Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெறி - விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
தெறி - விமர்சனம்
 
கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல். 

DD0A44BD-EA33-42D8-B3E8-245B8580FD36_L_s

ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள். 

இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட விஜய் போக வேண்டியிருக்கிறது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர விஜய் தயங்குகிறார். இதனால், ரவுடி மீதான புகாரையும் வாபஸ் பெற முடிவெடுக்கிறார். 

03227E7B-377B-4B3E-BA1D-3A23E91FF5FD_L_s

இருப்பினும் போலீஸ் அந்த ரவுடியை கைது செய்ய இவரை புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறது. அப்போது, அங்கு வரும் போலீஸ்காரர் ஒருவர் விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அப்போது விஜய்யை அவரது பழைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் உணர்வை பார்த்து எமி ஜாக்சன் அவர் மீது சந்தேகப்படுகிறார். அந்த போலீஸ்காரர் சொன்ன பெயரை வைத்து இணையதளத்தில் தேடும்போது விஜய் பற்றிய பழைய உண்மைகள் வெளியே வருகிறது.

இதன்பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று பிளாஸ்பேக் விரிகிறது. விஜய் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக நான் கடவுள் ராஜேந்திரன். அம்மா ராதிகா மீது பாசம் கொண்ட பையனாக இருக்கும் விஜய், அந்த ஊரில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான அதிகாரியாக வலம் வருகிறார். இவருக்கும் டாக்டராக வரும் சமந்தாவுக்கும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க பின்னர், விஜய்யின் நேர்மையான குணம் தெரிந்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார். பின்னர், விஜய்யும் அவரை காதலிக்க தொடங்குகிறார். 

4E7C4CA1-BC89-43E2-9DD7-4E18646895EF_L_s

இந்நிலையில், ஐடி கம்பெனியில் வேலை பார்த்த தன்னுடைய பெண் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஒரு பெரியவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கும்போது, அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். உயிருக்குப் போராடிய நிலையில் அவளை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் விஜய். மரணம் நெருங்கும் தருவாயில் குற்றவாளி யார் என்பதை அந்த பெண் கடைசி வாக்குமூலமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறாள்.

குற்றவாளி மிகப்பெரிய அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும் அவனை கைது செய்ய நேரடியாக அவர் வீட்டுக்கு போகிறார். ஆனால், அவர்களோ தங்களுடைய மகன் இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், மொட்டை ராஜேந்திரன் இதுவெல்லாம் பெரிய இடத்து பிரச்சினை, எப்படியும் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த தருணத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு அதிர்ச்சி தரும்படியான ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.

74C4D9AF-974D-4100-B2A4-6CCF2C9A7E77_L_s

அது என்ன? அந்த குற்றவாளி கிடைத்தானா? விஜய்-க்கு அடுத்து என்ன பிரச்சினைகள் ஏற்பட்டது? ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்? விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு தெறியுடன் விவரித்திருக்கிறார்கள். 

முதல்பாதி முழுவதும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய் அறிமுகம் ஆகும் காட்சியில் தொடங்கி, அவர் ஒவ்வொரு காட்சியிலும் அவரது ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீசுக்குண்டான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். 

A0EA27DD-8F34-4A0B-8300-DF052CD31166_L_s

தன்னுடைய பங்குக்கு எந்தளவுக்கு இந்த படத்தில் ஸ்டைலாக நடிக்க முடியுமோ? அந்தளவுக்கு ஸ்டைலாக நடித்துக் கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக இருக்கும். மேலும், விஜய், சுவிங்கத்தை கையில்வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சிதரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார். 

மேலும், இந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் குழந்தை நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ? அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லி. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. நைனிகாவுக்கும் விஜய்க்கும் உண்டான பாசத்தை இதில் அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.

4546C11A-3E1D-4087-97BA-F518D0013DCA_L_s

எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லி. ராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னமும் குழந்தை மாதிரியான நடிப்பு இவரிடம் இருக்கிறது என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். 

மொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் அட்லி. 

522766D7-13F5-4B80-A4A6-B58E972DE5E4_L_s

வில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன், மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனங்கள் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார். சமந்தா அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.

CCB3EA52-0CB0-4D6B-B844-2F22CFDD9478_L_s

இயக்குனர் அட்லி ஒரு விஜய் ரசிகர்போன்று இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். இவர் விஜய்க்காக காத்திருந்து இந்த படத்தை இயக்கியது வீண் போகவில்லை. அதேபோல், அட்லிக்கே உண்டான ரொமான்ஸ், எமோஷன்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் கைகொடுத்திருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளையும் விஜய்க்கே உரித்தான ஸ்டைலில் படமாக்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். உண்மை நிகழ்வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். அதேபோல், வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

F8CC8F19-3128-4CA0-90CF-196D6E23F037_L_s

ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய 50-வது படத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அமைத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், அதை படமாக்கிய விதத்தால் பாடல்களை மறுமுறை கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. 

மொத்தத்தில் ‘தெறி’ எட்டுத்திக்கும் தெறிக்கும்
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12983938_1700519506863963_56183555129797

Ready to watch Therri.....rajjah

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, குமாரசாமி said:

12983938_1700519506863963_56183555129797

Ready to watch Therri.....rajjah

ஆக்கள பாரன்..அணீலேறவிட்ட நாயள் மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

காக்க முட்டையை கூட தியேட்டரில் போய் பார்க்கலாம் இதை கட்டாயம் ஒன்லைனில்தான் பார்க்கனும்.tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சக் காலமா எல்லா நடிகர்களும் ஒரு குழந்தை தூக்கிக்கிட்டு நடுக்கிறதே வேலையாப் போச்சு. அப்பாக்கள் ஆகிட்டாங்கல்ல... வேற வழி.

மொத்தத்தில் தெறி.. பழைய தெறிகளின் கலவைகளில் பிறந்த ஒத்தைத் தெறி.

இணையத்தில் வர பார்ப்பதே திறம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Thirdeye said:

ஆக்கள பாரன்..அணீலேறவிட்ட நாயள் மாதிரி.

இப்படி ஒரு காலத்தில்

கமல் ரஐனி படத்துக்கு தியேட்டரில் ஏறிக்குதித்தவர்களில் நானும் ஒருவன்...

போன புதன்கிழமை இரவு இந்தப் படத்தை நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டர்ல  பார்த்தனான். என்னைபொறுத்தவரை படம் சும்மா ஒருதரம் பாக்கலாம். இசை வெளியீட்டு விழாவில் குடுத்த பில்டப் கொஞ்சம் ஓவர். 


நான் பார்த்த தியேட்டர்ல இப்படி ஒரு கடவுட் மற்றும் டிச்கேட்க்கு கூட்டம் இல்லை. ஏனென்றால் இங்கை டிக்கெட் ஒன்லைன்ல பூக் பண்ணக்கூடிய வசதி இருப்பதால், ஒன்லைன்ல எல்லா டிக்கெட்ம் விற்று முடிந்துவிடும். மற்றும் கட்டவுட் வைப்பது, பால் ஊத்துவது எல்லாம் தடை. பாமிலிக்கு எண்டு தனி section தியேட்டர்ல இருக்குது.ஆகவே நிம்மதியாக குடும்பத்துடன் படம் பார்க்கலாம். 

13010696_10156810149615564_8163611034379

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை படம் பழைய பப்படத்தை பொரித்து காத்து போகமல் இழுபடாமல் தந்து இருக்குறார் அட்லி ஒரு தடவை பார்க்கலாம் மற்றும் படி எதுவும் இல்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

tamilgun.com உபயத்தில் உதைப் பார்த்தம்.. கொடுமை.. எல்லாப் படங்களினதும் கலவை. அதே வில்லன் அடிதடி காதல்.. ஒரு மாற்றமும் இல்லை. ஒரு புதினமும் இல்லை.

கடைசியில்.. ஈழத்தமிழரின் ஏக்கத்தை வைச்சு வசனம்...... ஒருவேளை தலைவர் இருக்கிறாரோ.. இல்லையோ என்ற அண்மைக்கால பிரபல்ய செய்தியை படத்துக்கு முதலீடாக்க முனைந்தார்களோ தெரியவில்லை. :rolleyes:

மீனா பொண்ணு திரையில் மீனா போல அழகாக இல்லை. ஊடகங்கள்.. புழுகின மாதிரி அங்க ஒன்றும் இல்லை. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

100 கோடில படம் எடுத்தால் விளம்பரத்துக்கு மட்டும்  30 கோடி செலவழிக்கின்றார்கள்... ஒரு உப்புச் சப்பில்லை, நாறல் மீனுக்கு பூவில  லிப்ஸ்டிக்கைப் பூசி விக்கிற மாதிரிப் போச்சு....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

tamilgun.com உபயத்தில் உதைப் பார்த்தம்.. கொடுமை.. எல்லாப் படங்களினதும் கலவை. அதே வில்லன் அடிதடி காதல்.. ஒரு மாற்றமும் இல்லை. ஒரு புதினமும் இல்லை.

கடைசியில்.. ஈழத்தமிழரின் ஏக்கத்தை வைச்சு வசனம்...... ஒருவேளை தலைவர் இருக்கிறாரோ.. இல்லையோ என்ற அண்மைக்கால பிரபல்ய செய்தியை படத்துக்கு முதலீடாக்க முனைந்தார்களோ தெரியவில்லை. :rolleyes:

மீனா பொண்ணு திரையில் மீனா போல அழகாக இல்லை. ஊடகங்கள்.. புழுகின மாதிரி அங்க ஒன்றும் இல்லை. tw_angry:

நீங்களும் Tamilgun தானா?  நீங்கள் சொன்ன மாதிரி மீனாவின் மகளின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. இனி தெறி2 வேற

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடிப் படத்தின் கதையைப்போட்டால் நாங்கள் படம் பாக்கிறேல்லையே ????கொழும்பான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13015530_166229070437613_285118264677187

பால் ஊத்தி கற்பூர ஆராதனை செய்யிற கலாச்சாரமும் சுவீஸுக்கு கிட்டடியிலை வரும் போலை கிடக்கு :cool:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

13015530_166229070437613_285118264677187

பால் ஊத்தி கற்பூர ஆராதனை செய்யிற கலாச்சாரமும் சுவீஸுக்கு கிட்டடியிலை வரும் போலை கிடக்கு :cool:

இதுக்குள்ள ஊரில் இருக்குறவனுக்கு திட்டிற வாழ்க தமிழினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்தப் பெண் குழந்தை உங்களுக்கு என்ன செய்தது?...அந்தக் குழந்தையின் முதல் படம். தன்னால் இயன்ற வரைக்கும் அச் சிறுமி நடித்திருக்குது...பாராட்டா விட்டாலும் பரவாயில்லை[ அந்தப் பழக்கம் தான் உங்களுக்கு இல்லையே] தூற்றாமல் இருக்கலாமே!...தமிழ்,தமிழ் என வரிக்கு வரி கதைத்துக் கொண்டு தமிழரை முன்னுக்கு வராமல் தடுப்பது உங்களை மாதிரி ஈனத் தமிழராலேயே முடியும்.

இந்தப் படம் விஜயின் படம் என்பதை விட அட்லீயின் படம் என்று சொல்வதே பொருத்தம்.மகேந்திரன் நல்லா நடித்திருக்கார்.பாட்டுக்கள் ஒன்றும் விஜய்யின் பாட்டு என்று சொல்லும் படியாகவில்லை.

43 minutes ago, ரதி said:

ஏன் அந்தப் பெண் குழந்தை உங்களுக்கு என்ன செய்தது?...அந்தக் குழந்தையின் முதல் படம். தன்னால் இயன்ற வரைக்கும் அச் சிறுமி நடித்திருக்குது...பாராட்டா விட்டாலும் பரவாயில்லை[ அந்தப் பழக்கம் தான் உங்களுக்கு இல்லையே] தூற்றாமல் இருக்கலாமே!...தமிழ்,தமிழ் என வரிக்கு வரி கதைத்துக் கொண்டு தமிழரை முன்னுக்கு வராமல் தடுப்பது உங்களை மாதிரி ஈனத் தமிழராலேயே முடியும்.

ஐயோ அந்த ஒரு தமிழ் பெண்ணு யூ  டியூப்பிலயும் பேஸ் பூக்கிலையும் பாட்டுப்பாடி அலைப்பறை  பண்ணுமே  யாராவது அவவிண்ட  விடியோவை போடுங்கப்பா.இந்த ரதி லைக் பண்ணி உற்சாகப் படுத்தி முன்னுக்கு கொண்டு வரட்டும். 

பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அதற்கு காரணம் தேடக்கூடாது

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஜீவன் சிவா said:

ஐயோ அந்த ஒரு தமிழ் பெண்ணு யூ  டியூப்பிலயும் பேஸ் பூக்கிலையும் பாட்டுப்பாடி அலைப்பறை  பண்ணுமே  யாராவது அவவிண்ட  விடியோவை போடுங்கப்பா.இந்த ரதி லைக் பண்ணி உற்சாகப் படுத்தி முன்னுக்கு கொண்டு வரட்டும். 

பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அதற்கு காரணம் தேடக்கூடாது

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 

grrrrr.gif   கறுமம்.. கறுமம்..

இந்தக் கொடுமையை எங்கே சொல்லி முட்டியழ... vil-arrachechvx.gif

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, குமாரசாமி said:

 

. 'ட்'ன்னாவும் 'ட'னாவும் 'டி'னாவும் றுனாவும் தான் தெறிக்குது..

tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.