Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரின் வீதி ஓரக் கடைகளில் எளிமையாக மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ms_tavail01.jpg

சுகவீனமடைந்து சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை டநேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர்  ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்திருப்பது ஜனாதிபதியின் எளிமையினை எடுத்தியம்புகின்றது.

ms_tavail02.jpg

ms_tavail03.jpg

ms_tavail04.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை ......உவர் பறந்து போய் பார்த்து போட்டு ஜாலியா டி குடிக்கிறார்.....அதுக்கு தலையங்கம் எளிமையான ஜனாதிபதி.....சிறிலன்கா மருத்துவ‌மனை டி கடையில் டி குடித்தால் அது தான் எளிமை..வேறு நாட்டவன் எளிமையாக‌ டி குடிக்க கூடியதாக வைத்துள்ள நாட்டில் டியை குடித்து போட்டு ...அதுக்கு பிலிம் காட்டுறாங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

புரியுது. ஆனாலும் ராஜபக்சேவின் எடுப்போட ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தாள் எளிமை தான்.

35 minutes ago, putthan said:

சுகாதார அமைச்சருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை ......உவர் பறந்து போய் பார்த்து போட்டு ஜாலியா டி குடிக்கிறார்.....அதுக்கு தலையங்கம் எளிமையான ஜனாதிபதி.....சிறிலன்கா மருத்துவ‌மனை டி கடையில் டி குடித்தால் அது தான் எளிமை..வேறு நாட்டவன் எளிமையாக‌ டி குடிக்க கூடியதாக வைத்துள்ள நாட்டில் டியை குடித்து போட்டு ...அதுக்கு பிலிம் காட்டுறாங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வரிப்பணத்தில் வரும்.. அரசாங்கக் காசில.. ஓசில விசிட் அடிக்க விட்டால் நாங்கள் இதுக்கு மேலவும் செய்வம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழரசு said:

....... நாட்டிலை எத்தனை பிரச்சனை இருக்கு
அதையெல்லாம் விட்டுட்டு இப்படி ஜாலியா சிங்கப்பூரில் சிங்கிள் டீயோடை .......

இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு வந்த மாதிரித்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா மைத்திரியர்!  சிம்பிளாம் சிங்கப்பூராம்.......சிம்பிளான மனிசர் என்ன கோதாரிக்கு சிங்கப்பூர் ஆசுப்பத்திரிக்கு வைத்தியம் பாக்க போனவையளாம்? ஏன் கொழும்பு பெரியாஸ்பத்திரி சரிவராதோ????  

சிம்பிளாய் போன மனிசனுக்கு பின்னானை கமராக்காரன் என்னெண்டு போனவன்?????
ஆருக்கு சேக்கஸ் காட்டுறாங்கள்  :cool:

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்நாளில் வந்த சிங்கள சேனாதிபதிகளில் பிரேமதாசவை தான் பிடிக்கும்.
இப்போ மைத்திரியை ரொம்ப பிடித்திருக்கிறது.

இனபிரச்சனை தீர்வு என்பது மைத்திரி மட்டும் விரும்பி நிறைவேற்ற கூடியது அல்ல.

தெற்காசிய பிராந்தியத்தில் மிகு எளிமையாக இருக்கும் இருக்கும் ஒருவராக மைத்திரியை மட்டுமே 
அரச அதிபராக காண முடிகிறது.

பொதுவாக அடுத்தவனுக்கு பந்தா காட்டி வாழ்வது என்பது எமக்கு இரத்தத்திலேயே கலந்த ஒன்று.
அப்படியான நாட்டில் இப்படி ஒருவர் இருப்பது 
எனக்கு தனிபட்ட முறையில் பிடித்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

எனது வாழ்நாளில் வந்த சிங்கள சேனாதிபதிகளில் பிரேமதாசவை தான் பிடிக்கும்.
இப்போ மைத்திரியை ரொம்ப பிடித்திருக்கிறது.

இனபிரச்சனை தீர்வு என்பது மைத்திரி மட்டும் விரும்பி நிறைவேற்ற கூடியது அல்ல.

தெற்காசிய பிராந்தியத்தில் மிகு எளிமையாக இருக்கும் இருக்கும் ஒருவராக மைத்திரியை மட்டுமே 
அரச அதிபராக காண முடிகிறது.

பொதுவாக அடுத்தவனுக்கு பந்தா காட்டி வாழ்வது என்பது எமக்கு இரத்தத்திலேயே கலந்த ஒன்று.
அப்படியான நாட்டில் இப்படி ஒருவர் இருப்பது 
எனக்கு தனிபட்ட முறையில் பிடித்திருக்கிறது. 

இதெல்லாம் முன்னையவர்கள் விட்ட தவறுகளிலிருந்து அவர் படித்த பாடங்கள்.

ஆனால் சிங்களம் என்று வரும்போது????????  

இன்னும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 இதெல்லாம் மகிந்தாவை மக்கள் வெறுக்கவும், அவரின் செயற்பாடுகளை தான்  முறியடிக்கவும் செய்யலாம். முன்னைய சிங்கப்பூர் ஜனாதிபதி லீ. குவான்லீ, நாட்டில் மிகவும் எளிமையானவராக பல ஆண்டுகள் ஜாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட அவருடைய எடுத்துக்காட்டான வாழ்வே உதவியது. இவருடைய எடுத்துக்காட்டு எவ்வளவு நாளைக்கு, எதுவரைக்கும் நிலைக்கும் எண்டு அடுத்த தேர்தலில் பாப்போம். இலங்கையில் உள்ள மருத்துவர்கள் எவ்வளவோ சாதிக்கிறார்கள் இவர்களுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லையா? வெளிநாடொன்றுக்கு அரசசெலவில் அனாவசியமாய் செல்வதும், ஒருவகை ஆடம்பரந்தான். ஒரு தேநீர் காசை விட, விமான ரிக்கற்றின் விலை அதிகம். படத்துக்காகவே டீக்கடைக்கு போயுமிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எளிமை என்பது நல்ல பண்புடன் சேர்ந்திருந்தால் அது போற்றப்பட வேண்டும். முள்ளிவாய்காலில் அப்பாவிமக்களும் இன அழிப்பிற்கு உள்ளானபோது இவர்தான் சனாதிபதியின் பொறுப்பை ஏற்றிருந்தார். அழிவைத்தடுக்க ஒரு சொல்லைக்கூட அவர் உதிர்க்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா பந்தா கட்டினால் எடுபடும்.
மைத்திரி பந்தா காட்டினால் எடுபடாது. தோற்றம் அப்படி

வெளி நாடுகளில் இருந்து கொண்டு நாங்கள் நல்லாய் விமர்சிக்கலாம் பொழுது போக்குக்காக...

தாயகத்தில் உள்ள பழைய போராளிகளே சொல்லுகின்றார்கள் இப்ப பறுவாயில்லை என்று.... ,மகிந்த ஆட்சிக் காலம் மாதிரி இல்லை என்று

நாட்டை விட்டு ஓடி வந்தனாங்கள் கொஞ்சம் எம்மக்களை இருக்க விடுவம்... அவர்களே தம் தலைவிதியை நிர்ணயிக்கட்டும்......

தேவையற்ற விமர்சனங்களைக் கை விடுங்கள்

சண்டை இல்லாததால் எமக்கு இப்ப பொழுது போக்கு இல்லைத் தான்...

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மீனா said:

வேலை வெட்டி இல்லாத கண பேருக்கு உங்க ஏதாவது அலம்பறை பண்ணினால் ஏதாவது வேலை பார்ப்பது போல திருப்தி கிடைக்கிறது போல கிடக்குது.

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பிரசங்கம் செய்வதால் தான் மோதல்கள், மட்டுறுத்தினர் ஈடுபாடு, புள்ளிகள், தடை உண்டாகின்றது .

நாம் அறிவுக் கொழுந்து என்று எண்ணத்தினை தவிர்த்து, அடுத்தவரும் நம்மிலும் பார்க்க, அல்லது நம்மளவாவது அறிவு கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால் பிரச்சனை இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வாழ்வு, எப்போதும் பரபரப்பு மிக்கது. தனிப்பட்ட சமாச்சாரங்களுக்கு வழி இல்லை. ஒரு கடையில் தலைவலி மாத்திரை வாங்கும் சுதந்திரமே கிடையாது. பிரித்தானிய பிரதமர்களான டோனி பிளையர், டேவிட் கமொரோன் இருவரும் பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றுக் கொண்டவர்கள்.

மக்களுக்கு தெரியாத விசயம் என்னவென்றால், கருத்தடை சாதனங்களை கடை சென்று வாங்கும் தனிப்பட்ட நேரம் (தனிமை) இருக்க வில்லை. (எனது கருத்து இல்லை)

இரு வருடங்களுக்கு முன்னர், இது சரி வராது என்று, சின்ன மகளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, குடும்பத்துடன் வெளியே கிளம்பி விட்டார் டேவிட் கமொரோன்.

cameron-ivan-6_3256895c.jpg

இந்த தனிமை வேண்டியே, பழைய காலத்தில் அரசர்கள் மாறுவேடத்தில் வெளியே சென்றுள்ளர்கள்.

மைத்திரி சிங்கப்பூருக்கு, பரிவாரங்கள் இல்லாமல் தீடிரென போனதால், கிடைத்த தனிமையை இனிமையாக கழிக்கிறார் போல் தெரிகிறது.

இதுக்குள அரசியலை கொண்டு வந்து, என்னையா பண்ணப் போகிறோம்? 

  • கருத்துக்கள உறவுகள்

தன் பிள்ளைகளின் ஆடம்பரங்களிலும்,அரசியல் அத்துமீறல்களிலும் தலையிடாத வரை இவரின் விளம்பரங்கள் எடுபடா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ms_tavail0.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்தச் செலவில் சிங்கப்பூருக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சுகம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி தனது பாரியார் சகிதம் நேற்றைய தினம் அதிகாலை சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இந்தப் பயணத்துக்கு ஜனாதிபதி தனக்கும் ,பாரியாருக்கும் மட்டுமன்றி பாதுகாவலர்களுக்கும் கூட சொந்தச் செலவில் விமான டிக்கட் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு மைத்திரிபால சிறிசேனவை ஒப்பிட்டும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்கச தனது தனிப்பட்ட செலவுகளுக்கு மாத்திரம் நாளொன்றுக்கு பத்துலட்சத்துக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தார்.

அத்துடன் இருபது கிலோமீட்டர் தூரத்தை விட தூரம் அதிகமான இடங்களுக்குச் செல்வதற்கு எல்லாம் அரச செலவில் ஹெலிகொப்டர்களையே பயன்படுத்தினார்.

அவ்வாறிருக்க ஜனாதிபதி மைத்திரிபால தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் ஒருவரின் சுகம் விசாரிப்பதற்காக சொந்த செலவில் சிங்கப்பூர் சென்றுள்ளமையானது வரவேற்கத்தக்கது எனவும் கொழும்பு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

ms_tavail02.jpg

ms_tavail03.jpg

ms_tavail04.jpg

3 hours ago, Nathamuni said:

வேலை வெட்டி இல்லாத கண பேருக்கு உங்க ஏதாவது அலம்பறை பண்ணினால் ஏதாவது வேலை பார்ப்பது போல திருப்தி கிடைக்கிறது போல கிடக்குது.

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பிரசங்கம் செய்வதால் தான் மோதல்கள், மட்டுறுத்தினர் ஈடுபாடு, புள்ளிகள், தடை உண்டாகின்றது .

நாம் அறிவுக் கொழுந்து என்று எண்ணத்தினை தவிர்த்து, அடுத்தவரும் நம்மிலும் பார்க்க, அல்லது நம்மளவாவது அறிவு கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால் பிரச்சனை இல்லையே. 

என்னைப்போலவே மற்றவர்களும் அறிவுடையவர்கள், ஆற்றல் உடையவர்கள், உணர்ச்சி மிகுந்தவர்கள் என்பதை உணர்ந்து செயற்படுவது உண்மையில் இலகுவான விடயம் அல்ல. யாழ் இணையத்தை பொறுத்தவரையில் நான் இந்தவிடயத்தில் என்னை படிப்படியாக முன்னேற்றுவதற்கு முயற்சி செய்துவந்துள்ளேன். இதன் வெற்றி எம்மில்தான் தங்கியுள்ளது. எங்கள் மனிதமனத்தின் இயல்பான சுபாவத்தில் இருந்து விடுபடுவது சுலபமானது அல்ல. அதேசமயம் இயல்பான சுபாவத்தில் இருந்து விடுபடவேண்டியது எமக்கு தேவையானதா என்பதும் கேள்விக்குறியே.

யாழ் கருத்துக்களத்தில் கருத்துக்கள் இடுவதற்கு கை துடிக்கும், மனம் ஓடிவரும். ஆனால், ஏற்கனவே கருத்துக்கூறியவர்களை விட நான் ஏதோ கூடுதல் கெட்டிக்காரர், அறிவாளி, சிறப்பானவர் எனும் தொனியில் எனது கருத்து பதியப்படக்கூடாது என்று எனக்குள் தோன்றும் சமயங்களில் மெளனமாகவே கருத்துக்களத்தை நான் கடந்து செல்வதுண்டு. இன்று காலை உங்கள் கருத்தை வாசித்து அதை எனக்குள் சுயசோதனை செய்து பார்த்தேன். இதற்கு பதில் எழுதவேண்டும் போல் தோன்றியது.

எமது வாயை அடக்கிக்கொண்டுமற்றவர்கள் கூறுவதை உன்னிப்பாக கேட்டு விளங்குவது ஓர் ஆற்றல். இதன்போது நாம் விடயங்களை உள்வாங்குகின்றோம், கற்றுக்கொள்கின்றோம். யாழ் இணையத்தில் மெளனமாக இருந்து விடயங்களை பார்ப்பது, மெளனத்தை கலைந்து கருத்துக்களை பகிர்வது ஆகியன வெவ்வேறு அனுபவங்கள். இதில் எனக்கு அதிகம் பிடித்தது என்னவோ மெளனமாக இருந்து விடயங்களை பார்ப்பதே. 

1 hour ago, கலைஞன் said:

இங்கு நடப்பது கருத்தாடல்கள். மௌனமாக இருப்பது தவறு. எமது அறிவிற்கு பதியப்படும் கருத்து சரியாகப் படுவதால்தான் பதிகின்றோம். அக்கருத்து பிழையாயின் விளக்கங்களை தரலாம், அதைவிடுத்து வேறு எழுதினால்.ஆனால் கருத்துகளை விட்டு விட்டு கருத்தெழுதியவர் மீதான தனிநபர் தாக்குதல்களைப் பார்க்கும்போது, நாமும் எல்லை மீறத் தோன்றுகிறது.

2 hours ago, கலைஞன் said:

பல சமயங்களில் நீங்கள் சொல்வது போல இருந்திருக்கலாம் என்று நினைத்து மனவருத்தபடுவதுண்டு 

அப்படி இருந்திருந்தால் இன்று இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆகியிருக்கலாம் .

4 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு நடப்பது கருத்தாடல்கள். மௌனமாக இருப்பது தவறு. எமது அறிவிற்கு பதியப்படும் கருத்து சரியாகப் படுவதால்தான் பதிகின்றோம். அக்கருத்து பிழையாயின் விளக்கங்களை தரலாம், அதைவிடுத்து வேறு எழுதினால்.ஆனால் கருத்துகளை விட்டு விட்டு கருத்தெழுதியவர் மீதான தனிநபர் தாக்குதல்களைப் பார்க்கும்போது, நாமும் எல்லை மீறத் தோன்றுகிறது.

எனது பார்வையில் மெளனம் காத்தலும், களைதலும் யாழ் கருத்துக்களத்தை நாங்கள் எவ்வாறு அணுகுகின்றோம் என்பதை பொறுத்தது. 2007ம் ஆண்டு புதிதாய் இணைந்தபோது நான் எல்லாபகுதிகளிலும் நுழைந்து கருத்துக்களை கொட்டுவேன். பின் சிறிது காலங்களில் எனது அணுகுமுறை மாறியது. காலம் செல்லச்செல்ல அதற்கு சமாந்தரமாய் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளை அடையும்போது கருத்துக்களை எழுதும் பாணியும், கருத்துக்களத்தை அணுகும்விதமும் மாற்றங்கள் கண்டன. நான் அண்மையில் யாழில் எனது பழைய பதிவுகளை பார்வையிட்டேன். என்னேலேயே இப்படியெல்லாம் எழுதினேனா என்று நம்பமுடியவில்லை. ஒருவிதம் திகைப்பாக இருந்தாலும் மறுபுறம் எனக்குள் ஏதோ ஒரு தேடல், வெவ்வேறிடங்களில் சிதறியுள்ள பல்வேறு புள்ளிகளை இணைத்து ஓர் முழுமையை கண்டறியும் உந்துதல் ஏற்பட்டது. எனக்கு நான் தான் எல்லை, தொல்லை எல்லாம். 

2 hours ago, arjun said:

பல சமயங்களில் நீங்கள் சொல்வது போல இருந்திருக்கலாம் என்று நினைத்து மனவருத்தபடுவதுண்டு 

அப்படி இருந்திருந்தால் இன்று இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆகியிருக்கலாம் .

அண்மையில் பேஸ்புக் செய்தியோடையில் நான் பார்த்த ஓர் சுவாரசியமான துணுக்கை பாருங்கள்.

12705769_1099212473445374_15474686537206

Edited by கலைஞன்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி வித்தியாசமாக இருக்கிறார்போலத் தெரிகிறது. ஆனால் இது இவரால் விரும்பி வரிந்துகொள்ளப்பட்ட புரிதலினால் ஏற்பட்டதா அல்லது அழுத்தங்களால் ஏற்பட்டதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், இவரால் புரிந்துகொள்ளப்பட்ட தானாக வரிந்துகொள்ளப்பட்ட நடைமுறையென்றால் வரவேற்கலாம்.  ஆனால், இவர் இன்னும் நெடுதூரம் போகவேண்டும் தமிழரின் நம்பிக்கையச் சம்பாதிப்பதற்கு என்று மட்டும் சொல்ல முடியும்.

மகிந்தவின் ஆணவமும், அதிகாரத் திமிரும் இந்த மனிதரிடம் காணமுடியவில்லை. மற்றும்படி மக்களின் ஜனாதிபதியென்னும் நாமத்தை ஏற்க இவருக்கு இன்னும் அதிக காலமும், சந்தர்ப்பமும் கொடுக்கப்பட வேண்டும்.  அதுவரையாவது சிங்கள பெளத்த பேரினவாதம் இவரை விட்டு வைக்கவேணும், தமிழரைப் பொறுத்தவரை....இவரைவிட்டால் எமக்கு வேறு எந்தச் சிங்களத் தலைவரும் இருப்பதாகத் தெரியவில்லை...ஆகையால் அடக்கி வாசிப்போம் என்கிறேன்..அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, arjun said:

அப்படி இருந்திருந்தால் இன்று இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆகியிருக்கலாம் .

நல்ல காலம் அப்படி ஒண்டும் நடக்காமல் போட்டுது. உடனுக்குடன் மறுத்தான் குடுக்க அண்ணய தாரும் அடிக்கேலுமே? நாங்களெல்ளே மிஸ் பண்ணியிருப்பம்.

சித்தார்த்தனே, துண்டுக் கோவணம், அதில உங்களுக்கும் இழுத்து போர்திறதெண்டால் எப்படி அண்ண?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.