Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு :49 பேர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newsland-720x450.jpg

நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு :9 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில்  மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது.  இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில்  110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் உட்பட சுமார் 300 பேர் இவ்விருபள்ளிவாசல்களும் அமைந்துள்ள ஹாக்லி பார்க்கில் இருந்ததாகவும் எவ்வாறாயினும் கிரிக்கட் வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை சம்பவ இடத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுமார் 20 துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்க முடிந்தது. மக்கள் பின்புறமாக ஓடிக்கொண்டிருந்தனர். அதன்பின்னர் பொலிஸார் வருவதை அவதானிக்க முடிந்நது என சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச்  பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம்  உள்ளதோடு இதன் அருகிலேயே சென்ட்ரல் கிறிஸ்ட் பாடசாலை , சென்ட்ரல் கிறிஸ்ட் மருத்துவமனை,அல் நூர் பள்ளிவாசல் மற்றும் லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசல் என்பன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

http://athavannews.com/நியூசிலாந்து-பள்ளிவாசலி/

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்துக்கு துப்பாக்கிச் சூடு – உயிரிழப்பு 49 ஆக அதிகரிப்பு! (4ஆம் இணைப்பு)

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில்  மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது

இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில்  110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு இது ஒரு இருண்ட நாள்: பிரதமர் ஜெசிந்தா தெரிவிப்பு (3ஆம் இணைப்பு)

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில்  இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் நியூஸிலாந்திற்கு இது ஒரு இருண்ட நாள் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு கொடூரமான வன்முறை; பல உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நியூசிலாந்து பிரஜை ஆவார்.  இது ஒரு தீவிர வலதுசாரி வன்முறை என  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக  நியூஸிலாந்தின் பிந்திய  செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் கைது (2ஆம் இணைப்பு)

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காணப்படும் நபர் பொலிஸ் வாகனத்தை மோதியுள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட நாலு பேர் அடங்குகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் குற்றவாளிகள் வெளியேறாத வகையில் குறித்த பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது என வெலிங்கடன் பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் தொடக்கம் 27 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதோடு 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் இவ்விரு மசூதிகளும் அமைந்துள்ள ஹாக்லி பார்க்கில் இருந்த நிலையில் கிரிக்கட் வீரர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில்  மர்ம நபர்கள்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது.  இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில்  110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் உட்பட சுமார் 300 பேர் இவ்விருமசூதிகளும் அமைந்துள்ள ஹாக்லி பார்க்கில் இருந்ததாகவும் எவ்வாறாயினும் கிரிக்கட் வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை சம்பவ இடத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுமார் 20 துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்க முடிந்தது. மக்கள் பின்புறமாக ஓடிக்கொண்டிருந்தனர். அதன்பின்னர் பொலிஸார் வருவதை அவதானிக்க முடிந்தது என சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச்  பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம்  உள்ளதோடு இதன் அருகிலேயே சென்ட்ரல் கிறிஸ்ட் பாடசாலை , சென்ட்ரல் கிறிஸ்ட் மருத்துவமனை,அல் நூர் மசூதி மற்றும் லைன்வுட் மஸ்ஜித் மசூதி என்பன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

http://athavannews.com/நியூசிலாந்து-பள்ளிவாசலி/

  • கருத்துக்கள உறவுகள்

தலையில் அதிநவீன கமரா பொருத்தப்பட்டு, நேரடி ஒளிபரப்புச் செய்தவாறு நியூசிலாந்து பள்ளிவாசலுக்குள் தனியொருவராகச் சென்ற பயங்கரவாதி ஈவிரக்கமற்ற தாக்குதல் - 40 இற்கு மேற்பட்டடோர் மரணம்

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

28 வயதான நபர் ஒருவர் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவர் சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் இரண்டு பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.

கொல்லப்பட்டவர்களில் பலர் குடியேறிகள். அதில் குழந்தைகளும் உண்டு. இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கடுமையான காயங்களோடு உயிருக்கு போராடிவருகின்றனர்.

நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு - 40 பேர் பலிபடத்தின் காப்புரிமை TV NEW ZEALAND

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிக்கியவர்களின் விவரங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. நியூஸிலாந்திலுள்ள வங்கதேச அதிகாரிகள் தமது நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகமும் தமது நாட்டைச் சேர்ந்த சில உயிரிழந்துள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தியர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.

பிபிசியிடம் பேசிய நியூசிலாந்தின் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி கூறுகையில், 'ஆரம்பகட்ட தகவல்களில்படி, இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்களும், இந்திய வம்சாவளியை சேந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றும், இதனை இன்னமும் நியூசிலாந்து அரசு உறுதி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?படத்தின் காப்புரிமை Reuters

நியூசிலாந்தில் இன்று நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தொடர்புடைய நபராக ப்ரெண்டன் டெரன்ட் எனும் ஒரு ஆஸ்திரேலியர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தன்னுடைய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட நபரை கடும் போக்கு வலது சாரி, வன்முறை எண்ணம் கொண்ட பயங்கரவாதி என ஆஸ்திரேலிய பிரதமர் விவரிக்கிறார். முன்னதாக அந்த சந்தேக நபர் ஆன்லைனில் குடியேற்றத்துக்கு எதிரான எண்ணம் கொண்ட ஒரு பிரசாரத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை 17 நிமிடங்களை நேரடியாக ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. இந்த காணொளியை சமூக வலைதள நிறுவனங்கள் உடனடியாக நீக்காததால் நியூசிலாந்தில் விமர்சனம் எழுந்தது. முன்னதாக அக்காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?படத்தின் காப்புரிமை EPA

முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த தாக்குதல் இரண்டு மசூதிகளில் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

<div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=czXAxYqXu28"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன? | NZ Mosque Attack |" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=czXAxYqXu28~/tamil/global-47578788" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div>

"இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும்" என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை துப்பாக்கித்தாரிகள் உள்ளனர் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றாலும், துப்பாக்கித்தாரிகளில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்பதும், அவர் குடியேற்றத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த துப்பாக்கித்தாரி தாக்குதல் தொடுக்கும்போது எடுத்ததாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த உறுதிப்படுத்தப்படாத, கவலையேற்படுத்தக்கூடிய காணொளியை யாரும் பகிர வேண்டாமென்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு - உயிர்தப்பியது வங்கதேச கிரிக்கெட் அணி

கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கித்தாரியிடமிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் அவ்விடத்தை விட்டு ஓடி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

"முதலில் நாங்கள் மின்சார ஷாக் என்று நினைத்தோம். பிறகு சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரும் அங்கிருந்து ஓடத்தொடங்கினோம்" என்று சம்பவ இடத்திலிருந்து தப்பித்த மோஹான் இப்ராஹிம் என்பவர் நியூசிலாந்து ஹெரால்டிடம் தெரிவித்துள்ளார்.

"என்னுடைய நண்பர்கள் இன்னமும் அங்குதான் உள்ளனர். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் என் நண்பர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று பயமாக உள்ளது."

கிரைஸ்ட்சர்ச் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்தவர்கள், நிகழ்விடத்தில் இறந்த உடல்களை பார்த்ததாக கூறினாலும், அது இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு - உயிர்தப்பியது வங்கதேச கிரிக்கெட் அணிபடத்தின் காப்புரிமை Google

துப்பாக்கிச்சூடு நடைபெற்று வரும் பகுதிக்கு அருகேயுள்ள கதீட்ரல் சதுக்கம் என்ற இடத்தில் பருவநிலை மாற்றம் குறித்த பேரணியை நடத்தி வந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"கிரைஸ்ட்சர்ச்சில் நிலவி வரும் சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினர் முழு வீச்சில் செயல்பட்டாலும், நிலைமை இன்னும் அபாயகரமானதாகவே உள்ளது" என்று அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு - உயிர்தப்பியது வங்கதேச கிரிக்கெட் அணிபடத்தின் காப்புரிமை Reuters

"மறு அறிவிப்பு வரும்வரை கிரைஸ்ட்சர்ச் நகரவாசிகள் தங்களது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-47578788

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸி. மசூதித் துப்பாக்கிச் சூடு நடத்தியவனை தைரியமாகப் பிடித்த நபர்: நேரில் பார்த்தவர்கள் பிரமிப்பு

Published :  15 Mar 2019  19:13 IST
Updated :  15 Mar 2019  19:13 IST
 
christ-churchjpg

தாக்குதல் நடந்த மசூதிக்கு வெளியே பலியானவரின் உடல். | ஏ.எப்.பி.

நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தியவர்கள் மீது கொடூரமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஒருவர் இறுக்கமாகப் பிடிக்காதிருந்தால் பலி எண்ணிக்கை இன்னும் படுமோசமாக இருந்திருக்கும் என்று நேரில் பார்த்த ஒருவர் இந்தியத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர்.

முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆஸ்திரேலியனான பிரெண்ட்டன் டர்ட்டான் ஒரு வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவன்  என்று தெரிகிறது.

இந்நிலையில் நேரில் பார்த்த நபர் கூறும்போது, “நாங்கள் சிறிய மசூதியில் இருந்தோம். 100  சதுரமீட்டர்கள்தான் இருக்கும். அப்போது துப்பாக்கி ஏந்திய மர்மநபர் மசூதிக்குள் வந்து சுடுகிறார் என்றால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, உயிரைக்காப்பாற்றிக் கொள்ளத்தான் தோன்றும் இது மனித இயல்பு.  ஆனால் நானும் என் நண்பனும் நேரில் பார்த்த காட்சி எங்களை பிரமிக்க வைத்தது. ஒரு நபர் தைரியமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவனை பின்புறமிருந்து இறுக்கப் பிடித்தார், அவனால் ஒன்றும்  செய்ய முடியவில்லை, துப்பாக்கியை கீழே போடும்வரை அவர் பிடி தளரவில்லை.

அவர் பிடித்ததையடுத்து துப்பாக்கி கீழே விழுந்ததால் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கதவை நோக்கி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது, இது மட்டும் நடக்கவில்லையெனில் இன்னும் பலர் கொல்லப்பட்டிருப்பார்கள். நானும் இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்க மாட்டேன். அந்த மனிதனுக்கு நன்றிகள் பல. அவர் யார் என்று நிச்சயம் கண்டுபிடிப்போம்.

நான் யாருக்காகவும் பேசவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அழகான நாட்டில் வசித்து வருகிறேன். இங்கு நமக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை, இல்லவேயில்லை. ஆகவே ஒரு சம்பவத்தை வைத்து இந்த நாட்டைப் பற்றி நான் கருத்து கூறுடல் கூடாது.

நான் நியூஸிலாந்தை நேசிக்கிறேன், இங்கு வாழும் மக்களை நேசிக்கிறேன்.  நியூஸி. மக்களிடமிருந்துதான் எனக்கு இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நலம் விசாரித்து அதிக போன்கள் வந்தன. ” என்கிறார் பைசல் சையத் என்கிற இந்த நபர். தாக்குதலை நேரில் பார்த்தவர், இவர் உயிரும் போயிருக்கும் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார். சையத்தின் நண்பர்கள் இந்தத் தாக்குதலில் பலியாகினர், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

https://tamil.thehindu.com/world/article26545933.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

நேரடி வீடியோ பார்த்தேன் ...கொடுமை...படங்களில் வருவது மாதிரி ஆறுதலாய் வந்து சுட்டுக் போட்டு ஆறுதலாய் காரில் ஏறிப் போறான்...18,20 நிமிசமாகியும் பொலீஸ் போகவில்லை...அவர்களுக்கு இப்படியான சம்பவங்கள் புதுசு போல 😟 நாளைக்கு இங்கே உள்ள கோயில்களிலும் இப்படி ஏதாவது நடக்கப் பார்க்கும் 😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதியான அழகான நாட்டில் இப்பிடியொரு பயங்கரம். மற்றவர்கள் செய்யும் தவறுக்கு அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது.

இறந்த அப்பாவிகளுக்கு என் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதராய் பிறந்ததுக்கு வெட்கப்படத் தான் வேண்டும்

அந்த வீடியோ கிளிப் பார்த்தேன் , எவ்வளவு கூல் ஆக காரினால் இறங்கி நடைபாதையால் நிதானமாக நடந்து ஒவ்வொருவரையும் குறி வைத்து சுடும் தருணங்களை துப்பாக்கியின் குழலில் இருந்து பார்க்கக் கூடிய ஒரு கோணத்தில் ஒளி பரப்பியிருக்கிறான் , ரவைக்கூடை மாற்றி நாசத்தை தொடரும் கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை

மனிதனாக பிறந்ததுக்காக வெட்கப் படுகிறேன்

4 hours ago, ரதி said:

 😟 நாளைக்கு இங்கே உள்ள கோயில்களிலும் இப்படி ஏதாவது நடக்கப் பார்க்கும் 😢

எமது நாட்டில் எமது அடியை வலுவாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை இவ்வகையான சம்பவங்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன
அறுவடையை வீடு கொண்டு சேர்க்கத் தான் வேண்டும்  .....

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல். இஸ்லாமிய அடிப்படைவதிகளின் கொடூரத்திற்கு நிகரானது. கொல்லபட்ட அப்பாவிகளின் குடும்பங்களிற்கு எனது அனுதாபங்கள்.

ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் மனித் மிருகங்களின் அக்கிரமங்கள் நிறுத்தபட வேண்டும்.

தமிழர்கள் பெளத்தர்களாலும் இஸ்லாமியர்களாலும் வணக்கஸ்த்தலங்களில் கொல்லப்பட்டதும், இஸ்லாமியர்கள் தமிழர்களாலும் பெளத்தர்ளாலும் பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டதும், பெளத்தர்கள் விகாரைகளில் வைத்துத் தமிழர்களால் கொல்லப்பட்டதும் நினைவிற்கு வருகிறது.

அப்பாவிகள் கொல்லப்படுவது அக்கிரமம், அது நாமாக இருந்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலுவையுத்தம் என்பது மத்தியகாலப்பகுதியில்  இருந்து நடக்கும் ஒன்று.

கிறித்தவர்களின் புனித பிரதேசமான ஜெருசலத்தினை, முஸ்லிம்களிடம் இருந்து மீட்டுக் கொள்ள, போப்பாண்டவரின் வேண்டுகோளினை ஏற்று ஐரோப்பிய கிறிஸ்த்தவ மன்னர்கள் போர்க்களத்துக்கு சென்றார்கள்.

இங்கிலாந்தின் மன்னன், ரிச்சார்ட் தி லயன் ஹார்ட், (சிங்கத்தினை போன்ற அஞ்சா நெஞ்சன் ரிச்சர்ட்) தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த யுத்த களத்தில் செலவிட்டார்.

இந்த சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சியே இன்னும் நீள்கின்றது.

இருபக்க பயங்கரவாதிகளின் வெறிக்கு, அப்பாவிகளே பலியாகின்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில்,  நீஸ்  என்னும் நகரத்து கடற்க்கரை ஓரத்தில் நடந்த படுகொலை, இன்று நியூஸிலாந்து நாட்டில் நடந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

உனக்கு டிரக் என்றால் எனக்கு துப்பாக்கி..... 

ஆனாலும் அப்பாவிகள் தான் உயிரை விலையாக கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல். இஸ்லாமிய அடிப்படைவதிகளின் கொடூரத்திற்கு நிகரானது. கொல்லபட்ட அப்பாவிகளின் குடும்பங்களிற்கு எனது அனுதாபங்கள்.

ஏன் இது இந்து / சைவ பயங்கரவாதிகளின் கொடூரத்திற்கு நிகரானது என உடனடியாகவும் குறிப்பிட முடியாமல் போனது தற்செயலானதா அல்லது உள்நோக்கத்துடனா .  நிபந்தனையுடனான அனுதாபங்கள் இலக்கை சென்றடைவது கடினமே ।

ஒஸ்திரேலியா செனட்டர்  Fraser Anning சொல்லியது ஞாபகத்திற்கு   வருகிறது      

 I am utterly opposed to any form of violence within our community, and I totally condemn the actions of the gunman,” Mr Anning said.

“However, while this kind of violent vigilantism can never be justified, what it highlights is the growing fear within our community, both in Australia and New Zealand, of the increasing Muslim presence. 

மிகவும் குழப்பத்துக்குரிய வார இறுதி...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

தற்செயலானதுதான். உள்நோகம் இல்லை.

இச்செய்தியைப் பார்த்தபோது எனக்கு நினைவிற்கு வந்தது காத்தான்குடியும் ஏறாவூரும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் சகிப்புத்தன்மை குறைந்துவருகின்றது. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் mainstream அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இனவாதம் பேசுவோரும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான கருத்துக்களை விதைப்போரும் உள்ளனர். 

சமூகவலை ஊடகங்கள் மூலம் இப்படியான கருத்துக்கள் பரவி இனவாதம் வளர்க்கப்படுகின்றது. 

மனித உறவுகளை விட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்டு மிரண்டித்தனத்தின் தொடர்ச்சியே இந்த கொலைகள். கடவுளை விட , மதத்தை விட, முன்னோர் முட்டாள்த்தத்தை விட உனது அறிவு பெரிது. அதன் படி யோசித்து மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

மத வெறியால் இறந்த மக்களின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் நடாத்திய பிரேன்டனின் 74 பக்க அறிக்கையில்…

  •  
 
image_b287d01feb

நியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியுசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் உள்ள  முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.  இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பிரேன்டன் டெரன்ட் என்பவரே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையாக கருதப்படும் இவர் 28 வயதுடையவர் எனவும் சிறைக் கைதிகள் அணியும் வெள்ளைநிற ஆடையில் காணப்பட்டதாகவும், விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நீதிமன்ற வளாகத்துக்கு குறித்த சந்தேகநபர் விலங்கிடப்பட்டு அழைத்து வரும் போது அவரது கை விரல்களினால் வெள்ளையர்களின் சின்னத்தை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை விடுதலை செய்யுமாரோ, தனக்கு பிணை வழங்குமாரோ எந்தவித வேண்டுகோள்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் நிவ்சவுத்வெல்ஸில் பிறந்த இவர், அந்நாட்டின் உடற்பயிற்சி நிலையமொன்றில் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நூர் பள்ளிவாயல் தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தளத்தில் அறிவிப்பொன்றையும் இந்த சந்தேகநபர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள 74 பக்கங்களைக் கொண்ட  நீண்ட அறிக்கையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதில், கடந்த 2011 ஆம் அண்டு நோர்வேயில் 77 பேரை கொலை செய்த அன்டர்ஸ் பிரேய்விக்கை தான் முன்மாதிரியாகக் கொண்டு தாக்குதல் நடாத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், 2017 இல் சுவீடனில் ஜிஹாத் பயங்கரவாதிகள் டிரக் ரக வாகனமொன்றினால் தாக்குதல் நடாத்தி உயிரிழந்தவர்களிடையே உயிரிழந்த பிள்ளையின் மரணமும் இந்த தாக்குதலை நடாத்த தூண்டுதலாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்காக இந்த தாக்குதலை நடாத்தியாதாகவும் அந்த சந்தேகநபர் நியாயம் கூறியுள்ளார்.

தன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் ஆதரவாளராகவும் அறிமுகம் செய்துள்ள சந்தேகநபரான (பயங்கரவாதி) பிரேன்டன், இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு சாதாரண வெள்ளையன் எனவும், தனக்கு 28 வயது எனவும் குறிப்பிட்டுள்ள இவர், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் அறிமுகம் செய்துள்ளார்.

எது எப்படிப் போனாலும், நியுஸிலாந்து வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஒரு தாக்குதல் சம்பவமாக இப்பள்ளிவாயல் தாக்குதல் நோக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி தொடர்பில் காணப்படும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜசின்டா ஆர்டென் குறிப்பிட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.    (மு)

நன்றி- அத சிங்கள பத்திரிகை

தமிழில்- முஹிடீன் இஸ்லாஹி

image_b287d01febimage_35b3207843

http://www.dailyceylon.com/179429

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

.அவர்களுக்கு இப்படியான சம்பவங்கள் புதுசு போல 😟 நாளைக்கு இங்கே உள்ள கோயில்களிலும் இப்படி ஏதாவது நடக்கப் பார்க்கும் 😢

நாங்கள் துவக்குடன் வந்தால் சோறும் குழையல் கறியை  போட்டு சாப்பிட குடுத்து ஆளை கூல் பண்ணிவிடுவம்ல . ஆணான ஸ்டீவ் ஜோப் ஆப்பிள் கொம்பனிகாரரே சொல்லியிருக்கார் இந்து கோயில் சாப்பாடு செம டேஸ்ட் என்று .

இனி அந்த ஒலிநாடாவை பார்த்து எத்தனை பேர் கிளம்ப போறாங்களோ ?

வீடியோ கேம் போல் சாதாரணமாய் செயல்பட அசாதரான துணிச்சல் வேணும் அப்படி பார்க்கையில் ஒரு சாதாரண அப்பாவி மனிசன் இணைய பணத்தில் சம்பாதித்து நாலு நாடு சுத்தி போட்டு வந்து  செய்தது போல் இல்லை.

இங்கு நாங்கள் அந்த இறந்த மக்களுக்கு கவலைப்பட அவர்களின் இணையத்தளம்களில் சிலது  எதோ போர் என்றால் போர் என்பது போல் அறைகூவல் விடுக்கினம் மாறி மாறி  அப்பாவி மக்களை கொல்வது எப்போது தொடக்கம் போர் என்ற வரைமுறைக்குள் வந்தது என்று சிந்தித்து கொண்டு இருக்கிறன் .

  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான செயல் இது.........! இவர் சமூகத்தில் அதிகம் கவனிக்கப்படாதவராக தன்னை நினைத்திருப்பார்.......எப்படியாவது தான் உலகில் பேசு பொருளாக இருக்கவேண்டும் என்று உந்த வேலையை செய்திருக்கு. மற்றும்படி  கொள்கையோ, கோட்பாடோ  ஒரு புண்ணாக்கும் கிடையாது என்றுதான் நான் நினைக்கிறன்.........!  😡

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்........!

  • கருத்துக்கள உறவுகள்

மனவியாதி...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

நாங்கள் துவக்குடன் வந்தால் சோறும் குழையல் கறியை  போட்டு சாப்பிட குடுத்து ஆளை கூல் பண்ணிவிடுவம்ல . ஆணான ஸ்டீவ் ஜோப் ஆப்பிள் கொம்பனிகாரரே சொல்லியிருக்கார் இந்து கோயில் சாப்பாடு செம டேஸ்ட் என்று .

இனி அந்த ஒலிநாடாவை பார்த்து எத்தனை பேர் கிளம்ப போறாங்களோ ?

வீடியோ கேம் போல் சாதாரணமாய் செயல்பட அசாதரான துணிச்சல் வேணும் அப்படி பார்க்கையில் ஒரு சாதாரண அப்பாவி மனிசன் இணைய பணத்தில் சம்பாதித்து நாலு நாடு சுத்தி போட்டு வந்து  செய்தது போல் இல்லை.

இங்கு நாங்கள் அந்த இறந்த மக்களுக்கு கவலைப்பட அவர்களின் இணையத்தளம்களில் சிலது  எதோ போர் என்றால் போர் என்பது போல் அறைகூவல் விடுக்கினம் மாறி மாறி  அப்பாவி மக்களை கொல்வது எப்போது தொடக்கம் போர் என்ற வரைமுறைக்குள் வந்தது என்று சிந்தித்து கொண்டு இருக்கிறன் .

வந்த வேகத்தில சுட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பான் எங்கே சோத்தை சாப்பிடப் போறான்🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16-03-2019_3-38-28_pm.jpg

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: ஐந்து இந்தியர்கள் உயிரிழப்பு!

நியூசிலாந்தில் நேற்று முன்தினம் இருவேறு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் திகதி  தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் இருந்த 8 இந்தியர்களைக் காணவில்லை என்றும், இவர்கள் தொடர்பிலான தகவல்களை விசாரணை செய்து வழங்குமாறும் நியூசிலாந்துக்கான இந்திய தூதரகம், நியூசிலாந்து அரசாங்கத்தை கோரியிருந்தது.

இந்தநிலையிலேயே, தற்போது இந்தியாவைச் சேர்ந்த ஐவர் இந்தத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த 31 வயதான ஃபராஜ் ஆஷன் என்பவரும், குஜராத்தின் பாருஷ் நகரத்தை பூர்வீகமாக கொண்ட முசா வாலி சுலேமான் பட்டேல் உள்ளிட்ட ஐவரே இந்தப் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள் என்று சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அதேநேரம், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த 49 பேரில், பலர் நியூசிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, துருக்கி, சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர் என்றும் அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் உயிரிழந்த 49 பேரையும் நினைவு கூர்ந்து மக்கள் விசேட பிரார்தனைகளிலும் நேற்று ஈடுபட்டனர்.

மேலும், 49 பேர் உயிரிழக்க காரணமான அவுஸ்ரேலியாவைச் சேரந்த பிரென்டொன் டரன்ட், நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டதோடு, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கொடூரமானத் தாக்குதலையடுத்து நியூசிலாந்தில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிரான சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர அந்த நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டன் தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நியூசிலாந்து-துப்பாக்க-6/

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பிழைக்கக் காரணமான அந்த 30 விநாடிகள்: நியூஸி. மசூதி துப்பாக்கிச் சூடு ‘திக்..திக்’ விநாடிகளை விவரித்த தமிம் இக்பால் 

Published :  17 Mar 2019  16:26 IST
Updated :  17 Mar 2019  16:26 IST
 
tamimjpg
 
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டு தீவிரவாதத் தாக்குதலில் வங்கதேச வீரர்கள் நூலிழையில் உயிர்பிழைத்தனர். இதில் மொத்தம் 50 பேர் பலியாகினர்.

உலகம் முழுதும் இதற்குக் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் வங்கதேச இடது கை தொடக்க வீரர் தமிம் இக்பால் அந்த திக் திக் விநாடிகள் குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“பேருந்தில் ஏறி மசூதிக்குச் செல்வதற்கு முன்பாக நடந்த விஷயங்கள்தா எங்கள் உயிரை அன்று காப்பாற்றியது. பொதுவாக முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா மதப்பிரச்சாரத்தைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அதனால்தான் ஜும்மா மசூதிக்கு முன்னதாகவே செல்ல நினைத்தோம்.

பேருந்து மதியம் 1.30 மணிக்கு தயாராக இருந்தது. ஆனால் மஹமுதுல்லா செய்தியாளர்கள் கூட்டத்துக்கு சென்று விட்டார். அதை முடித்து ஓய்வறை திரும்பினார். ஓய்வறையில் நாங்கள் கொஞ்சம் கால்பந்து ஆடினோம். தைஜுல், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் ஒத்தைக்கு ஒத்தை ஆடிக்கொண்டிருந்தனர். அதனை அவர்கள் நீட்டித்தனர். இப்படிப்பட்ட சிறுசிறு விஷயங்களே எங்கள் உயிர்களை அன்று காப்பாற்றியது.

அதன் பிறகு பேருந்தில் ஏறினோம்.  தொழுகையை முடித்து விட்டு விடுதிக்குச் செல்லத் திட்டம். அதனால்தான் அணி ஆட்ட ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ், சவுமியா சர்க்கார் இருவரும் முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் எங்களுடன் இருந்தனர்.

நான் எப்போதும் பேருந்தில் இடது புறம் 6ம் இருக்கையில்தான் அமர்வேன். மசூதியை பேருந்து நெருங்கும் வேளையில் பேருந்தில் வலது புறம் இருந்தவர்கள் அனைவரும் ஜன்னல் வழியே பதற்றத்துடன் பார்க்கத் தொடங்கினர். நான் பார்த்த போது சடலம் ஒன்று தரையில் கிடந்தது. அவர் மயக்கமடைந்தவராக இருக்கலாம் அல்லது குடித்து விட்டு விழுந்து கிடக்கலாம் என்றே நினைத்தோம். பஸ் சென்று கொண்டே இருந்தது மசூதி அருகே நின்றது. ஆனால் எல்லோர் கவனமும் தரையில் விழுந்து கிடந்த உடல் மீது இருந்தது.

இது நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு மனிதர் ரத்தத்துடன் அலறிய படி வந்து கீழே விழும் நிலையில் இருந்தார். அப்போது பதற்றம் எங்களைத் தொற்றிக் கொண்டது.  எங்கள் பேருந்து மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே நின்றது. பஸ் டிரைவர் ஒரு பெண்மணியுடன் பேசினார், அந்தப் பெண் நடுங்கிய படி அழுது கொண்டிருந்தார். அவர் ‘அங்கு துப்பாக்கியால் சுடுகிறார்கள் போகாதீர்கள் என்று எச்சரித்தார்.

இவர்கள் மசூதிக்குத்தான் வந்துள்ளார்கள் என்றார் டிரைவர், ஆனால் அந்தப் பெண் போகாதீர்கள் அங்குதான் இது நடந்து கொண்டிருக்கிறது’ என்றி மன்றாடினார். அப்போது நாங்கள் பேருந்திலிருந்து இறங்கி மசூதிக்குள் செல்லும் தூரத்தில்தான் இருந்தோம். அப்போதுதான் மசூதியில் பார்த்தோம் பல உடல்கள் ரத்தமயமாக கிடந்தன.  பிணங்களை பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியவில்லை.  நமாஸ் தொப்பி அணிந்திருந்த பலர் பயத்தில் தொப்பியை கழற்றினர். சல்வார் கமீஸ் அணிந்தவர்கள் மேலே ஒரு ஜாக்கெட்டை அணியத் தொடங்கினர். பிறகு பஸ் தரையில் அப்படியே படுத்தோம் 8-9 நிமிடங்கள் அப்படியே இருந்தோம். எங்களுக்கு அப்போது கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஏதோ கலவரம், வன்முறை என்றே நினைத்தோம்.

ட்ரைவிரைடம் இங்கிருந்து கிளம்புவோம் என்றோம். ஆனால் அவரோ நகரவில்லை. எல்லோரும் பஸ் டிரைவரை கண்டபடி சத்தம் போட்டோம். அந்த 6-7 நிமிடங்கள் அங்கு போலீஸே இல்லை. அதன் பிறகு சிறப்புப் படையினர் மசூதிக்குள் விரைந்தனர். மேலும் ரத்தக்காயங்களுடன் மசூதியிலிருந்து சிலர் வந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

ஒருகட்டத்தில் ‘இங்கிருந்து போய் விடுவோம், நம்மையும் சுட்டு விடுவார்கள்’ என்று கத்தினோம். சிலர் பஸ்ஸில் இருந்தால் ஆபத்து பஸ்சிலிருந்து இறங்கிவிடலாம் என்றனர்.. பஸ்ஸின் இரண்டு கதவுகளும் மூடப்பட்டுள்ளன.

அந்தச் சமயத்தில் மேலும் 10 அடி பஸ்ஸை டிரைவர் முன்னால் நகர்த்தினார், அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரியவில்லை. நாங்கள் பதற்றத்தில் பஸ்ஸின் நடுக்கதவை அடித்து உடைக்க முயன்றோம். கதவை போட்டு அடித்தவுடன் டிரைவர் கதவைத் திறந்தார்.  8நிமிடங்கள் பஸ்சில் இருந்து வெளியேற ஆனது. பார்க் வழியாக ஓடிவிடலாம் என்று சிலர் கூறினர், ஆனால் பார்க்கில்தன நாம் இலக்காக எளிதான வாய்ப்பு என்றனர் சிலர்.  அதே வேளையில் நாங்கள் பைகளுடன் ஓடினால் போலீஸ் எங்களைப் பற்றி என்ன நினைக்கும்?

மரணத்தை நேரில் பார்த்துவிட்டோம், இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.

நாங்கள் டீம் ஹோட்டலுக்குத் திரும்பி அனைவரும் ரியாத் பாய் ரூமுக்குச் சென்றோம். ஷுட்டிங் வீடியோவைப் பார்த்து நாங்கள் அழுதே விட்டோம். அந்த இரவு நாங்கள் தனியாக உறங்கவில்லை, கண்ணை மூடினாலே அந்தக் காட்சிதான். எங்களுக்கு கவுன்சலிங் தேவை.

விமானநிலையத்துக்கு தாய்நாட்டுக்குத் திரும்புவதற்காகப் போய்க்கொண்டிருந்த போது கொஞ்சம் தப்பியிருந்தால் நாம் அனைவரும் இன்று பிணமாகியிருப்போம் என்று பேசிக்கொண்டோம். அந்த 30 விநாடிகள்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

உண்மையில் இவர்களை கொல்லுவது தான் பிளானோ?...துப்பாக்கிதாரி மொஸ்க்கில் சுட்டுக் கொண்டு நிக்கிறார் என்று தெரிந்த பின்னும் சாரதி ஏன் வாகனத்தை முன் நோக்கி கொண்டு போனவர்?...பொலீஸ்  வர ஏன் லேட்டானது?...கன பேரினது கூட்டுச் சதி...நேரடியாய் சுட்டவர் மட்டும் மாட்டுப் பட மற்றவர் தப்பித்து விட்டினம் 

ரதி.....லண்டன் மாதிரி....நினைக்காதையுங்கோ...!

நியுசிலாந்து மிகவும்...பரந்து விரிந்த ஒரு அழகிய தேசம்!

இவ்வாறான சம்பவங்கள்....அந்த மக்களுக்கு மிகவும் புதிதானவை!

அதனால் தான்......துப்பாக்கி தாரி.....அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று கூறுகின்றார்கள்!

அந்தப் பொலிஸ் நிலையம் ஒரு கிராமத்துப் பொலிஸ் நிலைய அந்தஸ்துள்ள  பொலிஸ் நிலையம் மட்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.