Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இன்று மாவீரர் தினம்!

November 27, 2018
images-1-696x402.jpg

இன்று மாவீரர் தினம்

ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள்.

ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள்.

தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர்நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் விதைப்பது, அவர்களை ஆத்மார்த்தமாக அஞ்சலிப்பது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து உயரிய நடைமுறையை புலிகள் பேணினார்கள். இதுவே, 1989ஆம் ஆண்டு மாவீரர் தினமாக பரிணமித்தது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. மணலாற்று காட்டுக்குள் இருந்த ஜீவன் முகாமின் ஒரு பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அங்குதான் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது.

அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுட்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால், மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 

மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட அந்த குடும்பங்களின் நலனோம்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும், அந்த வருடத்தின் மாவீரர் தொகையை புலிகள் வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாங்குதல்களில் மரணமானவர்கள், அப்படியான விபத்துக்களில் மரணமானவர்கள் தொகையை இதில் இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

2008ஆம் ஆண்டு மாவீரர்தினமே புலிகளால் அனுட்டிக்கட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் ஒக்ரோபர் 30ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர்.

2009 மே 19ம் திகதி வரையான யுத்தத்தின் இறுதிநாள் வரை சுமார் 30,000 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கலாமென கருதப்படுகிறது.

2009 ஜனவரியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி துயிலுமில்லத்தையும் இராணுவம் கைப்பற்றியது. இதன் பின்னர் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் இரணைப்பாலையில் விதைக்கப்பட்டன. 2009 பெப்ரவரி இறுதியில் அந்த பகுதியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வர, அதன் பின்னர் இரட்டைவாய்க்கால் சந்திக்கு அண்மையாக இருந்த கடற்புலிகளின் தளத்திற்கு அருகில் உடல்கள் விதைக்கப்பட்டன.

 

இந்த பகுதிக்கும் இராணுவம் வந்ததன் பின்னர், புலிகளின் இறுதி துயிலுமில்லத் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் அமைக்கப்பட்டது. 2009 மே 13ம் திகதி காலை வரை இந்த துயிலுமில்லத்தில் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் விதைக்கப்பட்டன.

details-215x300.jpg

2009 யுத்தம் முடிந்த பின்னர், உயிர்நீத்த மறவர்களை அஞ்சலிப்பதை தடுக்க அரசுகள் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டன. சட்டம், பாதுகாப்புத்துறை ஆன மட்டும் முயற்சித்தன. கல்லறைகளும், நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. இருந்தாலும், தமிழர்கள் நெஞ்சில் சுமக்கும் துயிலுமிடங்களில் அந்த தியாகிகளை விதைத்து அஞ்சலித்து வருகிறார்கள்.

 

http://www.pagetamil.com/25248/

 

  • Replies 110
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் உரித்தாகட்டும்......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு  வீரவணக்கங்கள்!.

Posted

தாயக கனவுகளை சுமந்து எம் மண்ணூக்குள் உறங்கும் மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு  வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எம் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது வாழ்வுக்காக உயிர்நீத்த உறவுகளே காலாகாலத்துக்கும் உங்களைப் போற்றுவோம்.

7 hours ago, Nellaiyan said:

தாயக கனவுகளை சுமந்து எம் மண்ணூக்குள் உறங்கும் மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கங்கள்

வணக்கம் நெல்லையன்.
மிக நீண்ட காலத்தின் பின் மாவீரர் நாளில் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நேரங்கள் இருந்தால் இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவல் தெய்வங்களே ...வீர வணக்கங்கள் 
மறவாதிருப்போம்.... :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எம் மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம் !

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தாயகத்தில் புதிய அரசு பெரும் முட்டுக்கடை போட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்த விழா மிகவும் மகிழ்வினை தருகின்றது.

சீமான் உரை 48 நிமிசத்தில் இருந்து 

Edited by Nathamuni
Posted
24 minutes ago, Nathamuni said:

தாயகத்தில் புதிய அரசு பெரும் முட்டுக்கடை போட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்த விழா மிகவும் மகிழ்வினை தருகின்றது.

சீமான் உரை 48 நிமிசத்தில் இருந்து 

தாயகத்தில் அரசு முட்டுக்கட்டைகளை போட்டாலும் அவை எவையும் அரசுக்கு பயன்கொடுக்கவில்லை. தாயக மக்கள் மாவீரர் தின அஞ்சலியை எந்த பகட்டும் இல்லாமல் உணர்வெழுச்சியுடன் செலுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த வருடங்களை விட அதிகப்படியான இடங்களில் நிகழந்து இருக்கு. 2009 இந்திய அமைதி காக்கும் படையின் காலத்தில் முதன் முதலாக எங்கு மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதோ அதே இடத்தில் 2009 இன் பின் இன்றுதான் மீண்டும் நடத்தப்பட்டு இருக்கு என்பதையும் அறிந்தேன்.

 

https://www.yarl.com/forum3/topic/220825-தாயகம்-எங்கும்-உணர்வெழுச்சியுடன்-இடம்பெற்ற-மாவீரர்-நாள்-நிகழ்வுகள்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, நிழலி said:

தாயகத்தில் அரசு முட்டுக்கட்டைகளை போட்டாலும் அவை எவையும் அரசுக்கு பயன்கொடுக்கவில்லை. தாயக மக்கள் மாவீரர் தின அஞ்சலியை எந்த பகட்டும் இல்லாமல் உணர்வெழுச்சியுடன் செலுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த வருடங்களை விட அதிகப்படியான இடங்களில் நிகழந்து இருக்கு. 2009 இந்திய அமைதி காக்கும் படையின் காலத்தில் முதன் முதலாக எங்கு மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதோ அதே இடத்தில் 2009 இன் பின் இன்றுதான் மீண்டும் நடத்தப்பட்டு இருக்கு என்பதையும் அறிந்தேன்.

 

https://www.yarl.com/forum3/topic/220825-தாயகம்-எங்கும்-உணர்வெழுச்சியுடன்-இடம்பெற்ற-மாவீரர்-நாள்-நிகழ்வுகள்/

https://www.yarl.com/forum3/topic/220828-வடமராச்சியில்-பதற்றம்-பொதுமக்களை-விரட்டியடித்த-பொலிஸார்/?tab=comments#comment-1351677

கோப்பாயில் அரசியல்வாதிகள் உள்பட 10 பேர் மாத்திரமே... பயமுறுத்தல்...

போலீசாருக்கு டிமிக்கி விட்டு, ஒரு இடத்தில் நடத்துவதாக போக்கு காட்டி, வேறு இடத்தில நடத்தி உள்ளனர். அந்த வகையிலேயே புது இடங்களில் நடந்தது.

Edited by Nathamuni
Posted
6 minutes ago, Nathamuni said:

நான் மேலே இணைத்து இருக்கும் இணைப்பினூடாக சென்று பாருங்கள்... எந்தளவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் அனுட்டித்து  இருக்கின்றார்கள் என. ஒரு  safe zone இற்குள் இருந்து கொண்டு மாவீரர் தின நிகழ்வை நடத்துவதை விட துப்பாக்கிகளின் சுடும் எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டு படுகொலை இயந்திரத்தின் முட்டுக்கட்டைகளை மீறி எந்தளவுக்கு உணர்வெழுச்சியுடன் அனுட்டித்து இருக்கின்றார்கள் என.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இருந்தாலும் இது மகிழ்வினைத் தருகின்றது. 

நன்றி நிழலி.... சந்தோசமாக இருக்கிறது இப்போது 

 

Edited by Nathamuni
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • 11 months later...
Posted

தேசத்தின் விடுதலைக்கனவை நெஞ்சில் சுமந்து, வித்தாகிப்போன வீர மறவர்களே, உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கண்ணீர்ப்பூக்களைக் காணிக்கையாக்குகிறோம். வீக்ம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்ந்தோம்,இறந்தோம் என்றில்லாமல்,இறந்தும்--இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் எம் இதய தெய்வங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: 2 people, fire

மாவீரர்களுக்கு.  வீர வணக்கங்கள்....

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவனுக்கும் தாயகக் கனவுடன் தலைவன் வழி சென்ற மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்...




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.