Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் 

 

 

காலம் பல   அழியாத  நினைவுகளை  நகர்த்திக் செல்கிறது. அவற்றில்  பாடசாலைக்  காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு  ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும்  இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது   மேற்பா ர்வையிலேயே  நடைபெறும் . மனைவி   மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் ..

 

.மூத்தவன் கேசவனின்  நண்பன் ..பக்கத்து வீட்டு  பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள்.  கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி    கற்றார்கள். கிராமத்தில்  பாலர் வகுப்பிலிருந்து  ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது, பின் அருகில் இருக்கும் உயர்கல்விக்கு எ நாற்பது  நிமிட நடை தூரத்தில் ஒரு கல்லூரி அங்கு   ஆறாம்  தரத்தில்  இருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பார்கள்.  

 

மேலதிகமான கல்வி  சா/ தரம் உயர் தரம் என்பவற்றுக்கு யாழ் படடணம் போக வேண்டி இருந்தது .  நண்பர்கள் இருவரும் ஒன்றாகவே  கோயில் வளவில் நண்பர்களுடன் ..பந்து விளையாடச்செல்வார்கள் .பிரேமனின் தாயார் வீட்டில் வளர்க்கும் பசுவைக்காணவில்லை போய் பார்த்துவா தம்பி என்றால் ...கேசவனும் கூடவே பிரேமனுடன் செல்வான்   மாலையில்  வீடு திரும்பாவிடில் இருவரில் ஒருவரிடம் மற்றவரைப்   ப ற்றிக் கேட்க்கலாம். காலம் உருண்டோட  இருவரும் எடடம் வகுப்பை அடைந்தனர் 

 

 ஒன்பதாம் வகுப்பில் ..கலைத்து றை    விஞ்ஞானத்துறை என பகுதி பிரிப்பார்கள்  ஆசிரியர்கள்.  பின்னர்   அதிபரினால்  தெரிவு அறிவிக்கப்படும்.  அப்படியான கால்கட்ட்த்தில்   ..பிரேமன் கலைத்துறைக்கும் . செல்வாக்குள்ள மனிதரின் மகன்  கேசவன் சயன்ஸ் பிரிவுக்கும் அ னுமதிக்க படடனர் .. நண்பர்கள் பிரிவது ..மிகவும் கொடுமை ..கேசவன் தன் தாயாரிடம் ...நடந்ததை சொல்லி தனக்கும் கலைப்பிரிவு   தான் . படிக்க  ஆர்வமுள்ளது என்று  கூறினான் . 

 

அந்தக் காலத்தில் சயன்ஸ் படிப்பது ஒரு கெளரவமான   மாயத் தோற்றத்தை கொண்டிருந்தது ..பிள்ளையின் ஆற்றல் நாடடம் கலைத்துறையாக இருந்தாலும் ..ஊராரிடம்பறை சாற்ற பிள்ளையை நிர்பந்திக்க வேண்டி இருந்தது . கேசவனின் தாயாரும் கணவரிடம் பேசினாள்.   என்  பிள்ளை   டாக்ட்டராக   இஞ்சினியராக நான் கனவு காண்கிறேன் .மறு  பேச்சு  பேசாமல்  அவரை சயன்ஸ் பிரிவில் படிக்க சொல் என்று கண்டிப்பான கடடளையிட்டு விட்டார் . 

 

கேசவனும்  தந்தை சொல்  மீறி  ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்து படித்து வந்தான் ...வெவ் வேறு வகுப்புக்க  ளாயினும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர் ...வகுப்பில்  தாவரங்களின் படங்களை கீறுவதற்கு ,    வீட்டுப் பாடம் ஒன்றாக செய்வதற்கு பிரேமனை தன வீட்டுக்கு அழைப்பான் ...எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள் .     அந்த வருட இறுதி தேர்வில்  கேசவன் குறைந்த மதிப்பெண்களை பெற்றான்  வீட்டிலும்  ரிப்போர்ட் காட்டில் தந்தையின் கையெழுத்து வாங்க  வேண்டி இருந்தது . தந்தை அந்த அறிக்கையை பார்த்தும் மிகவும் கடிந்து கொண்டார் .

 இதனால் மனவேதனை உற்ற கேசவன்  பலவாறு யோசித்தான். நண்பன்   பிரேமனுக்கு மட்டும் சொல்லிவிட்டு ....மறுவாரம்  தாயாருக்கு சொல்லாமல் படடனத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு ..சென்று  விடடான்.  திடீர் வரவைக்க கண்ட தாத்தா   ...மகிழ்ச்சி ஒரு புறமும் சந்தேகம் ஒருபுறமுமாய் ..பாட்டியிடம் எதுவும்  அவனிடம் கேட்க்காமல்  நல்ல உணவு கொடுக்க ச்சொன்னார் .

 

.மாலையானது  தாத்தா மெல்ல பேச்சுக்கு கொடுத்து பேரன் கோவித்து கொண்டு வந்ததை அறிந்தார் ..உடனடியாக  மகள் வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பினார்  பேரன் தங்களிடம் வந்து விட்ட்தாக ..தான் பொறுப்பாக பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார் . சில வாரங்கள் சென்றது . மார்கழி விடுமுறை முடித்ததும் மெல்ல அவனது எண்ணத்தைக்  கேடடா ர்.   அவன் ஊருக்கு செல்ல விருமபவில்லை எனவும்      படடண த்திலே ஒரு பாடசாலையில்க லைத்துறை பிரிவில் தன்னை சேர்க்க அனுமதி வாங்கி தரும்படியும் சொன்னான் . நீண்ட நாட்கள் தனிமையில் இருந் தாத்தா  பாட்டி மிகவும் உற்சாகமாக அவனைக் கவனித்தனர் 

 

வயதான தாத்தா   . தன் செல்வாக்கைப்பயன் படுத்தி  பிரபலமான கல்லூரியில் கலைத்துறையில் அவனை  சேர்த்து விடடார் .. அவன் சா /தரம் முடித்து  பின் உயர் தரத்தில் மிக திறமையான சித்தி அடைந்து .. கலைத்துறைப்  படடதாரி   ஆனான்  ...கால ஓடத்தில் ..கணணித் துறையிலும்  நாடடங்கொண்டு .. மிகத்   திறமையான நிலையை அடைந்தான் .  பல கம்பெனிகளில் இருந்து ..வடிவமைப்புக்காக  ஓடர்கள் வந்தன. அவனது பொருளாதாரம் உயர்ந்தது ...  தன் முயற்ற்சியினால்  ஒரு  கம்பெனி அமைத்து நிர்வகித்து  நல்ல நிலைக்கு வந்தான். ஊருக்கு செல்லும்போது தன் நண்பனைத்  சந்திக்க  மறப்பதில்லை .

 

..நீண்ட நாட்கள்  பேசாதிருந்த   தந்தை ..கம்பெனித் திறப்பு விழாவில் கலந்து பாராட்டினார் . இன்றும் தான் இழந்த அந்த ஒரு வருட வாழ்க்கையை எண்ணி  கலங்குவதுண்டு ...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில்   திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை  மாறிச்  செல்கிறது ..

 

இது சற்று  முன்னைய  காலத்தின் கதை  பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு அறியாது திணிக்கும் பெற்றோரின் மீதான தாக்கம்  என்னால் முடிந்த எழுத்து வடிவில்   நட் புடன்  நிலாமதி 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அக்கா. வெளிநாடு வந்தபின்னாவது திருந்தவில்லை. அதிலும் லண்டன் படு மோசம்

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி பாடசாலை வாழ்க்கை எந்த ஒருவராலும் மறைக்க முடியாது.

நீங்கள் எழுதியது போல் சயன்ஸ் ஆட்ஸ் இரண்டுக்கும் பெரியதொரு மானப் பிரச்சனை.ஆட்ஸ் படிப்பவர்களை ஒரு முட்டாளாக எண்ணிய காலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளத்தை வருடிய கதை...நன்றியும் வாழ்த்துக்களும் நிலாமதி.

22 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி பாடசாலை வாழ்க்கை எந்த ஒருவராலும் மறைக்க முடியாது.

நீங்கள் எழுதியது போல் சயன்ஸ் ஆட்ஸ் இரண்டுக்கும் பெரியதொரு மானப் பிரச்சனை.ஆட்ஸ் படிப்பவர்களை ஒரு முட்டாளாக எண்ணிய காலம்.

முந்தி ஆர்ட்ஸ் படிச்ச மாப்பிளையளுக்கு சீதனமும் வலு சீப் :cool:
இப்பத்தையான் விலைவிபரம் என்னெண்டு தெரியேல்லை :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலிருந்து... லண்டனுக்கு, விரும்பி போனவர்... tw_glasses:
"லண்டன்" படு மோசம் என்று  சொன்ன கருத்தை... வாசிக்க....
சுப்பிரமணியசாமியின்... நினைப்பு வந்து விட்டது.  :grin: :D:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் அக்கா. வெளிநாடு வந்தபின்னாவது திருந்தவில்லை. அதிலும் லண்டன் படு மோசம்

எப்ப பாரு லண்டன் சனத்திலே குற்றம் சாட்டுறது 

 

அக்கா நிலாமதி எப்படி சுகமா இருக்கிறியளா கதை சூப்பர் இப்ப கொளரவத்திக்கு ரஷ்யா டொக்டர் என்னதைதை சொல்ல அவருக்கு கோடி வேற சீதனம்  நாட்டு நடப்ப சொன்னன்  (ஊரில் )

7 hours ago, குமாரசாமி said:

உள்ளத்தை வருடிய கதை...நன்றியும் வாழ்த்துக்களும் நிலாமதி.

முந்தி ஆர்ட்ஸ் படிச்ச மாப்பிளையளுக்கு சீதனமும் வலு சீப் :cool:
இப்பத்தையான் விலைவிபரம் என்னெண்டு தெரியேல்லை :grin:


குறைஞ்சது  5 லட்சம் முதல் கோ    ....கோடிவரை    தொட்டு விட்டது கு.சாtw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியிலிருந்து... லண்டனுக்கு, விரும்பி போனவர்... tw_glasses:
"லண்டன்" படு மோசம் என்று  சொன்ன கருத்தை... வாசிக்க....
சுப்பிரமணியசாமியின்... நினைப்பு வந்து விட்டது.  :grin: :D:

அட்ரா.....அட்ரா....அட்ரா :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அட்ரா.....அட்ரா....அட்ரா :grin:

விரும்பிப் போனன் எண்டு எப்ப சொன்னனான். சொந்தம் பந்தம் எண்டாலும் பிழை எண்டால் பிழைதான். இதுக்குள்ளை உண்மையைச் சொல்லக்கூடாதோ.????:317_full_moon_with_face:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆர்ட்ஸ் தான் படித்தனான். முனிவர் சொல்லுறதை பார்த்தால் இப்ப அங்கிருந்து படித்திருக்கலாம் என்று நினைக்கின்றன் .....!  tw_blush:

நல்ல கருவைத் தொட்டிருக்கிறீங்கள், தொடருங்கள் சகோதரி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த கெளரவ பிரச்சனை காரணமாக சயண்ஸ் செய்து கடைசில தந்தி கம்பிதான் ரிசல்ட்......ஆர்ட்ஸ் செய்திருந்திந்தால் ஒரு சிறந்த எழுத்தாளராக வந்திருக்கலாம் என்று இப்பவும் கவலைப்படுவதுண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சுமில்லை, சயன்சுமில்லை இடையில் அக்கிறிக்கல்சர். ஆனாலும் இரும்பு இயந்திரங்கள்தான் வாழ்வு தந்தது. நான் 8 மணித்தியாலம் உழைக்க எனக்கு வந்தவள் நாள்முழுதும் எனக்காக உழைக்கிறாள். அதுதான் எனக்குவந்த சீதணம். :)  

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்ஸ் குறுப்பிற்கும் சயன்ஸ் குறூப்பிற்கும் இவ்வளவு முரண்பாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருக்கிறதா..? நான் இரண்டுமே படிக்கவில்லையாதலால் அதிகம் தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் இந்த பாகுபாடு இருப்பதாக அறியவில்லை. எந்த எழுத்தர், மென்பொருளாளர் பணிக்கும் ஒரு கல்லூரி பட்டம்(B.Sc, or B.A) இருந்தால் போதுமானதே.

தமிழகத்தின் கல்லூரிகளில் விலைபோகாத, எளிதாகக் கிட்டும் குறூப்  பி.ஏ(வரலாறு) - BA(History) தான்..!

 

On 3/25/2017 at 1:03 AM, நிலாமதி said:

 ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் 

...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில்   திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை  மாறிச்  செல்கிறது ..

அனுபவத்தில் உணர்ந்த உண்மைதான்..! consoler.gif

நன்றி.

26 minutes ago, Paanch said:

...நான் 8 மணித்தியாலம் உழைக்க எனக்கு வந்தவள் நாள்முழுதும் எனக்காக உழைக்கிறாள். அதுதான் எனக்குவந்த சீதணம். :)  

பாவம், ரொம்பக் கொடுமை..! vire.gif

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ஆர்ட்ஸ் குறுப்பிற்கும் சயன்ஸ் குறூப்பிற்கும் இவ்வளவு முரண்பாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருக்கிறதா..? நான் இரண்டுமே படிக்கவில்லையாதலால் அதிகம் தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் இந்த பாகுபாடு இருப்பதாக அறியவில்லை. எந்த எழுத்தர், மென்பொருளாளர் பணிக்கும் ஒரு கல்லூரி பட்டம்(B.Sc, or B.A) இருந்தால் போதுமானதே.

தமிழகத்தின் கல்லூரிகளில் விலைபோகாத, எளிதாகக் கிட்டும் குறூப்  பி.ஏ(வரலாறு) - BA(History) தான்..!

 

அனுபவத்தில் உணர்ந்த உண்மைதான்..! consoler.gif

நன்றி.

பாவம், ரொம்பக் கொடுமை..! vire.gif

பாவம் வன்னியர் ரெம்பக் கடுப்பாகிவிட்டார். லட்சமோ.! கோடிகளோ..!! அவரைக் கலாய்க்குது போல் இருக்கிறது. :( :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்த நேரம்....ஆர்ட்சுக்குப் போயிருக்கலாம் தான்!

வீட்டில் ஒரு கொலை கட்டாயம் விழுந்திருக்கும்!

நல்ல ஒரு கருவைத் தொட்டிருக்கிரீங்கள், நிலாக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆர்ட்ஸ் சயன்ஸ் பிரச்சனை இப்பவும் ஊரில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2017 at 9:08 PM, suvy said:

முனிவர் சொல்லுறதை பார்த்தால் இப்ப அங்கிருந்து படித்திருக்கலாம் என்று நினைக்கின்றன் .....!  tw_blush:

நீங்கள் டூ லேற் அண்ண நான் கூட படிக்கும் காலத்தில் ஆட்ஸ் படிக்க போனேன் ஏனென்றால் எனக்கு  கணக்கு  கொஞ்சம் அப்பிடி இப்பிடி அங்க போய் பார்த்தால் 53 பேர் ஒரு வகுப்பறையில் இருக்கினும் பிறகு இதுக்குள்ள குந்தியிருந்து மட்டை அடிக்க இயலாது என்று போட்டு கொமசுக்கு பூந்து கோமாவாவுனதுதான்:51_scream: மிச்சம் அவ்வளவும் கொடிகள் ரிசல்டை சொன்னன் பேந்து நாட்டை விட்டு ஓடி அது பெரி கதை வேண்டாமே 

 

5 hours ago, MEERA said:

உந்த ஆர்ட்ஸ் சயன்ஸ் பிரச்சனை இப்பவும் ஊரில் உள்ளது. 

இலங்கையில் உயர்தரம் இருக்கும் வரைக்கும் ஓடும் வாத்தியார் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை , இஞ்சினியர் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை ,வைத்தியன் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை இப்படி ஓடுகிறது இங்கே :97_raised_hand:

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா இந்தக்கதையில் ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் விருப்புக்கு ஏற்றமாதிரி தெரிவு செய்ய வாய்ப்பு கிடைத்துவிட்டது. பலருக்கு அவ்வாய்ப்பே இல்லாமல் பெற்றோரின்  விருப்புக்காக என்று வாழ்ந்து எதிர்காலக்கனவு என்பதையே பலியாக்கி தோல்வி கண்டவர்கள் நிலைதான் அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.