Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சோழியன் அண்ணா காலமானார்

Featured Replies

சபேஸ்,  நானும் சோழியன் அண்ணாவுடன் பேஸ்புக்கில் தோட்டம் செய்து விளையாடினேன். என்னய்யா உலகம் இது? எங்களுடன் எப்படியெல்லாம் உறவாடிய மனிதர் சில நாட்களின்முன் போய்விட்டார், ஆனால் ஒன்றுமே நடந்ததுபோல் காட்டிக்கொள்ளாமல் எல்லாம் வழமை போலவே நடக்கின்றது.

Edited by கலைஞன்

  • Replies 120
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனவருத்தமான செய்தி.. தீவிரமான கடவுள் பக்தர்... மதம் பற்றிய விமர்சனப்பதிவொன்றிற்காக என்னுடன் முரண்பட்டு முகநூலில் இருந்து நீக்குவதாக சொல்லிவிட்டு நீக்கி இருந்தார்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

15027805_10154220717804891_199258905311715037092_10154220717869891_530533692590915079016_10154220717864891_2365051551384

மனவருத்தமாக இருக்கிறது அவர் மனதை புண்படுத்திவிட்டோமோ என்று இப்பொழுது நினைக்க. கருத்துகூறுகிறோம் என்று சில மனித மனங்களை கூறுபோட்டிருக்கிறோமே.. என்று...

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
திரு இராஜன் முருகவேல்
(சுந்தரராஜன்)
தோற்றம் : 15 ஏப்ரல் 1960 — மறைவு : 15 நவம்பர் 2016
117051.jpg

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜன் முருகவேல் அவர்கள் 15-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகவேல் சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபுஷ்பா அவர்களின் நேசமிகு கணவரும்,

சரோன், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு அன்னப்பிள்ளை, இராமச்சந்திரன் மற்றும் கோவிந்தம்மா, அருணாசலம் இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரத்தினவேல் சரஸ்வதி, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா, இராஜபட்சம் மற்றும் மீனாம்பாள்(கனடா), காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை(மலேசியா) இலட்சுமிப்பிள்ளை, மற்றும் வேதநாயகம், காலஞ்சென்ற முத்தாச்சி, நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவாநந்தன், பரமானந்தன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆனந்தி, ஆனந்தன்(பிரான்ஸ்), குமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சீராளன், சந்திரா(பிரான்ஸ்), குணாளன்(இலங்கை), யோகராணி(நோர்வே), ஜெயாளன்(பிரான்ஸ்), தயாளன்(நோர்வே), காலஞ்சென்ற விக்னேஷா, வினோதினி(இலங்கை), பாலம்பிகை(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), சேந்தன்(இலங்கை), காந்தன்(ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, புஸ்பநாதன்(செல்வன்), செல்வராஜா, சிவராஜா, தேவி, பரமகுரு, இராசமோகன், சிவதுரை, சிவகங்கா, சிவமணி ஜெகதீஸ்வரன், சிவயமுனா நரேந்திரன், மனோகரன்(பிரான்ஸ்), முருகமூர்த்தி(நோர்வே), ரதி(பிரான்ஸ்), கலைவாணி(நோர்வே), நிவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                  

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 30/11/2016, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: GE·BE·IN Bestattungsinstitut, Kornstraße 217, 28201 Bremen, Germany navigator.png
தொடர்புகளுக்கு
சரோன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917620102799
ஜெகதீஸ்வரன்(சகலன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915752375310
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள உறவுக்கு,,,எனது கண்ணீர் அஞ்சலி!

 

புகையிரதத்  தரிப்பிடங்களில்,,

ஏறி இறங்கும் பயணிகளைப் போன்றே,

பிறப்புக்களும்...இறப்புக்களும் என..,

இது வரை நினைத்திருந்தேன்!

 

ஆயினும்...,

விடை பெறக்கூட விடாமல்,

உன்னை அழைத்துக் கொண்ட ...,

விதியின் மீது ஏனோ..,

கோபம் தான் வருகின்றது!

 

என்னைப் போலவே...,

எந்த முதலும் இல்லாமல் தான்,,,.

நீயும் பயணித்திருப்பாய்!

உன்னுடன் கொண்டு வந்த,,,.,

பயணக் காசோலைகளைக் கூட,

நிச்சயமாய்த் திருப்பி அனுப்பியிருப்பாய்!

இதுகளெல்லாம் ...,

வெளிநாட்டுக்கு வருகுதுகள்...என்று,,

எமது மூத்தவர்களின்...,

ஏளனப் பார்வைகளில் வெந்திருப்பாய்!

எங்கள் மண்ணுக்கு,

விசாவில்லாமல் வந்தவர்கள்...,

அதனைத் தின்று ஏப்பமிட்ட்டவர்கள்,

எம் மண்ணிலேயே,

எம்மை ஏதிலியாக்கியவர்களின்,

எக்காளங்களைப் பொறுத்திருப்பாய்!

 

அம்மா, அப்பா, தம்பிகள், தங்கைகள் என..,

இரவும்.. பகலும் ..,

உறவுகளின் நினைவில் வாழ்ந்திருப்பாய்!

இரவுகளைப் பகல்களாக்கிச்...

சேர்த்த பணம் அனைத்தையும்,,,,

உறவுகளின்க னவுகள் நிச்சயம் தின்றிருக்கும்!

 

உனக்காக ஒதுக்கப்பட்ட...,

இரவுகளும்,,பகல்களும்,

ஈழ தேசத்தின்,,,,

செய்தி தேடுவதிலேயே,

கழிந்து போயிருக்கும்!

அதன் விடுதலைக்கான ஏக்கத்தில்,

உனது பொழுதுகள் கரைந்து போயிருக்கும்!

 

இருப்பினும் நண்ப,,,

நீ எவ்வளவோ ...,

எங்களுக்காக விட்டுச்செல்கிறாய்!

 

சென்று வா ..நண்பனே!

எமது இறங்குமிடம் வரும் வரைக்கும்,

நாங்களும் பயணிக்கின்றோம்!

 

எமது இனத்துக்காக..,

இருப்பதை விடவும்..,.

ஒளி மிகுந்த உலகமொன்றை,,,.

விட்டுச் செல்லும் நம்பிக்கையுடன்..,

நாங்களும் பயணிக்கிறோம்!

 

 

 

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சோழியன் அண்ணாவின் இறுதிக்கிரிகைகள் நடைபெறுகின்றன.

அமைதியாக இருப்போம் உறவுகளே....

அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம் உறவுகளே....

 

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான் மாவீரர்களை மிகவும் நேசித்தார்.

அவரின் மனதுக்கு இதமாக மாவீரர் வாரத்திலேயே இயற்கையெய்தியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாவீரர் தினத்தில் மாவீரர்களுக்காக ஒரு பாட்டை நீங்கள் எழுதித்தர அதை இசையாக உங்களுக்கு தந்தபோது உங்கள் உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சியை ,உற்சாகத்தை பார்த்து மகிழ்ந்தேன் அண்ணா ..............

இந்த மாவீரர் தினத்திலும் மாவீரர்களுக்காக ஒரு பாடலின் பல்லவியை தந்துவிட்டு சேகர் இதற்கு முதலில் மெட்டை போடுங்கள் .சரணம் விரைவில் தருகிறேன் என்று கூறி விடை பெற்றீர்கள் .ஆனால் நிரந்தரமாக விடைபெறுவீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை அண்ணா . உங்கள் இறுதி வரிகளை உங்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறேன் .
விரைவில் இசையாகவும் சமர்ப்பணம் செய்வேன் .இறைவனுள் நித்தியமாய் இளைப்பாறுங்கள் அண்ணா

Photo de இரா சேகர்.
Photo de இரா சேகர்.

https://www.facebook.com/profile.php?id=100007345609043&fref=ts

 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் மூத்த உறுப்பினரின் இழப்பு அதிர்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலையான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பர் ,அண்ணன் ,சிறந்த படைப்பாளி, நல்ல சமூக சிந்தனையாளர் என்று பல்வகையிலும் அறியப்பெற்ற சோழியன் அண்ணாவின் இழப்பு அறிந்து மனம் கனக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில்தான் யாழினைக் கண்டெடுத்தேன்.. வெகு சமீபத்தில்தான்  பிறந்த நாள் வாழ்த்துப் பகுதியைக் கண்டேன். அப்பகுதிக்குக் காரணமான  படைப்பாளியை ஏற்கெனவே (சுமார் ஒன்றரை வருடம் முன்னர்) தொலைத்துவிட்டோம் என நினைக்கவில்லை. அவருக்கு  அப்பகுதியில் ஒரு பிறந்தநாள் வாழ்த்து கூட  நான் சொல்லவில்லை. யாழ் சொந்தம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு நாள் சந்திப்போம் என்ற கற்பனையும் நம்பிக்கையும் உண்டு. சோழியன் அவர்கள் விடயத்தில் இனி அதுவுமில்லை.  இன்பியல் துன்பியல் என அத்தனை உணர்ச்சிகளும் யாழில் இவ்வளவு விரைவிலா ? 

         ' புதிய பதிவுகள் ' பகுதியில் இப்பழைய சோகம் மீண்டும் தோன்றாமலே இருந்திருக்கலாமோ ?

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சோழியன் அண்ணா  வருடங்கள் கடந்தாலும் நினைவுகள் மட்டும் நிழலாடுகிறது tw_cold_sweat:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனுக்கு என் நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நீங்காத நினைவுகளுடன் ..!

நினைவு நாள் வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

யாழுக்கு ஒரு மாபெரும் தூணாக இருந்தார்.சகலகலாவல்லவன்.

நினைவஞ்சலிகள் சோழின் மாமாவுக்கு! (நான் அவரை அண்ணா, மாமா என அழைப்பது). காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் எங்களை ஆட்டம் காணத்தான் செய்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனுக்கு என் நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாஞ்சலிகள் .......! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.