Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதியேன் -சம்பந்தன்

Featured Replies

நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதியேன் -சம்பந்தன்
 
 
நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதியேன் -சம்பந்தன்
.அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரி வித்தார்.
 
மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
 
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
 
யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நட வடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் .
 
அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடும் புரிந்துணர்வோடும் செயலா ற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் விவ சாயம், கைத்தொழில் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் அபி விருத்தி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
யுத்தம் முடிவடைந்ததனால் இப்போது மீதமிருப்பது அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமே. தமிழ் தேசிய தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று உறுதிமொழி வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
முப்படைகள், நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு நடவடிக்கைகளும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் மாகாண நிர்வாக த்தின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதனால் அடுத்து வரும் பத்து வருட காலத்திற்குள் இலங்கையை சிங்கபூர் போன்ற நாடாக மாற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்

http://onlineuthayan.com/news/16876

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன ********** தனித் தமிழீழம் தீர்மானம் போட்டு தேர்தலில் நின்றீங்கன்னு.. சொல்லலாமே தலீவர் சிங்களவர்களுக்கு விளக்கமாக..!! 

பதவி கொடுத்தால்.. அம்மணமாக நிற்கத் தயங்காத ************ எல்லாம் மக்கள் தலைவரானால்.. இதுதான் கதி. :rolleyes:

நிதியையும் மத்தில கொடுத்திட்டு இவர் மாகாணத்தை எப்படி சிங்கப்பூர் ஆக்குவார். உச்சா பெஞ்சா. :rolleyes:

அப்படியே ஒற்றையாட்சியையும், போர்க்குற்றவாளிகள் தப்புவதையும் ஒருபோதும் அனுமதியேன் என்றும் சொல்லியிருந்தால் பாராட்டி இருக்கலாம். ஆனால் ******************* இதை எதிர்பார்க்க முடியாது.

தமிழின அழிப்புக்கு பெரும் துணை போன பான் கீ மூன் வருவதால் சிங்கள அரச பயங்கரவாதத்தை காப்பாற்றும் முயற்சியில் சம்சும் குழுவினர் தீவிரமாக ஈடுபடுவது தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாகவே யாழ் வரும் பான் கீ மூன் தமிழ் மக்களின் ஜனநாயக தலைவரை - முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை - தனியாக சந்திக்க வேண்டிய ராஜதந்திர மரபுமுறையை தகர்த்து, சகல சர்வதேச ராஜதந்திர மரபுமுறைகளையும் மீறி சிங்கள அரச பயங்கரவாதத்தின் கைக்கூலியாக இயங்கும் கோமாளி கூரேயை மட்டும் சந்திக்கும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழின அழிப்புக்கு பெரும் துணை போன பான் கீ மூன் இது போன்ற ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பது அவரின் தமிழின விரோத செயற்பாடுகளை மேலும் உறுதிப்படுத்துகிறது.

கண்துடைப்புக்கு பேப்பர் அரசியல் செய்யும் சம்பந்தன் தலைமையில் சந்திப்பது தமிழினத்துக்கு பான் கீ மூன் செய்யும் இன்னொரு மாபெரும் துரோகமாகும். இதற்கு சம்சும் கும்பல் துணை போவது தமிழினத்துக்கு கிடைக்கும் இன்னொரு பின்னடைவு.

  • கருத்துக்கள உறவுகள்

 நாரதருக்கு வாய்ச்ச ..........போல, தமிழனுக்கென்றே வாய்ச்சிருக்குதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

யுத்தம் முடிவடைந்ததனால் இப்போது மீதமிருப்பது அபிவிருத்தி நடவடிக்கைகள் மட்டுமே. தமிழ் தேசிய தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று உறுதிமொழி வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எவண்டா இவருக்கு இந்த உரிமையை குடுத்தது??? tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எவண்டா இவருக்கு இந்த உரிமையை குடுத்தது??? tw_angry:

சும்மா ஆடுமா குடும்பி.....

மெல்ல சொல்லிப்போட்டமில்ல.....

என்ன செய்வீங்க? என்ன செய்வீங்க....????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

தமிழ் தேசிய தலைவர்

தனக்குத் தானே பெயர் சூட்டி மகிழ்கிறார் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எதிர்க்கட்சி  தலைவரானது  மாதிரி அடுத்த பிரதமர் ஆனாலும் ஆகலாம் சம்பந்தர்.

அத்தூண்டு அளவிற்குச் சிங்களத்திற்கு ஊதுகின்றார்.

நாட்டை பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பரவலாக்கி, இந்த நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் சகல கட்சிகளும் இணைந்து இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது வேறு விதமாக செல்கிறது. நாட்டில் யுத்தம் இல்லை. இதற்கு பிறகு எமக்கு போர் வேண்டாம். போருக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

யாராக இருந்தாலும் நாம் இணைந்து வாழவேண்டும். எமது பிள்ளைகள் இனிமேல் இறக்கும் தேவையில்லை.

புத்த பகவான் கூறியது போல் நமது வாழ்க்கையை கொண்டு நடத்தினால், எந்த பிரச்சினையுமில்லை. அனைவரும் இணைந்திருக்க முடியும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாடு முன்னேற வேண்டும். நாடு முன்னேறினால், நாட்டில் வாழும் மக்கள் தற்போது இருப்பதை விட சிறப்பாக வாழ முடியும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/115793

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய உலக அரங்கில் 
சிங்களவன் போல் சிறந்த அரசியல் சாணக்கியரை 
காணகிடைக்கவில்லை.

"அடிமைகளாக கிடக்க மறுப்பவர்கள் பயங்கரவாதிகள்"
                                                                                      இப்படிக்கு .....
                                                                                       ஈழ -தமிழன்  

  • கருத்துக்கள உறவுகள்

அமிரின் பாசறையில் வளர்ந்த செல்லக்குஞ்சின் கருத்தை பாருங்கள். மார்கழிக்குள் தீர்வு என்ற சொன்ன மாதிரி இருக்கு. எல்லாவற்றையும் திசை திருப்ப ஒரு நாளும் பிரிய விட மாட்டேன், கே.பியை ஏன் உள்ளுக்குள் போடவில்லை என்று சிறு குண்டுகளை ஆங்காங்கே போடப்பார்க்கிறார்  தமிழ் மக்களை ஏமாற்றும் சம்பந்தர். தீர்வு என்ன நிலையில் உள்ளது என்று வாக்களித்த மக்களுக்கு சொல்ல வேண்டும். மகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேசியவற்றை தமிழ் மக்களுக்கு மறைத்தவரும் இவரே என்பதை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

அமிரின் பாசறையில் வளர்ந்த செல்லக்குஞ்சின் கருத்தை பாருங்கள். மார்கழிக்குள் தீர்வு என்ற சொன்ன மாதிரி இருக்கு. எல்லாவற்றையும் திசை திருப்ப ஒரு நாளும் பிரிய விட மாட்டேன், கே.பியை ஏன் உள்ளுக்குள் போடவில்லை என்று சிறு குண்டுகளை ஆங்காங்கே போடப்பார்க்கிறார்  தமிழ் மக்களை ஏமாற்றும் சம்பந்தர். தீர்வு என்ன நிலையில் உள்ளது என்று வாக்களித்த மக்களுக்கு சொல்ல வேண்டும். மகிந்தவுடன் மூடிய அறைக்குள் பேசியவற்றை தமிழ் மக்களுக்கு மறைத்தவரும் இவரே என்பதை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அவருடைய நண்பர்கள்

தோழர்கள்

உடன்பிறப்புக்கள்

அனைவரும் போய்விட

இவர் மட்டும்  கோலோச்சுகிறார் என்றால் சும்மாவா??????

3 hours ago, விசுகு said:

அவருடைய நண்பர்கள்

தோழர்கள்

உடன்பிறப்புக்கள்

அனைவரும் போய்விட

இவர் மட்டும்  கோலோச்சுகிறார் என்றால் சும்மாவா??????

தமிழ் நாட்டில் பிறந்து இருந்தால் கருணாநிதியையே அவரின் குடும்பத்துடன் தி.மு.க விட்டு வெளியேத்தியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அவருடைய நண்பர்கள்

தோழர்கள்

உடன்பிறப்புக்கள்

அனைவரும் போய்விட

இவர் மட்டும்  கோலோச்சுகிறார் என்றால் சும்மாவா??????

ஈழத்து தமிழனை அழிக்கப் பலபேர் தேவையில்லை இவர் ஒருவரே போதும் என்று ஆண்டவனே விட்டு வைத்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

 மேடையில ஏறி சிங்களவரையம், அரசியல் எஜமானர்களையும்  குளிர்விக்க வீரவசனம் பேசமுதல், தேர்தல் மேடையில் ஏழைத் தமிழரின் வாக்கு வேண்டி, தங்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், உம்மை மேடை ஏற்றிய ஏமாளிகளையும்  கொஞ்சம் நினைத்துப் பாத்தருள்வீராக.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த எம்பி எலெக்சன் எப்போ ? ரெல் மீ.. மேடை பிரச்சார லிங்குகளை அனுப்பிவிடுங்கப்பா.. காண ஆவலாக உள்ளேன்tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடுத்த எம்பி எலெக்சன் எப்போ ? ரெல் மீ.. மேடை பிரச்சார லிங்குகளை அனுப்பிவிடுங்கப்பா.. காண ஆவலாக உள்ளேன்tw_dizzy:

வணக்கம் ரத்தமே

நலமா??

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வாத்தியார் said:

ஈழத்து தமிழனை அழிக்கப் பலபேர் தேவையில்லை இவர் ஒருவரே போதும் என்று ஆண்டவனே விட்டு வைத்திருக்கின்றார்.

வாத்தியார் உங்கடை கருத்தைப்பார்த்தால் ஆண்டவனே முடிவு எடுத்திட்டார் எம்மை அழிக்க என்பது போல எல்லோ இருக்குது.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ச்ம்மந்தன் அரசிடம் சம்பளம் பெறுகிறார் அவர் அப்படித் தான் கதைப்பார். அரசிடம் சம்ப்ளம் பெற்றுக் கொண்டு நாட்டைப் பிரிக்க அவர் என்ன லூசா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29.8.2016 at 10:36 PM, Dash said:

தமிழ் நாட்டில் பிறந்து இருந்தால் கருணாநிதியையே அவரின் குடும்பத்துடன் தி.மு.க விட்டு வெளியேத்தியிருப்பார்.

எந்த எதிரியும் மரணித்த பின் அவர்களைப்பற்றி விமர்சிப்பதையோ வஞ்சனை பாடுவதையோ விரும்புவதில்லை.
ஆனால்.....


சம்பந்தனும் கருணாநிதியும் இறந்த தினத்தை தமிழர்களின் திருநாளாக கொண்டாடுவேன்.


நான் துவக்கெடுத்து போராடவில்லை.ஆனால் தமிழர்களின் துயரம் எத்தகையது என்பதை நன்கறிவேன்.

19 minutes ago, குமாரசாமி said:

எந்த எதிரியும் மரணித்த பின் அவர்களைப்பற்றி விமர்சிப்பதையோ வஞ்சனை பாடுவதையோ விரும்புவதில்லை.
ஆனால்.....


சம்பந்தனும் கருணாநிதியும் இறந்த தினத்தை தமிழர்களின் திருநாளாக கொண்டாடுவேன்.


நான் துவக்கெடுத்து போராடவில்லை.ஆனால் தமிழர்களின் துயரம் எத்தகையது என்பதை நன்கறிவேன்.

அதை கொண்டாட தமிழ் இனம் என்று ஒரு இனம் உலகத்தில் இருக்குமா??? ஏன் என்றால் தமிழ் இனம் அழிந்தால் பிறகு தான் இவங்களுக்கு மரணம் வரும் போல் உள்ளது !!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர் என்னத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறியள்?

நடைமுறைக்கு சாத்தியமே அற்ற தமிழ் ஈழம் தான் தீர்வு

என்று இன்னுமொருக்கா சூளுரைக்க சொல்றியளோ

 

ஒரு காலத்தில் சொன்னதையே கால மாற்றத்தின் பின்னும்

உலக அரசியல் மாறிய பின்னும் சொல்வதற்கு

அவர் ஒன்றும் மோட்டு தீர்க்க தரிசி இல்லை

 

எல்லாமும் இல்லாமல் போன பிறகும்

இப்ப இருக்கும் ஒரே வழி இருப்பதை

தக்க வைப்பதும் அதனூடாக பட்டுப் போயிருக்கும்

எம் இனத்தினை தழைக்க வைப்பதும் தான்

இப்ப போய் தமிழீழம் தான் தீர்வு என்று சொல்லி

பேய்க்காட்டும் அரசியலை செய்து உலக நாடுகளை

எதிர்க்க சம்பந்தன் தயாரில்லை

 

சம்பந்தன் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருக்கலாம்

ஆனால் இப்ப இவர் சொன்னது சரியானது

இல்லை என்பவர்கள் இலங்கை போய் அரசியல் செய்து

வென்று காட்டுங்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, வைரவன் said:

ஒரு காலத்தில் சொன்னதையே கால மாற்றத்தின் பின்னும்

உலக அரசியல் மாறிய பின்னும் சொல்வதற்கு

அவர் ஒன்றும் மோட்டு தீர்க்க தரிசி இல்லை

 

எல்லாமும் இல்லாமல் போன பிறகும்

இப்ப இருக்கும் ஒரே வழி இருப்பதை

தக்க வைப்பதும் அதனூடாக பட்டுப் போயிருக்கும்

எம் இனத்தினை தழைக்க வைப்பதும் தான்

இப்ப போய் தமிழீழம் தான் தீர்வு என்று சொல்லி

பேய்க்காட்டும் அரசியலை செய்து உலக நாடுகளை

எதிர்க்க சம்பந்தன் தயாரில்லை

உங்களை போலை ஆக்களுக்கு காலமும் மாறும் நிலைமையும் மாறும்.....நீரோட்டமும் மாறும் சூழ்நிலையும் மாறும்...
அதற்கேற்ப சம்பந்தனும் மாறுவார்....பீரங்கி மாவையும் மாறுவார் நேற்று வந்த சுமந்தியும் மாறுவார்..
ஆனால் சிங்களவன் இருந்த இடத்திலேயே பிடிச்ச பிடியிலையே இருந்தவன் இருக்கிறான் இருப்பான்........

அது சரி உங்கடை தீர்க்கதரிசிக்கு தமிழர் பிரச்சனையை தீர்க்க இன்னும் எத்தினை வருசம் வேணுமாம்?

இன்னும் கொஞ்ச நாளையாலை தமிழருக்கு பிரச்சனையே இல்லையெண்டு சொன்னாலும் சொல்லக்கூடிய கூத்தமைப்பு தேவாங்கு கூட்டங்கள்.tw_blush:

  • தொடங்கியவர்
கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் பற்றி சிந்திப்போம்
மாத்­தறை சமாதி சமூக அபி­விருத்திச் சங்­கத்தில் 2016.08.28 ஆம் திக­தி­யன்று எதிர்க்­கட்சித் தலைவர் ஆர். சம்­பந்தன் ஆற்­றிய ஆங்­கில உரையின் தமிழாக்கம்
showImageInStory?imageid=294502:tn
 

மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரணவின் அழைப்பின் பேரில், வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்­றத்தின் குழுக்­களின் பிரதித் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், யாழ்ப்­பாண மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன், வண. தேரர்கள் உட்­பட கலந்­து­கொண்ட, சமாதி சமூக அபி­விருத்தி மன்­றத்தின் 19 ஆவது குழுவின் இச்­சி­றப்­பு­மிக்க இவ்­வி­ழாவில் பங்­கேற்­ப­தற்­காக மாத்­த­றைக்கு வருகை தரக் கிடைத்­த­மை­யா­னது எனக்குக் கிடைத்த பாக்­கி­ய­மாகக் கரு­து­கிறேன்.

இந்த விழாவில் பங்­கேற்­கு­மாறு, சில வாரங்­க­ளுக்கு முன்னர் புத்­திக பத்­தி­ரண எனக்கு அழைப்பு விடுத்­த­போது அவ்­வி­ழாவில் அதன் போது இதில் நான் பங்­கேற்­ப­தாக மிகவும் ஆர்­வத்­து­டனும், விருப்­பத்­து­டனும் தெரிவித்தேன். இவ்­வி­ழாவில் பங்­கேற்­ப­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­த­தை­யிட்டு நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­வ­துடன், இதன் போது நான் பல விட­யங்­களைக் கற்­ற­றிந்து கொண்டேன்.

மாத்­தறை என்­பது இந்­நாட்டின் பழைமை வாய்ந்த மாவட்­டங்­களில் ஒன்­றாகும். மேலும் இது­வொரு வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க நக­ர­மா­கவும் விளங்­கு­கின்­றது. சில காலம் இது றுஹு­ணு­ இ­ரா­ச­தா­னியின் ஒரு பகு­தி­யா­கவும் காணப்­பட்­டது. றுஹுணு இரா­ச­தானி போர்த்­துக்­கே­ய­ரினால் கைப்­பற்­றப்­பட்­டது. அதன் பின்னர் ஒல்­லாந்­த­ரி­னாலும், ஆங்­கி­லே­ய­ரி­னாலும் கைப்­பற்­றப்­பட்­டன. 1947 ஆம் ஆண்­டிலே இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைக்கப் பெற்­றது. புத்­திக பத்­தி­ரணவுடன் நான் மாத்­தறை பிர­தே­சத்தின் முக்­கிய இடங்­க­ளுக்குச் சென்றேன். மாத்­த­றையில் உள்ள பிரி­வெனா ஒன்­றிற்கும் சென்றேன். இதற்கு சிறிது தூரத்தில் மாத்­தறை பிர­தே­சத்தில் புரா­தன சிவன் கோயி­லொன்று உள்­ள­தாக அங்­கி­ருந்த பிர­தான தேரர் எனக்குக் கூறினார். தற்­போது அது புரா­தன நினைவுச் சின்­ன­மாக காட்­சி­ய­ளிக்­கின்­றது. புகழ்­பெற்ற வர­லாற்­றா­சி­ரி­ய­ரான போல் பீரிஸ் என்­ப­வரின் கூற்­றுப்­படி இலங்­கையின் புரா­தன வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க 5 சிவன் கோயில்கள் இருந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. திரு­கோ­ண­மலை­யில்­ உள்ள திருக்­கோ­ணேஸ்­வரம், மன்­னா­ரி­லுள்ள திருக்­கே­தீஸ்­வரம், சிலா­பத்­தி­லுள்ள முன்­னேஸ்­வரம், யாழ்ப்­பா­ணத்தின் நகு­லேஸ்­வரம் மற்றும் தெற்­கி­லுள்ள (மாத்­தறை)தொண்­டேஸ்­வரம் என்­பன அவை­க­ளாகும். இவ்­வாறு நினைவுச் சின்­ன­மாக காணப்­ப­டு­வது அப்­ப­ழைமை வாய்ந்த தொண்­டேஸ்­வரம் கோயி­லாக இருக்­க­லா­மென நான் உறு­தி­யாக நம்­பு­கிறேன். அவ்­வாறே நான் விஷ்ணு தேவா­ல­யத்­திற்கும், கதிர்­காமம் தேவா­ல­யத்­திற்கும் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்டு ஆசிர்­வா­தத்தைப் பெற்றுக் கொண்டேன். அதன் மூலம் நான் நம்­மி­டை­யி­லான சம­மான தன்­மை­களைப் புரிந்து கொண்டேன். முக்­கி­ய­மாக சிங்­கள பௌத்த மக்­களும் மற்றும் தமிழ் இந்து மக்­களும் வர­லாற்று ரீதி­யா­கவும், கலா­சார ரீதி­யா­கவும் ஒரே மரபு பண்­பாட்டுப் பங்­கா­ளர்­க­ளாகக் காணப்­படு­கின்றோம் என்­பது புல­னா­கின்­றது.

சுதந்­திரம் அடைந்­ததன் பின்னர் மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக நம்­மி­டையே மோதல்கள் ஏற்­பட்­டன. அதன் மூலம் உலகில் ஏனைய நாடுகள் அடைந்து கொண்ட அபி­வி­ருத்­தியை நோக்கி எம்மால் பய­ணிக்க முடி­ய­வில்லை. ஆசி­யா­வி­லுள்ள மிகவும் சிறிய நாடான சிங்­கப்­பூரை சற்று நோக்­கு­வோ­மே­யானால் அதன் பிர­த­ம­ராக பத­வி­வ­கித்த லீ க்வான் யு இலங்­கையைப் போன்று சிங்­கப்­பூ­ரையும் அபி­விருத்தி செய்ய வேண்டும் என விரும்­பினார். எனினும் எமக்கு நாம் பய­ணிக்கும் பாதையில் மாற்றம் ஏற்­பட்­ட­துடன், சிங்­கப்­பூரா­னது அதன் நோக்கை எய்தி முன்­னேற்­ற­ம­டைந்­தது. இன்று இலங்­கையில் தொழி­லாளி ஒருவர் உழைப்­பதைப் போன்று நூறு மடங்­கிலும் அதி­க­மான தொகை­யினை சிங்­கப்­பூரைச் சேர்ந்த தொழி­லாளி ஒருவர் உழைக்­கின்றார். சிங்­கப்பூர் என்­பது இந்த வல­யத்­தி­லுள்ள மிகவும் அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு­களுள் ஒன்­றாகும். எல்லா நாடு­க­ளிலும் ஒவ்­வொரு காலத்தில் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. ஐரோப்பா, அமெரிக்கா, ஆபி­ரிக்கா மற்றும் ஆசியா ஆகிய எந்த வல­யத்தை நோக்கினாலும் சரியே அந்த எல்லா நாடு­க­ளிலும் ஒரு காலத்தில் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவ்­வா­றான மோதல்­களின் ஊடாக அவர்கள் பாடங்­களைக் கற்­றுக்­கொண்­டுள்­ளனர். இதன் மூலம் அவ்­வா­றான மோதல்­க­ளுக்கு தீர்வு கண்டு, அனை­வரும் ஒன்­றி­ணைந்து தமது நாட்டை அபி­வி­ருத்தி செய்து செழிப்­பான நாடாக மாற்­றி­ய­மைத்து தமது வாழ்­வினை திருப்­தி­க­ர­மான நிலைக்கு மாற்­றி­ய­மைத்துக் கொண்­டுள்­ளனர்.

வடக்­கிலும், தெற்­கிலும் ஏற்­பட்ட மோதல்கள் பற்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரண குறிப்­பிட்டார். தெற்கில் ஏற்­பட்ட மோதல் நிலைக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான போராட்­டங்­க­ளுக்கு தலைமை தாங்­கி­ய­வர்கள் இன்று பாரா­ளு­மன்­றத்தில் இணைந்து கொண்டு முக்­கிய பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 30 வரு­டங்­களின் பின்னர் அடுத்த மோதலும் முடி­வ­டைந்­துள்­ளது. எனவே நாம் தற்­போது வடக்­கிலும் கிழக்­கிலும் வாழு­கின்ற மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான நிரந்­த­ரத்­தீர்­வு­களை தேடிக்­கொண்­டி­ருக்­கின்றோம். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அனைத்து இனங்­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன் தயா­ரிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மொன்று இந்­நாட்­டிலே இருக்­க­வில்­லை­யென புத்­திக பத்­தி­ரன கூறினார். இந்­நாட்டின் அனைத்து இன மக்­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டு­ட­னான அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் ஒன்­றினை தயா­ரிக்கும் முயற்­சியில் நாம் இப்­போ­து­ ஈ­டு­பட்­டுள்ளோம். இந்த அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மா­னது பிரிக்­கப்­ப­டாத ஐக்­கி­ய­மான நாட்­டிற்குள் அமையும் வகை­யில் ­த­யா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நா­டா­னது எப்­போதும் ஐக்­கி­ய­மான, பிரிக்­கப்­ப­டாத, ஒரு போதும் பிரிக்க முடி­யாத நாடாக இருத்தல் வேண்டும். சன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்ட தமிழ் மக்­களின் தலைவன் என்ற ரீதியில் நான் இச்­செய்­தியை உங்கள் முன் முன்­வைக்க விரும்­பு­கிறேன். இந்­நாட்டைப் பிரிப்­ப­தற்­கான எந்தத்­தே­வையும் எமக்குக் கிடை­யாது என்ற செய்­தி­யையும் நான் தெரிவிக்க விரும்­பு­கின்றேன். எனினும் இந்­நாட்டின் அனை­வ­ருக்கும் தேவைப்­ப­டு­வது மாகா­ணங்­க­ளுக்கு இடையே அதி­கா­ரத்தைப் பகிர்ந்­த­ளிப்­ப­தாகும். நாட்டின் இறைமை, ஆட்­புல ஒரு­மைப்­பாடு என்­ப­வற்­றினைப் பேணி­வ­ரு­வ­தற்­கான அதி­காரம் மத்­திய அர­சாங்­கத்­திடம் காணப்­ப­டுதல் வேண்டும். முப்­ப­டைகள் தொடர்­பான அதி­கா­ரங்கள், வெளிநாட்­ட­லு­வல்கள், செலா­வணி, நிதி, குடி­வ­ரவு, குடி­ய­கல்வு என்­பன தொடர்­பாக காணப்­பட வேண்­டிய அதி­கா­ரங்­களும் மத்­திய அர­சாங்­கத்­தி­டமே இருத்தல் வேண்டும். நாட்டின் இறைமை, ஐக்­கியம் மற்றும் ஆட்­புல ஒரு­மைப்­பாட்­டினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்­திடம் இருத்தல் வேண்டும்.

ஏனைய அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்­கி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­படல் வேண்டும். தென் மாகாண சபைக்கு அதன் மாகாண சபைக்­கு­ரிய அதி­கா­ரங்கள் இருத்தல் வேண்டும். சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கும் அவ்­வாறு தான். அதற்குச் சம­மான முறையில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்­திய உள்­ளிட்ட மாகா­ணங்­க­ளுக்கும் தமது பிர­தே­சத்­திற்­கு­ரிய அதி­கா­ரங்­கள்­ இ­ருத்தல் வேண்டும். நாட்டைப் பிரிப்­ப­தில்லை. அதி­கா­ரத்தை பகிர்தல் என்­பதே தொனிப்­பொ­ரு­ளாக அமைதல் வேண்டும். அதி­காரப் பகிர்வின் மூலம் அம்­மா­கா­ணங்­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களை தாமே அனு­ப­விப்­ப­தற்கு வாய்ப்பு ஏற்­படும். அப்­போது ஜன­நா­ய­க­மா­னது மிகவும் பயன்­வாய்ந்த ஒன்­றாக அமையும். அத­னூ­டாக பிர­தேச மட்­டத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலை­வர்­க­ளுக்கு உங்­களின் சார்­பாக அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடியும். அதன் பய­னாக உங்­க­ளுக்கு மிகவும் துரித சேவை­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வாய்ப்பு ஏற்­படும்.அதனால் தற்­போது முதல் முறை­யாக, நம்­ம­னை­வ­ருக்கும் தேசிய இணக்­கப்­பாட்­டு­ட­னான ஐக்­கிய இறைமை கொண்ட மற்றும் பிரிக்­கப்­ப­டாத ஒரு நாடாக இலங்­கையை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு உதவக் கூடிய அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் ஒன்­றினை தயா­ரிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளோம். அத­னூ­டாக அபி­வி­ருத்­தியை நோக்கிப் பய­ணிக்கக் கூடி­ய­தா­கவும் இருக்கும். அதற்­கான முயற்­சி­களை தற்­போது பாரா­ளு­மன்றம் எடுத்­துள்­ள­துடன், அர­சி­ய­ல­மைப்புச் சபை மற்றும் அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் பிர­தி­நி­திகள், அதா­வது ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜாதிக ஹெல உரு­மய, மஹிந்த ராஜ­பக் ஷவின் கூட்டு எதி­ரணி, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்­ப­வற்­றினை உள்­ள­டக்கி அமைக்­கப்­பட்­டுள்ள தொழிற்­பாட்டுக் குழு செயற்­பட்டு வரு­கின்­றது. இந்­நாட்டின் அனைத்­தின மக்­களும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் ஒன்­றினை தயா­ரித்தல் தொடர்­பாக நாம் தற்­போது கலந்­து­ரை­யாடி வரு­கின்றோம். இந்­நாட்டில் வாழு­கின்ற அனைத்து இனத்­த­வர்­க­ளதும், அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன், அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மொன்றைத் தயா­ரிப்­ப­தற்கு மேற்­கொண்­டுள்ள முதல் முயற்சி இது­வாகும். அவ்­வா­றான அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் ஒன்­றி­னை­ எம்மால் தயா­ரித்­துக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கு­மாயின் இன்னும் 10 வருட காலத்­தினுள் எமது நாட்­டையும் சிங்­கப்பூர், சுவிட்­சர்­லாந்து போன்று முன்­னேற்றம் அடையும் பொருட்டு அவர்கள் பய­ணித்த பாதையில் எமக்கும் பய­ணிக்கக் கூடி­ய­தாக அமையும்.

சமாதி அமைப்பின் ஊடாக மேற்­கொள்­ளப்­படும் பணி­யா­னது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். அவ்­வ­மைப்பு ஆங்­கி­ல­மொழி, தமிழ் மொழி, தகவல் தொழில்­நுட்பம், இலத்­தி­ர­னியல் அலு­வல்கள் மற்றும் அச்சுத் துறை தொடர்­பான பயிற்­சிகள் உங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­துடன், அது தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு வாய்ப்­பா­கவும் அமையும். நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்து முன்­னோக்கிப் பய­ணிக்கும் போது அவ்­வா­றான துறைகள் பற்­றிய அறி­வினைப் பெற்­றி­ருத்தல் வேண்டும். ஒரு மில்­லியன் தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தாக பிர­தம அமைச்சர் கூறு­கின்றார். சீனா, இந்­தியா, ஐரோப்­பிய ஒன்­றியம், அமெரிக்கா, சிங்­கப்பூர், கொரியா உள்­ளிட்ட அனைத்து நாடு­க­ளி­ட­மி­ருந்தும் பிர­தம அமைச்சர் இலங்­கையை முன்­னேற்­று­வ­தற்­காக ஒத்­து­ழைப்­பினைப் பெற்று வரு­கிறார். இலங்­கை­யா­னது முன்­னேற்­ற­ம­டையும் பட்­சத்தில் அனை­வரும் அவ­ரவர் பெற்றுக் கொண்ட பயிற்­சிக்­கேற்ப தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொள்ள வாய்ப்­பேற்­படும். புத்­திக பத்­தி­ரண குறிப்­பிட்­டது போன்று பல மில்­லியன் தொழில் வாய்ப்­புக்­களை விடவும் மற்­றை­ய­வர்­க­ளுக்கு உங்­களால் தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்றுக் கொடுக்­கவும் வாய்ப்பு ஏற்­படும். பாரிய அளவில் தொழில் வாய்ப்­புக்கள் உரு­வா­வ­தனால் இவ்­வாய்ப்­பினை நழு­வ­விடக் கூடாது. ஐக்­கிய பிரிக்­கப்­ப­டாத இலங்கை என்ற வட்­டத்­தினுள் அனைத்து விட­யங்­களும் இடம்­பெ­று­வ­துடன், சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம் மற்­றும் ­ப­றங்­கியர் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்­க­ளா­யினும் அனை­வ­ரதும் உரி­மை­களும் பாது­காக்­கப்­படும்.

பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்­தவம் உள்­ளிட்ட சம­யங்கள் இந்­நாட்டில் உள்­ளன. அவை உலகில் முக்­கிய சம­யங்­க­ளாக விளங்­கு­கின்­றன. பௌத்த சம­யத்­துக்கும் இந்து சம­யத்­துக்கும் இடையே பாரிய வித்­தி­யா­சங்கள் இல்லை. நீங்கள் விஹாரை ஒன்­றிற்கு அல்­லது கோயில் ஒன்­றிற்குச் சென்றால் அங்கு, விஷ்ணு, கண­பதி, சரஸ்­வதி மற்றும் முருகன் போன்­ற­ தெய்­வங்­களைக் காணலாம். நாம் அனை­வரும் புத்தர் பெருமானின் போத­னை­களைப் பின்­பற்றி நடந்தால் இந்­நாட்­டிலே எது­வித பிரச்­சி­னை­களும் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­பில்லை. கருணை, நேர்மை, மன்­னித்தல், சமத்­துவம் மற்றும் ஒத்­து­ழைப்பு ஆகிய நற்­கு­ணங்­களை புத்­த­பெ­ருமான் போதித்­துள்ளார். புத்­த­பெ­ருமான் ஒரு இந்­து­ச­ம­யத்­த­வ­ரா­கவே பிறந்தார். அவர் இந்து சம­யத்­திற்கு மெரு­கூட்­டினார். அதன் பய­னா­கவே பௌத்த சமயம் தோற்றம் பெற்­றது. எனவே நாம் அனை­வரும் பௌத்த சம­யத்தைப் பின்­பற்­றினால் இந்­நாட்­டிலே எது­வித பிரச்­சி­னை­களும் உரு­வா­வ­தற்கு இட­மில்லை. நாம் அனை­வரும் புத்தர் பெருமானுக்கு மரி­யாதை செலுத்­துதல் வேண்டும். நாம் புதிய முறை­களில் சிந்­தித்தல் வேண்டும். கடந்த காலங்­களை மறந்து, எதிர்­கா­லத்தின் பக்கம் கவனம் செலுத்­துதல் வேண்டும். நாட்­டிலே எவ்­வா­றான எதிர்­கா­ல­மொன்று தோற்றம் பெறல் வேண்­டு­மென சிந்­தித்தல் வேண்டும். சமாதி சமூக அபி­வி­ருத்தி அமைப்பின் நோக்­கமும் அதுவே. நாம் அனை­வரும் நல்ல முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குதல் வேண்டும். நாம் புத்தர் பெருமானின் போத­னை­க­ளுக்கு அமைய செயற்­படல் வேண்டும். அப்­போது இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவம் ஆகிய சம­யங்­களைப் பின்­பற்­று­வோரும் அதன் நற்­கு­ணங்கள் பற்றி புரிந்­து­கொள்ள முற்­ப­டுவர்.

நாம் அனை­வரும் கஷ்­டப்­பட்­டது போன்றே எமது பிள்­ளை­களும் பேரப் பிள்­ளை­களும் கஷ்­டங்­க­ளுக்கு ஆளாகக் கூடாது. உங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கும் மற்றும் பேரப் பிள்­ளை­க­ளுக்கும் சிறந்த எதிர்­காலம் ஒன்­றினை இந்­நாட்­டிலே பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

ஐக்­கியம் என்­பது சக­வாழ்­வுடன் இணைந்து கைகோர்க்கும் ஒரு விட­ய­மாகும். சமாதி சமூக அபி­வி­ருத்தி மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­ப­டு­கின்ற இந்த மகத்­தான பணிகள் தொடர்­பாக நான் எனது வாழ்த்­துக்­களைத் தெரடிவித்­துக்­கொள்ள விரும்­பு­கிறேன். அவர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற பணி­களின் தன்­மைகள் பற்­றிய புகைப்­ப­டங்கள் பல­வற்றை நாங்கள் பார்­வை­யிட்டோம். இப்­பு­திய அணிக்கு 1,650 மாண­வர்கள் சேர்க்கப்­பட்­டுள்­ளனர் என ­என்னால் அறிய முடிந்­தது. இது முன்னைய தொகுதி மாணவர் தொகையைப் போன்று இரு மடங்காகும். இளைஞர்களுக்கு சிறந்த நன்மையினைப் பெற்றுத் தரக் கூடிய இந்நிகழ்ச்சித் திட்டமானது மிகவும் பிரபல்யம் அடைந்துள்ள ஒன்றாக தெரிகின்றது. சமாதி சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகள் என்பவற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.

சமாதி சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு உங்களின் சார்பாக அதன் ஸ்தாபகரான பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர் மிகவும் துணிச்சல் மிக்க பிரபல்யமான ஒரு பாராளுமன்ற உறுப்பினர். மாகாண சபைகள் தேர்தலின் போதும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்.அவர் பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினராவார். அவர் மிகவும் எளிமையான மனம் படைத்த கொடை வழங்கும் தன்மையுடைய நல்லொழுக்கமிக்க ஒருவர். அவ்வாறே அவர் எதிர்காலத்தில் இந்நாட்டின் தலைவராக வரக்கூடிய பண்புகளைக் கொண்டவர். எதிர்காலத்தில் இந்நாட்டிலே மிக முக்கியமான பதவி வகிப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் வழங்கும் வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது உங்களுக்கு சிறந்ததாக அமையும் என நான் கருதுகின்றேன். புத்திக பத்திரணவுக்கும், சமாதி சமூக அபிவிருத்தி மன்றத்திற்கும் அதன் எதிர்காலப் பணிகள் சிறப்புற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=03/09/2016

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

, கதிர்­காமம் தேவா­ல­யத்­திற்கும் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்டு ஆசிர்­வா­தத்தைப் பெற்றுக் கொண்டேன். அதன் மூலம் நான் நம்­மி­டை­யி­லான சம­மான தன்­மை­களைப் புரிந்து கொண்டேன்

உங்களுக்கு முதலே எம்பெருமான் முருகன் திருமணம் செய்து நல்லிணக்கத்திற்கு வழிசெய்து கொடுத்தவன்...... 

1 hour ago, நவீனன் said:

எனவே நாம் அனை­வரும் பௌத்த சம­யத்தைப் பின்­பற்­றினால் இந்­நாட்­டிலே எது­வித பிரச்­சி­னை­களும் உரு­வா­வ­தற்கு இட­மில்லை.

தே.த சொல்லிப்போட்டார் இனி என்ன எல்லோரும் விஷ்ணுவையும் புத்தரையும் வழிபடுங்கோ ...இனப்பிரச்சனைக்கு தீர்வு 2016 இல் என்று சொன்னது இதைத்தான்.....

1 hour ago, நவீனன் said:

இன்னும் 10 வருட காலத்­தினுள் எமது நாட்­டையும் சிங்­கப்பூர், சுவிட்­சர்­லாந்து போன்று முன்­னேற்றம் அடையும் பொருட்டு அவர்கள் பய­ணித்த பாதையில் எமக்கும் பய­ணிக்கக் கூடி­ய­தாக அமையும்.

ஆசை, தோசை,அப்பளம், வடை............இன்னும் நூறு வருடம் சென்றாலும் சிறிலங்கா சிறிலங்கா மாதிரித்தான் இருக்கும்......சிங்கப்பூரை மாதிரி வரத்தான் யோசிக்கிறியள் அதை விட முன்னேற யோசிக்கவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.