Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செத்துப்போன கருவாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செத்துப்போன கருவாடு

 பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

 வியாழக்கிழமை தமிழ்க்கடைக்குப் போனால் fresh ஆக மரக்கறிகள் வாங்கலாம் என்பது அனேகமாகன புலம்பெயர் தமிழர்களின் மூளைக்குள் பதியப்பட்டு விட்டது. தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான்

 கடைக்குள் பெட்டி பெட்டியாக இருக்கும் மரக்கறிகளை ஓரளவு அவதானித்து எடுத்து விடலாம். பச்சை மிளாகாயில்தான் கொஞ்சமாகத் தடுமாற்றம் வரும். முதற்கிழமை மிஞ்சிய, காம்புப் பக்கம் சாடையாக கறுத்து நசிந்து அழுது கொண்டிருக்கும் பச்சை மிளகாய்களும் புதியவைகளோடு சாமர்த்தியமாக கலந்து இருக்கும். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது? அள்ளிப் போட்டு வங்கிக் கொண்டுபோய் வீட்டிலும் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் இருக்கு.

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்.

 எங்கள் நாட்டுக் கடலில் பிடிபடும் மீன்கள் செத்தாலும் வீரியம் மிக்கவை. அவைகளை ஒருநாளும் பக்கெற்றுக்குள் அடைத்து வைக்க முடியாது. கடைக்குள் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்குள் அவை துள்ளிக் குதித்து பக்கெற்றை விட்டு வெளியே வந்து ஐஸ் படிந்து விறைப்பாகவே இருப்பதை பார்த்தாலே தெரியும்.

 சரி விடயத்துக்கு வருகிறேன்.

 எனது நகரில் இருக்கும் தமிழ்க்கடைக்கு போன கிழமை போயிருந்தேன். எனக்கான மரக்கறிகளை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் காசு கொடுக்கப் போகும் போதுதான் நினைவுக்கு வந்தது, முதல்நாள் வாங்கிய வெங்காயம். மலிவாக இருக்கிறதென்று Super market இல் இரண்டரைக் கிலோ வெங்காயம் 89 சென்ற்ஸுக்கு  வாங்கியிருந்தேன். “எதுக்கு இவ்வளவு? “ என்று வீட்டில் ஒரு பார்வை பார்த்த போது, “சீனிச்சம்பல் செய்யலாம்என்ற சமாளிப்போடு தப்பிவிட்டேன். சீனிச்சம்பலுக்கு மாசிக்கருவாடு போட்டால் அதன் ருசியே தனி. அந்த நினைவுதான் இப்பொழுது எனக்கு வந்தது.

 “தம்பி மாசிக்கருவாடு இருக்கே?”

 “மாசிக்கருவாடோ? முடிஞ்சுது எண்டு நினைக்கிறன்சொல்லிக் கொண்டே நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்த முதலாளிக்கு என்னவோ மனதில் சட்டென்று தோன்றி இருக்க வேண்டும். “பொறுங்கோ கீழே இருக்குதோ எண்டு பாத்திட்டு வாறன்

 போனவர் ஒரு கொர்லிக்ஸ் போத்தலுக்குள் இருந்த மாசிக்கருவாட்டு துகள்களுடன் வந்தார். “உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கண்ணை.ஒரு போத்தல் இருக்கு

 எனக்கான அதிர்ஷ்டம்  போத்தலுக்குள் இருந்த மாசிக் கருவாட்டுத் துகள்களுக்குள் அடங்கிபோனதில் சற்று கவலை இருந்தாலும் சிரித்துச் சமாளித்தேன்.

 முதலாளி மேசையில் வைத்த எனதுஅதிர்ஷ்டமாசிக் கருவாட்டு போத்தலை எதேச்சையாக நான் பார்த்த போதுதான் அது சொன்னது, use before 08.11.2016 என்று.

 “தம்பி கருவாடு செத்து ஒரு வருசத்துக்கு மேலாச்சுது போலை

 “செத்தால்தான் அண்ணை கருவாடு. உயிரோடு இருந்தால் அது மீன்முதலாளி அல்லவா. பேச்சு அந்த மாதிரி.

 “டேற் முடிஞ்சுது. 2016 எண்டு போட்டிருக்கு

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கே? இஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள். சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டு போங்கோ. இதுன்ரை விலை ஆறு யூரோ. உங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்

 மலிவு வெங்காயத்துக்கே வீட்டில் ஒரு பார்வை கிடைச்சிருக்கு. மாசிக்கருவாட்டுக்காக இன்னொரு பார்வையை  எதுக்கு வில்லங்கத்துக்கு வாங்குவான்?

 “வேண்டாம் தம்பி

 முதலாளிக்கு சற்று கோபம் வந்திருக்க வேண்டும். அவரது பார்வை மாறியிருந்தது.

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

 கவி அருணாசலம் 

01.01.2018

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்

இன்னுமொரு அருமையான அனுபவப் பகிர்வு..!

இப்பவெல்லாம்....தேங்காயை உடைச்சுத் தான் வாங்கிறது! 

அண்ணை...தேங்காய் முடி போனால் கெதியாய்ப் பழுதாகிப் போடும் எண்டு கடைக்காரர் கதை விட்டுப் பார்த்தவர் தான்..!

அண்ணை....இல்லையெண்டால்...நான் கடையை மாத்த வேண்டி வரும் எண்டு சொன்ன பிறகு...முதலாளி அடக்கி வாசிக்கிறார்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kavi arunasalam said:

செத்துப்போன கருவாடு

 .... தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான்.

கிராமங்களில் மளிகைக் கடைகள் எப்படியிருக்குமென பழைய ஞாபகத்தை தூண்டியது இப்பதிவு..:)

1 hour ago, Kavi arunasalam said:

...

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 கவி அருணாசலம்.

ஏமாற்றத்தோடு கடையைவிட்டு வெளியே வந்த கவிக்கு, ஒரு மாசிக்கருவாடு போத்தல் உடனடியாக 'புது லேபில்' ஒட்டி டெலிவரி செய்ய கடைக்காரர் ஏற்பாடு செய்துள்ளார்.

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தை வாங்கி கொண்டு கொடுத்தாலும் குறை சொல்லும் ஆட்கள் பெண்கள் கருவாடோடு தலை தப்பியது என்று நினைத்துக்கொள்ளுங்கள் இல்லாட்டா உங்கள் மீது டெஸ்ட்டிங் நடந்திருக்கும் 

அனுபவபகிர்வு போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு

தேங்காய் தோப்பில் பிறந்து வளர்ந்த நாங்களே கூடாத தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உடைக்க அது மணக்க

என்ன தோப்பு மாப்பிள்ளை இந்த தேங்காயை வாங்கி கொண்டு வந்திருக்கிறியள்!என்று மனைவி கேட்கும் போது ரொம்ப அசடு வழியும்.

5 hours ago, Kavi arunasalam said:

தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

வெண்காயத்திற்கு காலாவதி இல்லாத வரை சந்தோசமே.

அனேகமான தமிழ்கடைகளில் புதிய புதிய லேபல்கள் தயாராக வைத்திருப்பார்களோ?

இங்கே ஒரு அடிக்கு மேல் பனி கொட்ட போகுது என்றால் எல்லாகடை அலுமாரிகளும் வெறுமையாக கிடக்கும்.அந்த நேரம் சனம் காலாவதி திகதி எல்லாம் பார்த்துக் கொண்டிராது.

  • கருத்துக்கள உறவுகள்

பல கடைகளில தாங்களே லேபிளை மாத்திறாங்கள் எண்டு கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kavi arunasalam said:

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

மாசிக்கருவாடு போடாமலும் சீனிச்சம்பல் செய்யலாம் எண்டதை இந்த இடத்தில்லை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல கடைகளில தாங்களே லேபிளை மாத்திறாங்கள் எண்டு கேள்வி.

கேள்விப்பட்டனீங்களோ இல்லாட்டி சொந்த அனுபவமோ? ஏனெண்டால் நீங்களும் கொத்தாரும்  கொஞ்சநாள் கடை கல்லாப்பெட்டியெண்டு புடுங்குப்பட்டு திரிஞ்சனீங்கள் எல்லே...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அநுபவப்பகிர்வு மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்.  காலவதியான திகதிகளுடன் பல பொருட்கள் தமிழ் கடைகளில் இருப்பதை அவதானித்து வாங்க இப்பொழுது பழகி விட்டோம். மூடியில் சீல் பண்ணி இருக்காத எந்தப் பொருளையும் வாங்குவது நல்லதல்ல. மீன் செத்தால்தானே கருவாடு. பதிர்வுக்கு நன்றி.
மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்
நல்ல தேங்காய் அமைவதெல்லாம் வாங்குபவர் பெற்ற வரம்

  • கருத்துக்கள உறவுகள்

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கேஇஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள்சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டுபோங்கோஇதுன்ரை விலை ஆறு யூரோஉங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்

 expiry   date   அண்மித்த  பொருட்க்கள் தான் மலிவு  விலையில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

எங்கள் சாப்பாடுகளே மருந்தாகி இருந்த காலம் உண்டு , இங்கு உணவே நஞ்சாகும் காலம் நாக்கு தினமும் சுவையாக சாப்பிடனும் என்று அலைய வஞ்சகமில்லாமல் கொட்டி கொள்கிறம் .விளைவு ஊரில் இருந்து வரும்போது கின் என்ற உடம்பு உள்ளே கறையான் அரித்த வீடாகி விட்டுது . 

இங்கு வரும் அநேக காய்கறிகளின் தாயகம் இந்தியா தான் அங்கு அவர்களுக்கே விளைபொருள் காணாது . காரணம் அவ்வளவு மக்கள் பெருக்கம் . இரண்டாம் உலகப்போரில் நஞ்சு ஆக தயாரிக்கப்பட்ட Endosulfan எனும் நஞ்சு இந்தியாவில் மிக   குறைந்த விலை கிருமி நாசினியாக உபயோகிக்கிரார்கள். இதை பலவருடம்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகள் விவசாயத்தில் உபயோகிப்பதை தடை செய்து விட்டன . ஆனால் துரதிஸ்டவசமாக தமிழகத்தில் இதன் தயாரிப்பை திமுக அரசியல் வாதியின் செல்வாக்கில் அவருக்கு அந்த நிறுவன பங்குகள் 70 வீதத்துக்கு மேல் உள்ளது .தமிழகத்தில் அதன் உபயோகம் கட்டுபாடு இல்லாமல் ஊக்குவிக்கபடுகிறது . விளைவு இங்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பலமுறை எச்சரிக்கை கொடுக்கபட்டு Endosulfan எண்டோ சல்பன் அதிகளவில் செறிவாக காணபட்ட கறிவேப்பிலை தடை செய்யபட்டது . விளைவு பல ஏக்கர்களில் கறிவேப்பிலை விவசாயம் முடங்கியது அதன்பின் Endosulfan உபயோகிக்காமல் ஓர்கானிக் கறிவேப்பிலை என்று   அனுப்பினார்கள் இங்கும் அனுமதித்தார்கள் திடிர் என சோதனை செய்த போது Endosulfan உபயோகித்த கறிவேப்பிலை காணப்பட இங்குள்ள Port Health Authorities எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் கறிவேப்பிலை விற்பதே தண்டனைக்குரிய குற்றமாக்கி விட்டார்கள்.

ஊரில் கொல்லையில் நிற்க்கும் antibiotics அதாங்க நோய் எதிர்ப்பு மருந்து நஞ்சாகிய  கதை இன்னும் வெண்டி,    பாவற்காய் , மாம்பழம் நிறைய கதைகள்   இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

உந்தப்பிரச்சனை அவுஸ்திரெலியாவில் இல்லை. சிட்னியில் பல தமிழ் வீடுகளில் கறுவெப்பமரம், கீரை ,மாமரம் எல்லாம் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிட்னியில் சில கடைகளில்( உ+ம் ஆர்த்தி ஸ்பைஸ் பென்டில்கில்) மன்னாரில் உள்ள "சிவனருள் இல்லம்"  அறக்கட்டளையில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விலையும் மலிவு. வாங்கிறதினால் அங்கு ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்தோம் என்ற திருப்தியுமில்லோ கிடைக்குது.

தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போது "இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?" என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

animated-laughing-image-0175.gif

"இந்த வெங்காயத்தை (கடைக்காரனை) என்ன செய்யலாம்?"

ஐயா, கட்டுரை அருமை

Edited by Knowthyself

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

ஏமாற்றத்தோடு கடையைவிட்டு வெளியே வந்த கவிக்கு, ஒரு மாசிக்கருவாடு போத்தல் உடனடியாக 'புது லேபில்' ஒட்டி டெலிவரி செய்ய கடைக்காரர் ஏற்பாடு செய்துள்ளார்.

கொஞ்சம் அவசரப்பட்டு ஓடர் பண்ணிட்டீங்கள் ராசவன்னியன், கடையிலை வாங்கினால் நாலு யூரோதானே. புது லேபிள் ஓட்டினால் காசு கூடக் கேப்பாங்களே.

அதுசரி பழைய ரெலிபோனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறீங்களே, எப்போ புதுசு வாங்கப் போறீங்கள்?

18 hours ago, ஈழப்பிரியன் said:

தேங்காய் தோப்பில் பிறந்து வளர்ந்த நாங்களே கூடாத தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உடைக்க அது மணக்க

என்ன தோப்பு மாப்பிள்ளை இந்த தேங்காயை வாங்கி கொண்டு வந்திருக்கிறியள்!என்று மனைவி கேட்கும் போது ரொம்ப அசடு வழியும்.

ஈழப்பிரியன், தேங்காய்த் தோப்பு ஆள், தேங்காய் வாங்கி ஏமாந்து வீட்டிலை வாங்கிக் கட்டி முகத்தில் எண்ணை வழியிறதைப் பார்த்தால் மனசு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்

12 hours ago, குமாரசாமி said:

மாசிக்கருவாடு போடாமலும் சீனிச்சம்பல் செய்யலாம் எண்டதை இந்த இடத்தில்லை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

கடமைஉணர்வோடு தகவல் தந்ததற்கு, நன்றி குமாரசாமி.

 “இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று என்னை நானே நொந்து கொண்டேன் என்றொரு கருத்தும் கொள்ளலாம் அல்லது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, இதற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. “அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”

என்று   போட்டிருக்கிறீர்கள். ‘ அன்னை’ என்பது தமிழ்வார்த்தைதானா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

கந்தப்பு, இதற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. “அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”

என்று   போட்டிருக்கிறீர்கள். ‘ அன்னை’ என்பது தமிழ்வார்த்தைதானா?

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்." -கொன்றை வேந்தன்  - ஔவையார்   
"தமிழா! நீ பேசுவது தமிழா? , அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி’ என்றழைத்தாய்…அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்… - காசி ஆனந்தன்
அன்னை, பெயர்ச்சொல். (பெற்ற) தாய்;அம்மா · (எ. கா.) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.-அன்னை பூபதி   

 நான் தமிழ் படித்த பண்டிதனும் அல்ல.  யாராவது பண்டிதர்கள் தான் இதற்குப்பதில் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

கொஞ்சம் அவசரப்பட்டு ஓடர் பண்ணிட்டீங்கள் ராசவன்னியன், கடையிலை வாங்கினால் நாலு யூரோதானே. புது லேபிள் ஓட்டினால் காசு கூடக் கேப்பாங்களே.

அதுசரி பழைய ரெலிபோனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறீங்களே, எப்போ புதுசு வாங்கப் போறீங்கள்?

"ஓல்ட் ஈஸ் கோல்ட்" கேள்விப்பட்டதில்லையா..சார்..? :) Planning to buy 8 soon.

தங்களின் அனுபவ பதிவுகளும், நகைச்சுவையுடனான எழுத்தாற்றல் மிக நன்றாக உள்ளது..!

கனசடுதியில் வந்து போகும் தங்களின் 'யாழ் பிரசன்னம்' பற்றிய தொகுப்பு, யூடூபில் வெளியாகியுள்ளதே...! கவனித்தீர்களா...? :grin:

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கடைகளில் மிஞ்சும் மரக்கறிகளை வெட்டி பலதும் கலந்து பக்கட்டுகளில் போட்டு ஒரு ஈரோவுக்கு கொடுக்கிறார்கள். தை மாதம் மூன்று ஈரோவுக்கு வித்த காலண்டர் இப்ப இலவசமாய் கிடைக்குது. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம். எமக்கும் வேறு தெரிவுகள் இல்லையே.அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாய் இருக்கு...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை லேபல்களை மாத்தி மாத்தி ஒட்டினாலும் எங்கள் உடம்பு தாங்கும்! இரும்பைத் தின்று கஷாயம் குடிப்பவர்கள் அல்லவா நாங்கள்! இத்துப்போன கருவாட்டிலும் அழுகிப்போன வெங்காயத்திலும் செய்த சீனிச் சம்பல் சிம்பிளாக செரிக்கும்?

நல்லதொரு அனுபவ கட்டுரை

தமிழ் கடைகளில் வாங்கி வாங்கி சாப்பிட்டு உடம்பு அதுக்கு ஏற்றமாதிரி இயைபாக்கம் ஆகிட்டுது. உண்மை நிலவரம் தெரிந்தாலும் இனி உணவுப் பழக்கத்தை மாத்தவும் முடியாது. சனி ஞாயிறுகளில் வல்லாரையும், முருங்கக் காயும், ஊர் கொடுவாவும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?

இங்கு கடந்த வாரம் நடந்த ஒரு விடயத்தை சொல்லாலம் என நினைக்கின்றேன்.

இங்கு இரா  சுப்பர் மார்கெட், ஸ்பைஸ் லேண்ட் (Spiceland)  என்ற இரண்டு கொஞ்சம் பெரிய தமிழ் கடைகள் இருக்கு. இவை இரண்டும் புதிய கிளைகளை திறக்க திறக்க சின்ன தமிழ் கடைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு போக வேண்டி வந்தது. சனம் எக்கச்சக்கமாக வரும் இவற்றுக்கு.  மார்க்கம் நகரில் இவற்றுக்கு அருகில் No Frills என்ற ஒரு பெரிய Grocery கடை இருக்கு (கனடா முழுதும் உள்ளனர் ). இந்த மார்க்கம் கடையினை நடத்த தமிழர் ஒருவர் அண்மையில்  வாங்கினார். தமிழ் கடைகளுக்கு பழக்கப்பட்ட எம் சனம் இங்கு அவ்வளவாக போகவில்லை.  போன வாரம் என்ன செய்தார் என்றால் 'ஊர் விளை மீன்' வாங்கி Sale போட்டார். மற்ற தமிழ் கடைகளில் ஒரு இறாத்தல் 7 dollars இற்கு விற்கப்படும் போது இங்கு 5 dollars இற்கு விற்றார் (அதிக பட்சம் 5 Lb தான் வாங்க முடியும்)..ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்தார்.   சனம் அள்ளுப்பட்டு போய் வாங்கினார்கள். புருஷன் 5 இறாத்தல் மனுசி 5 இறாத்தல் என்று வாங்கி  குவித்தனர். அத்துடன் மிளகாய் தூள், பப்படம், தமிழர்களின் மரக்கறிகள், தேங்காய் என்று நிறைய தமிழர்களை இலக்கு வைத்து விற்றனர். அங்கு வாங்கி முடிஞ்சு இரா சூப்பர் மார்க்கட் பக்கம் எட்டிப் பார்க்க மீன் பக்கம் ஒரு சனமும் இல்லை.

இன்றும் Sale போடுகின்றார்கள் என்று கேள்வி. நிழலியை 6 மணிக்கு அங்கு காணலாம் இன்று

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தடவை மட்டன் கொத்து சுட சுட வாங்கி வந்து நல்லா மென்று மென்று, அரைத்து அரைத்து, சுவைத்து சுவைத்து சாப்பிட்டேன், அடடா என்ன ருசி என்ன ருசி.. இடையிலே ஒரு துண்டு நல்ல மென்மையாக கடிபட்டிச்சு , குடலும் சேர்த்து அடிச்சிருக்கிறானுகள்போல என்று நினைத்து மகிழ்ச்சி டபுள் மடங்காகி விடாமல் சப்பினேன்,

ஒரு முடிவுக்கு வருகுதில்லையே எண்டு  வெளியில எடுத்து பார்த்தேன் நான் ரசித்து நீண்டநேரம் வாய்க்குள் இடம் வலமாக  நகர்த்தி நகர்த்தி சுவைத்தது ஒரு Finger cot, குடல் குழம்போடு சேர்ந்ததால் குடல் கலரிலயே இருந்துது,

ஆட்டுகுடல் என்று நினைத்து ருசித்த என்ர குடலே ஒரு நிமிஷம் ஆடிபோச்சு, ஒரு மணிநேரம் வாந்தியாகி ஆரோக்கியமே நாறி போச்சு, 

அதேபோல ரின் மீன் ஒரு தடவை வாங்கி வந்தேன்,சம்பல் போடலாம் என்று , ரின்னில் Expiration date- இருக்கல்ல, வீட்டில் வந்து ரின்னை திறந்தபோது உள்ளே தண்ணி விளாம்பள கலரில் இருந்தது மீன் துண்டுகள் அனைத்துமே கறள் பிடிச்ச கலரில் இருந்துது, கடைசியில் வெறும் பாணை , ஊர்ல நாய் பழஞ்சீலையை இழுத்தமாதிரி இழு இழு எண்டு இழுத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு போனது எழுத்தில் சொல்லிமுடிக்க முடியாத  துயரம்.. 

கவி அருணாச்சலம் அவர்களின் பதிவு சுய ஆக்கம் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் அனுபவித்த சொந்த சோகம்,

உங்களின் எழுத்தோடு சேர்ந்த எச்சரிக்கையுணர்வை தூண்டும் ஆக்கத்துக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நல்லதொரு அனுபவ கட்டுரை

தமிழ் கடைகளில் வாங்கி வாங்கி சாப்பிட்டு உடம்பு அதுக்கு ஏற்றமாதிரி இயைபாக்கம் ஆகிட்டுது. உண்மை நிலவரம் தெரிந்தாலும் இனி உணவுப் பழக்கத்தை மாத்தவும் முடியாது. சனி ஞாயிறுகளில் வல்லாரையும், முருங்கக் காயும், ஊர் கொடுவாவும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?

இங்கு கடந்த வாரம் நடந்த ஒரு விடயத்தை சொல்லாலம் என நினைக்கின்றேன்.

இங்கு இரா  சுப்பர் மார்கெட், ஸ்பைஸ் லேண்ட் (Spiceland)  என்ற இரண்டு கொஞ்சம் பெரிய தமிழ் கடைகள் இருக்கு. இவை இரண்டும் புதிய கிளைகளை திறக்க திறக்க சின்ன தமிழ் கடைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு போக வேண்டி வந்தது. சனம் எக்கச்சக்கமாக வரும் இவற்றுக்கு.  மார்க்கம் நகரில் இவற்றுக்கு அருகில் No Frills என்ற ஒரு பெரிய Grocery கடை இருக்கு (கனடா முழுதும் உள்ளனர் ). இந்த மார்க்கம் கடையினை நடத்த தமிழர் ஒருவர் அண்மையில்  வாங்கினார். தமிழ் கடைகளுக்கு பழக்கப்பட்ட எம் சனம் இங்கு அவ்வளவாக போகவில்லை.  போன வாரம் என்ன செய்தார் என்றால் 'ஊர் விளை மீன்' வாங்கி Sale போட்டார். மற்ற தமிழ் கடைகளில் ஒரு இறாத்தல் 7 dollars இற்கு விற்கப்படும் போது இங்கு 5 dollars இற்கு விற்றார் (அதிக பட்சம் 5 Lb தான் வாங்க முடியும்)..ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்தார்.   சனம் அள்ளுப்பட்டு போய் வாங்கினார்கள். புருஷன் 5 இறாத்தல் மனுசி 5 இறாத்தல் என்று வாங்கி  குவித்தனர். அத்துடன் மிளகாய் தூள், பப்படம், தமிழர்களின் மரக்கறிகள், தேங்காய் என்று நிறைய தமிழர்களை இலக்கு வைத்து விற்றனர். அங்கு வாங்கி முடிஞ்சு இரா சூப்பர் மார்க்கட் பக்கம் எட்டிப் பார்க்க மீன் பக்கம் ஒரு சனமும் இல்லை.

இன்றும் Sale போடுகின்றார்கள் என்று கேள்வி. நிழலியை 6 மணிக்கு அங்கு காணலாம் இன்று

என் மனதை.....எப்போதும் கொதி நிலைக்குக் கொண்டு சென்று விடுவதில்....இந்தத் தமிழ்க் கடைகளின் பங்கு அளப்பரியது!

விடலைப்பருவத்தில் ஒரு உறவினரின் கடையில் நின்றபோது...ஒரு நள்ளிரவு நேரத்தில்...ஒரு சிங்கள் நோனா.,..தனது அழுகின்ற குழந்தையைத் தோளில் சுமந்த படி...கடைக்கு வந்தார்! அவரைப் பார்த்ததுமே..மிகவும் வறுமையான நிலையில் வாழ்பவர் போலத் தெரிந்தது! அவர் முலைகளில் பாலே இல்லைப்போல தோன்றியது! குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக ஒரு றப்பர் சூப்பி ஒன்றை வாங்கத் தான் வந்திருந்தார்! அவரிடம்...ஐம்பது சதம் மட்டும் தான் இருந்தது! சூப்பியின் வழமையான விலையும் அப்போது அது தான்! குழந்தை அழுவதைக் கண்ட கடைச் சிப்பந்தி...சூப்பியின் விலை...இரண்டு ரூபாய் என்று சொல்ல...நோனாவிடம் காசில்லை! ஆனால் அந்த நேரம் வேறு கடைகளும் திறந்திருக்கவில்லை!அதைப் பார்த்துக் கொண்டிருந்த...அந்தோனியார் கோவிலுக்கு முன்னால்...பூ வித்துக் கொண்டிருந்த ஒரு முதியவர்...இரண்டு ரூபாய்களைக் கொடுத்து...அந்த சூப்பிய வாங்கிக் குழந்தையிடம் கொடுக்க....அந்தக் குழந்தையின் முகத்தில் தோன்றிய சிரிப்பையும்....அந்த நோனாவின் முகத்தில் தோன்றிய நன்றியுணர்வையும் எழுத்தில் வடிக்க இயலாது!

அப்போது நான் கடைக்காரரிடம் கேட்டேன்! ஏன்...நீங்கள் ஐம்பது சதத்துக்கே கொடுத்திருக்கலாமே என்று..!

அதற்கு அவர் சொன்ன பதில்   என்னால் இன்று வரை மறக்க முடியாதது! 

தம்பி...நீங்கள் நிண்ட படியால தான்...இரண்டு ரூபாய் சொன்னனான்! இல்லாவிட்டால் எப்படியும் ஒரு அஞ்சு ரூபா கறந்திருப்பன்!

அடுத்த நாள்....பொன்னம்பலவாணேசர் கோவிலில்....திருநீறும்...சந்தனமும்...போட்ட படி....பக்தியில் உருகிய நிலையில் அவரைக் கண்ட போது....தலையாட்டக் கூட எனக்கு மனம் வரவில்லை@

விள மீனை...ஐந்து டொலருக்கு விற்கும் அவருக்கு...நிச்சயம் இருபத்தைந்து வீதமாவது லாபம் இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும்...மீனின் விலை

நாலு டொலர் தான் வரும்! அதையே ஏழு டொலருக்கு...விற்றால்..மூன்று டொலர் லாபம் வரும்! அதாவது..எழுபத்தைந்து வீத லாபத்தில் விற்கிறார்கள்!இவர்களில் பலர் காசு மட்டும் தான் வாங்குவார்கள்! அதாவது விற்பனை வரியோ...வருமான வரியோ இவர்கள் கட்டுவது கிடையாது! அநேகமாக அகதி நிலையில் உள்ள..வாய் திறக்கவியலாதவர்களைத் தான் வேலைக்கும் வைத்திருப்பார்கள்! ஏறத்தாள லண்டனில்..பட்டேல்களின் வியாபார முறை தான் இவர்களதும்! இவர்களது வர்த்தக நிலையங்களின் இலாப நட்டக் கணக்குகள் செய்வதில்...கொஞ்சக் காலம் ஈடு பட்ட படியால்....இந்தப் பெரிய மனிதர்களின் கணக்குகள்..அத்து படி!
இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!  பனியிலும்...பாலை வனங்களிலும், நல்ளிரவுகளிலும் வேலை செய்து...வேலைக்கேற்ற கூலி கிடைக்காத தமிழர்கள் நாம்! இப்படி உழைக்கும் பணம்...இப்படியானவர்களிடம் தான்...இறுதியில் சங்கமிக்கிறது! எனது மகளுக்கு..இளமையில் பரத நாட்டியம் படிப்பித்த படியால்...அண்மையில் ஒரு அரங்கேற்றத்துக்குப் போக ஆசைப்பட்டாள்! நானும், மனுசியும் வேறு அலுவல் இருந்த படியால்...அவளே போய் ஒரு 'சல்வார் கமீஸ்' வாங்கி வந்தாள்! அதன் விலை.....இருநூற்று ஐம்பது டொலர்கள்! இந்தியாவில் அதன்   விலை...ஐம்பது டொலர்களுக்குள் தான் இருக்கும் என நினைக்கிறேன்!
எங்கள் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட அவள்....நானும் உங்களைப் போல...முன்னூற்றி ஐம்பது டொலரில்...இருந்து...இருநூற்றி ஐம்பது டொலர் வரை...பார்கயின் பண்ணித் தான் வாங்கினேன் என்றாள்!

கடைக்காரர் நிச்சயம்...கொடுப்புக்குள்...சிரித்திருப்பார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கந்தப்பு said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்." -கொன்றை வேந்தன்  - ஔவையார்   
"தமிழா! நீ பேசுவது தமிழா? , அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி’ என்றழைத்தாய்

கந்தப்பு, நானும் உங்களைப் போல்தான் பண்டிதன் இல்லை.

ஆனாலும்அன்னைஎன்ற சொல் இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்த சொல் என்பது மட்டும் தெரிகிறது.

காசி ஆனந்தன் பெரிய கவிஞர். அடியேன் சிறியேன் யாருடனும் மோத நான் விரும்பவில்லை.

1968இல் டீச்சம்மா என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் கண்ணதாசன் பாடலை எழுத ரி.ஆர்.பாப்பா இசை அமைக்க பி.சுசீலா பாடியிருப்பார். நல்லதொரு பாடல். மனது சிரமப்படும் நேரமெல்லாம் இந்தப்பாடலைக் கேட்டு நான் கவலைகளை மறந்திருக்கிறேன்.

அம்மா என்பது தமிழ் வார்த்தை 

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

அம்மா இல்லாத குழந்தைகட்கும் 

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை 

கவலையில் வருவதும் அம்மா அம்மா 

கருணையில் வருவதும் அம்மா அம்மா 

தவறு செய்தாலும் மன்னிப்புக்காக 

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா 

பூமியின் பெயரும் அம்மா அம்மா 

புண்ணிய நதியும் அம்மா அம்மா 

தாய் மொழி என்றும் தாயகம் என்றும் 

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா 

அம்மா இருந்தால் பால் தருவாள் 

அவளது அன்பை யார் தருவார் 

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க 

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் 

19 hours ago, suvy said:

அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாய் இருக்கு...!  tw_blush:

Suvy, கவலை எதற்கு? அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!

புங்கையூரான், நல்லதொரு பதிவு.??

1952இல் பராசக்தி படம் வெளிவந்தது. அதில் கலைஞர் கருணாநிதி ஒரு பாடல் எழுதியிருந்தார் அதில் உள்ள வரிகள் எனக்குப பிடிக்கும்

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே

உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு

முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

பிணத்தைக்கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே 

பணப்பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே..”

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.