக்க முயன்றது யுத்தம் தொடங்கியது இந்திய இராணுவத்தின் அராஜகம் எல்லாம் அதன் பின்னர் தான் நடந்தது .

எரிக் சொல்வது அத்தனையும் உண்மை அதுவும் குறிப்பாக குறிப்பாக சமஸ்டியை ஏற்க மறுத்தது .

அப்படி அர்ப்பணிப்பான இந்தியா எதுக்காக ஈழ போராளுகளுக்கு ஆயுதங்களும் பயிற்ச்சியும் வளங்கியது...?   தவிர PLOTE இனருக்கு வந்த ஆயுதக்கப்பலை பிடித்து  தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் ஏன் கொடுத்தது...  

ஐந்து அம்ச கோரிக்கையை முன்னிருத்தி உண்ணாவிரதம் இருந்த திலீபன் அண்ணாவுக்கு ஏன் ஒரு உறுதியை கூட கொடுக்க முன்வரவில்லை...??    அந்த கோரிக்கைகளில் எவை இந்தியா புலிகள் காலத்தில்  நிறைவேற்றப்பட்டன...?

அவ்வளவு அர்ப்பணிப்பான இந்தியா ஈழத்தில் எதுக்காக தமிழர்களை கொண்று குவித்தது...   இதுக்கு எல்லாம் முதலில் பதில் சொன்னால் ....   எரிக் பற்றி பேசலாம்...

இந்த  பேட்டியில் சொல்கைம்  தனது பொறுப்பு கூறலில் இருந்து நழுவும் போக்கையே கடைப்பிடித்து இருக்கிறார்..  இது இந்த பேட்டியில் அவரே சொன்னது போல அவரின் சொந்த கருத்து நோர்வே எனும் நாட்டினது கருத்தும் இல்லை... 

எல்லா நாட்டுக்கும் அவர்களுக்கான நலன்கள்  அதுக்கு ஏதுவாக மற்றவர்களை வளைக்க நினைப்பதை..  அதை நியாய படுத்த நிற்க்கும் கூட்டம் உலகில் அதிகம்...   இவர்களை இன விரோதிகள் என்பர்...

 

Edited by காத்து
இலக்கணம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.