Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

அப்படியா! இதுக்கெல்லாம் expiry date இருக்கா? கோட்டபாயவும் மகிந்தவும் இதை சொல்லி தான் தப்பிக்க நினைக்கிறார்கள். 

நன்றி சகோ

கோட்டாவும் மகிந்தவையும் புலிகளையும் ஒன்றாக நினைக்கும்   உங்களுடன் பேச  எனக்கு  ஏதுமில்லை.

டொட்.

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
11 minutes ago, விசுகு said:

நன்றி சகோ

கோட்டாவும் மகிந்தவையும் புலிகளையும் ஒன்றாக நினைக்கும்   உங்களுடன் பேச  எனக்கு  ஏதுமில்லை.

டொட்.

தப்பிக்க வழி. நன்றாக உள்ளது விசுகு. அமிர்தலிங்கம் தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் வந்தது கொலை செய்யப்பட வேண்டிய ஒரு  குற்றம் என்று நினைக்கும்  அளவுக்கு அப்பாவியான உங்களிடம் இதைக்கேட்டது தப்பு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

தப்பிக்க வழி. நன்றாக உள்ளது விசுகு. அமிர்தலிங்கம் தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் வந்தது கொலை செய்யப்பட வேண்டிய ஒரு  குற்றம் என்று நினைக்கும்  அளவுக்கு அப்பாவியான உங்களிடம் இதைக்கேட்டது தப்பு தான். 

நீங்கள் உங்களுக்கு  ஏற்ப

எனது  கருத்துக்களை மாற்றி

என்னை  முட்டாளாகவும் உங்களை  அறிவாளியாகவும் காட்டுவது  இது  புதிதல்ல

அங்கே  எழுதப்பட்டதை மீண்டும்  வாசியுங்கள்

அந்த நேரம்  ஒரு பொதுமகனாக எனக்கு அப்படி  தோன்றியது

அவர் சுடப்பட்டார்

புலிகளது  அநேகமான தண்டனைகள் இந்தவகையானவைகள்  தான்.

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, விசுகு said:

நீங்கள் எழுதியதே குறிப்பிட்டேன். அவ்வாறு தான் எழுதி இருந்தீர்கள். போராட்ட காலத்தில் புலிகள் மீது பழி விழும்  அளவுக்கான சிறிய தாக்குதல்  சம்பவங்கள் நடைபெற்று அவை சர்வதேச ஊடகங்களில் வரும் போது அது விடுதலைப் போராட்டத்தை உண்மையாக நேசிக்கும் மக்களுக்கு கவலை வரும்.  எமது மனச்சாட்சிக்கு புலிகள் செய்தது தவறு என்று தெரிந்தாலும் மற்றய இன மக்களிடம் பேசும் போது  விட்டுக்கொடுக்காது அதை நியாயப்படுத்தி  வாதிட்ட அனுபவமே எனக்கு உண்டு. ஆனால் எமது தமிழ் சூழலில்  அதை செய்வது பாதகமான விளைவையே ஏற்படுத்தும்  என்றே உணர்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

3 minutes ago, Sasi_varnam said:

இந்த தாடிக்காரர் யார்? இவருக்கும் நாம்தமிழர் கட்சிக்குமான நெருக்கம் தான் என்ன?
இவரை யார் இயக்குகிறார்கள்? 
👎  தாடிக்காரர்.... தி.மு.க. வுக்கு முக்கி முக்கி நல்லா செம்பு தூக்குகிறார்...  👎 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Sasi_varnam said:

இவர்தான் சவுக்கு சங்கர்.

இவர் 10 நாளைக்கு முதல் கல்யாணம் ராஜீவ் வெளிய போறங்க என்னு டுவீட் போட்டார்.

இவர் ஒரு திராவிட சார்புள்ள அரசியல் கருத்தாளர்.

அடுத்த தேர்தலில் திமுக வெல்லணும் என்று வெளிபடையாகவே சொல்லும் “செம்பு”.

ஆனால் முன்பு ஸ்டாலின் உட்பட திமுகவை துவைச்சும் போட்டிருக்கார்.

இனதூய்மை அரசியல் பேசும் நாத அழிவது மகிழ்சி என்பவர்.

சவுக்கை கேட்டால் தான் issue based நிலைப்பாடு எடுப்பதாக சொல்கிறார்.

அவரின் எதிரிகளை கேட்டால் காசு வாங்கும் அரசியல் “மாமா” என்கிறனர்.

டுவிட்டரிலும் உள்ளார்.

பலமாதமாக இருந்த பிணக்கு அதை இவரின் ஒத்தை டுவீட்டில் தங்கள் கட்சியில்  பிரச்சனை வந்தது என்று சில தம்பிகள் சொல்கிறார்கள்

https://www.savukkuonline.com 

தான் போட்ட டுவீட் 

சீமானிற்கு நெருங்கியவர்கள் தந்த செய்தியின் அடிப்படையில் எழுதியது என்கிறார்.

அதாவது இந்த செய்தியை நாத தலைமையே சவுக்குக்கு கசிய விட்டுள்ளாதா? இது ஒரு inspired leak ஆ?

என்ற கேள்வியை இந்த பேட்டி ஏற்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சவுக்கு சங்கர் உங்கள் போன்றோர் போல் சீமான் எதிர்ப்பாளர் தான். ஆனால் பக்கா திமுகா ஆதரவாளர். 
சவுக்கு சங்கர் நடுநிலைவாதியல்ல.😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

"கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டே இவர்களிடம் ஏமாந்து கொண்டு, இங்கே வந்து நா.தவை  கல்லெறி வாங்கும் காய்த்த மரங்களாகச் சித்திரிக்க ஒரு தனியான திறமை வேண்டும்!  

விரும்புபவன், இருப்பவன் கொடுக்கிறான். உங்களுக்கு ஏன் எரிகிறது??அவர்கள் யாரிடமும் அடாத்தாக பணம் வசூலித்ததாக நான் அறியவில்லை!

4 hours ago, tulpen said:

அப்படியா! இதுக்கெல்லாம் expiry date இருக்கா? கோட்டபாயவும் மகிந்தவும் இதை சொல்லி தான் தப்பிக்க நினைக்கிறார்கள். 

என்னே ஒரு ஒப்பீடு!! புலிகள் மௌனித்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது ஆனால் மகிந்தவும் கோத்தாவும் இப்போதும் அரசியலில் இருப்பவர்கள். இந்தவித்தியாசம் கூட தெரியாமல் அறிவுபூர்வமான கருத்தாடல்கள் செய்வதாக பீத்திக்கொண்டே இருங்கள். நாடும் வீடும் உருப்படும்!!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

சவுக்கு சங்கர் உங்கள் போன்றோர் போல் சீமான் எதிர்ப்பாளர் தான். ஆனால் பக்கா திமுகா ஆதரவாளர். 
சவுக்கு சங்கர் நடுநிலைவாதியல்ல.😎

ஓம். இதுக்கு முந்திய பதிவில் இவர் இப்போது திமுக அனுதாபி என எழுதினேன். ஆனால் இவர் திமுகவை கடுமையாக முன்பு எதிர்தவர்.

இந்த உலகில் நடுநிலைவாதி என்று யாரும் இல்லை.

யார் எதை சொன்னாலும், மெய்பொருள் காண்பதறிவு.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

சவுக்கு சங்கர் உங்கள் போன்றோர் போல் சீமான் எதிர்ப்பாளர் தான். ஆனால் பக்கா திமுகா ஆதரவாளர். 
சவுக்கு சங்கர் நடுநிலைவாதியல்ல.😎

அவ‌ன் மாமா ப‌ய‌ல் தாத்தா 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

ஓம். இதுக்கு முந்திய பதிவில் இவர் இப்போது திமுக அனுதாபி என எழுதினேன். ஆனால் இவர் திமுகவை கடுமையாக முன்பு எதிர்தவர்.

இந்த உலகில் நடுநிலைவாதி என்று யாரும் இல்லை.

யார் எதை சொன்னாலும், மெய்பொருள் காண்பதறிவு.

நானும் விடுதலை புலிகளை எதிர்க்கிற மாதிரி இஞ்சை எழுதினனான் கண்டியளோ... 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நானும் விடுதலை புலிகளை எதிர்க்கிற மாதிரி இஞ்சை எழுதினனான் கண்டியளோ... 😎

நான் முதல்லயே சொல்லி இருக்கன் அண்ணர்.

அந்த விசயத்துக்கு நீங்கள் சரிபட்டு வரமாட்டியள்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, பையன்26 said:

அவ‌ன் மாமா ப‌ய‌ல் தாத்தா 😡

அவனை தீர்க்கதரிசியாய் இஞ்சை கொஞ்சப்பேர் நினைக்கினம். எல்லாம் திமுகவின்ரை சதி எண்டு ஒருத்தருக்கும் விளங்குதில்லை போல...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவனை தீர்க்கதரிசியாய் இஞ்சை கொஞ்சப்பேர் நினைக்கினம். எல்லாம் திமுகவின்ரை சதி எண்டு ஒருத்தருக்கும் விளங்குதில்லை போல...

சுடலைக்கு இவ்வளவு கெட்டிதனம் இருந்தா திமுகதான் இப்ப ஆளும் கட்சி🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

விரும்புபவன், இருப்பவன் கொடுக்கிறான். உங்களுக்கு ஏன் எரிகிறது??அவர்கள் யாரிடமும் அடாத்தாக பணம் வசூலித்ததாக நான் அறியவில்லை!

டென்மார்க் வாழ் த‌மிழ‌ர்க‌ள் க‌ட்சிக்கு காசு கொடுத்த‌தாய் நான் இதுவ‌ரை அறிய‌ வில்லை ந‌ண்பா , 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக‌ம் உத‌வும் உற‌வுக‌ள் அர‌பி நாடுக‌ளில் வேலை செய்ப‌வ‌ர்க‌ள் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் உத‌வி சிறு ப‌ங்கு , 

ஜ‌ஸ்ரினுக்கு எல்லாம் தெரிந்த‌து போல் எழுதுபார் அதில் சிறு அவ‌தூறுக‌ளும் இருக்கும் , ஆனால் க‌ள‌ நில‌வ‌ர‌ம் அப்ப‌டி இல்லை ,

கோசானுக்கு அண்ண‌ன் சீமான் வாட‌கை வீட்டில் தான் இருக்கிறார் என்று போன‌ மாச‌ம் வேறு திரியில் நான் எழுத‌ என்னை பார்த்து சிரிச்சார் , இப்போது எல்லாரும் சொல்லுகின‌ம் அண்ண‌ன் சீமான் வ‌சிக்கும் வீடு வாட‌கை வீடு , இடும்பாவ‌ன‌ம்கார்த்திக் தொட்டு சாட்டை துரை முருக‌ன் வ‌ரை ஊட‌க‌ங்க‌ளில் இப்போது சொல்லுகின‌ம் அண்ண‌ன் சீமான் இருப்ப‌து வாட‌கை வீடு , இதையே நான் சொன்னால் ந‌க்க‌ல் பாணியில் சிரிப்பின‌ம்  😁😀,

யாழில் த‌ங்க‌ளுக்கு தான் எல்லாம் தெரியும் என்ர‌ நினைப்பில் எழுதி த‌ள்ளுவின‌ம் ஆனால் அண்ண‌ன் சீமானின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையை ப‌ற்றி இவ‌ர்க‌ளுக்கு பெரிசா ஒன்றும் தெரியாது இது நித‌ர்ச‌ உண்மை 😁😀,

இவ‌ர்க‌ளுக்கு விள‌க்க‌ம் கொடுப்ப‌திலும் பார்க்க‌ பேசாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம் என்று சில‌ ச‌மைய‌ம் யோசிப்பேன் , ஆனால் இவ‌ர்க‌ளின் புருடாக்க‌ளை பார்க்கையில் ப‌தில் அளிக்க‌னும் போல் இருக்கும் சில‌ நேர‌ங்க‌ளில் 😡😉

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அவனை தீர்க்கதரிசியாய் இஞ்சை கொஞ்சப்பேர் நினைக்கினம். எல்லாம் திமுகவின்ரை சதி எண்டு ஒருத்தருக்கும் விளங்குதில்லை போல...

அந்த‌ சாக்க‌டையின் பேட்டியை நான் இதுவ‌ரை பார்த‌தும் இல்லை / ச‌வுக்கு ச‌ங்க‌ரின் உண்மை முக‌த்தை செந்தில் சொல்லுகிறார் கொஞ்ச‌ம் கேலுங்கோ தாத்தா , 

மாமா ப‌ய‌ல் ஆட்க‌ளை மிர‌ட்டி காசு ப‌றிக்கும் ர‌வுடி , திமுக்காவில் இருப்ப‌வ‌ர்க‌ளே பெரிய‌ திருட‌ர்க‌ளும் ர‌வுடிக‌ளும் அந்த‌ வ‌ரிசையில் இந்த‌ மொக்கு ச‌ங்க‌ரும் 😁😀

1 hour ago, பையன்26 said:

செந்தில் என்பவர் சீமானின் சொம்பு தானே. அவ‍ர் சொல்வதை எல்லாம் ஆதாரமா? திமுக, அதிமுக மட்டுமல்ல சீமானின் கட்சியும் ரவடி கும்பல் தான்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

‘நீட்’ தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான் எச்சரிக்கை

'நீட்' தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான் எச்சரிக்கை

நீட்’ தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான் எச்சரிக்கை

நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் மதுரையைச் சேர்ந்த தங்கை ஜோதிஸ்ரீ துர்காவும், தருமபுரியைச் சேர்ந்த தம்பி ஆதித்யாவும், திருச்செங்கோட்டையைச் சேர்ந்த தம்பி மோதிலாலும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து சொல்லொணாத் துயரமடைந்தேன். இரு நாட்களுக்கு முன்பாக அரியலூரைச் சேர்ந்த தம்பி விக்னேசு நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட பெரும் காயத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே நடந்தேறிய இக்கொடும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது. எவ்விதச் சொற்கள் கொண்டும் ஆற்றுப்படுத்த முடியாத அளவுக்குப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கிற அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.

தங்கை அனிதாவில் தொடங்கி மோதிலால் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் இளந்தளிர்களின் மரணம் தொடர்கதையாகி வருவது பேரச்சத்தையும், பெருங்கவலையையும் தருகிறது. 2017 ஆம் ஆண்டு அனிதா, 2018 ஆம் ஆண்டுப் புதுச்சேரி சிவசங்கரி, விழுப்புரம் பிரதீபா, 2019 ஆம் ஆண்டுத் தஞ்சை வைசியா, திருப்பூர் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, பெரம்பலூர் கீர்த்தனா, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை தனலெட்சுமி , கோவை சுபஸ்ரீ, இம்மாதம் அரியலூர் விக்னேசு, மதுரை ஜோதிஸ்ரீ, தருமபுரி ஆதித்யா என நீளும் பிஞ்சுப்பிள்ளைகளின் மரணங்கள் பெரும் ரணத்தையும், தாங்கவியலா வேதனையையும் அளிக்கிறது. மருத்துவராக ஆசைப்பட்டப் பிஞ்சுப்பிள்ளைகளின் கனவைக் கருக்கி, அவர்களது உயிரைக் குடித்திடும் ஆளும் வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற இச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். இத்தகைய துயர்மிகு சூழலில், அநீதி இழைக்கப்படுவது கண்கூடாகத் தெரிந்தும் அதற்கெதிராக எதுவும் செய்ய இயலா கையறு நிலையில் நிற்கிறோமே? எனும் ஆற்றாமையும், அடக்கவியலா பெருங்கோபமும் நெஞ்சினுள் வன்மத்தை விதைக்கிறது. ஆத்திரம் ஊற்றாகப் பிறப்பெடுக்கிறது. நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை அதிகாரத்திமிரினாலும், அடாவடித்தனத்தாலும் மத்திய, மாநில அரசுகள் கூட்டுசேர்ந்து செய்து முடித்தப் பச்சைப்படுகொலையாகும். தமிழர்களுக்கெதிரான மோடி அரசின் நயவஞ்சகத்தனமும், அதற்கு ஒத்திசைந்து போகும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் கையாலாகத்தனமுமே இத்தனை பேரின் உயிரைப் போக்கியிருக்கிறது.

நீட் தேர்வில் தோல்வியுற்றதற்காகவோ, அதனை எதிர்கொள்ள முடியாததினாலோ உயிரைவிடும் எண்ணத்தைத் எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற தமிழ்ப்பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும் நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக்கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க்கையை எதிர்கொண்டு போராடி, இலட்சியத்தில் ஈடேறி வெல்வதற்கு உள்ளவுறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தம்பி, தங்கையர்களுக்கு அண்ணனாக இருந்து அறிவுறுத்துகிறேன்.

2017 ஆம் ஆண்டுத் தங்கை அனிதாவின் பேரிழப்பிற்குப் பிறகு, தமிழகம் கிளர்ந்தெழுந்து ஒற்றைக்குரலில் ஒருமித்துக் குரலெழுப்பியப் பிறகு, கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தின் விளைவாக, தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்தும் அதற்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இதனால்தான், ஒவ்வொரு வருடமும் தமிழக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. எட்டுகோடி தமிழ் மக்களின் பிரநிதித்துவத்தைப் பெற்ற தமிழக அரசின் சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் அதனைக் கிடப்பில் போட்டிருக்கும் மத்திய அரசின் செயல் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் சனநாயகப்படுகொலையாகும்.

நீட் தேர்வினால் அடுத்தடுத்து நிகழும் பிள்ளைகளின் மரணங்கள் அத்தேர்வு முறையின் கோர முகத்தை அம்பலப்படுத்துகிறது. ஆகவே, அத்தேர்வு முறை தொடர இனியும் அனுமதித்தால் தமிழக மாணவர்களை ஒவ்வொருவராய் காவுவாங்கிவிடும் பேராபத்து நிறைந்திருக்கிறது. நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக் கனவோ பறிபோகக்கூடாது என்பதில் இனியேனும் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அமர்வில் கிடப்பிலிருக்கிற நீட் தேர்வு குறித்தான மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மனு அளித்து தமிழக அரசு சட்டப்போராட்டம் செய்ய வேண்டும் எனவும்,

மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தமும், பெரும் நெருக்கடியும் தந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தருவதோடு மட்டுமல்லாது நீட் தேர்வையே மொத்தமாய் ரத்துசெய்திட ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்ய மறுத்து, கள்ளமௌனம் சாதித்து காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்படுவார்களேயானால் எதிர்விளைவுகள் விபரீதமாய் போகுமென மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி சார்பாக எச்சரிக்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/not-another-life-should-be-succumbed-to-death-due-to-neet-i-am-sorry-i-am-tired-jothisri-durga/

  • கருத்துக்கள உறவுகள்

நடுரோட்டில் மாஸ் காட்டிய காளியம்மாள்

  • கருத்துக்கள உறவுகள்

2021 சட்டமன்றத் தேர்தல் யுத்தத்திற்கு படையைக் கட்டி இலக்கை நோக்கிப்பாய்வோம் -சீமான் பேரழைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டத்தை காவல்துறை தடுத்தது!

சென்றவர்களை பேசுவார்கள் நாளைய தலைமுறையினர் செய்யும் வேலையை பாருங்கள் ஆக சிறந்தவர்கள் இவர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.