Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!!

Featured Replies

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!!

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படையணி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று முல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இறுதியுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் 58ஆவது படையணியின் முகாமில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அரசு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் சரணடைந்தவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலைமை காணப்படுகின்றது.

இதேவேளை வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னுடைய கணவரான எழிலன் எனப்படும் சசிதரன் தொடர்பில் காணாமல் போகச் செய்யப்பட்மை குறித்தத வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகிறது.

இதேவேளை இராணுவத்தின் சார்பில் ஆஜரான மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன சரணடைந்தவர்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் 58ஆவது படையணியிடம் இல்லை என கூறியுள்ளார்.

யுத்தத்தின்போது சரணடைந்த அனைவரது பெயர் விபரங்களும் 58ஆவது படையணியிடம் உள்ளதாக தெரிவித்த சாணக்கிய குணர்வத்தன வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விபரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவேணத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட முல்லை மாவட்ட நீதிபதி  எம்.எஸ்.எம்.சம்சுதீன் வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129087/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை இராணுவம் ஒப்படைக்க வேண்டும்! முல்லை நீதிமன்றம்!!

என்னப்பா இது!!!!!!

கோத்தா வேறை ஒருமாதிரி கதைக்கிறார்......மாலினி பொன்சேகா சொறி சரத் பொன்சேகா இன்னொருமாதிரி கதைக்கிறார்.....மைத்திரி எல்லாம் வெல்லலாம் எண்டுறார்.....சம்சும் கொம்பனி ஒல்லாந்தர் காலத்துக்கு சிலோமோசன் றிவைனிலை போகுது......புது றோட்டும் கரண்டும் தமிழர் பிரச்சனைக்கு முடிவில்லையெண்டு கிழக்கு பக்கத்திலையிருந்து சவுண்டு வேறை வருது....என்னப்பா அங்கை நடக்குது?????

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம். இந்த விபரங்களை வெளியிட்டால் முள்ளிவாய்க்கால் வெண்கொடி வேந்தர்களின் சரணடைந்து சுட்டுக்கொல்லப்பட்ட இன்னொரு குறூப்பின் விபரங்கள் வெளிவரும். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

இதுவும் கட‌ந்து போகும் என்று சொல்லி மனதை சமாதானப்படுத்துங்கோ  இல்லையென்றால் எங்களுக்குத்தான் பிரசர் கூடும்:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, வாலி said:

நல்லவிடயம். இந்த விபரங்களை வெளியிட்டால் முள்ளிவாய்க்கால் வெண்கொடி வேந்தர்களின் சரணடைந்து சுட்டுக்கொல்லப்பட்ட இன்னொரு குறூப்பின் விபரங்கள் வெளிவரும். 

நண்டுக்கதை தெரியுமெண்டு நினைக்கிறன்......tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி காணாமல் போறாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நீதிபதி காணாமல் போறாரோ தெரியாது.

யாருடைய தலையில் கட்டுவது......??

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாலி said:

நல்லவிடயம். இந்த விபரங்களை வெளியிட்டால் முள்ளிவாய்க்கால் வெண்கொடி வேந்தர்களின் சரணடைந்து சுட்டுக்கொல்லப்பட்ட இன்னொரு குறூப்பின் விபரங்கள் வெளிவரும். 

வாலி,எனக்கு 'வெண்கொடி வேந்தர்கள் ' என்ற சொல்லுக்கான சரியான விளக்கத்தை தரமுடியுமா ...உங்களுக்கு உள்ள என்ன தகுதியின் அடிப்படையில் இச்சொல்லை அடிக்கடி பாவிக்கின்றீகள்.

,Wjp Aj;jj;jpy; ruzile;J fhzhkw; NghNdhu; tpguq;fs; jk;kplk; ,Ug;gjhf ,uhZtk; xg;Gf; nfhz;Ls;snjd mde;jp $wpapUf;fpwhu;.

,r; nra;jp cz;ikahdhy; muRk; ,uhZtKk; ahiuNah khl;btplg; NghfpwJ. mNdfkhfg; goa

Ml;rpahsuhfj;jhdpUf;Fk;.

சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான பட்டியல் தம்மிடம் இருப்பதாக 58ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளமை முதன்முதலாக நடைபெற்ற சம்பவம். இது மகிழ்ச்சியைத் தருகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் சின்னத்துரை சசிதரன் (எழிலன்) உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது, நீதிமன்றத்தில் 58ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மன்றில் ஆஜராகி, சரணடைந்தவர்களின் பெயர் விவரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ஆனால், மனுத்தாக்கலில் உள்ளவர்களின் பெயர்கள் இல்லையெனக் கூறினார். இதன்போது, அந்தப் பட்டியலை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பில் அனந்தி கருத்துத் தெரிவிக்கையில், காணாமற்போனோர் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தோம். அந்த அடிப்படையில், சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் பெயர் பட்டியல் இருப்பதை இராணுவம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. பட்டியல் கொண்டு வருவதற்கு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையால், மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் வரும் என்ற அச்சமும் உள்ளது. எனக்கு நீதி கிடைக்காவிட்டாலும், காணாமற்போன மற்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்காக இறுதி வரையில் நான் பாடுபடுவேன் என்றார்.

http://www.whathits.com/seithy

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

வாலி,எனக்கு 'வெண்கொடி வேந்தர்கள் ' என்ற சொல்லுக்கான சரியான விளக்கத்தை தரமுடியுமா ...உங்களுக்கு உள்ள என்ன தகுதியின் அடிப்படையில் இச்சொல்லை அடிக்கடி பாவிக்கின்றீகள்.

ஏன் இதுக்கும் கம்பஸில பட்டம் எடுத்து வரவேண்டுமோ?. கடைசி வரை பிள்ளைபிடித்து விட்டு வெண்கொடி ஏந்திய அரசியல் பிரிவினரே வெண்கொடிவேந்தர்கள்! போர்க்களத்தில் இறுதிவரை போராடிய மாவீரர்களுக்கு எப்போதும் என் மரியாதை இருக்கும்.

4 hours ago, வாலி said:

ஏன் இதுக்கும் கம்பஸில பட்டம் எடுத்து வரவேண்டுமோ?. கடைசி வரை பிள்ளைபிடித்து விட்டு வெண்கொடி ஏந்திய அரசியல் பிரிவினரே வெண்கொடிவேந்தர்கள்! போர்க்களத்தில் இறுதிவரை போராடிய மாவீரர்களுக்கு எப்போதும் என் மரியாதை இருக்கும்.

விளக்கமில்லாமல் கருத்து தெரிவிக்கும் நபர்கள் இருப்பதுதான் இன்னும் வேதனை யாக உள்ளது ....அரசியல் பிரிவினர்கள் களும் ஆயுதம் ஏந்தியவர்களே ....இதனை மறந்து நொண்டிகதை சொல்ல வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

ஏன் இதுக்கும் கம்பஸில பட்டம் எடுத்து வரவேண்டுமோ?. கடைசி வரை பிள்ளைபிடித்து விட்டு வெண்கொடி ஏந்திய அரசியல் பிரிவினரே வெண்கொடிவேந்தர்கள்! போர்க்களத்தில் இறுதிவரை போராடிய மாவீரர்களுக்கு எப்போதும் என் மரியாதை இருக்கும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் மாதிரி வேஷம் போடுபவர்களை தோலுரிக்கவேண்டும் என்று அவர்கள் மீது விமர்சனம் வைத்தீர்கள். இப்போது புலிகளின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள் மீது சேறு பூசுகின்றீர்கள். அதற்கு அவர்கள் பிள்ளை பிடிகாரர் என்று குற்றச்சாட்டு வேறு.

புலிகளின் அரசியல் பிரிவு ஒன்றும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவில்லை. எல்லாமே தலைமைப் பீடத்தால் எடுக்கப்பட்டவைதான். கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்ததுதான் அவர்கள் வேலை. அப்படியான வேளைகளில் சிலர் தவறுகள் விட்டிருக்கலாம். தவறுகள் செய்த புலிகளை சுட்டுக் கொன்று தண்டனைகொடுத்த புலிகளைப் பற்றி யாரும் கதைப்பதில்லை என்று அண்மையில் ஒரு கூட்டத்தில் சொன்னார்கள். அதையும் நினைவில் அடிக்கடி வைத்திருக்கவேண்டும்.

மேலும், அரசியல் பிரிவினர் தாமாகச் சரணடையவில்லை. காயமடைந்த போராளிகளையும், பொதுமக்களையும், புலிகளின் குடும்பத்தாரையும் சிங்களவர்களால் அழிக்கப்படாமல் பாதுகாக்க எடுத்த இறுதி முயற்சியாகவே இந்த சரணடைவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டது. அதனை விரும்பாத சிலர் குப்பி அடித்து இறந்திருந்தனர். எதிரி மோசமாக நடாத்துவான் என்று தெரிந்திருந்தும் விருப்பமில்லாமல் சரணடைந்து சிங்களப் படைகளால் நிர்வாணமாக்கப்பட்டு, சொல்லவொண்ணாத துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு கொல்லப்பட்டவர்களை வெண்கொடி வேந்தர்கள் என்று சொல்லுவது மிகவும் இழிவான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் சரணடைந்தவர்களைக் கொல்வதில்லை என்று ஐ. நா வினால் பிரகடணப் படுத்தப்பட்ட சட்டம் இருக்கிறது. ஐ. நா வின் மேற்பார்வையில், இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர், பசில் ராஜபக்‌ஷ என்று பலருக்கும் அறிவிக்கப்பட்டு, அவர்களுடன் இணக்கத்துடன் வெள்ளைக்கொடி ஏந்திச் சரணடைந்தவர்கள் நூற்றுக்கணக்கில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வன்னியின் கொலைக் களங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சிங்கள ராணுவம் எக்காளச் சிரிப்புடன் மிருகங்களைப்போல பிடரியில் இயந்திரத் துப்பாக்கி கொண்டு அரைநிர்வாணப்படுத்திய போர்க் கைதிகளை நரவேட்டையாடிய அநியாயத்தைப் பார்த்தோம். இதைக் கண்டிப்பதை விடுத்து சரணடைந்தவர்களை "வெள்ளைக் கொடி ஏந்திய வேந்தர்கள்" என்று நீங்கள் எள்ளி நகையாடுவது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலே தவிர வேறொன்றுமாக இருக்கமுடியாது. சொல்வதையும் சொல்லிவிட்டு, நான் மாவீரர்களை மதிக்கிறேன், அரசியல்ப் பிரிவினரை வெறுக்கிறேன் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்கள். 

புலிகள் யாராக இருந்தாலும், அவர்கள் எப்படி இறந்தாலும் நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் ஆளில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் அழிக்கப்பட்டதில் உங்களிக்கிருக்கும் மகிழ்ச்சியை நான் இங்கே பலமுறை பார்த்திருக்கிறேன். ஆக, நீங்கள் அரசியல் , ராணுவப் பிரிவி என்று பிரித்துப் பார்த்து மகிழத் தேவையில்லை.

புலிகள் பலருக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தபோதிலும், இன்னும் பலருக்கு அழிக்கப்படவேண்டியவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரே சமயத்தில் விரும்பப்படுவதற்கும், வெறுக்கப்படுவதற்கும் அவர்கள் 2009 மே வரை நடந்துகொண்ட முறையே காரணம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று உங்களிருக்கும் காரணம் உங்களைப் பொறுத்தவரையிலும், இன்னும் உங்கள் போன்றே கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களின் பார்வையிலும் நியாயமாக இருக்கலாம். அதில் தவறில்லை. 

என்னைப் பொறுத்தவரை, அவர்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போதும் நம்புகிறேன். எமது இனத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்தவர்கள் அழிக்கப்பட்டது இன்னும் ஜீரணிக்கமுடியாத வேதனை. எனது தம்பி இறந்தபோது இல்லாத வேதனை புலிகளியக்கம் அழிக்கப்பட்டபோது தெரிந்தது, வலித்தது. பலதவறுகளை விட்டார்கள். சகோதரப் படுகொலை, கட்டாய ஆட்சேர்ப்பு, வேற்றினத்தவர் மீதான தாக்குதல்கள், வரி...இப்படிப் பல, ஆனாலும் அவர்களது போராட்டத்தின் நியாயமே என்போன்ற பலரைத் தொடர்ந்தும் அவர்களை ஆதரிக்க வைத்தது.

இறுதியாக, எவர் வாழவேண்டும், எவர் இறக்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் முடிவு எமது கைகளில் இருக்கக் கூடாது. எல்லோரையும் குப்பியைக் கடியுங்கள் என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை. அது, அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. கிருபன் மேலே சொன்னதுபோல, சிங்களவனிடம் பிடிபட்டால் நடைபெறும் சாவு எப்படிப் பட்டது என்று தெரிந்தும் அவர்கள் சரண்டைந்தார்கள் என்றால், 100 இல் ஒரு வீதமாவது தப்பிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காதா என்கிற நப்பாசையில், வாழவேண்டும் என்று இறுதிநேரத்தில் வரும் ஆசையில். அதைக் கேவலப்படுத்த வேண்டாம் என்று உங்களிடம் கேட்பதற்காக இதை எழுதுகிறேன். 

இதை எழுதியது உங்களுடன் வாக்குவாதப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களின் கருத்தில் காணப்பட்ட ஏளனம் வருத்தத்தைத் தந்தது, அவ்வளவுதான். 

உங்களின் கருத்து உங்களைப் பொறுத்தவரையில் நியாயமானது. அதில் தவறில்லை. 

கிருபன் ,ரகு இருவரினது கருத்துக்களும் முழுவதும் உண்மை ,

ஆரம்பத்தில் இருந்து எனது நிலை போராட போன சொந்த சகோதரர்களையே டயர் போட்டு கொழுத்தியவர்கள் புலிகள் அப்போது அவர்களுக்கு கோக் கொடுத்தவர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் . 

அந்த செயல்களையெல்லாம் ஆதரித்துவிட்டு பிறகு அரசாங்கம் செய்த அநியாயங்களை உலகிற்கு சொல்லி கத்த இவர்களுக்கு எந்த வித அருகதையும்  இல்லை .

எப்போதும் எவர் செய்தாலென்ன அநியாயத்திற்கும் அராஜகத்திற்கும் எதிர் குரல் கொடுப்பவர்களுக்கு  மட்டுமே அந்த உரிமை இருக்கு .

புலிகள் மேல் பொதுமக்கள் மேல் இலங்கை அரசு செய்தது பாரதூரமான போர்குற்றங்கள் அவ்வளவும் சர்வதேசத்தின் முன் அடிப்பட்டு போனதிற்கு ஒரே காரணம் அரசை விட புலிகள் மோசமானவர்கள் என்பதுதான் .

வாலியின் கருத்து சற்று காட்டமாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் தமக்கு என்று வந்தபோது தமது உயிரை காக்கமுனைந்தவர்கள் தான் .பொதுமக்கள் ,காயமடைந்த போராளிகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு வெறும் கவசம் ,அவர்களை காப்பாற்றத்தான் சரணடைதல் என்ற நாடகம் சர்வதேசத்திடம் பலிக்காது .

புலிகள் அழியவேண்டியது காலத்தின் கட்டாயம் அழிந்திருக்காவிட்டால் கடந்த ஏழு வருடங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கும் எங்கள் மக்களுக்கு என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கு .

முள்ளிவாய்கால் அழிவிற்கு முதன் நாளும் அவர்களிடம்  இருந்து தப்பி ஓட முனைந்த பொதுமக்களை புலிகள் செய்த அநியாங்கள் எல்லாம்  இப்பவும் கண்ணிற்குள் நிற்கின்றது.

எந்த பொய்யும் புலிகளின் மீது  மனிதாபிமானிகளுக்கு துளியளவும் அனுதாபத்தை கொண்டுவராது  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, arjun said:

முள்ளிவாய்கால் அழிவிற்கு முதன் நாளும் அவர்களிடம்  இருந்து தப்பி ஓட முனைந்த பொதுமக்களை புலிகள் செய்த அநியாங்கள் எல்லாம்  இப்பவும் கண்ணிற்குள் நிற்கின்றது.

குப்பை கொட்டுவது கனடாவில்.......கருத்துக்களை பார்த்தால் எல்லாவற்றையும் நேரில் இருந்து பார்த்த மாதிரி. பீப்...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் மாதிரி வேஷம் போடுபவர்களை தோலுரிக்கவேண்டும் என்று அவர்கள் மீது விமர்சனம் வைத்தீர்கள். இப்போது புலிகளின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள் மீது சேறு பூசுகின்றீர்கள். அதற்கு அவர்கள் பிள்ளை பிடிகாரர் என்று குற்றச்சாட்டு வேறு.

புலிகளின் அரசியல் பிரிவு ஒன்றும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கவில்லை. எல்லாமே தலைமைப் பீடத்தால் எடுக்கப்பட்டவைதான். கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்ததுதான் அவர்கள் வேலை. அப்படியான வேளைகளில் சிலர் தவறுகள் விட்டிருக்கலாம். தவறுகள் செய்த புலிகளை சுட்டுக் கொன்று தண்டனைகொடுத்த புலிகளைப் பற்றி யாரும் கதைப்பதில்லை என்று அண்மையில் ஒரு கூட்டத்தில் சொன்னார்கள். அதையும் நினைவில் அடிக்கடி வைத்திருக்கவேண்டும்.

மேலும், அரசியல் பிரிவினர் தாமாகச் சரணடையவில்லை. காயமடைந்த போராளிகளையும், பொதுமக்களையும், புலிகளின் குடும்பத்தாரையும் சிங்களவர்களால் அழிக்கப்படாமல் பாதுகாக்க எடுத்த இறுதி முயற்சியாகவே இந்த சரணடைவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டது. அதனை விரும்பாத சிலர் குப்பி அடித்து இறந்திருந்தனர். எதிரி மோசமாக நடாத்துவான் என்று தெரிந்திருந்தும் விருப்பமில்லாமல் சரணடைந்து சிங்களப் படைகளால் நிர்வாணமாக்கப்பட்டு, சொல்லவொண்ணாத துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு கொல்லப்பட்டவர்களை வெண்கொடி வேந்தர்கள் என்று சொல்லுவது மிகவும் இழிவான கருத்து.

புலிவால்களின் வேடத்தினைக் கலைக்க எந்தச் சிகரத்துக்கும் போவேன் என்று சொன்னதை வசதியாக மறந்துவிட்டீர்கள். புலிவால்கள் புலிகள் செய்த தியாகங்களை வைத்து குளிர்காய்கிறார்கள்.  அவர்களின் தோலுரிக்க புலிகள் செய்த தவறுகளையும் போட்டு உடைக்கவேண்டியிருக்கின்றது. புலிகள் பிள்ளைபிடிகாரர்கள் என்பது உலகறிந்த விடயம்.

புலிகளின் அரசியல் பிரிவு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கவில்லை தலைமைதான் முடிவுகள் எடுத்தது என்றால், கொடுக்கப்பட்டது வேலைதான் செய்யப்பட்டது என்றால் அங்கே மூளைச்சலவை என்ற பிரச்சினை எழுகின்றது. சிலர் தவறுகள் விட்டிருக்கலாம் என்று பட்டும் படாமலும் சொல்லுவதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லையா!  பொதுமக்களுக்கு எதிராக அல்லது மாற்று இயக்கங்களுக்கு எதிராக பயங்கரம் புரிந்த புலிகளை புலிகளே சுட்டுகொன்ற வரலாறு உள்ளதா? மாத்தையாவை புலிகளின் தலைவர் சந்தேகத்ததினால் சுட்டுக்கொன்றார் அது அவர்கள் உள்வீட்டுப் பிரச்சினை. அப்படி புலிகள் கொடுத்த மரண தண்டனைகளை எடுத்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அரசியல் பிரிவினர் தங்கள் தலைமை எடுக்கும் முடிவுகளையே செயற்படுத்துபவர்கள் என நீங்கள் சொல்வதால் இனி புலிகள் என்றே சொல்லாம். புலிகளின் தலைமை முதலில் தான் தப்புவதற்குத்தான் மக்களைப் பணயமாக வைத்திருந்தது. கடைசிநேரம் வரை மக்களை வெளியேற புலிகள் அனுமத்திக்கவில்லை, அப்படி அனுமதித்திருந்தால், மக்கள் எப்போதோ வெளியேறியிருப்பார்கள். புலிகளும் இராணுவமும் தங்கள் பலப்பரீட்சையை நடத்தியிருக்கலாம். கடைசிவரை அதாவது சரணடைய 2 வாரங்களுக்கு முன்னரும் பிள்ளைபிடி செய்தார்கள். இதுவா மக்களின் போராட்டம்? புலிகளின் தலைமை அமெரிக்க கப்பலை எதிர்பார்த்து இருந்தது, அதுவரை மக்களை சிங்களவன் கொன்றழித்தால் பரவாயில்லை. அது கைகூடமல் போகவே இறுதி நப்பாசையில் இந்திய தேர்தல் முடிவுகளில் மாற்றம் கண்டால் தலைமையை காப்பற்றலாம் என நினத்தனர். அதுவரை மக்கள் இறந்தால் பரவாயில்லை. கடைசியில் பிள்ளை பிடித்த்தவர்களே சரணடைந்தார்கள். வாழ்வதற்கு எல்லோருக்கும் ஆசை மட்டுமல்ல உரிமையும் இருக்கின்றது. அதை புலிகள் மற்றவர்கள் விடயத்திலொரு பொருட்டாகவே கருதியது இல்லை. அடுத்தவன் பிள்ளைகளை பிடித்து சமர்க்களம் அனுப்பிவிட்டு தாங்கள் சரணடைவது என்பது கேவலம். எழிலன் போன்றவர்கள் இறுதிவரை போராடியிருக்கலாமே! 

நான் இங்கு புலிகளின் ஒத்தோடிகளான நிலாந்தன், யதீந்திரா, சிவா சின்னப்பொடி போன்றோரின் பத்தி எழுத்துகளை வைத்து கருத்தெழுதுபவன் கிடையாது கிருபன் ஸார். வன்னி அவலத்தின் போது எமது மக்களை நேரடியாக ZOA என்ற தொண்டர் நிறுவனத்துடன் இணைந்து போர் நடைபெற்ற கலங்களில் சந்தித்த அனுபவத்தை, மக்கள் சொன்னதை வைத்து எழுதுகின்றேன். எவர் என்னசொன்னாலும் எனக்கு அக்கறை கிடையாது. எமது மக்கள் வாழவேண்டும். சும்மா புலிப்படம் காட்டி என்னாலும் வாழ்ந்து விட முடியும். மனச்சாட்சி என்பதை புறம்பே வைத்துவிட்டு என்னால் வாழமுடியாது.

மக்கள் அழிந்ததும் துன்புற்றதும் புலிவால்களுக்கு(ம் உங்களுக்கும்) கவலையில்லை, புலிகளும் தலைமையும் அழிந்ததுதான் கவலை. அதற்காகத்தான் போர்க்குற்றம், விசாரனை என மகிந்த தரப்பையும் இராணுவத்தியும் பழிவாங்கத் துடிக்கிறார்கள். அப்படி உண்மையான துடிப்பு இருந்திருக்குமானால் இன்று முன்னாள் போராளிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் அய்ந்துக்கு  பத்துக்கும் கையேந்தும் நிலை இருக்காது. சுருட்டிய பணம் அவ்வளவும் கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழினி ஜெயக்குமரனின் நிலை பலருக்கும் வந்திருக்காது. ஊர்ச்சங்கங்கள் பணம் சேர்த்து கோயில் கட்டம் மதில் கட்டத்தான் சரி. நாங்களும் செய்கிறோம் என ஓரிரு உதவிகள் செய்யப்படும். வெட்டிப் பந்தாவுக்கு மட்டும் குறைவிருக்காது.  அடக்குமுறைக்குள்ளாகும் மக்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். அதற்கு புலிகள்தான் வேண்டுமென்பதில்லை.  

Edited by வாலி

56 minutes ago, குமாரசாமி said:

குப்பை கொட்டுவது கனடாவில்.......கருத்துக்களை பார்த்தால் எல்லாவற்றையும் நேரில் இருந்து பார்த்த மாதிரி. பீப்...

நேருக்கு நேர் நின்றவர்கள் மட்டும் தான் கருத்து எழுதலாம் என்றால்  இலங்கை அரசாங்கம் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றாகிவிடும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, arjun said:

நேருக்கு நேர் நின்றவர்கள் மட்டும் தான் கருத்து எழுதலாம் என்றால்  இலங்கை அரசாங்கம் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றாகிவிடும் . 

உங்கள் கருத்து ஓடி வந்தவர்களுக்கும் பொருந்துமா????

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் எங்கையா இருந்தீங்க, வாலியின் வெண்கொடி வேந்தர் சீண்டல் இதுமுதல் தடவையல்ல இதற்கு முன்னர் பலப்பல இடங்களில் தன் அரிப்பு தீர பயன்படுத்திய சொல் தான்.நானும் பொறுத்து பார்த்து தான் இன்று ஒரு முடிவு காண இறங்கினேன்.சில காலங்கலாக இப்படியான கருத்துக்களாலேயே யாழில் எதுவும் எழுதாமலேயே விலகியே இருந்தேன் .

இது மட்டுமல்ல வடமாகாண முதலமைச்சர் விடயத்திலும் இதுவே நடந்தது.அவரின் நிர்வாகத்திறன் பிடிக்குது அல்லது பிடிக்கேல்ல என்பது வேறு விடயம் ,ஆனால் தான் தமிழினம் சார்பாகவே எழுதிக் கிழிப்பதாக காட்டுவதற்காக விக்கினேஸ்வரன் சிங்களத்தின் சம்பந்தி என்பதை பல இடங்களில் எழுதிய வாலி தன் முதுகை பார்க்க மறந்து விடுகிறார்.வசதியாக தான் எங்கே வாழ்க்கைப்பட்டேன் என்பதை,.

அர்யூன் அண்ணாவின் எழுத்துக்களில் கூட சில ஞாயங்கள் இருக்கலாம் ,ஆனால் வாலியின் எழுத்தில் இருப்பது முழுவதும் விசம்,ஆனாலும் அர்யூன் அண்ணா புலிகளை பற்றி அறிவதானால் சோபா சக்தியையும் , சாத்திரியையும் விடுத்து உண்மையாக களத்தில் நின்று போராடிய போராளிகளூடாக புலிகளை அறிவது மேல் என்பதே நியாயமானது.

வாலி இனியாவது அடக்கி வாசியுங்கள் ,சிங்களத்தின் மருமகனாகவாவது நேர்மையாக இருங்கள் .நீலிக்கண்ணீர் போதும் எங்களுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நந்தன் said:

மிஸ்டர் நந்தன் நான் சிங்களத்தின் மருமகனாக நேர்மையாகத்தானே இருக்கின்றேன், அதுக்கு நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள். நான் உங்களுக்காக ஒருதுளி கண்ணீரும் விடவில்லை. மக்களுக்காக கவலைப்படுகின்றேன். படம் காட்டாமல் உதவி செய்கின்றேன். எல்லாவற்றுக்கு மேலாக நான் சிறிலங்கன் என்று சொல்வதில் பெருமையடைகின்றேன்.

விக்னேஸ்வரன் நீங்கள் எதிர்பார்க்கும் குதிரை என்பதால் அவரை இங்கு உதாரணத்துக்கு எத்தியிருக்கிறீர்கள். தான் புலி ஆதரவாளன் போல காண்பித்துக்கொண்டு மகிந்த சார்பாக செயற்படும் சிங்களத்தின் சம்பந்தி விக்னேஸ்வரனுகுக்கும் புலிகள் மனிதகுலத்துக்கு எதிராக பயங்கரவாதம் புரிந்தார்கள் என நேருக்கு நேர் சொல்லும் சிங்கள் டாக்டர் பெண்ணை மணந்த வாலிக்கும் தொடர்புபடுத்தும் அறிவில் சூரியனான உங்களுக்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அம்மணமாக்கி பார்க்கத் துடித்தவர்கள் இன்று யாழ் களத்து உறவுகளின் முன்னர் அம்மணமாக நிற்கிறார்கள். வேடங்கள் கலைக்கப் பட்டாயிற்று. இவர்கள் எழுதும் விடயங்கள் ஒரு போராட்டம் நடாத்திய ஒரு அமைப்பின் மீதான விமர்சனங்களே அல்ல. விமர்சனத்துக்கும்,  விதண்டாவததிட்கும், கண்ணியத்திட்கும், காழ்ப்புக்கும் வேறுபாட்டை அறியாத முட்டாள்கள் அல்ல இங்கே தினம் உலா வரும் கள உறவுகள்.
இவை பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் விதைக்கப்படும் விஷங்கள். 
தமிழ் பெண்கள், புலம் வாழ் தமிழர்கள், தமிழகத்து விடயங்கள், தமிழீழ விடுதலை போரில் ஆஃகு தீயானோர் என பல முனைகளில் இவர்கள் சீண்டல்கள் தொடருகின்றன. இதை யாழ்களம் சரியான முறையில் கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது. யாழ் களத்தில் காணப்பட்ட உறவுகளுக்கிடயிலான அன்னியோன்யம், பரஸ்பரம், ஆக்கங்கள், படைப்புக்கள் கூட இவர் போன்ற வேடதாரிகளின் எழுத்தால், மன உளைச்சலால் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
தொடர் இழப்புக்களால் நிர்கதியாகி நிற்பவனை எள்ளி நகையாடுபவர்களையும், கொச்சை படுத்துவோரையும்  இனிமேலும் கண்டும் காணாததும் போல இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

நேருக்கு நேர் நின்றவர்கள் மட்டும் தான் கருத்து எழுதலாம் என்றால்  இலங்கை அரசாங்கம் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றாகிவிடும் . 

யூ மீன் பனங்காய் குண்டாக விழுந்ததோ???

7 hours ago, arjun said:

கிருபன் ,ரகு இருவரினது கருத்துக்களும் முழுவதும் உண்மை ,

ஆரம்பத்தில் இருந்து எனது நிலை போராட போன சொந்த சகோதரர்களையே டயர் போட்டு கொழுத்தியவர்கள் புலிகள் அப்போது அவர்களுக்கு கோக் கொடுத்தவர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் . 

அந்த செயல்களையெல்லாம் ஆதரித்துவிட்டு பிறகு அரசாங்கம் செய்த அநியாயங்களை உலகிற்கு சொல்லி கத்த இவர்களுக்கு எந்த வித அருகதையும்  இல்லை .

எப்போதும் எவர் செய்தாலென்ன அநியாயத்திற்கும் அராஜகத்திற்கும் எதிர் குரல் கொடுப்பவர்களுக்கு  மட்டுமே அந்த உரிமை இருக்கு .

புலிகள் மேல் பொதுமக்கள் மேல் இலங்கை அரசு செய்தது பாரதூரமான போர்குற்றங்கள் அவ்வளவும் சர்வதேசத்தின் முன் அடிப்பட்டு போனதிற்கு ஒரே காரணம் அரசை விட புலிகள் மோசமானவர்கள் என்பதுதான் .

வாலியின் கருத்து சற்று காட்டமாக இருந்தாலும் அவர்கள் எல்லாம் தமக்கு என்று வந்தபோது தமது உயிரை காக்கமுனைந்தவர்கள் தான் .பொதுமக்கள் ,காயமடைந்த போராளிகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு வெறும் கவசம் ,அவர்களை காப்பாற்றத்தான் சரணடைதல் என்ற நாடகம் சர்வதேசத்திடம் பலிக்காது .

புலிகள் அழியவேண்டியது காலத்தின் கட்டாயம் அழிந்திருக்காவிட்டால் கடந்த ஏழு வருடங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கும் எங்கள் மக்களுக்கு என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கு .

முள்ளிவாய்கால் அழிவிற்கு முதன் நாளும் அவர்களிடம்  இருந்து தப்பி ஓட முனைந்த பொதுமக்களை புலிகள் செய்த அநியாங்கள் எல்லாம்  இப்பவும் கண்ணிற்குள் நிற்கின்றது.

எந்த பொய்யும் புலிகளின் மீது  மனிதாபிமானிகளுக்கு துளியளவும் அனுதாபத்தை கொண்டுவராது  

உங்கடை புளட் செய்த வேலைகளுக்கு சனத்தை  கொண்டு கும்மி இருக்க வேணும்.

அரசை விட புலிகள் பாரதூரமானவர்கள் என நீங்களும் வாலியும் ரொரன்டோவில் இருந்து கூவினால் சரிவருமோ? 

5 hours ago, வாலி said:

மிஸ்டர் நந்தன் நான் சிங்களத்தின் மருமகனாக நேர்மையாகத்தானே இருக்கின்றேன், அதுக்கு நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள். நான் உங்களுக்காக ஒருதுளி கண்ணீரும் விடவில்லை. மக்களுக்காக கவலைப்படுகின்றேன். படம் காட்டாமல் உதவி செய்கின்றேன். எல்லாவற்றுக்கு மேலாக நான் சிறிலங்கன் என்று சொல்வதில் பெருமையடைகின்றேன்.

விக்னேஸ்வரன் நீங்கள் எதிர்பார்க்கும் குதிரை என்பதால் அவரை இங்கு உதாரணத்துக்கு எத்தியிருக்கிறீர்கள். தான் புலி ஆதரவாளன் போல காண்பித்துக்கொண்டு மகிந்த சார்பாக செயற்படும் சிங்களத்தின் சம்பந்தி விக்னேஸ்வரனுகுக்கும் புலிகள் மனிதகுலத்துக்கு எதிராக பயங்கரவாதம் புரிந்தார்கள் என நேருக்கு நேர் சொல்லும் சிங்கள் டாக்டர் பெண்ணை மணந்த வாலிக்கும் தொடர்புபடுத்தும் அறிவில் சூரியனான உங்களுக்கு வாழ்த்துக்கள். 

என்னப்பா மக்களுக்காக அழுகிறாராம் வாலி தம்பி. அங்கை போய் உதவுறது கனடாவில் இருந்து நீலிக்கண்ணீர் வடிக்காமல். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

இவ்வளவு நாளும் எங்கையா இருந்தீங்க, வாலியின் வெண்கொடி வேந்தர் சீண்டல் இதுமுதல் தடவையல்ல இதற்கு முன்னர் பலப்பல இடங்களில் தன் அரிப்பு தீர பயன்படுத்திய சொல் தான்.நானும் பொறுத்து பார்த்து தான் இன்று ஒரு முடிவு காண இறங்கினேன்.சில காலங்கலாக இப்படியான கருத்துக்களாலேயே யாழில் எதுவும் எழுதாமலேயே விலகியே இருந்தேன் .

இது மட்டுமல்ல வடமாகாண முதலமைச்சர் விடயத்திலும் இதுவே நடந்தது.அவரின் நிர்வாகத்திறன் பிடிக்குது அல்லது பிடிக்கேல்ல என்பது வேறு விடயம் ,ஆனால் தான் தமிழினம் சார்பாகவே எழுதிக் கிழிப்பதாக காட்டுவதற்காக விக்கினேஸ்வரன் சிங்களத்தின் சம்பந்தி என்பதை பல இடங்களில் எழுதிய வாலி தன் முதுகை பார்க்க மறந்து விடுகிறார்.வசதியாக தான் எங்கே வாழ்க்கைப்பட்டேன் என்பதை,.

அர்யூன் அண்ணாவின் எழுத்துக்களில் கூட சில ஞாயங்கள் இருக்கலாம் ,ஆனால் வாலியின் எழுத்தில் இருப்பது முழுவதும் விசம்,ஆனாலும் அர்யூன் அண்ணா புலிகளை பற்றி அறிவதானால் சோபா சக்தியையும் , சாத்திரியையும் விடுத்து உண்மையாக களத்தில் நின்று போராடிய போராளிகளூடாக புலிகளை அறிவது மேல் என்பதே நியாயமானது.

வாலி இனியாவது அடக்கி வாசியுங்கள் ,சிங்களத்தின் மருமகனாகவாவது நேர்மையாக இருங்கள் .நீலிக்கண்ணீர் போதும் எங்களுக்கு 

பலதடவை நானும்எழுத நினைத்தேன் நந்தன். ஆனால் தன்னை மறந்து கதைப்பவர்களுடன், அவர்கள் மட்டத்துக்கு தாழ்ந்து போக நான் விரும்பவில்லை.  உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு தன் குறை மட்டும் தெரியாமல் போய்விடும். அல்லது யாருக்கும் தெரியாது என்று நினைத்து கதை அளப்பார்கள். "நிறை குடம் தளம்பாது, குறைகுடம்தான் தளம்பும்".

கருத்தாடலில் ஈடுபடும்போது சக கள உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு உணர்ச்சி வசப்படாது கண்ணியமான முறையில் விமர்சனக் கருத்துக்களை வையுங்கள். சக கள உறுப்பினர்களை ஒருமையில் விளித்தல், சீண்டல்கள், தனிமனித தாக்குதல்கள், ஒரு திரியில் எழுதியதை இன்னோர் திரிக்குக் காவுதல் என்பனவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.