Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோசல் மீடியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மதபக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது  நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள்.

வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும்  செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா"

டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற அதிகார தோரணையில் சத்தம் வரும்.

காலைப்பொழுதை ரசிக்கும் வயதில்லை,கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிப்பேன் ஆனால்  மீண்டும் நித்திராதேவி என்னை அரவணைத்துக்கொள்வாள் .மரண அறிவித்தல் சொல்ல தொடங்க மீண்டும் திடுக்கிட்டு எழும்பி போர்வையை மெல்ல அகற்றி அம்மா எங்கே நிற்கிறார் என்று பார்ப்பேன் .கிணத்தடி பக்கம் போயிருந்தார் என்றால் ஆறுதலாக கட்டிலிருந்து மீண்டும் சோம்பல் முறித்து இன்னும் கொஞ்சம் படுத்தால் எப்படியிருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு அரைத்தூக்கத்தில் வானொலியை கேட்டபடியிருப்பேன் .

"பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்" என பாட்டுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சி தொடங்க கட்டிலை விட்டு எழும்பி கிணத்தடிக்கு போக அம்மா வீட்டுக்குள் வருவார்.

"என்ர ராசா இப்ப தான் எழும்பி வாரார் .கேதியா முகத்தை கழுவிபோட்டு வா, பள்ளிக்கு போக நேரமாகிறது "

"ம்ம்ம்" பற்பசையை பிரஸ்ஸில போட்டு வாயில் வைத்து அதில முதலில் வரும் இனிப்பு தன்மையை சுவைத்தபடி மெல்லமெல்லமாக பல்லை தேய்த்தபடி கிணத்து கட்டில் போய்யிருப்பேன் .வாய் பற்பசையின் நுரையால் நிரம்பியவுடன் கிணத்தடிக்கு பக்கத்தில் நின்ற எலும்பிச்சை மரத்தின் அடியில் துப்பிவிட்டு மீண்டும் துலக்கி மீண்டும் மரத்தை அசிங்கப்படுத்தி தூரிகையை வாயில் வைத்தபடி கிணத்துவாளியை உள்ளே போடுவேன் .கப்பியின் கீறிச்சிட்ட சத்தத்துடன் வாளி தண்ணியினுள்  போய்விழும்.அநேகமான‌ யாழ்ப்பாணத்து கிணத்து வாளிகள் க‌ல்லுப்பாறைகளில் அடிபட்டு உருமாறியிருக்கும் .தண்ணி வாளியினுள் நிறைந்தவுடன் கயிற்றை பிடித்து மேலே இழுக்கும் பொழுது கப்பி மேலும் சத்தம்போடும்.வாளியின் கைப்பிடியை பிடித்து தூக்கி சலவை தொட்டியின் கட்டில் வைப்பேன் சிலசமயங்களில் சமநிலை குழம்பி தண்ணி கீழே கொட்ட பார்க்கும் ஒரு மாதிரி சமநிலையில் வாளியை நிறுத்தி கை கால் கழுவி  ,ஒரு செம்பரத்தை பூவை புடுங்கி கொண்டு ரெடியோவில் ஒலிக்கும் சினிமா பாட்டை விசில் அடித்துகொண்டு வீட்டினுள் போவேன் .

"சாமி கும்பிட போகும் பொழுது தேவாரத்தை பாடிக்கொண்டு போகாமல் உது என்ன சினிமா "என அம்மாவும் அப்பாவும் கொரோசா குரல் கொடுப்பினம் உடனே விசில் அடிப்பதை நிறுத்தி சாமியறைக்கு சென்று பூவை வைத்து கடவுளே நல்லாய் படிப்பை தா என்று கேட்டு விபூதியை பூசிவிட்டு அதே சினிமா பாட்டை மீண்டும் விசிலடித்தபடி வெளியே வருவேன். இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ . பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும்.

"காலையில செத்தவரின்ட பிள்ளைகள் ஐந்தும் டாக்குத்தரும் இஞ்னினியரும் தான்"

"யார் பாட்டி செத்தது ,உங்களுக்கு தெரியுமோ செத்தவரை"

"இல்லையடாப்பு உந்த ரெடியொவில மரண அறிவித்தல்  சொன்னவையள் அதில கேட்டனான்."

இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக  பி எச் அப்துல்ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும்.

" இன்றைக்கு சுதா அண்ரியின்ட மகளின்ட பேர்த்டே இப்ப ரெடியோவில சொல்லித்தான் தெரியும்" என அக்கா சொல்லியபடி பாடசாலைக்கு கொண்டு போக வேண்டிய‌ புத்தகங்களை அடுக்கி கொண்டிருப்பார் ,,நானும் எனது புத்தகங்களை புத்தக பைக்குள் வைத்து விட்டு காலை சாப்பா

ட்டுக்காக‌ அம்மாவிடம்  சமையலறைக்கு சென்றுவிடுவேன். "அம்மா பொங்கும் பூங்குழல் தொடங்கிவிட்டது எழே கால் ஆயிற்று ஸ்கூலுக்கு நேரம்ப்போயிற்று கேதியா சாப்பாட்டை தாங்கோ"

"அந்த மேசையில் போட்டு வைச்சிருக்கிறன் போய் சாப்பிடு ,லெட்டா எழும்பிபோட்டு பிறகு சத்தம் போடுறாய் நாளைக்கு வெள்ளன எழும்பி பள்ளிக்கு போற வேலையை பார்"

"ஒமோம் நாளைக்கு,நாளைக்கு"

சாப்பிட்டவுடன் புத்த பையை தோலில் போட்டுக்கொண்டு வாசலில் இருக்கும் பாட்டா செருப்பை  கொழுவிக்கொண்டு படலையில்  போய் நிற்பேன் .பொங்கும் பூங்குழலில் இரண்டு பாட்டு ஒலிபரப்பி முடியும் மட்டும் வாசலில் நிற்பேன் அதற்குள் பாடசாலை நண்பர்கள் இருவர் வந்து விடுவார்கள்.

வாசலில் நின்றபடியே அம்மா போயிற்றுவாரேன் என்று ஒரு கத்தல் ,அவரின் பதில் கிடைக்கும் முதல் நாங்கள் அடுத்த வீட்டு வாசலை தாண்டியிருப்போம்.அம்மா வெளியே வந்து எட்டிப்பார்த்து நான் பெடியங்களுடன் போகிறேன் என்று அறிந்த பின்புதான் நிம்மதியாக உள்ளே செல்வார் .சந்தியை தாண்டுபொழுது தேனீர் கடை வானோலியில் விளம்பரங்களுடன் நேரமும் சொல்லுவார்கள்.

"டேய் ராமன் தேடிய சீதை வரப்போகிறது "

"நான் படம்பார்க்க வரமாட்டேன் அப்பா ஏசுவார்"

"ஸ்கூலுக்கு வாரமாதிரி வந்திட்டு  படத்திற்கு போவம்"

"என்டா ராசா ஆளைவிடு உப்படி நினைச்சது என்று தெரிந்தாலே தொலைஞ்சன்"

"டேய் உவன் சரியான பயந்தாங்கொள்ளி"

பாடசாலைக்கு முன்னால் உள்ள சாத்ரியாரின் வானொலி "டி.எம் செளந்தராஜன் ,சுசிலா பாடிய இந்த பாடலுடன் நிறைவடைகின்றது பொங்கும் பூங்குழல் "

" டேய் ஒடி வாங்கோட எட்டு மணியாகப்போகின்றது ஸ்கூல் தொடங்கப்போகின்றது " ஒருத்தன் ஞாபகப்படுத்த எல்லோரும் ஒடிப்போவோம் பாடசாலை மணியடிக்க சரியாக அசம்பிலியில் போய் நிற்போம் .

பிந்தி வந்தால் வெளியில் நிற்க வேண்டும் அசம்பிலி முடிய ஆசிரியர் பிரம்புடன் வந்து மைதானத்தை சுற்றி நடக்கச்சொல்வார்.

சினிமா பாட்டு ஒலிபரப்பாமல், சங்கிதம் அல்லது சொற்பொழிவுகள் ஒலிப்பரப்பிலிருந்தால் ,காலை பத்துமணிக்கு மேலாயிற்று என்று எங்கள் எல்லொருக்கும்  தெரியும். பதின்ரெண்டு மணியளவில் மதிய இடைவெளிக்காக பாடசாலை மணியடிக்கும் மீண்டும் வீட்டை ஒடிப்போவோம் மதிய சாப்பாட்டை முடித்து 12:45 செய்தி தொடங்கமுதல் பாடசாலையில் நிற்போம் ..பாடசாலையின் அரைவாசி மாணவர்கள் மைதானத்தில் நிற்பார்கள் இருபது டீமுக்கு அதிகமார் விளையாடுவார்கள்.

ஹிந்தி பாட்டு ஒலிபரப்பிலிருந்தால் பிற்பகல் ஒன்றைரைக்கும் இரண்டுக்கும் இடையில் என் கணக்குபோட்டுகொள்வோம்.மூன்று மணிக்கு பாடசாலை மணியடிக்கும் வீட்டை போகும் வழியில் மீண்டும் வானொலி நிகழ்சியை ரசித்தபடி நடப்போம் .பாடசாலை கடையடியில் தொடங்கினால் வீட்டை போய் இரவு படிக்க தொடங்கும் வரை வர்த்தக ஒலிபரப்பு எங்கன்ட பொழுதுபோக்கு.மாலை நேரத்தில் வளவில் விளையாடும் பொழுதும் பக்கத்து வீட்டு வானொலியின் மூலம்  பாடல்கள் கேட்டபடியே விளையாடுவோம். மாலை நாலரைக்கு விளையாட்டு செய்திகள் தொகுத்து வழங்குவார்  எஸ் .எழில்வேந்தன் .அதை அண்ணர் மற்றும் நண்பர்கள் ஒடிப்போய் கேட்பார்கள் .அநேகமாக  அதில் கேட்ட கிரிக்கட் பற்றிய செய்திகளை விளையாடிய படியே பேசுவார்கள்.

 ‍‍‍‍‍வணக்கம்கூறி விடைபெறுவது  கே.எஸ் ராஜா என்ற குரலுடன் வர்த்தக சேவையின் அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்து  மாலை ஆறுமணி செய்திக்கான இசைய தொடங்குவார்கள் அநேகமான வீடுகளில் வானொலியை நிறுத்திவிடுவார்கள் .நாங்களும் மீண்டும் கை கால் கழுவி பாடப்புத்தகங்களை தூக்கி கையில் வைத்துக்கொள்வோம். அப்பா வரும்பொழுது நாங்கள் எல்லாரும் படித்து கொண்டிருக்க வேண்டும்...

வரவேற்பறையில் வானொலியை மிகவும் மெதுவாக போட்டு பாட்டியும் அம்மாவும் கேட்டு கொண்டிருப்பார்கள்.எட்டு மணிக்கு முஸ்லிம் நிகழ்ச்சி குறிப்பும் சலவாத் ஒதலும் என்று தொடங்கும்.தண்ணி குடிக்க போற சாட்டில் இரண்டு மூன்று தடவைகள் மேசையை விட்டு எழுந்து போய் நேரத்தை பார்த்து கொள்வேன். முஸ்லிம் நிகழ்ச்சி என்றவுடன் எனக்கு பசிக்க தொடங்கி விடும் .அம்மா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுவார் .மேசையில் இருந்து சாப்பிட்ட படியே ஒவ்வொருத்தரும் தங்களது அன்றைய நிகழ்ச்சியை பற்றி பேசுவார்கள்.

அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை.

தொழிற்சாலையில் வானொலி ஆங்கிலத்தில அலறும் ,என்ன பாட்டு என்றும் விளங்காது சிலர் ரசிப்பார்கள் நானும் ரசிக்கிற மாதிரி தலையை ஆட்டிகொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தின் பின்பு இயர் பிளக் இரண்டு காதினுள்ளும் இறுக்கி போட்டு வேலையை செய்து கொண்டிருப்பேன்.மூன்று மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது எர்லாம் அடிக்க கூடியதாகமொபைலில்  வைப்ரேசன் மோட்டில்  எலார்ம் செட் பண்ணிவைத்துள்ளேன்.அது என்னை உழுக்கி டேய் வீட்டை போற நேரம் வந்திட்டடா என்று உணர்த்தியவுடன்,பாதுகாப்பு கவசங்களை எல்லாம் கழற்றி வைத்து போட்டு சி யு டுமாரோ,கவ் நைஸ் இவினிங் என்று சக தொழிலாளிமாருக்கு சொல்லி போட்டு வெளியே வந்து காரை ஸ்டாட் பண்ணுவேன் வானொலி அவுஸ்ரேலியா,அமெரிக்கா ஐரோப்பியா செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்புவார்கள்.நானும் கறுப்பு அவுஸ்ரெலியன் என்ற நினைப்பில சர்வதேச அரசியலை பற்றி மனதில் நினைத்தபடி வீட்டை நோக்கி காரை செலுத்துவேன்.

கையில் மொபைல் காதில் இரண்டு பக்கமும் சிறிய சிபிக்கர் மாட்டிய தலையை ஆட்டியபடி மொபைலை பார்த்து கொண்டு சிரித்த படி அறையிலிருப்பாள் மகள் என்னை கண்டவுடன் ‍ஹலோ அப்பா என்பாள் .நானும் பதிலுக்கு ‍ஹலோ சொல்லி போட்டு

"ஏன் மொபைலை பார்த்து கண்ணை பழுதாக்கிறீர் டி.வி யை போட்டு பாருமன்"

"தாத்தா பழைய படம் பார்க்கிறார்  தட் இஸ் போரிங்"

"மற்ற டி.வி அறையிலிருக்குதானே  அதில போய் பார்க்கலாம்  தானே"

"அம்மா டெலி டிராமா பார்கின்றார் I hate it! "

"லப்டொப் ,tablet,  iPad அதுகளில் பார்க்கலாம்"

"லப்டொப்போ அதைதானே நீங்கள் வைச்சு தட்டி கொண்டிருப்பியள்"

" அப்பா இது  Whatsapp"

"அது என்ன"

"It is a type of social media and you can only do it through your mobile phone "

"எங்க அக்கா "

"அவவின்ட அறைக்குள்ள இருக்கிறா"

"என்ன செய்யிறாள்"

"She is on Instagram"

"வட் இஸ் தட்"

"It is also a kind of social media"

அக்கா  அதில இருக்கிறா என்று எப்படி உமக்கு தெரியும்

"I just texted her "

"அந்த அறைக்கும் இந்த அறைக்குமிடையில் சோசல் மீடியாவில் கொமினிகேட் பண்ணுறீயள்"

நானும் பேஸ்புக்கில்  இருக்கிறன். உங்களை காணக்கிடைக்கிறதில்லை பேஸ் புக் அல்சோ சோசல் மீடியா நோ?

அப்பா உங்களுக்கு விளங்கப்படுத்துறதிற்க்குள் அடுத்த சோசல் மீடியா வந்திடும் நீங்கள் இப்ப போய் பேஸ் புக்கில் வார கொமன்ட்ஸ்க்கு லைக் போடுங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலமை பக்திப்பாட்டுக்களிலை தொடங்கி பேஸ்புக்கிலை வந்து நிக்கிது....:)

புத்தன் சும்மா சொல்லக்கூடாது மண்வாசனையை பிரட்டி உருட்டி சிலையே செய்திட்டியள்..... Super

உங்கடை கதையை குமாரசாமியும் "வாவ்" என்று சொல்லி லைக் பண்ணுகின்றார்  Facebook Daumen hoch klein

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/07/2016 at 10:18 PM, குமாரசாமி said:

காலமை பக்திப்பாட்டுக்களிலை தொடங்கி பேஸ்புக்கிலை வந்து நிக்கிது....:)

புத்தன் சும்மா சொல்லக்கூடாது மண்வாசனையை பிரட்டி உருட்டி சிலையே செய்திட்டியள்..... Super

உங்கடை கதையை குமாரசாமியும் "வாவ்" என்று சொல்லி லைக் பண்ணுகின்றார்  Facebook Daumen hoch klein

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கு.சா.......

பச்சை புள்ளிகள் இட்ட நவீனன்,ஆதவன்,நுணாவிலன்,யாழ்கவி ஆகியோருக்கும் ரொம்ப நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

காலமை பக்திப்பாட்டுக்களிலை தொடங்கி பேஸ்புக்கிலை வந்து நிக்கிது....:)

புத்தன் சும்மா சொல்லக்கூடாது மண்வாசனையை பிரட்டி உருட்டி சிலையே செய்திட்டியள்..... Super

இதைவிட நச்சுன்னு அழகாச் சொல்ல முடியாது. ஆனாலும் அந்த எலுமிச்சை தனக்குப் பேஸ்ட் தந்தவன் எங்கேயென ஏங்கியபடிதானிருக்கும்....! tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

அந்த எலுமிச்சை இப்ப இருக்குதோ இல்லையோ நான் அறியேன்tw_tounge_wink:.....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஸ்கூல் போற நாளையில காலேல எழும்பி குளிக்கிறேல்லையா

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக் கூட வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளுக்கு அப்பால் எந்த ஒருவராலும் மறக்க முடியாத சந்தோசமான வாழ்வு.

நாம பள்ளி போற நேரம் யாரும் டூட் பேஸ்ட் பாவித்ததென்று கேள்விப்பட்டது கிடையாது.கரியும் கோபால் பற்பெடியும் தான்.கோபால் பற்பொடியில் பல் துலக்கும் போது துப்புவமா அல்லது விழுங்குவமா என்று இரக்கும் .அதன் சுவை அப்படி இருக்கும்.பாட்டாவின் விலை 3.99.இப்ப யாருமே நம்ப மாட்டாங்க.

புத்து ரொம்ப தூரம் கொண்டு போயீட்டீங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/07/2016 at 8:14 PM, suvy said:

On 13/07/2016 at 6:18 AM, ரதி said:

புத்தன் ஸ்கூல் போற நாளையில காலேல எழும்பி குளிக்கிறேல்லையா

எங்கன்ட ஊரில் மைனஸில் வெப்ப நிலை அதனால் குளிக்கிறதில்லை..கிணற்றுதண்ணி மைனசிலும் உறையாது.

On 13/07/2016 at 8:34 AM, ஈழப்பிரியன் said:

பள்ளிக் கூட வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளுக்கு அப்பால் எந்த ஒருவராலும் மறக்க முடியாத சந்தோசமான வாழ்வு.

நாம பள்ளி போற நேரம் யாரும் டூட் பேஸ்ட் பாவித்ததென்று கேள்விப்பட்டது கிடையாது.கரியும் கோபால் பற்பெடியும் தான்.கோபால் பற்பொடியில் பல் துலக்கும் போது துப்புவமா அல்லது விழுங்குவமா என்று இரக்கும் .அதன் சுவை அப்படி இருக்கும்.பாட்டாவின் விலை 3.99.இப்ப யாருமே நம்ப மாட்டாங்க.

புத்து ரொம்ப தூரம் கொண்டு போயீட்டீங்க.

நன்றிகள் ஈழப்பிரியன் ..வருகைக்கும் கருத்துபகிர்வுக்கும்....உதை பந்தாட்டம் விளையாடும் பொழுது கொல்போஸ்ட்டாக பாட்ட செருப்பை இரண்டு பக்கமும் கழட்டி விடுவோம் ....tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மனைவி விடியவே பிள்ளைகளுக்கு சீரியல் கொடுத்துவிட்டு சீரியல் பார்க்க;  பிள்ளைகள் காதிலை ஒன்று கையிலை இன்னுமொன்று, தொலைக்காட்சி தன்பாட்டில ஓட, போன் அடித்தால் அப்பா நீங்க ஒருக்க எடுங்கோ என்று சொல்லும் காலம் வீட்டில்.

புத்தன் சொல்லி வேலையில்லை அப்படி ஓவ்வொரு வீட்டிலும் நடக்கின்றதை எழுதியுள்ளீர்கள். அந்த காலம் இனி வருமா? .

முத்திரை சேகரிக்க ஒரு அல்பம் அதை மற்றவர்களிடம் கொடுத்து மாற்றும் அனுபங்கள் எல்லாம் இப்ப இல்லை. எல்லாம் facebook, whatsup, email, etc...

இப்ப சேகரிக்கும் ஆர்வமே அதிகம் பிள்ளைகளிடம்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை

சொல்லி வேலையில்லை

அந்த காலம் இனி வருமா? 

இலங்கை வானோலி எமது வாழ்க்கையில் பின்னிப் பினைந்தது என்பதை மறுக்க முடியாது.

இதே போல் சனி, ஞாயிறுகளில் என்ன செய்தீர்கள் என்பதையும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், இன்று தான் உங்கள் கதையை வாசிக்க முடிந்தது!

தலை முறைகளுக்கிடையில் எப்போதுமே விரிந்த படி செல்லும் இடைவெளியை.. உங்கள் கதை அருமையாகச் சொல்லிச் செல்கிறது!

நானும் இலங்கை வானொலியை இப்போதும் மிஸ் பண்ணுகிறேன்! என்னைப் போல பலர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! உங்களுக்கு ஏதாவது அன்பளிப்பாகத் தர வேண்டுமென நினைத்தேன்!

எல்லாமே இருப்பவனுக்கு என்னத்தைக் கொடுக்கிறது என்ற தடுமாற்றம் என்னைப் பாதித்தாலும் உங்களுக்காக.. இந்தக் குசேலரின் அன்புப் பரிசாக...!

Edited by புங்கையூரன்

  • 2 weeks later...

இன்றுதான் கதைகள் வாசிக்க கொஞ்சம் நேரம் கிடைத்தது. தலைமுறை இடைவெளிகளை நகைச்சுவையுடன் எழுதி உள்ளது நன்றாக இருக்கு

மற்றது இலங்கை வானொலியில் காலையில் வரும் நிகழ்ச்சியின் பெயர் 'பொங்கும் பூம்புனல்'.. பூங்குழல் அல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நிழலி வருகைக்கும், சுட்டி காட்டியமைக்கும்.

On 10/07/2016 at 9:34 PM, putthan said:

.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வானொலியின் நினைவலைகளை மீட்டியமைக்கு புத்தனுக்கு நன்றி.

நான் பொங்கும் பூம்புனலைத் தவிர எதுவும் கேட்குமளவிற்கு வீட்டில் நின்றதில்லை. ஆனாலும் மற்றைய நிகழ்ச்சிகள் பரிச்சயமானவையே. 

இப்போது email எல்லாம் இளவயதினர் பாவிக்க விரும்புவதில்லை. Snapchat தான் அவர்கள் விரும்புவது.

சமூகவலைத் தொடர்பாடல் virtual reality, augmented reality எல்லாவற்றையும் உள்வாங்கி இன்னும் விரிவடையும். மனிதர்கள் பல்வேறு வகையான bot வடிவில் உள்ள உதவியாளர்களைப் பாவித்து நாளாந்தக் கடமைகளைச் செய்வார்கள். சிலநேரம் யாழில் எனக்காக ஒரு bot ஐ வைத்தே கருத்து எழுதும் நிலையும் உருவாகலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிப் பருவத்தை மீண்டும் எண்ணி எங்க வைத்தபதிவு.. அந்தக் காலத்துக்கே மீண்டும் அழைத்து  சென்ற உங்களுக்கு

என் .பாராட்டுக்கள்

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்.. தொடருங்கள் ..

புத்தன் நாங்கள் பல்பொடியால்தான் பல்லு மினுக்குவது. பற்பசை, பிரஷ் எல்லாம் ஆறாம், ஏழாம் வகுப்புக்கு பிறகுதான். கதை விபரணம் அந்தமாதிரி உள்ளது. அதிலும் கிணற்றடி சீன் சொல்லி வேலை இல்லை. tw_thumbsup: அது சரி நீங்கள் பொடிப்பயலாய் படித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அப்துல் ஹமீத் வானொலிக்கு வந்துவிட்டாரோ?

29 minutes ago, கலைஞன் said:

அது சரி நீங்கள் பொடிப்பயலாய் படித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அப்துல் ஹமீத் வானொலிக்கு வந்துவிட்டாரோ?

70 களிலேயே கே எஸ் ராஜா, சில்லையூர் செல்வராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி ஷண்முகம், விசாலம் ஹமீது போன்றவர்களுடன் சேர்ந்து அப்துல் ஹமீதும் இருந்தார் என்ற ஞாபகம். முக்கியமாக 74/75 இல் வர்த்தக சேவையில் பணியாற்றினார் என்று தெரிகிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  இன்று தான்... புத்தனின் இந்த அருமையான பதிவு கண்ணில் பட்டது.
மாணவப் பருவத்தில்... எல்லோரும், இலங்கை வானொலியின் ஓசையுடன், பின்னிப் பிணைந்து வளர்ந்தவர்கள் நாம்.
அதனை... புத்தனின் எழுத்தில் வாசிக்கும் போது... எம்முடன் வாழ்ந்து மறைந்த, 
பல நெருங்கிய குடும்ப உறவுகளின் நினைவும் வந்து, சென்றது. 
இந்தச் சிறிய கதையில்..... பாட்டி முதல், பிள்ளை வரை உள்ள....  நான்கு தலை முறைகளின் கண்ணோட்டத்தை,
மனதை தொடும் படி எழுதிய புத்தனுக்கு.... ஒரு சபாஷ்.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 01/08/2016 at 11:31 PM, கிருபன் said:

சமூகவலைத் தொடர்பாடல் virtual reality, augmented reality எல்லாவற்றையும் உள்வாங்கி இன்னும் விரிவடையும். மனிதர்கள் பல்வேறு வகையான bot வடிவில் உள்ள உதவியாளர்களைப் பாவித்து நாளாந்தக் கடமைகளைச் செய்வார்கள். சிலநேரம் யாழில் எனக்காக ஒரு bot ஐ வைத்தே கருத்து எழுதும் நிலையும் உருவாகலாம்!

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கிருபன்.....ஆள் வைச்சு கருத்தெழுதினால் தாங்காது கருத்துலகம்...

On 01/08/2016 at 11:31 PM, கிருபன் said:

இலங்கை வானொலியின் நினைவலைகளை மீட்டியமைக்கு புத்தனுக்கு நன்றி.

நான் பொங்கும் பூம்புனலைத் தவிர எதுவும் கேட்குமளவிற்கு வீட்டில் நின்றதில்லை. ஆனாலும் மற்றைய நிகழ்ச்சிகள் பரிச்சயமானவையே. 

இப்போது email எல்லாம் இளவயதினர் பாவிக்க விரும்புவதில்லை. Snapchat தான் அவர்கள் விரும்புவது.

சமூகவலைத் தொடர்பாடல் virtual reality, augmented reality எல்லாவற்றையும் உள்வாங்கி இன்னும் விரிவடையும். மனிதர்கள் பல்வேறு வகையான bot வடிவில் உள்ள உதவியாளர்களைப் பாவித்து நாளாந்தக் கடமைகளைச் செய்வார்கள். சிலநேரம் யாழில் எனக்காக ஒரு bot ஐ வைத்தே கருத்து எழுதும் நிலையும் உருவாகலாம்!

On 01/08/2016 at 11:31 PM, கிருபன் said:

இலங்கை வானொலியின் நினைவலைகளை மீட்டியமைக்கு புத்தனுக்கு நன்றி.

நான் பொங்கும் பூம்புனலைத் தவிர எதுவும் கேட்குமளவிற்கு வீட்டில் நின்றதில்லை. ஆனாலும் மற்றைய நிகழ்ச்சிகள் பரிச்சயமானவையே. 

இப்போது email எல்லாம் இளவயதினர் பாவிக்க விரும்புவதில்லை. Snapchat தான் அவர்கள் விரும்புவது.

சமூகவலைத் தொடர்பாடல் virtual reality, augmented reality எல்லாவற்றையும் உள்வாங்கி இன்னும் விரிவடையும். மனிதர்கள் பல்வேறு வகையான bot வடிவில் உள்ள உதவியாளர்களைப் பாவித்து நாளாந்தக் கடமைகளைச் செய்வார்கள். சிலநேரம் யாழில் எனக்காக ஒரு bot ஐ வைத்தே கருத்து எழுதும் நிலையும் உருவாகலாம்!

On 02/08/2016 at 0:57 AM, நிலாமதி said:

பள்ளிப் பருவத்தை மீண்டும் எண்ணி எங்க வைத்தபதிவு.. அந்தக் காலத்துக்கே மீண்டும் அழைத்து  சென்ற உங்களுக்கு

என் .பாராட்டுக்கள்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் நிலாமதி

On 04/10/2016 at 9:06 PM, ஜீவன் சிவா said:

நன்றிகள் ஜீவன் ,ஒலிநாட இணைப்பிற்கு நன்றிகள் பல.....

On 05/10/2016 at 4:37 AM, sathiri said:

வாழ்த்துகள்.. தொடருங்கள் ..

நன்றிகள் குருவே 

On 05/10/2016 at 1:07 PM, கலைஞன் said:

புத்தன் நாங்கள் பல்பொடியால்தான் பல்லு மினுக்குவது. பற்பசை, பிரஷ் எல்லாம் ஆறாம், ஏழாம் வகுப்புக்கு பிறகுதான். கதை விபரணம் அந்தமாதிரி உள்ளது. அதிலும் கிணற்றடி சீன் சொல்லி வேலை இல்லை. tw_thumbsup: அது சரி நீங்கள் பொடிப்பயலாய் படித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே அப்துல் ஹமீத் வானொலிக்கு வந்துவிட்டாரோ?

நன்றிகள் கலைஞன்....ஓம் அவர் அந்த காலகட்டத்தில் வானோலியில் பணியாற்ற தொடங்கிவிட்டார்....

On 05/10/2016 at 2:34 PM, தமிழ் சிறி said:

எனக்கு  இன்று தான்... புத்தனின் இந்த அருமையான பதிவு கண்ணில் பட்டது.
மாணவப் பருவத்தில்... எல்லோரும், இலங்கை வானொலியின் ஓசையுடன், பின்னிப் பிணைந்து வளர்ந்தவர்கள் நாம்.
அதனை... புத்தனின் எழுத்தில் வாசிக்கும் போது... எம்முடன் வாழ்ந்து மறைந்த, 
பல நெருங்கிய குடும்ப உறவுகளின் நினைவும் வந்து, சென்றது. 
இந்தச் சிறிய கதையில்..... பாட்டி முதல், பிள்ளை வரை உள்ள....  நான்கு தலை முறைகளின் கண்ணோட்டத்தை,
மனதை தொடும் படி எழுதிய புத்தனுக்கு.... ஒரு சபாஷ்.  :)

நன்றிகள் தமிழ்சிறி நீண்ட கருத்து பகிர்வுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

"அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை.!

நன்றி புத்தர் கன காலம் கதை கதையாம் பக்கம் தலை வைக்கவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.