Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் விரோதத்தை, உடனடியாக கைவிட வேண்டும், மாட்டிறைச்சி ஈழத் தமிழர்களின் உணவு - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(கவிஞர்/நடிகர்  ஜெயபாலன்)

முன்னைநாள் தமிழரசுக் கட்ச்சி பிரமுகரும், தீவிர காந்தியவாதியும் ஐநா அலுவலரும் பின்னர் காந்தளகம் பதிப்பகத்தை நிறுவி பணியாற்ற்யவருமான மறவன்புலவு சச்சிதானந்தம், இளமையில் தான் மூன்னெடுத்த தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு  கொள்கைகளுக்கு எதிராக மாட்டிறைச்சியைத் தடைசெய் என்கிற போர்வையில்  தீவிரமான மதவெறியை தூண்டும்  செயல்களில் இறங்கியிருப்பது அதிற்ச்சி தருகிறது. 
 
சச்சி அண்ணா என தமிழர்களாலும், முஸ்லிம்களாலும்  அன்பாக அழைக்கபட்ட ஒருவர், கிறிஸ்துவரான தந்தை செல்வாவின் தலைமையைல் தீரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்ட ஒருவர் இவ்வளவுதூரம் கீழிறங்கிப்போய் இந்து மத அடிப்படைவாதியாகச் சீரழியமுடியுமென என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு  ஆபத்தின் அறிகுறியோவென கலங்குகிறேன்.    இத்தகைய தமிழர் விரோத முஸ்லிம்விரோத நடவடிக்கைகளை வடகிழக்கு மண்ணில் ஒருபோதும் அங்கீகரிக்கவோ அனுமதிக்கவோ முடியாது. 
 
சாவகச்சேரியில் தமிழரின் நெறியான மத நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சிகளில் ஒருசிலர் ஈடுபடுகிற செய்தி அதிற்ச்சி தருகிறது. 
 
இத்தகைய முயற்ச்சிகள் தமிழர் மத்தியில் ஒருபோதும் வெற்றிபெறாது. இது ஈழ தமிழர்கள் மட்டுமல்ல தமிழகம் உட்பட உலக தமிழர்களது ஆயிரம் வருடப்பழமையான மதச் சார்பின்மைக்கும் சகவாழ்வு நெறிகளுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகும். 
 
 
முன்னர் தந்தை செல்வா தலைமையில் நல்லுதாரணமான பணிகளோடு வாழ்ந்த சச்சி அண்ணா இத்தகைய மட்டத்துக்கு இறங்கிப்போனதும் தமிழர் நெறிகளுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் விரோதமான செயல்களில் முன்னிற்பதும் அதிற்ச்சி தருகிறது. சச்சி அண்ணா தனது இளமையில் கிறிஸ்தவரான தந்தை செல்வா தலைமையை ஏற்றிருந்தகாலத்தில் மனித உரிமைகள் சாதி சமத்துவம் தமிழர் முஸ்லிம்கள் ஐக்கியம் தமிழர் உரிமைகள் என தான் எழுப்பிய உன்னதமான கோசங்களை வாழ்ந்த வாழ்வின் மேன்மையை தானே சிதைக்கிற கொடுமையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 
 
புதிதாக வரித்துக்கொண்ட முஸ்லிம் விரோததை அதன் தொடற்சியான இத்தகைய மனுக்குலத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை சச்சி அண்ணா உடனே கைவிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழர் நலனுக்கு விரோதமான தவறான காரியங்களை சாவகச்சேரியிலோ வடமாகாணத்திலோ யாழ்ப்பாணத்திலோ யாரும் ஆதரிக்கக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் தொடற்ச்சியாக உறுதிப்படுத்த வேண்டும். 
 
 
யாழ்பாண சிவில் சமூகத் தலைவர்களும் யாழ் பல்கலைக் கழக சமூகமும் வடமாகாணசபையும் தமிழர் அரசியல் தலைமைகளும் ஏன் இன்னமும் மவுனமாக இருக்கிறார்கள்? அவர்கள் உடனடியாக செயல்பட்டு வடகிழக்கு மாகான ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் எதிரான இத்தகைய ஆபத்தான போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். வடமாகாணத்தில் எதிரும் புதிருமான இரு தரப்புகள்  மதரீதியாக இரு தரப்புக்கள் எதிர்தர்ப்பு இல்லாத நிலையில்   ஓரிரு பிரமுகர் மட்ட அமைப்புகளாக இயங்கும்  மதவாத சக்திகள் குழுக்களாக வளர்ச்சியடையவோ வெற்றுபெறுவதற்கோ புறச்சூழல் இல்லை என்பது நம்பிக்கை தருகிறது. 
 
இதேபோல கிழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் தலைகாட்டும் மதஅடிப்படை இனவாத சிறுகுழுக்களையும் பிரமுகர்களையும் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வடபகுதியில் குட்டித் தாச்சியான பசு கொல்லப்பட்டு கன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சேதி உண்மையானால் அதனையும் நான் கண்டிக்கிறேன்.  
 
1990 களின் பின்னர்  மாட்டிறைச்சி உண்பதிலும் விற்பதிலும் முஸ்லிம்கள் முதன்மை இப்ப இல்லை. வட மாநிலத்தைபொறுத்து  இன்று மட்டிறைச்சி உண்பவர்களுள் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் பெரும்பாண்மையாக உள்ளனர்.  மாட்டிறைச்சி வியாபாரத்திலும் முஸ்லிம் அல்லாதவர்கள் குரிப்பிடத்தக்க அளவில் ஈடுபட்டுவருகின்றனர். மாட்டிறைச்சி வியாபாரிகள் மாட்டுக்களவை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 
 
இறைச்சிக்காக கருவுற்ற பசுக்கள்  கொல்வதாகவும் குற்றச் சாட்டுள்ளது. 1990 களின்பின்னர் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் வியாபாரிகள்மீதுமட்டும் வைக்கமுடியாது. இத்தகைய குற்ரச்சாட்டுக்களுக்கு  எல்லா சமயசமூகங்களையும் சேர்ந்த வியாபாரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களுக்கு எதிராக போதிய சட்டங்கள் உள்ளன. அவை அமூலாக்கப்பட்டாலே போதுமானது. இதை யாரும்  ஒரு சமூகத்துக்கு எதிரான பழியாக மாற்ரமுடியாது.      
 

2                                                                                                                                                   
                                                                                                       
 போர்க்காலங்களிதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வடபகுதியில் பரவியது. அதன் முன்னர் பெரும்பாண்மையான இந்துக்கள் (சைவ சயத்தவர்) மத்தில்யில் மாட்டிறைச்சி உண்ணுகிறவர்களின் தொகை குறைவாகவே இருந்தது, எனினும் உணவகங்களில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவிவந்தது. எனினும் போர்காலத்தில் மாட்டிறைச்சி முக்கிய உணவுகளில் ஒன்றாக மாறியது. போர்க்காலத்தில் பெருமழவு மீன்பிடித் தடை விதிக்கபட்டிருந்ததால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் சிங்களப்பகுதிக்கு மாடு ஏற்றுமதி வர்த்தகமும் தடைப்பட்டதால் மாடுகளின் பெருக்கமும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இயக்க போராளிகளின் முக்கிய கறி உணவாக மாட்டிறைச்சியே இருந்தது. இந்தபின்னணியில்தான் போராலிகளின் அனுசரனையோடு அக்காலத்தில் நகர்களில் மாட்டிறைச்சி கடைகளும் கிராமங்களில் மாடு வெட்டிப் பங்கிடும் இடங்களும் பரவியதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். 
 
 ஆரம்பத்தில் இருந்தே விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளதும் ஏனைய இயக்க போராளிகளதும் முக்கிய கறி உணவாக மாட்டிறைச்சி இடம் பெற்றது. வடமாகாணத்தில் மாட்டிறைச்சியை பிரபலமாக்கியதே விடுதலை இயக்கங்கள்தான் என உறுதியாகக் கூற முடியும். எனவே தமிழரையோ அல்லது தமிழர் விடுதலை வரலாற்ரையோ மதிக்கும் எந்த தமிழனும் புதிதாக சிலர் முன்னிலைப்படுத்த விரும்பும் மாட்டிறைச்சி எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிக்க மாட்டான். விடுதலை இயக்கங்கள் இருந்திருப்பின் இத்தகைய பேச்சுக்கே இடமிருந்திருக்காது. 
 
 விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் நகர்மயமான இடங்களில் மாட்டிறைச்சி கடைகள் மிகவும் சுத்தமான சுகாதாரசூழலில் நடத்தப்பட்டன. நகர் மயமற்ர பகுதிகளில் ஊர்ப்புறத்தில் மாடு அடித்துப் பங்கிட அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. . மேலும் விடுதலைப் புலிகளின் உணவகளில் மாட்டிறைச்சி முக்கியமான உனவாக இருந்தது. 
 
மாட்டிறைச்சி எழுற்ச்சி பெற்ற ஈழத் தமிழர்களின் உணவாகும். அதனை தடை செய்யென்று கேட்ப்பதற்க்கு யாருக்கும் அனுமதி இல்லை.
 
 

Edited by colomban
.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அய்யாவிற்கு,

பதறாதீங்கோ... பயப்படாதீங்க... அவரு சும்மா சவுண்டு கொடுக்கிறார்

போர்த்துக்கேயர் காலத்தில இருந்து இந்த மாட்டுக்கறிப் பிரச்சணை இருக்குது.

இப்ப இவரு கத்தி.. என்ன நடக்கப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை அப்ப நான் ஈழத்தமிழன் இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, putthan said:

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை அப்ப நான் ஈழத்தமிழன் இல்லையோ

நானும்தான் !!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மாடு சாப்பிடுவதை நியாய படுத்தும் நோக்கதோடு எழுதிய பதிவு போல உள்ளது! சாப்பிடுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது எனினும்...மாடு சாப்பிடுவதை நியாயப் படுத்த முனைபவர்கள் ... ஆமை சாபிடுவதைப் பற்றி... ஏன் கதைப்பதில்லை. நானே பண்ணைப் பாலத்துக்கருகில்... ஆமைகள் அடைத்து வைத்திருப்பதை அவதானித்துள்ளேன்! முழு உலகமே...மரக்கறி உணவை நோக்கியே பயணிக்கின்றது என்றே நான் கருதுகிறேன்! அதுவே ஆரோக்கியமானது என்பது எனது கருத்து! எந்தப் பொருளாதார பயன்களுமற்ற சேவல் குஞ்சுகள் நச்சு வாயு ஊட்ட்ப் பட்டுக் கொலை செய்யப் படுவதை கண்கூடாகக் காண வேண்டிய சந்த்ர்ப்பம் எனக்கு ஏற்பட்டது! மனித உடலின் குடலின் அமைப்பும்...ப்ற்களின் அமைப்பும் மாமிச பட்சணிகளின் அமைப்பிலிருந்து மிகவும் வேறு பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்! இந்து மதத்தைப் பற்றி... எனக்குத் தெரியாது! ஆனால் சைவமதம் மாடு சாப்பிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை! எம் முன்னோர்கள் முற்றிலும் முட்டாள்கள் என நான் கருதவில்லை!

கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி,

எல்லா உயிரும் தொழும்!

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியிலும் சம்மாந்துறையிலும் உங்களால் பன்றி இறைச்சி கடை  திறக்க முடியுமா கவிஞரே?

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞருக்கு  இசுலாமியரை  நாம் எதுவும்  சொல்லக்கூடாது

பதறியடித்து  ஓடிவருவார்tw_angry:

 

இந்திய றோ அமைப்பின் சதிதிட்டத்துக்கு தமிழர்கள் பலியாகிவிடக்க்குகூடாது என்பது எனது அவா.

றோ அமைப்பின் முன்னோட்ட அறிக்கை, அமைப்பே எதிர்பாராத வகையில் நன்றாக பற்றி எரிவது, அந்த அமைப்புக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

உணர்ச்சிவசப்பட்ட ஒரு சமூகத்தில் எளிதில் ஊடுருவி விடலாம் என்பதற்கு ஈழத்தமிழராகிய நாம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தூத்துக்குடி சம்பவத்திற்கு ஈழத்தில் நடந்த கண்டனங்கள் அவர்களுக்கு கொஞ்சம் கசந்துதான் இருக்கிறது என்பதை அவர்களின் பதில் நடவடிக்கைகளில் நன்றாகத் தெரிகிறது.

இருந்தாலும் நாங்கள் இந்தியா அளவுக்கு மதவெறியர்கள் இல்லை என்பதையும் உணர்திருப்பார்கள் அல்லது உணரச்செய்வோம்.

இது என் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பொருந்தும்.

இதை நாங்கள் பெரிதுபடுத்தாமல் விடுவதே அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதல் பதிலடியாக அமையும். 

5 hours ago, புங்கையூரன் said:

முஸ்லிம்கள் மாடு சாப்பிடுவதை நியாய படுத்தும் நோக்கதோடு எழுதிய பதிவு போல உள்ளது! சாப்பிடுவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது எனினும்...மாடு சாப்பிடுவதை நியாயப் படுத்த முனைபவர்கள் ... ஆமை சாபிடுவதைப் பற்றி... ஏன் கதைப்பதில்லை. நானே பண்ணைப் பாலத்துக்கருகில்... ஆமைகள் அடைத்து வைத்திருப்பதை அவதானித்துள்ளேன்! முழு உலகமே...மரக்கறி உணவை நோக்கியே பயணிக்கின்றது என்றே நான் கருதுகிறேன்! அதுவே ஆரோக்கியமானது என்பது எனது கருத்து! எந்தப் பொருளாதார பயன்களுமற்ற சேவல் குஞ்சுகள் நச்சு வாயு ஊட்ட்ப் பட்டுக் கொலை செய்யப் படுவதை கண்கூடாகக் காண வேண்டிய சந்த்ர்ப்பம் எனக்கு ஏற்பட்டது! மனித உடலின் குடலின் அமைப்பும்...ப்ற்களின் அமைப்பும் மாமிச பட்சணிகளின் அமைப்பிலிருந்து மிகவும் வேறு பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்! இந்து மதத்தைப் பற்றி... எனக்குத் தெரியாது! ஆனால் சைவமதம் மாடு சாப்பிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை! எம் முன்னோர்கள் முற்றிலும் முட்டாள்கள் என நான் கருதவில்லை!

கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி,

எல்லா உயிரும் தொழும்!

புங்கை,

எது சாப்பிடுவது எதை சாப்பிடக் கூடாது என்பது அந்த மக்களின் வாழ்க்கை, இயற்கை சூழல் மற்றும் பிரதான தொழில் என்பனவற்றில் தங்கியிருப்பது. விவசாயிகளை பெரும்பான்மையாக கொண்ட இந்திய / தென் இந்திய சமூகத்துக்கு (இந்து /சைவ மக்களை அதிகமாக கொண்ட சமூகத்துக்கு) மாடு மிகவும் உதவிகரமான விலங்கு. முற்காலத்தில் அதை உண்ணும் பழக்கம் அனுமதிக்கப்பட்டு இருப்பின் இடையிடையே விவசாயம் செய்ய முடியாதளவுக்கு வறட்சி வருக்கின்ற போது மாட்டை கொன்று இறைச்சியை உண்டு இருந்தால் பின் வறட்சி இல்லா காலங்களில் மாடு இன்றி விவசாயமே அழிந்து போயிருக்கும். அந்த காலத்தில் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க மதம் பயன்படுத்தப்பட்டது.  மக்களை அறிவூட்ட சைவ சமயத்தவர்கள் சிவனின் வாகனமாக மாடடை மாற்றி விட்டு கொல்ல கூடாது என்று விதி இட்டடனர்.

தமிழர்கள் / திராவிடர்கள் உறுதியான உடலமைப்பை கொண்ட மாமிசம் மற்றும் வயல்களில் இருந்து இலகுவாக கிடைக்கும் சிறு மீன்கள்  உண்டு பலமான சமூகமாக இருந்தது என்றும் ஆரியர்கள் தான் 'கொல்லாமை' கொண்டு வந்து அவர்களை பலவீனர்களாக ஆக்கினர் என்றும் சொல்வதுண்டு

இஸ்லாம் உருவாகிய மற்றும் பரவிய மத்திய கிழக்கு நாடுகளில் பன்றி அதிகமாக வாழ்ந்த வரலாறு இருக்கின்றது. ஆனால் மனிதன் உண்ணும் அதே தானியங்களையும் கிழங்குகளையும் அவையும் உண்பதால் அவை ஹராம் ஆக்கப்பட்டது.
 

Quote

 

 

 

ஆமை சாபிடுவதைப் பற்றி... ஏன் கதைப்பதில்லை. நானே பண்ணைப் பாலத்துக்கருகில்... ஆமைகள் அடைத்து வைத்திருப்பதை அவதானித்துள்ளேன்!

 

 

அழிந்து வரும் உயிரினம் என்பதால்  கடலாமையை கொல்வதும் உண்பதும்  உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டு இருக்கு. இது பற்றிய அறிவு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். ஆயினும் அங்கு  விற்கப்படுவதன் காரணம்  லஞ்சமும் பொறுப்பற்ற தனத்தாலும் தான் . கடலிலேயே வைத்து கொன்று வெட்டி இறைச்சி ஆக்கிய பின் மீனோடு மீனாக  கொண்டு வந்தும் விற்கின்றனர்.

மாட்டுக்கும் அமைக்கும் முடிச்சு போட முடியாது.

Quote

மனித உடலின் குடலின் அமைப்பும்...ப்ற்களின் அமைப்பும் மாமிச பட்சணிகளின் அமைப்பிலிருந்து மிகவும் வேறு பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

தவறான கருத்து.

மனிதனின் பற்களின் அமைப்பு, மண்டை ஓட்டில் கண்கள் அமைந்து இருக்கும் விதம், சமிபாட்டு அமைப்பு என்பன omnivores (மாமிசம் + மரக்கறி உண்ணும் விலங்குகள்) இற்கு உரியவை. Apes தாவர பட்சியாயினும் அதில் இருந்து கூர்ப்படைந்த மனிதன் ஒரு omnivore ஆகவே ஆனான்.
ஆதி மனிதனுக்கு விவசாயம் செய்ய தெரியவில்லை. எனவே வேட்டையாடியும், இலகுவாக மீன்களை பிடித்து உண்டும் தான் படிப்படியாக முன்னேறினான்.
உலக நாகரீகங்களில் அநேகமானவை நதிக்கரைகளில் உருவானவை. நாம் தாவர பட்சிகள் என்றால் நதிக்கரைகளில் நாகரிகம் அமைத்து இருக்க மாட்டோம்.

ஒரு குறிப்பிட்ட சாரர் வேகன் வீகன் என்று குழுவாக அலைந்தாலும் எதிர்காலத்தில் தாவர உணவு மட்டும் உண்டு மனித இனம்  வாழ்வது சாத்தியம் ஆகாது. உலக சனத்தொகை பெருக்க பெருக்க அதுக்கு வழங்க கூடியளவுக்கு விவசாயம் செய்ய முடியாது. உலக சுகாதார நிறுவனம் சொல்லுவது போன்று பூச்சிகளை உண்ணும் பழக்கம் பரவலாக பெருகும்.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று தான் உலகம் உருளும்.

கூலிக்கு மாரடிப்பவர்களிடமிருந்து முஸ்லிமுக்கும் மாட்டுக்கும் முடிச்சுப்போடும் கீழ்த்தர உளறலைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது!

 

------

இங்கு ஜெயபாலன் சொன்ன கருத்தை  நான் வரவேற்கின்றேன். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைய கூடாது என்பதில் குறியாக இருக்கும் இந்திய சதியின் ஒரு அம்சம் தான் சச்சிதானந்ததின் அடிப்படைவாத அமைப்பும் மாட்டை கொல்லாதே என்று சொல்வதும் என்று நம்புகின்றேன்.
ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்படும் போது எட்டிப்பார்க்காத சிவசேனா இன்று சச்சிதானந்ததின் முக மூடியை போட்டுக் கொண்டு மேலும் எம்மை தனிமைப்படுத்தி அழிவுக்குள்ளாக்க முனைகின்றது.

உரிமைகளுக்கான போராட்டத்தில் அடிப்படைவாததுக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மறவன்புலவில் மாட்டிறைச்சி உண்போம்!

52396-300x225.jpg

இந்தியா எங்கும் மதவெறியைத் தூண்டி அழிவுகளை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்றவற்றின் இலங்கை முகவராகச் செயற்படும் மறவன்புலவு சச்சிதானந்தம் முஸ்லீம்களை இலங்கையை விட்டு வெளியேறுங்கள் எனவும் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாட்டிறைச்சிக் கடைகளை நேற்றுவந்த இஸ்லாமியர்களே இலங்கையில் திறந்தார்கள் என்றும் இலங்கை இந்து அல்லது பௌத்த நாடு என்றும் கூறும் மதவாதத்தை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்தும் மறவன்புலவு சச்சிதாந்தம் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் பேரினவாத அடியாள் என்பதோடு மட்டும் நிறுத்திவிட முடியாது.

பொதுபல சேனா அமைப்புடனான இவர்களின் உறவும், பௌத்த அடிப்படிவாதத்தை நியாயப்படுத்தும் போக்கும் பல அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் போன்ற அடிப்படைவாத அரசியல் கட்சிகள் நமது மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு அப்பால்பட்டது.

பொதுபல சேனா அமைப்புடனான இவர்களின் உறவும், பௌத்த அடிப்படிவாதத்தை நியாயப்படுத்தும் போக்கும் பல அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் போன்ற அடிப்படைவாத அரசியல் கட்சிகள் நமது மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு அப்பால்பட்டது.

மறவன்புலவு சச்சிதானந்தின் மதவெறிப் பேச்சைத் தொடர்ந்து நாவலர் வீதி முஸ்லீம் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த உணவு விடுதியொன்றை மூடுமாறு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அது இடை நிறுத்தப்பட்டது.

2020 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பௌத்த சிங்கள வாக்குகளோடு இந்துத்துவ வாக்குகளையும் இணைப்பதற்கான திட்டம் ஆரம்பமாகிவிட்டதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

http://inioru.com/religious-fundamenalists-in-sri-lanka/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில தமிழன் விடுதி திறப்பதை எதிர்த்து அவனுகள் ஆர்ப்பாட்டம் பண்ணுறானுகள்  ஆனால் என்னவோ எங்களுக்கு பழகிவிட்டது இனி இன்னொரு பக்கம் அனுபவிக்கும் காலம் வர போகிறது  

  • கருத்துக்கள உறவுகள்

மாமிசம் சாப்பிடுவது அவரவர் உரிமை.

ஆனால்..  கள்ள மாடு பிடிச்சு வெட்டி காசுக்கு இறைச்சி ஆக்கி விக்கிறது. மாட்டிறைச்சிக் கழிவுகளை கோவில்களுக்கு அருகாமையில் கொட்டுவது.. கோவில்களுக்கு அருகாமையில் மாட்டுறைச்சிக் கடை மற்றும் மாமிச உணவுக்கடை நடத்துவது... இப்படியான சமூக விரோத செயல்களில் யாழ் முஸ்லீம்கள் முன்னரும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

குறிப்பாக யாழ் கன்னாதிட்டுப் பகுதியில் வண்ணை வைத்திஸ்வரர் ஆலயப் பகுதியில் வேண்டும் என்றே மாட்டுறைச்சிக் கழிவுகளை போட்டு.. ஆலய வழிபாட்டுக்கு வரும் மக்கள் பெரும் அவதியுற்றதையும்.. பின்னர் போராளிகளின் கடும் எச்சரிக்கையை அடுத்து.. இந்த அடாத்து குறைந்தது.

ஆனால் இப்போ.. போராளிகள் அற்ற சூழலில்.. இன்னும் இன்னும் அடாத்தான செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்துக் கோவில்களை சிங்கள பெளத்தம் குண்டு போட்டு இடித்த போது.. இந்தியாவில் ஜோர்ஜ் பெர்னான்டஸ் குரல்கள் கொடுத்த அளவுக்கு சிவசேன அமைப்பு குரல்கொடுக்கவில்லை. ஆனாலும்.. இன்றைய சூழலில்.. முஸ்லீம்கள் அரபுலக ஆதரவோடு தமிழ் மக்களின் நிலம்... கலாசார விழுமியங்களை விழுங்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான எதிர்ப்பை பதிவு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

இது இரு சமூகங்களுக்கிடையே வேறுபாட்டை தூண்டுவதைக் காட்டிலும் புரிந்துணர்வைக் கூட்ட வகை செய்தால் நல்லம். அதற்காக முஸ்லீம்கள் செய்யும் சமூக விரோதச் செயல்களை அப்படியே புரிந்துணர்வை வளர்க்கிறம் என்ற போர்வையில் மறைக்கவோ.. வளரவோ இடமளிக்க கூடாது. முடியாது. ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

கள்ள மாடு பிடிச்சு வெட்டி காசுக்கு இறைச்சி ஆக்கி விக்கிறது. மாட்டிறைச்சிக் கழிவுகளை கோவில்களுக்கு அருகாமையில் கொட்டுவது.. கோவில்களுக்கு அருகாமையில் மாட்டுறைச்சிக் கடை மற்றும் மாமிச உணவுக்கடை நடத்துவது... இப்படியான சமூக விரோத செயல்களில் யாழ் முஸ்லீம்கள் முன்னரும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யாழ் மாநகர சபைக்கு, போலிசுக்கு அல்லது வழக்கு மன்றத்தில் வழக்கு போட்டதாக ஒரு செய்தி தானும் வரவில்லையே? 
பாதிக்கப்பவர்கள் எவருமே இல்லையா? அப்படியானால் மாடு களவு போனது, கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கொட்டுவது போன்றவை மாட்டு உரிமையாளர்களை பாதிக்கவில்லையா? கோவில் நிருவாகிகளையும் மக்களையும் பாதிக்கவில்லையா? யாழ்ப்பாணத்தில்  இந்துக்கள் செய்தியாளர்களாகவோ அல்லது பத்திரிக்கை நடத்துபவர்கலாகவோ இல்லையா?

9 hours ago, கிருபன் said:

 

பொதுபல சேனா அமைப்புடனான இவர்களின் உறவும், பௌத்த அடிப்படிவாதத்தை நியாயப்படுத்தும் போக்கும் பல அழிவுகளை ஏற்படுத்தவல்லது. ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் போன்ற அடிப்படைவாத அரசியல் கட்சிகள் நமது மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு அப்பால்பட்டது.

http://inioru.com/religious-fundamenalists-in-sri-lanka/

 

 

இனியொரு ஆர் எஸ் எஸ் யும்  அதற்கு எதிரான நாம் தமிழரையும் ஒரு கோட்டில் அணுகி தனது குதர்க்கத்தை காட்டுகின்றது. நமது மண்ணின் வரலாற்று பாரம்பரியம் என்பது சாதியம் மதவாதம் பிரதேசவதத்தை தக்கவைப்பது என்பதுமட்டுமே. இதைக் கடந்து எந்த பாரம்பரியமும் கிடையாது. இதை உடைத்து தமிழர் என்ற ஒரு இன அடயாளம் புலிகளின் போரட்டத்தால் முடிந்தவரை எழுச்சிபெற முற்பட்டது. இருந்தும் மதவாதம் பிரதேசவாதத்தை கடக்கமுடியவில்லை. இப்போது நாம் தமிழர் சாத மத அடயாளங்களை கடந்து தமிழர் என்ற இன அடயாளத்தை கட்டியெழுப்புவதில் முயற்சிசெய்கின்றது. அதை இனியொரு பாரம்பரியத்துக்கு எதிரானது வரலாற்றுக்கு எதிரானது என்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம் 
முஸ்லீம் சகோதரர்கள் விடுவித்து எடுத்து பழகியவர்கள்.

சிங்கள பேரினவாதம் பிரிவினையை தூண்டுகிறது என்பதை 
புலிகள் நன்றே அறிந்து இருந்தார்கள் ...... அதனால் பல காலம் பொறுமை 
காத்து வந்தார்கள்.

கிழக்கு மாகாண புலிகளை தலைமைப்பீடம் கட்டி வைத்து இருந்தது என்றே சொல்லலாம் 
அதுதான் பின்பு பூதமாகி .... யாழில் இருந்து விரட்டி அடிப்பு .... காத்தான்குடி பள்ளிவாசல் 
தாக்குதல் என்று பல அவதூறு செயல்கள் வரை கொண்டு சென்றது. 

ஆரம்பத்தில் கிள்ளி எறிய தொடங்கி இருந்தால் குறிப்பிட நபர்களின் பெயருடன் 
எல்லாம் முடிந்து இருக்கும்.

நான் மாட்டிறைச்சி சாப்பிடுபவன் (ஊரில் சாப்பிடததில்லை) எனக்கு இதில் எந்த கெடும் இல்லை.
சகோதர்கள் வாழும் காத்தான் குடியில் பண்டி இறைச்சி கடை திறக்க முடியுமா? என்று மேலே ஒருவர் 
கேட்ட கேள்வி எனக்கும் இருக்கிறது. 

விளையாட்டை விளையாட்டாய் பாருங்கோ 
சினிமாவை சினிமாவை பாருங்கள் 
என்று எங்களுக்கு சொல்கிறார்களே தவிர 
எல்லாவற்றையும் அரசியல் கலந்துதான் அவர்கள் காட்டுகிறார்கள்.

முஸ்லீமை கட்டி எழுப்புவதில் பாகிஸ்தானுக்கு பெரும் பங்கு உண்டு 
உமாமகேஸ்வரனை கூட்டி பேசும் அளவில் பாகிஸ்தான் இருந்தது அந்த காலத்தில் 
இது கிந்தியாவுக்கு கிறு கிறுப்பை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஆர் ஸ் ஸ் அப்போ பேசமால் இருந்தது என்று நாம் இப்போ விரட்டுவதில் லாபம் இல்லை.
இப்போது முடியும் என்றால் கூட்டிவந்து முஸ்லிம்களுடன் மோதவிட்டு விட்டு பார்வையாளராக 
இருப்பதில் ஏதும் தப்பு இருப்பதாக தெரியவில்லை. 

14 hours ago, பகலவன் said:

இந்திய றோ அமைப்பின் சதிதிட்டத்துக்கு தமிழர்கள் பலியாகிவிடக்க்குகூடாது என்பது எனது அவா.

றோ அமைப்பின் முன்னோட்ட அறிக்கை, அமைப்பே எதிர்பாராத வகையில் நன்றாக பற்றி எரிவது, அந்த அமைப்புக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

உணர்ச்சிவசப்பட்ட ஒரு சமூகத்தில் எளிதில் ஊடுருவி விடலாம் என்பதற்கு ஈழத்தமிழராகிய நாம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தூத்துக்குடி சம்பவத்திற்கு ஈழத்தில் நடந்த கண்டனங்கள் அவர்களுக்கு கொஞ்சம் கசந்துதான் இருக்கிறது என்பதை அவர்களின் பதில் நடவடிக்கைகளில் நன்றாகத் தெரிகிறது.

இருந்தாலும் நாங்கள் இந்தியா அளவுக்கு மதவெறியர்கள் இல்லை என்பதையும் உணர்திருப்பார்கள் அல்லது உணரச்செய்வோம்.

இது என் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பொருந்தும்.

இதை நாங்கள் பெரிதுபடுத்தாமல் விடுவதே அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதல் பதிலடியாக அமையும். 

உங்கள் கருத்தோடு ஒட்டிய சிந்தனைகளை எவ்வளவு தூரம் வளர்க்க முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கர்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டைக் கடந்து இலங்கை புலம்பெயர்தேசங்களில் விரிவுபடுவதை இந்திய உளவுதுறை ஒருபோதும் விரும்பாது. அதற்காக அவர்கள் பல முயற்சிகளை நிச்சயம் செய்வார்கள். அன்றைய மனுதர்மத்தை வேதங்கள் கடவுள் ஊடாக நிலைநிறுத்தியது இன்று இந்திய ஆழும் வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் என்பது அதே மனுதர்மத்தை உளவுதுறை ஊடாகவே நிலைநிறுத்துகின்றது. அடிப்படையில் பெரும் சமூகங்ளை பிரித்து சிதைத்து ஒரு சிறு சமூகம் அதிகாரத்தை தக்கவைப்பது தான் இதன் சூட்சுமம். அன்று சாதி தீண்டாமை என்பதை முன்வைத்த்தார்கள் இன்றும் அதையேதான் வேறுவிதமாக தூத்துக்குடியில் செய்தார்கள். குழப்பங்ளை அவர்களே செய்தார்கள் வன்முறைகளை வலிந்து நுழைத்த்தார்கள் தமிழர்களைக் கொண்டே தமிழர்களை கொன்றார்கள். அன்றும் இயக்கங்களை பல பத்தாக வளர்த்தார்கள் மோதவிட்டார்கள் அழித்தார்கள். இன்று எஞ்சியிருக்கும் முரண்பாடுகளை பயன்படுத்துவார்கள்; நாடுபிடிப்பதில் நுழைந்து நாறடித்தார்கள் இன்று மாடுபிடிப்பதில் சச்சிதானந்தை இறக்கிவிட்டுள்ளார்கள்.. நாளை ஆவா குழு இஸ்லாமியர்களை வெட்டும் ஜிகாத் தமிழர்களை வெட்டும்  அழிவுகள் வளரும். துரநோக்கு சிந்தனையற்றவர்கள் செத்துமடிவது இயற்கையின் விதிபோன்றது. விதி வலியது.. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

கள்ள மாடு பிடிச்சு வெட்டி காசுக்கு இறைச்சி ஆக்கி விக்கிறது. மாட்டிறைச்சிக் கழிவுகளை கோவில்களுக்கு அருகாமையில் கொட்டுவது.. கோவில்களுக்கு அருகாமையில் மாட்டுறைச்சிக் கடை மற்றும் மாமிச உணவுக்கடை நடத்துவது... இப்படியான சமூக விரோத செயல்களில் யாழ் முஸ்லீம்கள் முன்னரும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

முஸ்லிம்கள் வெளியேற வேணும் என்று சச்சி மாத்தையா சொன்ன கருத்தை வரவேற்கமுடியாது ஆனால் களவு போகும் மாடுகளை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது....உயிருடன் வேறு மாவட்டத்திற்கு எடுத்து சென்றால் பொலிஸில் பிடிபட வேணும் என்ற படியால் களவெடுக்கும் மாவட்டத்தில் கொல்கலத்தை வைத்துள்ளார்கள் ......சம்பந்தப்பட்ட வியாபாரிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

முஸ்லிம்கள் வெளியேற வேணும் என்று சச்சி மாத்தையா சொன்ன கருத்தை வரவேற்கமுடியாது ஆனால் களவு போகும் மாடுகளை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது....உயிருடன் வேறு மாவட்டத்திற்கு எடுத்து சென்றால் பொலிஸில் பிடிபட வேணும் என்ற படியால் களவெடுக்கும் மாவட்டத்தில் கொல்கலத்தை வைத்துள்ளார்கள் ......சம்பந்தப்பட்ட வியாபாரிகள்...

இதுக்கு எங்கட Jude அண்ணா என்ன சொல்லுவார்?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Jude said:

பாதிக்கப்பட்டவர்கள் யாழ் மாநகர சபைக்கு, போலிசுக்கு அல்லது வழக்கு மன்றத்தில் வழக்கு போட்டதாக ஒரு செய்தி தானும் வரவில்லையே? 
பாதிக்கப்பவர்கள் எவருமே இல்லையா? அப்படியானால் மாடு களவு போனது, கோவில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கொட்டுவது போன்றவை மாட்டு உரிமையாளர்களை பாதிக்கவில்லையா? கோவில் நிருவாகிகளையும் மக்களையும் பாதிக்கவில்லையா? யாழ்ப்பாணத்தில்  இந்துக்கள் செய்தியாளர்களாகவோ அல்லது பத்திரிக்கை நடத்துபவர்கலாகவோ இல்லையா?

ஊரில் 1990... 1996 இடம்பெயர்வுகளின் பின் கட்டாக்காலியான மக்களின் கால்நடைகள்.. இன்று.. முஸ்லீம்களின் வியாபார முதலீடாகியுள்ளன.

எங்கள் ஊரில மட்டும்.. பல நூறு மாடுகள் திடீர் என்று காணாமல் போயுள்ளன. 

இந்த மாடுகளுக்கு அடையாளங்கள் இல்லாததால்.. மக்கள் அவற்றிற்கு சொந்தம் கொண்டாட முடியவில்லை. அப்படி சொந்தம் கொண்டாடி மக்கள் சொறீலங்கா பொலிஸில் முறைப்பாடு செய்யப் போனாலும்.. அதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. ஏன் இடிந்த வீடுகளுக்கு இழப்பீடு வாங்க என்று மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப் போன போது கூட.. பல முறைப்பாடுகள் உண்மைக்குப் புறம்பாக எழுதி கையழுத்திடும் படி கேட்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இப்படியான ஒரு எடுபிடி.. ஆக்கிரமிப்பு.. இராணுவ திமிர் நிர்வாக அலகுக்குள்.. முஸ்லீம்கள் அடிக்கும் கொட்டத்துக்கு சொறீலங்கா பொலிஸில் முறையிட்டு தீர்வு கிடைக்கும் என்பது போல தோற்றம் காட்டுவதும் ஏனோ தெரியவில்லை. புதிய எஜமானர்கள் மேலான பயபக்தியாக இருக்கலாம். ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

இந்த மாடுகளுக்கு அடையாளங்கள் இல்லாததால்.. மக்கள் அவற்றிற்கு சொந்தம் கொண்டாட முடியவில்லை. அப்படி சொந்தம் கொண்டாடி மக்கள் சொறீலங்கா பொலிஸில் முறைப்பாடு செய்யப் போனாலும்.. அதை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை.

கள்ளர் களவெடுத்த மாடுகள் காணாமல் போனால் எவரும் பொருட்டாக எடுக்க மாட்டார்கள். நீங்கள் கள்ளருக்காக ஏன் இப்படி வாதாடுகிறீர்கள்?

மாட்டு எச்சங்களை கோவிலுக்கு அருகில் கொட்டினால் மக்களும் நிருவாகமும் யாழ் மாநகரசபைக்கு முறையிட்டு இருக்கும்.

இப்படி எதுவுமே இடம்பெறாததால் தான் இந்து/சைவ செய்தியாளர்களும் பத்திரிகையாளர்களும் இவை பற்றி எதுவுமே பிரசுரிக்கவில்லை. இன முரண்பாட்டை தோற்றுவித்து மீண்டும் போரை ஆரம்பிக்க உருவாக்கப்படும் புனைத்துரைகளாகவே   இந்த கட்டுக்கதைகள் தோன்றுகின்றன.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரில் சம்பந்தப்பட்ட இடத்தைச் சார்ந்து வாழ்ந்த எனக்கே கதைவிடும் நீங்கள்.. கட்டுரையைக் குறை சொல்ல எந்த அருகதையும் அற்றவராகிறீர்கள்.

வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயப் பகுதி வாழ் மக்களிடம் கேட்டால் தெரியும்.

மாநகர சபை இந்தக் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை செய்ததாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவம்.. சிவன்பண்ணை வீதியை அண்டி.. வண்ணை வைத்தீஸ்வரா ஆலயப் பகுதியில் நடந்திருந்தது. 

ஊடகங்களில் வராதவை எல்லாம் உண்மை ஆகாது என்பது உங்களின் வங்குரோத்து வாதம். ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

யாழ் நகரில் சம்பந்தப்பட்ட இடத்தைச் சார்ந்து வாழ்ந்த எனக்கே கதைவிடும் நீங்கள்.. கட்டுரையைக் குறை சொல்ல எந்த அருகதையும் அற்றவராகிறீர்கள்.

ஆகா ,  இப்போது புரிகிறது காணாமல் போகும் களவு போன மாடுகள் பற்றி நெடுக்கருக்கு உண்டான கவலை ... ?

வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயப் பகுதி வாழ் மக்களிடம் கேட்டால் தெரியும்.

நாமாக போய் கேட்காவிட்டால் அவர்களுக்கே இது பற்றி அக்கறை இல்லை என்றால் இவை வெறும் வதந்திகள் அல்லது பழைய காலத்து ஆதாரம் அற்ற கட்டுகதைகள் என்றே கொள்ளலாம்.

மாநகர சபை இந்தக் கழிவுகளை அகற்றுவதில் அக்கறை செய்ததாகத் தெரியவில்லை.

மாநகர சபை சைவ தமிழ் மக்களின் வாக்குகளில் தங்கி இருக்கும் உறுப்பினர்களையே பெரும்பான்மையாக கொண்ட அமைப்பு. அவர்களுக்கே அக்கறை இல்லை என்றால் இவை வெறும் வதந்திகள் என்பது உறுதியாகிறது.

ஊடகங்களில் வராதவை எல்லாம் உண்மை ஆகாது என்பது உங்களின் வங்குரோத்து வாதம். ?

மக்களுக்கு அக்கறை உள்ள விடயங்களை பிரசுரித்தாலே ஊடகங்கள் விற்பனையாகும். மக்களுக்கு அக்கறையில்லாத, உண்மையற்ற வதந்திகளை பிரசுரித்தால் மக்கள் அந்த ஊடகங்களை வாங்க மாட்டார்கள். நீங்கள் பரப்பும் இந்த வதந்திகள் மக்களுக்கோ ஊடகங்களுக்கோ வேண்டப்படாதவை - வெறும் வதந்திகள். இவை இனக்குரோதத்தை வளர்த்து மீண்டும் போரை தொடங்க செய்ய மட்டுமே பயன்படும். அது வேண்டாம் நெடுக்காலேபோவான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/30/2018 at 12:36 AM, putthan said:

உயிருடன் வேறு மாவட்டத்திற்கு எடுத்து சென்றால் பொலிஸில் பிடிபட வேணும் என்ற படியால் களவெடுக்கும் மாவட்டத்தில் கொல்கலத்தை வைத்துள்ளார்கள் ......சம்பந்தப்பட்ட வியாபாரிகள்...

யாராவது மாட்டை களவு கொடுத்து இருந்தால் அவர்களுக்கு அக்கறை இருக்கும். யாரும் களவு எடுத்த மாட்டை வேறு யாராவது கொண்டு போனால் எவரும் முறைப்பாடு செய்ய மாட்டார்கள் (நெடுக்கருக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கலாம்.)

கொல்களத்தை அமைக்க நகரசபை அனுமதி கொடுத்து இருக்கிறது. நகரசபை சைவ பெருமக்களின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. அவர்கள் அனுமதி கொடுத்து, வைத்து இருந்து, (கொத்து ரொட்டி சாப்பிட்டு) பயன்பெறும் போது முஸ்லிம்களுடன் ஏன் மோதலுக்கு போகிறீர்கள்? நகரசபையிடம் அனுமதியை இரத்து செய் என்று மோதலாமே?  முஸ்லிம்களுடன் மோதலுக்கு போவதன் நோக்கம் இன்னுமொரு போரை ஆரம்பிப்பதே. இது உண்மையில் முஸ்லிம்களுடனும் கிறீஸ்தவருடனுமான மோதல்: இவர்கள் எல்லாரும் மாடு சாப்பிடுபவர் (சைவரில் பலர் மாட்டு கொத்துரொட்டி சாப்பிடுவது வேறு கதை; மப்பில் டெஸ்ட் என்று மாடு சாப்பிடுவது இன்னும் ஒரு 0 கதை ?). உலக அளவில், சர்வதேச அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் என்று வரும் போது இந்துக்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் மற்றும்  கிறீஸ்தவரின் இணைத்த பலத்துக்கு இணையாக முடியாது. ஆகவே இந்த மோட்டுத்தனமான மாட்டு மோதல் வேண்டாம். 

 

On 5/30/2018 at 6:10 AM, Eppothum Thamizhan said:

இதுக்கு எங்கட Jude அண்ணா என்ன சொல்லுவார்?

 மேலே சொன்னது பற்றி உங்கள் அபிப்பிராயம்? ☺️ 

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.