Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

                                                              வானவில்

 

                                              images?q=tbn:ANd9GcQLqaeCb-VQIEHPFrekv81

 

நள்ளிரவு தாண்டியும் தூக்கம்வர மறுத்தது. கண்ணிலிருந்து கொட்டிய நீர் வற்றி கன்னங்கள் காய்ந்து மனம் இறுகிக் கிடந்தாள் வாசுகி.

 நேற்றுவரை எத்தனை கனவுகளில் மிதந்தாள். நெற்றிச் சுட்டி முதல் பாதக் கொலுசுவரை அத்தனையும் பார்த்துப் பார்த்து வாங்கி கற்பனையிலேயே தன் எழிலை ஒத்திகை பார்த்து மனதுக்குள் சிரித்தது நினைவில் புரண்டது.

 'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள்.

அடடா என் வசீகரன் என்று எண்ணியதை நினைக்க அவளது முகத்தில் நாணம் கோலமிட்டது. பெண் மனதுதான் எவ்வளவு விசித்திரமானது.

 இத்தனை காலமும் கண்ணுக்குள் வைத்து பொத்தி வளர்த்த பெற்றவர்களை தனக்கென ஒருவன் வந்து விட்டால் பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடும் அதிசயம் எப்படி நடக்கிறது.

'வாசுகி நான் இண்டைக்கு சாத்திரியாரிட்ட போய் உம்மட பலன் பார்த்தனான். இந்த வருடத்துக்குள்ள உம்மட திருமணம் நடக்காட்டி இனி கன காலம் செல்லுமாம் அதனால நான் நேர நான் புறோக்கரிட்ட போய் கதைச்சிற்று வந்திற்றன்.'

வதனியின் பேச்சில் கேள்விமட்டுமின்றி உறுதியான பதிலும் இருக்கவே வாகி சிறுது மௌனமாக இருந்தாள். சிறிது நேரம் தன்னைச்;சுதாகரித்தவள்.

'அம்மா ஏன் இப்ப அவசரம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்'

'இப்பதான் பலன் இருக்கெண்டு சாத்திரி சொன்னவர்.'வதனியும் விடுவதாய் இல்லை.

'அம்மா முன்ன பின்ன தெரியாத ஆளை புரோக்கர் சொல்லி எப்பிடி செய்யிறது'

'வாசுகி நீர் சும்மா இரும் அதெல்லாம் போட்டோ தருவினம். நீர் பார்த்து பிடிச்சிருந்தா அதுக்குப் பிறகு போனில கதைச்சு முடிவெடுக்கலாம்'

வாசுகிக்கு அம்மாவுடன் சண்டையிட முடியவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

'நான் உமக்கு நல்லதுதான் செய்வன். நீர் முந்தி அவசரப்பட்டு காதல் காதல் எண்டு அலைஞ்சு கடைசியில நடந்தது என்ன? பேசாமல் இரும்.

வாசுகியின் மனதின் பாரம் அறியாமல் வதனியின் குத்தல் பேச்சு.

அம்மா சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. படிக்கிற வயதில தேவையில்லாத விடயங்களில் ஈடுபட வேணாம் எண்டு எவ்வளவு சொல்லியும் பத்தாம் வகுப்பிலேயே காதல் வசப்பட்டு வீட்டைவிட்டு வெளிக்கிட்டு பட்ட அவதி அவளால் மறக்கக் கூடியதா?

இறுதியில் படிப்பும் இன்றி தொழிலும் இன்றி நம்பி வந்தவனின் துணையும் இன்றி மீண்டும் அம்மாவின் காலடியில் விழுந்த அந்த நிமிடம் தன் தவறை உணர்ந்து கொண்டாள்.

வதனிக்கோ மகளின் எதிர்காலம் குறித்து ஏக்கமும் கவலையுமே அவளை மற்றவர் முன் தலை நிமிர முடியாத தீராத அவமானமாக உணர்ந்தாள்.

இப்பொழுது வாசுகிக்கும் வயது இருபத்திஜந்தைத் தாண்டி விட்டது. ஓரளவு உலகத்தைப் படித்துவிட்டாள். பதினைந்தில் இருந்த துடிப்பும் துள்ளலும் இருபத்திஜந்தில் நின்று நிதானிக்கக் கூடிய பக்குவத்தைக் கொடுத்திருந்தது.

என்றாலும் அம்மா புறோக்கர் மூலம் திருமணம் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.வெளியே சொல்ல முடியாமல் அம்மாவின் பிடிவாதம் அவளை அடக்கிப் போட்டது.

'வாசுகி புறோக்கர் நாலைந்து போட்டோக்கள் தந்திருக்கிறேர் நீர் பார்த்து செலக்ற் பண்ணும்.'

என்ன இது பெயரோ தொழிலோ குணமோ குடும்பச் சூழலோ எதுவுமே தெரியாமல் போட்டோவைப் பார்த்து செலக்ற் பண்ணும் என்று சொல்லும் அம்மாவின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

'அம்மா எப்பிடி போட்டோவைப் பார்த்து சொல்லுறது'

அதெல்லாம் பேச்சுத் திருமணம் எண்டா அப்பிடித்தான். நாங்களெல்லாம் ஊரில அப்பா அம்மா சொன்னா மறுபேச்சுப் பேசமாட்டம் இங்க நீங்கதான்.....

ஜயோ அம்மாவின் ஊர்ப்புராணம் தொடங்கமுதல் என் பதிலை சொல்லிவிட வேணும் என்னும் அவசரத்தில் 'சரிசரி போட்டோவைத் தாங்கோ. '

அம்மா கேண்ட பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து பக்குவமாக நீட்டினாள்.

'உமக்குப் பிடித்ததைச் சொல்லும்'

முதலில் இருந்தது முன்வழுக்கை ஒதுக்கினாள்.

இரண்டாவது பார்வையில் முரட்டுத்தனம் சரி இதுவும் வேணாம்.

மூன்றாவது நான்காவது என்று ஒதுக்கிவிட்டு ஜந்தாவதாக இருந்த படம் பார்வையிலும் முகஅமைப்பிலும் ஏதோ மனதுக்குப் பிடித்ததுபோல் இருந்தது.

'இந்தாங்க இது பரவாயில்லை'

'என்ன பரவாயில்லையோ? இதவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு எங்க கிடைக்கப் போறான்'

மகளின் மனநிலை புரியாமல்  அடிக்கடி அவள் செய்த தவறை குத்திக் காட்டியே மனதை நோகடிக்கிறேன் என்று தெரியாமல் எத்தனை தடவைதான் நோகடிப்பாள்.

வாசுகி தன் அம்மா தன் தப்பைக் குத்திப் பேசும் பொழுதெல்லாம் குறுகிப் போய் விடுவாள்.

வதனிதான் என்ன செய்வாள் கணவன் பாதியிலேயே வதனியைக் கைவிட்டுவிட்டு வேறுஒரு பெண்ணுடன் தொடர்பேற்படுத்திக்கொண்டு விலகிப் போய்விட தனியேதான் வாசுகியை வளர்த்தாள்.

'நீயும் உன் அப்பனைபக் போல்தான் என்று பல தடவைகள் இயலாமையின் உச்சியில் எரிந்து விழும்போதெல்லாம் வாசுகி உள்ளுக்குள் உடைந்து போவாள்.

வாசுகிக்கு இப்போதெல்லாம் அம்மாவின் பேச்சு பழகிவிட்டது.

நான் அம்மா பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேச்சு கேட்கவேண்டி இருந்திருக்காது. தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள்.

'கலோ புறோக்கரா பேசுறீங்க'

' ஓமோம் என்ன விசயம் சொல்லுங்க'

'நாங்க ஒரு போட்டோ செலக்ற் பண்ணி இருக்கிறம்'

'என்ன நம்பர்'

ஜந்தாம் நம்பர்'

'ஓ கொஞ்சம் பொறுங்கோ அது அந்த வசீகரனோட போட்டோ'

'ஆக்கள் எந்த ஊர் விபரமெல்லாம் எடுத்து வையுங்கோ வாறன்'

அதுதான் சரி நேரில வாங்கோ விபரம் சொல்லுறன்'

அப்ப பின்னேரம் சந்திப்பம் பாய்'

வதனி பின்னேரம் புறோக்கரைச் சந்தித்துவிட்டு திரும்பி இருந்தாள். அவன் பெயர் வசீகரன். வயது 28. பொடியன் நல்ல கொம்பனியில வேலை செய்யிறான். ஆனா அவன் எங்கட மதமில்லை. வேதக்காரப் பெடியனாம்.'

'அம்மா உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படி செய்யுங்க'

வாசுகி அம்மாவின் தலையில் போட்டு விட்டு தான் ஒதுங்கிக் கொண்டாள்.

வதனிக்கோ சாத்திரி சொன்ன மாதிரி உடனேயே இந்த வருடத்திற்குள் எப்படியும் வாசுகியின் திருமணம் கைகூடி வருகின்ற சந்தோசம்.

இவளின்ர கலியாணத்தை முடித்திற்றனென்றால் எனக்கு இருக்கும் பெரிய மனச்சுமை குறஞ்சிடும்

தன்மனச்சுமையை இறக்கிவைப்பதற்கு மும்முரமாக செயல்படும் வதனி தன் மகளின் மனச்சுமையைப்பற்றி சிறிதளவும் சிந்திக்க முயலவில்லை.

'இந்தா வாசுகி புறோக்கர் போன் நம்பர் தந்தவர். நீர் கதைச்சுப்பாரும். பொடியன் எப்பிடி என்று அறிஞ்சப் பிறகு தாய்தகப்பனிட்டக் கதைப்பம்.'

மறுநாள் சனிக்கிழமை.

'கலோ நான் வாசுகி கதைக்கிறன்'

'வாசுகியோ ஓ அம்மா சொன்னவ. புறோக்கரிட்ட படம் குடுத்ததெண்டு'

'நானும் உங்கட படம் பார்த்தனான்'

'என்ன படத்தில நான் எப்படி?'

'பிடிச்சிருந்தபடியால்தானே போன் பண்ணுறம்'

நானும் போட்டோ பாத்தனான். எனக்கும் பிடிச்சிருக்கு'

அதுசரி நான் உம்மை நேரில சந்திச்சு கதைக்க வேணும்'

நாளைக்கு கொபி சொப்பில சந்திக்க ஏலுமா?

சரி அப்ப கொபி சொப் அற்ரசை ரெக்ஸ் பண்ணிவிடுங்கோ'

'பாய்'

'அம்மா நாங்க நாளைக்கு சந்திக்கப் போறம் நான் என்ர விசயமெல்லாம் சொல்லத்தான் போறன்'

'அது உன்ர விருப்பம். சொன்னாலும் பிரச்சனை. சொல்லாட்டியும் பிரச்சனை. எதுக்கும் வெளிப்படையாச் சொல்லி சம்மதம் எண்டா பின்னுக்கு பிரச்சனை வராது.'

'காய் வாசுகி நான் வசீகரன்'

'காய்' வாசுகி

கையில இரண்டு கோப்பியுடனும் டோ நட்சுடனும் ஒதுக்கமான இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

'படத்தைவிட நேரில நல்ல வடிவா இருக்கிறீர்'

'நீங்களும்தான்'

'ஓ அப்படியா?'

இப்படி ஆரம்பித்த உரையாடல் சில நிமிடங்கள் நீடித்தது.

'எங்கட அம்மா அப்பாக்கு நான் ஒரே மகன். அவர்களுக்கு எங்கட சர்ச்சிர திருமணம் வைக்கத்தான் விருப்பம்.'

'அப்படியா?'

'ஏன் உமக்கு விருப்பமில்i;லயா?'

' நான் அம்மாவோட கதைச்சுப் பார்க்கிறன்'

;'வாசுகி அதற்கு முதல் நான் சில விசயங்களை ஓப்பினாக் கதைக்க வேணும் எனக்கு முதல் காதல் பிறேக் பண்ணீற்றுது. அது நடந்து தநாலைந்து வருசத்ததுக்கு மேல.'

'எனக்கும் அப்படித்தான் எப்படி உங்களிட்ட சொல்லிறதென்றுதான் யோசித்துக் கொண்டிருந்தனான்.

'ஓ அப்ப நாங்க இரண்டு பேரும் ஒரே மனநிலையிலதான் இருக்கிறம்'

'நல்லது அப்ப நான் வீட்டில எங்கள் இரண்டு பேருக்கும் விருப்பம் எண்டு சொல்லவோ?'

வாசுகியின் முகத்தில் ஏற்பட்ட நாணத்தைப் பார்த்து வசீகரன் மனதுக்குள் ரசித்தான்.

 

 

வீட்டிற்கு வந்த வாசுகியின் முகத்தில் தெரிந்த மலர்வில் வதனி சந்தோசப்பட்டாள்.

'அம்மா சர்ச்சிலதான் வெடிங் வைக்க வேணுமாம்'

வதனிக்கு எப்படியாவது திருமணம் முடிந்தால் போதும் என்ற நிலைப்பாடு.

'சரி என்ன செய்யிறது என்ர தலைவிதி' அலுத்துக்கொள்வதுபோல் வெளியே சொன்னாலும் உள்ளுக்குள் மகளின் திருமணம் நடைபெறப் போகிறதென்ற பூரிப்பு.

வாசுகியோ மணமேடையில் வெள்ளை நீளங்கியுடன் கையில் மலர்க்கொத்துடன் மாப்பிள்ளையுடன் கை கோர்த்து நடப்பதாய் கனவில் மிதந்தாள்.

வதனி வசீகரனின் பெற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.

'பிள்ளைகளுக்கு பிடிச்சுப் போச்சு. ஆனாலும் அடுத்த வருடம்தான் திருமணம் வைக்கலாம்' இது வசீகரனின் அம்மா.

'ஏன் அவ்வளவு காலம்' வாசுகி கேட்டாள்.

'சர்ச்சில ஆயத்தங்கள் செய்யவும் மற்றைய ஆயத்தங்களுக்கும் ரைம் வேணும்'

அப்ப இந்தவருடம் என்கேஜ்மென்ட் வைச்சிற்று அடுத்த வருடம் கலியாணத்தை வைப்பம்'

அது மட்டுமல்ல இரண்டு பேரும் கொஞ்சக்காலம் பேசிப் பழகினாத்தானே இரண்டு பேருக்கும் ஒத்துப் போகுதா எண்டு பார்க்கலாம்.

வதனிக்கோ என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. நான் பெண்ணைப் பெற்றவள். பழகிப் பார்த்து வேணாம் எண்டு சொன்னால்... எப்படி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பினாள்.

புறோக்கரிடம் பேசினாள்.

இறுதியில் இவ்வருடம் என்கேஜ்மென்ட் அடுத்த வருடம் திருமணம் எம்று முடிவாகியது.

இதற்கிடையில் வாசுகியும் வசீகரனும் நேரிலும் போனிலும் மெசேஜ்சிலுமாக தம் அன்பைப் பரிமாறத் தொடங்கி விட்டிருந்தனர்.

வதனி ஓடி ஓடி என்கேஜ்மென்ட்டிற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தாள்

மண்டபம் உணவு உடைகள் நகைகள் மாலைகள் பூக்கள் பலகாரங்கள் என்று மனதுக்குள் பூட்டி வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுபோல் தன் நெருங்கிய உறவுகள் நட்புகள் என்று அனைவரிடமும் அழைப்பு விடுத்தாள்.

மோதிரம் அளவு கொடுத்து ரெஜிஸ்ராரையும் ஒழுங்கு செய்து வதனி பம்பரமாக சுழன்று வந்தாள்.

'கலோ நான் வசியின்ர அம்மா கதைக்கிறன்'

வதனிதான் போனை எடுத்தாள்'ஓம் சொல்லுங்கோ'

'வதனி ஒரு சின்னப் பிரச்சனை'

வாசுகிக்கு உள்ளுக்குள் உதறல்

'இல்ல நீங்க ரெஜிஸ்ரர் பண்ணுறதெண்டு சொன்னனீங்க. ரெஜிஸ்ரர் பண்ணாம மாலையும் மோதிரமும் மாத்தி விடுவம்.'

'ஏன் என்ன பிரச்சனை?'

'வெடிங் நேரம் சேர்ச்சில ரெஜிஸ்ரர் பண்ணலாம்'

'இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே?' வாசுகி ஆத்திரத்தை அடக்க முயற்சித்தாள்.

'அதுதான் முதலிலேயே சொன்னனான் ஒரேயடியா அடுத்த வருடம் கலியாணம் வைக்கலாமெண்டு'

'வதனிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விக்கித்துப் போனாள்.

அவளது சூடான கண்ணீர் தொலை பேசியை நனைத்தது.

' அப்ப நீங்க யோசிச்சு முடிவெடுங்க பாய்'

தொலை பேசி துண்டிக்கப்பட்டதும் வதனி ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வாசுகிமேல் பாய்ந்தாள்.

'அம்மா நீங்கதானே கலியாணம் பேசினனீங்க நானா பேசச் சொல்லிக் கேட்டனான்.'

'ஓ நீ ஒழுங்கா இருந்திருந்தால் ஏன்இவ்வளவு கேவலப் படுவான்.'

வாசுகி மௌனமானாள்.

வதனிக்கு உடம்பெல்லாம் கொதிப்பது போல இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ மண்டபம் உணவு மாலை என்று எல்லாவற்றையும் போன் அடித்து கேன்சல் பண்ணினாள். ரெஜிஸ்ராரை அழைத்து அப்பொயின்ற்மென்ரை ரத்து செய்தாள்.

அனைத்தையும் செய்து முடிக்கும்வரை அம்மாவின் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த வாசுகியின் முகம் இறுகிக் கிடந்தது.

போனின் இணைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்த வதனி மகளின் முகத்தை பார்த்த மறுகணம் வேதனையை உள்ளே விழுங்கிக் கொண்டாள்.

தான் செய்தது தவறோ என்று மனதுக்குள் விழுந்த முடிச்சை அவிழ்க்க மனமின்றி எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடியவள் படுக்கையில் விழுந்து தனிமையில் வேதனை தீர அழுது முடித்தாள்.

வாசுகியோ என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்துடன் எழுந்து ஜக்கற்ரை மாட்டியவள் கால் போன திசையில் நடந்தாள்.

ஏன் எம்மைப் பெற்றவர்கள் இப்படி இருக்கிறார்கள்?

இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

எல்லா மதங்களும் அன்பை போதிப்பதாகச் சொல்கிறார்கள். இதுதான் மதமா?

மதமில்லாத உலகத்தில் மனிதராக வாழ்வது எப்போது?

சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவளை கையிலிருந்த தொலைபேசி கலைத்தது.

வசீகரன்தான் அழைத்தான்.

பதில் அனுப்ப மனமின்றி தொலைபேசியை துண்டித்தவள் அமைதியாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடு மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும் சில அடிப்படை இயல்புகள் குளத்தில் போட்ட கல்லுமாதிரி அப்படியே இருக்கின்றது.

பெற்ற மகளை தாய் குத்திக்காட்டிய உரையாடல்கள் நெருடியது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போதுள்ள நடைமுறையை மிக பக்குவமாக எழுதியுள்ளீர்கள்.

அம்மா ஆகும் வரை அம்மாவின் பொறுப்பை விழங்கவைக்க முடியாது.

பெட்டி பாம்பு போல் இருக்கும் பிள்ளைகள் பதின்ம வயது வந்ததும் படமெடுக்க தொடங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kavallur Kanmani said:

                                                             'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள்.

 

ஊர் நினைப்புடன் புலத்தின் பார்வையையும் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்,

புலத்தில் பெரும்பாலும்,

பெண் அழகாகவும், ஆண் ஹாண்ட்சம்&கியூட்டாகவும் இருந்துவிட்டால், ஜாதி,மதம்,ஜாதகம்,இனம் எல்லாம் கடந்து புலத்து காதல் தன்பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறது, ஒரு மணவாழ்வு குழம்பிபோனாலும் அடுத்தவாழ்வு அவர்களுக்கு சொற்பகாலத்திலேயே அமைந்துவிடுகிறது அல்லது தேடிவருகிறது,அல்லது அவர்களாகவே மறு துணையை சீக்கிரமே தேடிக்கொள்கிறார்கள்.

 பெரும்பாலும் யதார்த்தம் அதுவே, வீட்டுக்குள் உக்கார்ந்து யாரும் அவர்களுக்காக குமுறி அழுவதில்லை.

புற அழகே முதற் தகுதியாக பார்க்கப்படும் புலத்தில்,அக அழகு பார்க்கப்படுவதில்லை,அவர்கள் வாழ்வை அமைக்கும்போது யாரோட விருப்பு வெறுப்புக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை! 

ஆனால் புற அழகு கொஞ்சம் குறைவான ,குறிப்பாக பெண்கள் ஒரு தடவை வாழ்வில் சறுக்கிவிட்டால் மறு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் பலர் போராடுகிறார்கள்,

ஆண்கள் இலங்கைக்காவது ஓடிபோய் திருமணம் செய்துவிடுவார்கள், பெண்களும் அப்படிபோய் திருமணம் செய்யலாம், ஆனால் அங்கே உள்ள சமூகத்தின் ஆயிரம் அர்த்தம் பொதிந்த முதல் கேள்வி, ‘ஏன் அங்க மாப்பிளை கிடைக்காம இங்க வந்தவையாம்”?

இதை மலினமான கருத்தாய் நினைச்சு எழுதவில்லை, எம் மக்களில் பலரின் வாழ்வியல் அப்படித்தான் இங்கு இருக்கிறது என்பதை சொன்னேன்,

அப்புறம் உங்கள் கதையில் ஒன்றுமட்டும் விளங்கவில்லை, ஆணின் வீட்டு பக்கம் இந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லவில்லையே, மாலைமாத்தி மோதிரம் போடுவதென்றால் அதுவும் ஒருவகை திருமண முன்னேற்பாடு சடங்குதானே? 

ஒருவேளை சடங்கு சம்பிரதாய மேட்டரில் நான் அறிய இன்னும் நிறைய இருக்கோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நம்பிக்கையின்  மீது தான்  வாழ்வு கட்டி எழுப்ப படுகிறது ...ஒருவருக்கொருவர் நம்பிக்கையிணமும்    தடுமாறும் மன நிலையும்  உள்ள போது..உறவுகள் காயப்படுத்தப்படுகிறார்கள். வாசுகியும் வசீகரனும் என்ன பாவம் செய்தார்கள். 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழி மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விடயத்தை கதையாக தந்திருக்கிறீர்கள். ஒரு தாயாக நிறைய அனுபவங்களை என்னால் எழுத முடியும். எழுத்தில் கொண்டுவந்துவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்ன? இப்போது மணமக்கள் இணைப்பாளராக இருக்கிறேன். அதீத பிற்போக்குத் தனங்களை நாளாந்தம் சந்திக்கிறேன் சாதியும் மதமும் பல இளையவர்களின் வாழ்வைச் சின்னாபின்னப்படுத்துவதையும் கண்டிருக்கின்றேன். பெற்றோரால் பிள்ளைகளையும் பிள்ளைகளால் பெற்றோரையும் திருப்திப்படுத்த முடிவதில்லை. பெற்றோரின் அட்டவணைப்படுத்தப்பட்ட நிரலுக்குள் பிள்ளைகளால் கட்டுப்பட முடிவதில்லை பிள்ளைகளின் எல்லையற்ற சுதந்திரவெளியை பெற்றோரால் அறிய முடிவதில்லை. சம்பிரதாயம் என்ற கட்டுகளால் எல்லைகளை நிறுவமுயலும் பெற்றோரும், சம்பிரதாயங்களையே உடைத்து எல்லைகளை தகர்க்கும் பிள்ளைகளுமாக புலம்பெயர் வாழ்வு அதிலும் கனடாவில் அதிகம். இந்தக்கதைபோல் இங்கு ஏராளம் முடிவுதான் அறியப்படாத ஒன்றாக இன்று வரைக்கும்...

Posted

கதையை வாசிக்கும் போது இது ஊரில் 10 வருடங்களுக்கு முன்னர் நிகழ்வது போன்று தோன்றுகின்றது. இந்த கதையின் களம் வெளிநாடா அல்லது புலமா?

2 hours ago, valavan said:

 

புலத்தில் பெரும்பாலும்,

பெண் அழகாகவும், ஆண் ஹாண்ட்சம்&கியூட்டாகவும் இருந்துவிட்டால், ஜாதி,மதம்,ஜாதகம்,இனம் எல்லாம் கடந்து புலத்து காதல் தன்பாட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறது, ஒரு மணவாழ்வு குழம்பிபோனாலும் அடுத்தவாழ்வு அவர்களுக்கு சொற்பகாலத்திலேயே அமைந்துவிடுகிறது அல்லது தேடிவருகிறது,அல்லது அவர்களாகவே மறு துணையை சீக்கிரமே தேடிக்கொள்கிறார்கள்.

 

 

வளவன், நான் நினைக்கின்றேன் நீங்கள் 'புலம்' என்ற சொல்லை 'வெளிநாடு" என்ற அர்த்ததில் பயன்படுத்துகின்றீர்கள் என. புலம் என்றால் தாயகம் / சொந்த ஊரை தானே குறிக்கும். இதனடிப்படையில் தானே புலம்யெர்ந்தவர்கள் என்ற சொல்லு பயன்படுத்தப்படுகின்றது?

Posted

ஆக்கத்துக்கு பாராட்டுக்கள்.. 

பெரும்பாலான குடும்பங்களின் பொதுவான பிரச்சனை ஆனால் பேசப்படுவதில்லை. பேசியும் பிரயோசனம் இல்லை என்றும் சொல்லலாம். பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் உள்ள உளவியல் சார்ந்த ஒரு குறைபாடு. இதன் பின்னணியில் சாதி மதம் அடுத்தவன் என்ன சொல்வானோ என்று பிறருக்காகவே சதா பயந்து வழும் சூழுல் என பல காரணிகள் தொடர்ச்சியான மனச் சிதைவுக்கும் மன அழுத்ததிற்கும் காரணமாகின்றது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

வளவன், நான் நினைக்கின்றேன் நீங்கள் 'புலம்' என்ற சொல்லை 'வெளிநாடு" என்ற அர்த்ததில் பயன்படுத்துகின்றீர்கள் என. புலம் என்றால் தாயகம் / சொந்த ஊரை தானே குறிக்கும். இதனடிப்படையில் தானே புலம்யெர்ந்தவர்கள் என்ற சொல்லு பயன்படுத்தப்படுகின்றது?

அகம்...என்பது ஒருவர் பிறந்தநாட்டை குறிக்கிறது, அதனால்தான் தாய்+அகம் தாயகம் என்கிறோம் , புலம் என்பது தாயகத்திற்கு வெளியே என்பதை குறிக்கிறது, அதனால்தான் புலத்திற்கு பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நான் சொல்வது 100% சரியாக இருக்குமோ தெரியாது, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

Posted
3 hours ago, valavan said:

அகம்...என்பது ஒருவர் பிறந்தநாட்டை குறிக்கிறது, அதனால்தான் தாய்+அகம் தாயகம் என்கிறோம் , புலம் என்பது தாயகத்திற்கு வெளியே என்பதை குறிக்கிறது, அதனால்தான் புலத்திற்கு பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நான் சொல்வது 100% சரியாக இருக்குமோ தெரியாது, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

இதை பற்றி மேலும் அறிய யாழையும் கூகிளையும் கிண்டி பார்க்கும் போது கிடைத்தவை :

https://ta.wiktionary.org/wiki/புலம்

இது பற்றி மேலும் உரையாடல் தேவை எனில் மேலே இணைத்திருக்கும் யாழின் திரியில் உரையாடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம்தான். இருந்தும் புலம்பெயர் மண்ணிலும் நம் சமூகம் தினம்தினம் சந்திக்கும் விடயமும் கூட. நாடு மாறினல் என்ன நாகரீகம் மாறினால் என்ன நாம் மாறவேண்டும்லவா? இன்று திருமண வயதை எட்டிய பிள்ளைகளை வைத்திருகும் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் இது. சில வருடங்களுக்கு முன் பிள்ளைகளைக் காதலிக்கக் கூடாதென்று தடை போட்டவர்கள்கூட இன்று கல்லூரிகளிலோ பல்கலைக் கழகங்களிலோ காதலித்தால் தமது பொறுப்பு நீங்கிவிடும் என்று கூறும் பல பெற்றவர்களைச் சந்தித்திருக்கிறேன் இருந்தும் இன்னும் சாதி மதம் என்ற வட்டத்துக்குள் நிற்கும் பெற்றவர்களால் பல பிள்ளைகளின் வாழ்க்கை தடைப்பட்டு சிதைக்கப்பட்டு வருகின்றது இன்றும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எம் இனத்திற்கு ஒரு சாபக் கேடு தான். கருத்தெழுதிய கிருபன் ஈழப்பிரியன் வளவன் நிலாமதி சகரா நிழலி சண்டாருதன் அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துயரங்கள்...சுமந்து செல்லும் ஒரு கதை....!

ஒரு குமர்ப் பெண்ணைக் கரை சேர்க்க..ஒரு தாய் படும் பாடு...அழகாக விபரிக்கப்பட்டுள்ளது!

இறுதியில்...அந்தத் தாய் எடுத்த உறுதியான முடிவு..மிகவும் சரியானது போலவே உள்ளது! அப்படியான முடிவை எடுக்க..அந்தத் தாய்க்கு..மிகுந்த மனத்திடம் இருந்திக்க வேண்டும்! கணவனைப் பிரிந்து, தனியாக வாழ்ந்ததால்...அவருக்கு அந்தத் துணிவு வந்திருக்கக் கூடும்!

வாசுகியின்...தோல்வியில் முடிந்த காதலை...வதனி...அடிக்கடி சுட்டிக்காடும் போதும்..வாசிக்கும் எமது மனங்களிலும் ...நெருடல்கள் ஏற்படுவதை...வாசகர்களாகிய எம்மால் தவிர்க்க முடியவில்லை! ஒரு வேளை ...தொடர்ந்தும் ஊரிலேவே...வாழ்ந்திருந்தால்...அந்த நெடுடல்கள் இல்லாமல் இருந்திருக்கவும் கூடும்@

எமது ஊரில்...பல தோல்வியடைந்த காதல்கள்...இருக்கின்றன தான்! எனினும்...அவை...கிணறுக்குள் நடந்தவை போல ...வெளியே ...தெரியாமல் ...போய் விடுகின்றன! அப்படியான..பலரின் திருமணங்களின் போது....அக்கினி சாட்சியாகவும்...அருந்ததி..சாட்சியாகவும்...முப்பத்து முக்கோடி...தேவர்கள் சாட்சியாகவும்...கன்னிகாதானம் செய்து கொடுக்கப் படும் போது....குனிந்த தலை..நிமிராமல் ..இருப்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்~

எமது கலாச்சாரம்...சாட்சியாக வைத்துள்ள..ஒருவரைக் கூடக் கோட்டுக்குச்..சாட்சியாக வர அழைக்க முடியாது என்பது தான் எமது..கலாச்சாரத்தின் தனிச் சிறப்போ....என்னவோ!

மனதைக் கொஞ்சம் பாதித்த..கதையைத் தந்த...காவலூரின் கண்மணிக்கு வாழ்த்துக்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம் பெயர்ந்த மண்ணில் துயரத்தை சுமப்பது அதிகம் பெற்றவர்களா பிள்ளைகளா என்பதே பெரும் சர்ச்சைக்குரிய ஒன்று. பெற்றர்களுக்கும் பிள்ளைகளக்கும் உள்ள தலை முறை இடைவெளி பல சமயங்களில் பெற்றவர்களயும் பல சமயங்களில் பிள்ளைகளையும் நிலை குலைய வைக்கின்றன. சாதி மதம் இனம் எல்லாம் ஒருபக்கத்தில் இருக்க ஒழுக்கம் பெரும் சர்ச்சையாக விளங்குகிறது. இன்றைய இளம் வயதினரின் காதல் எல்லை மீறியதாக இருப்பதால் அதுவே பெற்றவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதைக் காணக்கூடியதாய் உள்ளது. என்ன செல்லி என்ன  இது இனி கட்டுப்படுத்த முடியாத பெரு வெள்ளம். நீச்சலிடுவது கடினம். வெள்ளத்துடன் ஓடவேண்டியதுதான் என்று பெற்றவர்கள் முடிவெடுக்கும் நிலையில் இன்றைய காலம்
கதைபடித்து கருத்தெழுதிய புங்கையூரனுக்கும் விருப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வானவில்லின் வர்ணத்தில் சினிமா வர்ணம் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது வாழ்வியலில் எம்மைச்சுற்றி இப்படி எத்தனையோ கதைகள் தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவை வெறும் கதைகளல்ல. கற்பனை கலந்த நிஜங்கள். கருத்துக்கு நன்றி கவி அருணாச்சலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/02/2018 at 11:16 AM, valavan said:

அகம்...என்பது ஒருவர் பிறந்தநாட்டை குறிக்கிறது, அதனால்தான் தாய்+அகம் தாயகம் என்கிறோம் , புலம் என்பது தாயகத்திற்கு வெளியே என்பதை குறிக்கிறது, அதனால்தான் புலத்திற்கு பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைக்கிறோம் என்று நினைக்கிறேன்.

நான் சொல்வது 100% சரியாக இருக்குமோ தெரியாது, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

வளவன் புலம் என்பது நாமும் எம் இனமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எமது தாயகத்தைக் குறிப்பது. நாம் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பலர் புலம் பெயர் தேசம் என வெளிநாட்டைக் குறிப்பிடுவது சரியான அர்த்தம் தெரியாததனால்.

 

 

திருமணம் பேசிச் செய்ய ஆரம்பிக்கும் போது எத்தனையோ சிக்கல்கள் இதுபோல் அக்கா. சிலநேரம் கோபத்தை அடக்கி அவர்கள் சொல்லும் கதைகளை சகித்துக் கேட்கவேண்டிய கொடுமை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாய் நடைபெறும் பிரச்சினையை மையமாய் கொண்டு நல்ல கதையை தந்திருக்கின்றிர்கள் சகோதரி.....! கதையாயினும் அம்மா அவசர பட்டு விட்டா போல. அதுபோல் வாசுகியும் வாசீகரனின் போனை எடுத்து கதைத்திருக்கலாம்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/17/2018 at 5:09 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வளவன் புலம் என்பது நாமும் எம் இனமும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எமது தாயகத்தைக் குறிப்பது. நாம் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பலர் புலம் பெயர் தேசம் என வெளிநாட்டைக் குறிப்பிடுவது சரியான அர்த்தம் தெரியாததனால்.

 

 

 

அதுதான் விஷயம் தெரியாம பேசி நிழலிகிட்ட அசிங்கபட்டுட்டேன் இல்ல, ஏன் அக்கா நீங்க வேற அதை அடிக்கடி ஞாபகபடுத்துறீங்க? ஆம்,  கருத்து பகிர்வின்மூலம் எவ்வளவு அறிந்து கொள்கிறோம் இல்ல ?, எல்லோருக்கும் நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னைய காலங்களில் பெற்றவர்கள் சொன்னால் பிள்ளைகள் மறுபேச்சுப் பேசாமல் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் இப்பொழுது அப்படியல்ல பிள்ளைகள் சொல்வதை பெற்றவர்கள் கேட்டு அனுசரித்துப் போக வேண்டும். நீங்கள் சொல்வது சரி சுமே. சுவி சென்னதுபோல் பெற்றவர்கள் அதிக  பொறுமை காக்க வேண்டியும் பல தடவைகளில்  தம் பிடிவாதங்களை விட்டு பணிந்து போகவேண்டியும் வரலாம்.இதை விடுத்து நாம் நம் வழியில் போனால்  நாம் பிள்ளைகளை இழக்க வேண்டிவரலாம். கருத்தெழுதிய  சுவி சுமே வளவன் மற்றும்அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கன கதைகள் இருப்பதால் ஆறுதலாகவே வாசித்து கருத்து எழுதலாம் என்று நினைக்கிறன்   சிறப்பான ஆக்கம்  அக்கா

அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று ( யார் மனதையும் புண்படுத்த அல்ல) கனடா நாட்டிலிருந்து  வந்த ஓர் தூரத்து உறவு மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கும் வந்தார் எனது பெரியம்மா மகன் அண்ணாவுக்கு பேசலாம் என பெரியவர்கள் முடிவெடுத்தார்கள் ஆனால் அவர்களோ எங்களுக்கு கிறிஸ்தவம் என்றால் தான் பொருந்தும் இதுவரைக்கும் பல வன்செயல்களில் அவா குடும்பம் எல்லோரும் பாதிக்கப்பட்டு ஊர் வந்து இருந்தவர்கள் இப்பவும் மற்றவர்கள் இந்துக்கள் தான்  ஆனால் கனடா போன பிறகு இவா மாறி இருக்கிறார் போல் கிறிஸ்த்வத்திற்கு  அந்த சம்பந்தம் தடைபட்டு போனது மதத்தால் நாம் மதம் பற்றி பேசாவிட்டாலும் மாறியவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள் அதன் பின்பு எவருக்கும் நான் மதத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை விட்டுக்கொடுக்காதவர்களுக்கு எனக்கு மத வெறியும் அல்ல எனது அண்ணா தற்போது ஓர் சிங்கள் பெண்ணை திருமணம் முடித்து சந்தோசமாக உள்ளார் . நம்ம இனம் திருந்த சான்சே இல்ல :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் இன்றைய நாட்களில் நடைபெறும் திருமணங்களில் அதிகானவை இந்து கிறிஸ்தவ திருமணங்களாகவே நடைபெறகின்றன. காரணம் காதல் திருமணம் என்பதால் பிள்ளைகளின் விருப்பப்படிதான் பெற்றவர்கள் நடத்துகின்றனர். ஒரு சிலர்தான் விதி விலக்காக இன்னும் பழமை வாதிகளாக இரக்கின்றனர். மதம் என்பது அன்புதான் என்பது இன்றும் பலருக்கு புரிவதில்லை. எனது பிள்ளைகளில் மூவர் திருமணமாகிவிட்டனர் மூவரும் கத்தோலிக்கர் அல்ல. புரிந்துணர்வுடன் செயல்பட்டால் வhழ்க்கையில் பிரச்சினையில்லை. கருத்துக்கு நன்றிகள் தனி. (காட்டு ராஜா என்று எழுத பயமாயிருக்கு)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kavallur Kanmani said:

கனடாவில் இன்றைய நாட்களில் நடைபெறும் திருமணங்களில் அதிகானவை இந்து கிறிஸ்தவ திருமணங்களாகவே நடைபெறகின்றன. காரணம் காதல் திருமணம் என்பதால் பிள்ளைகளின் விருப்பப்படிதான் பெற்றவர்கள் நடத்துகின்றனர். ஒரு சிலர்தான் விதி விலக்காக இன்னும் பழமை வாதிகளாக இரக்கின்றனர். மதம் என்பது அன்புதான் என்பது இன்றும் பலருக்கு புரிவதில்லை. எனது பிள்ளைகளில் மூவர் திருமணமாகிவிட்டனர் மூவரும் கத்தோலிக்கர் அல்ல. புரிந்துணர்வுடன் செயல்பட்டால் வhழ்க்கையில் பிரச்சினையில்லை. கருத்துக்கு நன்றிகள் தனி. (காட்டு ராஜா என்று எழுத பயமாயிருக்கு)

எல்லோரையும் நான் சொல்ல வரவில்லை சிலருக்கு மட்டும் மதம் பிடித்து விடுகிறது  ஹாஹாஹா எழுதுங்கள் என்ன செய்திட முடியும் 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்ல முன்னுதாரணமான முடிவு. ரனிலின் கடந்த கால கணக்கு வழக்குகளையும் ஒருக்கால் சரி பார்க்க அநுர அரசு முயல வேண்டும்.
    • உங்களுக்கு இந்த தரவினை பெறக்கூடியதாக இருக்கிறதா? உங்களுக்கு இந்த  தரவினை பெறுவதற்கு இந்த இணைய கணக்கு தேவை என கூறுகிறது.
    • பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில்  ஏகமனதாக  தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412204
    • நன்றி உங்கள் கருத்திற்கு, அன்னிய செலாவணிக்கட்டுப்பாடுள்ள நாடுகள், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களினால் இந்த கவாலா மற்ற நாடுகளில் பிரபலம், இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினை ஏற்பட்டதன் பின்னரே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது (கட்டுப்பாடுகள் இருக்கிறதா என தெரியாது) என கருதுகிறேன். பெரும்பாலும் இந்த கவாலா arbitrage ஆக பயன்படுத்துவார்கள். நாட்டின் பொருளாதார கொள்கையினால் நாணய பரிமாற்றம் சரியான விகிதத்தில் இருப்பதில்லை, இதனையே கவாலா முகவர்கள் உப்யோகித்து பணம் பார்க்கிறார்கள், அதனால் பெரும்பாலும்  காவாலா காசு அன்னிய செலாவணியாகவே நாட்டிற்குள் வலம் வரும் . https://www.investopedia.com/ask/answers/forex/forex-arbritrage.asp அன்னிய செலாவணி கட்டுப்பாடு உள்ள நாடுகளில் கூட நாட்டிற்குள் அன்னிய செலாவணியாக வராவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து அனுப்படும் காசினால் உள்நாட்டு பொருளாதாரத்தினை வளப்படுத்தும் மற்ற நாடுகளை பற்றித்தெரியவில்லை, இங்கு அவுஸில் தமிழ் கடையில் காசு அனுப்பும் போது பற்றுச்சீட்டு கொடுப்பார்கள் அதில் எந்த நிறுவனத்தின் மூலம் அனுப்புகிறார்கள் என்பது இருக்கும் (நான் முன்பு அனுப்பிய கடை மணிகிராம் மூலம், தற்போது ஒரு 6 -7 வருடமாக நேரடியாகவே மணிகிராம் அல்லது வெஸ்ரன் யூனியன் மூலம் இணையத்தினூடாக அனுப்புவதுண்டு). ஆண்டொன்றிற்கு 5.4 பில்லியன் வெறும் பெரும்பான்மை இனத்தவர்கள், இஸ்லாமியர்களாலும் அனுப்பப்பட முடியுமா? நான் அறிந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பணம் அனுப்புவதில்லை, ஆனால் விசேட  தினங்களிற்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்கள் (இது நகைசுவைக்காக கூறவில்லை, அது அவர்களின் இயல்பு). உங்கள் கருத்தும் சரியானதே (எனது கருத்து தவறாக இருக்கலாம்), தொடர்ந்து எழுதுங்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.