Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறுமை காரணமாக முஸ்லிமாக மதம் மாறிய முன்னாள் புலிப் போராளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

சத்தியமா ஈழத்தமிழன் வெட்கப்படவேண்டிய நிலையில்லை......மதமாற்றம் என்பது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று......அது தொடர்ந்து நடை பெற்று கொண்டிருக்கு....கட்டுரையாளர் ஈழ்ப்போராட்டாத்தால் இது நடந்துள்ளது என்பதை சொல்ல முயற்சிக்கிறார்....

  • Replies 50
  • Views 4.2k
  • Created
  • Last Reply

மதம் மாறுதல் என்பது அவரவர் சொந்த விருப்பு + நம்பிக்கை சார்ந்தது. 
இதற்குள் முன்னாள் போராளிகள், ஏழ்மை, அரசியல் என்பது எல்லாமே வெறும் கப்சாதான்.

மதம் மாறுவதால் அவர்களுக்கு எதோ ஒரு விதத்தில் மன நின்மதி கிடைக்குமாயின் சரி.

எனக்கு மத நம்பிக்கை இல்லாத காரணத்துக்காக, நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையோடு விளையாட நான் தயாரில்லை.
 
மதம் மாறுபவர்களும், மதம் மாற்றுபவர்களும் அற்பர்கள், கீழான மனநிலை உடையவர்கள் என்பது இலங்கையில் நடக்கும் மதம் மாற்றக் கூத்துக்களை அவதானித்து வந்தால் தெளிவாக விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

இந்த முஸ்லிமாக மதம் மாறியவரை மீண்டும் சைவ மதத்துக்கு மாற்ற என்ன வழி??

இங்கு இந்து மதத்திட்கு எதிராக பல கருத்துக்களை நான் பதிந்து இருக்கிறேன் 
இனியும் முடிந்த அளவில் எழுதுவேன்.

முக்கிய காரணம் எம் முன்னோர்கள் பல காலங்களை நேரங்களை செலவழித்து 
எமக்காக தேடிவைத்து சமயத்தின் ஊடாக என்றாலும் எம்மை சேர வழி வகுத்த 
அத்தனையும் எம் கண் முன்னேயே அழிகிறது ..... அதற்கு முக்கிய காரணம் 
இந்து மதம் என்ற சாக்கடைதான். 

எந்த தமிழனுக்கும் இல்லை எவனுக்கும் இந்து மதம் என்ன என்று முழுமையாக 
தெரியாதது ............ தெரியவும் முடியாது.
இன்று பாம்பு பூச்சி அனுமான் ஓணான் பிரானுக்கு கோவில் கட்டிமுடிய .....
சாயிபாபா ..... சங்கர பாபா போயி குஸ்பு ....அம்மா என்று விசர் கூத்தாட 
வழிவகுத்து தந்தது தவிர இந்து மதம் செய்த நன்மை என்று விரல் விட்டு எண்ண கூட 
ஒன்றும் இல்லை.

எமக்குள் வந்து புகுத்தப்பட்ட இந்து மதம் என்ற சாக்கடையை அப்படியே 
வடக்கு பக்கம் வாய்க்கால் வெட்டி விட்ட்டுவிட்டு ......... எமது முன்னையோர் தேடிவைத்த 
சைவ மதத்தை நாம் பின்பற்ற தொடங்கினால் ............. அவர்கள் அக்குவேறு ஆணி வேறாக 
எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அது விளங்காது போனாலும் நன்னெறி அறநெறி 
என்று ஒரு மனிதனை புடம் போடும் அரிய பண்புகளை என்றாலும் கற்று கொள்ளலலாம். 
சாதி என்று பிராமனுக்கு கழுவி ஊத்தி ............. பக்கத்து வீட்டில் உதவிக்கு இருந்தவனை 
பகைத்ததை தவிர இந்து மதம் எமது சமூகத்திட்கு செய்தது என்ன ?
மனக்குளிர்ச்சிக்கு ரஞ்சிதாவின் சீடி வந்ததை நான் மறுக்கவில்லை. 

சிவம் சக்தி 
அணுவில் இருந்து ஆகாயம் வரை இலத்திரன் புலோத்திரன் சுழற்ச்சி இல்லாமல் ஏதும் இல்லை.
ஓம் என்ற  ஓசை ஒரு மனிதனின் மனதில் எவ்வளவு அமைதியை கொடுக்கிறது.
விளக்கம் இல்லாமல் ஓராயிரம் கடவுளை வைத்திருந்து அடுத்த சந்ததியை கிறிஸ்தவனும் முஸ்லிமும் 
ஆக்காமல் எமக்கு முன்னையோர் தேடிவைத்த மூன்று நாலு கடவுளுடன் நின்றுவிடடால்.
ஆக குறைந்தது ஓரளவுக்கு மதம் என்ன என்றாவது தேடுபவர்களுக்கு விளங்கும்.

இன்று ஒரு சக மனிதனை மனிதனாக பார்க்க கூட தெரியாத ஒரு கூடடத்தை 
எமது சமூகத்தில் உருவாக்கியது எது?
மதம் மாறுவார்கள் பணத்திட்காக மாறவில்லை .......... அப்படி அவர்கள் ஏதும் அள்ளி 
கொட்டுவதும் இல்லை.
அவர்களுக்கு தம்மை இன்னொரு மனிதனாக பார்க்க ஒரு மனிதன் அங்கு இருக்கிறான் 
அந்த ஒரே ஒரு மன ஆறுதலுக்கு ........கூட இந்துக்கள் கூடத்தில் ஆள் இல்லை. 

6975_1483006890_pppppp.jpg

காரைதீவில் மிக பெரிய பிரமாண்டமான அனுமான் சிலை ஒன்று இன்று (29) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு மகா விஷ்ணு ஆலயத்தில், லண்டனில் வசிக்கும் அருமத்துரை கோபி, கோபாலகிருஸ்ணா பிரபா ஆகியோரின் அனுசரணையில் இந்த பிரமாண்டமான அனுமான் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பல கோடி செலவில் உருவான இந்த குரங்கின் சிலையால் 
காரைதீவு பெறப்போகும் நன்மை என்ன ?

இதிலும் விட இன்னொரு பெரிய குரங்கு சிலை கட்ட 
ஒருவனை அதே சமூகத்தில் உருவாக்குவது தவிர வேறு எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஓய் ...முனிவர் 
சைக்கிள் கப்பில பார்ட்டி உங்கட ஏரியாவிற்குள் வந்திட்டார் ...ஆளை வளைத்து பிடிச்சு நன்றாக கொடுத்தனுப்புங்கோ tw_blush:
சரி அதை விடுவோம் 

மதமாற்றம் பற்றி சொல்லப்போனால் ...இப்போது எங்கடை தேவை சிவசேனையும் ,கரம்சந்த் காந்தி சிலையும் தான் 
எல்லோரும் மதம்மாறி சிவனே இல்லாமல் போனபின் சேனையை வைத்துகொண்டு என்ன ம___ புடுங்கப்போரீங்கோ...?
இந்த அல்லோல கல்லோயாக்கள் முதலிருந்தே பிரட்சினைக்குரியவர்கள் தான். தமிழ்நாட்டில் தங்களோட மொள்ளமாரித்தனத்தை காட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது இவர்கள் சாயம் வெளுக்க ஆரம்பித்ததும் இலங்கைக்கு படை எடுக்க தொடங்கியிருக்கிறார்கள்
ஏஞ்சல் டீவி சாது சாமியார் இதற்க்கு உதாரணம் (வேறயாருமில்லை கடவுளுடன் கான்பரன்ஸ் ரூமில் கொலிவூட் படம் பார்த்தவர்) 
அண்மையில் இலங்கை வந்து அவரது சித்து விளையாட்டை எடுத்து விட்டிருக்கிறார் ..எமக்கு எப்போதும் கிந்தியாவின் கழிவுகளே தேவைப்படும் 
இதில் மட்டும் மத வேறுபாடே இருக்காது ....

"மதம் மாறியது வெக்கப்படவேண்டிய விசயம். ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னம்பிக்கை அற்ற செயல்."  இவ்வாறு எல்லம் கூறுவதற்கு எந்த அடிப்படைத் தகுதியும் எமக்கில்லை. மதம் மாறுவது அவனவன் சொந்த விருப்புக்கு உட்பட்டது. இந்து மதம் அல்லது சைவ மதம் என்ற கோட்பாட்டின் கீழ் ஈழத்தமிழன் என்ற பதம் எப்போதும் இல்லை. மேலும் தமிழ்மொழியை பேசுவதாலும் வடகிழக்கில் வாழ்ந்ததாலும் கூடுதலாக சிங்களவன் தமிழன் என்று சுட்டிக்காட்டி ஒடுக்குமுறையைச் செய்வதாலும் தமிழர் என்று பொதுவாக நாம் அடைமொழியை எமக்கு ஏற்படுத்துகின்றோம். தவிர நாம் ஏனைய இனங்கள் போல் வலுவான தேசிய இனம் இல்லை. அவ்வாறு வலிமையாக இருப்பதானால் அது மதத்தை கடந்த நிலையை எட்டிய பின்னரே சாத்தியாமகும். இங்கு மதங்கள் மேலான வெறுப்பு என்பதுக்கும் பிரதேசரீதியான வெறுப்பு சாதீய வெறுப்பு மற்றும் முரண்பாடுகளுக்கும் இடையில் அதிக அளவு இடைவெளி இல்லை. இவ்வாறான வெறுப்பு மற்றும் முரண்பாட்டால் தான் தேசீய இனம் என்பது வலிமையற்று போராட்டம் படுதோல்வியடைந்தது. 

இந்து அல்லது சைவமதம் என்பது ஒரு கட்டமைப்புக்கு அப்பாற்பட்டதும் சுயநலத்தையும் அடயாளத்தேடலையும் வியாபாரத்தையும் அடிப்படையாகக்கொண்ட மதம் சார்ந்த செயற்படுகளுக்குள் ஒருவன் இருக்கவேண்டிய அவசியம் எப்போதும் இல்லை. ஒரு பொதுத் தன்மையற்ற மதச் செயற்பாட்டின் அடிப்படையிலேயே பெருமளவு பணம் கோயில் புதிப்பிப்பு. கும்பாபிசேகம். திருவிழாவுக்கான ஆடம்பரம் போக்குவரத்து என செலவு செய்யப்படுகின்றது. இதில் நூறில் ஒரு பகுதி போதும் போராளிகளின் புனர்வாழ்வுக்கு. ஆனால் அடயாளத்தேடலும் சுயநலமும் வியாபாரமும் என்ற பொதுத் தன்மையற்ற நிலையால் அவை பற்றி சிந்திப்பதில்லை. இன் நிலையில் ஒருவன் மதம் மாறும்போது அதைப்பற்றிக் கருத்துக்கூற என்ன அடிப்படைத்தகுதி இருக்கின்றது ? அல்லது அவ்வாறான கருத்தால் என்ன பிரயோசனம் ஏற்படப்போகின்றது? ஈழத்தமிழன் வெட்கப்படவேண்டிய காணொளியாம் !! அம்மணமாக்கப்பட்டது அறியாமல் முருகனுக்கு கோமணம் கட்டுபவர்களுக்கு எல்லாம் வெட்கம் என்ன வேண்டிக்கிடக்கின்றது ? வெட்கப்படவேண்டிய ஆயிரம் நிகழ்வுகள் கடந்து போனபோது வரமறுத்த கூச்சம் இப்போது வர முற்படுகின்றது என்றால் அது வழமையான பழைய அரிப்பு ! அடுத்தவனை சொறிய முடியாது அவரவரே சொறிய வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த... குப்பனும், சுப்பனும்  மதம் மாறட்டும்.
அதுகும்... அவர்கள், தனிப்பட்ட  விடயம்.

ஆனால்,  முன்னாள்....  விடுதலைப் புலி, போராளி  மதம் மாறினார் என்பது தான்... தலைப்பு.
அது, சார்ந்து...  தான், விவாதம் நடக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
"மேலும் மதம் மாறுவதன் மூலம் பல நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிகின்றது.
 
முஸ்லிமாக மாறிய முன்னாள் போராளியும் அதனை தெளிவாக குறிப்பிடுகின்றார் போரில் பாதிக்கப் பட்டு நோயாளியான அவருக்கு உதவுவதற்கு இந்து சமூகத்தில் யாரும் முன்வரவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவுடன் இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, இங்கு சமூகத்தில் ஒதுக்கப் பட்டவர்கள் ஆதரவின்மை காரணமாக மன அழுத்தங்களுக்கு ஆளாவது கவனிக்கத் தக்கது. அவர் எதிர்பார்க்கும் ஆதரவும், அரவணைப்பும் புறக்கணிக்கப் படும் பொழுது, அது கிடைக்கும் இடத்தை நோக்கிச் செல்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேலும் முஸ்லிமாக மதம் மாறியதால், புலனாய்வுத்துறையினரின் சந்தேகக் கண்களில் இருந்து தப்பி நிம்மதியாக வாழ முடிந்துள்ளது."
 
இங்கே வடிவாக குறிப்பிட்டப்பட்டுள்ளது அவர்/கள் ஏன் மதம் மாறினர் என்று. நம்பிக்கையின் அடிப்படையிலோ அல்லது சொந்த விருப்பிலோ மதம் மாறியதாக இல்லை. இன்னொரு சமூகத்தின் மீது தனது இயலாமையை, சோம்பல் தனத்தை இறக்கிவிட்டு செல்வதை ஏற்றுக்கொள்ள நான் முட்டாள் அல்ல.
 
வடகிழக்கில் எத்தனையோ திருச்சபைகள்,அல்லேலூயாக்கள் சேர்ச்சுகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர் அவை உங்கள் கண்களில் குறிப்பாக மருதர்  கண்ணில் தென்படாது. 
 
ஒரு முதுகெலும்பில்லாதன் மதம் மாறுகிறான் தன் சுதிக்காக இதனை மீண்டும் மீண்டும் சொல்வேன். அதனை கூறக்கூடிய நிலையில் தான் இருக்கிறேன்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

3350 மைல்களுக்கு அப்பால் தோற்றம் பெற்ற  யேசுநாதருக்கும் 2800 மைல்களுக்கு அப்பால் தோற்றம் பெற்ற இஸ்லாமிய மதத்திற்கும் இலங்கையில் வழிபாட்டு இடங்கள் உள்ள போது சில நூறு மைல்கள் தூரத்தில் உள்ள அனுமானுக்கு சிலை வைப்பதில் தவறு என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:
வடகிழக்கில் எத்தனையோ திருச்சபைகள்,அல்லேலூயாக்கள் சேர்ச்சுகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர் அவை உங்கள் கண்களில் குறிப்பாக மருதர்  கண்ணில் தென்படாது. 
 
ஒரு முதுகெலும்பில்லாதன் மதம் மாறுகிறான் தன் சுதிக்காக இதனை மீண்டும் மீண்டும் சொல்வேன். அதனை கூறக்கூடிய நிலையில் தான் இருக்கிறேன்.

தயவு செய்து

இந்த திரியின் தலைப்பு சார்ந்து இவ்வாறு எழுதாதீர்கள்.

எல்லோரும் கைவிட்டோம் என்பதும்

எல்லோராலும் அவர்களுக்கு அச்சுறுத்தல் என்பதும் உண்மை.

எங்காவது ஒழிந்திருந்தால் அவர்களால் வாழமுடியும் என்றால் வாழட்டுமே..

எமக்காக அவர்கள் செய்தவை போதுமே...

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

தயவு செய்து

இந்த திரியின் தலைப்பு சார்ந்து இவ்வாறு எழுதாதீர்கள்.

எல்லோரும் கைவிட்டோம் என்பதும்

எல்லோராலும் அவர்களுக்கு அச்சுறுத்தல் என்பதும் உண்மை.

எங்காவது ஒழிந்திருந்தால் அவர்களால் வாழமுடியும் என்றால் வாழட்டுமே..

எமக்காக அவர்கள் செய்தவை போதுமே...

எல்லோரும் கைவிட்டோம் என்பது தவறு. அச்சுறுத்தல் காரணமாக மாறினால் அதனை சொல்ல வேண்டியது தானே? 

மக்களுக்காக போராடினோம், வெளிநாட்டில சனம் இருப்பது எங்களால் தான் அவர்கள் தான் எங்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று இன்னும் எத்தனை நாட்களுக்கு?

அன்றும் சரி இன்றும் சரி பாரத்தை சுமப்பவர்கள் சிலரே.

சில விடயங்களை எழுதக்கூடாது ஆனாலும் எழுதுகிறேன்.

இன்று அதிகாலை 2 மணிக்கு தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டது, எடுத்துப் பார்த்தால் பிள்ளையை (தனியார்) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன் 2 1/2 இலட்சம் அனுப்புங்கள். நான் மரத்தில் புடுங்குவதா இல்லை தோண்டுவதா? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

எல்லோரும் கைவிட்டோம் என்பது தவறு. 

அச்சுறுத்தல் காரணமாக மாறினால் அதனை சொல்ல வேண்டியது தானே? 

மக்களுக்காக போராடினோம், வெளிநாட்டில சனம் இருப்பது எங்களால் தான் அவர்கள் தான் எங்களுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று இன்னும் எத்தனை நாட்களுக்கு?

அன்றும் சரி இன்றும் சரி பாரத்தை சுமப்பவர்கள் சிலரே.

சில விடயங்களை எழுதக்கூடாது ஆனாலும் எழுதுகிறேன்.

இன்று அதிகாலை 2 மணிக்கு தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டது, எடுத்துப் பார்த்தால் பிள்ளையை (தனியார்) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன் 2 1/2 இலட்சம் அனுப்புங்கள். நான் மரத்தில் புடுங்குவதா இல்லை தோண்டுவதா? 

சகோதரா

நானும் இதே நிலையில் இருப்பவன்

எனக்கும் இவை எல்லாம் தெரியும்

சந்தித்திருக்கின்றேன்

சந்திக்கின்றேன்

ஒரு சில வீதத்தினரே சுமையை சுமக்கும்  இனம்

அழிவைத்தவிர வேறு எதை எதிர்பார்க்கமுடியும் என தொடர்ந்து எழுதிவருபவன் நான்.

ஏமாற்றத்தின் வெளிப்பாடே அது.

ஆனால் எல்லோரும் கைவிட்டோம் என்பது தப்பு என்பது போல

போகும் சிலரை தடுப்பதும் தப்பல்லவா?

அவர்கள் எமது இனத்துக்காக பட்டது போதும் என்பதே எனது நிபப்பாடு

அவர்களுக்கு எப்படியாயினும் கிடைக்கும்சோற்றை ஒரு போதும் தடுக்கமாட்டேன்.

நன்றி.

Edited by விசுகு

3 hours ago, விசுகு said:

விசகு , எமது கண்களுக்கு இவர்கள் ஏ ன் ,புலப்படவில்லை ? 7 வருடங்களாக எமது ஊடகங்கள்  வன்னியில் வறுமையில்  வாள்பவர்களின் பிரச்சனை பற்றி  சுட்டி காட்டியும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்களும்  என் கவனம் செலுத்தவில்லை ?  

  கனகாம்பிகை குளத்தில்  6 கோடி ரூபாயில்  கோவில் கட்டியவர்களுக்கு ஏன் இந்த வறியவர்கள்  கண்ணில் படவில்லை  ??.

இப்பொழுது இந்த ஒரு குடும்பம் மதம் மாறியதால்  தமிழ்களின் தொகை 5ல் குறைந்து  முஸ்லீம் சனத்தொகை 5ல் அதிகரித்து உள்ளது.

முஸ்லீம் காணி பிடிக்கிறான் என்று கூப்பாடு போடுகிறாம் ஆனால்  முஸ்லீம் காணி பிடிக்க தேவையில்லை, இப்படி  வறியவர்களை மதம் மாற்றினால் அவன் வமன்னியில் பெரும்பான்பமாய் ஆகிவிடுவான்.

இந்தி திரியை கூட பாருங்கள், மதம் மாறியவர்களை தீட்டுவதில் தான் எல்லோரம் குறியாய் இருகினாம் , இவாறான சம்பாவங்கள் நடக்காது இருக்க என்ன செய்யலாம் என யாரும் நினைப்பதில்லை.

அவர்களுக்கு கிடைக்கும் சோற்றை  தடுக்க மாட்டான் என கூ று ம் நீங்கள் ஏ ன் அந்த சோற்றை  வழங்க முடியாது , இல்லாவிடில்  நல்லூர்  கந்த சாமி கோவில் என் வழங்க முடியானது , திருவிழா  வந்தால் குடும்பத்துடன்  £5,000 செலவழித்து  2 கிழமை தேர் திருவிழா  பார்க்க தெரியுது ஆனால்  அங்கே வறுமையில் வாடுபவனுக்கு  £ 500 பவுண்ட்ஸ் கொடுக்க தெரியாது,

அதற்காக நாம் எதுவும் செய்யவில்லை என நான் கூறவில்லை , எமது உதவிகளில் ஒரு திட்டமிடலும் பொறிமுறையும் இல்லை. நாம் செய்யும் உதவிகளை அனைத்தும்  கண்ணில் படுப்பனவற்றை தான் செய்கிறோம்  மக்களுக்கு என்ன தேவை என தேடி சென்று செய்யும் தன்மை ன் இல்லை.

உதாரணமாக ஒருவருக்கு  வ்ன் னி டில்  1,000,000 தேவை என்றால்  தனி ஒருவர் செய்ய முடியாது  ஆனால் கோவில் ஒன்றுக்கு அறிவித்து பக்தர்களிடம் £25 படி  200 பேரிடம்  சேர்த்தால்  அந்த 10 லட்சம் வந்து விடுமே  அதை நாம் என் செய்யவில்லை.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Dash said:

அங்குள்ள நிலமை அப்படி, முன்னாள் போராளிகளினதோ மாவீரர் குடும்பங்களினதோ தகவல்களை தனியாக திரட்ட முடியாது, விடயம், உடனடியாகவே சிறீலங்கா புலனாய்விற்கு போய்விடும்.

"நீ என்ன விசாவில் இங்கு வந்தாயோ அதை மட்டும் பார்" என்று அன்பாக சொல்வார்கள்.

உங்களால் முடியும் என்றால் மக்களுக்கு என்ன தேவை என்று தேடி அறிந்து வாருங்கள், உங்கள் விமானப்பயணச்சீட்டிற்கான செலவை பொறுப்பெடுக்கிறேன். அல்லது இங்கிருந்தபடியே ஒருங்கமையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, MEERA said:

இதுதான் உண்மை. tw_thumbsup:

இதை மாற்றுக்கருத்து மாணிக்கங்களிடம் சொல்ல அங்கு தேனும் பாலும் ஆறாக சுதந்திரமாக ஓடுகிறது என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

விசகு , எமது கண்களுக்கு இவர்கள் ஏ ன் ,புலப்படவில்லை ? 7 வருடங்களாக எமது ஊடகங்கள்  வன்னியில் வறுமையில்  வாள்பவர்களின் பிரச்சனை பற்றி  சுட்டி காட்டியும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்களும்  என் கவனம் செலுத்தவில்லை ?  

  கனகாம்பிகை குளத்தில்  6 கோடி ரூபாயில்  கோவில் கட்டியவர்களுக்கு ஏன் இந்த வறியவர்கள்  கண்ணில் படவில்லை  ??.

இப்பொழுது இந்த ஒரு குடும்பம் மதம் மாறியதால்  தமிழ்களின் தொகை 5ல் குறைந்து  முஸ்லீம் சனத்தொகை 5ல் அதிகரித்து உள்ளது.

முஸ்லீம் காணி பிடிக்கிறான் என்று கூப்பாடு போடுகிறாம் ஆனால்  முஸ்லீம் காணி பிடிக்க தேவையில்லை, இப்படி  வறியவர்களை மதம் மாற்றினால் அவன் வமன்னியில் பெரும்பான்பமாய் ஆகிவிடுவான்.

இந்தி திரியை கூட பாருங்கள், மதம் மாறியவர்களை தீட்டுவதில் தான் எல்லோரம் குறியாய் இருகினாம் , இவாறான சம்பாவங்கள் நடக்காது இருக்க என்ன செய்யலாம் என யாரும் நினைப்பதில்லை.

Quote

அவர்களுக்கு கிடைக்கும் சோற்றை  தடுக்க மாட்டான் என கூ று ம் நீங்கள் ஏ ன் அந்த சோற்றை  வழங்க முடியாது

 , இல்லாவிடில்  நல்லூர்  கந்த சாமி கோவில் என் வழங்க முடியானது , திருவிழா  வந்தால் குடும்பத்துடன்  £5,000 செலவழித்து  2 கிழமை தேர் திருவிழா  பார்க்க தெரியுது ஆனால்  அங்கே வறுமையில் வாடுபவனுக்கு  £ 500 பவுண்ட்ஸ் கொடுக்க தெரியாது,

அதற்காக நாம் எதுவும் செய்யவில்லை என நான் கூறவில்லை , எமது உதவிகளில் ஒரு திட்டமிடலும் பொறிமுறையும் இல்லை. நாம் செய்யும் உதவிகளை அனைத்தும்  கண்ணில் படுப்பனவற்றை தான் செய்கிறோம்  மக்களுக்கு என்ன தேவை என தேடி சென்று செய்யும் தன்மை ன் இல்லை.

உதாரணமாக ஒருவருக்கு  வ்ன் னி டில்  1,000,000 தேவை என்றால்  தனி ஒருவர் செய்ய முடியாது  ஆனால் கோவில் ஒன்றுக்கு அறிவித்து பக்தர்களிடம் £25 படி  200 பேரிடம்  சேர்த்தால்  அந்த 10 லட்சம் வந்து விடுமே  அதை நாம் என் செய்யவில்லை.

ஆமா உங்களால் ஏன் முடியாது????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

விசகு , எமது கண்களுக்கு இவர்கள் ஏ ன் ,புலப்படவில்லை ? 7 வருடங்களாக எமது ஊடகங்கள்  வன்னியில் வறுமையில்  வாள்பவர்களின் பிரச்சனை பற்றி  சுட்டி காட்டியும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்களும்  என் கவனம் செலுத்தவில்லை ?  

  கனகாம்பிகை குளத்தில்  6 கோடி ரூபாயில்  கோவில் கட்டியவர்களுக்கு ஏன் இந்த வறியவர்கள்  கண்ணில் படவில்லை  ??.

இப்பொழுது இந்த ஒரு குடும்பம் மதம் மாறியதால்  தமிழ்களின் தொகை 5ல் குறைந்து  முஸ்லீம் சனத்தொகை 5ல் அதிகரித்து உள்ளது.

முஸ்லீம் காணி பிடிக்கிறான் என்று கூப்பாடு போடுகிறாம் ஆனால்  முஸ்லீம் காணி பிடிக்க தேவையில்லை, இப்படி  வறியவர்களை மதம் மாற்றினால் அவன் வமன்னியில் பெரும்பான்பமாய் ஆகிவிடுவான்.

இந்தி திரியை கூட பாருங்கள், மதம் மாறியவர்களை தீட்டுவதில் தான் எல்லோரம் குறியாய் இருகினாம் , இவாறான சம்பாவங்கள் நடக்காது இருக்க என்ன செய்யலாம் என யாரும் நினைப்பதில்லை.

அவர்களுக்கு கிடைக்கும் சோற்றை  தடுக்க மாட்டான் என கூ று ம் நீங்கள் ஏ ன் அந்த சோற்றை  வழங்க முடியாது , இல்லாவிடில்  நல்லூர்  கந்த சாமி கோவில் என் வழங்க முடியானது , திருவிழா  வந்தால் குடும்பத்துடன்  £5,000 செலவழித்து  2 கிழமை தேர் திருவிழா  பார்க்க தெரியுது ஆனால்  அங்கே வறுமையில் வாடுபவனுக்கு  £ 500 பவுண்ட்ஸ் கொடுக்க தெரியாது,

அதற்காக நாம் எதுவும் செய்யவில்லை என நான் கூறவில்லை , எமது உதவிகளில் ஒரு திட்டமிடலும் பொறிமுறையும் இல்லை. நாம் செய்யும் உதவிகளை அனைத்தும்  கண்ணில் படுப்பனவற்றை தான் செய்கிறோம்  மக்களுக்கு என்ன தேவை என தேடி சென்று செய்யும் தன்மை ன் இல்லை.

உதாரணமாக ஒருவருக்கு  வ்ன் னி டில்  1,000,000 தேவை என்றால்  தனி ஒருவர் செய்ய முடியாது  ஆனால் கோவில் ஒன்றுக்கு அறிவித்து பக்தர்களிடம் £25 படி  200 பேரிடம்  சேர்த்தால்  அந்த 10 லட்சம் வந்து விடுமே  அதை நாம் என் செய்யவில்லை.

ஐயா

உங்கள் கேள்விகள் மீது   எனக்கு எந்தவித எதிர்வாதமுமில்லை

எனக்கும் இந்த ஆதங்கமுண்டு

என்னால் முடிந்ததை செய்து கொண்டு தானிருக்கின்றோம்

ஒருவர்  சேர்ந்:து செய்வதைவிட சிலர்  சேர்ந்து செய்வது அதிக பயன் தரும் என்பதையம் அனுபவத்தூடாக அறிந்து

அதையும் செய்து வருகின்றோம்

மீரா கூறியது போல

அதற்கான விலையையும் கொடுத்து

அவர் 4 மாதங்களின் பின் வெளியில் வந்த பாடத்தையும் பெற்றிருக்கின்றோம்

இதோ சில நிமிடங்களுக்கு முன் எனக்கு வந்த மடல்.

புதுவருட வாழ்த்துக்கள்-2017

Boîte de réception
x
 
profile_mask2.png

National NGO Social Economics Children Development Assosiation

17:11 (Il y a 17 minutes)
cleardot.gif
 
cleardot.gif
cleardot.gif
À moi
cleardot.gif
 
tamoul
 
français
 
Traduire le message
Désactiver pour : tamoul
 
புதுவருட வாழ்த்துக்கள்-2017

பிறக்கும் புதுவருடம் 2017ம் ஆண்டில் எல்லோரும் ஒன்றுகூடிய மகிழ்சியான வாழ்வு வாழ்ந்திடுவோம்.

நலிவுற்றோரின் சுபிட்சத்திற்கான மனித நேயத் தொண்டுப்பணியில் எம்முடன் கூடிப் பணிசெய்யும் எல்லா நல் உள்ளங்களுக்கும் எமது புதுவருட வாழ்த்துக்கள்.

எல்லா இதயங்களுக்கும் இறையாசி வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

பல உயிர்களின் வாழ்வில் ஒளியூட்ட முயலும் உங்கள் வாழ்வுக்கும் இறையருள் கிடைக்க செக்டா தொண்டு நிறுவனத்தின் சார்பிலும் பயனாளிகள் சமூகத்தின் சார்பிலும் சிரம் தாழ்த்திய இதயம் உருகிய புதுவருட வாழ்த்துக்கள்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

செக்டா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓய் ...முனிவர் 
சைக்கிள் கப்பில பார்ட்டி உங்கட ஏரியாவிற்குள் வந்திட்டார் ...ஆளை வளைத்து பிடிச்சு நன்றாக கொடுத்தனுப்புங்கோ tw_blush:
சரி அதை விடுவோம் 

மதமாற்றம் பற்றி சொல்லப்போனால் ...இப்போது எங்கடை தேவை சிவசேனையும் ,கரம்சந்த் காந்தி சிலையும் தான் 
எல்லோரும் மதம்மாறி சிவனே இல்லாமல் போனபின் சேனையை வைத்துகொண்டு என்ன ம___ புடுங்கப்போரீங்கோ...?
இந்த அல்லோல கல்லோயாக்கள் முதலிருந்தே பிரட்சினைக்குரியவர்கள் தான். தமிழ்நாட்டில் தங்களோட மொள்ளமாரித்தனத்தை காட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது இவர்கள் சாயம் வெளுக்க ஆரம்பித்ததும் இலங்கைக்கு படை எடுக்க தொடங்கியிருக்கிறார்கள்
ஏஞ்சல் டீவி சாது சாமியார் இதற்க்கு உதாரணம் (வேறயாருமில்லை கடவுளுடன் கான்பரன்ஸ் ரூமில் கொலிவூட் படம் பார்த்தவர்) 
அண்மையில் இலங்கை வந்து அவரது சித்து விளையாட்டை எடுத்து விட்டிருக்கிறார் ..எமக்கு எப்போதும் கிந்தியாவின் கழிவுகளே தேவைப்படும் 
இதில் மட்டும் மத வேறுபாடே இருக்காது ....

நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும்  உங்கள் கருத்தை வரவேற்கிறேன் நண்பா மன்னிக்கவும் இந்த  அல்லுலோயா  இடையில சொருகின கூட்டங்கள் தான் பெரிய தொல்லை இங்கே 

இங்கே நான் ஒன்று சொல்லவா  இந்த மதம் மாறிய நண்பரை விடவும் மிகவும் வறிய நிலையில் முஸ்லீம் குடும்பங்கள்  உள்ளன உதாரணம் சவுதியில் தலை வெட்டப்பட்ட றிசானாவின்குடும்ப்ம இப்படியான குடும்பங்களுக்கு ஏன் இவர்கள் உதவி செய்ய வில்லை  அவர்கள் நோக்கம் மதம் பரப்ப வேண்டும் என்ற நோக்கம் அவ்வளவுதான்  ஊரில் ஒரு  ஒலகம் வெளங்காதவன் மதம் மாறினான் அவனை மொலவிக்கு படிப்பித்தார்கள் உடனே அந்த செய்தியை செய்தி தாள்கள் , இணையத்தளங்கள் ,சேர்டிபிக்கேட் எல்லாம்  கொடுத்தார்கள் ஏன் வீடும் கூட ஆனால அவனை விடவும் அங்கு ஏழைமக்கள் உள்ளனர் அவர்கள் இனத்திலும்  அதை ஏன் அவர்கள் கண்டு கொள்ள வில்லை அவர்கள் நோக்கம் மதம் மாற்ற வேண்டும்  அவர்கள் தேடி திரிவது  மிகவும் கஸ்ரப்பட்ட ஏழைகளை அவர்களூக்கு வாக்குறுதியழித்து மாற்றி விட்டு பேட்டியும் எடுக்கிறார்கள் இதில் முன்னாள் போராளியென்றவும் நீங்கள் எல்லோரும் பொங்குறீங்கள் 

இது இன்றைய பத்திரிகையில் வந்தது

20161231_121710.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சண்டமாருதன் said:

"மதம் மாறியது வெக்கப்படவேண்டிய விசயம். ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னம்பிக்கை அற்ற செயல்."  இவ்வாறு எல்லம் கூறுவதற்கு எந்த அடிப்படைத் தகுதியும் எமக்கில்லை. மதம் மாறுவது அவனவன் சொந்த விருப்புக்கு உட்பட்டது. இந்து மதம் அல்லது சைவ மதம் என்ற கோட்பாட்டின் கீழ் ஈழத்தமிழன் என்ற பதம் எப்போதும் இல்லை. மேலும் தமிழ்மொழியை பேசுவதாலும் வடகிழக்கில் வாழ்ந்ததாலும் கூடுதலாக சிங்களவன் தமிழன் என்று சுட்டிக்காட்டி ஒடுக்குமுறையைச் செய்வதாலும் தமிழர் என்று பொதுவாக நாம் அடைமொழியை எமக்கு ஏற்படுத்துகின்றோம். தவிர நாம் ஏனைய இனங்கள் போல் வலுவான தேசிய இனம் இல்லை. அவ்வாறு வலிமையாக இருப்பதானால் அது மதத்தை கடந்த நிலையை எட்டிய பின்னரே சாத்தியாமகும். இங்கு மதங்கள் மேலான வெறுப்பு என்பதுக்கும் பிரதேசரீதியான வெறுப்பு சாதீய வெறுப்பு மற்றும் முரண்பாடுகளுக்கும் இடையில் அதிக அளவு இடைவெளி இல்லை. இவ்வாறான வெறுப்பு மற்றும் முரண்பாட்டால் தான் தேசீய இனம் என்பது வலிமையற்று போராட்டம் படுதோல்வியடைந்தது. 

இந்து அல்லது சைவமதம் என்பது ஒரு கட்டமைப்புக்கு அப்பாற்பட்டதும் சுயநலத்தையும் அடயாளத்தேடலையும் வியாபாரத்தையும் அடிப்படையாகக்கொண்ட மதம் சார்ந்த செயற்படுகளுக்குள் ஒருவன் இருக்கவேண்டிய அவசியம் எப்போதும் இல்லை. ஒரு பொதுத் தன்மையற்ற மதச் செயற்பாட்டின் அடிப்படையிலேயே பெருமளவு பணம் கோயில் புதிப்பிப்பு. கும்பாபிசேகம். திருவிழாவுக்கான ஆடம்பரம் போக்குவரத்து என செலவு செய்யப்படுகின்றது. இதில் நூறில் ஒரு பகுதி போதும் போராளிகளின் புனர்வாழ்வுக்கு. ஆனால் அடயாளத்தேடலும் சுயநலமும் வியாபாரமும் என்ற பொதுத் தன்மையற்ற நிலையால் அவை பற்றி சிந்திப்பதில்லை. இன் நிலையில் ஒருவன் மதம் மாறும்போது அதைப்பற்றிக் கருத்துக்கூற என்ன அடிப்படைத்தகுதி இருக்கின்றது ? அல்லது அவ்வாறான கருத்தால் என்ன பிரயோசனம் ஏற்படப்போகின்றது? ஈழத்தமிழன் வெட்கப்படவேண்டிய காணொளியாம் !! அம்மணமாக்கப்பட்டது அறியாமல் முருகனுக்கு கோமணம் கட்டுபவர்களுக்கு எல்லாம் வெட்கம் என்ன வேண்டிக்கிடக்கின்றது ? வெட்கப்படவேண்டிய ஆயிரம் நிகழ்வுகள் கடந்து போனபோது வரமறுத்த கூச்சம் இப்போது வர முற்படுகின்றது என்றால் அது வழமையான பழைய அரிப்பு ! அடுத்தவனை சொறிய முடியாது அவரவரே சொறிய வேண்டியதுதான். 

 உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் ............

கடந்த காலத்தில் தமிழ் என்ற இனம் சமணம்  .... சைவம் என்ற கட்டமைப்பின் 
ஊடாகத்தான் தன்னை காப்பாற்றி வந்திருக்கிறது.
சமணம் எஎன்பது ஒரு மாதமாக கூட இருக்கவில்லை ஒரு மனிதனை 
ஒரு சமூக பொறுப்புள்ளவனாக மாற்றுவதில்தான் பெரும்பபங்கு கொள்கிறது 
ஆனால் குடும்ப வாழ்வை அது வலியுறுத்தவில்லை. புத்த மதம் போல் 
"நான்" என்று என்னை மட்டுமே சுற்றி இருப்பதால் பின்னாளில் 
சைவம் உருவாக வழிவகுத்து கொடுத்தது. 

அயலூரில் இருந்து எமது ஊர் வழியாக பயணம் செய்பவர்கள் 
பசியாறி செல்லதான் பந்தி தண்ணீர் பந்தல் என்று கோவிலை சுற்றியும் 
பக்த்தர்கள் வீடுகளிலும் 14-15அம் நூற்றாண்டு காலத்திலேயே வைத்திருந்திருக்கிறார்கள். 

தவிர ஒரு ஊரில் ஒரு கோவில்தான் இருந்து இருக்கிறது அதை சார்ந்தே 
அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். கோவிலை சார்ந்து ஊர் கட்டமைப்பும் இருந்து 
இருக்கிறது அரசு ... தானம் (வரி) என்பதெற்கெல்லாம் ஒரு சாட்ச்சியாக அந்த கோவில் இருந்து இருக்கிறது.
நாயக்கர் ஆட்ச்சி காலத்திட்க்கு  பின்புதான் தமிழ்நாட்டில்  மூலைக்கு மூலை கோவில் முளைக்க தொடங்குகிறது. அதன் பின்புதான் வைஷ்ணவம் தலை தூக்க தொடங்குகிறது அதன் பின்புதான் 
எந்த காரணிகளும் இல்லாத புராணத்திற்குள் ஒரு சமூகம் மூழ்க தொடங்குகிறது. 
அதற்கு முந்திய பல நூற்றாண்டு காலம் தமிழ் என்பதே சைவ மதம் சார்ந்துதானே வளர்கிறது.
தமிழையும்  சைவத்தையும் 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பு எந்த இடத்தில் தனி தனியாக பிரிக்க முடியும் ?
என்று எனக்கு தெரியவில்லை ............. அது சார்ந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் 
எங்கும் வாசிக்கவில்லை. முருகனின் காலத்திட்கும்  16ஆம் நூற்றாண்டுக்கு இடையில் 
தமிழ் சமூகம் சைவத்தின் ஊடாக கட்டமைக்க பட்டிருப்பதை அறிய முடிகிறது. 

தற்போதைய உலக கட்டமைப்பே கிறிஸ்தவ மதம் சார்ந்துதான் வகுக்க படுகிறது.
ஒரு உலகம் ...... ஒரே ஒரு வங்கி ..... ஒரே ஒரு நாணயம் என்பதை நோக்கி கத்தோலிக்க 
ஆதிக்கம்தான் உலகை மெல்ல மெல்ல நகர்த்துகிறது என்பது பலருக்கும் புரியமாட்டார்கள்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதாக மக்கள் வாக்களித்த பின்னர் ..... நீதிமன்றம் எப்படி 
அதட்குள் புகுந்தது என்று பலரும் சிந்திக்கவில்லை ? தேர்தலின் முன்பு அப்படி எதுவுமே நீதிமன்று முடிவு எடுப்பதாக இருக்கவில்லையே ? நீதிமன்று முடிவு எடுக்குமென்றால் எதற்கு தேர்தல் ?
மேலோட்ட்மாக பார்த்தால் விஞ்ஞானம்மும் நவீன தொழில்நுட்பமும் வளர்வது போல்தான் இருக்கும் 
கத்தோலிக்க ஆதிக்கம் வளர்கிறது வளர்க்க படுகிறது என்பது ஊற்று பார்த்தால்தான் தெரியும்.
பிரிட்டிஷ்  அமெரிக்கா கனடா நியூசிலாந்து அவுஸ்திரேலியா இந்த ஐந்தும் கத்தோலிக்க ஆதிக்கத்தின் கீழ்தான் இயங்கிவருகிறது இந்த ஐந்தையும் வைத்து இனி உலகை ஆழ்வதுதான் அவர்கள் தந்திரம். 
இப்போதைக்கு சன்னி முஸ்லீம்  இந்து புத்தம் இவற்றில் அவர்கள் கைவைக்க போவதில்லை.
நவநாகரீகம் என்ற போதையை கலக்கி மது மாது என்று ஊட்டினால் இவை இருந்த இடம் தெரியாமல் ஓடி 
போய்விடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். 

மதத்தை தாண்டியே சமூகத்தை கட்டமைக்கலாம் எனும் உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்படி ஒன்றுதான் இனி ஈழ தமிழ் சமூகத்தை காப்பாற்றும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. 
அந்த அளவிட்கு சாக்கடைக்குள் தமிழன் ஊறிவிட்டான் என்பதே உண்மை. மேலே இருக்கும் சில உறவுகளின் கருத்துக்களே  அதற்கு சாட்சி! 

13 minutes ago, Maruthankerny said:

மதமோ மொழியோ சுரண்டல் சார்ந்த பிழைப்புவாதத்திற்கே பயன்பட்டுவந்துள்ளது. தவிர இனக்கட்டமைப்புக்காகவோ அல்லது தேசீயம் சார்ந்த ஒரு முகப்படுத்தலுக்காகவோ எங்கும் பயன்பட்டதில்லை. தமிழ்மொழியைப் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் என்று இணைந்து இருக்கவேண்டும் என்பது ஒரு கனவு. அந்தக் கனவு மதம் சாதி பிரதேசவாதம் மற்றும் ஏற்றதாழ்வுகளை கடந்து ஒருபோதும்  நிஜமான வரலாறு கிடையாது. இன்றைய தமிழ்நாட்டின் சிதைந்த நிலையும் இலங்கைத் தமிழனின் அடிமைநிலையும் இதற்குச் சாட்சியாகும். நாம் ஒரு தேசீய இனமாக வலிமைபெற மதத்தை கையில் எடுப்பதா மொழியை கையில் எடுப்பதா என்ற கேள்விக்கே நாம் என்னும் வரவில்லை ஏனெனில் இந்த இரண்டு கேள்வியும் கூட சாதி மற்றும் பிரதேசவாத ஏற்றதாழ்வை கடந்த பின்னரே சாத்தியமாகும். மொழியை தவிர ஏனைய அனைத்தும் அதாவது சாதி மதம் பிரதேசவாதம் அனைத்தும் இன அழிவுப்பாதைகள் என்பது வரலாறும் நிகழ்வும் ஆகும். மொழியை சைவம் வளர்த்தது என்பதற்காக அதை ஆதரித்தால் மீளவும் அழிவுப்பாதைகளுக்குள்ளேயே பயணிப்போம். இனம் மீழுவதற்கான அல்லது தன்னைத் தக்கவைப்பதற்கான காரணிகளாக இவை எதுவும் இல்லை மாறாக எஞ்சிய மக்கள் தங்கள் இடங்களில் தொடர்ந்து இருப்பது ஒன்றே  வழியாகின்றது. அதற்கான பொருளாதார வசதிகளும் பாதுகாப்பும் ஏற்படுத்தப்படுகின்றபோது மொழியும் இருக்கும் அவரவர் பழக்கத்தில் இருந்த ஆன்மீகமும் இருக்கும். அதைப்பற்றிய சிந்தனை அற்று மதம் மாறிவிட்டான் குய்யோ முறையோ என்று பினாத்துவதால் அற்ப பிரயோசனமும் கிடையாது. பொருளாதாரம் மற்றும் வர்த்தமே எது கடவுள் எது அரசு என்பதை எப்போதும் தீர்மானிக்கும். எமது புலப்பெயர்வு கூட அதற்கு நல்ல உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Dash said:

விசகு , எமது கண்களுக்கு இவர்கள் ஏ ன் ,புலப்படவில்லை ? 7 வருடங்களாக எமது ஊடகங்கள்  வன்னியில் வறுமையில்  வாள்பவர்களின் பிரச்சனை பற்றி  சுட்டி காட்டியும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்களும்  என் கவனம் செலுத்தவில்லை ?  

  கனகாம்பிகை குளத்தில்  6 கோடி ரூபாயில்  கோவில் கட்டியவர்களுக்கு ஏன் இந்த வறியவர்கள்  கண்ணில் படவில்லை  ??.

இப்பொழுது இந்த ஒரு குடும்பம் மதம் மாறியதால்  தமிழ்களின் தொகை 5ல் குறைந்து  முஸ்லீம் சனத்தொகை 5ல் அதிகரித்து உள்ளது.

முஸ்லீம் காணி பிடிக்கிறான் என்று கூப்பாடு போடுகிறாம் ஆனால்  முஸ்லீம் காணி பிடிக்க தேவையில்லை, இப்படி  வறியவர்களை மதம் மாற்றினால் அவன் வமன்னியில் பெரும்பான்பமாய் ஆகிவிடுவான்.

இந்தி திரியை கூட பாருங்கள், மதம் மாறியவர்களை தீட்டுவதில் தான் எல்லோரம் குறியாய் இருகினாம் , இவாறான சம்பாவங்கள் நடக்காது இருக்க என்ன செய்யலாம் என யாரும் நினைப்பதில்லை.

அவர்களுக்கு கிடைக்கும் சோற்றை  தடுக்க மாட்டான் என கூ று ம் நீங்கள் ஏ ன் அந்த சோற்றை  வழங்க முடியாது , இல்லாவிடில்  நல்லூர்  கந்த சாமி கோவில் என் வழங்க முடியானது , திருவிழா  வந்தால் குடும்பத்துடன்  £5,000 செலவழித்து  2 கிழமை தேர் திருவிழா  பார்க்க தெரியுது ஆனால்  அங்கே வறுமையில் வாடுபவனுக்கு  £ 500 பவுண்ட்ஸ் கொடுக்க தெரியாது,

அதற்காக நாம் எதுவும் செய்யவில்லை என நான் கூறவில்லை , எமது உதவிகளில் ஒரு திட்டமிடலும் பொறிமுறையும் இல்லை. நாம் செய்யும் உதவிகளை அனைத்தும்  கண்ணில் படுப்பனவற்றை தான் செய்கிறோம்  மக்களுக்கு என்ன தேவை என தேடி சென்று செய்யும் தன்மை ன் இல்லை.

உதாரணமாக ஒருவருக்கு  வ்ன் னி டில்  1,000,000 தேவை என்றால்  தனி ஒருவர் செய்ய முடியாது  ஆனால் கோவில் ஒன்றுக்கு அறிவித்து பக்தர்களிடம் £25 படி  200 பேரிடம்  சேர்த்தால்  அந்த 10 லட்சம் வந்து விடுமே  அதை நாம் என் செய்யவில்லை.

புலம்பெயர் நாடுகளிலுள்ள நாம் பணம் அனுப்புவோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அங்குள்ள மக்களுக்கு  எந்த விமோசனமும் ஏற்படப் போவதில்லை. எத்தனை நாடுகளில்  எம் நாட்டைவிட மோசமான இன அழிப்புகள் நடைபெற்றுள்ளன. அவர்களுக்கெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் அவர் உறவினர்கள் உதவவில்லை.  தம் சுய முயற்சியில் தம் வாழ்வைக் கட்டியெழுப்பி மீண்டார்கள். நாம் தான் அவர்களைப் பளுதாக்குகிறோம். முயற்சி இன்றி மற்றவனின் பணத்தை எதிர்பார்க்க வைக்கிறோம். எப்பொழுது தாமே தம்மைக் காத்துக்கொள்ள முனைகிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு விடிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புலம்பெயர் நாடுகளிலுள்ள நாம் பணம் அனுப்புவோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அங்குள்ள மக்களுக்கு  எந்த விமோசனமும் ஏற்படப் போவதில்லை. எத்தனை நாடுகளில்  எம் நாட்டைவிட மோசமான இன அழிப்புகள் நடைபெற்றுள்ளன. அவர்களுக்கெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் அவர் உறவினர்கள் உதவவில்லை.  தம் சுய முயற்சியில் தம் வாழ்வைக் கட்டியெழுப்பி மீண்டார்கள். நாம் தான் அவர்களைப் பளுதாக்குகிறோம். முயற்சி இன்றி மற்றவனின் பணத்தை எதிர்பார்க்க வைக்கிறோம். எப்பொழுது தாமே தம்மைக் காத்துக்கொள்ள முனைகிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு விடிவு.

உண்மைதான்....ஆனால் எங்கடை சனத்துக்கு பந்தா பகட்டு வாழ்க்கையில் நாட்டம் இருக்கும் வரையிலும் ஒண்டுமே செய்யேலாது.

சிங்கள அரசியலும் புலம்பெயர் உதவிகளும்  மக்களை சோம்பேறியாக்கியதை கண்கூடாகவே பார்க்கிறேன்.

On 31/12/2016 at 9:07 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புலம்பெயர் நாடுகளிலுள்ள நாம் பணம் அனுப்புவோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை அங்குள்ள மக்களுக்கு  எந்த விமோசனமும் ஏற்படப் போவதில்லை. எத்தனை நாடுகளில்  எம் நாட்டைவிட மோசமான இன அழிப்புகள் நடைபெற்றுள்ளன. அவர்களுக்கெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் அவர் உறவினர்கள் உதவவில்லை.  தம் சுய முயற்சியில் தம் வாழ்வைக் கட்டியெழுப்பி மீண்டார்கள். நாம் தான் அவர்களைப் பளுதாக்குகிறோம். முயற்சி இன்றி மற்றவனின் பணத்தை எதிர்பார்க்க வைக்கிறோம். எப்பொழுது தாமே தம்மைக் காத்துக்கொள்ள முனைகிறார்களோ அப்போதுதான் அவர்களுக்கு விடிவு.

நாம் பணம் அனுப்பாமல் விட்டால் முஸ்லிம்கள் பணம் கொடுத்து மதம் மாற்றி இனத்தை அளித்துவிடுவார்கள் , நாம் உதவி செய்து அவர்களை வாழ வைப்பதா இல்லை  அவர்களை மதம் மாற விட்டு எமது இனத்தை நாம் அழைப்பதா சிறந்தது என யோசியுங்கள்.

அதை விட அவர்கள் மீது நீங்கள் எப்படி சோம்பேறிகள் என்று பழி  போட முடியும் 

1.அவர்களுக்கு  அரசு உதவி செய்வதில்லை 
2.தாயக மக்கள்/அமைப்புக்கள் உதவி செய்வதில்லை 
3.புலம்பெயர்மக்கள் உதவி செய்வதில்லை 
4.எவரும் வேலை வழங்குவது இல்லை 

நிலைமை  இப்படி இருக்கும் போது இவர்கள் வாழ்க்கைக்கு என்ன பண்ணுவது பிச்சை எடுப்பதா ??????

அப்படி இருக்கும் பொது எப்படி நீங்கள்  அவர்களை சோம்பேறிகள் என்று கூறலாம் 

இங்காய் என்ன நடக்குது என்றால் எமது தவறை    மறைக்க படாதபாடு படுறம் .

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறுவது அவரவர் தனிப் பட்ட விருப்பம், இயற்கத்தையும் மதம் மாறுதலையும் ஏன் இவ்வளவு பெரிதாக விளம்பர படுத்துகிறார்கள், இது விளங்குறதுக்கு ஒன்றும் ராக்கெட் சயன்ஸ் அல்ல. இங்கு ஐரோப்பாவில்  தமிழன் மதம் மாறுவதுடன் ஒப்பிடுகையில்  நமது மண்ணில் குறைந்த தொகையினரே. சுப்பிரமணியமும், கணேஷும் .... சண்டே சர்ச்சுக்கு போறதை பார்த்தல் விளங்கும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Dash said:

நாம் பணம் அனுப்பாமல் விட்டால் முஸ்லிம்கள் பணம் கொடுத்து மதம் மாற்றி இனத்தை அளித்துவிடுவார்கள் , நாம் உதவி செய்து அவர்களை வாழ வைப்பதா இல்லை  அவர்களை மதம் மாற விட்டு எமது இனத்தை நாம் அழைப்பதா சிறந்தது என யோசியுங்கள்.

அதை விட அவர்கள் மீது நீங்கள் எப்படி சோம்பேறிகள் என்று பழி  போட முடியும் 

1.அவர்களுக்கு  அரசு உதவி செய்வதில்லை 
2.தாயக மக்கள்/அமைப்புக்கள் உதவி செய்வதில்லை 
3.புலம்பெயர்மக்கள் உதவி செய்வதில்லை 
4.எவரும் வேலை வழங்குவது இல்லை 

நிலைமை  இப்படி இருக்கும் போது இவர்கள் வாழ்க்கைக்கு என்ன பண்ணுவது பிச்சை எடுப்பதா ??????

அப்படி இருக்கும் பொது எப்படி நீங்கள்  அவர்களை சோம்பேறிகள் என்று கூறலாம் 

இங்காய் என்ன நடக்குது என்றால் எமது தவறை    மறைக்க படாதபாடு படுறம் .

தாஸ் நீங்கள் எங்கிருக்கிரீர்களோ எனக்குத் தெரியவில்லை. நான் லண்டனில் ஒரு உதவி அமைப்பில் வேலைசெய்தபோது பலரிடம் பிச்சை கேட்டு வன்னியில் உள்ள பலருக்கு உதவி செய்தோம். ஒரே  குடும்பத்தவர் பலரிடம் பணம் பெற்ற விபரம் கண்டுபிடிக்கவே பல நாட்களானது. அதற்குக்காரணம் பாதிக்கப்பட்ட சில இடங்களுக்கு ஆட்களை அனுப்பி விசாரிக்கமுடியாமல் இருந்தது ஆரம்பத்தில். சொந்தத் தொழில் வைத்திருந்த சிலர் தாம் போராளிகள் என்றும் எந்த உதவியும் இல்லை என்று பொய் கூறியது சொந்த அனுபவத்தில்கண்டது. முதியவர்களைப் பார்க்கும் வேலை,  தோட்டவேலை,காணிகளைப் பராமரிக்கும் வேலை,  ஏன் ஆடு மாடு வளர்க்கும் திட்டத்துக்கே பலர் உடன்படவில்லை. அவர்களுக்கு அது கவுரவப் பிரச்சனையாம். தமிழராய்ப் பிறந்ததற்காக அவர்களை உறவுகளாய் நாம் நினைக்க அவர்கள் சிலரின் கதையைக் கேட்டால் விசர் வரும். இவை சிலது. எல்லாவற்றையும் எழுத முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.