Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 51 members have voted

  1. 1. வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம்

    • பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்
      30
    • இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அடிப்படை வசதியாக இருப்பதால் ஓரளவு ஆதரிக்கின்றேன்
      16
    • கருத்து எதுவுமில்லை
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

On 1/12/2017 at 7:22 PM, Knowthyself said:
  On 1/12/2017 at 7:17 PM, விசுகு said:

1-  விசுகு

2-  உனை நீ அறி

3 - ஜீவன் சிவா 
     (குறைவாக) மாதம் $100 * 12 = $ 1200 வருடத்திற்கு

  • Replies 167
  • Views 30.3k
  • Created
  • Last Reply

IMG_6866.jpg

ஆனாலும் உறவுகளே இந்த வீட்டுக்குள்ளும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பொருத்து வீடா, குடிசையா, கல்வீடா அல்லது மண்வீடா அதுவும் இல்லை இந்த தகர வீடா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

இந்த தகர வீட்டுக்குள் வாழும் இந்த மனிதர்கள் வெப்பத்திற்கும் மழைக்கும் காற்றுக்கும் என்ன செய்வார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கும்போது  தங்களுக்கு எது வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கட்டும்.

இந்த திரி பொருத்து வீடுகள் பற்றிய அனுகூலங்களை + பிரச்சனைகளை மட்டும் ஆராயுமாயின் வரவேற்கின்றேன்.

On 1/10/2017 at 0:58 AM, போல் said:

பொருத்து வீடுகள்,

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும்
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன்?

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் - எந்த கதிர்கள்?

கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் - ஏன்?

மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் - ஏன்?

இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் - ஏன்?

மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் - ஏன்?

பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் - ஏன்?

மேலுள்ள கேள்விகளிற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதில் தரவும். கீழுள்ளவற்றை அதன் பின்னர் புரிந்து கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

model-house-040316-seithy-1

0

யார் எதிர்த்தாலும் பொருத்து வீடுகளை அமைத்தே தீருவோன் என்று அமைச்சர் சுவாமிநாதன் அடம்பிடித்து நிற்கிறார். 2016 இல் மைத்திரி நல்ல அரசியல் காரியங்களை செய்திருப்பதாக சம்பந்தர் கூறுகிறார். பொருத்து வீடுகள் எமது சமூகத்திற்கு பொருந்ததாக வீடுகள் என்று வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீடுகளை வழங்குவதையுமா மைத்திரி செய்த நல்ல காரியங்கள் பட்டியலில் சம்பந்தர் சேர்க்கிறார்?

பொருத்து வீடு வடக்கிற்கு மாத்திரமல்ல, மலையகத்திற்கு மாத்திரமல்ல, நாட்டுக்கே பொருந்தாது என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருக்கிறார். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் இவ்வாறு சொல்லியும்கூட அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீடு அமைப்பதற்கு விடாப்பிடியாய் இருப்பது ஏன்? வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தானே வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்த வீட்டை கொடுத்தால் என்ன மனநிலையின் வெளிப்பாடா இது?

உண்மையில் பொருத்து வீடுகள் இலங்கைத் தீவில் வடக்கில் பொருத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றே பொறியியல் துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருத்து வீடுகள் வேண்டாம் என்று கூறி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னரும் சிங்கள அரசு திணிப்பதில் உள்ள மர்மம் என்ன? அந்த வீடுகளின் பாகங்கள் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுவதுடன் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடலில் பாதகங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இரும்பால் ஆன குறித்த வீடுகள் வாழ்வுக்கு பொருந்தாதவை.

தகரங்களால் ஆன கூரையினாலும் பெரும் பாதிப்புக்கள் உண்டனெ கூறப்படுகின்றது. உண்மையில் இன அழிப்பின் மற்றுமொரு செயற்பாடாகவே பொருத்து வீடு கருதப்படுகின்றது. அதில் வாழும் மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு அழியும் என்றே ஸ்ரீலங்கா அரசு திட்டமிடுகிறது. ஒன்று அந்த வீட்டில் வசிப்பதன் மூலம் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து அந்த வீட்டில், விறகு அடுப்பில்லை. காஸ் அடுப்பே தேவை. ஏசி தேவை. மின்சிவிறி அவசியம். மலசல அறைகள் பழுது பட்டால் பெரும் செலவில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த வீட்டில் வாழும்போது பெரும் செலவுகள் பெரும் தேவைகள் ஏற்படும். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு இதற்கு எல்லாம் செலவு செய்ய பணம் உண்டா? இதனால் அவர்கள் பல்வேறு உள, பொருளாதார பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பார்கள்.

இந்த வீட்டு தளபாடப் பொருட்களுக்காக பல்வேறு கம்பனிகள் இணைந்துள்ளன. இதில் அவர்களுக்கு விளம்பரம் செய்யப்படுவதுடன் இந்த கம்பனிகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். இந்தக் கம்பனிகளின் ஆதிக்கத்தால் பெரும் பொருளாதார நெருக்கடி மக்களுக்கு ஏற்படும். இத்தகைய நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு மக்கள் அழிய வேண்டும் என்பதைதான் சிங்கள அரசு விரும்புகிறதா?

பொருத்து வீடுகள் விவாகரத்தில் சிங்கள அரசின் எதேச்சிகார நடவடிக்கை மைத்திரி அரசிற்கும் மகிந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையை துளியளவும் கணக்கில் எடுக்காமல் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்றும் உணர்த்துகிறது.

சிங்கள அரசு நினைத்தால் தமிழ் மக்களின் தலையில் கொத்துக் குண்டையும் போடும் பொருத்து வீட்டையும் போடும் என்பதே காலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் மக்கள் தலைவர்களின் நிலமையைப் பார்க்கும்போதுதான் சினம் அதிகமாகிறது. இதனை உடனடியாகத் தடுக்காது விட்டால் பொருத்து வீடுகளின் மூலம் முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு தமிழ்த் தலைமையும் உடந்தை செய்தது என்ற வரலாற்றுப் பழி நிச்சயம் சூழும்.

தமிழவன்,
செண்பகம்.
http://senpakam.org/பொருத்து-வீடுகள்-மூலமான/

  • கருத்துக்கள உறவுகள்

 இன்றைய செய்தி தாளில்  பொருந்துமா இந்த பொருத்து வீடுகள்  நீங்களே தீர்மானியுங்கள் 

20170113_103152.jpg

20170113_103457.jpg

2 minutes ago, nunavilan said:

யார் எதிர்த்தாலும் பொருத்து வீடுகளை அமைத்தே தீருவோன் என்று அமைச்சர் சுவாமிநாதன் அடம்பிடித்து நிற்கிறார். 2016 இல் மைத்திரி நல்ல அரசியல் காரியங்களை செய்திருப்பதாக சம்பந்தர் கூறுகிறார். பொருத்து வீடுகள் எமது சமூகத்திற்கு பொருந்ததாக வீடுகள் என்று வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீடுகளை வழங்குவதையுமா மைத்திரி செய்த நல்ல காரியங்கள் பட்டியலில் சம்பந்தர் சேர்க்கிறார்?

தெரியாது

பொருத்து வீடு வடக்கிற்கு மாத்திரமல்ல, மலையகத்திற்கு மாத்திரமல்ல, நாட்டுக்கே பொருந்தாது என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருக்கிறார். அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சர் இவ்வாறு சொல்லியும்கூட அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீடு அமைப்பதற்கு விடாப்பிடியாய் இருப்பது ஏன்? வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தானே வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்த வீட்டை கொடுத்தால் என்ன மனநிலையின் வெளிப்பாடா இது?

தெரியாது

உண்மையில் பொருத்து வீடுகள் இலங்கைத் தீவில் வடக்கில் பொருத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றே பொறியியல் துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொருத்து வீடுகள் வேண்டாம் என்று கூறி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பின்னரும் சிங்கள அரசு திணிப்பதில் உள்ள மர்மம் என்ன? அந்த வீடுகளின் பாகங்கள் மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுவதுடன் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடலில் பாதகங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இரும்பால் ஆன குறித்த வீடுகள் வாழ்வுக்கு பொருந்தாதவை.

ஏன்?

தகரங்களால் ஆன கூரையினாலும் பெரும் பாதிப்புக்கள் உண்டனெ கூறப்படுகின்றது. உண்மையில் இன அழிப்பின் மற்றுமொரு செயற்பாடாகவே பொருத்து வீடு கருதப்படுகின்றது. அதில் வாழும் மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு அழியும் என்றே ஸ்ரீலங்கா அரசு திட்டமிடுகிறது. ஒன்று அந்த வீட்டில் வசிப்பதன் மூலம் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

IMG_6866.jpg

அடுத்து அந்த வீட்டில், விறகு அடுப்பில்லை.உண்மை

 காஸ் அடுப்பே தேவை. ஏசி தேவை. மின்சிவிறி அவசியம். // 

அப்ப இப்ப இருக்கிற அவர்களின் வீட்டிற்கு ஏ .சி, மின்சிவிறி தேவை இல்லையா?

மலசல அறைகள் பழுது பட்டால் பெரும் செலவில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த வீட்டில் வாழும்போது பெரும் செலவுகள் பெரும் தேவைகள் ஏற்படும். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு இதற்கு எல்லாம் செலவு செய்ய பணம் உண்டா? இதனால் அவர்கள் பல்வேறு உள, பொருளாதார பாதிப்புக்களுக்கு முகம் கொடுப்பார்கள்.

மிகுதி தேவை அற்ற விவாதம்.

இந்த வீட்டு தளபாடப் பொருட்களுக்காக பல்வேறு கம்பனிகள் இணைந்துள்ளன. இதில் அவர்களுக்கு விளம்பரம் செய்யப்படுவதுடன் இந்த கம்பனிகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். இந்தக் கம்பனிகளின் ஆதிக்கத்தால் பெரும் பொருளாதார நெருக்கடி மக்களுக்கு ஏற்படும். இத்தகைய நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு மக்கள் அழிய வேண்டும் என்பதைதான் சிங்கள அரசு விரும்புகிறதா?

பொருத்து வீடுகள் விவாகரத்தில் சிங்கள அரசின் எதேச்சிகார நடவடிக்கை மைத்திரி அரசிற்கும் மகிந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையை துளியளவும் கணக்கில் எடுக்காமல் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை என்றும் உணர்த்துகிறது.

சிங்கள அரசு நினைத்தால் தமிழ் மக்களின் தலையில் கொத்துக் குண்டையும் போடும் பொருத்து வீட்டையும் போடும் என்பதே காலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் மக்கள் தலைவர்களின் நிலமையைப் பார்க்கும்போதுதான் சினம் அதிகமாகிறது. இதனை உடனடியாகத் தடுக்காது விட்டால் பொருத்து வீடுகளின் மூலம் முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு தமிழ்த் தலைமையும் உடந்தை செய்தது என்ற வரலாற்றுப் பழி நிச்சயம் சூழும்.

மறுபடியும் உங்கள் அரசியலை மக்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களை சுயமாக முடிவெடுக்க விடுங்கள், இல்லை உண்மையான நிரூபமான  ஆலோசனைகளை வழங்குங்கள் - இல்லை சும்மா இருங்கள்.

மக்கள் முடிவெடுக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துக்கனிப்பிற்க்கு வாக்களிக்கிவில்லை.அத்துடன் கருத்தும் தெரிவக்கவும் இல்லை .காரனம் அங்கு மக்களே இல்லாமல் போகும்
சுழல் உருவாகுது.அதற்க்கு நானும் ஒரு காரனம்(நான் தாயகம் செல்லாம்ல் இங்கு இருப்பது)முதல் மக்கள் அங்கு வாழ ஊக்குவிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து  வீட்டுத் திட் டத்தை...
ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய, ஏன்.... ஆபிரிக்க நாடுகள் கூட,  நடைமுறைப்  படுத்துவத்தைப் பற்றி.
ஆட் சேபனை... இவ்வளவு  வலுவாக இருக்காது என நினைக்கின்றேன்.

இந்தியா... செய்யும்  போது....  அதன் தரம், ஊழல், சுத்து  மாத்து என்று...
வழக்கமான.... "ஜில்லாங் லக்கடி"  வேலை பார்க்கும் என்று,   பயம்மா உள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து வீடு அமைப்பதற்கு செலவாகும் பணத்தில் ஓர் சிறிய கல்வீடு அமைப்ப‌தே சிறந்தது.

அடிப்படையான தவறுகளை கண்டுகொள்ளாமல் விவாதம் வெறுமனே அரசியல் மயப்படுத்தப்படுகிறது. எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் உள்ளது. என்றாலும் தமிழர்களை இனப்படுகொலை செய்யவே இந்த திடடம் என்று வாதிப்பது இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்க நகைசுவை. தமிழர்கள் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாலும் சிந்திக்க முனைவது அவர்களுக்கும் மனித குலத்துக்கும் நன்மை பயக்கும். 

பொருத்தது வீடு என்ற கருதுகோளில் எந்த தவறும் இல்லை. இன்று சீனா பொருத்து வீடுகளை உலகெங்கும் கொண்டைனர்களில் அனுப்புகிறது. நான் வசிக்கும் நாட்டிலே அத்தகைய ஒரு கட்டுமானத்தில் தற்போது ஈடுபட்டுள்ளேன். வளர்ச்சியடைந்த நாடுகளில் அந்த நாடுகளில் உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு இசையவே இந்த பொருத்து வீடுகள் அமைக்கப்படுகிறது. பல அரச நிறுவனங்களிடம் வெவ்வேறு அம்சங்களுக்கு அனுமதி பெற்ற  பின்னரே இந்த வீடுகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறல்ல. பல் தேசிய நிறுவனங்கள் ஒரு அமைச்சரை பிடித்து தங்கள் எச்சங்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இலங்கையில் கொட்டிவிட்டு காசு சம்பாதிக்கின்றன. 

உலக சந்தையில் உருக்கின் விலை வீட்சியால்  லட்சுமி மிட்டேலின் வியாபாரம் சென்ற வருடம் பெரும் நட்டத்தை கண்டது. விற்பனை தேங்கியது. அதை ஈடுகட்டுவதற்குத்தான் இலங்கை உதவுகிறதே தவிர மக்களின் நலனுக்காக அல்ல. இதே போன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் சுனாமி வந்த சூட்டொடு  தெற்கிலே  ஆயிரக்கணக்கான வீடுகள் அமைக்கப்பட்ட்து. அந்த வேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Director General ஆகவிருந்த எனது பல்கலைக்கழக நன்பனிடம் விசாரித்தபோது தனக்கு ஏதும் தெரியாது என்றான். அமைச்சர்களாலும் ஜனாதிபதியாலும் நிறைவேற்றப்படும் எந்த திட்ட்ங்களுக்கும் தங்களிடம் அனுமதி பெறுவதில்லை என  கவலையுடன் கூறினான். 

ஏதோ தருகிறார்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ல இது ஒன்றும் அமச்சர்களின் சொந்த பணத்தில் செய்யும் தானமல்ல. மக்களுடைய கலாசாரத்துக்கும் மண்ணுக்கும் ஏற்ற வீடமைப்புகள் என சம்பந்தப்படட அரச நிறுவனங்கள் அங்கீகரித்த திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஏதும் இல்லாத ஏழைகள் எதை தந்தாலும்  ஏற்றுக்கொள்வார்கள் என்ற நினைப்பில் பெருமுதலைகள் பொருளீட்ட அனுமதிப்பது எங்களை நாங்களே ஏமாற்ற இடம் கொடுப்பதாகும். 

மேலும் இலவசமாக வீடுகள் வழங்குவதை விட அவர்களே வீடுகளை அமைக்க நிதி வழங்குவது அவர்களை அந்த வீட்டுடன் கலாசார பொருளாதார ரீதியில் இணைக்க உதவும். இதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மிகப்பெரிய வெற்றி கண்டார். இதை பற்றி நிறைய எழுதலாம் பேசலாம். 

10 hours ago, ஜீவன் சிவா said:

IMG_6866.jpg

ஆனாலும் உறவுகளே இந்த வீட்டுக்குள்ளும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பொருத்து வீடா, குடிசையா, கல்வீடா அல்லது மண்வீடா அதுவும் இல்லை இந்த தகர வீடா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

இந்த தகர வீட்டுக்குள் வாழும் இந்த மனிதர்கள் வெப்பத்திற்கும் மழைக்கும் காற்றுக்கும் என்ன செய்வார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கும்போது  தங்களுக்கு எது வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கட்டும்.

இந்த திரி பொருத்து வீடுகள் பற்றிய அனுகூலங்களை + பிரச்சனைகளை மட்டும் ஆராயுமாயின் வரவேற்கின்றேன்.

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் - ஏன்?

வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் - எந்த கதிர்கள்?

கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் - ஏன்?

மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் - ஏன்?

இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் - ஏன்?

மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் - ஏன்?

பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் - ஏன்?

மேலுள்ள கேள்விகளிற்கு தகுந்த ஆதாரங்களுடன் பதில் தரவும். கீழுள்ளவற்றை அதன் பின்னர் புரிந்து கொள்கின்றேன்.

  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
  • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை பெற்றுக்கொள்ளவும்!

இல்லையென்றால் ஏன் இவை தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.
 
நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

ஜீவன் சிவாவின் நோக்கங்களை நாம் அறிவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

14 hours ago, போல் said:

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை பெற்றுக்கொள்ளவும்!

இல்லையென்றால் ஏன் இவை தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.
 
நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

ஜீவன் சிவாவின் நோக்கங்களை நாம் அறிவோம்!

உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை தரவும் 

இல்லையென்றால் ஏன் இவை சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.

நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே!

போலின் நோக்கங்களை அனைவரும் அறிவார்   !!!!

எதுவுமே தெரியாம எழுதாமல் உண்மையாக மக்களில் கரிசனை இருந்தா உண்மையாக எழுதுங்கோ 
இல்லை - இப்படியே உங்களுக்கே விளங்காத விடயத்தை வைத்து காலத்தை கடத்துங்கோ.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

ஓம் ஜீவன் உங்களுக்கு எல்லாருடைய நோக்கங்களும் தெரியும்.

யாழில் மட்டும் அல்ல இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் & தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனை.

5 minutes ago, MEERA said:

ஓம் ஜீவன் உங்களுக்கு எல்லாருடைய நோக்கங்களும் தெரியும்.

யாழில் மட்டும் அல்ல இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் & தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனை.

நான் என்றுமே பொறுத்து வீடுகள் தேவை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த மக்கள் வாழுமிடத்தை புரிந்து கொள்ளாமல் சும்மா புழுகுபவர்களை சாடினேன். உங்களுக்கு ஏன் கோபம்?

நீங்களும் அந்த மக்கள் கஷடப்படணும் என்ற ஆதங்கத்தில் உள்ளது போலவே தெரியுது.

ஒன்றும் பண்ணமுடியாது.

நான் கேட்டது விளக்கங்களை மட்டுமே - விளக்கமில்லாமல் எழுதுவது விழலுக்கு மட்டுமில்லை தனக்கும் இறைக்காத நீர் என்பதே எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதியதை இந்த திரியின் 1ம் பக்கத்திலிருந்து வாசியுங்கள். அப்போது புரியும்.

உங்கள் இயலாமையை மக்களுக்கு எதிரானதாக திருப்ப முயற்சிக்காதீர்கள்.

உங்களுக்கான விளக்கம் பக்கம் பக்கமாக உள்ளது. அதை வாசித்தீர்களா? 

வடகிழக்கு மக்களுக்கு உருக்கு வீடு அமைக்க நிற்கும் அரசாங்கம், ஏன் தென் பகுதியில் அமைக்க முயலவில்லை?

கல்வீட்டுத்திட்டத்தால் எத்தனையோ தமிழருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும், பொருத்து வீட்டால் எவ்வளவு? 

எல்லாருக்கும் ஒரே அளவிலான பெட்டி, அதை நீட்டவும் முடியாது சுருக்கவும் முடியாது.

3 minutes ago, MEERA said:

நான் எழுதியதை இந்த திரியின் 1ம் பக்கத்திலிருந்து வாசியுங்கள். அப்போது புரியும்.

எனது கேள்விகளுக்கு விடை தாருங்கள் முதலில் - அப்புறமா பாப்பம் எது சரி என்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

எனது கேள்விகளுக்கு விடை தாருங்கள் முதலில் - அப்புறமா பாப்பம் எது சரி என்று.

உங்கள் கேள்விகள் விதண்டாவாதம்.

1 minute ago, MEERA said:

உங்கள் கேள்விகள் விதண்டாவாதம்.

ஏன் என்று கேட்பது விதண்டாவாதம் என்றால் அந்த விதண்டாவாதத்தை நான் நிச்சயமாக தொடருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் உருக்கு வீட்டுத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நிற்கிறீர்கள், உருக்கு வீட்டுத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அதனை கல் வீட்டுத்திட்டமாக மற்ற வேண்டும் என்கிறார்கள் முயற்சிக்கிறார்கள்.

இது தான் உங்களுக்கும் வீட்டுத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்குமான வித்தியாசம்.

41 minutes ago, ஜீவன் சிவா said:

ஏன் என்று கேட்பது விதண்டாவாதம் என்றால் அந்த விதண்டாவாதத்தை நான் நிச்சயமாக தொடருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை. ஒரு பொருத்து வீட கட்டும் பணத்தில் பல கல்வீடகள் கட்டலாம் என்கிறார்கள்.அப்படி இருக்க பொருத்து வீடுதான் கட்டிக் கொடுப்போம் என்று ஏன் அடம் பிடிக்கிறார்கள். ஒன்றில் இந்த்த்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அல்லது நினைத்த நேரத்தில் அந்த வீடுகளைக் கழட்டி வேறு இடத்தில் பொருத்தலாம் என்பதற்காக இருக்கும்.கல்வீடகள் நிரந்தரமானவை யாராலும் இடம் மாற்றிப் பொருத்த முடியாதவை.தமிழருக்கு நிரந்தர வீடுகளே தேவை.

On 1/15/2017 at 6:04 PM, புலவர் said:

போருக்கு முன்னர் கல் வீடுகளில் காணிகளுடன் வாழ்ந்தவர்களுக்கு அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா என்று பல இடங்களில் சொந்த வீடு இப்ப இருக்குது. இது வீடற்ற, காணியற்ற, காணி கிடைத்தாலும் மறுபடியும் வீடு கட்ட முடியாத நிலைமையில் உள்ள மக்களுக்கானது. 

நீங்கள் வன்னிக்கு சென்று அங்கே பணம் கொடுக்கப்பட்டு முன்னெடுத்த வீட்டுத்திட்டம் நிலைமையை அவதானியுங்கள். எவ்வளவு அரைகுறையான வீடுகள்.

ஏன் என்று யோசியுங்கள்.

யாரோ இந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இவர்களும் அவசரமாக எதோ செய்கிறார்கள். 

மழையிலும் வெய்யிலிலும் உழலும் மக்களுக்கு இதாவது கிடைக்கட்டும். 

காங்கேசன்துறையில் எட்டு லட்ஷ ரூபாய் வீட்டுத்திட்டத்தில் பல வீடுகள் கட்டப்படுகின்றன. சில குடிபூதல்களும் நடந்து விட்டது. இவர்கள் பொருளாதார ரீதியில் நடுத்தர மக்கள். இதற்கு கீழேயும் ஒரு தட்டு மக்கள் இருக்கிறார்கள் - அவர்கள்தான் இன்றும் முகாம்களில்.

முடிவை பாதிக்கப்பட்ட மக்களே எடுக்கட்டும். 

நாம் பேசாம இருப்போம் - வாழ்வோ சாவோ அவர்களது.

முடிந்தால் ஆலோசனைகளை மட்டும் வழங்குவோம். 

Edited by ஜீவன் சிவா

21 லட்சம் ரூபாவுக்கு பொருத்துவீடுகளை கட்டுவதை விட அதை விட அரைவாசி செலவில்  இருமடங்கு கல் வீடு கட்டி இருமடங்கு ஏழை  மக்களுக்கு உதவலாம் தானே என்று நியாயமான கேள்வி கேட்டாலும் தங்களுக்கு தான் மக்கள் மீது அதிக அக்கறை என்று இங்கு வந்து அதீதமாக  நடிப்பவர்களிடம்   இருந்து பதிலைக் காணோம். விதண்டாவித்ததிற்கு முன்பு கல்வீடு வைத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டில் கல் வீடு இருப்பதாக தலைப்புக்கு சம்பந்தம் அற்ற தேவையற்ற  வியாக்கியானம் வேறு. 

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் சுவாமிநாதனை சந்தித்து ஐயா குறைந்த செலவில் அதிக கல் வீடுகளை கட்டி அதிக மக்களுக்கு உதவிடுங்கள் என்று கூறலாமே. 

1 hour ago, trinco said:

உங்களுக்கு உண்மையாக அக்கறை இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்திருக்கலாமே

வெறும் வாய் சவடால்தான்!!!

மக்களுக்கு எதுவாகினும் கிடைக்கட்டும் என்கிறேன் நான்

இல்லை வெளி நாட்டில் உள்ள உங்களுக்கு விரும்பியதுதான் கிடைக்கணும் எண்டு தலைகீழாக நில்லுங்கோ.

மக்கள் உங்களை விட புத்திசாலிகள் என்று மறுபடியும் நிரூபிப்பார்கள் - கவலை வேண்டாம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கு உண்மையாக அக்கறை இருந்தால் இந்த திட்டத்தில் இணைந்திருக்கலாமே

வெறும் வாய் சவடால்தான்!!!

மக்களுக்கு எதுவாகினும் கிடைக்கட்டும் என்கிறேன் நான்

இல்லை வெளி நாட்டில் உள்ள உங்களுக்கு விரும்பியதுதான் கிடைக்கணும் எண்டு தலைகீழாக நில்லுங்கோ.

மக்கள் உங்களை விட புத்திசாலிகள் என்று மறுபடியும் நிரூபிப்பார்கள் - கவலை வேண்டாம் :grin:

ஆஹா இது இது இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்
உங்கள் கருத்துப்படி பணக்காரன் தான் கருத்துக் கூறலாம். கொடுக்காதவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

மக்கள் பிச்சைக்காரராக இருக்கக் கூடாது.
ஏமாற்றப்படக்கூடாது. மக்கள் பணத்தை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கக்கூடாது.

மக்களுக்கான திட்டங்களில் எந்தவிதமான ஊழலும் நடக்கக் கூடாது.
இது தான் எங்கள் நிலைப்பாடு.
அப்படி நடக்கும் பொது மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தான் மக்களில் அக்கறையுள்ளவர்கள்.
உங்களைப்  போல ஊழல்களுக்கும்  அரசியல்வாதிகளின் திருகுதாளங்களுக்கும்  ஒத்தூதுபவர்கள் தான் மக்களுக்கு எதிரானவர்கள்.

1 minute ago, வாத்தியார் said:

ஏன் பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம் என்று யாராவது ஒழுங்காக பதில் தாருங்கள். அதாவது கீழே குறிப்பிட்ட கேள்விகளுக்கு

  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் ஏன்
  • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் எந்த கதிர்கள் 
  • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் ஏன்
  • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் ஏன்
  • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் ஏன்
  • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் ஏன்
  • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் ஏன்
  • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்  ஏன் 
  • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும் எப்படி

இந்த பொருத்து வீடுகள் பற்றி எதிராக பேசும் ஒருவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான ரீதியிலான பதில்களை இதுவரை தரவில்லை. இது வெறும் அரசியல் + வாய்ச்சவடால் என்பது இப்போது நன்கு புரிகிறது. எனக்கு, எனது மக்களுக்கு ஒரு குடிசையாவது கிடைக்கணும் (மழை காற்று வெய்யிலில் இருந்து தப்ப). உங்கள் விதண்டாவாதங்களை உங்களுடனேயே வைத்திருங்கள்.

இங்கு ஆக்கபூர்வமான விஞ்ஞான ரீதியிலான பதில்களை நான் காணாதவரை - இங்கு எனக்கு வேலை இல்லை.

எனக்கு வேறு வேலை இருக்குது.  

மறுபடியும் கோடாலியை எகிரப்பண்ண நான் விரும்பவில்லை.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.